அகப்பயணம்

Wednesday, May 30, 2007

இந்துத்துவமும் கலை சுதந்திரமும்

ஏசு கைகளையும் கால்களையும் விரித்தபடி சிலுவையில். சிலுவையிலிருந்து அவரது ஆண்குறி பெரிதாக தெரிய அதிலிருந்து ஏதோ கீழே கொட்டுகிறது. பொதுவாக கிறிஸ்தவ சடங்குக்கோப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சிறுநீர் கழிப்பிடம் இருக்கிறது. ஒரு ஆடையற்ற பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து ஒரு குழந்தை வெளிவருகிறது அதனை அந்த பெண் திரிசூலத்தால் கொல்ல முயல்கிறாள்.கீழே துர்கா மாதா என எழுதப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆண்குறிகள் சூழ விஷ்ணு நிற்கிறார் தனது கைகளால் தனது ஆண்குறியை சுமந்தபடியே. மீண்டும் வரை சீலை முழுக்க ஆண்குறிகள். கீழே சிவலிங்கம். அதில் ஆண்குறிகளை உடைத்தபடி ஒரு உருவம் எழுகிறது. அது ஒரு இளைஞன். அவன்தான் சந்திரமோகன். மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு நுண்கலை மாணவன். இந்த மூன்று ஓவியங்களும்தான் பிரச்சனையை உருவாக்கின. இந்த ஓவியங்களுக்கான எதிர்ப்பினை முதலில் தொடங்கி வைத்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான ரெவரண்ட் இம்மானுவேல் காண்ட். பின்னர் அவருடன் நீரஜ் ஜெயின் எனும் பாஜக தலைவர் கலந்து கொண்டார். மே -9 ஆம் தேதி ஊர்வலம் நடந்தது. ஜெயின் சென்று அங்கிருந்த ஆசிரியரும் டீனுமான விஷ்ணு பணிக்கரிடம் இந்த ஓவியங்களை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். பணிக்கர் மறுத்தார். நுண்-கலை ஓவியத்துறை 'தனது தனிப்படுக்கை அறை போன்றது' என்று கூறினார். விவாதம் வலுத்தது. சந்திரமோகன் மீது ஒருவர் கையும் படவில்லை அல்லது அவருடைய மூன்று சர்ச்சைக்குள்ளான ஓவியங்களும் எவ்விதத்திலும் சிறிய அளவு கூட சேதப்படுத்தப்படவில்லை. டீன் மறுத்துவிட்ட இந்நிலையில் ஜெயின் காவல்துறையை அணுகினார்.எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சிவாஜி பணிக்கர் மத்தியகால இந்தியாவினைச் சார்ந்த ஆடையற்ற ஓவியங்கள், தாந்திரீக மரபு சார்ந்த ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். இதனை நிறுத்தும்படி துணை வேந்தர் கேட்டுக்கொண்டதை அவர் புறக்கணித்தார். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 'கலைகள் மீதான பாசிச தாக்குதலாக' இது ஊடகங்களில் உரு பெற்றது. நிற்க...இந்து மரபில் கலைசுதந்திரம் என்பது நிச்சயமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. கடவுளரை கேலி செய்வதில் ஆரம்பித்து அவர்களை எவ்விதத்திலும் சித்தரிக்கலாம் என்பது பெரும் சுதந்திரமாக இந்து மரபில் இடம் பெறுகிறது. 'செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைக்கும்' கடவுளர் இந்து மரபின் பெரும் சிறப்பு. இம்மரபு சுதந்திர பெருவெளியின் எல்லைகள் வதோதராவில் சோதிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் இந்து சமுதாயம் எவ்வளவு தேறியுள்ளது என்பதனை காண சிறிதே பின்னோக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அரசு பெல்லோஷிப்புக்காக குமரிமாவட்ட கோவில்களின் தூண் சிற்பங்களை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். திருவிதாங்கோடு விளக்கு பாவையர் எனும் தூண் சிற்பங்கள் இதில் பிரசித்தி பெற்றவை. (உள்ளூர் அளவில்தான் ஆனால் அவை பெற வேண்டிய முக்கியத்துவம் பெறவில்லை.)
விளக்கு பாவை சிற்பங்களில் ஒன்று : திருவிதாங்கோடு சிவன் கோவில்
அதில் சில சிற்பங்களில் ஒரு சன்னியாசி அல்லது மிகவும் பக்திமானாக காட்டப்படக்கூடிய ஒருவர் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி ஆடை அவிழ ஆண்குறி விரைப்பேற அப்பெண்ணின் முன் மானம் மரியாதை அனைத்தும் இழந்த நிலையில் நிற்பதையும் ஆனால் அந்த பெண் அவரை அசட்டை செய்த படி விளக்கினை ஏந்தியபடி நிற்பதையும் காணலாம். அந்த ஒரு சிற்பத்தை மட்டும் பார்த்தால் அல்லது காட்டியிருந்தால் தோன்றும் உணர்ச்சி அந்த பிரகாரத்தில் உள்ள அனைத்து விளக்கு பாவைகளையும் ஒரு சேர காணும் போது மாறுவதை உணரலாம்.
முழுமைப் பார்வையில் விளக்குப் பாவைகள் : அனைவரும் காட்டப்படவில்லை.
பெண்மையின் அனைத்து நிலைகளிலும் கன்னியும் கர்ப்பிணியும் குழந்தைக்கு பாலூட்டுபவளும் முலை தளர்ந்த நிலை பெண்ணும் என பெண்மையின் அனைத்து தன்மையையும் அவை வெளிப்படுத்துவதை உணரும் போது இந்த சிலைகள் செதுக்கப்பட்டதன் நோக்கத்தை, அந்த சிற்பியின் சஹிருதயனாக உணரலாம். திருவட்டாரில் வெளிப்பிரகார தூண்களில் தன் குறியை தன் வாயில் வைத்திருக்கும் ஒரு பேதையன் சிற்பத்தை காணலாம். இவை தனியாக இருந்தால் நம் ஒழுக்க உணர்ச்சிகளுக்கு கூட அருவெறுப்பாக இருக்கக் கூடும். நிச்சயமாக இந்த சிற்பங்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒழுக்கவிதிகள் மாறியுள்ளன. ஆனாலும் கூட கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்று அமைகின்றன. காமம், ஏன் பிறழ்நிலை காமமாக நாம் இன்றைய ஒழுக்க விதிகளால் கருதும் காமமும் கூட சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன. அத்துடன் யோகியரும், உழவர்களும், குறவர்களும் அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், காந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் என. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் விகாரமாக தூண் சிற்பங்களில் காணப்படும் காமத்தைக் காட்டும் சிலைகள் அமைந்திடவில்லை. மாறாக காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்வியல் பார்வை அங்கு தெரிகிறது. தந்திராவும் தன் ஒவ்வொரு குறியீட்டையும் தன் ஒவ்வொரு தேவ தேவதை வடிவத்தையும் பல கடுமையான வடித்தெடுத்தல்களுக்கு அப்புறமே தேர்ந்தெடுக்கப்பட்ட சாதகர்களின் பொது அரங்கில் வைத்தது. இத்தகைய குறியீட்டு வடிவங்களுடன் சந்திரமோகனின் படைப்புகளை ஒப்பிடுவது, கால்குலஸ் சமன்பாடுகளும் பொது கழிப்பறை கிறுக்கல்களும் ஒன்று என்பது போன்ற அபத்தம்தான்.
காங்க்ரா மரபு ஓவியத்தில் காளிகா மகாதேவி: 18 ஆம் நூற்றாண்டுஅவள் நீல நிறம் பிரபஞ்சமளாவிய முடிவிலித்தன்மையையும் அவள் ஆடையற்ற நிலை சிருஷ்டிநிலையையும் காட்டுகிறது-ஓஷோ
அறிவுசீவிகள் சந்திரமோகனை ஆதரிக்க வைக்கும் வாதங்களான தந்திர மார்க்க தேவியர் பிரதிமைகளில் சின்னமஸ்த காளி உட்பட பாலியல் வக்கிரமோ அல்லது obsessionஓ இல்லை என்பதும் அங்கு பாலியல் ஒரு உந்து பலகை என்பதாக ஒரு அடிப்படை ஆதாரம் என்பதாக அன்றி அதில் சிக்கித்தவிக்கும் பரிதாபமோ இல்லை. அதற்கு நேர் மாறானதாக அமைவது சந்திரமோகனின் ஓவியங்கள்.இந்து கோவில்களின் இந்த தன்மையை காஜுரேகாவை முன்வைத்து ஓஷோ கூறுகிறார்:
"இக்கோவிலை உருவாக்கியவர்கள் மிகவும் நுண்ணுணர்வு கொண்ட மக்களாவர். அதன் பிரகாரத்தினை சுற்றி பாலியல் இருக்கிறது. அதன் மையத்திலோ அமைதி இருக்கிறது. சாதகர்கள் பாலியல் உணர்வுகளின் மீது, வெளிப்பிரகாரத்தில் காட்டப்பட்ட புணர்ச்சி நிலைகளை தியானிக்க வைக்கப்பட்டனர். ஒருவர் அதனை முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் மனம் பாலியலில் (மூழ்கி எழுந்து) வெளிவந்த பின்னர் அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர்."

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்து பிற ஆழி நீந்தும் யோகி: திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில் தூண் சிற்பம்
அடுத்ததாக இச்சிலைகளில் நான் கண்டது ஒருவித தன்னம்பிக்கை. தன் பாரம்பரிய விழுமியங்களையே எவ்வித கூச்சமும் தயக்கமும் இன்றி கேள்விக்குள்ளாக்கும் கேலிக்குள்ளாக்கும் தன்னம்பிக்கை. ஒவ்வொரு கோவில் தூண் சிற்பங்களிலும் வணக்கத்துக்குரிய துறவிகளை காட்டியிருக்கும் அதே நேரத்தில் பெண்கள் முன் மண்டியிடும் துறவிகளையும் காட்டியுள்ளார்கள். எத்தகைய கலாச்சாரம் தன் வணக்கத்துக்குரிய ஒருவரது பலவீனங்களையும் தான் வணங்கும் கோவில் சிற்பங்கலிலேயே வடித்திருக்கும்?
பெண்ணின் முன் மண்டியிடும் துறவி
அதே கோவில் தூண் சிற்பங்களில் துறவி/சாதகர்/யோகியின் பல நிலைகளும் காட்டப்படுகின்றன.
அத்தகைய கலாச்சாரத்தின் உள்ளார்ந்த தன்னம்பிக்கை எத்தகையதாக இருந்திருக்கும்?

பெண்ணின் முன் மண்டியிடும் துறவியை கோவில் சுவர்களில் கன்னியாகுமரி மாவட்ட சிற்பி வடித்த ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் வத்திகானில் போப் பயஸ் IX தனது உத்தரவின் அடிப்படையில் மைக்கலேஞ்சலோ வடிவமைத்த ஆண் சிலைகள் ஒவ்வொன்றிலும் குறிகளை உடைத்து அங்கு ப்ளாஸ்டர் இலைகளால் மறைத்திட - வத்திகானின் ஒழுக்கத்தை காப்பாற்றவும் தகாத பாலியல் விழைவுகளை தடுத்திடவும்- உத்தரவிட்டார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். கன்னியாகுமரி மாவட்ட சிற்பிகளின், அந்த ஆக்கங்களை தம் கோவில்களில் ஏற்ற மக்களின் தன்னம்பிக்கையும் புரியும். ஆனால் இந்த தன்னம்பிக்கையின், வாழ்வியல் புரிதலின், வெளிப்பாடுகளே இக்கலாச்சாரத்தை தாக்கும் ஆயுதங்களாயின என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது வதோதராவில் நடந்த சகிப்புத்தன்மை சோதனையில் இந்து சமுதாயம் தேர்ச்சி பெற்றதா என்பதற்கான பதில்.

கோவில் சிலைகளை கொச்சைப்படுத்தும் திராவிடர் கழக பிரச்சாரம்
திராவிடர் கழக ஊர்வலங்களில் 'கோவில் ஆபாசசிலைகள் இருக்கலாம் ஆபாச பட போஸ்டர்களுக்கு தடையா' எனும் கோஷம் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம். பெரியார் திராவிட கழக குண்டர்களால் திகம்பர ஜைன துறவிகள் தாக்கப்பட துணிந்த போது அவர்களது நிர்வாணம் ஒரு வக்கிரம் என ஊடகங்களில் பெரியார் திராவிட கழக ஆதரவு அறிவுசீவிகள் பேசியதும் எழுதியதும் நினைவுக்கு வரலாம்.
இவ்வித தாக்குதல்கள் ஒரு புறமிருக்க மறுபுறம் தடைகள் ஒரு அதிகார பலத்தின் வெளிப்பாடாக அமைந்ததையும் இங்கு பார்க்க வேண்டும். 2001 இல் அலெக்சாண்டர் சுகொரோவின் 'தாரஸ்' (Taurus) எனும் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படவிருந்த போது அந்த திரைப்படத்துக்கு எதிராக இடதுசாரி கலாச்சார அமைப்புகள் கொடிபிடித்தன. காரணம் - அரசியல் சந்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் விற்கப்படும் லெனினின் பிம்பத்தினை உடைப்பதாக அந்த படம் அமைந்ததுதான் (பிபிஸி. 16-நவம்பர் 2001). மேற்குவங்காள மக்கள் (சர்வதேச படங்களை காண்பது எல்லாதரப்பு பொதுமக்களும் அல்ல என்பதும் பெரும்பாலும் ஆட்டுத்தாடியும் ஜோல்னாபையும் தொங்க ஸ்காட்ச் அருந்தும் பாட்டாளி வர்க்கத்தினை நடாத்தி செல்லும் அறிவுசீவி கும்பல் என்பதையும் நினைவில் கொள்க. இந்த மேல் மட்ட கும்பல் காண வேண்டியதையே பீமான்போஸும் ஜோதிபாஸுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் 'இளைஞர்'படையும் தீர்மானிப்பார்கள் என்பதையும் அதனை அடிபணிந்து நம் அறிவுசீவிக்கும்பலும் ஊடகங்களும் ஏற்பதையும் காண்க. இங்கு வெளிப்படுவது 'என் பலம் நீ காண்பதை தீர்மானிக்கும்' எனும் அதிகார வெளிப்பாடு. டாவின்ஸி கோட் திரைப்படம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தடைசெய்யப்பட்டது மட்டுமல்ல அந்த நாவலும் தடைசெய்யப்பட்டது.
இத்தனைக்கும் அந்த நாவலில் ஏசுவினையும் மகதலேனையும் இணைத்து 'explicit' ஆகவோ அல்லது 'கிளுகிளுப்பாகவோ' எவ்வித சித்தரிப்பும் கிடையாது என்பதுடன் ஏசுவினை வெகுவாக புகழும் வாசகங்களும் அதில் இருந்தன.ஆனாலும் இத்திரைப்படம் மாநிலம் மாநிலமாக அரசுகளால் தடை செய்யப்பட்டது. அப்படி தடை செய்வதில் அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டன. மீண்டும் பலத்தின் வெளிப்பாடு. ஏசுவின் புதையறை கண்டுபிடிக்கப்பட்டதாக டிஸ்கவரி சானல் ஆவணப்படம் இந்தியாவில் மட்டும் காட்டுவதை கத்தோலிக்க சபை தடுத்து நிறுத்திக்காட்டியது-சுண்டு விரலை அசைக்காமல். டிஸ்கவரி சானல் கத்தோலிக்க சபைக்கு அடிபணிந்தது. முகமது நபி கேலி சித்திர விசயத்தில் நமது இடதுசாரிகள் எத்தகைய நிலைபாடு மேற்கொண்டார்கள் என்பதும் அரசாங்கம் டானிஷ் பிரதமரின் வருகையையே ரத்து செய்தது என்பதையும், உத்திரபிரதேச அரசின் அமைச்சர் டேனிஷ் ஓவியரின் தலைக்கு பல இலட்சம் ரூபாய்களை வெளிப்படையாக அறிவித்ததும் அதற்கு இடதுசாரிகளும் மௌனம் சாதித்ததையும் நாடு பார்த்தது. தேசிய நாளேடு எனும் தகுதியிலிருந்து என்.ராமின் குடும்ப பத்திரிகை எனும் தரத்திற்கு உயர்ந்திருக்கும் 'தி ஹிண்டு' ஏப்ரல் 9 2006 அன்று சிபிஐ(எம்) பத்திரிகையான "People's Democracy" வெளியிட்ட கட்டுரையை மீள்-பிரசுரம் செய்தது: "ஈரான் விவகாரத்துக்கு பின்னர் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பாக"வும் "நியாயமான ஆத்திரத்தின் வெளிப்பாடாகவும்" (genuine anger) டானிஷ் கேலிசித்திர வெளியீட்டை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) கூறியதை 'தி ஹிண்டு' செய்தியாக மீள் பிரசுரம் செய்தது. சரி சர்வதேச அளவில் சகிப்புத்தன்மையின் எல்லைக்கோடுகள் 'பண்பாடு நிறைந்த' மேற்குலகில் எவ்வாறு உள்ளது என்பதனை காணலாம்: போப் ஜான்பால்-II சிலுவையில் ஏசு அறையப்பட்ட உருவத்தை பிடித்தபடி சரிந்து கிடக்கிறார். அவர் மீது ஒரு விண்கல் அழுத்தியபடி உள்ளது.
அவர் முகத்தில் ஒரு வேதனையும் கம்பீரமும் கலந்த ஜெபம் செய்யும் உணர்ச்சி. இந்த சிலையினை போப்பின் 'விண்ணக சுமை' எனும் தலைப்பில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. போப் தாங்கும் சுமைகளை -அந்த சுமையினை தனிமையில் சகிக்கும் வேதனையை கடமையை காட்டுவதாக அமைக்கப்பட்ட இந்த சிலைக்கு போலந்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வார்ஸாவின் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் உள்ளே நுழைந்தனர். கண்ணாடி தடுப்புகளை அடித்து நொறுக்கினர். சிலை மீது இருந்த விண்கல்லை மாற்றினர். சிலையினை நிமிர்ந்து நிறுத்த முற்பட்டனர். இறுதியாக இந்த கண்காட்சி மூடப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ('In the name of Father', The Week 7-1-2001) இத்தகைய எதிர்வினைகளுடனும் இந்த எதிர்வினைகளுக்கு காரணமான தூண்டுதல்களின் தரத்துடனும் ஒப்பிடும் போது இந்துக்கள் எதிர்நோக்கும் தூண்டுதல்கள் அதீதமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்துக்களின் பாதுகாப்பு உணர்ச்சி உரம் பெறவும் எவ்வித காரணமும் இல்லை. மாறாக இந்து சமுதாயம் கடந்த ஆண்டுகளில் மேலும் மேலும் அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட சமுதாயமாகவே இருந்து வந்துள்ளது. விரோதிகளால் பீடிக்கப்பட்ட இத்தகைய சமுதாயங்கள் பொதுவாக (இந்து சமுதாயத்தின் மீது வைக்கப்படும் எதிர்மறை தூண்டுதல்களுடன் ஒப்பிடுகையில் படு சாதாரணமான) தமக்கு எதிரானதாக கருதப்படும் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் வன்முறை விதத்தினை ஒப்புநோக்கினால், வதோதரா இந்துக்கள் அளவுகடந்த பொறுமையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
[கோவில் தூண் சிற்ப புகைப்படங்கள்: அரவிந்தன் நீலகண்டன்]

Labels: , , , ,

Monday, May 21, 2007

எரகானும் மந்திரப்படையும்


மொழி பெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது. என்றாலும் பார்த்த தியேட்டர் பின்னி பெடலெடுத்துவிட்டது. நாகர்கோவிலில் பெரும்பாலும் தியேட்டர்கள் அப்படித்தான். 'எரகானும் மந்திரப்படையும்' அதீத கற்பனை கதை. டிராகன்கள் எப்போதுமே மேற்கத்திய தொன்ம கற்பனையில் தீயவை. அவற்றினை அழிக்கும் கிறிஸ்தவ வீரர்கள் புனிதர்கள். புனித மிக்கேல் இந்த வகையறாதான். 1996 இல் வெளியான டிராகன்ஹார்ட் (இயக்கம்:ராப் கோகென்) ஒரு சர்வாதிகாரிக்கு தனது இதயத்தை அளித்து பின் அவனை முறியடிக்க முயலும் டிராகன் குறித்த கதை. ஆனால் எரகான் இன்னமும் சுவாரசியமான கதை. இருளின் ஆட்சி பூமியில் படருவதற்கு முன்னர் டிராகன்களும் டிராகன்ரைடர்களும் (Dragon raiders) உலகினை காவல் புரிந்துவந்தனர். அருமையான சுதந்திரம் மிக்க காலம் அது. ஆனால் அதிகார பசியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட ஒருவன் - கல்பதோரிக்ஸ் பன்னிருவரை துணைகொண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினான்.
டிராகன்களை அழித்தான். டிராகன் ரைடர்களை கொன்றான். மீதியிருந்தவர் வர்தன்கள் மலைகளிலும் குகைகளிலும் ஒளிந்திருக்கின்றனர். இதற்கிடையில் டிராகன் ரைடர்கள் பழங்கதையாகிவிட்ட தருணத்தில் கல்பதோரிக்ஸ் தனது கட்டுப்பாட்டையும் சர்வாதிகாரத்தையும் முழுமையாக்கிட டிராகன் குழு ஒன்றினை தனது அதிகாரத்துக்கு உட்பட்டு உருவாக்க நினைக்கிறான். அதற்கு தேவையான டிராகன் முட்டையை ஆர்யா எனும் இளம் வீராங்கனை எடுத்து சென்றுவிடுகிறாள்.
ஆர்யா
அவளை சிறை பிடிக்கிறான் கல்பதோரிக்ஸின் அத்யந்த சீடன் துர்ஸா. ஆனால் அவள் தன் உயிரை பணயம் வைத்து அதனை மாயாஜாலத்தின் மூலம் எரகான் எனும் கிராம வாலிப-சிறுவனுக்கு அனுப்பிவிடுகிறாள். டிராகன் முட்டை பொறிக்கிறது.
நீல நிற டிராகனை ஸப்பயரா என பெயரிடுகிறான் எரகான். அதற்கிடையில் ஆர்யா கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிறாள். சர்வாதிகாரியின் அடியாள் ரசாக் எரகானின் மாமாவை கொல்கிறான். எரகானின் வாழ்க்கை மாறுகிறது. ஏஞ்செலா எனும் மூலிகை விற்கும் 'சூனியக்காரி' அவன் வருங்காலத்தை விவரிக்கிறாள்.அவன் டிராகன் ரைடர் ஆகிறான். அதற்கு கிராம கதைசொல்லியான ப்ரோம் உதவுகிறான். அவனும் முன்னாள் டிராகன் ரைடர். அவர்கள் ஆரியாவை மீட்டு குகைகளில் மறைந்து வாழும் வர்த்தன்களை சென்றடைகிறார்கள். ப்ரோம் வழியில் மரணமடைகிறான். மீண்டும் டிராகன்களின் டிராகன் ரைடர்களில் பொற்காலம் மலரும், சர்வாதிகார இருள் மறையும் என கூறுகிறான். முதல் போர் நடக்கிறது. வர்த்தன்கள் சர்வாதிகாரியின் படைகளை தோற்கடிக்கின்றனர். துர்ஸா கொல்லப்படுகிறான்.
ஆர்யா தன் நாட்டு மக்களிடம் திரும்புகிறாள். எரகான் ஸப்பயராவில் பறக்கிறான். சர்வாதிகாரி 'இது முடிவல்ல தொடக்கம்தான்' என்கிறான். அடுத்த தொடர்ச்சிக்கான முத்தாய்ப்புடன் படம் முடிவடைகிறது.

மேற்கத்திய தொன்மங்கள் மீள் எழ திரைப்படமும் நாவல் உலகமும் நல்ல களமாக அமைந்துள்ளன. இப்படத்தில் 'ஸ்டார்வார்ஸின்' கூறுகளை எளிதாக காணலாம். டிராகன் புவிசக்தியின் உருவகமாக கருதப்படுவதுண்டு. அது பெண் என்பது மிகவும் பழமையான தொன்ம வேர்களை உடையது. ஸப்பயரா என்பது கபாலா எனும் யூதமறைஞானத்தில் பலதளங்களில் இறைச்சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

பன்னிருவர் துணையுடன் சர்வாதிகார இருளை பரப்பிய சர்வாதிகாரி யார் என கூற வேண்டியதில்லை. ஆனால் அண்மையில் வெளியான அனைத்து வெற்றிகர மேற்கத்திய அதீத கற்பனை உருவாக்கங்களில் இந்த சாடல் வெளிப்படையாகவே இருக்கிறது. ஹாரிபார்ட்டரில் தன் பெயரை கூறிடுவதை விரும்பாத வால்டர்மார்ட், பன்னிருவர் துணையுடன் இருள் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிதம் செய்யும் சர்வாதிகாரி, ஜெடை கோவில்களை அழித்து குழந்தைகளை கொல்லும் இருட்கண தலைவன் என ஒருவித வேகத்துடன் அடுத்தடுத்து இருளின் இருதய ஸ்தானம் காட்டப்படுகிறது அதிசயமாகத்தான் இருக்கிறது. 'டிராகன் ரைடர்களை டிராகன் தேர்ந்தெடுப்பதாக' கூறுவது 'மந்திரக்கோலே மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது' எனும் ஹாரி பாட்டர் வசனத்தை நினைவூட்டுகிறது. அருமையான வரைகலை, அற்புதமான இடையூறற்ற இசை. மீண்டும் பார்க்கத்தூண்டும் திரைப்படம்.
"I have visions of lizards. Not just little rock lizards, or even something as big as an alligator-no, I see gigantic, majestic flying dragons. I have visions of them all the time, whether in the shower, sitting on the couch, or riding in the car. The problem with seeing dragons is that they tend to take over your mind. And once that happens, you can go a little crazy. Which is probably why I became a published author at eighteen."- கிறிஸ்டோ பர் பயோலினி (எரகானை உருவாக்கியவர்)

இயக்கம்: ஸ்டீபன் ஃபாங்க்மெயர்

Labels: , , ,

Saturday, May 19, 2007

முறியடிக்கப்பட்ட கீழ்த்தர கிறிஸ்தவ மதமாற்ற மோசடி


கோவை மாவட்டம்:
பல்லடம் அருகே செஞ்சேரி மலைப்பகுதி
"சேவாபாரத் அமைப்பினை சேர்ந்தவர்கள் நாங்கள். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்ய - விடுமுறை கால வகுப்புக்கள் நடத்த வந்திருக்கிறோம்." என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். நல்லதுதான் செய்கிறார்கள் என நம்பிய
பெற்றோர்களும் குழந்தைகளை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிஸ்கெட்களும் கூல் டிரிங்க்ஸ்களும் புத்தகங்களும் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழ்ந்தைகள் மனதில் கிறிஸ்தவ விஷத்தை செலுத்தியிருக்கிறார்கள் அந்த சமூகசேவை தோல்
போர்த்திய போதக ஓநாய்கள். மெல்ல மெல்ல விஷம் கசிந்தது. பிஞ்சு குழந்தைகள் தங்கள் பெற்றோர் வைத்த பெயர்கள் மேல் வெறுப்புடன் கிறிஸ்தவ பெயர்களை அறிவித்திருக்கிறார்கள். "அப்பா இனிமேல் என் பெயர் இசக்கி இல்லை இலியாஸ்" என்ற போது அதிர்ந்த தந்தை சந்தேகம் அடைந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஊர் திருவிழா வந்த போது குழந்தைகள் "ஏசுதான் ஒரே சாமி இது சாமி இல்லை இதை கும்பிடக்கூடாது"
என சொன்ன போதுதான் ஊர் மக்களுக்கு விசயம் தெரிந்து சேவாபாரத் அமைப்பினை விரட்டி அடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால வகுப்புகளில் அளிக்கப்பட்ட நூல்களை பார்த்த போது அனைத்துமே ஏசு குறித்த நூல்களாக இருந்தது தெரியவந்துள்ளது. விதம்
விதமாக கிறிஸ்தவபோதனைகள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள், டெலிபோனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்றெல்லாம் சொல்லிவிட்டு இவுங்க பேரையெல்லாம் பாருங்க..இவங்க கிறிஸ்தவங்க ஏசு
சாமியை கும்பிட்டவங்க அதனாலதான் இவங்களால இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. நீங்களும் பேரை மாத்திகிட்டு ஏசுவை கும்பிட்டா அவங்களை போல சாதிக்கலாம்"
என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தவர்கள் கோபம் அடைந்துவிட்டார்கள் என தெரிந்ததும் இதனை நடத்திய சாமுவேல் ஓடிப்போய்விட்டார். அந்த இடத்தில் ஆசிரியர் கையேடுகள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இப்படிப்பட்ட மோசடி கோடைக்கால மதமாற்ற மூளைச்சலவை நிலையங்கள் நடத்துகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியான ராஜேந்திரன் இதனை கேட்டு "இப்படியெல்லாமா நடக்கிறது!" என அதிர்ந்திருக்கிறார். "காமநாயக்கன்பாளையம் போலீஸாரை சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என விசாரிக்க சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் புளியமரத்துபாளையம் என்ற இடத்திலும் இதைப்போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பாபு என்கிற மோசடி மதமாற்ற ஆசாமி "நான் செய்தது தப்புதான். இனிமேல் இதுபோல மதமாற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன். இந்த ஊர் பக்கமே வரமாட்டேன்." என எழுதி கொடுத்திருக்கிறார். இந்த விசயங்களை எல்லாம் மக்கள் புகாராக எழுதி போலிஸில் பாபுவை ஒப்படைத்திருக்கின்றனர். போலீஸ் பாபுவை எச்சரித்து அனுப்பியிருக்கிறது. சேவாபாரதி என்பது உண்மையான சமூக சேவை தொண்டு நிறுவனம். சுனாமியின் போது இந்த அமைப்பு கடலூர் பகுதிகளில் செய்த சேவை மூலம் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ள அமைப்பாகும். எனவே அதே அமைப்பின் பெயரை போல மோசடியாக தமது அமைப்பின் பெயரை 'சேவாபாரத்' என தந்திரமாக வைத்துக்கொண்டு இந்த மோசடி வேலையில் கிறிஸ்தவ மதமாற்றிகள் ஈடுபட்டுள்ளனர். சரியான விதத்தில் எச்சரிக்கையாக செயல்பட்டு மதமாற்றத்தை தடுத்த ஊர் மக்களும் இந்த மோசடியை தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கும் ஜூனியர் விகடனுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி: ஜீனியர் விகடன், 'பிஞ்சுக்களை மதமாற்றியதா சமூக அமைப்புகள்?' ரிப்போர்ட் by R.லோகநாதன், 23-5-2007

Labels: , ,

ஆபத்தான மதநூல்கள்

உள்ளே புகுவதற்கு முன்னால், இதோ கீழே உள்ள படத்தில் இடதுபக்கம் இருக்கும் குழந்தை அமைதிவழியில் இறைவனின் ஒரே மார்க்கத்தில் செல்லும் குழந்தை. வலது பக்கம் உள்ள குழந்தை காஃபீர்களும் விக்கிரக ஆராதனையாளர்களுமான இந்துக்களுக்கு பிறந்ததால் ஜிகாதிகளால் கொல்லப்பட்ட குழந்தை. இதில் எது சுவனத்துக்கு செல்லும் என நினைக்கிறீர்கள்?

கீழே நீங்கள் காணும் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. இடதுபக்க குழந்தையின் பெற்றோர்கள் பீகாரின் கூலித்தொழிலாளர்கள். வலது பக்க குழந்தையின் தந்தை ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பொறியியலாளர். முந்தைய குழந்தையின் பெற்றோர் காஷ்மிர் ஜிகாதிகளால் கொல்லப்பட்டனர். ஹைதராபாத் குழந்தையின் தந்தை தலிபான் ஜிகாதிகளால் கொல்லப்பட்டார்.
ஆம் ஜிகாதி வெறியால் பெற்றோர்களை இழந்து கதறி அழும் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல...

இனி கீழ் கண்ட உளவியல் பரிசோதனையை படியுங்கள். இப்பரிசோதனை கனடாவின் லாவ்ரென்ஷியன் பல்கலைக்கழக மனவியல் துறை நடத்தியதாகும்.


முதலாண்டு மனவியல் மாணவர்கள் 40 பேரிடம் 10 மனநோயாளிகள் பேசிய வார்த்தைகள் அளிக்கப்பட்டன. இந்த மனநோயாளிகளின் சிந்தனைகள்/பேச்சுக்கள் என அளிக்கப்பட்டவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அளவு ஆபத்தானவை என மாணவர்கள் மதிப்பிடுமாறு கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த 10 மனநோயாளிகளும் கற்பனை ஆவார்கள். இந்த மனநோயாளிகளின் வார்த்தைகள் என கூறப்பட்டவை மதநூல்களிலிருந்து எடுத்தாளப்பட்ட வசனங்கள் ஆகும். இந்த வசனங்கள் பின்வரும் மதநூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும் : கிறிஸ்தவ புதிய ஏற்பாடு, குரான், மோர்மோன் பைபிள், எகிப்திய மரண நூல், திபெத்திய மரண நூல் ஆகியவை ஆகும். பரிசோதனையின் இரண்டாவது கட்டமாக 39 முதலாண்டு மனவியல் மாணவர்களிடம் முதலில் கொடுக்கப்பட்ட அதே வசனங்கள் அவற்றின் உண்மையான மூலநூல்களுடன் கொடுக்கப்பட்டன. மீண்டும் இந்த வசனங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அளவு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதனை கணிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இந்த பரிசோதனைகளில் முதல் பரிசோதனையில் காஃபீர்களை கொலை செய்வதன் மூலம் சுவனம் செல்லலாம் எனும் குரானிய கருத்தாக்கம் அதிக ஆபத்தானதாக மாணவர்களால் கருதப்பட்டது. அதன் மூலநூல் தெரிந்து செய்த தேர்வினில் இந்த ஆபத்து குறித்த கருத்தாக்கம் 33 விழுக்காடு குறைவாக கணிக்கப்பட்டது. நம்பிக்கையற்றவர்களை கொலை செய்வது போன்ற வன்முறை கருத்தாக்கங்கள் புனிதநூல் மூலம் கூறப்படும் போது அது ஆபத்து குறைவானதாக கணிக்கப்படுகிறது. மேல் கூறிய பரிசோதனையை வடிவமைத்தவர் உலகப்புகழ் பெற்ற உளவியலாளரான மைக்கேல் பெர்சிங்கர் ஆவார்.1

பேரா.மைக்கேல் பெர்சிங்கர்

'இறை/இறைதூதர்' போன்ற அனுபவங்களை மூளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதனை ஆராய்ந்தறிந்துள்ள இவரது பரிசோதனைகள் 'இறை அனுபவம்' 'இறைதூதர் நிகழ்வு' போன்றவற்றை அறிவதில் நமக்கு முக்கிய உதவியாக அமைந்துள்ளன. மதநூல்கள் என்பதனாலேயே அதில் உள்ள ஆபத்தினை குறைத்து மதிப்பிடுவது தவறானது ஆகும். இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான ரிச்சர்ட் டாவ்கின்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
பேரா.ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
"பொதுவாக (உங்களையும் என்னையும் போன்ற) சாதாரண மனிதர்களை ஒரு விமானத்தை பெரிய கட்டிடத்தில் மோதி தற்கொலை கருவியாக இயங்க வைக்கமுடியுமா? ...அவர்களுக்கு சுவனத்தில் பெரும் பாலைவன சோலை ஒன்றை வாக்களியுங்கள். இளம் வாலிபர்களுக்கு இறைவன் புகழை பாடும் வெள்ளையுடை தேவதைகள் கிளர்ச்சியை அளிக்கமுடியாது. எனவே இளம் வாலிபர்களிடம் புனிதப்போர் ஷகீத்துகளுக்காக 72 கன்னி இளம் பெண்கள் உடனடியாக நிச்சயமாக சுவனத்தில் அளிக்கப்படுவதாக கூறுங்கள். இது கொஞ்சம் பெரிய அளப்புதான், இருந்தாலும் பலனளிக்கும் பாருங்களேன். இது குறித்து ஒரு முழுமையான பின்னணி தொன்மத்தை -அதுதான் உண்மையென- அளியுங்கள். இதன் மூலம் இந்த பெரிய கப்ஸா உண்மை என்பதாக தோன்றவேண்டும். அவர்களுக்கு ஒரு புனிதநூலை அளித்து அதனை மனப்பாடம் செய்ய வையுங்கள். என்ன நினைக்கிறீர்கள்?எனக்கு இது நன்றாக வேலை செய்யும் என தோன்றுகிறது...நம் தலைவர்கள் அண்மையில் நடந்த கொடுமையை மூளையற்ற/அறிவற்ற செய்கை என்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. மூளையற்ற அறிவற்ற சமூக விரோத செயலாக ஒரு பொது தொலைபேசியை உடைப்பதை சொல்லலாம். ஆனால் செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கை தாக்கிய விசயத்தை அப்படி சொல்லிவிட முடியாது. மாறாக, இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் கூர்மையான மூளையுடன் வெறிபிடித்த வைராக்கியத்துடனும் செயல்பட்டனர். இந்த வைராக்கியம் எங்கிருந்து வந்தது? அதன் மூலம் மதமே ஆகும். மத்தியகிழக்கின் அமைதியின்மைக்கு காரணமாக இருந்த மதமே இந்த ஆயுதத்தையும் (மானுட தற்கொலை தாக்குதல்) உருவாக்கியது. ஆனால் அதைகுறித்து நான் பேசிட புகவில்லை. இங்கு எனது பார்வை அந்த ஆயுதத்தின் மீதுதான். உலகினை ஆபிரகாமிய மதத்தினால் அல்லது ஆபிரகாமிய மதங்களால் நிரப்புவது - பரப்புவது என்பதும் தெருக்களில் குண்டுகள்டங்கிய துப்பாக்கிகளை கொட்டுவது என்பதும் சமமானது ஆகும். எனவே அவை பயன்படுத்தப்பட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள்."2


  • 1.மிக்கேல் பர்சிங்கர், Students' perceptions of dangerousness to public safety of paraphrases from the Koran, New Testament, Book of Mormon, Tibetan Book of the Dead, and Egyptian Book of the Dead presented as patients' beliefs., Journal Percept Motor Skills. 2004 ஜூன்; பக்.1345-55
  • 2.ரிச்சர்ட் டாவ்கின்ஸ், "Religion's misguided missiles", கார்டியன் செப்டம்பர் 15 2001.

Labels: , , , ,

Friday, May 18, 2007

மசூதியில் வெடிக்கும் குண்டுகள்

மலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மசூதியில் நேற்று வெடித்த வெடிகுண்டு வரை ஒரு வகாபியிச முத்திரை அழுத்தமாகவே பதிந்திருக்கிறது. மலேகானில் குண்டு வெடித்தது ஒரு பாகனிய தாக்கத்தால் எழுந்த இஸ்லாமிய திருவிழாவின் போது. வகாபியிஸ்ட்கள் மிகவும் வெறுக்கும் இந்த திருவிழாவில் வெடித்த வெடிகுண்டுகளுக்கு பின்னால் சிமி அமைப்பினர் இருப்பது தெரியவந்தது. நேற்று ஹைதராபாத் மெக்கா மசூதியும் வகாபியிஸ்ட் கோட்பாடுகளுக்கு எதிராக, முஸ்லீம்கள் நபி என நம்புகிற முகமது என்கிறவரின் தாடியில் உள்ள மயிரை புனித மயிராக வைத்திருக்கும் மசூதியாகும். வகாபியிச அடிப்படைவாதிகளால் இத்தகைய 'புனித பொருள்' வணக்கம் வெறூக்கப்படுகிறது. 2006 இல் ஆந்திராவில் இருந்து சென்ற மூன்று ஷியா முஸ்லீம் யாத்திரீகர்கள் சன்னி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். டிஃபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு செல்போனால் இயக்கப்பட்டு வெடித்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு ஏதோ நேற்று ஏற்பட்ட விதிவிலக்கல்ல. வகாபியிச எதிர்ப்பு இஸ்லாமியரையும் காஃபீர்களையும் குறிவைத்து அழிக்கும் சவூதி இறக்குமதி இஸ்லாமிய மதவெறி என்றோ ஆரம்பமாகிவிட்டது. 2003 இல் சாய்பாபா கோவிலில் வெடித்த குண்டு ஆறு உயிர்களை பலிவாங்கியது. 2005 இல் தசரா திருவிழாவின் போது பேகம்பேட்டில் மனிதவெடிகுண்டு வெடித்தது. மனித உரிமை என்கிற பெயரில் காவல்துறை கைகளை கட்டிப்போட்டால் கண்ட இடங்களில் குண்டு வெடிக்கத்தான் செய்யும். வகாபியிச வன்முறையில் இயற்கையான இலக்கு காஃபீர்களை போன்றே தங்கள் வழியை ஏற்காத இதர இஸ்லாமியர்களும்தான். மலேகானும் ஹைதராபாத்தும் தரும் பாடம் இதுதான்.

Labels: , ,

Thursday, May 17, 2007

ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்

கோவை குண்டு வெடிப்பின் பரிமாணங்கள் என்ன என்பதனை விளக்கும் ஆவணப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. இந்த சோகங்களை காணுங்கள்.இதற்கு காரணமானவர்களை வெளியே கொண்டு வரத்துடிக்கும் கொடியவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

ஜிகாதிகளின் தமிழக பலிகள் - மகனை இழந்த சோகம்



ஜிகாதிகளின் தமிழக பலிகள் - சிதைந்த கனவுகள்


ஜிகாதிகளின் தமிழக பலிகள் - மகனை இழந்த தாயை பார்த்து சிரித்த கொலைகார ஜிகாதி வெறியர்கள்



இதற்கு காரணமானவர்களை வெளியே கொண்டு வரத்துடிக்கும் கொடியவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

Labels: , ,

Wednesday, May 16, 2007

தமிழ் காமிக்ஸ் இலக்கியத்தில் திருப்புமுனை

சிறுவர் இலக்கியங்களில் சித்திர கதைகளுக்கு -காமிக்ஸுகளுக்கு- ஒரு முக்கிய இடம் உண்டு. தமிழ்நாட்டில் சர்வதேச காமிஸ்களை பிரபலப்படுத்தியது முத்து காமிக்ஸ்தான். மாலைமதி காமிக்ஸ் என்கிற காமிக்ஸும் சிலகாலம் செயல்பட்டு வந்தது (சிஸ்கோ கிட், ரிப் கெர்பி, பிலிப்
காரிகன் ஆகியவர்களை இது அறிமுகப்படுத்தியது.
பின்னர் இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்புகள் சிறந்த வரவேற்பினை பெற்றன. ராணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், கண்மணி காமிக்ஸ் என்றெல்லாம் பல இறங்கினாலும் கூட முத்து காமிக்ஸின் தொடர்ச்சியான முத்திரை பதித்த வளர்ச்சியுடன் அவற்றால் போட்டியிட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழில் வெளியாகும் இந்த காமிக்ஸ் கதைகள் வெளிநாட்டு உற்பத்திதான். ஆனால் அவற்றினை எடிட் செய்வதற்கும் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யவும் ஒரு திறமை வேண்டும். இந்திரஜால் காமிக்ஸின் கடைசி காலகட்டத்தில் வெளியான தமிழ் இதழ்களில் வந்த சகிக்கமுடியாத மொழிபெயர்ப்புகளை பார்த்தால் இது புரியும். ஆனால் தொடர்ந்து தமிழுலகில் தரம் இழக்காமல் இயங்கிவரும் காமிக்ஸ் என்றால் அது முத்து காமிக்ஸ்தான். முத்து காமிக்ஸின் சகோதர வெளியீடான லயன் காமிக்ஸும் முத்து காமிக்ஸ் குழுமத்துக்கான தரத்தினை காப்பாற்றி வருகிறது. ஆசிரியர் விஜயனை இந்த விசயத்தில் பாராட்ட வேண்டும். இந்நிலையில் தமிழ் கூறும் நல்லுலக காமிக்ஸினை முன்னகர்த்த ஒரு முயற்சியினை முன் வைத்திருக்கிறார் விஜயன். அந்த முயற்சியின் பெயர் 'மர்ம மனிதன் மார்ட்டின்'. தமிழ் காமிக்ஸ்களின் தீவிர ரசிகர்கள் உலகம் என்பது முத்து காமிக்ஸ் வட்டமாக மாறிவிட்டது என்று கூட கூறிவிடலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக XIII என்ற ஆண்டுக்கொரு முறை வரும் அட்டகாசமான ஓவியங்களில் விரியும் சோக காவியத்தையும், அவ்வப்போது வரும் சி.ஐ.டி ராபின் என்னும் அலட்டல் இல்லாத யதார்த்த போலிஸ் துப்பறிவாளரையும் நீக்கிவிட்டால் முத்துக்காமிக்ஸ் முழுக்க முழுக்க கௌபாய் ஹீரோக்களால்தான் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு ஆறுதல் என்னவென்றால் நம் ஆஸ்தான கௌபாய் ஹீரோ பூர்விகக் குடிகளின் சார்பாக போராடும் இனவெறியற்ற மனிதர். ஆனால் சர்வதேச காமிக்ஸ்களில் பிரதானமாக விளங்கும் அறிவியல் புனைவுகள் (science fiction) தமிழ் காமிக்ஸ் உலகில் அத்தனை வெற்றிகரமாகிடவில்லை. மேகலா காமிக்ஸின் கடைசி இதழாக அமைந்தது கூட ஒரு அருமையான உணர்ச்சிகரமான sci-fi தான்.
இந்நிலையில் முத்துகாமிக்ஸ் ஆசிரியர் விஜயன் தைரியமாக ஒரு அறிவியல் புதின ஹீரோவை களமிறக்கி உள்ளார் என்றால் அது பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். அந்த ஹீரோதான் மர்ம மனிதன் மார்ட்டின். ஒரிஜினல் இத்தாலிய காமிக்ஸான 'மார்ட்டின் மர்மம்' (Martin Mystery) அல்ப்ரெடோ காஸ்டெலி என்பவரால் எழுதப்பட்டு ஜியான்கார்லோ அலெக்ஸாண்டரினி என்பாரால் ஓவியம் வரையப்பட்டு உருவாக்கப்படுகிறது. 1982 இல் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ், சிறுவர் சித்திர இலக்கிய உலகில் ஒரு புரட்சியாகவே கருதப்படுகிறது. மர்மமனிதன் மார்ட்டின் ஒரு அகழ்வாராய்ச்சியாளர், பத்திரிகையாளர் கூடவே துப்பறியும் நிபுணர், அவரது உதவியாளராக இருப்பது ஜாவா எனப்படும் நியாண்டர்தல் கால பேச இயலாத மனிதர். ஜாவாவால் பேச இயலாதே தவிர அவரது புலனறிவும் உள்ளுணர்ச்சியும் அதீதமானது. இவர்கள் இணைந்து மர்மங்களை ஆராய்கின்றனர் -குறிப்பாக அமானுஷ்ய மர்மங்கள் -அட்லாண்டிஸ், ம்யூ, பிரமிட்கள் இத்யாதி. இதில் குறுக்கே நிற்கின்றன சில தீய சக்திகள். இவர்களுக்கிடையேயான போராட்டங்களை முத்துகாமிக்ஸில் ரூ 10க்கு படிக்கலாம். மார்ட்டினுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகம் உண்மையானதல்ல. ஆனால் அது நம் சிறுவர்களுக்கு (நமக்கும் தான்) பல்வேறு புலங்களில் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எரிக் வான் டானிக்கன் தனமான கற்பனைகளுக்கு மார்ட்டின் காமிக்ஸில் பஞ்சமில்லை என்றாலும் அது கற்பனை என்ற அளவில் சுவாரசியமானது. உதாரணமாக பிரமிடுகள் வேற்றுகிரக ஆசாமிகளால் கட்டப்பட்டது என்கிற கற்பனை படு சுவாரசியமானது. பிரமிடுகள் குறித்த உண்மையான தகவல்கள் சிலதுடன் இணைத்து இந்த கற்பனையும் ஒரு கற்பனை கதையாக வழங்கப்பட்டால் அது அகழ்வாராய்ச்சியில் ஒரு அற்புதமான ஆர்வத்தை மாணவனுக்கு உருவாக்கிவிடும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தொடர்ந்து மாணவன் வளர வேண்டும். அதாவது மார்ட்டின் காமிக்ஸ் ஒரு உந்து பலகை மட்டுமே அதில் இருந்து மேலே குதித்து அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டும். வரலாற்றின் உண்மையான மர்மங்களில் வரலாற்றின் அறிவியல்தன்மையான ஆராய்ச்சியில் ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாமல் எரிக் வான் டானிக்கன் சொல்வது உண்மை என நம்பிக்கொண்டிருந்தால் அது வளர்ச்சி ஆகாது. எனவேதான் மார்ட்டின் காமிக்ஸ் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு வெளியான மார்ட்டின் தமிழ் காமிக்ஸுகளிலிருந்து என்னென்ன விசயங்களுக்கு நாம் தாவ முடியும் என்பதனை காணலாம்.

1. அமானுஷ்ய அலைவரிசை: 'போதுமான அளவு முன்னேற்றமடைந்த நல்ல தொழில்நுட்பத்தை மாயாஜாலத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியாது' என்பார் புகழ்பெற்ற அறிவியல் புதின எழுத்தாளர் ஆர்தர்.சி.க்ளார்க். இந்த காமிக்ஸ் அதனை தலைகீழாக்குகிறது. நமது பழைய மாயாஜாலங்கள் அதி நவீன தொழில்நுட்பமாக ஏன் இருக்கக்கூடாது?
அதன் பின்னாலிருக்கும் தொழில்நுட்பம் அத்துடன் இன்றைய மின்னணு தொழில்நுட்பம் இரண்டையும் இணைத்து எலெக்ட்ரோ-மாஜிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வேறு பரிமாணங்களுடன் தொடர்பு கொண்டு பயணிக்க முடிந்த தொலைக்காட்சியை உருவாக்கிவிடும் ஒரு மேதையினால் ஏற்படும் பிரச்சனைகள். அதனை மார்ட்டின் எப்படி தீர்த்து வைக்கிறார்? இதுதான் கதை. இக்கதையில் சொல்லப்படும் விஷயங்களில் சில சுவாரசியமான வரலாற்று பின்புலமுடையவை. உதாரணமாக கீழ்வரும் பேனல்களை பாருங்கள்.
இதில் ஒரு மதகுரு ஒரு பொம்மையை உருவாக்குவதை குறித்த உரையாடல் வருகிறதல்லவா? அதன் பின்னணியில் உள்ள கதை சுவாரசியமானது. 16 ஆம் நூற்றாண்டு பிரேக் (Prague) நகரில் யூதர்கள் ஒதுக்கப்பட்ட கெட்டோ வில் வசித்துவந்தனர். அப்போது பேரரசர் யூதர்களை அழித்திட ஆணையிட்ட போது தாவீதிய வம்சாவளி யூதமதகுரு (ரபாய்) யூதா லோயெவ் களிமண்ணால் ஒரு உருவத்தை செய்து அதற்கு ஹீப்ரு மந்திர உச்சாடனத்தை செய்து இறை அம்சம் வாய்ந்த 'எம்ரித்' (சத்தியம்) என எழுதிட அது உயிர் பெற்றெழுந்து யூதர்களை தாக்க வந்தவரை துவம்ஸம் செய்ய ஆரம்பித்தது. இந்த உருவத்தின் பெயர் கோலெம் (Golem) என்பதாகும். அரசன் இதைக் கண்டு அச்சமடைந்து யூதர்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டான். அதன் பின்னர் ரபாய் அந்த பேருருவத்தின் நெற்றியில் எழுதப்பட்ட இறையம்ச நாமத்தின் ஒரு எழுத்தினை அழித்திட அது ம்ரித் என ஆயிற்று. மரணம் என்பது அதன் பொருள். கோலெம் மரணித்தது. இந்த வழக்காற்று கதை பின்னர் நாடகங்களாகவும் நடிக்கப்பட்டது. சில கதைகளில் இந்த எழுத்தினை ரபாயால் அழிக்க முடியவில்லை என்றும் அதனை ஒரு பெண் செய்ததாகவும், முழு அறிவற்ற படைப்பான கோலெம் அப்பெண்ணிடம் மனதினை பறிகொடுத்தமையால் அவளை தன்னை அழித்திட கோலெம் அனுமதித்ததென்றும் அவலச்சுவையுடன் கூறிடுவார்கள்.
ஒரு சவப்பெட்டியில் வைத்து கோலெம் புதைக்கப்பட்டதாகவும் அந்த புதைப்பெட்டியில் இன்றும் அந்த களிமண் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோலெம் யூத ஆதரவு தொன்மம் மட்டுமல்ல அது யூத எதிர்ப்பு தொன்மமாகவும் உரு பெற்றது. நிலவுடமை சமுதாயத்திலிருந்து தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் யூதர்களுக்கு சமுதாயத்தில் மேல் நிலையில் வந்திட முடிந்தது. அதுவரை அவர்களை அடக்கி வைத்த சமுதாயத்தினால், அச்சமுதாயம் பெற்ற ஜனநாயகத்தன்மையினாலேயே அவர்களை அடக்கி வைக்க இயலாமல் போயிற்று. இந்நிலையில் இயந்திர வெறுப்பு ஒரு புறம் வெடித்தது. இயந்திரத்தின் மேலெழும்பிய யூதர்களே மனிதத்தன்மையற்ற இயந்திரத்தின் இரகசியகர்த்தாக்கள் என்பதாக கோலெம் தொன்மத்தின் மற்றொரு கதையாடல் எழுந்தது. எதுவாயினும் பல நவீன (பின்-நவீனத்துவ) காமிக்ஸ்களில் இந்த கோலெம் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றெழுவதை காணலாம். அண்மையில் டிசி(DC) காமிக்ஸ் இந்திய பதிப்பாக வெளியிட்ட கோத்தம் காமிக்ஸின் பாட்மேன் (Batman) கதை ஒன்றிலும் மந்திரத்தன்மை கொண்ட களிமண் ஒரு தப்பியோடும் குற்றவாளியை களிமண் மனிதன் ஆக்குவது குறித்தது ஆகும். மனிதனை தெய்வங்கள் களிமண்ணிலிருந்து ஆக்கின என்பது பழமையான சுமேரிய தொன்மம். ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் (கொரான் உட்பட) இத்த்தொன்மம் எதிரொலிக்கும். மனிதன் அதே களிமண்ணைக் கொண்டு மந்திர சக்தியுடன் உருவாக்கும் உயிரே கோலெம். எனவே அது குறைபாடுடையது. குறிப்பாக ஆன்மா நுண்ணறிவு ஆகியவை அற்றது என்பது இம்மரபின் பார்வை. ஏனெனில் ஜீவனின் அதி ரகசியம் தேவர்களுக்கே (அல்லது ஆபிரகாமிய தேவனுக்கே உரியது.) எனினும் மானுடம் யூத வெறுப்பியலுக்கு அப்பால் சென்றுவிட்டது. மதத்தளைகள் நீங்கி ஜீவரகசியங்கள் கைவர ஆரம்பிக்கும் நிலையில் அல்லது மதங்களின் அரிச்சுவடிகளின் கற்பனைக்கும் எட்டாத அளவு ஆழமடையும் நிலையில் கோலெம் எதைக் குறிக்கிறது? மார்ட்டின் கதையில் மாந்திரீகம் அல்லது மாயாஜாலம் அதி-உயர் தொழில்நுட்பம் என வருகிறது. மானுடம் இன்னமும் ஏற்றிட தயராகிடாத தொழில்நுட்பம்.... அடுத்த மார்ட்டீன் கதை [தொடரும்]

Labels: , , , ,

Monday, May 14, 2007

போலி என்கவுண்டர்கள் மீடியா நாடகங்கள்

ஒரு அப்பாவி பெண்ணை கொன்ற மனிதத்தன்மையற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் அரசியல் கட்சிகளும் மீடியாவும் இதை குஜராத் அரசுக்கும் மோடிக்கும் எதிராக மாற்றி அரசியல் பிரச்சாரம் செய்வது அருவெறுக்கத்தக்கதாக உள்ளது. எனவே கொல்லப்பட்ட சொக்ராபுதீன் யார்? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் போலி-என்கவுண்டர்களுக்கு மீடியா மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக இண்டர்நெட்டின் ப்ளாக்கர் நியூஸ் ஸெர்வீஸ் எனும் அமைப்பு மனித உரிமை கமிஷனின் அறிக்கையிலிருந்து சில புள்ளி விவரங்களை அளித்துள்ளது. 2004-2005 தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையின்படி குஜராத்தில் எழுந்த போலி என்கவுண்டர் குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஆந்திரபிரதேசத்திலோ மகாராஷ்டிரத்திலோ எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கையை காட்டிலும் குறைவானது ஆகும். அறிக்கையின் படி 2004-2005 இல் குஜராத்தில் ஒரு குற்றச்சாட்டும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் ஐந்தும் ஹரியானாவில் நான்கும் முலாயாமின் உத்தரபிரதேசத்தில் 54 கேஸ்களும் நடந்துள்ளன. நிலுவையில் இருக்கும் போலி என்கவுண்டர் கேஸ்களை பொறுத்தவரையில் குஜராத்தில் 5; காங்கிரஸின் மகாராஷ்டிராவில் 29, ஆந்திர பிரதேசத்தில் 21 உத்தரபிரதேசத்தில் 175, மன்மோகனும் சோனியாவும் இருக்கும் ஷீலா தீக்ஷித்தின் புது டெல்லியில் 18, காங்கிரஸ் ஆளும் உத்தராஞ்சலில் 14. எனவே மோடியை குற்றம் சாட்டும் பெருமக்கள் சிறிதே தங்கள் கட்சி முதல்வர்கள் எத்தனை ஒழுங்கு என்பதனை பார்ப்பது நல்லது. கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குறித்து சொல்லவே வேண்டாம். மதுரை தெருவில் ஒரு நாடகமும் சட்டசபைக்குள் மற்றொரு நாடகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் இக்கட்சிகள் மனித உரிமை குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை காட்டிலும் நகைச்சுவையான விசயம். இனி சொக்ராபுதீனின் படங்கள் -குறிப்பாக அவன் தன் மனைவியுடன் தாஜ்மகாலில் நிற்கும் படங்கள் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளால் பிரசுரிக்கப்பட்டன. இது மீடியாக்களின் வழக்கமான தந்திரம்தான். தாம் விரும்பும் நபரிடம் மக்களுக்கு அனுதாப உணர்ச்சிகளை தூண்டும் தந்திரம். உதாரணமாக, பாராளுமன்ற தாக்குதல் நாயகன் அப்ஸலின் மனைவி குழந்தை படங்கள் எத்தனை முறை 'தேசிய' நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகையிலும் வந்தன என்பதனை கணக்கிலெடுங்கள். ஸ்வேதாவையும் ஜோதியையும் பார்த்திருக்கிறீர்களா? இருவரும் யார் என்கிறீர்களா? டெல்லி பாராளுமன்ற தாக்குதலில் பாராளுமன்றத்தை காக்க உயிரை இழந்த பெண் காவலாளி கமலேஷ்குமாரியும் மகள்கள். இதுதான் நம் மீடியாக்களின் தந்திர (அ)தருமம். மதானி குடும்பமும் அப்ஸல் குடும்பமும் பத்திரிகை பக்கங்களில் நம் உள்ளங்களை தொடுவார்கள். ஆனால் மதானியும் அப்ஸலும் செய்த பயங்கரவாதத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதே அளவு விவரணங்களை நம் பத்திரிகைகள் தராது. வெடிகுண்டுகளாலும் ஏகே 47 களாலும் கொல்லப்பட்டவர்கள் வெறும் புள்ளிவிவரங்கள் ஆகிவிடுவார்கள். சொக்ரபுதீன் கதையும் அதுவேதான்.அப்பாவி எளிய மனிதனாக மனைவியுடனான புகைப்படம் மட்டுமே வெளிவந்து அதன் மூலம் நம் இரக்க உணர்வுகளை தூண்டிக்கொண்டிருக்கும் திருவாளர் சொக்ரபுதீனின் உண்மைத்தன்மையை காணலாம். 1997 இல் காவல்துறையால் கொல்லப்பட்ட உலகப்'புகழ்' பெற்ற அப்துல் லத்தீப் என்கிற கடத்தல்காரனின் வாகன ஓட்டிதான் இந்த சொக்ரபுதீன். பின்னர் அவனே பெரிய தாதாவாக மாறினான். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்தே இவன் மீது 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருந்தன. 1999 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைதண்டனையும் பெற்றவன் இவன். 1992 முதல் தாவூது இப்ராகீமின் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியாவுக்குள் ஆயுத கடத்தலை செய்தவன் இந்த சொக்ராபுதீன். இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட ஆயுதக்கடத்தல் அதற்கு துணை செய்ய ஆள்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றினை செய்து வந்த ஒருவனைதான் குஜராத் போலீஸார்கள் சுட்டுக்கொன்றனரே அன்றி ஒரு அப்பாவியை அல்ல. உண்மை இவ்வாறு இருக்க தன்னைத்தானே 'தேசிய" நாளேடு என அழைக்கும் ஒரு ஆங்கில நாளேடு சிறிதும் ஆராயாமல் சி.ஐ.டி ரிப்போர்ட்டில் குஜராத் அரசுக்கு இந்த போலி என்கவுண்டருடன் தொடர்பிருப்பதாக சாட்டப்பட்டிருப்பதாக தனது முதல் பக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அத்துடன் அந்த ரிப்போர்ட்டிலிருந்து குஜராத் அரசினை போலி என்கவுண்டருடன் தொடர்புபடுத்தும் பகுதிகளையும் வெளியிட்டு மகிழ்ந்திருந்தது. ஆனால் குஜராத் அரசு அந்த அறிக்கை சி.ஐ.டி அறிக்கை அல்ல என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. இந்த போலி அறிக்கையை வெளியிட்டதற்காக அந்த 'தேசிய' நாளேடு முதல்பக்கத்திலேயே 'மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ' என்பது போன்ற ஒரு மன்னிப்பை வெளியிட வேண்டியதாயிற்று. திராவிட கட்சிகளால் தமக்கு பிடிக்காத போது மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என தாக்கப்படும் இன்று மவுண்ட் ரோடு மாவோவாக அவதாரம் எடுத்திருக்கும் அந்த 'தேசிய' நாளேட்டிற்கு இந்த தனது முதல் பக்கத்தில் ஒரு மாநில அரசை கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் ஒரு அறிக்கையின் உண்மைத்தன்மை ஆராய்ந்திடக்கூட இயலாத அளவுக்கு மோடி-வெறுப்பு/பாஜக வெறுப்பு கண்ணை மறைத்திருக்கிறது.

போலி என்கவுண்டர்கள் உருவாக மற்றொரு காரணமும் இருக்கிறது. உயிரைப் பயணம் வைத்து பல மாத/வருட கால புலன் விசாரணைகள் மூலம் பயங்கரவாதத்தின் கரங்களாகவும் மூளையாகவும் செயல்படுபவர்களை காவல்துறையினர் கைது செய்தால் அவர்களை மீட்க 'திடீர்'மனித உரிமை ஆர்வலர்களும், ஓட்டு வங்கி அரசியல்வாதிகளும், மதவாதிகளும், சர்வதேச பயங்கரவாதிகளும் அடங்கிய ஒரு நெட்வொர்க் படுதிறமையாக வேலை செய்கிறது. இந்நேரத்தில் இவர்கள் கைதிகளாக இருக்கையில் விசாரணையை திசை திருப்ப பல மனவியல் ரீதியிலான பல உக்திகளை அல் கொயிதா அமைப்பு ஒரு பயிற்சி நூல் மூலம் இவர்களுக்கு அளித்துள்ளது. உள்ளூர் மக்களை காவல்துறைக்கு எதிராக தூண்டுவது, தேவையற்ற பிரச்சனைகளை கோர்ட்டில் எழுப்பி இழுத்தடிப்பது (அண்மையில் சென்னை குண்டுவெடிப்பு கைதி உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க தனக்கு டிவி அளிக்க வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தது நினைவு இருக்கலாம்.) காவல்துறை அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டுவது, அரசியல்வாதிகளின் துணையை நாடுவது போன்ற உக்திகள் இவற்றுள் அடக்கம். அப்சல் போன்ற குற்றவாளிகளூக்காக அண்மையில் ஐரோப்பிய யூனியன் வரை குரல் எழுப்பப்பட்டதும் அவர்களிடம் நம் குடியரசுதலைவர் எங்கள் நாட்டு சட்டமே இந்த விசயத்தில் இறுதி முடிவெடுப்பது என கூறவேண்டிய நிலை ஏற்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இப்படி குற்றவாளிகளுக்கு ஒவ்வொரு தளத்திலும் அரண் அமைக்கும் அமைப்பில் போலி என்கவுண்டர்கள் உருவாகுவது விரும்பத்தகாத பக்க விளைவு ஆகும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதை வைத்து அருவெறுப்பான அரசியல் சச்சரவை மீடியாவும் இந்திய அரசியல் கட்சிகளும் அரங்கேற்றுவது என்பது பயங்கரவாதத்தினை எதிர்த்து நாம் அனைவரும் அனைத்து தளங்களிலும் போராட வேண்டிய இத்தருணத்தில் ஆபத்தான விளையாட்டாகும்.


  • 2003இல் சொகரபுதீன் அளித்த வாக்குமூலத்தில் தன் தாவூத் இப்ராகீம்-அப்துல் லத்தீப் தொடர்புகள் மற்றும் ஆயுதக்கடத்தலில் தன் பங்கு குறித்து கூறியவைஇங்கே காணவும்
  • பயங்கரவாத கைதிகள் பின்பற்ற வேண்டிய அல்குவைதா மானுவல் குறித்து இங்கே காணவும்.
  • சொகரபுதீனின் கிரிமினல் பரிணாம வளர்ச்சி குறித்து இங்கே காணவும்

Labels: , ,

Sunday, May 13, 2007

பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்


ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ.குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா என ஒரு தீவிரமாக வலைப்பதிவர் ஜடாயு அலசியுள்ளார். 'ஆம்' என தெள்ளத்தெளிவாக இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'இல்லை' என தமது நூலில் முனைவர் கொயன்ராட் எல்ஸ்ட் நிறுவுகிறார். இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய 'நாம் நம் தேசத்தின் வரையறை' ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம்.
"இனத்தின் தூய்மையையும் அதன் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அத்தேச செமிடிக் இனத்தை தேசத்திலிருந்து நீக்கி (purges) உலகை திடுக்குற செய்தது. இனகர்வம் அதன் மிக அதீத அளவில் இங்கு வெளிப்பட்டுள்ளது. ஜெர்மனி காட்டியுள்ளது என்னவென்றால் எப்படி தம் அடிப்படையில் மாறுபடும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக ஒருங்கிணையமுடியாது என்பதே. இது இந்துஸ்தானத்தில் உள்ள நம் அனைவருக்கும் லாபம் தரும் நல்ல படிப்பினையாகும்."
மற்றொரு மேற்கோள் பினவருமாறு ஆகும்:
"புத்திசாலித்தனமான பழமையான நாடுகளின் இந்த நிலைப்பாட்டின் படி இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை
எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்."

இந்த இரண்டு பாராக்களும்தான் குருஜியை நாசி ஆதரவாளர்
என்பதாகவும், குருஜி ஏதோ பாசிஸ்ட் என்பதாகவும் -நீட்சியாக ஏதோ ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வமே நாசி-பாசிச தன்மை கொண்டதாகவும் -காட்ட பயன்படும் பாராக்கள் ஆகும்.
ஆனால் இதன் முழுமையான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னால் பாசிசம் என்றால் என்ன நாசியிசம் என்றால் என்ன என்பதையும் அதற்கும் இடதுசாரி சோசலிசத்துக்கும் உள்ள தொப்பிள்கொடி உறவையும் சிறிதே காணலாம்.

வாஸ்தவத்தில் பாசிசமும் நாசியிசமும் தம்மளவி சில முக்கிய விசயங்களில் மாறுபடுகின்றன. பல முக்கிய விசயங்களில் உடன்படுகின்றன. பாசிசத்தின் முக்கிய அம்சம் மாற்றுக்கருத்துகளை அழித்தொழிப்பது ஆகும். அதற்கு சிறிதும் இடம் கொடாமல் இருப்பது ஆகும். நாசிசத்தின் முக்கிய அம்சம் (defining character) அதன் இனவாதம் ஆகும். நாசி இனவாதம் உயிரியல் உண்மையாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. மாறாக பாசிசம் ஒரு சமூக அரசியல் கோட்பாடாகும். அதன் வேர்கள் மார்க்சியத்தில் தொடங்கி பின் பிரிந்தவை ஆகும். மார்க்சியத்தில் தொடங்கிய அதன் வரலாறு பின்னர் மார்க்சியமற்ற ஜெர்மானிய சோசலிச இயக்கத்திலிருந்து தன்னை கட்டமைத்துக்கொண்டது. அதன் இயக்க முறை முழுக்க முழுக்க மார்க்சிய அரசான சோவியத்தை அடியொற்றி அமைக்கப்பட்டதாகும். இதில் சோவியத் மார்க்சியம், இத்தாலிய பாசிசம், ஜெர்மானிய நாசியிசம் - இவை மூன்றுக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள் அமைப்பு ரீதியாகவும் அரசு செயல்பாட்டு ரீதியாகவும் தெளிவானவை. பாசிசமும் நாசியிசமும் முதலாளித்துவ சீர்கேட்டின் வெளிப்பாடுகள் என்பதை விட சோசலிச திரிபுகள் என்பதே சரியானதாக இருக்கும். உதாரணமாக, பிரச்சார அமைப்பு, ஒரு கட்சி முறை, தனிமனித சுதந்திரத்தை அழித்தல், மாற்றுக்கருத்துக்களை அழித்தல் ஆகியவற்றில் இவை மூன்றும் ஓரிடத்தில் சந்திப்பவையாகும். தனிமனித சொத்துரிமை சோவியத்தில் அழிக்கப்பட்டது என்றால் பாசிச மற்றும் நாசி அரசுகளில் தனிமனித சொத்துரிமை அரசு இயந்திரத்தின் பெரும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
பொருளாதார நிபுணர் லுட்விக் வான் மைஸஸ் நாசி அரசுக்கும் சோவியத்துக்கும் இருந்த ஓற்றுமைகளை சுட்டிக்காட்டுகிறார்:
"லெனின், ட்ராஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு மிகச்சிறந்த சீடர்களாக நாசிகளைத் தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது....பின்வரும் விசயங்களை அவர்கள் சோவியத் ரசியாவிலிருந்து இறக்குமதி செய்தனர்:ஒரு கட்சி ஆட்சி முறையும் அரசியலில் அக்கட்சிக்கே இடமும்; இரகசிய காவல்துறைக்கான அதீத இடமும்; வதை முகாம்கள்; அரசு நிர்வாகம் மூலம் அரசியல் எதிரிகளை சிறைப்படுத்துதல் மற்றும் நிர்மூலமாக்குதல்; அரசியல் எதிரிகளின் குடும்பங்களை வதைத்தல் நாடுகடத்தல்; பிரச்சார முறை"

எனவே மார்க்சியவாதிகள் நாசி மற்றும் பாசிச அமைப்புகளுக்கு பிதாமகர்கள் என்கிற உண்மையை நினைவில் கொள்வோம். மார்க்சிசம், பாசிசம், நாசியிசம் ஆகிய மூன்று கருத்துருக்களின் செயல்பாட்டிலும் பிரதானமானது தமக்கு எதிரான கருத்துகளுக்கு முத்திரை குத்தி அழிப்பது முக்கியமானதாகும்.('யூத மேலாதிக்க சதி' என நாசி சொன்னால் அதற்கு இணையான சொல்லாடலாக பூர்ஷ்வா பிற்போக்குத்தனம் அல்லது ஏகாதிபத்திய சதி என மார்க்சியவாதி கூறுவான் நாசி இனவாத கோட்பாடும் மார்க்சிய வெறுப்பியலும் கலந்த விசித்திர பிறவியான மகஇக கும்பல் 'பார்ப்பனீய நவகாலனீய சதி' என முழங்கும்.)

ஆனால் குருஜி கோல்வல்கரின் தன்மை எத்தகையது என்பதனை காணலாம். இந்நூலின் வெளியீட்டு வரலாற்றை மிக தெளிவாக நமக்கு தருகிறார் கொயன்ராட் எல்ஸ்ட். 'நாம் நம் தேசத்தின் வரையறை' குருஜியால் 1938 இல் நவம்பர் முதல் வாரத்தில் எழுதி முடிக்கப்பட்டது என அவர் கூறுகிறார். இந்நூலின் முன்னுரையில் இவர் தம்மை செழுமைப்படுத்திய ஐரோப்பிய எண்ணங்களின் தாக்கங்களை குறிப்பிடுமிடத்து நாசிகளையோ ஹிட்லரையோ குறிப்பிடவில்லை மாறாக இத்தாலிய தேசியவாதியான மாசினி மற்றும் ஸுரிச்சை சார்ந்த சட்ட வல்லுநர் மற்றும் முற்போக்கான எண்ணம் கொண்ட ஜோகனன் காஸ்பர் ப்ளண்ட்ஸ்ச்லி (Johann Kaspar Bluntschli) ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பின்னவர் இன்றைக்கும் மதிக்கப்படும் சட்டவியலாளர் என்பதுடன் மத அடிப்படைவாதத்தை எதிர்த்து முற்போக்கான கிறிஸ்தவ இறையியல் கொண்டவர் என்பது முக்கியமான விசயமாகும். நாசி பாசிச எண்ணவோட்டங்கள் குருஜியை கவர்ந்திருக்கும் பட்சத்தில் 1939 இல் எழுதிய முன்னுரையில் கூறியிருக்கலாம். கூறவில்லை. பிற கருத்துகளுக்கு சற்றும் இடமளிக்காது அழிக்கும் தன்மை நாசி, பாசிச, ஸ்டாலினிய அமைப்புகளுக்கு உண்டு என முன்னர் கண்டோ ம். ஆனால் குருஜியின் தன்மைக்கு அதற்கு நேர் மாறாக இருந்தது என்பதனை நாம் அறியலாம். குருஜியின் முதல் நூலான இதற்கு எழுதப்பட்ட முன்னுரையிலேயே குருஜியின் சில கருத்துகளை கண்டித்து அந்த முகவுரையை எழுதியவர் எழுதியிருந்தார். அவர் மாதவ் ஸ்ரீஹரி அனே என்பவர். அந்த கண்டித்த முகவுரையுடனேயே இந்த நூல் வெளிவந்தது. அதில் அவர் கூறியிருந்தார்:

" மேலும் தேசியம் குறித்து தமது கோட்பாட்டுடன் ஒத்து போகாதவர்களைக் குறித்து இந்நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் பொறுமையற்ற கடுமையான மொழி, தேசியம் போன்றதோர் சிக்கலான விசயத்தை அறிவியல்பூர்வமாக அணுக உதவி செய்வதாக இல்லை." ('நாம்' 1939, பக்.xviii)
பாசிசம், மார்க்சியம் ஆகியவற்றின் நடைமுறைக்கும் குருஜியின் நடைமுறைக்குமாக ஏற்பட்ட பெரிய வேறுபாட்டினை இங்கே காணலாம். தம்மை விமர்சிப்பவரின் முகவுரையை தமது நூலில் வெளியிடும் ஜனநாயக மனோபாவமே குருஜியுடையது.

இனி ஹிட்லரிய யூத இன அழிப்பை குருஜி ஆதரிக்கிறாரா என காணலாம். 1938 களில் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு (அதுவும் நேரு போல சர்வதேச பிரயாணங்கள் செய்திராத ஒருவருக்கு) ஹிட்லரின் யூத வெறுப்பின் உண்மைத்தன்மை குறித்து தெரிய வாய்ப்பில்லை. ஹிட்லரின் யூத தீர்வு என்பது என்ன என்பதனை பட்டவர்த்தனமாக வகைமுகாம்களில் செய்யப்பட்ட படுகொலைகள் மூலமாக உலகம் உணர்ந்தது 1940களில்தான். 1938களில் ஜெர்மனியில் யூதர்கள் தங்கள் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதும் வேறு தேசங்களுக்கு அவர்கள் செல்வதும் மட்டுமே அரசல் புரசலாக இந்தியாவில் தெரிந்திருந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் ஒன்றே ஒன்று மட்டுமே 1938க்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் அது குறித்தும் உலகு அறிந்தது 1940களில் தான். ஹிட்லரின் யூத ஒழிப்பை குறித்து தெளிவாக தெரிந்திருந்திருக்ககூடிய வாய்ப்பு ஒரே ஒரு மையத்துக்கு மட்டுமே இருந்தது. ஹிட்லருக்கு தேவைப்பட்ட சர்வதேச அங்கீகாரத்தை ஹிட்லருக்கு வழங்கிய அந்த மையத்தின் பெயர் வத்திகான். மேலும் ஹிட்லரின் 'பொருளாதார சாதனை' பிரச்சாரங்களும் மக்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியினை போகிற போக்கில் ஒரு உதாரணமாக குருஜி காட்டுவதை வைத்து அவர் நாசி கோட்பாட்டினை ஆதரித்தார் என்பது மேம்போக்கானது. எனவே purges எனக் கூறுவது இன அழிப்பு என சொல்வது அல்லது இன்று நாசிகளின் purges என நாம் அறிந்துகொண்டிருக்கும் பார்வையுடன் ஓப்பிடுவது முழுக்க முழுக்க தவறானது ஆகும்.

உதாரணமாக இடதுசாரிகளின் அபிமான நாயகனான காஸ்ட்ரோ தன் கல்லூரி நாட்களில் ஹிட்லரின் அபிமானியாக இருந்தார் என்பதுடன் 1953 இல் அவர் ஆற்றிய உரை கூட அப்பட்டமாக ஹிட்லரின் ரத்தாஸ் புஷ்க் உரையை தழுவி ஆற்றப்பட்டதாகும். ஏனெனில் ஹிட்லரின் கொடுங்கோன்மை அவன் இழைத்த மானுடப்பேரழிவு ஆகியவை குறித்து க்யூபாவிலோ இந்தியாவிலோ பிரிட்டிஷ் அல்லது பிற காலனிய அடக்குமுறைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்வித பெரிய அறிவும் இருந்திருக்கவில்லை. ஆனால் நாம் காணவேண்டியது 1940களில் ஹிட்லர் ஆற்றிய பேரழிவுச் செயல்களின் விபரீதம் வெளிவந்த பிறகு ஹிட்லரின் பேரழிவுச்செயல்களை ஆதரிக்கவோ அல்லது அது நடக்கவேயில்லையென்றோ அல்லது ஹிட்லரின் பிரச்சார வெளியீடுகளை வெட்கமின்றி மீள்-பிரசுரம் செய்யவோ (நாசி பிரச்சார நூல்களை எப்போதுமே சங்கம் பிரசுரித்ததில்லை) குருஜியோ அவர் சார்ந்த இயக்கமோ முயன்றிடவில்லை. ஆனால் மேல் கூறிய அனைத்துமே செய்தவர்கள் அல்லது செய்தவர்களை ஆதரிப்பவர்கள் குருஜியையும் சங்கத்தையும் இந்துத்தவத்தையும் நாசியிஸ்ட்கள் பாசிஸ்ட்கள் என்பது பெரிய முரண்நகை.

அடுத்ததாக அன்று நிலவிய சூழ்நிலையை புரிந்து கொண்டால் குருஜியின் வாசகங்கள் எத்தகைய சூழ்நிலைக்கான எதிர்வினையாக வெளிப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 இல் உருவாக்கிய வகுப்புவாரி அமைப்பு அன்றைய சூழலில் இந்துக்களுக்கு பெரும் துரோகத்தை செய்வதாகவும் ஜனநாயகத்தின் அடிப்படையையே கேலிக்கூத்தாகுவதாகவும் அமைந்தது. இது குறித்து அண்ணல் அம்பேத்கர் பின்வருமாறு விவரிக்கிறார்:

"வகுப்புவாரி அமைப்பு மோசடித்தனமானது. ஏனென்றால் அது தேர்தல் பிரதிநித்த்துவத்தில் இந்து சிறுபான்மையினரையும் இஸ்லாமிய சிறுபான்மையினரையும் வெவ்வேறாக நடத்துகிறது. இந்து பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இஸ்லாமியர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை தேர்ந்தெடுக்க உரிமை வழங்கிகிறது. ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களில் வாழும் இந்து சிறுபான்மையினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தேர்தல் இடங்களை அவர்கள் தேர்வு செய்யமுடியாது. அதனை முஸ்லீம்கள் தீர்மானிப்பார்கள். ஆக முஸ்லீம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் முஸ்லீம்களுக்கு சட்டபூர்வ பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டு தனி ஒதுக்கீட்டு தேர்தல் சீட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்து சிறுபான்மையினராகிவிட்ட இடங்களில் இந்து சிறுபான்மையினர் மீது முஸ்லீம் ஆட்சி திணிக்கப்படுகிறது - அதில் இந்துக்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாதபடி. இதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படை முறைகேடு."
ஆக, 1938 இல் குருஜி எழுதும் போது அவர் இத்தகைய போக்குக்கான நேர் எதிர்வினையை எழுப்புகிறார். அதுதான் 'சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்' என்கிற குரல். அதில் கூட அவர் கூறுவது என்னவென்றால் அவர்கள் இந்து தேசியத்தன்மையுடன் இணைந்து முஸ்லீமாக வாழ்கிற பட்சத்தில் அவர்கள் இத்தேசத்தின் முழுகுடிமகன்களாக நடத்தப்பட வேணும் என்பதில் குருஜிக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் தெளிவாகவே கூறுகிறார்:
"இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட- இருந்திட வேண்டும்."
இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்று அதே நேரத்தில் நல்ல முஸ்லீம்களாக மட்டுமின்றி நாட்டுக்கே நல்ல உதாரணமாக, மிகச்சிறந்த குடிமக்களாக, வாழும், வாழ்ந்த முஸ்லீம்கள் எத்தனையோ பேரைக் காட்டமுடியும். அத்தகைய இரு முஸ்லீம் மகான்களான கபீர் மற்றும் இப்ராகீம் ரஸ்கான் ஆகியவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி துதி மூலம் கோடிக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாழ்த்தி வணங்கி வருகின்றனர். ஆக எந்த மக்களாக இருப்பினும் பிரிவினை வாத மற்றும் ஆக்கிரமிப்புவாத தனித்தன்மையை விட்டு அவர்கள் இந்த தேசத்தின் இயல்புடன் கலந்திட வேண்டுமென்றுதான் குருஜி விரும்புகிறார். 'என்னதான் பகுத்தறிவு பேசினாலும் பார்ப்பானை சேர்த்துக்கொள்ளாதே' என்கிற ஈவெராத்தனமோ அல்லது 'என்னதான் ஜெர்மனியுடன் ஒருங்கிணைந்தாலும் யூதர்களை இனம் கண்டு விலக்கு' என்கிற ஈவெராத்தனத்துக்கு இணையான ஹிட்லரியத்தனமோ குருஜியிடம் இல்லை. அதற்கு நேர்மாறாக முஸ்லீம்களை இந்துக்களுடன் ஒருங்கிணைய கூறும் ஒற்றுமை குரலே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக சமரசத்தைக் காட்டிலும், தேசநலனைக் காட்டிலும் எங்கள் தனித்தன்மையே முக்கியம் என அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளபடி தனியாக அரசியல் சலுகைளை பெற்று மேலாதிக்கம் செய்ய விழையும் இஸ்லாமிய பாசிஸ்ட்களையே குருஜி கடுமையாக கண்டிக்கிறார். அவர்களையே ''சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்" எனக்கூறுகிறார்.


சரி... குருஜி கூறுகிற இந்து தேசியம் அல்லது தேசிய வாழ்க்கை என்பது என்ன? பசு மாமிசம் உண்பவனைக் கொல்வதா? சாதியத்தையும் பிறப்படிப்படையிலான வர்ணத்தையும் தூக்கிப்பிடிப்பதா? வர்ணம் குறித்து குருஜி மற்றும் இந்துத்வவாதிகளின் பார்வை என்ன என்பதையும் விளக்கமாக காணலாம்.
குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்


  • குருஜி கோல்வால்கர் நாசியா? பெல்ஜிய இந்தியவியலாளர் டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்டின் விளக்கமான கட்டுரை இங்கே: http://koenraadelst.voiceofdharma.com/articles/fascism/golwalkar.html
  • லுட்விக் வான் மைஸஸ் (1881-1973) - யூதர், பொருளாதார மேதை. நாசிகளால் ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கும் பின்னர் நியூயார்க்கிற்கும் குடி பெயர்ந்தவர். ஆஸ்திரிய பொருளாதார கோட்பாட்டின் முக்கிய பிதாமகர்களுள் ஒருவராக கருதப்படுபவர். காண்க:http://en.wikipedia.org/wiki/Ludwig_von_Mises
  • குருஜியை கவர்ந்த Johann Kaspar Bluntschli என்கிற சட்டவியலாளர் குறித்து காண்க: http://en.wikipedia.org/wiki/Bluntschli
  • பாபா சாகேப் அம்பேத்கர், Thoughts on Pakistan, அத்தியாயம் 6, பக்கம். 50
  • காஸ்ட்ரோவின் ஹிட்லர் ஆதரவு நிலைபாடுகள்:
    "In his youth, Castro admired Hitler. At the University he carried with him a copy of Mein Kampf. His statement at the trial in 1953, "History will Absolve Me," was lifted from Hitler's speech at the Rathaus Putsch trial."
    பார்க்க: http://www.cubanet.org/opi/11099902.htm
    மேலும் Georgie Anne Geyer எழுதிய 'GUERRILLA PRINCE' The Untold Story of Fidel Castro எனும் நூலில் இது குறிப்பிடப்படுவதை அதே நூலுக்கான நியூயார்க் டைம்ஸ் மதிப்புரையில் காணலாம்: (http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE5D71330F933A25751C0A967958260) "...as a youthful rebel, Mr. Castro reportedly admired Hitler's tactics and faked at least one police beating to get attention."
  • "எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது; சேர்க்கக் கூடாது."-ஈவெரா (விடுதலை 20-10-1967)

Labels: , , , , , , ,

Friday, May 11, 2007

தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களை தாக்கும் ஜிகாதிகள்: ஜிகாத் 2007


மேலப்பாளையம் ஆமின் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஹைருன்னிசா. இவர்கள் தமது தெருபக்கத்திலேயே ஒரு டீக்கடை நடத்தி வந்தனர். இவரது டீக்கடை அருகிலேயே ஒரு புரோட்டா கடையும் டீக்கடையும் நடத்தி வந்தவர் தாசிம். தாசிம் தீவிர அல்-உம்மா ஆதரவாளர். இவருக்கும் சாகுல் அமீதுவுக்கும் தொழில் போட்டி கடுமையாக ஏற்பட்டது. ஹைருன்னிசாவின் கடைக்கு கூட்டம் அதிகமாக வருவதை விரும்பாத தாசிம் எப்படியாவது ஹைருன்னிசாவை வழிக்குக் கொண்டு வர ரூட் போட்டுள்ளார். அது நடக்காததால் "ஹைருன்னிசா முஸ்லீம் சட்டத்தை மதிக்கவில்லை. பலருடன் அவருக்கு தொடர்பு உண்டு" என்று அல்-உம்மா பயங்கரவாதிகளிடம் விஷயத்தை போட்டுக்கொடுத்தாராம் தாசிம். அதன் விளைவு கடந்த ஆறாம் தேதி இரவு கடையில் டீ போட்டுக்கொண்டிருந்த ஹைருன்னிசாவை கும்பல் ஒன்று வாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சுல்தான்கனி, வெள்ளை காஜாமைத்தீன், செய்யது அலி, இந்தியாஸ் என்று நால்வரை கைது செய்து விசாரித்து வருகிறது போலிஸ். இளம் விதவைகள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்களின் மனைவிகள் இப்போதெல்லாம் வெளியில் தலைக்காட்டவே அஞ்சுகிறார்களாம்.

பெண்களை கொல்லும் அல்லாவின் வீரர்கள்

ஆதாரம்: தமிழன் எக்ஸ்பிரஸ் 14.5.2007 'அழகான பெண்களை குறிவைக்கும் அல்-உம்மாக்கள்' ரிப்போர்ட் by த.வளவன்


இதற்கு முன்னால்:
மார்ச்-10 2007: மும்தாஜ் (35) மேலப்பாளையத்தில் அல் உம்மா பயங்கரவாதிகளால் முதலில் கல்லெறிந்தும் பின்னர் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். ஜனவரியில் மூன்று அல்-உம்மா ஆதரவு இளைஞர்கள் மற்றொரு முஸ்லீம் பெண்ணை அவள் 'தகாத உறவுகள்' கொண்டிருப்பதாக ஏற்பட்ட ஐயத்தால் 1000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் அப்பெண்ணின்
செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர். இதற்காக இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை காவல்துறை அதிகாரி ஸ்டான்லி ஜோன்ஸ் தெரிவித்தார். மேலப்பாளையம்
நகரத்தலைவர் கலூதீன் இளைஞர்கள் மும்தாஜ் விவகாரத்தை தம் கையில் எடுத்திருக்காமல் உள்ளூர் ஜமாத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என அபிப்பிராயப்பட்டார்.
"போனவருடம் தான் ஒரு பெண்ணையும் அவளது ஏழு மாச குழந்தையையும் ஊரை விட்டு வெளியே தள்ளினோம். ஏனென்றால் அந்த பிள்ளை தகாத உறவினில் பிறந்தது. அந்த
பெண்ணை தாயாக்கியதாகக் கூறப்பட்ட, ஏற்கனவே திருமணமான மனிதர் அல்லாவின் மீது ஆணையிட்டு தான் இந்த கர்ப்பத்திற்கு பொறுப்பல்ல என்று கூறிவிட்டார். ஒரு ஆண்
அல்லாவின் மீது ஆணையிட்டால் நாங்கள் அவரை நம்புவோம். ஆனால் அந்த பெண் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்." என ஊர் தலைவர் கூறினார். தமுமுகவின் மாநில செயலாளர் ஒரு டாக்டர். அவர் கூறினார்: "மும்தாஜை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்திருக்கக் கூடாது. குரானை படித்துவிட்டு அவர்களே வியாக்கியானங்களை அளித்துவிட்டனர். இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஒழுக்கமில்லாத பெண்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். பல மத்தியகிழக்கு நாடுகள் இந்த முறையை கொண்டு வந்ததன் மூலம் பெண்களை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கமுடிகிறது. இந்த மாதிரி விசயங்களை கையாள இதுவே ஒரே வழி." மும்தாஜின் கொலைக்கு இருநாட்களுக்கு பின்னர் காவல்துறை ரசூல் மொகைதீன் (22), ஷாகுல் ஹமீது (21), அவன் சகோதரன் நவௌஷத் அலி (19), K இம்ரான் (19), முகமது ஹுசைன் (23) மற்றும் முகமது மைதீன் ஆகியோரை கைது செய்தது. இவர்கள் அனைவரும் மேலப்பாளையக்காரர்கள். இவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள். இவர்களின் மூளையாக செயல்பட்ட ஷாகுல் ஹமீது (27) என்பவனை காவல்துறை தேடி வருகிறது.
(ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் :http://www.indianexpress.com/story/26668.html)
(இந்த பச்சை படுகொலைகளுக்கு வரும் நைனாவின் 'பேரருளாளனின் பெயரால்' சால்ஜாப்புகளை இப்பதிவு வரவேற்கிறது.)

Labels: , , , ,

Thursday, May 10, 2007

வாழ்க எங்கள் திராவிடம்


குடமுருட்டி குண்டு முதல் ஆகிவந்த திராவிடம்
ஐயையோ கொல்லுறாங்க அதுவும் கூட திராவிடம்
குடும்பத்தகராறுக்காக கொல்லும் வீர திராவிடம்
காவல் துறையும் கைகட்டி செய்யுமடா சேவகம்
குண்டுக்கட்டை திராவிடம் குடும்ப சொத்து திராவிடம்
பிடிக்காத செய்தி வந்தால் அடித்து கொல்லும் திராவிடம்
கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம்
முற்பகலில் தேசக்கொடியை எரிச்ச வீர திராவிடம்
பிற்பகலில் தினகரனை எரிச்சு கொல்லும் இன்ப திராவிடம்
தழிழ்நாட்டை பங்கு போட்டு ஆளும் எங்கள் திராவிடம்
கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் திராவிடம்
கலைவிழாவும் திராவிடம் பொன்விழாவும் திராவிடம்
பொன்விழாவை வெறுக்கும் கொலைஞர் நாடகமும் திராவிடம்
பேச்சுரிமை பேசுகிற இடதுசாரி தலைவர்களும்
சால்ஜாப்பாய் ஒத்து ஊத வைச்ச அதிசயம்தான் திராவிடம்
வாழ்க எங்கள் திராவிடம் வளர்க கொலைஞர் நாடகம்
ஆனா
உங்க குடும்ப சண்டைக்கு எங்க பிள்ளைங்களா சாகணும்?



உருட்டுக்கட்டைகளுடன் காவல்துறையின் நேரடி மேற்பார்வையில் தினகரன் ஆபிஸை சூறையாடும் உடன்பிறப்புக்கள்


டி.சுதர்சனம் (காங்.): மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக தாக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு என்று சொல்லி தேவையற்ற நேரத்தில் வெளியிட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகளும் சிறப்பாக செயல்படும் அரசுக்கு நல்ல வழி காட்ட வேண்டுமேயொழிய அமைதி குலைய காரணமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத் துக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து வழங்க வேண்டும்.


ஜி.கே.மணி (பாமக): மதுரை சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடியது. இதற்கு பாமக சார்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் ஊடகங்கள் நடத்துகிற கருத்துக்கணிப்புகள் சரியானதல்ல. அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். இந்த காலம் ஒரு பொற்காலம் ஆகும். மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மிக நன்றாக செயல்படுவதாக பிரதமர், சோனியாகாந்தி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் தேவையற்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு அதன் விளைவாக இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. இப்போது ஊடகங்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஆபாசத்தை திணிக்கும் வகையிலும், தீவிர வாதத்தை வளர்க்கும் வகையிலும், தமிழை கொலை செய்யும் வகையிலும் செய்திகளை வெளியிடுகின்றன. பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். எனவே இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பத்திரிகைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் வேண்டும்.

கோவிந்தசாமி (சிபிஎம்): முதலமைச்சரின் பொன் விழா நடைபெறும் வேளையில் தேவையில்லாத கருத்துக்கணிப்பை வெளியிட்டதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக தினகரன் பத்திரிகை தாக்கப்பட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதை முதலமைச்சரும் வன்மையாக கண்டித்திருக்கிறார்.

சிவபுண்ணியம் (சிபிஐ): தேவையில்லாத கருத்துக்கணிப்பால் விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்ற கருத்து ஏற்புடையது என்றாலும் அதிர்ச்சி தரும் சம்பவத்திற்கு அது காரணமாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

உருட்டுக்கட்டைகளுடன் வந்த வேலை முடிந்து சாவகாசமாக செல்லும் உடன்பிறப்புகள் - சல்யூட் அடிக்காத குறையாக அவர்களை சாத்வீகமாக நோக்கும் காவல்துறை

செல்வம் (வி.சிறுத்தைகள்): உயிரிழந்த 3 பேருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சரின் வாழ்க்கையில் இன்பத்தைவிட துன்பமும், துயரமும் சூழ்ந்தது தான் அதிகம். பொன் விழா சந்தர்ப்பத்தில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனையானது. தேவையில்லாத இத்தகைய கருத்துக்கணிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். எனவே இந்த சம்பவத்தில் அதுபோல நடந்துள்ளதா என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விஷயத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.


வாழ்க திராவிடம்!


இறுதியாக திரு.மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் சட்டசபையில் இது குறித்து ஒரு அறிவிப்பினை செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"...காலை 10 மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் சிலர் தினகரன் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணாடிகளை உடைத்தனர் ...இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் தலைமையில் 17 போலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பகல் 11.30 மணிக்கு சிலர் டாடா சுமோவில் வந்து காவலர்களின் பாதுகாப்பையும் மீறி தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்களை வீசி தீ வைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இதில் தீயிலும் புகையிலும் சிக்கி கோபி, வினோத் முத்து ராமலிங்கம் ஆகிய மூவரும் இறந்துள்ளனர்." (தமிழ்முரசு, 10.-5-2007)


சட்டசபையில் பொன்விழா காணும் மப்பில் இருக்கும் கருணாநிதி பேசிய 'உண்மை' மேலே இருப்பது. அதாவது தீயிலும் புகையிலும் 'சிக்கி'தான் கோபி, வினோத் மற்றும் முத்து ராமலிங்கம் ஆகியோர் இறந்தனர் என்று. ஆனால் அவர்கள் எப்படி 'சிக்கினார்கள்? 'தினகரன் பத்திரிகை செய்தி கூறுவது:

"அழகிரி ஏவிய ரவுடிகள் உள்ளே வந்துவிட்டதை அறியாமல் கம்யூட்டர் இன்ஜினியர்கள் கோபி (25) வினோத் (26) ஆகியோர் இருவரும் செர்வர் அறைக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். கும்பலைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். ரவுடிகள் விரட்டி சென்று உருட்டுக்கட்டைகளால் தலையில் அடித்தனர். பின்னர் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டி ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசியது. பின்னர் அந்த கும்பல் சாவகாசமாக வெளியே வந்து தப்பிச்சென்றது." (தினகரன் 10-மே-2007)

சாப்ட்வேர் இஞ்சினியர் கோபியின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்திருப்பதை படத்தில் காணலாம். அதுபோல 'காவலர்களின் பாதுகாப்பையும் மீறி தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து'விட்டதாக கூறப்படுபவர்கள் தினகரன் அலுவலகத்தை தாக்குவதையும் அதை காவலர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதையும் பார்த்தால் 'காவலர்களின் பாதுகாப்பு' செயல்பட்ட இலட்சணத்தை தெரிந்துகொள்ளலாம்.


ஒருவேளை ஈவெரா பட பாடலான 'கடவுளா நீ கல்லா' பாணியில் 'கலைஞனா நீ கொலைஞனா' என்று யாராவது பாட்டு எழுதி பொன்விழாவில பாடிடாதீங்க, கம்பவுண்டருக்க, சாரி... டாக்டரின் பொன்னான மனசு பூவான மனசு புண்பட்டுரும்.


('தலைவர்கள்' கருத்துகள் நன்றி: http://idlyvadai.blogspot.com/)


அப்படியே ஜெயலலிதா ஆதரவு அராஜக கும்பல் விவசாய கல்லூரி மாணவிகளை எரித்த மிருகத்தனத்தையும் அந்த கும்பல் மீதான வழக்கு அரசால் ஆமை வேகத்தில் நடத்தி செல்லப்பட்ட அருவெறுப்பான வக்கிரமும் நினைவில் இருக்கின்றன. இந்த கீழ்த்தரங்களை என்ன செய்தாலும் தகும்....

Labels: