Monday, February 05, 2007

டோண்டுவும் இந்து சமுதாயமும்

டோண்டு என்கிற சாதி வெறியர் அல்லது சாதீய மேன்மையாளர் ஒட்டுமொத்த இந்து தருமத்திற்கும் சமுதாயத்திற்கும் கேடு செய்து வருகிறார். கீழ்த்தரமான சாதிப்பற்றினால் அவர் செய்யும் சேட்டைகளை அலட்சியப்படுத்துவதே நல்லது என கருதியிருந்தேன். ஆனால் இந்து சமுதாயத்தின் மாண்பினைக் குலைக்கும் விதமாக அவர் எழுதியுள்ள விசயங்களை காணும் போது அதனைக் கண்டிக்காமல் இருப்பது தவறு என கருதுகிறேன். எப்படி 'விடாது கருப்பு' போன்ற அரைகுறைகள் எழுதும் குப்பைகளை அலட்சியம் செய்தாலும் இந்து சமுதாயத்துக்கு அவை ஊறு விளைவிக்கும் போது கண்டிக்க வேண்டியது உள்ளதோ அப்படியே -இன்னும் சொன்னால் அதை விட மோசமான ஆபத்தாக- டோண்டு என்கிற ஆசாமியை கருத வேண்டியுள்ளது. இவரது அசட்டுத்தனத்தாலும் கண்மூடித்தனமான சாதீயபற்றினாலும் - அதுதான் சாக்கு என்று ஒரு ஈன பிறவி போலியாக உருவெடுத்து தனது ஆபாச அலம்பல்களுக்கு ஒரு தார்மீக நியாயத்தை டோண்டு மூலமாக உருவாக்கிக் கொண்டான். அதனால் பல பதிவர்கள் மனக்கஷ்டப்பட்டார்கள். ஆனால் டோண்டுவுக்கு ஒரு குறைந்த பட்ச சுயபரிசோதனை செய்யக் கூட தோன்றவில்லை. ஒரு வேளை அது கூட தனது சுய பிரபல்யத்திற்கு வழி தேடும் என நினைத்தாரோ என்னவோ.

சாதீயம் என்பது இந்து தருமத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி. இந்து சமுதாயத்தின் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களுக்கும் - கட்டிய மனைவியை தாசி எனப் பகர்ந்த சிறியான் ஈவெராவின் பகுத்தறிவற்ற ஆபாச அசிங்க உளறல் முதல் ஜிகாதியின் வெடிகுண்டு தாக்குதல் வரை- அனைத்து தாக்குதல்களுக்கும் தார்மீக நியாயம் கற்பிக்க இந்த மனிதத்தன்மையற்ற மிருகங்கள் பயன்படுத்தும் கேடயம் -சாதீயம். அதற்காக இந்த அற்பங்களுக்கு (இழிமதி படைத்த அற்பன் ஈவேரா முதல் ஜிகாதி வரை) சாதீயம் அழிந்திட வேண்டுமென்கிற ஆசையா என்றால் இல்லை. இல்லை.இல்லவே இல்லை. அவர்களுக்கு டோண்டு போன்றவர்களின் 'சேவை' அவசிய தேவை. அப்போதுதானே இந்து தருமத்தையே ஏதோ டோண்டு தான் தூக்கி பிடித்திருப்பதாக சொல்லி அவரது அற்பத்தனமான சாதிய பற்றைக்காட்டி ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் குறிப்பாக இந்து தேசியவாதிகளையும் தாக்க முடியும். கலப்பு திருமணத்தால் ஏற்படும் கஷ்டங்களை டோண்டு எழுதப்போகிறாராம்.


ஐயா டோண்டுவே எதுவையா கலப்புதிருமணம்? புருசனும் பொண்டாட்டியும் மனுச குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே அப்புறம் ஏதையா கலப்பு திருமணம்? செல்லுக்கு 23 ஜோடியாய் 46 க்ரோமோசோம் தானே ஐயா எல்லா
மனுசப் பயலுக்கும் இருக்கிறது. அப்புறம் என்ன ஐயா கலப்பு திருமணம்? ஐயா டோண்டுவே காது கொடுத்து கேளும் நன்றாக: "துருவம் முதல் துருவம் வரை மானுடம் ஒரே இனம். இது மட்டுமே உண்மை. மற்ற படி அனைத்து தடைகளும் மனிதன் ஏற்படுத்திக்கொண்ட செயற்கை தடைகள். மதவாதிகளும் இறைவாக்கினரும் செய்த அந்த அனைத்து தடைகளையும் நீக்கி மானுடத்தை ஒன்றாக்கும் சக்தி காதலின் கவர்ச்சிகர ஆற்றலுக்கு உண்டு." என்று சொன்னவர் பாதையில் செல்கிறவர்கள் இந்துத்வவாதிகள். சொல்வது மட்டுமல்ல செய்தும் காட்டுபவர்கள். அகோய் வாரும் பிள்ளாய் டோண்டுவே... உமக்கு எத்தனை மனமொத்து வாழும் 'கலப்பு'(அதாவது உமது பார்வையில் கலப்பு...) திருமண தம்பதிகளை காட்ட வேண்டும்? அதுவும் சங்க குடும்பங்களிலேயே காட்டமுடியும். எனது இல்லத்திலிருந்தே வேணுமென்றாலும் ஆரம்பிக்கலாம். எனவே டோண்டுவே உமக்கு நான் கேட்பதெல்லாம் (வெறும் கோரிக்கைதான்...மற்றபடி உமது சுதந்திரம்)Mr.Ragava Iyengar you have a right to make a foolish ass of yourself just dont abuse that right over entire Hindu society. எனவே கமலஹாசன் என்கிற கடன்வாங்கி கழிக்கும் நடிகன் உலகமகா நடிகன், இஸ்ரேல், சுவனப்பிரியனுடன் சாப்பிட்ட ஓசி லெமன் டீக்கு காட்டவேண்டிய செஞ்சோற்று கடன், என்றெல்ல்லாம் பதிவு போடும். யாரும் கேட்க போவதில்லை. ஆனால் தயை செய்து கையெடுத்து கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்து சமுதாய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் உமது உள்மன விகாரங்களை பொத்தி வையுங்கள். அவை உம்முடனேயே போய் சேரட்டும்.

42 comments:

  1. மற்ற மதத்தினரை பற்றி சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் இறைமறுக்கும் கும்பலுடன் இவர் அடித்த லூட்டிகள் எவ்வளவு....அதில் எத்துணைபேர் குழி வெட்டிக் காத்திருந்து இன்று இவருக்கு மண் தள்ளூகிறார்கள்.....

    வேண்டுமைய்யா, ஒரு போலியால் இவர் பல போலிகளாக வந்தாராம். மற்ற பதிவர்கள் இவருக்கு பின்னூட்டமிட்ட காரணத்தால் அசிங்கத்தை பெற்றனரே?, அதனை கண்டு அஞ்சினாரா?....அவர்களுக்காக என்ன செய்தார்?.....ஆக தன்னலம் மற்றுமே குறியாக இருந்திருக்கிறாரல்லவா?....

    ReplyDelete
  2. எங்கள் மனதிலிருந்தை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் .நன்றி .

    ஜாதிய வெறியை வெறுக்கும் இந்து கரு.மூர்த்தி

    ReplyDelete
  3. கருத்துக்களை ஆணித்திரமாக சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் தனிமனித தாக்குதலை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. டோண்டு சாதி வெறியர் மட்டுமல்ல , மத வெறியரும் கூட.

    சோ என்பவனையும் கண்டித்து எழுதினால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும்.

    ReplyDelete
  5. அரவிந்தன்,
    டோண்டு அவர்களின் செயல் அநாவசியமானது. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இவ்வளவு கடுமை தேவையில்லை. அவர் வயதை நீங்கள் கணக்கில் கொள்ளலாம்.



    புஸ்யமித்திரரைப் பற்றி ஒரு அவ்வளவு சிரமப்பட்டு கட்டுரை எழுதியிருக்கிறீர்களே, அதைப் பாராட்டி ஒரு வார்த்தை இந்த பின்னூட்டப் பிச்சைக்கார சாதி வெறியர்களால் எழுத முடிந்ததா?


    Selva,
    அரவிந்தனின் பதிவை இங்கு(வலையுலகில்) எந்த இந்துவும் பாராட்டாமல் இருப்பதில்லை. பின்னூட்டங்கள் உரை கல் அல்ல.

    ReplyDelete
  6. //சோ என்பவனையும் கண்டித்து எழுதினால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும். //


    எதுக்கு , சோ உங்களைப்போலவோ , டோண்டுவை போலவோ சாதி வெறியரா என்ன ?



    அது சரி , உங்கள் அறிவுறைகள் எல்லாம் அடுத்தவர்களுக்குதானா ?
    http://jaallyjumper.blogspot.com/2006/12/blog-post.html

    ReplyDelete
  7. டோண்டுவின் வீச்சு ஆயிரக்கணக்கில்.

    சோவின் வீச்சம் லட்சக்கணக்கில்.

    ReplyDelete
  8. ஹரி,
    டோ ண்டூவின் வயதுக்கு மரியாதை கொடுத்துதான் கடுமையை குறைத்திருக்கிறேன். ஆனால் வயதை விடுங்கள், மனிதருக்கு குறைந்த பட்ச இந்து உணர்வு இருந்தால் இப்படி எழுதுவாரா? இவர்களுக்கெல்லாம் சாதிதான் முக்கியம். தன்னுடைய சாதி வாழ ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் காட்டிக்கொடுக்க தயங்காத சில்லறை குணம். கேட்டால் எனக்கு ஓசியில் போளி கிடைத்தது போண்டா கிடைத்தது. எனவே நான் மதச்சார்பின்மையாக தூக்கி மறிக்கிறேன் என்று ஒரு அலம்பல் படம் வேறு காட்டிக்கொள்வார்கள். எப்படியாவது போய் தொலையட்டும். ஆனால் எதற்கு இந்து சமுதாயத்தை அசிங்கப்படுத்த வேண்டும்? சாதியை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபடுகிறோம். ஏற்கனவே வெளியே சாதியை ஒழிக்க அவதாரம் எடுத்தது போல பேசிக்கொண்டு உள்ளே சாதி வங்கிகளாலும் மோதல்களாலும் வாழக்கூடிய அரசியல் வக்காடுகளை கண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கிடையே இப்படிப்பட்ட தொண்டுக்...டோ ண்டுக்கள் வேறு. தெரியாமல்தான் கேட்கிறேன் டோ ண்டுவுக்கு தெரியுமா இரட்டை டம்ளர் முறையால் எனது சகோதரர் அவதிப்பட்டது? ஐயங்கார் என பெயருக்கு பிறகு போட்டால் டீக்கடையில் டீ கிடைக்கும் ஆனால் நாங்கள் நாவிதர் என்று போட்டால் டீ கிடைக்குமா கப்பில்? நிலைமை அப்படி உள்ளது இன்னமும் பகுத்தறிவு கொடிகள்தான் இந்த ஊர்களில் பறக்கின்றன. எந்த சாதிப்பெயர் இருந்தாலும் இந்தியா எங்கும் ஒரு அமைப்பில் ஒரேவித மரியாதை கிடைக்கும் என்றால் அது ஆர்.எஸ்.எஸ்தான் ஐயா. எங்கள் ஷாகா முக்கியசிஷ்க் டோ ண்டு பார்வையில் 'சாதிப்பெயரை போட முடியாத சாதி' ஆனால் ஷாகாவில் வருபவர்கள் செருப்பை அடிக்கி வைக்க அங்கு அந்தண குடும்பத்திலிருந்து வரும் சுவயம் சேவகரிடம் சொல்கிறார். அவரும் அதனை செய்கிறார். ஒரு வாரத்துக்கு அவர்தான் செருப்புகளை 'எல்லா சாதிகாரர்களின்' செருப்புகளையும் எடுத்து அடுக்கி வைக்க வேண்டும். டோ ண்டு குறைந்த பட்சம் ஷாகா சென்று அங்குள்ள அனைத்து ஸ்வயம் சேவகர்களின் செருப்புகளையும் எடுத்து ஒரு மாதத்திற்கு பிராயசித்தமாக அடுக்கி வைக்கட்டும். மரியாதை கொடுப்பதென்ன அவரது காலை தொட்டு வணங்கவும் தயங்கமாட்டேன். ஆனால் சாதியம் பேசி மேன்மைவாதம் பேசி இந்து சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்க நினைக்கும் எவரும் சொந்த தகப்பனே ஆனாலும் குடலை உருவினாலும் தவறில்லை. அதைத்தான் சொல்கிறார் எங்களூர் முத்தாரம்மன் கோவில் கொடைக்கு கூத்து கட்டும் நரசிம்மவதார கூத்துக்காரர்.


    சோவின் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் சாதி வெறியர் அல்ல என்பது எனது அபிப்பிராயம். மேலும் டோ ண்டு இராகவனுக்கு இந்து சமுதாயத்தின் மீதோ இந்து தருமத்தின் மீதோ எவ்வித பிடிப்பும் கிடையாது. அவருக்கு தெரிந்த உலகமெல்லாம் சாதியில் தொடங்கி சாதியில் முடிவதுதான். அதனை அவர் மாற்றுவது நல்லது.

    ReplyDelete
  9. //அது சரி , உங்கள் அறிவுறைகள் எல்லாம் அடுத்தவர்களுக்குதானா ?//

    இதற்கு லக்கிலுக் அவர்களின் பதிவில் உள்ள சில வரிகளே பதில்.


    //சென்ற மாதம் தமிழ் வலைப்பூக்களை ஆக்கிரமித்த முக்கியமான பிரச்சினை கலைஞர் - சாய்பாபா சந்திப்பு. கலைஞரின் தொண்டன் என்ற முறையில் அவருடன் சாய்பாபாவை பார்த்ததுமே மனது கொதித்து எழுந்தது உண்மை. எனினும் ஒரு ஆட்சியாளராக பிராடுகளுடன் கூட அனுசரித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் கலைஞருக்கு இருந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    கலைஞர் - சாய்பாபா சந்திப்பு குறித்த புனிதப் பிம்பங்களின் வயிற்றெரிச்சல் கமெண்டுகள் காமெடியாக இருக்கிறது. கலைஞர் ரம்ஜானுக்கு கஞ்சி குடிக்கப் போனாலும் சரி, பங்காரு அடிகளார், சாய்பாபா மாதிரியான இந்துமத சாமியார்களோடு பழகினாலும் சரி... இரண்டையுமே நேரிடையான எதிரெதிர் கோணங்களில் விமர்சிக்கும் காமெடியை பு.பி.க்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள்.//

    ReplyDelete
  10. வலையுலக டெண்டுல்கர்(?)....ரிட்டையர் ஆக இதுவே சரியான சநதர்ப்பம்......

    அவரும் பிழைப்பார், தமிழ் வலைப்பதிவும் பிழைக்கும்....

    இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த அவரது மகரநெடுங்குழைகாதன் அருள்புரியட்டும்....

    ReplyDelete
  11. நீலகண்டன்,
    அவர் ஒரு பழ்மைவாதி என்பதை அவர்பதிவுகளில் தெரிந்துகொள்ளலாம்.

    இதை தனி மனித தாக்குதலாக எடுக்காமல் ஒரு விமர்சனமாக எடுத்துக்கொள்வாராக.

    அருமையாக சாடியிருக்கிறீர்கள்.
    மோசமாய் மாட்டிக்கொண்டிருக்கிறார் மனிதர்.

    ReplyDelete
  12. நன்றி பங்காளி நன்றி சிறில் அலெக்ஸ். ஆம் அவர் தனிமனித தாக்குதலாக எடுத்துக்கொள்ள கூடாது என்றே நானும் விரும்புகிறேன். அவர் ஒன்றும் எல்லோரும் போட்டு தாக்குவது போல வில்லன் அல்ல. ஆனால் பிறர் வலி புரியாத அசட்டுத்தனத்தால் தன்னை வில்லனாக மாற்றியிருக்கும் ஒருவர். அவருக்கு நீண்ட ஆயுளும் அத்துடன் நல்ல அறிவும், சக பாரதீயனின் வலியை தனதாக உணரும் இருதயமும் ஏற்படும் என நம்புவோம். நம்புவதில் ஒரு சுகம் இருக்கிறது.

    ReplyDelete
  13. நீல்ஸ், சரியான சமயத்தில் சரியான பதிவு. அவர் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்ட நேரத்தில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்தவன் நான். மீண்டும் ஆரம்பித்துவிட்டார் ஜாதி ஜாதி என்று. எங்கு போய் முட்டிக் கொள்வது. நாம் ஜாதிகள் மற்றும் ஜாதிய உணர்வுகளை களைய பாடு படும் போது இவர் மீண்டும் மீண்டும் போட்டு தாக்குகிறார். கேட்டால் யோம் கிப்பூர் அது கிது என்று வியாக்கியானம் செய்வார்.

    ReplyDelete
  14. நீலகண்டன்,
    உங்களது ஆதங்கத்தையும், ஆயாசத்தையும் புரிந்து கொள்கிறேன். அதே சமயம், சில இடங்களில் வார்த்தைகள் தெறித்து விழுந்திருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது ! நிற்க !

    தங்களது 'புஷ்யமித்திரர்' குறித்த பதிவை ஏற்கனவே வாசித்து, இரவு நேரம் ஆகி விட்டபடியால், பிறகு பின்னூட்டலாம் என்று எண்ணியிருந்தேன். அப்புறம் மறந்து போய் விட்டேன். அருமையான பதிவு, நிறைய தெரிந்து கொள்ள உதவியது. மிக்க நன்றி.

    என்றென்றும் அன்புடன்
    பாலா
    ************************

    ReplyDelete
  15. //அவர் ஒரு பழ்மைவாதி என்பதை அவர்பதிவுகளில் தெரிந்துகொள்ளலாம்.//

    //மீண்டும் ஆரம்பித்துவிட்டார் ஜாதி ஜாதி என்று. எங்கு போய் முட்டிக் கொள்வது//

    சிறில் மற்றும் கால்கரி சிவாவின் இவ்வரிகளோடு உடன்படுகிறேன்.

    ReplyDelete
  16. நன்றி சிவா. என்றென்றும் அன்புடன் பாலா நன்றி. என்ன செய்வது இவரது சுய-பலவீனங்களுக்காக இந்து தருமமே வசைப்பாடப்படுகிறது. இவரோ வயதுக்கேற்ற மரியாதை இல்லாமல் நடப்பதில் சிக்ஸர் மேல் சிக்சராக அடித்து தள்ளுகிறார். சிறிதாவது மனிதருக்கு சொரணை வேண்டாமா? புஷ்யமித்திரர் பதிவு குறித்த தங்கள் கருத்துக்கு நன்றி.நன்றி தங்கவேல். மனிதர் திருந்தினால் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  17. அரவிந்தன் நீலகண்டன்,

    பலமுறை திரு. டோண்டு அவர்களுக்குப் பலர் சொல்லியாகி விட்டது. அவர் கேட்டபாடில்லை. அவருக்கு இது உற்சாகமான பொழுதுபோக்காகப் படுகிறது போல. அதனால் சொல்வதை நிறுத்திவிட்டேன் நான். இந்த வயதில் அனானியாகப் பின்னூட்டமிடுவது தேவையா? அனானியாகத் தன் கருத்துகளை நாகரீகமாக வைக்க யாருக்கும் உரிமை உண்டு. டோண்டுவுக்கும் அந்த உரிமை உண்டுதான். அவர் அனானியாக என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால், நாகரீகமற்று எழுதியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். போலி டோண்டு பல பெயர்களில் அநாகரீகமாகவும் பலரின் குடும்பத்தைச் சந்திக்கு இழுத்தும் எழுதிக் கொண்டிருந்தபோது பின்னால் சென்று மறைந்து கொண்டவர்களும், போலியை எதிர்த்து எழுதினால் எங்கே நாம் தாக்கப்பட்டுவிடுவோமோ என்று பயந்து ஒதுங்கியவர்களும், போலியுடன் எழுதப்படாத ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, தனக்கு வருகிற மெயில்களை போலிக்குப் பார்வேர்ட் செய்தவர்களும், இன்றைக்கு டோண்டுவும் போலி டோண்டுவும் ஒன்றுதான் என்று பலத்த குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை அபத்தமான ஒப்பீடு இது! இவர்களில் பலர் அனானியாகப் பல பெயர்களில் எழுதுகிறோம், இணையம் தந்த சுதந்திரம் என்று "கொலை வெறி"யுடன் அனானிகளுக்குப் படையல் போட்டு இன்றளவும் மகிழ்ந்து வருகிறவர்கள்தான். இந்த மாதிரி எத்தனைப் பதிவுகளை இந்த யோக்கிய சிகாமணிகள் போலி டோண்டுவுக்குக்கு எதிராகப் போட்டார்கள். இன்றைக்கும் அதே போலி டோண்டு கருப்பு என்ற பெயரில் திரட்டிகளில் அனுமதிக்கப்பட்டு, தனிமனித வெறுப்புகளை, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கிற குற்றத்தை உமிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

    போலி டோண்டு யார் என்று நான் உட்பட இணையத்தில் பலருக்குத் தெரியும். போலி டோண்டுவின் மீது பல நாடுகளில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. "போலிக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சியுங்கள் சார். எங்கு வேண்டுமானாலும் உங்கள் சார்பாக சாட்சி சொல்ல வருகிறேன்" என்று டோண்டு சாருக்குப் பலமுறை சொல்லி அலுத்துவிட்டது. அவர் ஆர்வம் உண்மையிலேயே போலியைப் பிடிப்பதில் இல்லை என்பது லேட்டாகப் புரிந்தது.

    இந்த ஒரிஜினல் டோண்டு அனானியாக ஏதோ நாகரீகமாக எழுதிவிட்டார் என்று இப்படித் தய்யா தய்யா என்று குதிப்பவர்களில் எத்தனை பேர் போலி டோண்டுவுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளிலும், மனுக்களிலும் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார்கள். போலி போன்ற சமூக விரோதச் சக்தியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையான செலவுகளை ஏற்க அமெரிக்காவில் வாழ்கிற நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, யாரும் கைக்காசு போட வேண்டியதில்லை. போலி டோண்டுவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினால்/வலியுறுத்தினால் போதும். இந்தப் போலி டோண்டு தமிழ் இணையத்தில் எத்தனை பேரிடம் தொடர்பு வைத்திருந்தார் என்பது உட்படத் தகவல்கள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து எழுதுகிறார் என்பது பற்றியும் நிச்சயமான தகவல்களை நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். எனவே, போலி டோண்டுவைப் பிடிக்க தமிழக/இந்தியக் காவல்துறையின் முயற்சி மட்டுமே இப்போது தேவைப்படுகிறது. மற்ற விவரங்கள் அனைத்தும் தயாராகவே உள்ளன.

    அதனால் டோண்டுவைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிற சரியான கருத்துகளோடு நின்றுவிடாமல், இந்தப் போலி டோண்டுவுக்கு மணிகட்ட அரசியல், கருத்து வேறுபாடுகளைத் தாண்டி உங்களைப் போன்ற அனைவரும் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க.வின் உயர்மட்டத்தில் உங்களுக்கு இருக்கிற செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் போலி டோண்டுமீது நடவடிக்கை எடுக்கப்படும்படி காவல்துறையை நிர்ப்பந்திக்கவைக்க உங்களால் முடியும். அதை நீங்கள் செய்ய வேண்டும். இதை நான் ஏதோ தனிப்பட்ட உதவியாகக் கேட்கவில்லை. போலியால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றாலும் அது போலியால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவு. போலியை சிறைக்குள் அனுப்புவது ஒரு சமூகக் கடமை. இதைச் செய்ய திரு. கருணாநிதி அவர்களை நாட வேண்டுமென்றாலும் நாடவும் வேண்டவும் நான் தயார். போலி டோண்டுவுக்கு மணி கட்டுவதன் மூலம், அதே மாதிரி தமிழ் இணையத்தில் அலைகிற பலருக்கான அச்சுறுத்தலாக அது அமையும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தமிழ் இணையத்தில் வெறுப்பு பரவுவதைத் தற்காலிகமாகவேனும் தடுக்க இயலும்.

    எனவே, இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரிப்பது மட்டுமல்லாமல், போலி டோண்டுவுக்கு எதிரான சட்டபூர்வ முயற்சிகளை இந்தியாவில் முடுக்கி விடவும், மேற்பார்வையிடவும் உங்களைப் போன்று அனைத்துக் கட்சிகளிலும்/கொள்கைகளிலும் இருக்கிற நண்பர்கள் முன்வர வேண்டும் என்று இப்போது வேண்டுகோள் வைக்கிறேன்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  18. அன்புள்ள சிவகுமார்,

    எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸிலோ அல்லது பாஜகவிலோ உயர்மட்டத்தில் எவ்வித செல்வாக்கும் கிடையாது. நான் ஒரு எளிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகன். மேலும் பாஜக உறுப்பினரும் அல்ல. போலி டோ ண்டு ஒரு மனநிலை கெட்ட பிராணி. நொய்டா கொலைகாரனுக்கும் அவனுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது, திருவாளர். ஒரிஜினல் டோ ண்டு புகழ் விரும்பி மேலும் சாதி அபிமானி அவ்வளவே. இவரால் ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே கெட்டபெயர் என்றால் போலியால் மனித சமுதாயத்துக்கே இழி-பெயரும் கேவலமும். இந்த கீழ்த்தரம் எனக்கும் பின்னூட்டங்கள் அனுப்பியுள்ளது. இவனை ஒழித்துக்கட்டுவது அவசியம். டோ ண்டுவின் சாதியத்தை வைத்து போலியின் அசிங்கத்துக்கு தாலாட்டு பாடநினைக்கும் முற்போக்கு அஃறிணைகள் போலியைக் காட்டிலும் கீழானவர்கள்.

    //இந்தப் போலி டோண்டுமீது நடவடிக்கை எடுக்கப்படும்படி காவல்துறையை நிர்ப்பந்திக்கவைக்க உங்களால் முடியும். அதை நீங்கள் செய்ய வேண்டும்.//
    அதிகார அமைப்புகளுடன் எனக்கு எப்போதும் பொருந்தி போனது கிடையாது. எங்க ஊரில் காவல்துறை வாசலில் படுத்துகிடக்கும் நாய் கூட என்னை மதிக்காது என்பதுதான் யதார்த்தமான நிலை.

    ReplyDelete
  19. டோண்டு சார்,

    உங்களுடைய முழு சூழ்நிலையையும் உங்களுடைய சூழலிலிருந்து பார்த்தால்தான் 'இவிங்களுக்கு' விளங்கும்.

    அதை நான் முழுதாக அறிவதுடன், என் முழு ஆதரவை நீங்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் முறைக்கு அளிக்கிறேன்.

    நடந்தது நல்லதே எனும் கீதை மொழிப்படி, இந்த சமபவம் உங்களுடன் நட்புடன் இருப்பது போல பதுங்கிப் பழகிய பல சர்ப்பங்களை கோரப்பற்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

    உள்ளத்தனையது உயர்வு என்பது போல திரா'விட' கம்யூன்'விஷ' விகாரங்களே இந்த சிறிய புஸ்வானத்தை மத்தாப்பு கொளுத்தி ஆடுகின்றன.

    மனிதற்கு முழுமுதலானாது மானம். அதை அவமானமாக்கி மலையாளபட அசிங்க நடிகர்களை விட அதிகமாக உங்களை சித்தரித்து விளையாண்ட உலக மகா கொடுமை இரவில் உறங்காமல் நீங்கள் விழித்திருந்து பட்ட துன்பம் பார்த்த நண்பர்களுக்குதான் தெரியும்.

    பதிவரை மட்டுமன்றி, பெற்ற மகளையும் போரில் துணைக்கழைத்து பெரும்பாதகம் செய்த இழிபிறவியை 'ம்' என்று கூட சொல்லாத **பிறவிகள் சில இன்று எச்சில் இலை பதிவுகளை பட்டியல் போட்டு பரப்புகின்றன.

    இரண்டு நாட்களாக சாட்டிலைட் வைத்துத் தேடியும் விகார கொமண்ட் ஒன்று கோட கிடைக்காத போதே இவர்களுக்கு வேர்த்துக் கொட்டினாலும், அடுத்தவன் சதையை மொய்ந்து தின்பதால் வரும் சுவையை விட மன்மில்லாமல், பேரை பார்த்ததும் பாய்ந்து வருகிறார்கள்.

    நீங்கள் தளரவில்லை என்பது திண்ணம்.

    உங்களால் ஊக்கம் பெற்ற பென்னெடும் இளைய பதிவர்கள் பலர் உங்களுடைய முன்மாதிரி கொள்கைகள் மற்றும் செயல்களை வியந்தே பார்க்கிறார்கள்.

    யுத்தம் என்ற கலையில் என்கிருந்து வேண்டிமானாலும் அம்பு வரும் பேராபத்தை பனி போல உருகச்செய்யும் பாடத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    மந்தையில் நிற்கும் கூட்டங்களுக்கிடையே நீங்கள் நந்தவனத் தேராக ஒளிரும் போது, அடிவருடி மாண்டூகங்களுக்கு மனசு பொருக்காதுதான். இந்த விஷயம் இல்லாவிடினும் எந்த விஷயத்தையாவது வைத்து உங்களை இழுத்து வாங்கிக் கட்டி கொண்டு போவது புதிதா என்ன?
    இதில நடப்பதும் அதுதான். இறுதியில் எஞ்சப் போவதும் நீங்கள்தான்.

    இந்த குழப்பத்தை கண்டு மனம் கலங்கி சில நீலநண்பர்களும், கால்சிவாக்களும் அர்த்தம் தேடி அடுத்தவரிடம் நல்ல பேர் வாங்க நினைப்பதும் கசப்பானதொன்றே. ஆனாலும் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமில்லை.

    ஆங்கிலம் தெரியாக அறிவிலிகளும், அரபுக்களின் அடிமைகளும் போடும் ஆணவ ஆட்டத்தை புறந்தள்ளி நிற்பதில் நாங்கள் பலர் பக்கத்தில் நிற்கிறோம்.

    மூத்த பதிவரான நான் அதிகமாக தற்போது எழுதுவதில்லை. ஆனால் இப்போது எழுதாமல் வேறு எப்போது?

    ReplyDelete
  20. அன்புள்ள அரவிந்தன்,

    தங்களின் "தன்னடக்கம் மிகுந்த" பதிலுக்கு நன்றிகள். :-) போலிடோண்டு விஷயத்தில் உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போவது மகிழ்ச்சியே. சாதியத்தால் விளைந்த பலன்களும் உள்ளன. ஆனால், ஒரிஜினல் டோண்டு அவர்கள் சாதியத்தை முன்வைக்கிற காரணங்கள் அவையாக இல்லை. அதனால் டோண்டு பற்றித் தாங்கள் சொல்வதும் உண்மையே. சரி, உங்களுக்குச் செல்வாக்கு இல்லை என்று நீங்கள் சொல்வதை நான் நம்பிவிட்டேன். :-) ஒரு தொண்டராக, போலிடோண்டுவுக்கு எதிரான சட்டபூர்வ முயற்சிகளைத் தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து செயல்பட பெயர் சொல்ல விரும்பாத பல நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும் தகவல்களுக்குத் தனிமடலில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  21. நான் இங்கே டோண்டுவை கண்டித்து பின்னூட்டமிட்டது அவர் இன்னொரு பெயரால் எழுதுவதற்காக அல்ல.

    திரும்ப திரும்ப ஜாதியை பற்றி பேசி புண்ணை தோண்டி அதிக படுத்திய குரங்காக தெரிவதால்.

    போலி டோண்டு மற்றும் விடாது கருப்புவிற்கு ஆதரவாக இருப்பவர்கள் டோண்டுவின் அனானி பின்னூட்டத்தை வைத்து அவரை துவைக்கிறார்கள். இதே சிங்கங்கள் போலியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டது இவ்வலைவுலகிற்க்கு தெரியாததல்ல.

    இந்த விஷயத்தில் நான் பிகேஎஸ் ஐ வழிமொழிகிறேன்.

    டோண்டுவை கண்டிப்பவர்கள் போலியையும் அதே வீரியத்தில் கண்டிக்க வேண்டும்

    ReplyDelete
  22. சாதி பற்றி ஆர்.எஸ்.எஸின் கருத்து என்ன சொல்ல இயலுமா?

    ReplyDelete
  23. என்னுடைய முந்தையக் கேள்வி தெரிந்துகொள்லும் ஆர்வத்தின் பொருட்டே..

    ReplyDelete
  24. Dear Sir,

    This indeed is a very good timely post. Mr.Dondu is talking as like is the sole representative of Brahmin community. We don’t know who had given him the authority to do so. Our community will not go leaving the other community people “Poda jattan”, But we know we have some social commitments towards the fellow hindus and we will try to lift them, although they like or dislike us. In fact we the younger generations of Brahmin community never had any discrimination towards other casts. But because of this old man’s babbles our community and our ladies are also getting insulted by poli and karuppu etc. This man has a hidden agenda of spoiling the name of the hindus and his communities by his provoking posts. But all I want to say is do not judge hindu’s or any community with this such people.
    Thanks
    Mahesh.

    ReplyDelete
  25. சிறில் அலெக்ஸ்,
    ஆர்.எஸ்.எஸ் சாதீயத்தையும் சாதிகளையும் பிறப்படிப்பிலான வர்ண அமைப்பையும் எதிர்க்கிறது. அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டுமென பாடுபடுகிறது. ஆர்,எஸ்.எஸ் பிராம்மணீய அமைப்பு என்பதில் சிறிதும் உண்மை கிடையாது. இது குறித்துவிரிவாக பின்னர் எழுதுகிறேன்.

    அரவிந்தன் நீலகண்டன்

    ReplyDelete
  26. //இந்த விஷயத்தில் நான் பிகேஎஸ் ஐ வழிமொழிகிறேன். டோண்டுவை கண்டிப்பவர்கள் போலியையும் அதே வீரியத்தில் கண்டிக்க வேண்டும் //

    போலி ஒரு பிறவி வக்கிரம். அவனுக்கு தேவை சிறைவாசமும் மருத்துவ உதவியும். டோ ண்டு ஒரு மூத்த வலைப்பதிவர். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. எனவேதான் நான் டோ ண்டு அவர்களை கடுமையாக எதிர்த்தேன். ஆனால் போலி உள்ளே தள்ளப்பட வேண்டும் என்பதிலும் அவனுக்கு தலையாட்டி அமைதி காத்து (அந்தக்கால கட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் வலைப்பதிவுலகில் இயங்கவில்லை. எனக்கு அந்த கீழ்த்தரத்திடமிருந்து டோ ண்டுவின் ப்ளாக்கில் பின்னூட்டம் இட்டதும் ஒரு பதிவு வந்தது. 'உன்னுடைய தாயாரை.....சகோதரியை.....மனைவியை.......' என்று. நேற்றுதான் இந்த கீழ்த்தர அசிங்கத்தின் முழு வீச்சையும் இருந்து பார்த்தேன். இந்த மாதிரி ,மிரட்டல்கள் வந்த பிறகும் இந்த கூட்டத்துடன் ஏன் டோ ண்டு உறவு வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த கும்பலில் செந்தழல் ரவி போன்ற ஒரு சிலர் மீது இருந்த மரியாதைகூட எனக்கு போய்விட்டது. எப்படிப்பட்ட வக்கிரத்துக்கு வக்காலத்து வாங்கி துணை போயிருக்கிறார்கள்!) இவர்களெல்லாம் ஒருவேளை உள்ளூற ரசித்துக்கொண்டும் இருந்திருக்கலாம். டோ ண்டு சீரியஸாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவரை அவர் அந்தணராக பிறந்த ஒரே காரணத்துக்காக திட்டுபவர்கள் சிறிதே சிந்திக்கவேண்டும். போலியின் எழுத்தில் இருக்கும் தலித்களை இழிவுபடுத்தும் போக்கு டோ ண்டுவின் சாதியத்தை விட ஆயிரம் மடங்கு மேலானது. அதனை இரகசியமாக இரசித்துக்கொண்டு டோ ண்டுவை திட்டும் கும்பலை விட கீழ்த்தரமாக எதுவுமே இருக்க முடியாது.
    எனவே நானும் சிவகுமார் அவர்கள் கூறியதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  27. பார்ப்பான் நான் எனப் பகல்வதால் பற்றி எரியப்போவதென்ன? ஒன்றுமில்லை. கொங்கணனுக்காவது கொக்கிருந்தது.

    http://aiyan-kali.blogspot.com/2007_02_01_archive.html

    "என் சாதி இதுவென இயம்புவதை எதிர்க்கிறார். அன்பற்று அழிக்கவும் துடிக்கிறார். இவர் முன் இறுமாந்திருப்பதற்கு இரும்பு இதயம் வேண்டும்" என்பீராயின் அது வெறும் பம்மாத்து என்பதை யாம் பகலவும் வேண்டுமோ? ஐயங்கார் என்று எடுத்தும்பியவது ஏளனத்திற்குரியதுதான் எல்லோர்தம் பார்வையிலும். முதியவரின் மீசைமுடியை முற்றிபோன கனவுக் கயிறுகளால் முறுக்கப்பெறும் முயற்சி என்பதுதான் தங்களை எள்ளாதவரின் எண்ணம். அற்றை இரவு அருந்திய கூழ் பட்டு மீசையை முறுக்கிய கதையை நீங்கள் சொல்லலாம். கூழ் குடித்த பெருமை உங்களுக்கு. குறை காணும் வாய்ப்பு மற்றோருக்கு.

    தன் சாதி இதுவென்று கூறி தன் பலம் காட்டும் தரணியில் எம் சாதி இதுவென்பதில் நேர்வழி ஏற்றம் எதேனும் உண்டா?

    ReplyDelete
  28. Aravindan,

    //ஆர்.எஸ்.எஸ் சாதீயத்தையும் சாதிகளையும் பிறப்படிப்பிலான வர்ண அமைப்பையும் எதிர்க்கிறது. அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டுமென பாடுபடுகிறது//.


    Your leader Mr.Sudarshan seems to have different opinion on this ,pls have a read..

    http://www.hindu.com/2006/09/19/stories/2006091904801100.htm

    Excerpts:

    Defending the caste system, Mr. Sudarshan said it prevented the disintegration of society during the Mughal and British periods.

    ReplyDelete
  29. அரவிந்தன், செமத்தியான பதிவு. இந்து உணர்வு சிறிதும் இன்றி சாதி உணர்வைத் தூக்கிப் பிடிக்கும் அதர்மவான்களுக்கு சாட்டையடி.

    கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறேன். இவ்வளவு பின்னூட்டங்கள் டோண்டுவின் இந்த நிலைப் பாட்டைக் கண்டித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அவர் எந்த சீரியசான விஷயத்தையும் பற்றி எழுதப் புகாமல் ஜாலி, ஜோக், டைம்பாள், போண்டா, பஜ்ஜி என்று எழுதுவது தான் நாட்டுக்கும், அவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

    // உமக்கு எத்தனை மனமொத்து வாழும் 'கலப்பு'(அதாவது உமது பார்வையில் கலப்பு...) திருமண தம்பதிகளை காட்ட வேண்டும்? அதுவும் சங்க குடும்பங்களிலேயே காட்டமுடியும். எனது இல்லத்திலிருந்தே வேணுமென்றாலும் ஆரம்பிக்கலாம். //

    இந்துத்துவ சிந்தனையில் ஊறிய எனது இல்லத்திலும் இருக்கிறது சமீபத்திய உதாரணம் (டோண்டு ஸ்டையில் "சமீபத்திய" அல்ல, இரண்டு வருடம் முந்தி நடந்தது).

    குறவள்ளி மணவாளன் அருளால்
    குறையொன்றுமில்லாமல்
    குன்றாது வளர்க
    கலப்பு மணங்கள் !

    ReplyDelete
  30. நீலகண்டன் அய்யா,

    டோண்டு அய்யா ஒரு சாதி வெறியர் என்று பட்டம் கட்டுவது தவறு.நான் புரிந்துகொண்ட வரை அவர் சக மனிதர் அனைவரையும் நேசிக்கும் பண்பாளர்.லக்கி போன்ற அரைடிக்கட்டுகளையும் குழந்தை என்று சொன்னவர் இவர்.
    மேலும்,டோண்டுவை கீழ்த்தரமாக போட்டுத் தாக்கும் கும்பலைப் பாருங்கள்.விடாது கருப்பு,மிதக்கும் வெளி போன்ற வெறி பிடித்து அலையும் பொரிக்கி கும்பல்,மற்றும் சாதி வெறி பிடித்து அலையும் பாலபாரதி,செந்தழல் ரவி,குழலி,லக்கி,செல்லா,போன்றவர்கள்.இவர்கள் தங்களை தாங்களே பெரிய மேதாவி போல் பாவித்து அகம்பாவம் பிடித்து அலைபவர்கள்.இவர்களுக்கு டோண்டு அய்யாவை விமர்சிக்கும் தகுதி உண்டா?

    பாலா

    ReplyDelete
  31. //சிறில் அலெக்ஸ்,
    ஆர்.எஸ்.எஸ் சாதீயத்தையும் சாதிகளையும் பிறப்படிப்பிலான வர்ண அமைப்பையும் எதிர்க்கிறது. அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டுமென பாடுபடுகிறது. ஆர்,எஸ்.எஸ் பிராம்மணீய அமைப்பு என்பதில் சிறிதும் உண்மை கிடையாது. இது குறித்துவிரிவாக பின்னர் எழுதுகிறேன்.
    //

    கட்டாயம் எழுதுங்க. நன்றி.

    ReplyDelete
  32. டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:

    http://aiyan-kali.blogspot.com/

    ReplyDelete
  33. //இந்த விஷயத்தில் நான் பிகேஎஸ் ஐ வழிமொழிகிறேன். டோண்டுவை கண்டிப்பவர்கள் போலியையும் அதே வீரியத்தில் கண்டிக்க வேண்டும் //


    இந்த விஷயத்தில் எனக்கும் மாற்றுக் கருத்து ஏதும் கிடையாது!

    ReplyDelete
  34. சாமி !!
    டோண்டுப் பயலை மன்னிச்சிடுங்க சாமி. நம்ம குலதெய்வம்
    அரிவாள் முனுசாமி தான் டோண்டுப் பயலுக்கு நல்ல கொடுக்கனும்.

    ReplyDelete
  35. சாமி !!
    டோண்டுப் பயலை மன்னிச்சிடுங்க சாமி. நம்ம குலதெய்வம்
    அரிவாள் முனுசாமி தான் டோண்டுப் பயலுக்கு நல்ல கொடுக்கனும்.

    ReplyDelete
  36. ஜாதி விசயத்தில் டோண்டுவின் மீது எனக்கு கோபம்தான் , ஆனால் அதுதான் சாக்கென்று போலிக்கருப்பனை எப்படி விடுவது ? பிகேயெஸ் கருத்துக்கள் மிகசரியானவை ,

    லக்கியை விடுங்கள் , அது ஓட்டு பொறுக்கி கும்பல் ,

    ஆனால் இந்த செந்தழல் ரவி , ஓசை செல்லா இவர்கள் கிறுத்துவ மதம் பிடித்து திரிகிறார்கள் , அவர்களுக்கு முற்போக்கு பட்டம் வேறு . சீ தூ ( இது இந்த திராவிடனின் மொழி )


    அப்படி என்னய்யா டோண்டு செய்துவிட்டார் ? உங்க அம்மாவை விபச்சாரத்திற்க்கு அனுப்பச்சொல்லி மெய்ல் அனுப்பினாரா , அல்லது மிக மோசமாக உள்ளம் காயப்படுமளவிற்க்கு கெட்ட வார்த்தைகளால் எழுதினாரா எழுதினாரா ?

    திமுக பூத் ஏஜண்ட் சொல்கிறார் வாத்தைகளில் அல்லவாம் வன்முறை , கருத்தில்தானாம் , நான் அனுப்பட்டுமா ஒரு மெய்ல் கருத்து வன்முறை இல்லாத வார்த்தை வன்முறை மெய்ல் ? (நானும் திராவிடந்தானே , எனக்கு வராதா அந்த மொழி?)



    இதையெல்லாம் செய்தவன் என்பெயருள்ளவன் , ( நான் சொந்த பெயரில் வந்தபோது மோசமாக பேசியதால் இப்போது இப்பெயர் , இந்த பெயரை அவன் கேவல படுத்தட்டுமே )

    அந்த மோசமான மனிதன் நிச்சயம் கருப்பு மனிதன் , என் பெயருள்ளவன் , யாருக்கு வேண்டும் ஆதாரம் ? நான் தருகிறேன் அவனை ஆதரிக்கும் நாய்களே .

    கரு.மூர்த்தி

    ReplyDelete
  37. ஆதாரத்தை வெளியே காட்டாமல் ஒரு தனிமனிதரின் மேல் பழியா?
    அவர் அப்பாவியாக இருந்தால்.
    உங்கள் ஆதாரத்தை வெளியிட தயாரா? எங்களிடம் சொல்ல வேண்டாம்.

    உங்கள் ஆதாரத்தை மதி, பத்ரி ,காசி,குழலி,ஜோசப் சார் போன்ற நடுநிலையாளர்களிடம் காட்டாலாமே. ஆதாரம் இருக்குதுன்னா வெளியே காட்டலாமே. அது என்ன பேங்க் லாக்கர்லதான் இருக்கனுமா?

    ReplyDelete
  38. ஆதாரம் உண்மையாக இருந்தால் கருப்பு மனிதன் , அவனை ஆதரிக்கும் நாய்கள் எல்லாம் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுமா?

    ReplyDelete
  39. வாழைச்சேனை சந்திவெளி பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லைய்யா குருக்கள் என்று அழைக்கப்படும் பரமேஸ்வரசர்மா அவர்களின் வீட்டிற்கு கடந்த இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சந்திவெளி அரசினர் பாடசாலைக்கு அருகில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குருக்கள் ஜயா அவர்கள் வாகரையில் இருந்து வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவி வந்தவர் என்றும், பல காலங்களாக கருணா ஒட்டுக்குழுவினதும், சிங்களப் புலனாய்வுத்துறையினதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இவர், சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாகரைக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றபோது, அவரை வரவேற்க எனும் போர்வையில் வாழைச்சேனையிலிருந்து ஆயுத முனையில் அழைத்து வரப்பட்ட மக்களுள் அடங்கியிருந்தார். சிங்களப் படையினரால் ஆயுத முனையில் சிறீலங்காவின் ஜனாதிபதியை ஆசீர்வதிக்கவும் பணிக்கப்பட்டிருந்தார்.

    நடந்த இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த பரமேஸ்வரசர்மா அவர்கள், இச்சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க முனைந்த வேளையிலேயே, சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் உத்தரவுக்கமைய ஒட்டுக்குழு கருணா கும்பலினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் நெருப்புக்கு நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தார்கள்.

    கடந்த யுத்தநிறுத்த காலத்தில் பல கல்விமான்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல தமிழ் மக்கள்இ சிறிலங்காப் புலனாய்வாளர்களின் ஏவலில் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் படுகொலை செய்யப்படுவதும், கடத்தப்பட்டுக் காணாமல் போவதும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த வண்ணம் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    Web : neruppu.org
    Thursday, 08 Feb 2007

    ReplyDelete
  40. டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
    கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
    அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
    ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
    ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
    அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

    ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

    டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

    மனித‌ன்.

    ReplyDelete
  41. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பதென்றால், திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு, வலைபதிவர்கள் சார்பாக, "வீரபாகு" என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்பதை பகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாரே அதனால தான் இந்த பேரு

    :))))

    ReplyDelete
  42. //
    டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.
    //

    ஐயா யாரும் அவர் மேல் கல்லெறியவில்லை.

    அரவிந்தன் சொல்வதெல்லாம், "கலப்பு மணம்" அதன் பிரச்சனைகளை சொல்லும் டோண்டு ஐயா, அதை ஒரு இருகிய சமூகச் சாதிக் கட்டமைப்பை தளர்த்தும் யுக்தியாகவும் பார்க்கவேண்டும், மேலும் அதனை ஒரு நல்ல செயல் என்றும் வலியுருத்தவேண்டும் என்பதே. அவர் சொல்லும் பிரச்சனைகளை இல்லை என்று சொல்லி அவர் மேல் கல்லெறிய அல்ல.

    மிக முக்கியமான இன்னொன்றும் உள்ளது அதாவது, டோண்டு அவர்கள் கூறிவது அவருடைய தனிப்பட்ட கருத்து, "இந்து மத" அல்லது இந்து சமூகக் கண்ணோட்டம் அல்ல என்பதே.

    ReplyDelete