அகப்பயணம்

Thursday, August 28, 2008

ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க

நாஸ்டரடாமஸ் என்று ஒருவர் ரொம்ப காலத்துக்கு முன்னால் ரொம்ப காலத்துக்கு பின்னால் நடக்கப்போவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. 1973 துக்ளக் இதழ்களில் போட்டிருக்கிற கார்ட்டூன்களைப் பார்க்கிற வரையில். அட 2008 இல் நடக்கப் போகிற விஷயம் எப்படி 1973 இல் கார்ட்டூன் போட்டிருக்கிறவர்களுக்கு தெரிந்தது என அவர்களது ஞான திருஷ்டியை வியக்கவா அல்லது 1973 இலிருந்து 2008 வரை கார்ட்டூன்களுக்கு உண்மையாக விசுவாசமாக நடந்துவரும் திமுகவின் மின்சாரவெட்டு திராவிட பாரம்பரிய மாற்றமின்மையை வியக்கவா அல்லது இந்த கையாலாகத கும்பலை மீண்டும் ஆட்சியலமர்த்திய மக்களின் சொரணையற்ற தன்மையை வியக்கவா....எதுவானாலும் தமிழ்நாட்டின் திராவிட நாஸ்டரடாமஸ் பட்டத்தை சோவுக்கும் துக்ளக்கும் அளித்து இந்த பட்டத்தை அவர்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடுவரும் தமிழ்நாட்டு மின்வெட்டுதுறை மற்றும் தீவட்டி முன்னேற்ற துறை அமைச்சர் என பினாமி பட்டம் பெற்றவருமான திருவாளர் அமைச்சர் பெருமகனாருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
கீழே நீங்கள் காண்பது 1-3-1973 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்.

இதே கார்ட்டூனில் அன்றைய மின்வெட்டு இலாகா மந்திரியை நீக்கி இன்றைய மின்வெட்டு சாரி மின்சார துறை இலாகா மந்திரியை போட்டாலும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.

இதோ நீங்கள் மகிழ பழைய 'துக்ளக்' இதழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இதர 'வீராசாமி ஜோக்ஸ்'. மின்வெட்டினால் அவதியுறும் என் இனிய தமிழ் மக்களே எல்லா புகழும் கொலைஞருக்கே....சாரி கலைஞருக்கே....
அடுத்தமுறையும் திமுகவுக்கே ஓட்டு போடுங்க மக்களே....மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு ஓசி டீவியிலே முதலமைச்சர் குத்தாட்டம் ரசிக்கிறதை ரசிக்கலாம்


மின்வெட்டு இலாகா பினாமி

எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு என்றுதான் பேச்சாக இருக்கிறது. மின்வெட்டு இலாகா அமைச்சர் என்கிற பினாமி பெயர் ஆர்காட்டு வீராசாமிக்கு கிடைத்துவிடும் போல இருக்கிறது. ஆனால் இதெல்லாம் திமுக பாரம்பரியம். இந்த திருத்த முடியாத கழகத்தின் கடந்த ஆட்சிகளைப் பார்த்தால் அது விளங்கும். இதற்கு முன்னர் 1973 இல் இதே போல ஏற்பட்ட மின்வெட்டு குறித்து வெட்கம் சிறிதும் இல்லாமல் திமுக அரசே வெளியிட்ட விளம்பரம் இது.

ஆனால் பாருங்கள் கருணாநிதிக்கோ நமீதாவின் நடனத்தை பார்த்து ரசித்து அதன் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மின்சார தடையாவது மண்ணாவது.