இந்து தருமத்தில் கோவில் அர்ச்சகர்களாக பெண்கள் இருக்கலாமா? கூடாது என்று சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அரிகரன். மாதவிடாய் போன்ற காரணங்களையும்
காட்டி இருக்கிறார். இதனை அவரது தனிப்பட்ட கருத்தாக கூறியிருந்தால் சரி. (கருத்து சரி அல்ல. அவரது கருத்துரிமை.) ஆனால் ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் குரலாக
அவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது இந்து சமுதாய இயக்கங்களின் பார்வையை அவர் அவதானிக்க வேண்டியவர் ஆகிறார்.
இந்து தருமம் ஒரு வளர்ந்து வரும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் தேசத்தின் தருமம். காலனிய ஆதிக்கத்தின் அனைத்து கொடுமைகளையும் அனுபவித்த ஒரு சமுதாயத்தின் தருமம். அக்கொடுமைகளின் அனைத்து பின்விளைவுகளையும் -உறைந்து போன சாதீயத்தின் தீக்கொடுமைகள் உட்பட- சந்தித்து வரும் தருமம். மாறாக கிறிஸ்தவத்தை ஒரு ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டால் காலனிய ஆதிக்கத்தின் சுரண்டலின் பலன்களையும் உபரி பலன்களையும் அனுபவிக்கும் சமுதாயம் மற்றும் அதிகார பீடங்களின் தருமமாக கிறிஸ்தவம்
விளங்குகிறது. அது பேசும் 'விடுதலை இறையியல்' (Liberation theology) கூட இந்த அசைக்கமுடியாத ராட்சத சக்தி கொண்ட அதிகார கோட்டை அரண்களின் உள் அமைந்த
பீடத்தின் துணையுடன் தான். மாறாக இந்து சமுதாயத்தின் சமூக சீர்திருத்தவாதிகளோ ஒரே நேரத்தில் பலவித போர்முனைகளில் போராடும் சூழலில் இருக்கிறார்கள்.
தேங்கிக்கெட்ட சமுதாய சூழலும் அது உருவாக்கியுள்ள சுரண்டல் சக்திகளும். மக்களை சாதீயத்தின் மூலம் சுரண்டும் கிராமப்புற கொடுவன்மையாளர்கள் ஒருபுறமும் அந்த
அவலங்களை அரசியலாக்கி ஆதிக்க சக்திகளின் வாக்குவங்கிகளாக்க அடிமட்ட மக்களை மாற்றி சுயநல அரசியல் செய்யும் முற்போக்கு வேடதாரிகள் மறுபுறமுமாக. வளரும்
நாடுகளை சுரண்டி உருவாக்கிய வசதிகளின் மேலிருந்து இந்துக்களை மேலும் கூறுபோட தயாரிக்கப்பட்டு விற்கப்படும் கருத்தியல்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதையையும்
விற்றுவிட்டு முற்போக்குகளாக தம்மை காட்டிக்கொள்ளும் அறிவுசீவிகள் மற்றொரு புறம். எவ்வாறு பிரச்சனைகளை தீர்வு காணாமல் ஒரு சமுதாயத்தை சின்னாபின்னப் படுத்தி அழிப்பது என முனையும் இந்த வெறுப்பியலாளர்களின் வெற்றுக்கூச்சல்களுக்கு அப்பால் அரிகரனின் வார்த்தைகளில் எனக்கு தெரிவது நேர்மையான பிற்போக்குத்தனம். வெறிப்பிடித்த வெறுப்பியலாளர்களின் முற்போக்கு வாதத்தில் இருக்கும் வெற்று ஆரவாரம் அரிகரனின் வார்த்தைகளில் இல்லை. அவரிடம் இருப்பது என்னைப் பொறுத்தவரையில் வெறும் அறிவீனமும் அசட்டுத்தனமும் மட்டுமே. ஆனால் இந்துசமுதாயத்தின் சமுதாய முன்னகர்வுகளை அவர் உள்வாங்கியிருந்தால் எத்தகைய அடிப்படை கருத்தியல்களிலிருந்து அது ஆற்றல் பெற்று எத்தகைய தடைகளை மீறி முன்னேறியுள்ளது என அவர் உணர்ந்திருந்தால் அவர் தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என நம்புகிறேன்.
மாதவிடாய் என்பது ஒரு உயிரியல் நிகழ்வே அன்றி அதனை ஒரு தீட்டாக பார்க்கும் பிற்போக்குத்தனம் மாற்றிக்கொள்ளப் படவேண்டும். வேத ரிஷிகளிலும் பெண்கள் உண்டு
என்பதனை உணரந்து கொள்வோம். சாஸ்வதமான சத்தியங்களை இறையாவேச நிலையில் தரிசித்தவர்கள் அவர்கள். இந்த இறையாவேச நிலை மாதவிடாய் எல்லாம் கணக்கில்
எடுத்துக்கொண்டு வருகிற விஷயம் அல்ல. அது ஒரு அனுபவ நிலை அல்லது தரிசன நிலை. ஒருவேளை சுய-ஹிப்னாட்டிசத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் பெண்களே கூட இந்த
தலைமுறையில் மாதவிடாய் காலத்தில் மட்டும் நாங்கள் பூசனை செய்யவில்லை என ஒதுங்கிடக் கூடும். ஆனால் வெகுவிரைவில் அந்நிலையும் மாறிடுமெனவே கருதுகிறேன். மாறுவதே சரியானதும் கூட.
இந்து சமுதாயம் இத்தனை தேக்க நிலை அடைந்திருந்தும் கூட பெண் பூசாரிகள் பெண் வேதவேள்வியாளர்கள் நூற்றுக்கணக்கில் சமுதாய இயக்கமாகவே உருவாகியுள்ளார்கள்
என்பதுதான் இங்கு சொல்லப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.
பூனாவில் மட்டும் மூன்று அமைப்புகள் பெண்களை வேத வேள்விச்சடங்குகளை செய்விக்கும் பயிற்சிகளை அளிக்கிறது. அவை உத்யான் பிரசாத் மங்கள காரியாலயம், சங்கர சேவா
சமிதி மற்றும் வேதாந்த மண்டல் ஆகியவை. இன்றைக்கு பூனாவில் மட்டும் 500க்கும் அதிகமான பெண் அர்ச்சகர்கள் இருக்கின்றனர். 1976 இல் இருந்து அனைத்து சாதிகளையும்
சார்ந்த பெண்கள் 7000 பேருக்கு மேல் வேதவேள்வி செய்யும் பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் இன்றைக்கு தமக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை மலர் பாதையில் நடந்து
பெற்றிட வில்லை. பூக்குழி இறங்கித்தான் பெற்றிருக்கின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு அப்பால் இந்து சமுதாயம் முன்னகர்ந்திருக்கிறது. ஷீரடி சாயிபாபாவின் சீடரான குரு
உபாசினி பாபாவால் உருவாக்கப்பட்ட உபாசினி கன்யா குமாரி ஸ்தான் அமைப்பு யக்ஞங்களை பெண்களால் நடத்துவித்து வருகிறது. 1994 இல் ஆஸ்திரேலியாவின் விஸ்வநாதர் கோவிலில் பூசைகளை செய்தவர்கள் மூன்று சகோதரிகள் ஆவர். அவர்கள் சாந்தா மனோகரி ஸ்ரீகணேசன், கௌரிமனோகரி கந்தராஜா மற்றும் ஜெய மனோகரி பொன்னம்பலம் என்பவர்கள் என அறிகிறேன். வாராணாசியிலேயே பெண்கள் வேள்வித்தீ வளர்த்து யக்ஞம் செய்விக்கின்றனர். பாணினி கன்யா மகாவித்தியாலயா இந்த சேவையினை செய்துவருகிறது.அண்மையிலிருக்கும் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தினைச் சேர்ந்த கொடுங்கல்லூர் குருபதம் மையத்தில் அந்தணரல்லாத 47 பெண்கள் வேத சடங்குகள் செய்விக்கும் தகுதியுடன் பயிற்சி பெற்றுள்ளனர். மாதா அமிர்தானந்தமயி ஏற்படுத்தியுள்ள பிரம்மஸ்தான கோவில்களில் எந்த சாதியை சேர்ந்தவராயினும் பெண்கள் அர்ச்சகராகவே சேவை ஆற்றுகின்றனர். ஞான ப்ரபோதினி அமைப்பு பெண்கள் வேள்விமுதலான இதுவரைஆண்களே நடத்திட்ட சடங்குகளை முன்னின்று நடத்திட எட்டுமாத பாடத்திட்டத்தினை நடத்துகிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூபாய் 800 மட்டுமே.
ஆக செயல் அளவிலும் இந்து சமுதாயத்தில் பெண்கள் பூசனை செய்வதும், பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே செய்து வந்த சடங்குகளை பெண்கள் செய்வதும் கோவிலில் அர்ச்சகராக அமைவதும் நடக்கக் கூடியது மட்டுமல்ல ஏற்புடையதும் ஆகும். ஆக கருத்தியல் ரீதியாகவும் செயல்முறையிலும் இதற்கு தடைகள் ஏதும் இல்லை. ஆகமவிதி முறைப்படி உருவாக்கப்பட்ட விதிகளை ஆராய்ந்து பெண் அர்ச்சகர்களை ஏற்கும் வழிமுறைகளையும் ஆராய்ந்திட வேண்டும். சமுதாய ஏற்பினையும் உருவாக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்கலாம். மாதா அமிர்தானந்த மயி போன்ற ஆன்மிக சமுதாய அருளாளர்களைக் கொண்டு பிரம்மஸ்தான கோவில்களை உருவாக்கி பெண் பண்டிதர்களை சமய வல்லுநர்களை ஏற்படுத்தலாம். இவற்றின் மூலம் பெண் அர்ச்சகிகளுக்கு சமுதாய ஏற்புடைமை உருவாகும். விரைவில் பேராலயங்களிலும் குறிப்பாக பெண் தெய்வ ஆலயங்களில் பெண்கள் அர்ச்சகர்களாகிடும் நிலையும் வந்திடும்.
பார்ப்பனீயத்திற்கு சப்பைக்கட்டு கட்டாமல் நேர்மையான எண்ணங்களை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி.
ReplyDeleteவீடுகளில் பூசை ஆகியவற்றை செய்வது பெண்கள்தானே? ஆனால், அவர்களும் மாதவிடாய் காலங்களில் வேறொரு பெண்ணைக் கொண்டோ அல்லது குடும்பத்து ஆணைக்கொண்டோ விளக்கேற்றுமாறு செய்கின்றனர்.
ReplyDeleteஅவர்களை கட்டுப்படுத்துவதற்கு யாரும் இல்லாத போதும், அவர்கள் இந்த ஒழுங்கினையே பின்பற்றுகின்றனர். ஆகவே, இது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆண்கள் உருவாக்கிய சட்டம் என்று கூறுவது சரியல்ல.
மேலும், இது உயிரியல் நிகழ்வு என்ற நினைப்பு இருந்தாலும், உடலில் நடக்கும் வேதி வினைகளால், கோபம் வருவதும் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். இதனை பெண்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால், அந்த காலங்களில் சுபகாரியங்களில் தங்களது உடலியல் ரீதியாக வரும் கோபத்தினால்,அந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நபர்களிடம் சுடுசொல் பேசிவிடக்கூடாது என்றும், வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் ஒதுங்கிவிடுவதும் நடக்கிறது. ஆக சுப காரியங்களை அந்த நாட்களில் வைப்பதை தவிர்ப்பதும் நடக்கும்.
ஆனால், அதனை அசுப காரியமாக பார்க்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை. பெண் பூப்படையும் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடும் நாளாகத்தான் இருக்கிறது.
ஆகவே, பெண்கள் பூசாரிகளாக இருப்பதை வரவேற்கும் அதே வேளையில் அந்த வேலை பெண்களுக்கு பாரமாக இல்லாமல் இருக்கவும் வேண்டும். ஒரு கோவில் பூசாரிகளாக ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இருக்கும் நிலையில் இது எல்லோருக்கும் சுதந்திரமானதாக இருக்கும். ஆனால் ஒரு கோவில் பூசாரியாக ஒரு பெண்ணை மட்டும் நியமிப்பது அந்த பெண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
அரவிந்தன், மிகவும் சரியான ஒரு பதிவு. எனது கருத்தையும் அவரது பதிவில் சொல்லியிருக்கிறேன். ஹரிஹரனின் கருத்து "நேர்மையான பிற்போக்கு" என்பது உண்மைதான். பெண் வேத வேள்வியாளர்கள் குறித்து உங்கள் தகவல்கள் மிகவும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றன.
ReplyDeleteஅன்புள்ள ஜாலிஜம்பர்,
ReplyDeleteவருகைக்கு நன்றி. பார்ப்பனீயம் என்பது என்ன? 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட காலனிய கருத்தாக்கமே அது. அது உருவானதில் அந்தணர்களுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதே அளவுக்கு அவர்களை எதிர்த்ததாக கூறிக்கொண்ட மேல்சாதியினருக்கும் பங்கு இருந்தது. மேலும் தலித்துகள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு நாம் பொறுப்பேற்காமல் இந்த முகமில்லா பார்ப்பனீயத்தை பழியேற்க வைக்கவும் நம்மனைவருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. மாறாக, இந்துத்வம் தலித்துகள் மீதான வன்கொடுமை முதல் இந்து சமுதாயத்தின் அனைத்து அவல நிலைகளுக்கும் தைரியமாக பொறுப்பேற்கிறது. அதனை மாற்ற வழி செய்கிறது. இன்றைய தேதியில் தலித்துகள் வாழ்விடங்களுக்கு சென்று அவர்களுக்கு கல்வி முதல் கழிவறை சேவை வரை செய்து வரும் ஒரே இயக்கம் இந்து தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்தான். திண்ணியத்தில் ஒரு தலித் மலம் தின்ன வைக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு காரணமான 'சாதி இந்து' எந்த கட்சியை சார்ந்தவர்? திராவிட கட்சியை. ஆனால் பாருங்கள் பழியை கண்ணுக்கு தெரியாத பார்ப்பனீயத்தின் மீது போட்டு ஜல்லியடித்தால் நாம் சுயபரிசோதனை செய்யவேண்டியதில்லை பாருங்கள். அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதே 'சாதி இந்து' எனப்படுபவர்களும் பிறரும் தலித் காலனிகளில் கழிவறை கட்டிக்கொடுக்கும் விசயம் ஊடகங்களில் வருகிறதா? இல்லை. இத்தகைய ஊடகமாயைகள் ஒரு புறம் இருக்கட்டும். இங்கே மற்றொரு கொடுமையையும் காட்டுகிறேன். இந்து தருமம் பலவித சுரண்டல்களுக்கு ஆளாகி தேங்கிப்போன சமுதாயம் என கூறியுள்ளேன். ஆனால் இந்த வளரும் நாட்டின் தருமத்தில் இந்த அளவு பெண் இறையியல் விடுதலை அடைந்துள்ளாள். ஆனால் சுரண்டல்களின் உபரியில் வளர்ந்து நிற்கும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஒரு சர்ச்சிலாவது பெண் திருப்பலி நடத்தமுடியுமா? இன்றைக்கு தமிழ்நாட்டில் கத்தோலிக்க சர்ச் ஒரு முக்கிய சக்தியாகவே (அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும்) விளங்குகிறது. ஆனால் இந்து சமுதாயத்தில்நடந்து வரும் இத்தனை முன்னோக்கிய நிகழ்வுகளையும் புறந்தள்ளி இந்து தருமத்தை தாக்குவதற்கு ஒரு கருவியாக மட்டுமே பெண்விடுதலை சார்ந்த வெற்றுக்கூச்சலை பின்வரும் வரிகளில்
"மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்"
±ýÚ ±Øи¢È Í̽¡ ¾¢Å¡¸ÕìÌ (http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_116730497264410580.html)
"ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது ஓடி ஒளித்தனர்
ஆண் சீடர்கள்
அங்கு நின்றதோ பெண்கள்
எனினும்
பொறுக்கி (no pun intended) எடுத்த
அப்போஸ்தலர்களோ
அனைவரும் ஆண்கள்!
இன்றும் திருப்பலி நடத்துவதற்கு
ஆண்களுக்கு மட்டும்தான் ஆகும் என்றால்
பெண்களுக்கு திருப்பலி வேண்டாம்.
திருப்பலி பீடத்தில்
எங்கள் பெண்கள் உலர்த்தட்டும்
அவர்கள் நாப்கின்களை"
என எழுத முதுகெலும்பு இருக்கும் என நினைக்கிறீர்களா?
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. முன்முடிவுகளுக்கு அப்பால் நகர்வோம் உண்மையிலேயே சமுதாய ஏற்ற தாழ்வுகள் இல்லாத, வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் நல் உலகம் படைக்க.
அன்புள்ள எழில்,
தங்கள் கருத்துகளுக்கு நன்றி. பல நூற்றாண்டுகளாக பல்வேறு காரணிகளால் பெண்களுக்கு வேதவியல் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. இன்று நம் கடமை அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த அந்த கல்வியில் அவர்களுக்கு பாத்தியதைப்பட்ட முன்னுரிமையை அளித்துவிட்டு விலகி நிற்பதே. பல தொழில்கள் செய்யும் எத்தனையோ பெண்கள் எந்த நாள் அவர்களுக்கு மாதவிடாய் என்பதனை அறிந்திட இயலாதவகையில் அந்த அசௌகரியங்களை உளவியல் மற்றும் மருத்துவ உதவியுடன் மீறி திறமையுடன் செயல்படத்தான் செய்கிறார்கள். இந்த விசயங்களை அவர்களே முடிவெடுத்துக்கொள்ளட்டும். பிரம்மஸ்தான கோவில்களில் பெண்களின் வழிபாடு ஆண் உதவி இல்லாமல் பல ஆண் அர்ச்சகர்கள் செய்யும் கோவில் வழிபாடுகளை விட சிறப்பாகவே இருக்கிறது. மாதவிடாய் காலத்திலும் நீங்கள் கட்டாயம் அர்ச்சனை செய்யவேண்டும் என்றோ செய்யகூடாது என்றோ நாம் கூறவேண்டிய தேவையில்லை. ஆனால் இதெல்லாம் திருமணத்திற்கு முன்பே பிள்ளைக்கு பெயர் வைக்கும் கதையாகத்தான் இருக்கிறது. முதலில் பெண்களுக்கு வேத கல்வி அளிக்கும் கல்விசாலைகளை உருவாக்கிடுவது அவசியம். அது விரைவில் இந்து தேசிய இயக்கங்களால் தமிழ்நாட்டில் கைகூடும் என நிச்சயமாக நம்புகிறேன்.
அன்புள்ள அருணகிரி,
சுகுணாதிவாகர் போன்ற போலி பெண்ணுரிமைவாதிகள் பெண்ணுரிமையை கயமையாக இந்துதருமத்தை ஆபாசமாக அர்ச்சிக்க பயன்படுத்துவதில் இருக்கும் முடை நாற்றம் எடுக்கும் ஆபாச நேர்மையின்மையினைக் காட்டிலும், அரிகரனின் பிற்போக்குத்தனம் நேர்மையானது. முன்னது உண்மையால் எதிர்கொண்டு கிழித்தெறியப்படவேண்டிய இரட்டைவேடம். ஆனால் பின்னது சமுதாயத்தில் வளரவிடாமல் மாற்றப்பட்டு களையப்பட வேண்டியது. தங்கள் உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.
அரவிந்தன் நீலகண்டன்
திரு.நீலகுண்டன் அவர்களே,
ReplyDeleteநன்றாக எழுதி இருக்கிறீர்கள். எனது பதிவையும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
இங்கு 'விடாது கருப்பு' வின் பின்னோட்டத்தை வெளியிட்டதன் ஒரே நோக்கம் அவரது மனக்காழ்ப்புணர்வின் சீழேற்றம் எந்த அளவு இருக்கிறது என்பதைக் காட்டவே. அவரது உடனடி தேவை நல்ல மனநல மருத்துவரின் சேவை.
ReplyDeleteநன்றி மு.கார்த்திகேயன். உங்கள் நட்பும் ஒரு சிறந்த பரிசுதான். இணைந்து வளருவோம். தங்களுக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅற்புதமான பதிவு நீலகண்டன்.
ReplyDeleteகேரளாவில் ஒரு பகவதி அம்மன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட நாளீல் அங்கு வரும் எல்லா பெண்களுக்கும் சாதி, மத வித்தியாசம் பாராமல் அங்குள்ள கோயில் பூஜாரிகள் (தந்திரிகள்) பாதபூஜை செய்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன்.
இந்த வருடம் இந்த பூஜையில் பின்னணிப் பாடகி திரு. வாணி ஜெயராம் கலந்து கொண்டார். அவரது பாதங்களில் மலரிட்டு பூசாரிகள் அர்ச்சிக்கும் புகைப் படம் தினத் தந்தியில் சில நாட்கள் முன் வந்திருந்தது. இதே பூஜையில் கடந்த ஆண்டுகளில் மலையாள நடிகை திவ்யா உண்ணி உட்பட பலர் அர்ச்சிக்கப் பட்டதாகவும் அந்தச் செய்தி கூறியது.
மனம் மகிழ்ந்தேன் இந்தச் செய்தி படித்து. இதுவல்லவோ உண்மையான இந்து சமயக் கோட்பாடு!
// சுகுணாதிவாகர் போன்ற போலி பெண்ணுரிமைவாதிகள் பெண்ணுரிமையை கயமையாக இந்துதருமத்தை ஆபாசமாக அர்ச்சிக்க பயன்படுத்துவதில் இருக்கும் முடை நாற்றம் எடுக்கும் ஆபாச நேர்மையின்மையினைக் காட்டிலும், அரிகரனின் பிற்போக்குத்தனம் நேர்மையானது. முன்னது உண்மையால் எதிர்கொண்டு கிழித்தெறியப்படவேண்டிய இரட்டைவேடம். ஆனால் பின்னது சமுதாயத்தில் வளரவிடாமல் மாற்றப்பட்டு களையப்பட வேண்டியது. //
மிகத் தெளிவான நிலைப் பாடு. இதைவிட சிறப்பாக இதைச் சொல்லியிருக்க முடியாது!
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப் பணிதல் ஆக்கம்!
- பாரதி
ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி ஜடாயு. உண்மையான சமுதாய சமத்துவமும் சமரசமும் சங்கத்தால் மட்டுமே முடியும். என்பது எனது அழுத்தமான நம்பிக்கை. பல வரலாற்றுக்காரணிகளால் நம் சமுதாயம் தேங்கியிருந்தாலும் இந்து கருத்தியல் மூலம் சமுதாய விடுதலையை அடையமுடியும் என்பதில் திண்ணமான நம்பிக்கை உள்ளவன் நான். என் அனுபவங்கள் மீண்டும் மீண்டும் அதை உறுதிப்படுத்துகின்றன அதே அளவு மற்றொரு விஷயமும் உறுதியாகியுள்ளது. முற்போக்கு வெற்றுக்கூச்சல் எழுப்புபவர்கள் நூற்றுக்கு 90 விலை போன போலிகள்.
ReplyDeleteபாரத பூமியில் அவதரித்துக்கொண்டே இருப்பது தெய்வங்களுக்கு பிரியமான செயல். 19ம் நூற்றாண்டில் அன்னை பகவதியே சாரதா தேவியாக, பகவான் ராமகிருட்டினரின் துணைவியாக அவதரித்தார். அவரே பக்தையர் ஜபம், பூஜை முதலான காரியங்களை எக்காலமும் விடாது செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். அன்னையே சொல்லும்போது அசுரப் பூசாரிகளின் அலறல்களுக்கு செவிமடுப்பார் ஆர்?
ReplyDeleteஉடலில் நடக்கும் வேதி வினைகளால், கோபம் வருவதும் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம்.
இந்த வேதி வினைகளையும் மீறி மனத்தை சாந்தமுறச் செய்ய மிக்க துணை செய்வது இறை வழிபாடன்றோ?
வழிபாட்டினால் வலி தீரும்; மனத்தில் அமைதி ஏறும்.
அமைதி மனத்தில் ஆன்மீகம் தழைக்கும்.
ஆகமங்களுக்கு அடங்குதல் ஆண்டவனின் கருணை. ஆகம நூற்களின் கண்டுகளில் வெறுமே கற்றோர் கட்டுண்டு கிடக்கையில், அன்பே உருவான மீராவின் பின் அலைந்துகொண்டிருந்தான் கண்ணன் அவன்.
ஆகம கோயில்கள் தடுத்தாலும், அன்பு பெண்டிராளும் வீடுகளில் அனுதினமும் வந்து செல்லும் தெய்வங்களுக்கு பக்தி மட்டுமே படையல். மனத்தூய்மை எக்காலமும் சாத்தியம். உடற்தூய்மை என்பது ஒருபோழ்தும் உண்மையல்ல. ஆடவரே வழிபடினும் அவருடலினுள் பீளையும், மலமும் மறைந்துதான் போகுமோ?
அலை ஓய்ந்து குளிக்க ஆதரவு தருவது அறிவுடையோர் செயலோ?
ஆனால் போராட்டங்களுக்கு அப்பால் இந்து சமுதாயம் முன்னகர்ந்திருக்கிறது.
ReplyDeleteஹிந்து மதம் என்பதே போராளி மதங்கள்தானே?
எதிர்த்துக் கேள்வி கேட்டு, அறிந்து, புரிந்து புண்ணியம் எதுவென்று எடுத்தாராய்ந்த மதமன்றோ அது?
விவாதமன்றோ வித்திட்டது புத்தரின் போதனைகளையும்,
சங்கரரின் சத்கருமங்களையும்,
கோபுரம் ஏறி கூவலாய் புண்ணிய மொழி பகன்ற புரட்சிக்காரர் நம் ராமானுசரையும்,
நம்பூதிரி மட்டுமன்றி இறை இன்பம் தடுக்கப்பெற்ற ஈழவரினுள்ளும் அரனை காட்டிய நாராயண குருவையும்,
தாழ்த்தப்பட்ட சாதியரின் கழிப்பறையை தன் தலைமுடியால் தூய்மை செய்த பகவான் ராமகிருட்டினரையும்,
அவர் தலைமை தொண்டராய் நரனே நாராயணன் என்று பகர்ந்த வீரத்துறவி விவேகனந்தரையும்,
இறைநம்பிக்கையிலா வீர சாவார்க்கரையும்,
குன்றிய மாந்தரின் குணங்களைச் சுட்டி உன்னதத்திற்கு உயருங்கள் என்று சொன்ன கோவல்கரையும்,
அல்லா அல்லா அல்லா என்றும் அரற்றிய ஞானி பார்புகழ் பாரதியையும்,
அவர் தொழுது வணங்கிய மிலேச்ச தெய்வம் அன்னை நிவேதிதையையும்,
வாளெடுத்து வழிப்பறி செய்தவர்தமை திருத்தி வாபர் தெய்வமாய் அருகில் அன்பராய் சேர்த்த எங்கள் ஐயன் ஐயப்பனையும்,
அந்நிய மதத்தாரின் ஆள்சேர்க்கும் வணிகத்தை ஆவேசமாய் எதிர்க்கும் அன்பன் ஐயன் காளியையும்,
அருளுவதன்றோ எங்கள் போராட்ட ஹிந்து மதம்.
இதை இதன் அன்பே உருவான தெய்வங்கள் என்றும் ஆயுதங்கள் ஏந்தியே அருள்பாலிக்கும்.
காஞ்சி காமாட்ஷிக்கு இன்னமும் பூணூல் அணிவிக்கும் பழக்கம் உள்ளதென்றும், ஆரம்ப வேத காலங்களில் ஆண், பெண் மாணாக்கர் இருவருக்கும் பூணூல் அணிவிப்பது வழக்கம்தான் என்றும் ஒரு ஹிந்து சமயப் பெரியவர் என்னிடம் கூறியிருக்கிறார்.
ReplyDeleteபெண்கள் மந்திரம் சொல்லுவது கர்ப்பப்பையை பாதிக்கும், மாதவிலக்கு போன்றவை வெறும் டகுல்பாய்ச்சி வேலைகள்தான் என்றும் அவர் கூறினார்.
ஆரிய ஸமாஜமும் பெண்களுக்கு வேதமோதும் ஸ்வதந்திரமுள்ளது என்று கூறுகிறது. கற்பிக்கிறது. ஓதுகிறார்கள். அவர்களது குழந்தைகள் மற்ற பெண்களின் குழந்தைகள் போன்று நன்கு புஷ்டியாகவும், புத்திஸாலியாகவும் உள்ளனர்.
அதுவுமன்றி, போன வருடம் என்னுடைய முந்தைய கம்பனியின் மேனேஜர் ஒருவரின் வீட்டு க்ரஹப் ப்ரவேஸத்திற்குச் சென்ற போது, அங்கு ஹோமாம் வளர்த்து புரோஹிதம் செய்துகொண்டிருந்தவர்கள் மூவர். ஒருவர் பெண். இந்த மேனேஜர் உத்திரப் ப்ரதேஸத்தைச் சார்ந்தவர். விஸாரித்த போது பெண்கள் வைதீகம் செய்வது அங்கே நடைமுறைதான் என்று கூறினார்கள். (அவர்களுக்கும் ஆரிய ஸமாஜத்திற்கும் ஸம்பந்தமில்லை.)
என்ன, அவர்கள் நடத்திய முறை நம்மூர்போல கம்பீர்யமானதாக எனக்குத் தோன்றவில்லை (என்னுடைய ப்ரஜுடைஸ்களின் விளைவு). மந்திரங்கள் சொல்லும்போது நம்மூரில் தப்பை என்று சொல்லுவோமே அது போன்ற ஒரு வாத்தியத்தை எடுத்து அடித்தவாறே பாட்டெல்லாம் பாடினார்கள். (ஆனால், இதற்கும் பெண் ப்ரோஹிதம் செய்வதற்கும் ஸம்பந்தமில்லை. அந்தப் பெண்மணி இல்லாதிருந்தாலும் அப்படித்தான் நடந்திருக்கும்.)
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஹிந்துக்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாதிருந்தது. தங்களை ஆண்ட மதத்தாரின் நம்பிக்கைகளைப் பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். ஏற்றுக்கொள்ளாத மடங்களையும், அமைப்புக்களையும் அழித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் தொழிற் புரட்சியின் காரணமாக அவர்களது புனிதமான புத்தக வரிகள் பொடியாகிவிட்டதால், இயற்கையை புரிந்துகொண்ட ஹிந்து மத கருத்துக்கள் வெளிப்படத் துவங்கின.
எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஹிந்துமத அமைப்புக்கள் பெரும்பாலானவை பெண்களுக்கு வேதம் ஓதும் ஸ்வதந்திரம் உள்ளதென்றே கூறுகின்றன. அவற்றின் முக்கிய குறிக்கோளாக முற்கால வேத காலம் என்று அறிஞர்களால் குறிக்கப்படும் காலத்திலிருந்த பழக்கங்களை புணருத்தாரணம் செய்வது அமைந்துள்ளது. (அதற்கு அடுத்த காலமானது கர்மகாண்ட சடங்குகள் நிறைந்த வேதகாலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவை புத்த, ஜைன மதங்கள் பரவ
ஆரம்பித்திருந்த காலங்கள்.)
மொகலாய, ஆங்கில ஆதிக்கத்திலிலிருந்து தப்பிப் பிழைக்க அவர்களின் கருத்துக்களை பின்பற்றி வந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகளான ஷங்கர, ரமானுஜ, மத்வாச்சாரிய மடங்களின் கருத்துக்களிடமிருந்து இவை விலகி பெண்களுக்கு முழு ஸ்வதந்திரம் வேண்டுமென்று கூறுகின்றன. இந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகளைவிட இது போன்ற நவீன அமைப்புகளுக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்குக் காரணம் இந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகள் ஜாதி அடிப்படையில் அமைந்திருப்பவை. நவீன அமைப்புகள் அப்படிப்பட்டவை அல்ல.
எனக்கென்னமோ, ப்ரம்மச்சரியத்திற்கு மிக மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்த புத்த, ஜைன மதங்கள் பெண்களிடமிருந்து ஆண்களை விலக்கிவைக்க ஆரம்பித்தது வைதீக மதங்களையும் பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. (புத்த பிக்குண்ணிகளை சேர்த்துக் கொள்வதில் புத்தர் தயக்கம் காட்டியுள்ளார். ஆனந்தரின் வற்புறுத்தல்தான் பிக்குண்ணிகளை சங்கத்தில் சேர்த்தது என்றும் படித்திருக்கிறேன்.)
காஞ்சி காமாட்ஷிக்கு இன்னமும் பூணூல் அணிவிக்கும் பழக்கம் உள்ளதென்றும், ஆரம்ப வேத காலங்களில் ஆண், பெண் மாணாக்கர் இருவருக்கும் பூணூல் அணிவிப்பது வழக்கம்தான் என்றும் ஒரு ஹிந்து சமயப் பெரியவர் என்னிடம் கூறியிருக்கிறார்.
ReplyDeleteபெண்கள் மந்திரம் சொல்லுவது கர்ப்பப்பையை பாதிக்கும், மாதவிலக்கு போன்றவை வெறும் டகுல்பாய்ச்சி வேலைகள்தான் என்றும் அவர் கூறினார்.
ஆரிய ஸமாஜமும் பெண்களுக்கு வேதமோதும் ஸ்வதந்திரமுள்ளது என்று கூறுகிறது. கற்பிக்கிறது. ஓதுகிறார்கள். அவர்களது குழந்தைகள் மற்ற பெண்களின் குழந்தைகள் போன்று நன்கு புஷ்டியாகவும், புத்திஸாலியாகவும் உள்ளனர்.
அதுவுமன்றி, போன வருடம் என்னுடைய முந்தைய கம்பனியின் மேனேஜர் ஒருவரின் வீட்டு க்ரஹப் ப்ரவேஸத்திற்குச் சென்ற போது, அங்கு ஹோமாம் வளர்த்து புரோஹிதம் செய்துகொண்டிருந்தவர்கள் மூவர். ஒருவர் பெண். இந்த மேனேஜர் உத்திரப் ப்ரதேஸத்தைச் சார்ந்தவர். விஸாரித்த போது பெண்கள் வைதீகம் செய்வது அங்கே நடைமுறைதான் என்று கூறினார்கள். (அவர்களுக்கும் ஆரிய ஸமாஜத்திற்கும் ஸம்பந்தமில்லை.)
என்ன, அவர்கள் நடத்திய முறை நம்மூர்போல கம்பீர்யமானதாக எனக்குத் தோன்றவில்லை (என்னுடைய ப்ரஜுடைஸ்களின் விளைவு). மந்திரங்கள் சொல்லும்போது நம்மூரில் தப்பை என்று சொல்லுவோமே அது போன்ற ஒரு வாத்தியத்தை எடுத்து அடித்தவாறே பாட்டெல்லாம் பாடினார்கள். (ஆனால், இதற்கும் பெண் ப்ரோஹிதம் செய்வதற்கும் ஸம்பந்தமில்லை. அந்தப் பெண்மணி இல்லாதிருந்தாலும் அப்படித்தான் நடந்திருக்கும்.)
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஹிந்துக்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாதிருந்தது. தங்களை ஆண்ட மதத்தாரின் நம்பிக்கைகளைப் பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். ஏற்றுக்கொள்ளாத மடங்களையும், அமைப்புக்களையும் அழித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் தொழிற் புரட்சியின் காரணமாக அவர்களது புனிதமான புத்தக வரிகள் பொடியாகிவிட்டதால், இயற்கையை புரிந்துகொண்ட ஹிந்து மத கருத்துக்கள் வெளிப்படத் துவங்கின.
எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஹிந்துமத அமைப்புக்கள் பெரும்பாலானவை பெண்களுக்கு வேதம் ஓதும் ஸ்வதந்திரம் உள்ளதென்றே கூறுகின்றன. அவற்றின் முக்கிய குறிக்கோளாக முற்கால வேத காலம் என்று அறிஞர்களால் குறிக்கப்படும் காலத்திலிருந்த பழக்கங்களை புணருத்தாரணம் செய்வது அமைந்துள்ளது. (அதற்கு அடுத்த காலமானது கர்மகாண்ட சடங்குகள் நிறைந்த வேதகாலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவை புத்த, ஜைன மதங்கள் பரவ
ஆரம்பித்திருந்த காலங்கள்.)
மொகலாய, ஆங்கில ஆதிக்கத்திலிலிருந்து தப்பிப் பிழைக்க அவர்களின் கருத்துக்களை பின்பற்றி வந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகளான ஷங்கர, ரமானுஜ, மத்வாச்சாரிய மடங்களின் கருத்துக்களிடமிருந்து இவை விலகி பெண்களுக்கு முழு ஸ்வதந்திரம் வேண்டுமென்று கூறுகின்றன. இந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகளைவிட இது போன்ற நவீன அமைப்புகளுக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்குக் காரணம் இந்த ஆர்த்தடாக்ஸ் அமைப்புகள் ஜாதி அடிப்படையில் அமைந்திருப்பவை. நவீன அமைப்புகள் அப்படிப்பட்டவை அல்ல.
எனக்கென்னமோ, ப்ரம்மச்சரியத்திற்கு மிக மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்த புத்த, ஜைன மதங்கள் பெண்களிடமிருந்து ஆண்களை விலக்கிவைக்க ஆரம்பித்தது வைதீக மதங்களையும் பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. (புத்த பிக்குண்ணிகளை சேர்த்துக் கொள்வதில் புத்தர் தயக்கம் காட்டியுள்ளார். ஆனந்தரின் வற்புறுத்தல்தான் பிக்குண்ணிகளை சங்கத்தில் சேர்த்தது என்றும் படித்திருக்கிறேன்.)
இப்படி ஒரு விஷயத்தில் பல நிலைப்பாடுகள் எடுக்க முடியும். ஏன் பெண்கள் சேர்ந்து ஒரு கோயிலை எழுப்பி இங்கு அந்த விதி இல்லை, பெண்கள் எந்த நிலையிலும் வரலாம் என்று அறிவித்தால் அவர்களை இந்து மதத்தினை விட்டு யாரும் நீக்க முடியாது.
ReplyDeleteபெண்கள் எந்தக் கோயிலில் அதற்கு அனுமதி இருக்கிறதோ அங்கு போகிறேன் என்றும் நிலைப்பாடு எடுக்க முடியும்.
இந்து மதத்தில் பல்வேறு வழிப்பாட்டு முறைகள், வழிபாடு குறித்த நம்பிக்கைகள் இருக்கின்றன. உனது சிவன் என்னை அனுமதிக்காவிட்டால் எனக்கான சிவன் கோயிலை நான் கட்டிக்கொள்கிறேன் என்று கோயில் கட்டினால் அங்கு இருப்பது சிவன் இல்லை என்று யாரும் உத்தரவு போட முடியாது.
கர்நாடகாவில் ஒரு தலித் பெண் அதிகாரி தன் கணவருடன் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டியுள்ளார். இது அவரதுச்சொந்தக் கோயில், அவர் அங்கு பூஜைகளும் செய்கிறார். ஐயப்பனை தன் குழந்தைகளில் ஒருவன் என்கிறார். நாளடைவில் அவர் காலத்திற்குப் பின்னும் அங்கு பெண்கள் பூஜை செய்வது சாத்தியமாகலாம்.
இது போல் வேறு பல கோயில்கள் உருவாகலாம். ராமகிருஷ்ண மடங்களில் பெண் துறவிகள் இருக்கிறார்கள். ஷாரதா மடங்கள் என்று அழைக்கப்படும் அம்மடத்தின் பல கிளைகளை பெண்களே நடத்துகின்றனர். முடிவெடுக்கின்றனர். முழுக்க முழுக்க பெண் துறவியராளாலேயே நிர்வகிக்கப்படும், இந்த மடங்களில் ஆண்கள் அதிகம்போனால் வாயில்காப்போன் வேலை செய்யலாம்.
ஆனால் பல மடங்களில் பெண்கள் அதிகபட்சம் சிஷ்யைகளாகத்தான் இருக்க முடியும், துறவியாக முடியாது, மடாதியாக முடியாது. கிறித்துவத்திலும் பெண்கள் கன்னியா ஸ்தீரிகளாக இருந்து, மதர் சுப்பீரியர் போன்ற நிலைகளை எட்ட முடியும். பிஷப்பாகவோ அல்லது போப்பகவோ ஆக முடியாது.
பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாம் என்றார் சுவாமி சித்பவானந்தர். இதை எல்லாத் துறவிகளும், மடாதிபதிகளும் ஏற்காவிட்டாலும் அதை தடுக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளி மாணவி முற்காலங்களில் பெண்களும் முப்புரி நூல் அணிந்திருந்தனர், காயத்ரி மந்திரம் சொல்லி மூன்று வேளையும் ஜெபித்தனர். அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார். இது சாத்தியமாகது என்று சொல்ல முடியாது.
இந்து மதத்தில் உள்ள பன்வகைத்தன்மை சிலவற்றை சாத்தியமாக்குகிறது. இந்தப் பன்வகைத்தன்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, மதம் ஒற்றைப்படுத்தப்படக் கூடாது. பன்வகைத்தன்மை இருப்பதால் பிரச்சினைகள் இல்லை என்று சொல்லவரவில்லை. மாறாக இந்தப் பன்வகைத்தன்மையை எப்படி சாதமாக, சமூக,மத சீர்த்திருத்ததிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும், படைப்பாற்றலுடம் செயல்பட வெளிகளை, களங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும்.
ஈவேராவிற்கு இந்தப் புரிதல் சுத்தமாக இல்லை, அவரது மடத்தைச் சேர்ந்த சீடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அல்லது புரியாதது போல் இந்து மதத்தினை அழிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அரசு இதைச் செய்ய வேண்டும், இந்து மதத்தில் தலையிட வேண்டும், சமத்துவத்தினை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் அனைத்து மதத்திலும் அரசு தலையிடாது, இந்து மதத்தில் மட்டும் தலையிடும் என்பதைத் தெரிந்து கொண்டே சொல்வதால் அவர்களின் நோக்கம் கேள்விக்குறியாகிறது.
பிற மதங்களில் அரசு தலையிடும் போது அது வழிபாட்டு உரிமை, மத நம்பிக்கை உரிமை ஆகியவற்றில் அரசு அத்துமீறுவது என்பது மட்டுமின்றி சிறுபான்மையினர் உரிமைகளிலும் அத்துமீறுவதாக ஆகி விடுவதால் அரசு தலையிட வாய்ப்புகள் இல்லை.
எப்படியோ!
ReplyDeleteநீங்களும் மிதக்கும் வெளியும் இப்படி பதிவு போட்டு நம்ம கருப்ப உசுப்பேத்திட்டீங்க!
அரவிந்தன் நீலகண்டன்,
ReplyDeleteநான் சொல்லவிழைந்தது பெண்கள் அர்ச்சகராக்கப் படக்கூடாது என்பதில்லை. எனது தனிப்பட்ட கருத்தாகச் சொன்னதும் பெண்களுக்கான உடனடித்தேவையாக இது இல்லை என்பதே.
இந்துமத வேதத்தில் சொல்லப்பட்டது என்றும் நான் சப்பைக்கட்டு கட்டவில்லை. ஏனெனில் வேதத்தில் இம்மாதிரியான ஃபாத்வாக்களுக்கு இடமில்லை.
சில நூற்றாண்டுகளாக இந்துப் பெண்கள் அர்ச்சகராகக் கோவில்களில் ஆக்கப்படாத மரபுக்கு அவர்கள் உடலியல் காரணங்கள் /சுகாதாரம் மற்றும் அன்பிலா அன்னியரின் படையெடுப்புக்களில் கோவில்கள் கொள்ளையடிப்புக்கு முக்கிய குறியாக இருந்ததும், அந்நியர் இந்துப் பெண்களை பாலியல் பலாத்காரங்கள் என்று கொடூரங்கள் புரிந்த காரணங்களால் சமூகத்தின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு சமவாய்ப்பு தரமுடியாத சூழல்காரணமாக மரபுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதையே.
எனது அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் கூடுதல் காரணங்களைச் சொல்லியிருந்தேன். பதிவிலேயே இவைகளையும் சேர்த்துச் சுட்டியிருந்திருக்க வேண்டும்.
காலஓட்டதில் இன்றைக்கு அவசியப்படாத, தேவையற்ற பழைய மரபுகள் மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் (எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) இந்து வாழ்வியல் நெறி தன்னை அப்படித்தான் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறது.
நான் சொல்ல வந்தது இந்த மரபு அப்படியே தொடரவேண்டும் என்பதை அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஏன் அப்படியான ஒரு மரபு என்பதே நான் சொல்ல விழைந்தது.
மிதக்கும் வெளிக்கு(சுகுணாதிவாகர்) அவரது வெறுப்பை வெளிப்படுத்த எதிர்வினைப் பதிவாக நாகரீகமான, பண்பட்ட சொல்களால் ஈவெரா பாசறையில் பயின்ற கல்வியின் விளைவாய் கிடைத்த பகுத்தறிவினை சுயமரியாதையோடு பயன்படுத்தியிருந்தார்!
அரவிந்தன் நீலகண்டன்!
ReplyDelete//இந்து தருமம் ஒரு வளர்ந்து வரும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் தேசத்தின் தருமம்.//
மெய்யாலுமா!
நிச்சயமாக சுவனப்பிரியன்.
ReplyDeleteமீள்-உருவாக்கும் ஆற்றல் மூலத்தினை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பங்களுக்கு பின்னால் இந்து மதிப்பீடுகள் இயங்குகின்றன. இந்து மதிப்பீடுகள் சுற்றுச்சூழல், சமூக நீதி, சமூக நல்லிணக்கம், பெண் விடுதலை ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
அருமையான பதில்கள் ஐயா.
ReplyDeleteநியாயமாக, அகவய சார்பில்லாமல் தாங்கள் வாதங்களை உண்மைகளை எடுத்து முன்வைக்கும் அழகு அருமையாக இருக்கிறது. தமிழீழ இந்துக்களுக்காக இந்துஸ்தானமே கொதித்தெழும் நாளும் விரைவில் வரத்தான் போகிறது. ஏற்கனவே சிவசேனா தமிழகத்திற்கு அப்பால் இலங்கை தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக உள்ளது. தமிழீழம் உருவாகுகையில் அங்கு தெய்வத்தமிழ் சைவத்திற்கு சிறப்பான இடம் இருக்குமா ஐயா? அல்லது இங்கு போல போலி மதச்சார்பின்மை பேசி அசிங்கப்படுத்திடுவார்களா? மதமாற்ற சக்திகள் அங்கு ஆன்ம அறுவடை செய்ய அனுமதிக்கப்படுமா? அல்லது உண்மையான மத-நல்லிணக்கம் பேணப் படுமா?
i need some long breath ...
ReplyDeletei am aasath
1.
//
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு யாரும் இல்லாத போதும், அவர்கள் இந்த ஒழுங்கினையே பின்பற்றுகின்றனர். ஆகவே, இது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆண்கள் உருவாக்கிய சட்டம் என்று கூறுவது சரியல்ல// this dialogue has heard from upper communities while they refuse the rights of Dalits. This thoughts has a ILLUSION...
//ஆனால், அதனை அசுப காரியமாக பார்க்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை. பெண் பூப்படையும் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடும் நாளாகத்தான் இருக்கிறது.//It is the residue of our un-mobiled Feudal society... Don't appreciate it. What is the matter can announced through this function ...
//பார்ப்பனீயம் என்பது என்ன? 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட காலனிய கருத்தாக்கமே அது.//The word has only defined on that day. But the rules and ruglation through this thought had done by MANUSHMIRUTHI...
//மாறாக, இந்துத்வம் தலித்துகள் மீதான வன்கொடுமை முதல் இந்து சமுதாயத்தின் அனைத்து அவல நிலைகளுக்கும் தைரியமாக பொறுப்பேற்கிறது. அதனை மாற்ற வழி செய்கிறது. இன்றைய தேதியில் தலித்துகள் வாழ்விடங்களுக்கு சென்று அவர்களுக்கு கல்வி முதல் கழிவறை சேவை வரை செய்து வரும் ஒரே இயக்கம் இந்து தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்தான். திண்ணியத்தில் ஒரு தலித் மலம் தின்ன வைக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு காரணமான 'சாதி இந்து' எந்த கட்சியை சார்ந்தவர்? திராவிட கட்சியை. ஆனால் பாருங்கள் பழியை கண்ணுக்கு தெரியாத பார்ப்பனீயத்தின் மீது போட்டு ஜல்லியடித்தால் நாம் சுயபரிசோதனை செய்யவேண்டியதில்லை பாருங்கள்//RSS has formed on 1925 only. Before that who take responsibility? all of the hindu fasicm with feudal havn't guided by RSS . They have guide by the philosophy of Barbaneeyam. Thinniyam Devar community also afected by the values of Barbaneeyam (ie, superiority by birth only).
//ஆனால் சுரண்டல்களின் உபரியில் வளர்ந்து நிற்கும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஒரு சர்ச்சிலாவது பெண் திருப்பலி நடத்தமுடியுமா? இன்றைக்கு தமிழ்நாட்டில் கத்தோலிக்க சர்ச் ஒரு முக்கிய சக்தியாகவே (அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும்) விளங்குகிறது.//Don't has stomach-fire on them...all religion have the boundaries of feudal. It can't adopt with growth of production of society (Capitalism or forthcoming socialism.) So it can put their PROs to stand their sentimental values. It gives the un-movable condition to our society.
//மாதவிடாய் காலத்திலும் நீங்கள் கட்டாயம் அர்ச்சனை செய்யவேண்டும் என்றோ செய்யகூடாது என்றோ நாம் கூறவேண்டிய தேவையில்லை. //This thought has like FC thought...Suffered peoples (female(by gender)) SHOULD DO the refused rights...
//பல வரலாற்றுக்காரணிகளால் நம் சமுதாயம் தேங்கியிருந்தாலும் இந்து கருத்தியல் மூலம் சமுதாய விடுதலையை அடையமுடியும் என்பதில் திண்ணமான நம்பிக்கை உள்ளவன் நான். //This ideolist could show in our freedom struggle. Sevathaiyya (brother of Kattabomman) had requested Saraboji to defeat East India Company. But he couldn't help him. It is history.
Thiyagarayar (from mummoorthies) had opposed Saraboji through his songs while saraboji had rights within the town of Tanjore.
//உண்மையான சமுதாய சமத்துவமும் சமரசமும் சங்கத்தால் மட்டுமே முடியும். என்பது எனது அழுத்தமான நம்பிக்கை//It is the main reason for our un-movable society...
//ஹிந்து மதம் என்பதே போராளி மதங்கள்தானே?// great ULDAA/
//எதிர்த்துக் கேள்வி கேட்டு, அறிந்து, புரிந்து புண்ணியம் எதுவென்று எடுத்தாராய்ந்த மதமன்றோ அது?//please remember the assasignated SARVAAGAAS...by your ANTHANNAAS.../
விவாதமன்றோ வித்திட்டது புத்தரின் போதனைகளையும்,//while budher the name "Hindu" can't invent. Budher couldn't compromise with ARYAAS. //
சங்கரரின் சத்கருமங்களையும்,/Sankaran can't argu with continuously. He hadn't sicere to his thoughts through debats. //
கோபுரம் ஏறி கூவலாய் புண்ணிய மொழி பகன்ற புரட்சிக்காரர் நம் ராமானுசரையும்,
--DON'T WASTE his Name through your mouth. He had shown a Marvelous Dream with such advanced thinking...
//
நம்பூதிரி மட்டுமன்றி இறை இன்பம் தடுக்கப்பெற்ற ஈழவரினுள்ளும் அரனை காட்டிய நாராயண குருவையும்,
அந்நிய மதத்தாரின் ஆள்சேர்க்கும் வணிகத்தை ஆவேசமாய் எதிர்க்கும் அன்பன் ஐயன் காளியையும், //Pls read about them correctly, not from NEELAGANDAN only...
//
காஞ்சி காமாட்ஷிக்கு இன்னமும் பூணூல் அணிவிக்கும் பழக்கம் உள்ளதென்றும், ஆரம்ப வேத காலங்களில் ஆண், பெண் மாணாக்கர் இருவருக்கும் பூணூல் அணிவிப்பது வழக்கம்தான் என்றும் ஒரு ஹிந்து சமயப் பெரியவர் என்னிடம் கூறியிருக்கிறார்.// I can give a phrase from KarudaPuranam from 17th century.. It told that Dalits, female gender, Cow had equal....It can't raise suddenly...
//ஆரிய ஸமாஜமும் பெண்களுக்கு வேதமோதும் ஸ்வதந்திரமுள்ளது என்று கூறுகிறது. கற்பிக்கிறது. ஓதுகிறார்கள். அவர்களது குழந்தைகள் மற்ற பெண்களின் குழந்தைகள் போன்று நன்கு புஷ்டியாகவும், புத்திஸாலியாகவும் உள்ளனர்.//They known our backward society and its nature of superiority over female gender.. But you told vice versa...
//எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஹிந்துமத அமைப்புக்கள் பெரும்பாலானவை பெண்களுக்கு வேதம் ஓதும் ஸ்வதந்திரம் உள்ளதென்றே கூறுகின்றன. அவற்றின் முக்கிய குறிக்கோளாக முற்கால வேத காலம் என்று அறிஞர்களால் குறிக்கப்படும் காலத்திலிருந்த பழக்கங்களை புணருத்தாரணம் செய்வது அமைந்துள்ளது. (அதற்கு அடுத்த காலமானது கர்மகாண்ட சடங்குகள் நிறைந்த வேதகாலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவை புத்த, ஜைன மதங்கள் பரவ
ஆரம்பித்திருந்த காலங்கள்.)
// Is it any positive growth or pull theb society to backward...Before 2400 yr, it hadn't the struggle between religion..it was between Races...and different systems.//
//எனக்கென்னமோ, ப்ரம்மச்சரியத்திற்கு மிக மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்த புத்த, ஜைன மதங்கள் பெண்களிடமிருந்து ஆண்களை விலக்கிவைக்க ஆரம்பித்தது வைதீக மதங்களையும் பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. (புத்த பிக்குண்ணிகளை சேர்த்துக் கொள்வதில் புத்தர் தயக்கம் காட்டியுள்ளார். ஆனந்தரின் வற்புறுத்தல்தான் பிக்குண்ணிகளை சங்கத்தில் சேர்த்தது என்றும் படித்திருக்கிறேன்.) // Please read Arthasasthraa... you should get the answer...//
//இப்படி ஒரு விஷயத்தில் பல நிலைப்பாடுகள் எடுக்க முடியும். ஏன் பெண்கள் சேர்ந்து ஒரு கோயிலை எழுப்பி இங்கு அந்த விதி இல்லை, பெண்கள் எந்த நிலையிலும் வரலாம் என்று அறிவித்தால் அவர்களை இந்து மதத்தினை விட்டு யாரும் நீக்க முடியாது.//It has already told to Dalits against their entering struggle to Hindu Temples.//
//
இந்து மதத்தில் உள்ள பன்வகைத்தன்மை சிலவற்றை சாத்தியமாக்குகிறது. இந்தப் பன்வகைத்தன்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, மதம் ஒற்றைப்படுத்தப்படக் கூடாது. பன்வகைத்தன்மை இருப்பதால் பிரச்சினைகள் இல்லை என்று சொல்லவரவில்லை. மாறாக இந்தப் பன்வகைத்தன்மையை எப்படி சாதமாக, சமூக,மத சீர்த்திருத்ததிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும், படைப்பாற்றலுடம் செயல்பட வெளிகளை, களங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும்.// It is the post-modernistic approach of a Unique feudal system. Properly OPPORTUNITISM..
//சில நூற்றாண்டுகளாக இந்துப் பெண்கள் அர்ச்சகராகக் கோவில்களில் ஆக்கப்படாத மரபுக்கு அவர்கள் உடலியல் காரணங்கள் /சுகாதாரம் மற்றும் அன்பிலா அன்னியரின் படையெடுப்புக்களில் கோவில்கள் கொள்ளையடிப்புக்கு முக்கிய குறியாக இருந்ததும், அந்நியர் இந்துப் பெண்களை பாலியல் பலாத்காரங்கள் என்று கொடூரங்கள் புரிந்த காரணங்களால் சமூகத்தின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு சமவாய்ப்பு தரமுடியாத சூழல்காரணமாக மரபுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதையே.//Civilised Dravidaas and Thirathyuthaas hadn't done it through the fearness on barbarean AAryaas...