Wednesday, March 31, 2010

மன்னிப்பு கேட்க சொன்னேனா? அட ராகவா!

அய்யா டோண்டு,

ரொம்ப நல்ல காரியம் பண்ணினீர். என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள். மார்க் ஆண்டனி சீசரை புதைக்க புகழ அல்ல என்று உரையாற்றிய போது கேட்ட மக்களெல்லாம் உம்மைப் போல இல்லை. சரித்திரம் மாறியிருக்கும். குறைந்த பட்சம் சேக்குசுப்பையரின் நாடகமாவது ஊத்தியிருக்கும். நான் மன்னிப்பு கேட்க சொன்னேனாம்....அட ராமா! எதுவானால் என்ன வெண் தாடியில் மண் ஒட்டாமல் விழுந்தெழுந்து face value வில் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வீராப்பாக நிற்கும் ஈகோ குறித்து சந்தோஷம்.

சரி இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். நேற்று உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் போட்ட உடனேயே எனக்கு ஒரு ஈமெயில் "if you want dondu's favour" என திட்டி. முன்பெல்லாம் போலிதான் இப்படி உங்கள் ப்ளாக்கில் கமெண்டிட்ட உடன் திட்டி அனுப்புவான். இதோ மனநலமற்ற போலிக்கு ஒரு வாரிசு வலையுலகத்தில் வந்துவிட்டது. அய்யா டோ ண்டு இதுவரை நீர் எனக்கு என்ன "favour" எல்லாம் செய்திருக்கிறீர்...உம்மிடம் நான் என்ன "favour" எல்லாம் யாசித்திருக்கிறேன்...என்னுடைய ஸ்விஸ் பாங்க் அக்கவுண்டை ஆபரேட் செய்ய உங்களுடைய "favour" எனக்கு எப்படி உதவுகிறது என்பதையெல்லாம் தயவு செய்து விளக்குகிறீர்களா? (இழவு! ஜோக் அடிக்கவும் பயமாயிருக்கிறது சீரியஸாக எடுத்துக்கொண்டு விளக்கினாலும் விளக்குவீர் பிறகு எவனாவது அவன் கிறுக்குகிற நிர்வாண வக்கிரத்தையெல்லாம் ப்ரேம் போட்டு எனக்கு அனுப்புகிறேன் எனக்கு யூரோவில் பணமனுப்பு என்று கேட்டாலும் கேட்டு வைப்பான்! போணியாகமால் கிறுக்குகிற கிறுக்கன்கள் சென்னை வெயிலில் நிறையவே திரியுறான்கள்.)

இது டோண்டுவுக்கு அல்ல. எதுவானாலும் அவ்வாறு நான் டோண்டுவிடம் "favour" யாசிப்பதாக எனக்கு மெயில் அனுப்பிய ஜென்மத்துக்கு சொல்லுகிறேன். எனக்கு டோண்டு நெட்டையா கட்டையா குண்டா ஒல்லியா என்பது கூட தெரியாது. அவரை சந்திக்கவோ பேசவோ எனக்கு ஆசையுமில்லை ஆர்வமும் இல்லை. எனக்கு அவருடைய பல நிலைபாடுகளில் உடன்பாடும் இல்லை.அவரால் எனக்கோ அல்லது என்னால் அவருக்கோ ஆகப் போவதும் எதுவுமில்லை. இப்படி "favour"களால்தான் வலையுலக நிலைபாடுகள் நிகழ்கின்றன என அற்பத்தனமாக நீ நினைத்தாய் என்றால் நல்ல மனநல நிபுணரை -someone with some sense of professional ethics and basic human decency- நீ நாடுவதே நலம்.

அரவிந்தன் நீலகண்டன்

No comments:

Post a Comment