இன்று காலையில் விஷுக்கனி காணுதல்.
காலையில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடியில் கண் விழிப்போம்.
இந்த பண்பாட்டு பழக்கத்தின் வேர்கள் எத்தனை ஆழமானவை...எத்தனை பொருள் பொதிந்தவை.
அய்யா வைகுண்டரும் அருள் ஜோதி வள்ளலாரும் இந்த வழிபாட்டு முறையை நம்மிடையே மீண்டும் பிரபலப்படுத்தியுள்ளார்கள்.
கடோ பநிஷத் கண்ணாடியில் பிம்பத்தைப் போல தேகத்தில் பிரம்மனைக் காணலாம் என்று முறையிடுகிறது (கடோ பநிஷதம் 6:5) சுவேதாச்வரத
உபநிடதம் இதனை "பளபளப்பான கண்ணாடி அதன் மேற்படிந்த மாசு நீங்கிவிட்டால் பிரகாசிப்பது போல தேகமெடுத்த ஆத்மா பிரம்மனைக் கண்டு
கொண்டால் சோகம் நீங்கி பிறவிப்பலனை எய்துகிறது." என கூறுகிறது (2:14) வாழையடி வாழையென வந்த ஞானியர் பெற்ற இந்த இறையனுபவத்தை நாம் வருட பிறப்பினில் இச்சடங்கின் மூலம் நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.
பாரதப்பண்பாட்டின் காலசுழற்சி தத்துவங்களின் அடிப்படையில் தமிழ் வருடங்கள் அறுபதாகும். நாரதர் ஒரு முறை உலக வாழ்க்கை வேண்டுமென விரும்பினார். ஒரு துணைவியை நாடினார். ஆனால் ஊர் சுற்றுகிற பிரம்மச்சாரிக்கு யார் பெண் கொடுப்பார்கள்? எனவே பெண் கிடைக்கவில்லை. ஆகவே இறுதியாக கிருஷ்ணனிடமே சென்று தனது கோரிக்கையை வைத்தார். கிருஷ்ணரும் நாரதரிடம் சரி எந்த வீட்டில் ஆண் துணை இல்லாத பெண் இருக்கிறாளோ அவளை நீ திருமணம் செய்து கொள் என்றார். நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணரே கணவனாக இருக்கக் கண்டார். உடல் சோர்ந்த நாரதர் கங்கையில் குளிக்க இறங்கினார். இறங்கி முழுகி மேலே வருகையில் அவரே ஒரு பெண்ணாக மாறியிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு பிரம்மச்சாரி இந்த நாரதப்பெண்ணை கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து அறுபது குழந்தைகள் பிறந்தன. தாங்க முடியாத நாரதப் பெண் தன்னை இந்த சம்சார சாகரத்திலிருந்து காப்பாற்ற விஷ்ணுவை வேண்ட அப்போது அந்த மாயை மறைந்து அங்கே கிருஷ்ணரே நின்றார். இந்த அறுபது குழந்தைகளும் அறுபது ஆண்டுகளாக மாறின. மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைì காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது. காலம் என்பது நமது பிரக்ஞையிலிருந்து தோன்றுகிறது. அது சுழல் தன்மை கொண்டது என்பதெல்லாம் நவீன பிரபஞ்சவியலாளர்களும் உளவியலாளர்களும் கூட விவாதிக்கும் விஷயமாகும். அத்துடன் இறை மட்டுமே பரமபுருஷன் அவன் முன் அனைத்து ஜீவன்களும் பெண்களே எனும் தத்துவம் உலகம் முழுவதும் இருப்பினும் பாரதத்தில் மட்டுமே அது ஒரு அழகிய ஆன்மிக பண்பாட்டு மரபாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் உலக மாயையில் மயங்கித் தூங்கும் ஜீவன்களை பெண்களாக உருவகித்து துயிலெழுப்புவதும், ஒரு பெண் என்பதற்காக மீராவை சந்திக்க மறுத்த ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரியான வைணவ யோகியிடம் மீரா கிருஷ்ணனின் முன் அனைவரும் பெண்களே என கூறி அந்த யோகிக்கு ஞானம் வழங்கிய கதையும் நம் மரபுகள். அந்த பக்தி மரபையும் ஆழமான உளவியல்-பிரபஞ்சவியல் தத்துவங்களையும் இணைக்கும் இந்த தொன்மத்திலிருந்தே நம் அறுபது ஆண்டு காலச்சுழலின் ஆண்டுகளின் பெயர்கள் பெறப்படுவதாக ஒரு வழக்கு சொல்லப்படுகிறது. எனவே ஆழ்ந்த ஆன்மிக உண்மைகளை நாம் உணர்ந்து அவற்றினை நம் சமுதாய வாழ்விலும் நடைமுறை படுத்த இந்த ஆண்டு நமக்கு இறையருள் துணை நிற்கட்டும். அத்துடன் நம் சமுதாயத்தை பீடித்துள்ள நோய்களான சாதியம், ஓட்டு வங்கி அரசியல், பிரிவினை வாதம், ஆபிரகாமிய அடிப்படைவாதம் ஆகியவை அழிந்தொழியட்டும்.
கலக்கிட்டீங்க!
ReplyDeleteKeep up the good work.
Thanks,
Sreeni
அரவிந்தன் ஐயா,
ReplyDeleteதனி அறையில் நான் அலுவலகத்தில் இருந்தாலும், தங்கள் பதிவைப்பார்த்து நான் சிரித்த வேகம் பார்த்து என் சக பணியாளர்கள் ஓடி வந்து விசாரித்தார்கள். உங்கள் படங்களும் கைப்புள்ளையின் ஜவடாலும் ஒரே காமெடி போங்க! ஆனால், இந்த கோயிலில் கும்மும் நம் தமிழ் இந்து சமுதாயத்தில் பலர் இந்த இழிபிறவிக்கு ஓட்டு போட சளைக்காதவர்கள். இதுதான் இந்துக்களின் இன்றைய சர்வதாரி (எதையும் தாங்கும்) நிலை!
நன்றி
ஜயராமன்
// மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைì காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது. //
ReplyDeleteஅருமையான விளக்கம் அ.நீ... புத்தாண்டு வாழ்த்துக்கள்.