அகப்பயணம்

Thursday, March 29, 2007

சோசலிச யதார்த்தவாதமும் முதலாளித்துவ பொய்களும்

இந்திய எதிர்ப்பு மற்றும் மார்க்சிய பொய் விற்கும் பூங்காவுக்கு சமர்ப்பணமாக,,,

சோசலிச யதார்த்த வாதம் கலையை வளர்த்தது போல உலகில் உண்மைகளை கலை அழகுடன் வெளிக்கொணரும் கலை உலகில் வேறெங்கும் இல்லை எனலாம். ஆம் தோழர், புரட்டுகர...மன்னிக்கவும் புரட்சிகர தோழமையுடன் ஜிந்தாபாத் தோழர். ஆயிரம் பொய்களைக் கூறி முதலாளித்துவ நயவஞ்சக நாய்கள் உண்மையைத் திரித்தாலும் மார்க்சிய ஒளியே இறுதியில் வெல்லும். அதுதான் வரலாறு கூறும் உண்மை தோழர். லைசன்கோக்களும் ஸ்டாலின்களும் மாவோக்களும் உருவாக்கிய வளமையின் பாதை பொய்க்காது தோழர். கீழே இருக்கும் அருவெறுக்கத்தக்க யதார்த்த எதிர்ப்பு கருத்து முதல்வாத புகைப்படங்களை பாருங்கள். இந்த அமெரிக்க ஏகாதிபத்ய நாய்கள் உக்ரேனிய பஞ்சத்தை புகைப்படம் எடுத்து காட்டுகின்றனவாம். குலக்கு குள்ள நரிகளை அழித்தொழிப்பது நமது புரட்சியின் பாதையில் தவிர்க்க இயலாதது தோழர். முற்போக்கு பாதையில் இப்படியே பார்ப்பனீய நாய்களை அழித்தொழிக்க இந்தியாவிலும் அதிக நாள் ஆகப்போவதில்லை தோழர். அது தெரிந்துதான் இந்த பார்ப்பனீய குடுமிகள் இவ்வாறு ஊளையிடுகின்றன. இதில் நம் மார்க்சீய தத்துவ பேராசான்கள் காட்டிய ஒளியில் மார்க்சியத்தை விளக்கும் பெரும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது தோழர். நம்மை எதிர்க்கும் எவரும் பார்ப்பனீயர்கள்தான். சிலருக்கு தோளில் பூணூல் - அவர்களை நம் துப்பாக்கி தூக்கும் தோழர்களே அடையாளம் கண்டு சுட்டுக்கொன்று புரட்சி பாதையின் அமைதிப்பூங்காவான பொன்னுலகம் படைப்பார்கள் தோழர். ஆனால் சிலருக்கு மூளையில் பூணூல் அவர்களை நம் துப்பாக்கி தூக்கும் தோழர்களுக்கு அறிவுசீவிகளான நாங்கள் அடையாளம் காட்டுவோம் தோழர் அப்போது அவர்களும் அழித்தொழிக்கப்பட்டு சமத்துவ பூங்கா மலரும் தோழர்.





மேலே நீங்கள் காணும் புகைப்படங்கள் ஏகாதிபத்திய கைகூலிகளின் கருத்துமுதல்வாத பொய்கள் என்பதனை விவசாயப்பண்ணை விவசாயிகள் சோவியத் போர் டாங்கியை உற்சாகத்துடன் வரவேற்கும் இந்த ஓவியத்தில் மிளிரும் கலை அழகையும் யதார்த்தவாத அழகையும் கண்டு ரசியுங்கள். மார்க்சிய கலைஞர் தோழர் எகதோரினா செர்னோவா வரைந்த பொருள்முதல்வாத - யதார்த்தவாத அழகு சொட்டும் இந்த ஓவியமே உண்மை. மேலே நீங்கள்பார்த்த புகைப்படங்களெல்லாம் நவ-காலனீய முதலாளித்துவ பொய்கள். கீழே இருப்பதுதான் யதார்த்தவாத உண்மை.

உக்ரேனிலும் சீனாவிலும் கம்போடியாவிலும் க்யூபாவிலும் திபெத்திலும் குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்று இரத்தம் உறிஞ்சிய மார்க்சிய மிருகத்துக்கு இன்னமும் அடங்கவில்லையா இரத்தவெறி...இந்தியாவிலும் வேண்டுமா மனிதபலி?

Tuesday, March 27, 2007

ஏசு : வரலாற்றடிப்படையும் அப்பாலும் - 3

ஏசுவின் பிறப்பு முழுக்க முழுக்க பல்வேறு புராண கதம்பங்களால் ஆனது. அன்றைய ரோம சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரபல தொன்ம நாயகர்களின் பிறப்பு குறித்த அதீத நம்பிக்கைகள் ஏசுவுக்கு வழங்கப்பட்டன. மார்க்கு எழுதிய ஏசு காதையில் அவரது பிறப்பு விசேசமான செய்தியாக குறிப்பிடப்படவில்லை. யோவான் எழுதிய ஏசு கதையிலோ அவரது பிறப்பு தத்துவ அம்சங்களுடன் இணைத்து கூறப்பட்டாலும் கன்னியில் உதயமாகுதல், விண்மீன் முன்னறிவிப்பு, குழந்தைகள் கொலை போன்ற விசயங்கள் இல்லை. ஆக மத்தேயு, லூக்கா ஆகிய இருவர் எழுதிய ஏசு கதைகளிலேயே இந்த அம்சங்கள் விவரமாக எடுத்துரைக்கப்படுகின்றன. இயேசு காதையின் தொடக்ககால கட்டத்தில் அவரது பிறப்பு ஓரு முக்கிய விசயமாக இருக்கவில்லை. மாறாக அவரது இறப்பு-உயிர்த்தெழுதல் ஆகியவையே ஏசு காதையின் தொடக்கத்தில் முக்கிய அம்சமாக இருந்தன. மெஸபடோ மிய பலி கொடுக்கப்பட்டு மீண்டெழும் தெய்வக்காதைகளே தொடக்க கால ஏசு காதையின் முக்கிய அம்சம். எனில் ஏன் இந்த விஸ்தீகரண ஏசு பிறப்புக் கதைகள்? இதற்கு முக்கிய காரணம், யூதர்களை ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என நம்ப வைப்பதோ அல்லது யூதத்தின் வாக்களிக்கப்பட்ட உலக மெசையா ஏசு என பிற மக்களை நம்ப வைக்கவுமே இந்த விஸ்தீகரண சித்தரிப்பு உருவாகியிருக்க வேண்டும்.


புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?

ஏசு பிறந்த காலத்தின் வரலாற்று அடிப்படை:
இனி இந்த காதையின் சில முக்கிய கூறுகளின் நம்பகத்தன்மையை வரலாற்றின் அடிப்படையில் காணலாம். முன்னறிவிக்கப்பட்ட தெய்வீக நாயகனை வேட்டையாடும் தீய அரசன் எனும் தொன்ம அமைப்பு ஸ்டார்வார்ஸின் கதாநாயகர்களுக்கும் ஹாரி பாட்டருக்கும் வரை நீளக்கூடியது. மத்தேயு மற்றும் லூக்காவின் ஏசுகாதைகளே ஏசு பிறப்பினை விவரிக்கின்றன. இங்கே ஏசுவின் பிறப்பு என்ற உடனேயே நமக்கு முக்கியமாக நினைவுக்கு வருவது பெத்லகேமின் எல்லைக்குட்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் எரோது கொலை செய்வதுதான். (மத்தேயு 2:16) இது முழுக்க முழுக்க ஒரு புராண நிகழ்வு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. எரோதின் மரணம் பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கிமு 4 ஆம் ஆண்டு என கருதப்படுகிறது. அடுத்ததாக லூக்காவின் ஏசு காதை மற்றொரு வரலாற்று நிகழ்வினை ஏசுவின் பிறப்பு காலத்துக்கு அடையாளமாக அளிக்கிறது அது: 'சிரியா நாட்டில் சிரேனியு (census of Quirinius) என்பவன் தேசாதிபதியாக இருந்த போது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.' (லூக்கா 2:2) இந்த முதலாம் குடிமதிப்புக்கும் எரோதுவின் சாவுக்கும் பத்தாண்டு இடைவெளி உள்ளது. வரலாற்றறிஞர் ராபின் லேன் பாக்ஸ் (Robin Lane Fox)இது குறித்து விரிவாக பேசுகிறார். சிரேனியு சிரியாவின் அதிபனான காலம் குறித்து யூத வரலாற்றாசிரியர் ஜோஸப்பஸ் தெளிவாக கூறியுள்ளார். கிபி 6 ஆம் ஆண்டு எரோதின் மகன் அர்சிலஸ் பதவி இழந்த பின்னர் சிரேனியு சிரியா அதிபனாகிறான். இது நடப்பது எரோது அரசன் இறந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்வாகும். சில கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த பிரச்சனையை சிரேனியு சிரியாவின் அதிபனாக இரண்டாம் முறை பதவியேற்றது குறித்த கல்வெட்டையும் கிமு 3 ஆம் ஆண்டு ரோம பேரரசன் ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததையும் முடிச்சு போட்டு லூக்கா 2:2 ஐ நியாயப்படுத்துவதுண்டு. ஆனால் அந்த கல்வெட்டு சிரேனியுவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் கிமு 3 ஆம் நூற்றாண்டு கணக்கெடுப்பு ரோமானிய குடிமக்கள் குறித்ததென்பதும் அது யூதர்களை உள்ளடக்கவில்லை என்பதும் இந்த தீர்வினை நியாயப்படுத்தவில்லை. எனில் இந்த காதை ஏற்பட்டது ஏன்?


எகிப்தும் ஏசு பிறப்பும்:




எலைன் பேகல்ஸ் இதற்கு ஒரு நல்ல விளக்கத்தைக் கூறுகிறார். ஏசுவின் பிறப்பு காதை ஒரு முக்கிய யூத புராண நிகழ்வினை தலைகீழாக்கும் புனைவு ஆகும். மிக மோசமான யூத வெறுப்பியல் கிறிஸ்தவத்தில் உருவாவதற்கு கட்டியம் கூறிய புனைவு இது என்று கூட கூறலாம். பேகல்ஸின் வார்த்தைகளில் இதனை காணலாம்: " மத்தேயுவின் ஏசு பிறப்பு புனைவொன்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை காட்டும் ஏகாந்த அழகு கதை அல்ல. மத்தேயுவின் கதைப்படி ஏசு நூலிழையில் மரணத்திலிருந்து தப்புகிறார். அதுவும் யூதக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல உத்தரவிட்ட ஒரு கொலைவெறி பிடித்த கொடுங்கோல் அரசனின் கட்டளையிலிருந்து. பல விவிலியிய ஆராய்ச்சியாளர்கள் இதற்கும் மோசஸ் கதைக்கும் உள்ள இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். மத்தேயு ஏசுவை ஒரு புதிய மோசஸாக காட்ட முனைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே மத்தேயு (ஏசுவை புதிய மோசஸாக காட்டும் அதேநேரத்தில்) எப்படி மோசஸ் காதையின் பல அடிப்படை அம்சங்களை தலைகீழாக்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டியதில்லை. அந்த காதையே பாஸ்கா பண்டிகைக்காக நினைவோர்க்கப்படும் மோசஸ் யூதர்களை எகிப்திலிருந்து விடுவித்து கொண்டு சென்ற கதையாகும். அதிர்ச்சிகரமாக எகிப்திய சர்வாதிகாரியின் இடத்தில் மத்தேயு வைப்பது யூத அரசனான எரோதுவை ஆகும். இங்கு எரோதுவே -எகிப்திய பாரோ அல்ல-யூத குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல ஆணையிடுகிறான். மத்தேயுவின் வார்த்தைகளில் ஏசு பிறந்ததுமே எரோது அரசன் 'பிரதான ஆச்சாரியர் ஜனத்தின் வேதபராகர் எல்லோரையும்' (மத்தேயு 2:4) அழைத்து 'கிறிஸ்து' எங்கே பிறப்பார் என விசாரிக்கிறான். பின்னர் குழந்தையை தேடி கொல்ல உத்தரவிடுகிறான். இதனைத் தொடர்ந்தே ஏசுவின் குடும்பம் எகிப்திற்கு தப்பி செல்கிறது. ஆக எந்த எகிப்து தேசம் பாஸ்கா கொண்டாட்டத்தில் அடிமைத்தனத்தின் குறியீடு ஆகிறதோ அதே எகிப்து கிறிஸ்து பிறப்பில் கொடுமையிலிருந்து தப்பி சென்றடையும் தேசமாக மாறுகிறது. மற்றொரு விசயத்தையும் நாம் கவனித்திட வேண்டும் என மத்தேயு விரும்புகிறார். (யூதனான) எரோதுவும் அவனது சபையினரும் ஏசுவை கொல்ல முயலுகிற போது புறச்சாதி (Gentile) ஞானிகள் (மாஹி) -பின்னாள் கிறிஸ்தவ ஐதீகத்தில் கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள்- அவரை வழிபட வருகின்றனர்..." இந்த தொன்ம புனைவு நோக்கங்களை குறிப்பிடும் எலைன் பேகல்ஸ் இந்த இரு (ஏசு பிறப்பு குறித்து கூறும்) ஏசுகாதைகளும் ஒட்டுமொத்தமாக இறுதியில் உருவாக்கும் மனபிம்பத்தை வெளிப்படுத்துகிறார், " மத்தேயு உள்ளூட்டமாக யூத பெரும்பான்மையினரை சைத்தானுடன் இணைக்கிறார். லூக்கா அதனை வெளிப்படையாக செய்கிறார்." (எலைன் பேகல்ஸ், 'The Origin of Satan in Christian Tradition' யுதா பல்கலைக்கழக உரை, மே 14 1997) மற்றொரு அம்சம் என்னவென்றால் ஏசுகாதைகள் கூறுவது போலல்லாமல், எரோதுவுக்கும் பரிசேயருக்குமான உறவு நல்லதாக இருக்கவில்லை. இவர்களை கிறிஸ்தவ விவிலியம் சித்தரிக்கும் எதிர்மறை தன்மைக்கான காரணங்களை பின்னால் காணலாம். மேலும் எரோது தொடர்ந்து தன் மைந்தர்களை தனக்கு எதிராக சதி செய்வதாக கருதி வந்ததுடன் தனது சொந்த மகனையே கொலைத்தண்டனை அளித்து கொன்றான். எனவே இது குறித்து பரவிய கதைகளின் தாக்கமும் கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ளது.



கீழ்திசை மாகியும், வழிகாட்டிய விண்மீனும்: வரலாறா? புனைவா?

வழிகாட்டிய விண்மீன்?:
ஏசுவின் பிறப்பில் மற்றொரு முக்கிய அம்சம் அவரது பிறப்பினை அறிவித்த விண்மீன் ஆகும். மத்தேயு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:"எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவரது நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்." (மத்தேயு 2:1-2) பின்னர் "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டு போகையில் இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல்வந்து நிற்கும்வரைக்கும் அவர்கள் முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்." (மத்தேயு 2:9-10) பல வானவியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இந்த விண்மீன் எதுவாக இருக்கும் என்று ஊகம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர அவர்களால் இயலவில்லை. கிறிஸ்தவ விவிலியத்தின் மத்தேயு கதை கூறுவது போல ஒரு விண்மீன் (அது வால் நட்சத்திரமாக இருந்தாலும் கூட) அது நகர்ந்து ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்னால் நிற்பதென்பது நடவாத காரியம். என்றாலும் ஏசு பிறந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் ஏதேனும் விண்மீன் தோன்றியிருக்கலாமா எனும் கேள்வி வரலாற்றாசிரியர்களாலும் வானவியலாளர்களாலும் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏசுவின் வாழ்க்கைக்கு எப்படி கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியே ஐயந்திரிபற்ற ஆதாரம் கிட்டவில்லையோ அது போலவே இந்த விண்மீனுக்கும் எவ்வித ஆதாரமும் கிட்டவில்லை. ஆனால் 2001 டிசம்பரில் ஒரு வானவியலாளரின் ஆராய்ச்சி வெளிவந்தது. மைக்கேல் மோல்னர் ரோம சோதிடத்தில் மேஷ ராசியில் (ரோம சோதிடத்தில் மேஷராசி யூதேயாவைக் குறிப்பது.) ஒரு நட்சத்திரம் தோன்றுகிற காலத்தினைக் குறித்து கூறுகிறார். இந்த நட்சத்திரம் உண்மையில் வியாழன் (jupiter) ஆகும். இது ரோம சோதிடத்தில் அரசனைக் குறிக்கும் நட்சத்திரமாகும். குறிப்பாக ஒரு பேரரசனின் பிறப்பு அல்லது பட்டமேற்பினை இது காட்டுவதாகும். ஆனால் இது ரோம சோதிடத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். அக்கால யூத மக்கள் இதனை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை மேலும் யூத குருமார்கள் ரோம சோதிடத்தை தேவனுக்கு ஆகாததென வெறுத்தொதுக்கினர். ஆனால் பிற்காலத்தில் (கிபி 3 ஆம் நூற்றாண்டுகளில்) சோதிட நம்பிக்கையுள்ள ரோமானியர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இந்த குறிப்பிட்ட சோதிட-கிரக நிலை (வானவியல் நிகழ்வல்ல) ஏசுவின் பிறப்புடன் இணைக்கப்பட்டது. அந்நாளில் பிரபல ரோம சோதிடக்காரனாகவும் கிறிஸ்தவத்தை தழுவியவராகவும் இருந்த ப்ர்மிக்கஸ் மாட்டர்னஸ் (Firmicus Maternus) என்பவர் கிபி 334 இல் ஒரு சோதிட நூலை எழுதினார். இந்நூலில் இந்த குறிப்பிட்ட (மேஷராசியில் வியாழன்) கிரகநிலையைக் குறிப்பிட்டு அது ஒரு இறப்பற்ற அரசனின் பிறப்பைக் குறித்ததாக கூறுகிறார். அக்காலத்தில் சோதிடம் ரோமானிய மக்களிடம் பெரும் ஆர்வமுடைய விசயமாக இருந்தது. அதே நேரத்தில் ஏசு குறித்த காதைகளும் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்த மட்டர்னஸின் இந்த கூற்று அவர் பெயரைக் குறிப்பிடாமல் கூறினாலும் அது ஏசுவைக் குறிப்பதென மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பதனை மாட்டர்னஸ் அறிவார். அதே நேரத்தில் அவர் ஏன் ஏசுவை பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. மோல்னர் கூறுகிறார்:" கிறிஸ்தவத்தை தழுவிய ஒரு பாகனாக (pagan) ப்ர்மிக்கஸ் இரு உலகுகளுக்கும் இடையே இழுக்கப்பட்டு துன்பப்பட்டார். எனவேதான் சோதிடத்தின் மூலம் ஒரு திரை மூடிய விதத்தில் ஏசு கதையை வலுப்படுத்தினார்." (மார்கஸ் சௌன், 'Early Christians hid the origins of the Bethlehem star', நியூ சயின்டிஸ்ட் டிசம்பர் 2001) சோதிடத்தையும் ஏசுவின் பிறப்பையும் இணைக்கும் பெத்லகேம் விண்மீனின் உண்மைத்தன்மை தொடக்ககால நிறுவன கிறிஸ்தவத்திற்கு தேவையற்ற இறையியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம் என்பதால் பெத்லகேம் நட்சத்திரத்தின் இந்த உண்மைநிலை கிறிஸ்தவ நிறுவன சபையால் விரைவில் மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டது இத்தகைய சோதிட நிலைப்பாடு கிமு மத்தேயுவின் நட்சத்திரம் ஆக உண்மையில் பின்னாளில் கிறிஸ்தவத்தாலும் அந்நாளில் யூதத்தாலும் வெறுத்தொதுக்கப்பட்ட சோதிடத்தின் அடிப்படையில் உருவானது என்பது உண்மையிலேயே ஒரு முரண் நகைதான். எண்ணாகமத்தில் உள்ள ஒரு வாசகத்துடன் இந்த நட்சத்திரம் பின்னர் இணைக்கப்பட்டது. ("...ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்; ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.." -[எண்ணாகமம் 24:17] யூத அறிஞர்கள் இந்த வார்த்தைகளை முழுக்க முழுக்க வேறுவிதமாக அறிந்துகொள்கிறார்கள் என்பதுடன் எண்ணாகமம் யூத மறைநூலே அன்றி கிறிஸ்தவ நூல் அல்ல என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.)


கன்னித்தாயும் யூத முன்னறிவிப்பும்:




அடுத்ததாக கிறிஸ்து பிறப்பு கதையின் முக்கிய அம்சம் ஏசுவின் கன்னி பிறப்பாகும். ஏசுவினை ஒரு வரலாற்றில் வாழ்ந்த மனிதராகவே எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போஸ்தலன் பவுல் ஏசுவின் சகோதரன் என கருதப்படும் ஜேம்ஸை அறிந்திருந்தவர் ஆவார். அவருக்கு இந்த கன்னி மூலமான ஏசு பிறப்பு குறித்து எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏசு தாவீதின் வம்சத்தில் மாமிசத்தின்படி பிறந்ததாக (பவுல் அப்போஸ்தலன் ரோமபுரியாருக்கு எழுதின நிருபம் 1:5) கூறுவதோடு மட்டுமில்லாமல் பரிசுத்த ஆவியின் மூலம் ஏசு மரணத்துக்கு பின் உயிர்த்தெழுந்ததைக் குறிப்பிடுகிறார். ஆக ஏசு கன்னி மூலம் பிறந்த கதைக்கான முக்கியத்துவம்தான் என்ன? அத்தகைய புனைவுக்கான காரணமாக எது இருந்திருக்க கூடும்? பொதுவாக கிறிஸ்தவ மதப்பரப்பு இலக்கியங்களில் கன்னி மூலம் ஒரு மகவைப் பெறுவது என்பதன் மூலம் ஏசுவின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட யூத முன்னறிவிப்பைப்பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது. அந்த முன்னறிவிப்பாக முன் வைக்கப்படுவது பின்வரும் யூத விவிலிய வார்த்தைகள் ஆகும்: "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என பெயரிடுவாள்."(ஏசாயா 7:14) இந்த முன்னறிவிப்பே ஏசு கன்னிமரியாள் மூலம் பிறந்ததன் மூலம் நிறைவேறிற்று என கிறிஸ்தவ பிரச்சாரம் கூறுகிறது, முன்பே கூறியது போல காலத்தால் முற்பட்ட கிறிஸ்தவ ஏசு கதையான மார்க்கில் இத்தகைய புனைவுகள் ஏதும் இல்லை. எனவே இது பின்னாளில் யூதர்கள் ஏசுவின் 'வாக்களிக்கப்பட்ட'த்தன்மை குறித்த கிறிஸ்தவ பிரச்சாரத்தை எதிர்த்த போது உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யூதர்கள் இந்த கிறிஸ்தவ புனைவே ஒரு தவறான மொழிப்பெயர்ப்பு புரிதலின் விளைவாக எழுந்தது எனக் கூறுகிறார்கள். இன்று நேற்றல்ல கிறிஸ்தவர்கள் எப்போது கன்னி பிறப்பையும் ஏசாயாவின் வார்த்தைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கினார்களோ அப்போதிருந்தே இந்த பிரச்சனையும் தொடங்கிவிட்டது. எபிரேயத்தில் பருவப்பெண் என்பதற்கான பதம் 'அல்மா'('almah') என்பதாகும். இது கிரேக்க மொழி பெயர்ப்பில் பர்தெனோஸ்('parthenos') என மொழி பெயர்க்கப்பட்டது. இரண்டுமே மணம் புரியும் வயதடைந்த பருவப்பெண் எனும் பொருளுடையதென்றாலும் கன்னி என்பதற்கு மிக அருகில் வருவதாகும் (பின்னாளில் அப்பொருளையே அடைந்தும் விட்டது.) ஆனால் எபிரேயம் ஆண் தொடர்பறியாத கன்னி என்பதற்கு ஒரு தனி பதத்தினைக் கொண்டிருக்கிறது, அது 'பெத்துலா' (bethulah) என்பதாகும். கன்னி என்பதனை யூத விவிலியத்தை எழுதியவர் குறித்திருக்கும் பட்சத்தில் அது 'பெத்துலா' என்பது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏசுவின் கன்னி பிறப்பு யூத விவிலியத்தில் முன்னறிவிப்பு செய்ததாக கிறிஸ்தவர்கள் கூறியதற்கு இரண்டாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் 'அல்மா' என்பது இளம்பெண்ணே தவிர கன்னி என பொருள் கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ஒரு கிறிஸ்தவ அறிஞர் தமது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். (ஜஸ்டினின் 'யூதருடன் உரையாடல்). ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளுக்கு பிறகு மிகச்சிறந்த கத்தோலிக்க ஆசிரியராக அறியப்படும் ரேமண்ட் ப்ரவுன் தனது ஆராய்ச்சி நூலான 'Birth of the Messiah'வில் ஏசாயா 7:14 யூத சமயத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வான ஹெஸேக்கியாவுக்கு அகாசு பிறந்ததை குறித்ததாகவே இருந்தது என்பதனை தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்கப்பட்ட விவிலியங்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டதையும், கத்தோலிக்க சபை மொழிபெயர்ப்பாளர்களை ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்காமல் கன்னி என மொழிபெயர்க்க கட்டாயப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். இறுதியாக அவர் வரும் முடிவு என்னவென்றால் "ஏசாயா 7:14 கூறும் நிகழ்வு காலத்தில் பின்னால் நடக்கப்போகும் கன்னி கருவுறும் நிகழ்ச்சி குறித்ததல்ல. மாறாக வெகு அண்மைக்காலத்தில் பிறந்திடும் -பெரும்பாலும் தாவீத் வம்சத்து- இயற்கையாக கருவுற்று பெறப்படும் குழந்தையை குறித்ததுவே ஆகும்." (ரேமண்ட் ப்ரவுன் ''Birth of the Messiah",பக் 148)ஆக கன்னி மரியாள் மூலமான பிறப்பு என்பது பிற்காலத்தில் யூதர்களின் விவிலிய மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதச் செயலே ஆகும்.


ஏசுவின் பரம்பரை:


ஏசுவின் பரம்பரையும் லூக்காவிலும் (3:23-38) மத்தேயுவிலுமே (1:1-17) முக்கியமாகக் கூறப்படுகிறது. இதில் மத்தேயுவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசுவின் பரம்பரையை மூன்றாக பிரிக்கலாம்: யூத புராண நாயகனான ஆபிரகாமிலிருந்து யூத அரசனான தாவீது மன்னன் - 14 தலைமுறைகள் பின்னர் தாவீதின் காலம் முதல் பாபிலோனிய சிறைவாசம் வரை 14 தலைமுறைகள் பின்னர் விடுதலையான காலம் தொட்டு ஏசுவின் நாள் வரை 14 தலைமுறையினர். இரண்டு தலைமுறை வரிசைகளும் யோசேப்புவில் (Jospeh) முடிகின்றன. ஆபிரகாமிலிருந்து ஏசுவுக்கு இடையிலான தலைமுறைகள் மத்தேயுவின் படி 38 லூக்காவின் படி 55. இதில் ஏசுவின் தாயின் கணவரான யோசேப்புவிலிருந்து 14 தலைமுறைகளுக்கு இந்த இரண்டு காதைகளிலும் கூறப்பட்டுள்ள தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
















லூக்காமத்தேயு
1. யோசேப்பு - ஏலியின் குமாரன் யோசேப்புவை யாக்கோபு பெற்றான்
2. ஏலி - மாத்தாத்தின் குமாரன் யாக்கோபுவை மாத்தான் பெற்றான்
3. மாத்தாத் - லேவியின் குமாரன் மாத்தானை எலெயசார் பெற்றான்
4. லேவி - மெல்கியின் குமாரன் எலெயசாரை எலியூத் பெற்றான்
5. மெல்கி - யன்னாவின் குமாரன்எலியூத்தை ஆகீம் பெற்றான்
6. யன்னா - யோசேப்பின் குமாரன்ஆகீமை சாதோக்கு பெற்றான்
7. யோசேப்பு - மத்தத்தியாவின் குமாரன்சாதோக்கை ஆசோர் பெற்றான்
8. மத்தத்தியா - சேமேயின் குமாரன் ஆசோரை எலியாக்கீம் பெற்றான்
9. சேமேய் - யோசேப்பின் குமாரன் எலியாக்கீமை அபியூத் பெற்றான்
10. யோசேப்பு - யூதாவின் குமாரன் அபியூத்தை சொரொபாபேல் பெற்றான்
11. யூதா - யோவன்னாவின் குமாரன் சொரொபாபேலை சலாத்தியேல் பெற்றான்
12. யோவன்னா - ரேசாவின் குமாரன் சலாத்தியேலை எகொனியா பெற்றான்
13. ரேசா - சொராபாபேலின் குமாரன் எகொனியாவை யோசியா பெற்றான்
14. சொராபாபேல் சலாத்தியேலின் குமாரன்ஆமோன் யோசியாவை பெற்றான்


இந்த முரண்பாடுகளுக்கு கிறிஸ்தவ இறையியலாளர்கள் பல சமாதானங்களை கூறிவந்துள்ளனர். உதாரணமாக லூக்கா மேரியின் பரம்பரையையும் மத்தேயு யோசேப்புவின் பரம்பரையினையும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பரம்பரை கூறலும் யோசேப்புவினுடையதே. ஏசு காதை யூத புராணங்கள் மற்றும் யூத நம்பிக்கையின் மீட்பர் வருகையின் அடிப்படையில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் பரவிய போது எழுந்த எதிர்ப்பின் விளைவாக உருவாக்கப்பட்டதே காலத்தால் பிற்பட்ட மத்தேயு மற்றும் லூக்கா ஏசு காதைகளில் காணப்படும் இந்த விஸ்தீரண தலைமுறைகள் விவரணம். ஏறத்தாழ 1940 ஆண்டுகளுக்கு பின்னர் இதே ஏசு காதைகளின் அடிப்படையில் ஜெர்மானிய இறையியலாளர்கள் ஏசு யூத குலத்தை சேர்ந்தவரே அல்ல என திறமையாக வாதிட்டதையும் பிரச்சாரம் செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியை சூசன்னா கெர்ஷல் தமது 2005 உரையில் (ஆரிய ஏசு:கிறிஸ்தவர்கள் நாசிக்கள் மற்றும் பைபிள்). ஏசுவின் வரலாற்றுத்தன்மை வேண்டிய உருவெடுக்கும் திரவ நிலை கொண்டதென்பதற்கு மற்றொரு சான்று இது.


ஆக, ஏசுவின் பிறப்பின் வரலாற்று அடிப்படை என்பது எவ்விதத்திலும் ஆதாரமற்ற வலுவற்ற சீட்டுக்கோட்டையே ஆகும். அல்லது ஏசு கூறியதாக நம்பப்படும் வார்த்தைகளில் கூறுவதானால் மணல் மீது கட்டிய வீடு. அடுத்ததாக ஏசு செய்த அற்புதங்களின் புராணத்தன்மையைக் காணலாம். (தொடரும்)

Thursday, March 22, 2007

ஜெயபாரதனின் அணுசக்தி நூல்



சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் 'அணுசக்தி'. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதம் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:


"யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்", என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb], பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத்திலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.


அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஷபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.


நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.


அன்புடன்,


சி. ஜெயபாரதன், கனடா


இந்நூலின் ஒரே குறை அதன் விலையாகத்தான் இருக்கும். ஆனால் நம் தமிழ் இளைஞர்களுக்கு இந்த நூல் போய் சேர வேண்டியது அவசியம். எனவே வசதியும் மனமும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் தங்கள் ஊர்ப்புற நூலகங்களுக்கு இந்த நூலை அளிக்க வேணும். சி. ஜெயபாரதன் தந்தையார் நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர். ஜெயபாரதன் அவர்கள் அறிவியல் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த தேசபக்தரும் கூட. சுவாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்றவர். பண்டித நேருவின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். தேசியத்தின் மீதும் தாம் சரி என கருதும் நிலைப்பாட்டின் மீதும் எவ்வித சமரசமும் செய்திடாத மகத்தான மனிதர். வாழ்க அவர் பணி. ஓங்குக அது மென்மேலும்.



 • சி. ஜெயபாரதன், கனடா
 • அணுசக்தி நூல் விலை : ரூ 270 (450 பக்கங்கள்)
 • நூல் கிடைக்குமிடம்
 • தமிழினி பதிப்பகம்
 • 63. பீட்டர்ஸ் சாலை,
 • ராயப்பேட்டை,
 • சென்னை: 600014

Sunday, March 18, 2007

மார்க்சியமும் அறிவியலும்

கட்டுரை சுருக்கம்:



சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால் பயன்படுத்தப்பட்டது என்பதுமாகும். பொதுவாக மார்க்சீய வட்டங்கள் இத்தகைய பயன்பாட்டினை மேற்கத்திய பிரச்சாரம் என்றே மறுத்து வந்துள்ளன. ஆனால் சோவியத் வீழ்ச்சியின் பின் வெளிப்பட்ட உண்மைகள் பிரச்சாரத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை நிகழ்வுகளென தெரியவந்த பின் இவை மிகவும் பரந்த மனம் கொண்டவர்களாக கருதப்படும் மார்க்சீய அறிஞர்களால் கூட ஒன்றிரண்டு வரிகளில் விவாதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளுக்கான பொதுவான சித்தாந்த விளக்கம் ஸ்டாலினின் தனிமனித மேன்மை இயக்கத்தின் விளைவுகள் என்பதும் இப்பெரும் மானுட அழிவுகள் மார்க்சீய சித்தாந்த விளைவுகள் அல்ல என்பதுமாகும். இக்கட்டுரை இந்த சித்தாந்த விளக்கத்தின் உண்மையை ஆராய்கிறது. புதிய இயற்பியல் மற்றும் மரபணுத் துறைகளினை குறிப்பாக கொண்டு மார்க்சீய சித்தாந்த பற்றே சோவியத் அரசில் அறிவியலின் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளுக்கு காரணம் என இக்கட்டுரை சில ஆதாரங்களை முன்வைக்கிறது இவ்விதத்தில் மார்க்சியம் தன்னளவில் அடைப்பட்டதும் விரிவாக்க தன்மை கொண்டதுமான மற்றெந்த ஆபிரகாமிய மதங்களிலும் மாறுபட்டதல்ல என்பதையும் இக்கட்டுரை நிறுவ முயல்கிறது.
மார்க்சீய நிலைபாடு:



லெனின் ட்ராஸ்கியுடன்


மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவது என்னவென்றால் லெனினுக்கு பின் ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என்பதாகும். சோவியத்தில் நடந்த கலை மற்றும் அறிவியல் உலகின் மீதான தாக்குதல்கள் மார்க்சீயத்திலிருந்து விளைந்தவையல்ல என்றும் மாறாக மார்க்சீயத்திற்கு எதிரான ஸ்டாலினிசத்திலிருந்து தோன்றியவை என்றும் இன்று கூறப்படுகிறது1. 'நிகழா நிகழ்வு நிகழ்ந்திருந்தால் ' என கூறப்படும் விளக்கங்கள் பொய்ப்பிக்கப்பட முடியாதவை. ஆனால் சோவியத்தின் அடிப்படைகளை வடிவமைத்த விளாதிமீர் இலியுச் லெனின் அறிவியலையும் அதன் வளர்ச்சியையும் எவ்வாறு கண்ணுற்றார் என்பதனையும் அவர் காலத்திய அறிவியல் சித்தாந்த மாற்றங்களில் அவர் எடுத்த நிலைபாடு எவ்வாறு இருந்தது என்பதும் இவ்விளக்கத்தின் உண்மையை அறிய உதவும். மார்க்சிய சித்தாந்தம் 'அனைத்தாற்றலுடையது (omnipotent) ஏனெனில் அது உண்மை'2என்பதே லெனினின் எடுத்துரைக்கப்பட்ட நிலைபாடு. இந்நிலைபாட்டிற்கான மூலம் மார்க்ஸின் வார்த்தைகளிலிருந்தே பெறப்பட்டன.'கலை இலக்கியம் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு அங்கமாக வேண்டும்'3மற்றும் 'இயற்கை குறித்த அறிவியலை மனிதனை குறித்த அறிவியல் தன்னகப்படுத்திக் கொள்ளும் '3 என்பவையே அறிவியல் மற்றும் கலை குறித்த மார்க்சீய சித்தாந்த பார்வையாயிருந்தது. இதனுடைய தர்க்க ரீதியான நீட்சியாகவே வி.இ.லெனினின் கலை மற்றும் அறிவியல் குறித்த கருத்துகளையும் செயல்பாடுகளையும் நாம் கொள்ள வேண்டும். இங்கு மனிதனைக் குறித்த அறிவியல் என மார்க்சிசம் பகர்வது தன்னையேதான் என்பதனையும் கணக்கில் கொள்ள வேணும்.
லெனினின் ஆட்சி நடவடிக்கைகள்:



லெனின்


கலை மற்றும் அறிவியலுலகை பொறுத்தவரை பல ஸ்டாலினிய நிகழ்வுகளின் முன்னோடிகளை லெனினின் செயல்பாடுகளில் தெளிவாகவே காணலாம். லெனின் பல கலைஞர்களை கைது செய்த போது எதிர்ப்பு தெரிவித்த மாக்ஸிம் கார்க்கியிடம் லெனின் அரசியல் எதிர் சித்தாந்தவாதிகளை 'மக்கள் எதிரிகளை' சிறையில் தள்ளுவதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனத் தெளிவாகவே கூறினார்.மேலும் கார்க்கி, பூர்ஷ்வா உலகின் மிக மோசமானவர்களால் சூழப்பட்டு அவர்களது கூப்பாடுகளுக்கு மதி மயங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்4. 1920 இல் ஒரு பேட்டியின் போது அவர் 'கலை மக்களுக்காகவே ' என்னும் கோஷத்தின் அடிப்படையில் கலையின் அனைத்து நவீன வெளிப்பாடுகளையும் நிராகரித்தார். இதனை தொடர்ந்து பல கலைஞர்கள் தங்கள் உயிரையும்,கலையையும்,சுதந்திரத்தையும் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு தப்பியோட நேர்ந்தது5.


கார்க்கிக்கு லெனினின் மிரட்டல் கடிதம்

இயற்பியலில் அடிப்படை மாற்றங்கள்:


லெனின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சில காலத்திற்கு முன் இயற்பியல் தன் அடிப்படை பார்வையில் பெரும் புரட்சியினை சந்தித்துக் கொண்டிருந்தது. இந்த இயற்பியல் அடிப்படை மாற்றத்தினை லெனின் மிகக் கூர்ந்து கவனித்து வந்தார். இன்றும் விரிவு பெறும் மிக முக்கியமான கணிதவியல் வித்துகள் இக்கால கட்டத்தில் தான் தூவப்பட்டன. இயற்பியலுக்கும் கணிதத்திற்குமான உறவுகள் புதிய சமன்பாடுகள் மூலம் புத்துருவாக்கம் பெற்று வந்த காலகட்டம் அது.எனவே நியூட்டானிய இயற்பியலின் அடிப்படை பார்வையினால் சமூக உறவுகளை வரையறை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தமான மார்க்சிசத்தின் ஆக சிறந்த சித்தாந்தவாதி, இம்மாற்றங்களால் அடைந்த மன உணர்வுகளும், அவருடைய சித்தாந்த எதிர்வினைகளும் மிக முக்கியமானவை.

இயற்பியலின் இந்த அடிப்படை மாற்றங்கள் உண்மையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கலிலியோ புரட்சியினை விடவும் அடிப்படையானது. எனினும் பொதுவாக மேற்கத்திய அறிவியல் உலகம் இம்மாற்றத்தை எளிதாகவே ஏற்றுக் கொண்டு விட்டது. கலிலியோவின் காலத்த்இதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது எது? சில ஆண்டுகளாகவே பல முக்கிய அறிவியலாளர்கள் மூலகூறு மற்றும் அணுக்களின் அடிப்படையிலான பொருள்-வாத இயற்பியல் அடிப்படையினை சந்தேகித்ததுதான். இவர்களுள் முக்கியமானவர்கள் ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் எர்ன்ஸ்ட் மாக், ஜெர்மானிய வேதியிலாளர் லுட்விக் ஆஸ்ட்வால்ட், ஜெர்மானிய இயற்பியலாளர் ஜியார்ஜ் கெல்ம் மற்றும் பியெரி கியூரி ஆகியோர். எதிரணியிலும் மிக முக்கியமான அறிவியலறிஞர்கள் இருந்தனர். போல்ட்ஸ்மான் போன்றவர்கள் பொருள்முதல்வாத நிலைப்பாட்டினையே எடுத்திருந்தனர். என்ற போதிலும் போல்ட்ஸ்மான் ஆஸ்ட்வால்ட்டுடனான ஒரு அறிவியல் விவாதத்தின் போது நியூட்டானிய அடிப்படையான அனைத்து நிகழ்வுகளும் மைய விசைகளால் நிர்ணயிக்கப்படும் பருப்பொருட்துகள்களின் இயக்கத்தால் விளக்கிவிட முடியும் எனும் நிலையிலிருந்து அறிவியல் வெகுவாக முன்னகர்ந்துவிட்டது எனக் கூறினார்.இது 1895 இல் நடந்தது. ஆக நியூட்டானிய அறிவியலில் இருந்து பெறப்பட்ட லாப்பேழேசிய நிர்ணயதன்மையின் நிலை என்ன? அதுவும் 1905 களில் சற்றேறக்குறைய பத்தாண்டுகளாக புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது.


பருப்பொருட்களுக்கு அப்பால் எங்கெங்கும் பரவியதோர் ஈதரென்னும் ஆகாசப் பொருளின் வெளிப்பாடாக பருப்பொருட்களை காணும் கோட்பாடும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை பொய்ப்பித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் பங்களிப்பு முழுக்க முழுக்க புதிய பார்வையினை அளித்தது. அணுவாதத்தின் அடிப்படை உண்மையை சந்தேகித்த ஆஸ்ட்வால்ட் ஐன்ஸ்டைனின் ப்ரவுனிய இயக்கத்தினை அணுழமூலக்கூறு இயக்க அடிப்படையில் விளக்கியதன் பேரில் தான் அணுவாதத்தின் அடிப்படையை தாம் ஐயுற்றதை மாற்றிக்கொண்டார். பின்னாளில் மிகவும் அதிர்வுறச் செய்யும் க்வாண்டம் இயற்பியலின் சில அடிப்படை நிலைபாடுகளை ஆஸ்ட்வால்ட்டின் ஆற்றல் முதல்வாத அணியினர் கணிதவியல் மூலம் முன்னறிய முடிந்தது. உதாரணமாக, 1880 களில் கார்ல் பியர்சனின் கணித ரீதியான பிரபஞ்சவியல் அடிப்படையில், ஆர்தர் ஸ்கஸ்டர் எனும் பிரிட்டிஷ் கணிதவியலாளர், எதிர் பருப்பொருள் (antimatter) இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் , அத்தகைய எதிர் பருப்பொருள் பருப்பொருளோடு 'சந்திக்கையில் ' முழு பருப்பொருள் அழிவும் ஆற்றலும் வெளிப்படும் எனவும் கூறினார். 1898 இல் வெளியிடப்பட்ட இம்முடிவுகள் நவீன இயற்பியலினால் பின்னர் மெய்ப்பிக்கப்பட்டன6.


சார்பியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலில் உச்சமடைந்த இந்த மாற்றங்களின் சங்கிலித்தொடரில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதே தன்மையுடன் முந்தைய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களில் இருந்த தீயெரிப்பு மற்றும் புனித விசாரணைத் தண்டனைகள் இல்லை என்பதே. ஏனெனில் இவை நிகழ்ந்த நாடுகளில் நியூட்டானிய லொப்பேழேசிய அறிவியலின் அடிப்படைகளை பூரண உண்மைகளாக கொண்ட அதிகார சித்தாந்தங்கள் அரசாளவில்லை. காலனியாதிக்கம் உண்மையில் தன் அடிப்படைகளை அரிஸ்டாட்டிலிய சித்தாந்த கூறுகளிலும் நியூட்டானிய கூறுகளிலுமிருந்து பெற்றிருந்தது எனினும் அது முழுமையாக இல்லை. (கிறிஸ்தவம் மற்றும் மார்க்சீயம் கலாச்சார காலனியத்தை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களாகவே இன்றும் இருந்து வருகின்றன.)


ஆனால் மார்க்சியம் தன் மிக அடிப்படையான முரண்பாட்டியங்கியல் வாதத்தின் அஸ்திவாரமாக நியூட்டானிய பொருள்முதல் வாதத்தினைக் கொண்டிருந்தது. மனித சூழலில் இந்த பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவிகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன. இச்சித்தாந்தத்தின் மூலம் அரசு அதிகார விழைவு கொள்ளும் ஒரு இயக்கத்தில், அறிவியல் இந்த அடிப்படை உண்மையை உறுதி செய்வதாகவே அமைய வேண்டும். இந்த உறுதிப்பாடே அறிவியலின் இருத்தலுக்கான நியாயமாகும். உறுதி செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தன் இயக்கத்தின் மூலம் உறுதி செய்வதே அறிவியலுக்கு அளிக்கப்பட்ட ஒரே பணியாக மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே இதுவும்.


இயற்கை அறிவியல் துறைகள் குறித்த லெனினின் பிரகடனம்:



பிரச்சார தபால்தலையில் லெனின்



லெனின் சிலை உண்மையில் 'மதிக்கப்படும்' விதம்

இயற்பியலின் இந்த இயக்கம் குறித்த மார்க்சீய சித்தாந்த எதிர்வினை 1908 -இல் வி.இ. லெனின் எழுதிய ஒரு சிறிய வெளியீட்டில் விரிவாக முன் வைக்கப்படுகிறது.பின்னாளில் தாங்கள் சோவியத் அரசு அதிகாரம் அடைந்த பிறகு சோவியத் அறிவியல் வளர்ச்சிக்கான திசைகள் இவ்வெளியீட்டிலிருந்தே பெறப்பட்டன. ஆற்றலியல் கோட்பாட்டுலகினைச் சார்ந்த அனைத்து அறிவியலாளர்களும் லெனினின் கடும் வசை சொற்களுக்கு ஆளாகின்றனர். அறிவியல் தத்துவவியலாளரான பெர்மானின் கூற்றுகள் 'மூடத்தனமானவை '; கணிதவியலாளரான ஹென்றி பான்கரேயின் சித்தாந்தங்கள் 'அதீத கற்பனையால் நிரம்பியவை'; டூஹெம்மின் சித்தாந்தங்களோ 'பொய்மை' நிறைந்தவை. மேலும் நியூட்டானிய இயற்பியலிலிருந்து புதிய இயற்பியலின் தோற்றம் மனித குலத்தின் அறிவு பரிணாமத்தின் ஒரு பொற்காலம் எனவே கருதப்படலாம். ஆனால் லெனினின் சித்தாந்த பார்வையில் இக்காலம் 'தற்காலிகமான விலகல்; அறிவியலின் வரலாற்றில் விரைவில் மாறிவிடக்கூடிய நோய் பிடித்ததோர் காலம்.' இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இவ்வெளியீட்டில் லெனின் இயற்பியல் எந்த திசை நோக்கி வளர வேண்டும் என்பதையும் எவ்வித நோக்குடன் அறிவியல் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் விவரிக்கிறார்,
'ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமுடைய அறிவியலாளர்கள், தத்துவார்த்த பொருள்முதல் வாதத்திலிருந்து முரண்பாட்டு பொருள்முதல் வாதத்திற்கு முன்நகர முடியாது, பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்டனர். ஆயினும் இந்த முன்னகர்வு இயற்பியலால் எடுக்கப்படுகிறது, எடுக்கப்பட்டே தீரவேண்டியது. ஒரே உண்மை அறிவியல் முறை மற்றும் ஒரே உண்மையான அறிவியல் தத்துவமான முரண்பாட்டியங்கியல் நோக்கி இயற்பியல் வந்தே தீர வேண்டும்.நேராக இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்தாவது வர வேண்டும்.பிரக்ஞையற்று என்றாலும் தன்னியல்பாக அது நடந்தேற வேண்டும். தன் முதுகைக் காட்டிக்கொண்டாவது இயற்பியல் முரண்பாட்டியங்கியலை நோக்கியே நகர்ந்தாக வேண்டும்.'
7 அதிர்ஷ்டவசமாக லெனின் க்வாண்டம் இயற்பியலின் கோபன்ஹேகன் விளக்கத்தை கேட்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக ஸ்டாலின் கேட்டார்- அதன் முழு தத்துவ தாக்கத்துடன்.


சோவியத் இயற்பியல்:



க்வாண்டம் இயற்பியல் மார்க்சிய அரசினால் பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியலுக்கு எதிரான கருத்துமுதல்வாத சார்புடையதாக கருதப்பட்டது.

லெனினின் இப்பிரகடனமே பின்னர் ஸ்டாலினின் கீழ் சோவியத் அறிவியலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னான சோவியத் இயற்பியலின் நிலை மிக அபாயகரமானதாக இருந்தது. லெனினின் பிரகடனத்தின் அடிப்படையில் சோவியத் தத்துவ அறிஞர்கள் 1930களிலேயே க்வாண்டம் இயற்பியலினை தீவிரமாக எதிர்த்து வந்தனர். கல்வி அமைச்சக உயர் அதிகாரியான காஃப்தனாவ் சோவியத் துணை அதிபரான கிலிமெந்தி வோராஷி லொவ்விற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்,'தீர்மானமான முறையில் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரான போக்குகளை தோலுரிப்பதை விட்டுவிட்டு சில அறிவியலாளர்கள் கருத்து முதல்வாத நிலைபாடுகளை தழுவி விடுகின்றனர். இக்கருத்துகள் மேல் படிப்பு துறைகளை இயற்பியல் மூலம் எட்டிவிடுகின்றன.'8 பல முக்கியமான இயற்பியலாளர்கள் .பீட்டர் காஃபிஸ்டா, இகாவ் ஃபெரன்கல், லெவ் லாந்தவ் போன்றவர்கள் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரானவர்களாக தண்டிக்கப்பட்டனர் அல்லது தங்கள் பதவிகளிலிருந்து இறக்கப்பட்டனர்8. 'பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட'வர்களை 'தன் முதுகைக் காட்டிக் கொண்டாவது முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தும் ' லெனினின் பிரகடனத்தின் செயலாக்க முயற்சியே ஸ்டாலினுடையது.





இயற்பியலாளர்களைக் காப்பாற்றிய குருச்சட்டோ வ்

அணுஆயுத போட்டியும், சித்தாந்தத்தை விட அதிகாரத்தை நம்பும் ஸ்டாலினின் நடைமுறை வாத அரசியலுமே இங்கு சோவியத் இயற்பியலை லெனினிய அழிவிலிருந்து காப்பாற்றியது எனலாம். ஸ்டாலினின் வலதுகரமாக விளங்கிய லாவரெந்தி பெரியா சோவியத் அணு ஆயுத தயாரிப்புக்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். முழுமையாக இயற்பியல் முரண்பாட்டியங்கியலுக்கு ஏற்ப சீர்மை படுத்தப்படுவதற்காக அவர் ஒரு மாநாடு ஏற்படுத்தவிருந்தார். அணுஆயுத ஆய்வினை நடத்தி வந்த குருச்சட்டேவ் அப்போது குறுக்கிட்டு அதை நிறுத்தும் படி கூறினார். அதன் விளைவாக அம்மாநாடு நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக சோவியத் இயற்பியல் சோவியத் மரபணுவியலின் விதியை சந்திக்காமல் தப்பியது. இது குறித்து எரிச்சலடைந்த ஸ்டாலின் அதே சமயம் சோவியத் அணு ஆயுதத்திற்கு 'பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட' இயற்பியலாளர்களின் தேவையை அறிந்திருந்ததால் பின்வருமாறு கூறினார், 'அவர்களை இப்போதைக்கு அவர்கள் போக்கில் விடுங்கள் பிறகு சுட்டுக் கொல்லலாம்.'8


அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் இராணுவ மேற்பார்வையாளரான தளபதி மாக்கென்னோவ் இம்மாநாடு குறித்து பெரியா குருச்சட்டோ விடம் நடத்திய கேள்விகளை பின்வருமாறு தெரிவிக்கிறார்,

' 'முரண்பாட்டியங்கியலுக்கு எதிராக சார்பியலும் க்வாண்டம் இயற்பியலும் கருத்து முதல் வாதத்தை ஆதரிக்கின்றன என்பது உண்மையா? ' என பெரியா கேட்டார். அதற்கு குருச்சட்டடீவ் 'சார்பியலையும் க்வாண்டம் இயற்பியலையும் மறுப்பதென்றால் அணு ஆயுதங்களையும் மறந்துவிட வேண்டியது தான் ' எனக் கூறினார். இதனால் கவலை அடைந்த பெரியா இவ்விஷ்யத்தை ஸ்டாலினிடம் உடனே தெரிவித்தார். இயற்பியல் குறித்த மாநாடு கைவிடப்பட்டது.'
8ஆக, நடைமுறை ஆதாயங்களுக்காக உலகஅரசியலில் அதிகார ஆற்றல் கருதி லெனினிய நிலைபாட்டினை ஸ்டாலின் கைவிட்டதாலேயே சோவியத் இயற்பியல் 'முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தப்படும் ' விதியிலிருந்து தப்பியது. ஆனால் சோவியத் உயிரியலாளர்கள் அவ்வளவு கொடுத்து வைக்கவில்லை. (இந்த சித்தாந்தத்திற்கும் இயற்பியலுக்குமான போராட்டத்தில் சில நகைச்சுவை நிகழ்வுகளும் உண்டு. உதாரணமாக சோவியத் தத்துவ அகராதியின் படி பல காலமாக E=mc2 என்னும் சமன்பாடு மார்க்சீய தத்துவ அடிப்படையில் லெபையிதேவ் மற்றும் எஸ்.ஐ.வவிலோவ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.)
சோவியத் உயிரியல் -லைசன்கோ ஓர் சித்தாந்த உதயம்:


மார்க்ஸ் தன்னை டார்வினின் சமூகதள வாரிசாகவே பாவித்து வந்தார். டார்வினிய பரிணாமத்தின் அப்போதைய பலவீனம் மரபியல் செயல்பாடுகளின் அறிவின்மையே. பிரெடரி ஏங்கல்ஸ் இதற்கான தீர்வினை லமார்க்கிய மரபியல் செயல்பாட்டினை கொண்டார். அக்காலத்தில் அதுவே முன்வைக்கப்பட்ட தீர்வாக இருந்தது. ஒரு உயிர் அதன் வாழ்வின் போது அடையும் மாற்றங்களின் கூட்டு அதன் சந்ததிகளுக்கு கடத்தப்படும் எனும் இந்த மரபியல் செயல்பாடு முரண்பாட்டியங்கியலுக்கு உகந்ததாக ஏங்கல்ஸால் கருதப்பட்டது. இதில் உயிரியல் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் ஐரோப்பிய கலாச்சார முதன்மை வாதமும் கலந்திருந்தது. உதாரணமாக அவர் , 'ஒரு ஐரோப்பிய குழந்தை இயல்பாகவே ஒரு ஆஸ்திரேலிய ஆதிவாசியை விட கணித விதிகளை எளிதாகக் கற்றுவிட முடிவதை நாம் காணலாம்.'9 என குறிப்பிடுகிறார். (இந்தியாவின் கலாச்சாரம் குறித்த மார்க்ஸின் பார்வையும் இச்சித்தாந்த அடிப்படையிலேயே அமையப் பெறுகிறது10. தமிழகத்தின் மார்க்சீய அடிப்படைவாதியான ஞானியிலும் மார்க்ஸின் காலனீய கலாச்சார பார்வையினை காணலாம்11.) எனவே ஸ்டாலினின் காலகட்டத்தில் உருவான லைசென்கோ நிகழ்வு ஒரு மார்க்சீய அடிப்படை அசைக்கப்பட்டதின் பேரில், அவ்வடிப்படையின் மேலெழுப்ப பட்ட அதிகார இயந்திரத்தின் எதிர்வினை எனவே காண வேண்டும்.இவ்வகையில் எந்த மத்திய கால கத்தோலிக்க புனித விசாரணைகள் மற்றும் தீயெரிப்புகளை விட சோவியத் விசாரணைகளும் தண்டனைகளும் மிகுந்த துல்லியத்தன்மை வாய்ந்தவையாகவே இருந்தன.


டார்வினிய பரிணாம வாதம் தன்னியல்பில் பெரும் பலவீனமாக கருதிய மரபியல் செயல்முறையினை மெண்டலிய மரபணுக் கொள்கையால் தீர்த்துக் கொண்டது. வெய்ஸ்மானால் முன்வைக்கப்பட்ட மரபியல் தொகுதிகள் மற்ற உயிரியல் தொகுதிகளிலிருந்து பிரிந்திருப்பதும், மெண்டலிய விதி சார்ந்த மரபணு இயக்கமும் பரிணாம வாதத்தினை முழுமையாக அறிவியல் தன்மைக்கு கொண்டு சென்றன. மார்க்சீயம் இங்கு ஒரு அடைக்கப்பட்ட சித்தாந்தமாக செயல்பட்டது. இந்நிகழ்வுகளின் முரண்தன்மை நோக்குதற்குரியது. முக்கியமாக இடதுசாரி சோஷலிஸ்ட் எண்ணவோட்டம் கொண்ட பல பிரிட்டிஷ் உயிரியலாளர்கள் மரபியல் துறையின் முன்னோடிகளாக உள்ளனர். உதாரணமாக கார்ல் பியர்சன், ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்கள். அதே சமயம் அவர்கள் இனதூய்மை வாதிகளாகவும் இருந்திருக்கின்றனர். (அதே சமயத்தில் மற்றொரு பரிணாம வாத தத்துவவியலாளரான ஹென்றி பர்கூசன் இனரீதியாக மரபியல் தன்மைகள் காலம்காலமாக சேர்ந்து தனி இனத்தன்மைகள் உருவாகக் கூடும் என்பதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.)



ஹால்டேன் : இறுதிவரை சோஷலிஸ்டாகவே இருந்த ஹால்டேன் பின்னாட்களில் கம்யூனிசத்தை விட்டு விலகியதுடன் இந்து தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவரானார்

1930களில் சோஷலிசத்திலிருந்து மார்க்சிசத்திற்கு பரிணமித்துக் கொண்டிருந்தவர் ஹால்டேன். மரபணு சார்ந்த மனிதருக்கு மனிதர் ஏற்படும் வேறுபாடுகள் சோஷலிசத்திற்கு பெரும் ஆதரவான காரணமாக அமையும் என அவர் கருதினார்.12 ஆனால் மார்க்சீயத்திற்கு இது ஏற்படுத்தும் தத்துவார்த்த சிக்கல்களையும் அவர் உணர்ந்திருந்தார். 1932 இல் புதிதாக உயிர்த்தெழும் மரபணுவியல் துறையை அவர் 'சோவியத் குடியரசு அறிவியல் மீது கொண்டுள்ள பற்றுக்கான பரீட்சை '13 என குறிப்பிட்டார். ஆனால் மீண்டும் கால வேடிக்கையாக 1930 களில் தீவிர மார்க்சீய பற்றாளராக ஹால்டேன் மாறிய அதே சமயத்தில்தான் லைசென்கோ தன் போலிழஅறிவியலை சோவியத் அதிகாரத்தின் தத்துவ ஆசீர்வாதத்துடன் மிகக் கொடூரமாக அரங்கேற்றிக்கொண்டிருந்தார். ஹால்டேனின் லைசென்கோவிசத்திற்கான எதிர்வினைகள் முடிந்த வரை மார்க்சீய பாதுகாப்புக்காக உண்மையை மறுதலிப்பதாகவே இருந்தது. ஸ்டாலினின் தனிமனித துதி வட்டத்திற்கு எவ்விதத்திலும் ஆளாகாத அறிவியலாளரான ஹால்டேன் லைசென்கோ நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் சித்தாந்த பற்றன்றி வேறல்ல. இவ்விதத்தில் ஹால்டேன் தன் தனிப்பட்ட நண்பரும் ரஷியாவின் சிறந்த மரபணுவியலாளருமான நிகலொய் வவிலாவ் லைசென்கோவினால் பெற்ற மரணத்தை கூட பொருட்படுத்த வில்லை. வவிலோவ் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு சிறையில் உயிரிழந்தார்.



மார்க்ஸிய பிரச்சார பார்வையில் ஸ்டாலின்


மக்களால் காரி உமிழப்படும் ஸ்டாலின்: 'தூ...சர்வாதிகாரியே'


மார்க்சிய பேராசான் ஸ்டாலினின் ஆசியுடன் மரபணுவியலை எதிர்த்து அறிவியலை கேலிக்கூத்தாக்கிய லைசன்கோ

சோவியத் அறிவியல் அகாடமிக்கு ஆற்றிய உரையில் இந்த பெரிய மனிதர் லைசன்கோ கூறினார்:"மெண்டலிய மோர்கனிசம் (அதாவது க்ரோமோசோம் -மரபணுவியல்) அடிப்படையிலேயே பொய்யானது. அவை உயிரின், இயற்கையின் யதார்தத்தை அடிப்படையாக கொண்டிராமல் தத்துவ தேடலையும் கருத்துமுதல் வாதத்தையும் தனது அடிப்படையாக கொண்டது." 14பேராசிரியர். சாலமோன் லெவிட் (மருத்துவ மரபணுவியல் மையத்தின் இயக்குநர்), நிகோலாய் துலாய்கோவ் (இயக்குநர், உணவுதானிய ஆராய்ச்சி அமைப்பு) ஆகியோர் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உயிரியலாளர்களில் முக்கியமானவர்கள். முதலில் குறிப்பிடப்பட்ட ரஷியாவின் சிறந்த மரபணுவியல் மேதை நிகலொய் வவிலாவ் ஆகஸ்ட் 6 1940 இல் கைது செய்யப்பட்டு 'விசாரிக்கப்பட்டு' சிறையில் 26 ஜனவரி 1943 இல் உயிரிழந்தார். பொருள்முதல்வாத சோஷலிச சொர்க்கத்தில் இருபதாம் நூற்றாண்டில் அவர் அனுபவித்த கொடுமையுடன் ஒப்பிடுகையில் மத்திய கால கலிலியோவின் விசாரணை எத்தனையோ மனிதத்தன்மையுடன் நிகழ்ந்தது எனலாம்.
அவரது விசாரணை குறித்த பதிவு இதனைத் தெளிவாக்குகிறது.

 • விசாரணையாளர் க்வாத்: நீர் யார் ?
 • நிகலொய வவிலாவ் : நான் அறிவியலாளர் வவிலோவ்
 • விசாரணையாளர் க்வாத்: நீர் அறிவியலாளர் அல்ல. நீர் வெறும் ஒரு மலக் குப்பை 15



ஸ்டாலினின் மரணத்துக்கு பின்னரும் உலக அரங்கில் தலைகுனிவை சந்தித்த பிறகும் மார்க்சிய புனித விசாரணையில் உயிரிழந்த வவிலோவ் அவர் உயிரிழந்த பின் அறிவியலாளராக சோவியத்தால் ஏற்கப்பட்டார்.

லைசென்கோவிற்கு ஆதரவாக ஹால்டேன் வானொலி விவாதங்களில் தனது சக சிறந்த மரபணுவியலாளர்களான ரொனால்ட் பிஷர் போன்றவர்களை எதிர்த்து பங்கெடுத்தார். பின்னர் அறிவுடைய எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத அளவு லைசென்கோ ரஷிய உயிரியலை அழித்தொழித்திருப்பது வெளி வந்த பின் தன் கட்சித் தொடர்பினை ஹால்டேன் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். அத்துடன் ஹால்டேனின் வீடு மார்க்ஸிஸ்ட்களால் சோவியத்துக்காக உளவறியும் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் கசிய ஆரம்பித்தன. ஹால்டேனின் எதிர்வினையின் முக்கியத்துவம் எவ்வாறு ஒரு சிறந்த அறிவியலாளர் கூட தன் சித்தாந்த பற்றினால் மானுட சோகங்களுக்கு துணை போக முடியும் என்பதே. பற்று கொள்ளும் சித்தாந்தத்தின் தன்னியல்பும் இத்துணை போதலுக்கு பெரும் பங்காற்றுகிறது.


சீனாவிலும்:
இந்த கூத்துக்களை எதிர்த்தவர்கள் 'மேல்சாதி துதி பாடும் உளறுவாயர்கள்' என முத்திரை குத்தப்பட்டார்கள். லைசென்கோ மாவோவையும் கவர்ந்தார். விளைவு சீனத்தின் சொந்த லைசன்கோக்கள் உருவானார்கள். லூவோ திஅன்யு மரபணுவியலில் அறிவியலாளர்களை வேட்டையாடும் புனித விசாரணைப்பணியை மேற்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார வெளியீடுகள் நம்பமுடியாத விந்தை கதைகளை வெளியிடலாயின. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் புதிய பயிரினங்களை உருவாக்குவதாக 'அவர்கள் அதிசயங்களை செய்கிறார்கள்' எனும் சீன பிரச்சார வெளியீடு கூறியது. மரபணுவியல் பாசிச பொய் என அறிவிக்கப்பட்டது. சிக்கிள் செல் அனீமியா போன்ற நோய்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டன. ஏனெனில் எல்லாமே புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா! மேலும் மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயல்படுத்தப்பட்டது. ஒரே வகை பயிர்கள் இடம்விடாமல் நெருக்கமாக பயிரிடப்பட்டன. இந்த வகை பயிரிடுதல் வெற்றி என காட்ட போலி புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. வெட்கமேயில்லாமல் அறிவியல் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் பொய்கள் வெளியிடப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டு: தக்காளி (சோலானேசியே குடும்பம்) பருத்தியுடன் (மால்வேசியே) இனக்கலப்பு செய்து சிவப்பு பருத்தி எனும் புதிய செடியினம் உருவாக்கப்பட்டதாம். இந்த 'அதிசயம்' பிரிட்டிஷ் இடதுசாரி பத்திரிகையான கார்டியனில் 24-மார்ச்-1960 இல் வெளியானது.16


ஒரு சீன பிரச்சார பொய் படம்: கோதுமையை அருகருகே நட்டால் அது செழித்து வளர்ந்து அதற்கு மேல் குழந்தைகள் கூட நிற்க முடியுமாம். இந்த அடிப்படை அறிவியல் சாத்தியமற்ற பொய்யினை கோதுமை பயிரால் மூடிய பெஞ்சில் குழந்தைகளை நிற்க வைத்து எடுத்துள்ளார்கள்.


இந்த லைசென்கோவிசத்தின் விளைவுகள் சீனாவில் பயங்கரமானவை.இந்த காலகட்டத்தில் சீனாவில் இறந்தவர்கள் சீன அரசு பின்னால் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்ட கணக்கின் படி 140 இலட்சம்.17
மனநல சிகிச்சையும் சித்திரவதைக் கூடமும்:


விளாதிமீர் கோண்டண்டினோவிச் புக்கோஸ்கி

சோவியத்களின் மனநலசிகிச்சை கூடங்கள் அறிவியல் மூலம் மானுட நலத்தினை வளர்க்கும் அமைப்புகளாக விளங்கிடவில்லை. மாறாக அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்யவும் அழிக்கவும் மூளைச்சலவை செய்யவும் பயன்படும் கூடங்களாயின. விளாதிமீர் கோண்டண்டினோவிச் புக்கோஸ்கி (Vladimir Konstantinovich Bukovsky) என்பவர் 1960களில் மாஸ்கோவில் கவிதை அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக மனநல சிகிச்சை மையத்திற்கு (psikhushka) அனுப்பப்பட்டார். ஜனவரி 1970 இல் விடுதலையான இவர் மனநல மருத்துவ மையங்கள் எவ்வாறு அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்யும் மையங்களாக மார்க்சிச அரசால் செயல்பட்டு வருகின்றன என்பதனை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இதற்காகவே 1972 இல் கைதானார். டாக்டர்.செமையோன் க்ளூஸ்மன் (Semyon Gluzman) எனும் கெய்வ் மருத்துவருடன் (அவரும் கைதிதான்) இணைந்து 'A Manual on Psychiatry for Dissidents' எனும் நூலை அவர் எழுதினார். 18அரசியல் எதிரிகளுக்கு சித்திரவதை செய்ய மனித நலத்திற்காக உருவாக்கிய மருத்துவ அறிவியல் மையங்களை ஒரு அரசு பயன்படுத்துவது பெரும் எதிர்ப்பினை உலக அரங்கில் ஏற்படுத்தியது. உலக மனசிகிட்சையாளர்கள் அமைப்பு (World Psychiatry Association) 1977 இல் மனசிகிட்சை அளிப்பதற்கான தார்மீக நெறிமுறைகளை அறிவித்தது. இந்த 'குற்றத்துக்கு' விலையாக டாக்டர். செமையோன் க்ளூஸ்மன் தன் வாழ்க்கையில் 10 வருடங்களை கடும் உழைப்பு முகாம் சிறையில் கொடுக்க நேர்ந்தது. 1960களில் ஆந்த்ரே ஸ்நேழ்நெவ்ஸ்கி (Anre Snezhnevsky) என்கிற மார்க்சிய மனவியலாளர் 'தளர்நிலை மனச்சிதைவு' (Sluggish Schizophernia) எனும் ஒரு வித மனச்சிதைவு நிலையை கண்டுபிடித்துள்ளதாகக் கூறினார். இந்த நிலையின் வரையறை பொதுவாக மார்க்சிய அரசுக்கு எதிரான எவரையும் மனநோயாளியாக வரையறை செய்திட வாய்ப்பளித்தது.19 மார்க்சிய ராஜ்ஜியத்தில் அரசியல் கைதிகளை மனநல மருத்துவர்கள் சித்திரவதைக்கு ஆட்படுத்தியது குறித்து ஆராய சர்வதேச மனநல மருத்துவ குழுவில் இணைந்திருந்த டாக்டர். ராபர்ட் வான் வோரன் கூறுகிறார்:
"மனநல மருத்துவர்கள் சர்வதேச அளவில் தம் தொழில் நிபுணர்களிடம் தொடர்பு கொள்வது இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு வெளியுலகில் -'பூர்ஷ்வா' உலகில்- தம்மையொத்த சக-மனநல சிகிச்சையாளர்கள் எவ்விதத்தில் பிரச்சனைகளை அணுகுகிறார்கள் எவ்வித நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. அப்படி ஏதாவது தகவல்கள் உள்ளே கசிய நேர்ந்தால் உடனே அவையெல்லாம் 'வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பூர்ஷ்வா சமுதாயத்தின் விளைவுகள்' என கூறப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடும். தனித்துவ முயற்சிகள், சுதந்திர சிந்தனை ஆகியவை எல்லாம் ஆபத்து என்றும் அத்தகைய தன்மை உடையவர்கள் கிரிமினல்கள் எனவும் கருதப்பட்ட ஒரு சூழலில் மனநல சிகிச்சையாளர்கள் வாழ்ந்தார்கள். பிறரிலிருந்து வேறுபட்டவர்கள் அனைவரும் சமுதாயத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரிகள் என கற்பிக்கப்பட்ட சூழலில் அவர்கள் வாழ்ந்தார்கள். இந்த சூழலும் ''தளர்நிலை மனச்சிதைவு' (Sluggish Schizophernia) குறித்த கருத்தியலும், சர்வதேச மனநிலை சிகிச்சை குறித்த பரிச்சயம் இல்லாத, முன்னணி தொழில்முறை சோவியத் மனநிலை சிகிச்சையாளர்களையும் 'கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரி' என கருதப்படுபவர்களை, கட்சியை எதிர்த்து தனது சுகத்தையும் தனது குடும்பத்தையும் கூட துறக்க தயாராக இருக்கும் அரசியல் எதிரிகளை 'மனநிலை சரியில்லாதவர்கள்' என அறிவிக்க வைத்தது."
20



13 வருடங்கள் மனநோயாளி என மார்க்சிய அரசால் பீஜிங் மனநல மையத்தில் அடைக்கப்பட்ட வாங்வான்சிங்

மற்றொரு மார்க்சிய சொர்க்கமான சீனாவில் இன்றைக்கும் இதே நிலை தொடர்கிறது. உதாரணமாக சீன காவல்துறை கலைக்களஞ்சியம் காவல்துறையால் கவனிக்கப்பட வேண்டிய மனநிலை சரியில்லாதவர்கள் யார் என பின்வருமாறு விளக்குகிறது:
"பொதுவாக இவர்கள் அரசியல் கிறுக்கர்க்ள் ("political maniacs") என அழைக்கப்படுவார்கள். இவர்கள் பிற்போக்குத்தனமான கோஷங்களை போடுவார்கள்; பிற்போக்குத்தனமான கோஷங்கள் கொண்ட அட்டைகளை எழுதி தாங்கித் திரிவார்கள்; பிற்போக்குத்தனமான கடிதங்களை எழுதுவார்கள்; பொது இடங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பேசுவார்கள்; முக்கியமான உள்நாட்டு வெளிநாட்டு விஷயங்களில் தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவிப்பார்கள்."
21 உதாரணமாக 2000 ஆண்டில் 'Journal of Clinical Psychological Medicine'காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட மனநிலை சரியில்லாத ஒரு 45 வயது பெண்ணின் மனநிலை சரியின்மைக்கான ஒரே அடையாளமாக பின்வரும் அவரது நிலையை தெரிவிக்கிறது:
"அரசாங்கம் பலூங்காங் குழுவை ஒரு தீய குழு (evil cult) என பிரகடனப்படுத்திய பின்னரும் அவர் அக்குழுவில் தனது ஈடுபாட்டை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பலூங்காங் சடங்குகளை செய்யவும் மக்களை தூண்டி வந்தார்"
இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் 1999 வரை பாலூங்காங் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்ல பார்வையில் இருக்கும் வரை சீன மனநலவியல் ஆராய்ச்சி தாள்கள் அதனை பாராட்டி செய்திகளை வெளியிட்டு வந்தன.22
தொடரும் சித்தாந்த நிலைபாடுகள்:

மார்க்சியவாதிகளால் சித்தாந்த ரீதியில் எதிர்க்கப்பட்ட ஸ்டீபன் ஹாவ்கிங் : ஒரு மார்க்சிய அரசின் கீழ் ஹாவ்கிங் இருந்திருந்தால்...

இன்றைக்கும் மார்க்சீயம் இவ்வியல்பினைத் தொடர்கிறது. சோவியத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் யாவுமே தன் தேச அறிவு வளர்ச்சியில் பற்று கொண்ட அறிவியலாளர்கள் மற்றும் மார்க்சீய சித்தாந்தத்தை நடைமுறை வசதிகளுக்காக கை கழுவ தயாராயிருந்த அரசியல் தலைமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் விளைந்தவையே. இந்த தேவைகள் ஏதுமற்ற மார்க்சீயவாதிகளுக்கோ அறிவியலை முரண்பாட்டியங்கியல் அடிப்படையில் 'நல்ல ' அறிவியலாகவும் 'கெட்ட ' அறிவியலாகவும், முதலாளித்துவ சமூக விளைவாகவும் சதியாகவும் காணும் போக்கு நீடித்தே வருகிறது. கனாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் அர்தயால் பென்ஸ் மதச்சார்பற்ற மானுட வாதிகளை அமெரிக்க ஏகாதிபத்திய சதியின் ஒரு அம்சமாக காண்கிறார்23.சீரின்மை(chaos) அறிவியல் சித்தாந்த சமன்பாடுகள் பிரபலமடைந்து வருவதற்கு காரணம் நவீன முதலாளித்துவ உலகின் தன்னியல்பில் மூடநம்பிக்கைகளையும் ஆன்மீகமறையியலையும் நோக்கி திரும்பும் தன்மையே காரணம் என 1989 இல் மார்க்சீய அறிவியல் தத்துவவாதிகளான மன்ஜித் சிங்கும் ஜான் கிப்சனும் வாதிக்கின்றனர். அவர்களது 'வழி பிறழ்ந்த ' அறிவியலாளர்களின் வரிசையில் புகழ் பெற்ற அறிவியலாளர்களான பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்24. மார்க்சீய குறை கூறல் பொதுவாக கணிதத்தின் அழகியல் குறித்ததாகவும் உள்ளது. சீரின்மை தத்துவத்தின் வேர்களை பான்கரேயில் காணமுடியும். வி.ஐ.லெனின் அவரை தன் நூலில் குறை கூறியிருந்தார். இன்று சற்றேறக்குறைய இதே காரணங்களுக்காக ஸ்டீபன் ஹாக்கிங், பென்ரோஸ், பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோர் மார்க்சீயவாதிகளால் குறை கூறப்படுகின்றனர்25.ஸ்டீபன் ஹாவ்கிங் தமது புகழ்பெற்ற காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் நூலில் எவ்வாறு தாமும் பென்ரோஸும் எழுதிய பிரபஞ்சவியல் ஆய்வுத்தாள் ரஷிய மார்க்ஸிஸ்ட்களால் மார்க்சிய நம்பிக்கைக்கு எதிரானது எனும் அடிப்படையில் எதிர்க்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்.26 தன்னியல்பில் மூடலுடைய (closed) அதே சமயம் அதிகார விழைவும் பரவு தன்மையும் வாய்ந்த ஆபிரகாமிய மதத்தின் அனைத்து தன்மைகளையும் மார்க்சீய சித்தாந்தம் அறிவியலுடான உறவில் வெளிப்படுத்துகிறது.


பயன்படுத்த பட்ட நூல்கள் மற்றும் குறிப்புகள்:


 • 1. மார்க்சீய இன்றைய விளக்கங்களுக்கு சிறந்த உதாரணமாக காண்க ப்ராங்க் ககிலோட்டி, The fate of Soviet genetics, 4 அக்டோ பர் 1996 World Socialist Web Site. ஸ்டாலினின் கீழ் மரபணுவியலாளர் அனுபவித்த கொடுமைகளை பட்டியலிட்ட பின் கட்டுரையாசிரியர் பின்வருமாறு முடிக்கிறார், 'இவையெல்லாம் சோஷலிசத்தினுடையவோ மார்க்சிசத்தினுடையவோ விளைவுகளல்ல, மாறாக அவற்றிற்கு எதிரான சித்தாந்தமான ஸ்டாலினிசத்தினுடையவை. ' மேலும் 'ஸ்டாலினிச அதிகார வர்க்கத்தின் உடனடித் தேவைகளுக்காக அறிவியல் ஒடுக்கப்பட்டது. ' இக்கருத்தே இக்கட்டுரையில் பரிசீலிக்கப்பட்டு மறுக்கப்படுகிறது.
 • 2. வி.ஐ.லெனின், Collected Works, நான்காவது ஆங்கில பதிப்பு , Progress Publishers,மாஸ்கோ, 1968,பாகம்-19, பக்கம். 23
 • 3.மார்க்ஸ் & ஏங்கல்ஸ், Selected Works Vol-I பக்கங்கள் 398, 400 அருண்ஷோரியால் மேற்கோள் காட்டப்பட்ட நூல். Eminent Historians
 • 4.செப்டம்பர் 15,1919 தேதியிட்ட லெனினின் கடிதம்.இரகசியம் என குறியிடப்பட்ட இக்கடிதம் கார்க்கி தன் பூர்ஷ்வா அறிவுஜீவிகளுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்ளாவிடில் மரணத்தை சந்திக்க வேண்டுமென்றும், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது. முழுக்கடிதத்தையும் இங்கேகாண்க:
 • 5. ஆண்ட்ரூ ஜே கார்ட்டன்,The Forgotten Avant Garde, Central Europe Review Vol 1, No 1, 28 ஜூன் 1999.
 • 6.ஹெல்கே க்ராக், Quantum Generations: A History of Physics in the Twentieth Century,Princeton University Press 1999. இயற்பியலின் வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் இந்நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
 • 7.வி.ஐ.லெனின், Materialism and Empirio-Criticism Lenins Collected Works, Progress Publishers, Moscow, Volume 17, 1972 (புதிய இயற்பியலினைக் குறித்த லெனின் அனைத்து மேற்கோள்களும் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே ஆகும். இந்நூல் எழுதப்பட்டது 1908.)
 • 8. டேவிட் ஹோலோவே, How the bomb saved Soviet Physics. The Bulletin of the Atomic Scientists, நவம்பர்/டிசம்பர் 1994.
 • 9. ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Dialetics of Nature, Third Revised Edition, Progress Publishers, மாஸ்கோ 1964.பக்-271
 • 10.கார்ல் மார்க்ஸ், 'The British Rule in India ' (1853), கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Articles on Britain , Progress Publishers, மாஸ்கோ 1971 பக்-166-72
 • 11. ஞானி, 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?' - அனுமான் குறித்த ஞானியின் வார்த்தைகளை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
 • 12. ஜே.பி.எஸ் ஹால்டேன், The Inequality of Man, Penguin 1932.
 • 13. அதே.
 • 14.லைசன்கோ பேச்சு மேற்கோள் காட்டப்பட்ட பிரசுரம், ஆர்.ஏ.ஃபிஷர், "What Sort of Man is Lysenko?", Listener, 40: 874-875, (1948); reprinted in Occasional Pamphlet of the Society for Freedom in Science,9:6-9.
 • 15.Soyfer, Valery Lysenko and the Tragedy of Soviet Science (Rutgers, 1994)
 • 16.ஜாஸ்பர் பெக்கர், Hungry Ghosts China's secret famine, பக். 68-72 (John Murray, 1996)
 • 17.Population and Development Review 13, no. 4 (1987), 639-70 பார்க்க:http://en.wikipedia.org/wiki/Great_Leap_Forward
 • 18.பார்க்க: http://en.wikipedia.org/wiki/Vladimir_Bukovsky
 • 19.எஸ்.ப்ளாக், பி.ரெடவே: "Psychiatrists and dissenters in the Soviet Union", in 'The Breaking of Bodies and Minds'. தொகுப்பாசிரியர் நைட்டிங்கேல் E ஸ்டோ வர்,WH ப்ரீமேன், 1985, பக். 160
 • 20.டாக்டர்.ராபர்ட் வான் வோரன், 'Soviet and Chinese Political Psychiatry', J Am Acad Psychiatry Law 30:131஖5, 2002.
 • 21. ஜோனதன் மிர்ஸ்கி, 'China's Psychiatric Terror', ராபின் மன்ரோவின் 'Dangerous Minds: Political Psychiatry in China Today and Its Origins in the Mao Era' எனும் நூலின் விமர்சனக் கட்டுரையிலிருந்து, தி நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் (Vol 50, Num 3 : February 27, 2003) http://www.nybooks.com/articles/16082
 • 22. அதே.
 • 23.அர்தயால் பென்ஸ், வீரத்தியாகிகளின் முழக்கம், மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் இன்ஸ்டிடியூட், டொராண்டோ , 1985. பக்.157-61
 • 24. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங், Chaos Theory The science of despair, Living Marxism (Monthly review of Revolutionary Communist Party, UK, டிசம்பர் 1989 இதழ் எண் 14
 • 25. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங் The Marxist review of books, Living Marxism, நவம்பர் 1991, இதழ் எண் 37.
 • 26. ஸ்டீபன் ஹாவ்கிங், 'A Brief History of Time' Bantam 1989 பக்.54 சுவாரசியமாக இதே நூலில் ஹாவ்கிங் போப் இரண்டாம் ஜான்பால் ஹாவ்கிங்கிடம் பெரும் வெடிப்புக்கு 'முந்தைய' நிகழ்வுகள் ஆண்டவனின் இரகசியம் எனவே அதை அறிவியலாளர்கள் ஆராயக்கூடாது என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். (பக்.122)

இக்கட்டுரை சட்டீஸ்கரில் மார்க்சிய பயங்கரவாதிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட காவல்துறையினரின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

Friday, March 16, 2007

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2

வார்தாவுக்கு 2004 இல் ஒரு கிறிஸ்தவ சகோதரருடன் சென்றிருந்தேன். ஒரு நாள் காலை அருகிலுள்ள பொனார் எனுமிடத்தில் உள்ள ஆச்சார்ய வினோபா பாவேயின் ஆசிரமத்துக்கு
செல்வது என முடிவு செய்து சென்றோம். அவர்களது தியான அறையில் பல தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு சிலையைக் காட்டி நண்பரிடம் 'இது யார்
தெரிகிறதா?' என்றேன். கூர்ந்து பார்த்த நண்பர் தெரியவில்லை என்றார். 'ஏசு' என்றேன். மீண்டும் பார்த்த அவர் கடுப்பாகிவிட்டார். நிச்சயமாக ஏசு கிடையாது. என்ன சொல்கிறீர்கள்!
இஷ்டத்துக்கு ஏசு கையில் எதை வேணுமானாலும் கொடுத்து பொம்மை செய்து இதுதான் ஏசு என்பது நன்றாக இல்லை. எங்கள் மத நம்பிக்கையை கிண்டல் செய்கிற மாதிரி
இருக்கிறது. என பொரிந்து தள்ளிவிட்டார். வினோபா ஆசிரம சர்வ தரும பிரார்த்தனையில் 'யஹோவ சக்தி நீ ஏசு பிதா பிரபு நீ' என வருகிற வரிகளையும் அவர் விமர்சித்தார். இந்த ஏசு உண்மையான ஏசு கிடையாது என்றார். அதற்கு பிறகு வேறு ஏதேதோ பேசினோம். பிறகு ஊர் திரும்பிய பின்னர் அவரிடம் மற்றொரு ஏசு படத்தை காட்டினேன். இது யார் என்றேன். ரொம்ப அன்போடு 'ஏசப்பா' என்றார். விசயம் என்னவென்றால் அவர் வினோபா ஆசிரமத்தில் பார்த்த ஏசுவுக்கும் இந்த ஏசுவுக்கும் வேறுபாடு அதிகமில்லை. இதோ கீழே பாருங்கள். இது பிறகு நான் அந்த கிறிஸ்தவ சகோதரரிடம் காட்டிய ஏசு படத்தை ஒட்டிய படம்.



காலண்டர் கலையில் நல்ல மேய்ப்பராக ஏசு கிறிஸ்து

கீழே இருப்பது வினோபா ஆசிரமத்தில் உள்ள ஏசு உருவம்.

இரண்டிலும் ஏசு 'நல்ல இடையன்' என காட்டப்படுகிறார். ஆனால் ஒன்றில் ஆடு மேய்க்கும் கோல் மற்றதில் புல்லாங்குழல். இந்த வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். இடையனின்
இசைக்கருவி இழந்து ஏசு இடையன் கை கோலேந்திய இறை அரசனாக மாறியது கிறிஸ்தவ இறையியலின் முக்கிய மாற்றம் என்று கூறலாம். இதன் வரலாற்று பின்னணியை
அறிந்து கொள்ளும் போது இதனை நாம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


ஏசு குறித்த சித்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த போது அவை பிற புனைவு புராண நாயகர்களின் அம்சங்களை உள்வாங்கியே வளர்ந்தது.





ஓர்பியஸ்-மண்டல அமைப்பின்/ சக்கரத்தின் நடுவில் ஓர்பியஸ்: விலங்குகள் மெய்மறக்கும் இசை கலைஞனும் ஆன்மீக குருவும். மித்ரா இறை தெய்வ தலையணியை கவனியுங்கள்

கிறிஸ்தவத்தின் தொடக்க கால கட்டத்தில் ரோமானியத்தில் ஒரு முக்கிய மறை-சமய இயக்கமாக ஓர்பியஸ் மதம் விளங்கியது. ஒரு விதத்தில் ஓர்பியஸ் சமயம் அதற்கு முந்தைய டயனோசியஸ் சமயத்துடன் ஒட்டுறவு கொண்டதாக விளங்கியது. அதன் நீட்சியாக அதே நேரத்தில் டயனோனிஸியஸ் சமயத்தினை மறுதலிக்காதவாறு விளங்கியது. தத்துவம், புராணம், ஒழுக்க முறைகள், மறை-ஞானம் ஆகிய அனைத்தும் கொண்ட ஆர்பியஸ் சமயத்தின் மையத்தில் விளங்கியவர் ஆர்பியஸே ஆவார். ஆர்பியஸ் ஞானி கூடவே இசை மேதை. அவரது இசை மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் ஈர்த்து மெய்மறந்திட வைக்கக் கூடியதாகும். எனவே அவர் நல்ல மேய்ப்பன் என அறியப்பட்டார்.

ஆர்பியஸும் மரண உலகு சென்று திரும்பியவர். கொலை செய்யப்பட்டவர். மேலோட்டமான வேற்றுமைகளுக்கு அப்பால் ஏசு காதைக்கும் ஓர்பியஸூக்கும் பல இணைகள் உண்டு. ஏசு யாருக்காக இறந்தார்? கிறிஸ்தவர்கள் உலகின் பாவங்களுக்காக ஏசு இறந்ததாக கூறிடுவர். ஆனால் இந்த பாவத்தை இரத்தத்தால் துடைத்தல் என்பது ஏசுவை ஏற்பது மூலமே செயல்படுகிறது. ஏசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பாவங்களே அவரது இரத்தத்தால் துடைக்கப்படுகின்றன. நம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கமாவார்கள். இச்சபை ஏசுவின் மணவாட்டி ஆகும்.


சுருக்கமாக சொன்னால் ஏசு தன் மணவாட்டியினை மீட்கவே சிலுவையில் மரித்தார் எனலாம். இதையே ஆர்பியஸும் செய்தார். அவர் தம் மனைவியான யூரிடைஸுக்காக மரித்தார். மீள்கையில் அவரை கண்டவர்கள் பெண்கள் ஆவர். ஏசுகாதையிலும் மரணத்திலிருந்து மீண்ட ஏசுவை கண்டவர் மகதலேனே ஆவார். ஏசு மகதலேனிடம் தன்னை தொடாதிருக்கக் கூறுகிறார். யோவான் சுவிசேசத்தில் வரும் 'Noli me tangere' (என்னைத் தொடாதே) எனும் இலத்தீன் வாசகங்கள் பிரசித்தியானவை. பல மத்தியகால ஓவியங்களின் கருவும் கூட. இந்த ஓவியங்களில் ஏசு ஒருவித வெறுப்பு அல்லது அச்ச உணர்ச்சியுடன் மேரி மெகதலேனிடம் இருந்து விலகுவதைக் காணமுடியும். ஓர்பியஸ் காதையில் பெண்கள் ஓர்பியஸை கொல்கின்றனர். இங்கோ ஏசுவை தொடாமலே ஏசுவின் மண்ணுலக நீத்தலை அறிவிப்பவளாக மேரி மெகத்லேன் ஆகிறார். யோவான் சுவிசேசத்தின் இந்த இடம் ஓர்பியஸ் தொன்மத்தின் அழுத்தத்தையேக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.




பெண்களால் கொல்லப்படும் ஓர்பியஸ்


'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : 1525




'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : 1537

எனவே ஏற்கனவே ரோமானிய உலகில் நல்ல மேய்ப்பனாக அறியப்பட்ட ஓர்பியஸின் சித்திரத்தில் ஏசுவாக கிறிஸ்தவர்கள் வழிபட்டனர் என்பதனை அக்கால கிறிஸ்தவ மண்ணடியிலுள்ள அடக்க அறை சித்திரங்களில் (catacombs) காண முடிகிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எந்த ஓவியம் ரோம பிரக்ஞையில் ஓர்பியஸைக் காட்டியதோ அதே போன்ற ஓவியம் நாலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகத்துக்குள் வரையப்பட்ட போது அது கிறிஸ்துவை நல்ல மேய்ப்பனாக காட்டுவதாக ஆகியது.




நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவ அடக்க அறை சித்திரத்தில் ஓர்பியஸாக ஏசு - மித்ரா தலையணியுடன்:ஏசுவின் கையில் இடைக்கோல் இல்லை இசைக்கருவியே உள்ளது என்பதனை கவனியுங்கள்

ஓர்பியஸின் இடத்தில் ஏசு வந்த போது ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. டயனோசியஸ்-ஓர்பியஸ்-மித்ரா ஆகிய தெய்வச் சடங்குகளின் சுழல்தன்மை கிறிஸ்தவத்தில் இல்லாது போயிற்று, முந்தைய தெய்வ சம்பிரதாயங்களை நிராகரிக்காமல் உள்வாங்கிய தன்மை போய், அவற்றின் தன்மைகளை மட்டும் உட்கொண்டு அவற்றினை அழித்தொழித்து எழுந்தது கிறிஸ்தவ நல்லமேய்ப்பன் பிம்பம். ஆறாம் நூற்றாண்டில் 'நல்ல மேய்ப்பர்' ஏசு சிலுவையை ஆட்டிடையனின் கோலாக தாங்கி அமர்கிறார். அத்துடன் இசைக்கருவிகள் மறைந்துவிட்டன.




ஆறாம் நூற்றாண்டில் நல்ல மேய்ப்பனாக ஏசு: இசைகருவிகள், மித்ரா தலையலங்காரம் ஆகியவை மறைந்து விட்டன. மாறாக கோல் வந்துவிட்டது.




பழம் கிரேக்க ஆடு சுமக்கும் மேய்ப்பனின் சித்திரம்: கிறிஸ்தவத்திற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் முந்தைய இந்த சிற்பம் பிற்கால ஏசு சித்திரங்களின் வடிவமைப்பில் முக்கிய இடம் வகித்தது.(கிமு 570)




ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - தொடக்ககால சித்திரங்களில் மேய்க்கும் கோல் இல்லாமல்




ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - பிற்கால இரசிய கிறிஸ்தவ சித்திரத்தில் மேய்க்கும் கோலுடன்


மெசபடோமிய தொன்மங்களிலும் எகிப்திய சித்திகரிப்புகளிலும் 'அரசன் மக்களின் மேய்ப்பன்' எனும் அரசதிகார பிம்பத்துக்கு ஏசு மாறிவிட்டார். பிற்கால காலண்டர் பட பிம்பங்கள் வரை ஏசுவின் இடை-செங்கோல் மாறிடவே இல்லை.





இதற்கு நேர் எதிரானதோர் பரிணாம வளர்ச்சியை நாம் பாரதத்தின் கிருஷ்ண உருவில் காணமுடியும். துவாரகையின் அதிபதியாகவும் மதுராதிபதியாகவும் அறியப்பட்டாலும் கூட ஸ்ரீ
கிருஷ்ணரின் இடையன் பிம்பம் அவர் புல்லாங்குழல் ஊதி கால்நடைகளையும் கோபிகளையும் மெய்மறக்க செய்பவராகவே உள்ளார். கிருஷ்ணரின் வேணு பாரத இலக்கியத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாகிவிட்டது. 'சாதாரண' நாடோ டி பாடல்களாகட்டும், கண்ணதாசனின் 'புல்லாங்குழல் ஊதும் மூங்கில்கள்' ஆகட்டும், கபீரின் பாடல்களை விளக்கும் ஓஷோ உரை ஆகட்டும் இறைவன் இதழ் பொருந்திய புல்லாங்குழல் பாரதத்தின் கூட்டு தெய்வீக பிரக்ஞையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. பின் தொடரும் நிழலின் குரலில் கெ.கெ.மாதவன் நாயர் அருணாச்சலத்துக்கு எழுதுகிறார்:



"என் பேரப்பையனை தொட்டு அணைக்கும் போதெல்லாம் எனக்கு மனம் முழுக்க கிருஷ்ணனின் புல்லாங்குழல் நாதம்தான் கேட்கும். பிரசங்கம் செய்து புத்தகம் படித்து, கிருஷ்ணனின் முரளியின் தேனை இழந்துவிடாதே. அதைத் தவிர அர்த்தம் எதுவும் மானுட வாழ்வுக்கு இல்லை." ஒருவேளை கிறிஸ்தவத்தின் பெரும் சோகமே அதுவாக இருக்கக் கூடும் - தெய்வீக இடையனின் வேணு கானத்தை இழந்தது. ஆனால் கிறிஸ்து தன் ஓர்பியஸ் தன்மையை அடைய தன் ஆட்டிடைய செங்கோலை இழக்க வேண்டியிருக்கும். வரலாற்றுத்தன்மை, மதமாற்றம், விரிவாதிக்க மனப்பான்மை என்பவற்றால் ஆகிய செங்கோல் அது. காலனிய விஸ்தீகரணம், இனப்படுகொலைகள், புனித விசாரணைகள் ஆகியவற்றினை நடத்திய அதிகாரத்துவத்தின் செங்கோல் அது. ஏசுவினை எங்கும் பரவிய தெய்வீக உணர்வாக உள்ளுணர்ந்த ஞானிகளுக்கு அந்த செங்கோலினை துறந்திடுவது எளிதான இயற்கையான விஷயம்தான். தெயில் டி சார்டின்களில் ஆந்தோனி தி மெல்லாக்களில், அசிசியின் பிரான்ஸிஸ்களில் கேட்கும் ஓர்பியஸின் இசை கோவா இன்க்விசிஷன் புகழ் சேவியர்களிலும் பெனிடிக்ட்களிலும் இல்லாமல் போவதைப் போல இயற்கையான விசயம்.



ஓடக்குழல் ஊதும் ஓங்கார பிரம்மம்

Wednesday, March 14, 2007

ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்


ஜோ என்கிற வலைப்பதிவாளர் ஒரு நூலை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏசு என்பவர் கற்பனை என நான் சொன்னது அவரை மிகவும்
வருத்தப்படுத்தியிருக்கும் போலிருக்கிறது. எனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' நூலை எனக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார்.
வாழ்க அவர் என் மீது கொண்டிருக்கும் பாசம். ஆனால் விசயம் என்னவென்று சொன்னால் ஏசு குறித்த புனைவுகளும் சடங்குகளும் நிறுவனமயமாக்கப்பட்ட கால கட்டம் முதல்
இன்றைய தேதி வரை அன்னாரைக் குறித்து கிறிஸ்தவ விவிலியத்துக்கு அப்பால் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. சேவியர் தாம் எழுதிய இந்த நூலைக் குறித்து
அதன் ஆசிரியர் என்ற முறையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்." என அவரே கூறியுள்ளார். ஆனால் அவர் அப்பதிவில் கொடுத்துள்ள
பின்னட்டை அப்படி தீர்க்கமான ஆராய்ச்சி பார்வையை ஒன்றும் வைக்கவில்லை. ஆராதனைப் பார்வையைத்தான் முன்வைக்கிறது. அதை நான் தவறெனக் கூறவில்லை. அவர் யூதகுல மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டதாகவும், அக்கால கட்டத்தில் மௌடீகமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கி இருந்ததாகவும், இயேசுவின் குரல் அமைதி மற்றும் பகுத்தறிவினை கூறியதாகவும் எனவே அவர் குலத்துரோகியாக கருதப்பட்டதாகவும் எனவே தான் அவர் மரணத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்நூல் கூறுகிறது.


1960களில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 'மாஸ்கோவில் ஏசு' என ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டது. (என்னிடம் வெகுகாலம் இருந்த இந்த பிரசுரம் எங்கோ தொலைந்து போயிற்று. பழைய சகாக்கள் இதனை வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். சிவப்பட்டையில் ஒளிரும் சிலுவை போட்ட பிரசுரம்.). ' அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து' எழுதிய சேவியரின் நூலினை நான் படிக்கவில்லை. ஆனால் பின்னட்டை கூறுகிற கதைக்கருவே உள்ளே பக்கங்களில் விரித்தோதப் பட்டிருக்குமெனில் 'மாஸ்கோவில் ஏசு கிறிஸ்து'வின் விளக்கவுரையாகவே அது அமைந்திருக்குமென கருதுகிறேன். ஏசு உயிர்த்தெழுந்ததாக கூறும் கிறிஸ்தவ நம்பிக்கையை கூறிவிட்டு சேவியர் மறு நிமிடமே மூன்று நாட்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்தும் உயிர்த்தெழுந்ததாக கொள்ள வேணுமெனச் செப்புவது அவரது நூலின் முன்னட்டையில் 'மிகைக்கலப்பற்ற ... வாழ்க்கை வரலாறு' எனக்கூறுவதனை எள்ளி நகையாடி மறுதலிக்கிறது என்பதுடன் இந்த நூலின் வரலாற்று நேர்மைக்கும் கட்டியம் கூறுகிறது. கிழக்கு பதிப்பகம் ஏதோ மிகவும் தரமான புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் என்பதிலும் எனக்கு ஐயமுண்டு. தமிழ்நாட்டு பதிப்பகங்களில் சில பிரகடனப்படுத்தப்படாத பத்வாக்கள் உண்டு. கிறிஸ்தவத்தை ஆழமாக சர்ச்சைக்கோ விவாதத்திற்கோ உள்ளாக்கும் நூல் எதுவும் வெளி வந்திட முடியாது. ஓரளவு விமர்சனத்தன்மையுடன் கிறிஸ்தவத்தின் மையத்தை தொடாது ஏதாவது ஒரு நூல் வந்துள்ளதென்றால் அது சாதீயமும் கிறிஸ்தவமும் குறித்த ஒரு நூல் மட்டுமே. ஒரு புத்தக வெளியீட்டாளர் என்னிடம் கூறியது : "கிறிஸ்டியானிட்டியை தாக்குற மாதிரி கட்டுரைகள் வேண்டாம் சார். அது லைப்ரரி காப்பி போகமுடியாத மாதிரி அவுங்க செஞ்சிருவாங்க." கூறியவர் தனது அலமாரியில் இருந்து ஒரு கத்தையை எடுத்துக் காட்டினார். ஒரு கிறிஸ்தவ நண்பர் 'ஞான விவிலியங்களை' (Gnostic Gopels) மொழி பெயர்த்திருந்தார். "இதையே நான் வெளியிடாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். கடனைவாங்கி நடத்துற தொழில் சார் இது. அவுங்களுக்கு எங்க அடிக்கணும்னு தெரியும்." என்றார். அவுங்க என்பது யார் என்பதனை ஊகங்களுக்கு விட்டுவிடுகிறேன். அண்மையில் உலகமெங்கும்
ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துவின் அடக்க அறை குறித்த விவரணப்படத்தை இந்தியாவில் தடை செய்த கத்தோலிக்க சபையின் வலு அதன் பாசிச பரிமாணத்துக்கு மற்றொமொரு
எடுத்துக்காட்டு.


முன்பு நான் எழுதி பின் பல அலுவல்களாலும் மறதியாலும் எழுதாமல் நிறுத்திய இரு கட்டுரைத் தொடர்களை மீள் தொடர என்னை தூண்டிய முன்னிலையாக சகோதரர் ஜோவின்
செயல் அமைந்தது. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். ஏசுவின் வரலாற்று/தொன்மப் பின்னணியினை ஆராய்வதுடன் அதன் பின்னணியிலிருக்கும் அரசியலையும் அதிகார அமைப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தின் பிற மத உரையாடல்கள் உண்மையில் உரையாடல்கள் அல்ல மாறாக ஒரு வழிபாதையே ஆகும். (இது மேல்தள இறையியலாளர்களாலேயே பலமுறை ஒப்புகொள்ளப்பட சமாச்சாரம்) எனவே இக்கட்டுரை தொடர் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதப்படும். கிறிஸ்தவத்தின் தொன்ம பரிமாணங்கள், யூத-கிறிஸ்தவ உறவுகள், கிறிஸ்தவ-பாரத தருமங்களின் சந்திப்புக்கள், மானுட வரலாற்றில் கிறிஸ்தவத்தின் பங்கு (இனப்படுகொலைகள் என்றில்லை மார்ட்டின் லூதர் கிங்கும் பிஷப் டுட்டுவும் கூட கிறிஸ்தவ இறையியலின் வெளிப்பாடுகள்தாம்.) என பல விசயங்களை இக்கட்டுரைத் தொடர் மூலம் காட்ட உத்தேசிக்கின்றேன்.

யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவா ஏசு?




ஏசு புனைவு யூத வெறுப்பியலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது: ஏசு யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக இருக்க மூடியுமா?

இந்த நூல் முன் வைக்கும் யூத சமுதாய சித்திரம் விசித்திரமான ஒன்று: மௌடீகமான பூர்ஷ்வாத்தனமானதாக யூத சமுதாயத்தை அது காட்டுகிறது. பகுத்தறிவையும் அமைதியையும் வெறுத்த சமுதாயமாக எனவே ஏசுவை வெறுத்து அவர் கொலைக்கு காரணமான சமுதாயமாக அது யூத சமுதாயத்தினை சித்திகரிக்கிறது. வாஸ்தவத்தில் நிறுவன கிறிஸ்தவத்தின் ஏசு புனைவிலும் யூத சமுதாயம் இவ்வாறே சித்திகரிக்கப்படுகிறது. ஆனால் யூத சமுதாயம் யூத வரலாறு என்ன கூறுகிறது அக்கால கட்டத்தைக் குறித்து என்பது இந்த கிறிஸ்தவ மேன்மையாளர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. யூத நெறியின் திருமறையை பழைய ஏற்பாடு எனக் கூறுவதிலேயே கிறிஸ்தவத்தின் அகங்கார பயணம் தொடங்கி விடுகிறது எனலாம். 'உன்னைக் குறித்து நான் கூறுவதுதான் நீ' என்கிற பிறரை தீர்ப்பிடும் தன்மை. 'ஆண்டவன் உன்னோடு செய்த ஏற்பாடு பழையதாகிவிட்டது.' எனும் கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடே 'பழைய ஏற்பாடு' எனும் பதத்தில் உறைந்திருக்கும் மமதையான தீர்ப்பீடு ஆகும். என்றாலும் ஏசு பிறரை தீர்ப்பிடக்கூடாது என கூறியதாக கூறுவது இம்மதத்தின் பெயரிடும் விநோதத்திலேயே மறுக்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும். ஏசு ஒரு கற்பனை புனைவு என்பதனை பலர் கூறியுள்ளனர் என்பதுடன் அன்று முதல் இன்று வரை குறைந்தது 1700 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சபை ஏசு குறித்து போலித் தரவுகளை உருவாக்குவதை ஒரு கலையாகவே செய்து வந்துள்ளது. யூத இறையியலாளர்கள் தம் சமுதாயத்தின் இத்தகைய சித்திகரிப்பை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள் என்ற போதிலும் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்ற கதையாக கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை அவர்களது வார்த்தைகள் எடுபடவே இல்லை. அதே நேரத்தில் அவர்களது இறைநூல் கிறிஸ்தவ மொழிபெயர்ப்புகளில் அருமையான நுணுக்கமான மாறுதல்களுடன் ஏசுவுக்கான முன்னறிவிப்பாக மாற்றப்பட்டது. ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதற்கான ஆதாரங்களாக இன்றைக்கும் மிசிநரிகளால் முன்வைக்கப்படும் தரவுகள் இவ்வாறு
மாற்று மதத்தவரின் நூலை தகாத முறையில் தவறாக மாற்றி அமைத்து செய்யப்படும் பிரச்சாரங்களே ஆகும். இது குறித்து யூத அறிஞர்கள் மிக தெளிவான ஆதாரங்களை ஒரு
இணைய தளத்தில் முன் வைத்துள்ளனர். அதனை இங்கே காணலாம்.



ஏசு ஏன் யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையா இல்லை


இந்த இணைய தளத்தில் வேண்டிய அளவு தரவுகள் உள்ளன. உதாரணமாக 'அபிஷேகிக்கப்பட்டவன்' என தானியேல் 9:25 கூறுகிறதை கிறிஸ்தவ விவிலியத்தில் 'பிரபுவாகிய மெசையா' என மாற்றி அதனை தொடர்ந்து வருகிற வசனங்களை ஏசு குறித்த முன்னறிவிப்பாக மாற்றியுள்ளமையை என்னவென்பது! ஆனால் அதே ஹீப்ரு வார்த்தை 2-சாமுவேல் 1:21 இல் (அபிசேகிக்கப்பண்ணப் படாதவன் போல) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆக, இது கிறிஸ்தவ மொழி பெயர்ப்பாளர்கள் ஹீப்ரு தெரியாததால் செய்ததது அல்ல. மாறாக திட்டமிட்டு வார்த்தை திரிப்பு விளையாட்டில் இறங்கியதே ஆகும். யூத அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த மோசடி முன்னறிவிப்புகள் இந்தியாவில் இன்னமும் ஆன்மீக அறுவடைக்கு
பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை சிந்தித்தால், இந்த யூத இணைய தளம் கூறுகிற விசயங்களை நாம் ஏன் தமிழ்படுத்தி துண்டு பிரசுரங்களாக மற்றும் சிறு நூல்களாக
விநியோகிக்க வேண்டுமென தெரியவரும். இந்த மொழிபெயர்ப்பு மோசடி குறித்து முழுமையானதோர் கட்டுரையை கீழே படிக்கலாம்: மெசையா என்பதன் வேர் பொருளே
அபிசேகிக்கப்பட்டவர் என சிலர் வாதிடலாம். ஆனால் வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதனை குறிக்கும் பதத்திற்கும் வெறுமனே அபிசேகிக்கப்பட்டவன் (அரசன் கூட அவ்வாறுதான்) எனும் பதத்திற்கும் நிச்சயமாக வேறுபாடு உண்டு என்பதனை யூத அறிஞர்கள் 2-சாமுவேல்1:21 ஐயும் தானியேல் 9:25 ஐயும் ஒப்பிட்டு காட்டி விளக்குகின்றனர். யூத சம்பிரதாயத்தின் படி தானியேல் இறை-அறிவிப்பாளர் (prophets) வரிசையிலேயே சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (பார்க்க: விக்கிபீடியா மெசியா:
http://en.wikipedia.org/wiki/Messiah

விக்கிபீடியா யூத மெசியா: http://en.wikipedia.org/wiki/Jewish_Messiah)

அபிசேகிக்கப்பட்டவரும் வாக்களிக்கப்பட்ட மெசையாவும் கிறிஸ்தவ விவிலியத்தின் மொழிபெயர்ப்பு சரியா?: யூத
அறிஞர்களின் விளக்கம்



டான் ப்ரவுன் சர்ச்சையின் ஆழமான வேர்கள்:




அண்மையில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைகளைச் சந்தித்துள்ள திரைப்படம் 'தி டாவின்சி கோட்'. ஏசு கிறிஸ்து குறித்து அறியப்படாத சில கதையாடல்களை
இத்திரைப்படமும் இத்திரைப்படத்தின் அடிப்படையான டான் ப்ரவுன் என்பவரின் நாவலும் முன்வைக்கின்றன. இக்கதையாடல்கள் நிறுவன கிறிஸ்தவத்தின் தொடக்கம் முதலே
இருப்பவை. நிறுவன கிறிஸ்தவ அமைப்புகளால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அடக்கி அழிவுக்கு உள்ளானவை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அவை மேற்கத்திய அறிவுலகில் மட்டுமே ஓரளவு பேசப்பட்டவை. 1970களில் மேற்கில் ஏற்பட்ட நிறுவன எதிர்ப்பு அலைகளின் போது பொது பிரக்ஞைக்குள்ளும் புகுந்தவை. உளவியலாளர் கார்ல் உங் மற்றும் தொன்மவியலாளர் ஜோசப் கேம்பெல் ஆகியோரின் எழுத்துக்கள் இந்த மாறுபட்ட கிறிஸ்தவ கதையாடல்களை பிரபலப்படுத்தின. நிறுவன கிறிஸ்தவ கண்ணோட்டத்திற்கு மாறுபட்ட கதையாடல்களை கொண்ட ஞான விவிலியங்கள் (Gnostic Gospels) குறித்த சிறந்த ஆராய்ச்சியாளராக எலைன் பேகல்ஸ் எனும் பெண்மணி அறியப்படுகிறார்.



எலைன் பேகல்ஸ்

'ஸ்டிக்மட்டா' எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்நூல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பிரபல திரைச்சித்திரமாகும்.

ஆனால் மிகுந்த சர்ச்சைகளுடன் உலகின் கவனத்தையே
கிறிஸ்தவத்தின் இந்த அறியப்படாத பரிமாணங்கள் பக்கம் திருப்பியுள்ள பெருமை 'தி டாவின்சி கோட்' திரைப்படத்தையும் நாவலாசிரியர் டான் ப்ரவுனையுமே சாரும். ஏதோ
பரபரப்பினை ஏற்படுத்தி பிரபலமடைவதாக 'டாவின்ஸி கோட்' குறித்து கூறுகிற நண்பர்கள் சில விசயங்களை இங்கே கோட்டைவிடுகிறார்கள்.





மார்க்ரெட் ஸ்டார்பேர்ட்

மேலோட்டமாக ஏசு மேரி மேக்தலைனை மணந்துகொண்டது குறித்ததாக இந்த திரைப்படமும் நாவலும் அறியப்பட்டாலும், அதன் அடி நீரோட்டம் மேலும் வலுவான ஒன்றாகும்.
இறைமையின் பெண்மை தன்மை கிறிஸ்தவத்தில் முழுமை அடையவில்லை என்பதனால் எழும் ஒரு பூர்த்தியடையாத ஆன்மிகத் தேவையினையே இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்நாவல் எழுத அடிப்படை ஆதாரங்களாக அமைந்த நூல்களில் ஒன்றின் ஆசிரியை மார்க்ரெட் ஸ்டார்பேர்ட் என்பவர். இவருடன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இக்கட்டுரையாளன் நடத்திய உரையாடல் திண்ணை இணைய இதழில் (திண்ணை.காம். மார்ச் 4 2005) வெளியாகியிருந்தது. அவ்வுரையாடலில் தற்போதைய இச்சர்ச்சைகளை வரவேற்று ஸ்டார்பேர்ட் பின்வருமாறு கூறியிருந்தார்: "ஆயிரமாண்டுகள் பாலைவன வாசத்திற்கு பின்னர் மேரி மகதலேனை மீண்டும் வரவேற்கும் ஓர் சபையை நான் எதிர்நோக்குகிறேன். கார்டினல் ராட்ஸிங்கர் (இன்றைய போப்) அவளை என்றைக்கும் வரவேற்கப்போவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் மக்கள் கட்டாயமாக வரவேற்பார்கள். அதற்கு சில காலமாகலாம். ஆனால் மேரி மகதலேன் ஏசு கிறிஸ்து ஆகியோரது மண-இணைவு மையமாக - சில அண்மை நாகரிகங்களின் தொன்மங்களுடன் இணைத்தன்மையுடன் (தாமுஸ் ஓஸிரிஸ் அடடீனிஸ் மற்றும் டயோனிஸ்)-
விளங்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன...."
இது மற்றோர் கேள்வியையும் எழுப்புகிறது. ஏசுவின் வரலாற்றுத்தன்மை குறித்தது அது. ஸ்டார்பேர்ட் கூறும் 'தொன்மங்களின்
இணைத்தன்மை' என்பது கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டங்களைச் சார்ந்த பல புராணக்கதைகளுடன், கிறிஸ்துவ விவிலியத்தை ஒப்பு நோக்குகையில் மீண்டும் மீண்டும்
உறுதிப்படுகிறது.


இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு காணலாம்.





 • இனானா பெண் தெய்வ வழிபாட்டின் பலகூறுகளை ஏசு புனைவுக்குள் கண்டறியப்பட முடியும்

 • 'நரிகளுக்குக் குழிகளும், காயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை' என்று ஏசு கூறியதாக லூக்கா (9:58) கூறுகிறது. ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பண்பாட்டினைச் சார்ந்த தெய்வமான இனானாவின் வேதனைப்பாடல் எனும் துதி "பறவைகளுக்கு கூடுகள் உண்டு ஆனால் எனக்கோ...விலங்குகளுக்கு தலைசாய்க்க ஓர் இடமுண்டு, ஆனால் எனக்கோ - எனக்கு தலை சாய்க்க ஓர் இடமில்லை" எனக் கூறுகிறது. (சாமுவேல் கிரேமரின் 'From the Poetry of Sumer', பக். 93 கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடு 1979)



 • வழிகாட்டிய விண்மீன் அல்ல சோதிட கிரக நிலை குறித்த கதையே மறு உருவாக்கம் செய்யப்பட்டது

 • 'நியூ சயிண்டிஸ்ட்' எனும் பிரபல அறிவியல் பத்திரிகை டிசம்பர் 2001 இல் ஒரு செய்தியினை வெளியிட்டது. ஏசுவின் பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவது பெத்லகேம்
  விண்மீன். இது வழிகாட்ட கீழ்திசை ஞானிகள் குழந்தை ஏசுவை தரிசிக்க வந்ததாக விவிலிய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது வானவியலுடன் தொடர்புடைய உண்மை நிகழ்வு
  அல்ல என்றும், பாகன் (pagan) நம்பிக்கை மற்றும் சோதிடவியல் ஆகியவை சார்ந்ததோர் நிகழ்வே என்றும் ஜோசியத்தையும் ஏசு பிறப்பு கதையும் தொடர்பு படுத்தி அந்நாளைய ரோமில் பிரபலமடைந்த புனைவே இவ்வாறு இணைந்துள்ளது. இந்த உண்மை ஆரம்பக்கால கிறிஸ்தவ தலைவர்களால் மறைக்கப்பட்டு பெத்லகேம் விண்மீன் குறித்த புனைவு
  உருவாக்கப்பட்டதென்றும் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அப்பத்திரிகை வெளியிட்டது. ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல
  கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.

(தொடரும்)

Tuesday, March 06, 2007

சில கேள்வி-பதில்கள்

"கீழே சிந்தினால் மக்களுக்கு ஆபத்து வரும் என்று நஞ்சை தொண்டையில் வைத்திருப்பதாக சொல்லப்பட்ட நீலகண்டா.., இங்கே சிலர் வாய் வழியாகவும், விரல் வழியாகவும் நஞ்சை கொட்டிக் கொண்டிருக்கிறார்களே.. அவர்களையும் கொஞ்சம் பாரும்." அழைப்புக்கு நன்றி திரு.பாலபாரதி. சில பதிவுகளை தொடக்கத்தைப் பார்த்தவுடன் அணைத்துவிட்டுப் போய்விடுவது வழக்கமென்பதால், இந்தப்பதிவில் என் பெயர் இழுக்கப்பட்டு சில கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கவில்லை, நேற்று என் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டும்வரை.

இனி உங்கள் கேள்விகளைப் பார்ப்போம்.

"1. சிறுவயதில் கண்ணப்பநாயனார் என்பவரின் கதையை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்படி பன்றிக்கறி படைக்கப்பட்ட சிவலிங்கம் இன்று அனேக இடங்களில் சைவ சாமியாக கொண்டாடப்படுவது எப்படி? இது எந்த காலகட்டத்தில் நடந்த மாற்றம்? இப்போது ஏன் அப்படி அசைவ உணவை நம் சாமிக்கு படைக்க முடியவில்லை?"

ஆகமவிதிப்படி அமையப்பட்ட பெரும்பாலான ஆலயங்களில் இப்படி இருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில். இதன் தொடக்கம் எப்போது நிகழ்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகமங்களை இறைவனே பண்டொருநாளில் அருளிச்செய்தான் என்பது சைவர்களின் நம்பிக்கை. இதிலே விதிவிலக்காகவும் பல கோயில்கள் இருக்கின்றன. வடலூர் வள்ளல் பெருமானாலும் அருணகிரிநாதராலும் ஆன்மிக எழுச்சி கொண்ட முருக பக்தரால் உயிர்பலி சடங்குகளை கைவிட்ட தமிழ் கோவில்கள் ஏராளம். அந்தணரல்லாதவரான அந்த திருமுருக கிருபானந்த வாரியாரே அவர்தம் வாழ்க்கை வரலாற்றில் எடுத்துரைத்துள்ளார்.பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜயினி மஹாகாலேஸ்வருக்கு சாராயமும் படைக்கப் படுகிறது. பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. கொல்கத்தா காளிகாட்டிலெ தினமும் மாமிசம் படைக்கப்படுகிறது. அஸ்ஸாமில் காமாக்யாவிலும். உங்களுக்கு அசைவ உணவு படைக்க வேண்டுமென்றால் தாராளமாகப் படைக்கலாம். இந்தோநேசியாவில் பாலி இந்துக்களின் கோயில்களிலே பன்றிக்கறிதான் பிரதானமாகப் படைக்கப்படுவதாக நண்பர் ஒருவர் சொன்னார்.

"2. சென்னையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட பூர்வகுடி மக்களில் பலருக்கு கபாலி என்று பெயர் வைப்பது இன்றும் வழக்கமாக இருக்கிறது. கபாலி என்பது சிவபெருமானின் ஒரு அவதாரம். மனித மண்டை பிச்சைப்பாத்திரமாக்கி வலம் வந்த அவதாரத்தின் பெயர். .. உயர்குடி இந்துக்கள் வழிபடும் பெருந்தெய்வமாகிவிட்ட அவர் பெயர். இன்றும் சேரிகளில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது. எந்த உயர்சாதிக்காரருக்கும் கபாலி என்று பார்த்த நினைவு இல்லை. ஏன் அவர்கள் கபாலி என்று வைத்துக்கொள்ளுவதில்லை..?"

தவறு. எனக்குத் தெரிந்தே பல அந்தணர்கள் கபாலி என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் கபாலி என்றொரு சங்கத்தோழர், வக்கீல், அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர் இருக்கிறார். பிரபல வேதவல்லுநர் டி.வி.கபாலி சாஸ்திரி பற்றி ஓர் அறிமுகம்: https://www.vedamsbooks.com/no13202.htm கபாலி என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வைக்கும் பெயர் என ஒரு பார்வை எழுந்ததே நாடகசபா நாடகங்கள் மூலமாகவும் சில பத்திரிகைகள் மூலமாகவும் கடந்த சில பத்து வருடங்களாகத்தான். இந்து தருமம் மற்றும் இந்து சமுதாயம் குறித்த உங்கள் பார்வையும் இப்படி மேம்போக்கான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதையும் இது காட்டுகிறது. இப்படி மேம்போக்காக குற்றம் சொல்ல எதற்கு பகுத்தறிவு போர்வை பாலபாரதி.

"3. சிவனின் வாரிசுகளாக அறியப்படும் கணபதி, முருகன் ஆகிய இருவரும், முறையே இங்கே அண்ணானாகவும், தம்பியாகவும் பார்க்கப்படுகின்றனர். ஆனால் இந்'து'ய மதம்.. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல். எப்படி வேறு மாதிரியாக இருக்க முடியும்? வடநாட்டில்.. கண்பதி தம்பி, கார்த்திகேயன் அண்ணன். தம்பி கணபதிக்கு சித்தி,புத்தி என்று இரண்டு மனைவியர் உண்டு. ஆனால்.. இங்கோ அவர் 'கட்டை'பிரம்மச்சாரி. அது எப்படி? கார்த்திக் பகவான் கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது என்று ஒரு வழமையும் நடந்து வருகிறது. ஏனிந்த குழப்பம்?"

வடநாட்டிலே இஸ்லாமியப் படையெடுப்புகளின் காரணமாக பிரம்மாண்டமான கோயில்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. முதலில் பலியானவர்களும் கோயிலைச் சேர்ந்தவர்கள்தான். எனவே பல வழிமுறைகள் மாறியிருக்கும். முருகன் வழிபாடும் ஒருகாலத்தில் வட இந்தியாவில் பல இடங்களில் இருந்திருக்கிறது. பார்க்க:
http://www.murugan.org/research/seth.htm
http://www.murugan.org/research/seethalakshmi.htm

இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. முருகனும் கணபதியும் சிவனும் ஆபிரகாமிய மத கடவுளர் போன்றோ இறைவாக்கின்ர் போன்றோ இல்லை. அவர்கள் அகத்தன்மை கொண்டதோர் ஆன்மிக மரபுக்கு உரியவர்கள். இறைசக்தியை எவ்விதத்தன்மையிலும் வடிவிலும் சமைத்து வழிபடும் உரிமையை நமக்கு நம் முன்னோர்களின் தருமம் அளித்துள்ளது. முருகப்பெருமானை பிரம்மசாரிக் கோலத்தில் வணங்க நினைத்த இனக்குழு வழிபாடு இதுதான் சரி என முருகப்பெருமானை இரு மனைவியர் சூழ நிற்க வழிபடும் மக்களை புனிதப்போர் தொடுத்து அழித்துவிடவில்லை என்பதுதான் முக்கியம்.

"4. பிள்ளைக்கறி திண்றதாக தமிழில் பாடப்பட்ட சிவனின் இந்த கதை. வடநாட்டினருக்கு தெரியாமல் போனது எப்படி?(ராமனும், கிருஷ்ணர் குறித்தும் அவர்களது லீலைகள் குறித்தும் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கும் போது..இது எப்படி அங்கு தெரியாமல் போனது?)"

சேக்கிழாருக்கு முன்னரே உபமன்யு முனிவர் (இவரைப்பற்றி சேக்கிழாரே குறிப்பிடுகிறார்) பல நாயன்மார்களின் கதைளை வடமொழியில் 'உபமன்யு பக்தவிலாசம்' என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் ஆதிசங்கரரின் சிவானந்தலஹரியிலும் கண்ணப்பர் மற்றும் சாக்கியநாயனார் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெரும்பான்மை நாயன்மார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கே பிரபலமாய் இருக்கிறார்கள். அவ்வளவுதான். ராமரும், கிருஷ்ணரும், சிவனும் பாரதம் முழுமைக்கும் சொந்தமானவர்கள். அவர்கள் பக்தர்கள் குறித்த சம்பவங்கள், அச்சம்பவங்களின் புராண கதையாடல்கள் அந்தந்த பிராந்தியங்களுக்கு சொந்தமானவை. அண்மைக்கால சமய போக்குகளை அவதானித்தால் தென்னக அய்யப்பன் குறித்த பக்தி வடக்கில் பரவிய அளவுக்கு வடக்கத்தி வைணவதேவி குறித்த பக்தி தெற்கில் பரவிடவில்லை.

"5. நீயும் இந்து, நானும் இந்து எனில் இந்தமதத் தலைவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் சங்கரமடத்தின் வாரிசாக ஏன் தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.?"

ஏன் காஞ்சி சங்கரமடம்? எத்தனை மற்ற மடங்கள் காஞ்சி மடத்தினை ஏற்றுள்ளன. ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்களா என்ன? வேண்டுமென்றால் நீங்களே கூட ஒரு சங்கரமடத்தினை உருவாக்கலாமே. சங்கரமடம்தான் இந்துமக்களின் ஏகபோக குரல் என சங்கராச்சாரியாரே சொல்ல மாட்டாரே. சங்கரமடத்தை போலவே இந்துக்களுக்கு சிவகிரி நாராயணகுரு சாமியின் மடம் இருக்கிறது. ஐயா வைகுண்டரின் சாமிதோப்பு தலைமை பதி இருக்கிறது,. திருப்பனந்தாள் மடம் இருக்கிறது. தமிழக ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் தலைமை தாங்கிய துறவி யார்? திருப்பராய்துரை மேவிய சுவாமி சித்பவானந்தர். காயத்ரி மந்திரம் ஓத பெண்களுக்கும் அனைத்து சாதியினருக்கும் உரிமை உண்டு என ஐம்பது வருடங்களுக்கு முன்னரே முழங்கிய புரட்சி துறவி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கும்பமேளாவில் விஸ்வ இந்து பரிஷத் முதல் மரியாதையை அளித்தது எந்த சங்கராச்சாரியாருக்கும் கிடையாது பூஜ்ய ஸ்ரீ தலாய்லாமாவுக்கு. எனவே எங்களுக்கு பரந்து பட்ட பார்வை இருக்கிறது. சம்பிரதாயங்கள் முட்டுக்கட்டை ஆகும் போது ஒதுக்கி வைத்துவிட்டு முன்னேறும் திடம் இருக்கிறது. ஆனால் முற்போக்கு பேசித்திரியும் உங்களுக்கு ஏன் சங்கரமடத்திற்கு அப்பால் சிந்திக்க வலுவில்லை? இரண்டு: எவரும் தம்மை சங்கராச்சாரியார் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் தவறு தடையும் கிடையாது. மூன்று:தம்மை பிரம்மானுபவம் அல்லது அத்வைத நிலை அடைந்தவராக கருதப்படுபவர் எந்த சாதியாக இருந்தாலும் அதை உணரும் எவரும் அவர் காலடியில் விழுந்து வணங்குவர். தம் குருவாக ஏற்பர். இதில் சாதி, பால், மொழி என எந்த பேதமும் கிடையாது. எனவே காஞ்சி மடத்தின் ஆச்சாரியர்களைக் காட்டிலும் இந்துக்களால் வணங்கப்படும் தலைவராக மாதா அமிர்தானந்த மயி விளங்குகிறார். நாளைக்கு பாலபாரதியே அத்வைத நிலையை அடைந்துவிட்டால் இந்து சமுதாயம் (நான் உட்பட) அவரை காஞ்சி சங்கராச்சாரியாரைக் காட்டிலும் மரியாதை செய்யும் என்பதுதான் உண்மை.

"6. எங்கள் சாமீ எப்போது எங்களைப்போலத்தான் இருக்கும். எங்கள் வாழ்வியலைப்போலவே அதுவும் பன்றி+ஆடு+கோழி போன்றவைகளையும் சாராயம், சுருட்டு போன்றவைகளையும் வேண்டுவதாகத்தானிருக்கும். எங்கள் சாமியோடு நாங்கள் நேரடியாக பேசிக்கொள்ள முடியும். ஆனால் இந்து சாமிகளோடு பேச.. ஏஜண்டுகளும், இடைத்தரகர்களையும் தாண்டினால் தான் முடியும். அப்படியெனில் தமிழர்கள் இந்துக்களா?"

அப்போது வள்ளலார் தமிழர் இல்லையா? தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று கோவில் கோவிலாக சென்று உயிர்கொலை சடங்குகளை இல்லாமல் ஆக்கியவர் யார் தெரியுமா? அவர் அந்தணர் அல்லர். திருமுருக கிருபானந்த வாரியார் எனும் ஆன்மிக அருளாளர். எங்கள் ஊரில் பல இந்து நாடார் வகை கோவில்களில் உயிர்பலி சடங்குகள் அய்யா வைகுண்டரின் ஆன்மிக தாக்கத்தால் நின்றன. ஈழவர்தம் கோவில்களில் உயிர்பலி சடங்குகளை நிறுத்தி நிறுவப்பட்ட கோவில் இன்றும் கோட்டாரில் உள்ளது. அதனை நிறுவியவர் நாராயண குருதேவ சுவாமிகள் ஆவார். இவர்கள் எல்லோரும் தமிழர் இல்லையா உங்கள் வாதப்படி? தமிழர் என்றால் உங்கள் வரையறைப்படி பன்றி+ஆடு+கோழி போன்றவைகளையும் சாராயம், சுருட்டு போன்றவைகளையும் வேண்டுவோர் மட்டும்தானா? சரி இவ்வளவு பேசுகிறீர்களே இதோ இந்த படத்தைப் பாருங்கள்.

தேசிய நெடுஞ்சாலை 47 இல் பொத்தையடிக்கும் கொட்டாரத்துக்கும் இடையில் இருக்கிற ஒரு சிறு கோவில்.

இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் பொத்தையடிக்கும் கொட்டாரத்துக்கும் இடையில் இருக்கிற ஒரு சிறு கோவில். இங்கு உயிர்பலி சடங்குகளும் உண்டு. இங்கு பூசாரித்துவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குதாம். உள்ளே தேவநாகிரி லிபியில் எழுதப்பட்டுள்ள ஓம் அங்குள்ள பூசாரியால் எழுதப்பட்டது.

ஏன் தெரியுமா? இந்த கோவிலின் பின்னால் தெரிவது சால்வேசன் ஆர்மி கார சர்ச். ஆக்கிரமிப்பு மதத்தாரால் உடைக்கப்படாமல் இந்த சிறிய கோவில் தப்பியது மட்டுமல்ல அதற்கு இன்றைக்கு ஊராட்சியில் ஒரு பதிவெண் கூட உள்ளது. இந்த நாட்டார் தெய்வத்திற்காக, கோழி படைத்து வழிபாடு செய்யப்படும் இந்த கோவிலின் பாதுகாப்புக்காக - அது உடைத்து தகர்க்கப்பட இருந்தபோது ஓடி வந்தவர்கள் யார்? நாட்டார் வழக்காற்றினை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் பேராசிரிய ஆசாமிகளுக்கு இங்கெல்லாம் நிலபுலன் உற்றார் உறவினர் எல்லாம் உண்டு. ஆனால் காக்கும் பெருமாள்களாக இந்த பேராசிரிய பிள்ளைகளுக்கு வரமுடிந்ததா? இல்லையே. "அட கீழ்த்தரமே இந்த தெய்வங்களை வைத்து அந்த தெய்வசக்திகளுக்கு நடத்தப்படும் சடங்குகளை ஆவணப்படுத்தி தானேடா நீ சம்பாதிக்கிறாய் உன் பொண்டாட்டி பிள்ளைகள் அந்த சம்பளத்தில் தானேடா மினுக்கி கொண்டு திரிகிறார்கள். நீயும் உன் பிள்ளைகளுக்கு சாதி பார்த்து மாமியார் வழியா மருமக்கள் வழியா தேரூர் பிள்ளைமாரா தெரிசனங்கோப்பா நாஞ்சில் பிள்ளைமாரா? தோசையா அவுலா என்றெல்லாம் கணக்கு போட்டு கலியாணம் நடத்துகிறாயே அதற்கெல்லாம் இந்த நாட்டார் சான்றோரின் தெய்வங்கள் போட்ட பிச்சைதானேடா? அப்போது இந்த கோவில்களுக்கு இந்த தெய்வங்களுக்கு அவற்றின் இருப்புக்கே ஒரு ஆபத்தென்றால் அங்கே நீ இருக்கவேண்டாமா?" என்று பாலபாரதி நாக்கை பிடுங்குவது போல கேட்க வேண்டிய திசை எங்கிருக்கிறது பாளையங்கோட்டையிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் என ஊருக்கு வந்தால் கட்டாயம் சொல்லித்தருகிறேன். ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள் என நீங்கள் பிரித்து பேசுகிற தெய்வங்களுக்கு ஆபத்துகள் வந்தபோது அதற்காக போராட்டத்தில் குதித்து கைதாகி சிறை சென்றவர்கள் இந்துக்கள். அந்த நேரத்தில் சொகுசாக அமர்ந்து நாஞ்சில் நாட்டு 'கூட்டவியலை' நக்கி புளிச்ச ஏப்பம் விட்டு பிறகு நாட்டார் வழக்கு குறித்து பல்கலைக்கழக செமினார்களில் ஏசி ரூமில் பேப்பர் வாசிக்கிற கும்பலுக்கு 'நாட்டார் வழக்கு வேறு இந்துக்கள் வேறு' என பேச என்ன அருகதை இருக்கிறதென நான் கேட்கிறேன். பெரியவிளை முத்தாரம்மன் வகை சாமகார சாமி கோவிலில் சாராயம் சுருட்டு வைப்பதில்லை. எனவே அது தமிழர் சாமி இல்லை என்பீரோ? எங்க ஊர் வாகையடி கடுவாமூர்த்தி விடுவாதை கோவிலில் பன்றி கொடுப்பதில்லை. ஆடு மட்டும்தான் அதுவும் (ஆடு இல்லை சாமி) தமிழர் சாமி இல்லை என்பீரோ? உமது வகையறையே எக்குதப்பாக இருக்கிறதையா. இந்துக்களான எங்களைப் பொறுத்தவரையில் சுடலைமாடனும், சாமக்கார சாமியும், முத்தாரம்மனும், வேட்டாளி அம்மனும், தெய்வ சக்திகள்தாம். அப்படியே மண்டைக்காட்டு பகவதி அம்மனும் கன்னியாகுமரி பகவதி தேவியும் முப்பந்தல் இசக்கி அம்மனும் திண்டுகல் கோட்டைமாரியம்மனும். இதில் எத்தனை கோவில்களில் அந்தணர் வழிபாடு செய்கின்றனர்?

சங்கு சக்கர சின்னத்துடன் அரசம்பதி வைகுண்ட பதி கதவு


இது இந்து கோவில் அல்ல என சொல்லமுடியுமா? இயல்பாகவே இவை இந்து கோவில்களாகவே விளங்கும். இங்கு செல்லும் வடநாட்டாரும் வணங்கியே செல்வர். பாலபாரதிக்கு இது இந்து கோவில் இல்லை என சொல்ல தோன்றும். இத்தகைய அறிவுசீவித்தன கருத்தியல் குருட்டுத்தனத்துக்கு அப்பால் வாழும் இந்து தருமத்தை கண்ணுள்ளவர் காணக்கடவர். சாதீயமல்ல இந்து தருமம். இந்து தருமம் பலகோடி பன்மைத்தன்மைகளை ஆன்மநேய ஒருமைப்பாட்டால் இணைக்குமோர் என்றும் அழியா சனாதன ஜீவ சக்தி.


சரலூர் அய்யா வைகுண்டர் பதி


காவு தெய்வ சிலை உடைத்தெறியப்பட்ட போது எங்கே போனார்கள் நாட்டார் தெய்வங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பேராசிரியக் கும்பல்கள் அல்லது நாட்டார் தெய்வம் குறித்து பேசும் பாலபாரதி போன்ற அறிவுசீவிகள்? அன்று அந்த தெய்வங்களுக்காக சிறை போனவர்கள் இந்துமுன்னணிக்காரர்கள்

ஆனால் எங்காவது நீ இப்படித்தான் சாமி கும்பிட வேணும் என எந்த அம்மனாவது சுடலைமாடன் மீது புனிதப்போர் தொடுத்ததுண்டா? ஐயா வைகுண்டரை ஆதிக்க சாதியினரும் மதமாற்றிகளும் எதிர்த்த போது பாகவத கண்ணனின் கதையை சொல்லி இறையவதார மகிமை சாதீய வேலிகளை கடந்ததென கூறிய பூவண்டர் சாதி பார்த்தாரா? தருமம் பார்த்தாரா? உருவிய வாளுக்கு முன்னர் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான பூவண்டர் கூறிய பதில் இரணியன் முன் பிரகலாதனும் அவுரங்கசீப்பின் முன் குரு தேஜ்பகதூரும் கூறியதை ஒக்கும். சிந்தித்து பார்க்க வேணும். வைகுண்டர் மீது அவநம்பிக்கையுடனும் ஆத்திரத்துடனும் மன்னன் ஒருபுறம் வைகுண்டரை கைது செய்ய அவனைத் தூண்டும் வெள்ளைக்கார இராணுவ அதிகாரி ஒருபுறம். ஆனால் பூவண்டர் பாகவத கண்ணனின் கதையை கூறி அய்யா வைகுண்டரின் அவதார பெருமையை கூறுகிறார். இத்தனைக்கும் பூவண்டர் அரசரின் அணுக்கர். என்றால் தருமம் அல்லவா அனைவரையும் இணைக்கிறது. அதுதான் சனாதன தருமம். இந்து தருமம். மேன்மை கொள் பாரத தருமம். அது விளங்கும் உலகமெல்லாம். துரதிர்ஷ்ட வசமாக வேதோபநிடத ரிஷிகள் முதல் அய்யா வைகுண்டர் அமிர்தானந்தமயி என என்றென்றும் மானுடத்திற்க்கு ஈடேற்றம் அளித்து வரும் தருமத்தை சாதீயம் எனும் ஒரு சிறு வரையறைக்குள் கட்டிப்போட பார்க்கும் இந்த கீழ்த்தர உக்திகளை விட்டுவிட்டு கண்ணை திறந்து பார்த்தால் போதும். வெரா போன்ற வக்கிரபுத்திகாரர்களால், காலனிய அளவுகோல் கொண்டு எம் இந்துதருமத்தை அளவிடத்துணிவதென்பது சிறுநரி வாலால் சமுத்திரம் அளந்தது போன்றது. சமுத்திரத்தை அளந்துவிட்டேன் என்னைப் போல் ஒருவர் உண்டோ வென சிறு நரி துள்ளலாம். பார்க்க வேடிக்கையாக இருக்கும்.


இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. திண்ணியத்தில் தலித்தை மலம் தின்னவைத்தவனின் கட்சி எது என பாலபாரதிக்கு தெரிந்திருக்கும். அந்த பாவம் தீர பாலபாரதி ஒன்று செய்யலாம். சேவாபாரதி தலித்துகளுக்கு கழிவறை கட்டிக்கொடுக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார மாவட்டமாக்கும் செயல்பாட்டில் சேவாபாரதிக்கு நல்ல பெயரும் இருக்கிறது. பாலபாரதி சேவாபாரதியில் இணைந்து தலித்துகளுக்கு கழிவறை கட்டிக்கொடுப்பதில் எங்களுடன் தோள் சேரலாம். அல்லது வனவாசிகளுக்கு சாணிஎரிவாயுக்கலம் கட்டுவதில். "நாங்களெல்லாம் முற்போக்கு கோத்திரம் சமூக சீர்திருத்தக்காராளாக்கும். இப்படி சுத்தம்பத்தமா மடியா உட்கார்ந்துண்டு கேள்விதான் கேட்பம். இறங்கி வந்து வேலையெல்லாம் செய்றதுன்னா அதுவும் இந்துத்வவாதி மாதிரி தீண்டத்தகாத சாதிகள் கூட சேர்ந்து செய்றதுன்னா தீட்டாயிடுமாக்கும்." என்றால் ஓகே பாலபாரதி. சும்மா வெட்டியாக உக்காந்துட்டு கேள்வியும் புளித்த ஏப்பமுமாக வெளிவிட்டுக் கொண்டிரும். நாங்கள் ஒதுங்கியே போகிறோம் நிறைய வேலை இருக்கிறது.


அடுத்த ஒரு வாரம் அடியேன் ஊரில் இல்லை. இணையம் இல்லாத கிராமம் ஒன்றுக்கு செல்லவேண்டியுள்ளது. எனவே இனி அடுத்தவாரம் சந்திப்போம்.