திருவின் 'நேர்மை'
உதாரணமாக திருவின் திருகு வேலைகளை முழுமையாக காட்ட இதோ அவர் எனது பதிவில் எழுப்பிய குற்றம் சாட்டும் கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதிலையும் அளித்துள்ளேன்.
திருவின் திருகுவேலை:
உங்களது இந்த பதிவில் (வழக்கம் போல) அய்யாவை இந்து மதத்தில் அடையாளப்படுத்த முனைந்திருக்கிறீர்கள்.
//காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.//
அய்யா இந்து மதத்தின் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்தவர். மக்களை அய்யாவழி என்னும் புது மதத்தில் வழிநடத்தி விடுதலையும், தன்மானமும் பெற்றுத்தந்தவர். இந்துத்துவ கொள்கையும் அய்யாவின் கொள்கையும் ஒன்றுக்கொன்று எதிரானவை.
//ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் இந்து மதத்தவர் அல்லவாம். ஆனால் இதே திரு இன்னொரு இடத்தில் கூறுகிறார் மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி இந்துத்வ படுத்துகிறார்களாம்.//
அய்யாவழி தனிமதம் என்பதை அறிய (அறியாமல் இருப்பின்) இந்த சுட்டிகளை படிக்கவும்: http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_21.html
இந்துமதம் ஒன்று தான் என நிறுவும் முயற்சியில் சங்கப்பரிவாரங்கள் பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும் இந்துமதம் என்ற போர்வையில் விழுங்குவதை கண்டிக்கிறேன். ஒவ்வொரு வழிப்பாட்டுமுறைகளும் அதன் அடையாளங்களோடு அந்த மக்களின் முறையாக தொடர்வது அவசியம். பன்றிக்கறி படையல் வைத்து வழிபடுவதை அழித்து அவர்களை ஆரிய இந்துமத்தில் இழுக்கும் ஆதிக்கவெறி கண்டிக்கப்படவேண்டியது.
//என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:
'ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்
கொட்டு மேளம் குரவைத்தொனி ஈசனுக்கு வேண்டாம்
அன்பு மனமுடன் அனுதினமும் பூசை செய் 'என்று//
அய்யா பூசை, காணிக்கை, பூசாரி, தேர், சிலைகள், பேய்வழிபாடு, சாதியை உருவாக்கியவர்கள் என எல்லாவற்றையுமே எதிர்த்தார். பார்ப்பனீய இந்து மதத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டு அய்யாவழி என தனிமதத்தை தோற்றுவித்தார்.
இது பற்றிய இன்னொரு சுட்டி இங்கே http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_23.html
இந்த தனிமதத்தை இந்துமதம் என்று சொல்லும் உங்கள் போக்கு ஆதிக்க இந்துமதத்தில் அய்யாவழியை விழுங்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். இது அய்யாவின் கொள்கைகளுக்கே எதிரான செயல். அய்யா பார்ப்பனீய சாதி அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுத்தவர். நீங்கள் அய்யாவின் பக்கமா? பார்ப்பனீயத்தின் பக்கமா?
எனது பதில்:
திரு, உங்கள் திருகல் வேலைகள் சமயத்தில் நகைசுவையாகவும் இருக்கின்றன. ஐயா வழியை வாழ்க்கை பாதையாகவே உணர முடிந்த எனக்கு கேவலம் இணையசுட்டிகள் தேவையில்லை. அதுவும் உங்கள் சுட்டிகளே ஆதாரமாக! முதலில் இந்த மார்சேலை சமாச்சாரத்தை பார்ப்போம். 18 சாதி என்கிறீர்களே அதில் நாயர் வரவில்லை என்கிறீர்களே அங்கிருந்தே உங்கள் அறிவு தெரிய ஆரம்பித்துவிடுகிறது. அகிலம் 18 சாதிகளில் துளுபட்டரையும் சூத்திரரையும் குறிப்பிப்பிடுவதைக் காணலாம். திருவிதாங்கூரில் சூத்திரர் என்பது ஆதிக்க சாதியாக இருந்த நாயரை குறிக்கும். துளு பட்டர் என்பது திருவிதாங்கூரில் மோசமாக நடத்தப்பட்ட அந்தண சாதி பிரிவு. மேலும் நீங்களும் உங்களைப் போன்றோரும் கருதுவது போல நாடார்கள் அனைவரும் உழைக்கும் கீழ்சாதியாகவும் இருக்கவில்லை. வெள்ளாளர் அனைவரும் நிலசுவான்தாரராகவும் இருந்திடவில்லை. 'மேல் சாதி' பெண்களும் அந்த காலகட்டத்தில் மேலாடை உடுக்காமல்தான் இருந்தனர். ஐயா தோள்சீலை போராட்டத்தை ஆசிர்வதித்தார். ஆனால் மிசிநரிகள் அதனை பயன்படுத்தினர். ஐயா சாதியத்தை எதிர்த்தார் நீசன் என அவர் கூறுவது இந்துமதக் கடவுளை என சொல்வது நல்ல ஜோக். சாதிய அடக்குமுறையை -குறிப்பாக வெள்ளையன் கைப்பாவையாக அதனை பயன்படுத்திய திருவிதாங்கூர் அரசனை- அவர் நீசன் என்கிறார்.
நாடுங் குறோணி நாத வழியாய்ப் பிறந்த
மூடமடைந்த முழு நீச மாபாவி
இருந்த வூர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்த படையோடு வந்தான் என்றெல்லாம் சொல்வதிலிருந்தும் அகிலம் முழுவதிலும் இருக்கும் அனைத்து பாடல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
போனவாரம் பாஜக தலைவர் திரு. ராஜ்நாத்சிங் அவர்கள் வந்திருந்த போதும் கூட அவருக்கு ஐயாவழி தலைமைப்பதியில் வாத்திய வரவேற்பு வழங்கப்பட்டது. ஐயாவழி மக்களே மண்டைக்காடு கலவரத்தின் போது எத்தனையோ இடங்களில் கிறிஸ்தவ வெறியர்களால் பாதிக்கப்பட்டனர். 2005 இல் கூட கன்னியாகுமரி அருகே கடற்கரை யோர துவாரகா பதி கிறிஸ்தவ வெறியர்களால் தாக்கப்பட்டு ஒரு கலவரத்தை தூண்டும் கட்டத்தை அடைந்து பிறகு காவல்துறை இடையீட்டால் தணிந்தது. சரி தலைமைப்பதியான சாமிதோப்பு பதி கர்ப்பகிருகத்தை போயாவது நீர் பார்த்திருந்தால், கருவறைக்கதவிலேயே மகாவிஷ்ணுவின் தசாவதார சிற்பங்களை நீர் காண முடியும். சுவாமி கொடிமர உச்சியில் கருடாழ்வார் அமைந்திருப்பதைக் காணலாம். துவாபர யுகத்தின் பஞ்சபாண்டவரே கலியுகத்தில் ஐயாவின் சீடர்களாக பிறந்தார்கள் என்கிறது அகிலம். மேலும் ஐயாவின் தெய்வீக திருமணத்தை அகிலம் விவரிப்பதை நோக்கலாம்:
"மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற" என்பது அகிலம். 1841 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை ஐயா தன் அரிகோபாலன் சீடருக்கு அகிலத்திரட்டை எழுதப்பணித்தருளினார். அது முதல் அதனை 17 பகுதிகளாக பிரித்து நாளைக்கு ஒன்றாக ஏடு வாசிப்புத்திருவிழாவில் வாசிப்பர். அதன் முதல் நாள் சூரபத்துமனை அழிக்கும் நிகழ்ச்சியும், அதற்கு அடுத்த நாள் கம்சனை அழிக்கும் நிகழ்ச்சியும் அதன் தொடர்ச்சியாக ஐயா கலிநீசனை எதிர்த்த நிகழ்வுகளும் பாரதத் தேசிய தருமமும் விவரிக்கப்படும். ஆக, திரு சொன்னதற்கு நேர் மாறான ஒரு பார்வையை ஐயா நமக்கு அருளுகிறார். சாதீய பாகுபாடுகள் இந்து தருமத்தின் பரம்பொருளுக்கு எதிரான அசுரசக்தியாகவே அவர் காண்கிறார். ஐயா சாதியற்ற தரும சமுதாயத்தை உருவாக்கி அன்புக்கொடியாம் காவிக்கொடியின் கீழ், தேசம் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டுமென விரும்பியவர்.
வாரி மூன்று கோதி வளைந்திருக்கும் ஓர் தீவை
சாதியொரு நிரப்பாய் ஆள்வாய் என் மகனே
சரி அது யாரால் செய்யப்பட வேணும்? அதற்கு அனுமானைப் போன்ற தந்நலமற்று இராமசேவையாக ராஷ்டிர சேவை செய்யும் தொண்டர் படை உருவாகும் என்று முன்னுரைக்கிறார் ஐயா:
நாட்டிலொரு அனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் என்றுரைப்பேன் கோமகனே உன்காலம்.
சங்கத்தின் கோட்பாடுகள் அனைத்துமே ஐயா வைகுண்டர் கூறியவைதாம். சாதியமற்ற சமுதாயம், மதமாற்றிகளால் பாழ்படுத்தப்படாத சமுதாயம், எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அந்த வேற்றுமைகளிலும் ஒற்றுமை கண்டு ஒரே மக்கள், குமரி முதல் இமயம் வரை ஒரே தேசம் எனும் தேச ஒற்றுமை. ஐயா அளித்த புனித காவிக்கொடியே இன்று எங்கெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் உத்தம சின்னமாக திகழ்கிறது. எனவே ஒவ்வொரு முறை காவிக்கொடியின் முன் ஸ்வயம் சேவகனாக சிரம் தாழ்க்கும் போதும் ஐயாவின் ஆணையை தேசம் முழுவதும் செயல்படுத்துகிறோம் என்பதனை ஐயாவின் உண்மை பக்தர்கள் அறிவார்கள்.
ஐயா வைகுண்டர் குறித்த உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். அல்லது இந்த சுட்டிக்கு செல்லவும் http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_116947475031872823.html
அய்யன் காளிக்கு ஒரு நாயர் -கோவிந்த பிள்ளை- நிலம் கொடுக்கிறார். ஊர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல். 'திரு'வின் முற்போக்கு ஏப்பத்தில் மூழ்கடிக்கப்பட்ட தகவல்களில் இதுவும் ஒன்று. எனவே அய்யன் காளியின் வாழ்க்கையினை முழுமையாக பார்ப்பதும் எடுத்து முன்வைப்பதும் அவசியமாகிறது. அய்யன் காளியை இன்றைக்குத்தான் முற்போக்குகள் நினைவு கொள்கின்றனர். ஆனால் நான் சிறுவனாக இருந்த காலம் தொட்டே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அய்யன் காளி அறியப்பட்டிருந்தார். முக்கியமான இந்து சமுதாய போராளித்தலைவர்களில் ஒருவரான அய்யன் காளி கேரள-கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் போற்றுதலுக்கு உள்ளாகிய மகான் ஆவார். மட்டுமல்ல மதச்சார்பற்ற பாடநூல்களின் போலி மதச்சார்பின்மை எனும் நவீன மனுவாதத்தால் மறைக்கப்பட்டவரும் ஆவார்.
1863 ஆகஸ்ட் 23 அன்று பிறந்த அய்யன் காளி சிறுவயது முதலே இந்து தருமத்தின் கோட்பாடுகளில் தோய்ந்தவர் ஆவார். அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை நிலங்களை சீர் படுத்தியதற்காக அய்யன் காளிக்கு ஒரு சிறிய நிலம் வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒருநாள் அய்யன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து அய்யன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட அய்யன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் அய்யன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களிலை ஆய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப்பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிசந்திர நாடகம், வள்ளி-சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அய்யன் காளி.
இந்நிலையில் தான் பாலராமபுரத்தில் புத்தன் சந்தைதெருவில் செல்லும் உரிமைக்காக அவர் போராட்டத்தில் இறங்கினார். சாலியர் வீதியில் தடை மீறிய தாழ்த்தப்பட்ட மக்களை மேல்சாதி வெறி நாய்கள் தாக்கின. முதன்முறையாக அய்யன்காளி தலைமையில் அணிவகுத்த தாழ்த்தப்பட்ட மக்கள் சரியான பதிலடி கொடுத்தனர். இந்த விடுதலைப் போராட்டம் விரைவில் சுற்றுவட்டார ஊர்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்தது. கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுக்கு எதிராக போராடியவர் அய்யன் காளி ஆவார். இன்னும் சொன்னால் கட்டாய மதமாற்ற தடுப்பு குறித்து முதன் முதலாக பேசியவர் அய்யன் காளியே ஆவார். இது குறித்து விரிவாக இன்று மாலைக்குள் ஒரு பதிவினை எழுதுகிறேன்.
அய்யன் காளியின் படத்தை திருவாளர் திரு போட்டிருக்கிறார், ஆனால் பொதுவாக மக்கள் மனதில் நிற்கும் அய்யன் காளியின் உருவத்தை கீழே தருகிறேன், இதுவும் இணையத்தில் தான் இருக்கிறது. 'கலையாக்கம்' அது இது என ஆயிரம் ஜல்லி அடித்தாலும் திரு அளித்துள்ள அய்யன் காளி படத்தில் வேண்டுமென்றே அவரது இந்து தன்மை எந்த அளவு குறைக்கப்பட முடியுமோ அந்த அளவு குறைக்கப்பட்டிருப்பதை பாருங்கள். விரைவில் திருநீறு-சந்தனம் அணியாத அய்யன் காளி படத்தை உருவாக்கி உண்மை சித்திரத்தை மறைக்க செய்யப்படும் typical மிசிநரி 'திரு'கு வேலை இது.
27 Comments:
சாட்டையடி பதிவுக்கு நன்றி நீலகண்டன். இனியாவது பொய்களையும் நரித்தனங்களையும் இவர்கள் நிறுத்துவார்களா?
பதிவுக்கு நன்றி
சிறப்பான கருத்துக்கள். ஏராளமான தகவல்களை அறிந்துகொண்டேன்
நன்றி
எழில்
திருவின் திருகு வேலையை நன்றாக துகிலுரித்திருக்கிறீர்கள்...நன்றி.
நன்றி எழில். நன்றி அனானிஸ்.
//இனியாவது பொய்களையும் நரித்தனங்களையும் இவர்கள் நிறுத்துவார்களா?//
அதெப்படி? இந்தமாதிரி விசயங்களில் சொரணையை பொறுத்தவரையில் காஸிரங்கா தேசிய பூங்காவின் தனிச்சிறப்பு விலங்கின் தோல் இவர்களது சொரணை(யற்ற தன்மையில்) தோற்றுப்போகுமாக்கும்.
தான் ஒரு கம்யூனிஸ தத்துவத்தை நம்பும் முற்போக்குவாதி என்று சொல்பவர்களை நான் பேக்டீரியாவைவிட கேவலமான ஜந்து என்றே எண்ணுகிறேன்.
உண்மையான மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கு நேர் எதிர் கம்யூனிசம். அதை நம்புபவர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை தெரிந்தே தரித்திரத்திற்குத் துணை போகும் கயவர்கள். இரண்டு பேருக்கும் பூலோகத்தில் இடம் கொடுத்தல் தவறான செயல்.
"திரு" அவர்கள் இதில் எந்த வகை என்று அவரே சொல்லட்டும்.
திரு போன்றவர்களும், அவரது பொய்யால் ஏதோ மிகப் பெரிய புரட்சி உண்டாகப்போகின்றது என்றும் நினைப்பவர்களும் தங்கள் பதிவுகளை இனிமேல் படிக்கக் கூடாது, அப்படி ஒன்று இருப்பதே தெரியாதது போல நடந்துகொள்ள முடிவு செய்திருப்பார்கள் போல் தெரிகின்றது. அல்லது மாரடிக்க கூலி கிடைக்கவில்லை போலிருக்கிறது.
நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையை புதைக்குமாம். கோழைகள் மனத்தினுள் உண்மையை புதைத்துக்கொள்கிறார்கள்.
அய்யா வைகுண்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
அய்யா வைகுண்டர், Ayya Vaikundar இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.
அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்.
இது சார்பு கட்டுரைகளின் பாகமான
அய்யாவழி
அய்யாவழியின் வரலாறு
கோட்பாடுகள்
ஏகம்- அடிப்படை ஒருமை
வேதன்-படைப்பாளர்
திருமால்-காப்பாளர்
சிவன்-அழிப்பவர்
வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை
புனித நூல்கள்
அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்
வழிபாட்டுத்தலங்கள்
சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்
சமயவியல்
அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்
சமயச்சடங்குகள்
முதன்மை போதனைகள்
சார்ந்த நம்பிக்கைகள்
அத்வைதம்
சுமார்த்தம்
பொருளடக்கம் [மறை]
1 தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு
2 மாற்றியமைப்பு
3 வைகுண்ட அவதாரம்
4 தவம்
5 தீய சக்திகளை ஒடுக்குதல்
6 மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல்
7 பண்டாரமாக வைகுண்டர்
8 குற்றப்பத்திரிகை
9 சிறை வாசத்துக்குப் பின்பு
10 வைகுண்டம் போதல்
11 சீடர்கள்
12 இவற்றையும் பார்க்கவும்
13 ஆதாரம்
[தொகு] தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு
முக்கியக் கட்டுரை: சம்பூரணதேவன்
கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகன்னாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்ந்த சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.
அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.
முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.
பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.
[தொகு] மாற்றியமைப்பு
இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"
ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு:- வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பிறகு அகிலத்திரட்டில் வேறெங்கும் வெயிலாள் பற்றிய எந்த செய்திகளும் இல்லாதது இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், "வெயிலாளின் உயிர் இவ்விடத்திலேயே எடுக்கப்படுகிறதெனில், வைகுண்டர் அவளிடத்தில் 'தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் உரையாதே' எனக் கூறியது ஏன்?" என்பது எதிர் தரப்பு வாதம்.
[தொகு] வைகுண்ட அவதாரம்
1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.
முதலாவதாக [கலி யுகம்|கலி யுகத்துக்கு]] முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்குத் தத்தம் பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.
அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).
இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.
அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது.
இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.
பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.
ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.
[தொகு] தவம்
சுவாமி தோப்பு பகுதியின் புவியியல் வரை படம்முக்கியக் கட்டுரை:வைகுண்டரின் தவம்
தெட்சணம் எனப்படும் பூவண்டன் தொப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.
[தொகு] தீய சக்திகளை ஒடுக்குதல்
அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.
"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"
அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.
(மேலும் விவரங்களுக்கு:அய்யாவழி புராணத்தை) காண்க
[தொகு] மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல்
பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.
மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,
"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"
[தொகு] பண்டாரமாக வைகுண்டர்
வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.
நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.
சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.
[தொகு] குற்றப்பத்திரிகை
அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
[தொகு] சிறை வாசத்துக்குப் பின்பு
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். [அய்யாவழி மும்மை|மும்மையின் தொகுதி]]யான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.
[தொகு] வைகுண்டம் போதல்
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.
[தொகு] சீடர்கள்
அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள்,
தர்ம சீடர்
வீமன் சீடர்
அர்ச்சுணன் சீடர்
சகாதேவன் சீடர்
நகுலன் சீடர்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
அய்யாவழி தொடர்பான கட்டுரைகளின் பட்டியல்
கலியன் கேட்ட வரங்கள்
அய்யாவழி புராணம்
அய்யாவழி மும்மை
[தொகு] ஆதாரம்
அகிலத்திரட்டு அம்மானை
ஆ. அரிசுந்தர மணியின், அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, 2002
நா. விவேகானந்தனின், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், இரண்டாம் பாகம் 2003, முதற் பதிப்பு.
அமலனின், அய்யா வைகுண்டர் புனித வரலாறு
ஆ. மணிபாரதியின், அகிலத்திரட்டு விளக்க உரை, இரண்டாம் பாகம், 2003, முதற் பதிப்பு.
அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை தினகரன் வெளியீடு
அகிலத்திரட்டு அகக்கோர்வை தெச்சணத்து துவாரகாபதி வெளியீடு
சி. உமைதாணு மற்றும் போ.காசி உதயம் ஆகியவர்களின், பகவான் வைகுண்ட சுவாமிகள் புனித வரலாறு 1966, (தினமலர் நாளேடின் நெல்லை பதிப்பில் தொடராக வெளிவந்த செய்திகளின் தொகுப்பு).
//தான் ஒரு கம்யூனிஸ தத்துவத்தை நம்பும் முற்போக்குவாதி என்று சொல்பவர்களை நான் பேக்டீரியாவைவிட கேவலமான ஜந்து என்றே எண்ணுகிறேன்.//
கடுமையாக மாறுபடுகிறேன். பாக்டீரியாக்களில் நலம் செய்யும் பாக்டீரியங்கள் உண்டு.
//குற்றப்பத்திரிகை
அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.//
அப்போது இப்பகுதியின் 'நீதி' காவலனாக திகழ்ந்தவன் மீட் பாதிரியாகும். ஐயா வைகுண்டரை கைது செய்ய அனுப்பிய கூட்டத்தில் கம்பெனி வீரர்கள் இருந்தனர் என்பதை அகிலம் தெளிவாக சொல்கிறது. கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு அரசனோ 'மேட்டுக்குடியினரோ' ஆணையிட முடியாது. ஐயாவை கைது செய்வதற்கு முன்னர் மீட் பாதிரி மதவெறி பிடித்த கர்னல் ஃபிராசரை சந்திருந்தான். அகிலம் சொல்கிறது: "கொம்பெடுத் தடிப் பேனென்று கும்பனிக்காரர் சாட"
மேலும் ஐயா சித்திரவத்தை செய்யப்பட்ட போது யார் யார் அதனை ரசித்தார்கள் என்பதனை இந்து சமுதாயத்தின் விரோதிகள் யார் என அகிலம் நன்றாகவே சுட்டிக்காட்டுகிறது:
"கவுடன் வெகுடன் கீர்த்தி துரைசானிகளும் துலுக்கர் சலுப்பருடன் சிப்பாயிமார்களும்" இருந்து ரசித்தார்களாம். இன்றைக்கும் இந்து சமய சமுதாய ஒருங்கிணைப்புக்கு பாடுபடும் இயக்கங்களை துன்புறுத்தி இரசிப்பது துரைசானியுடன், ஹிண்டு என்ராம், என்.டி.டி.வி பிரனாய் ராய், பிருந்தா காரட்டு, த்தாராம் எச்சி ஊறி, புத்தாதேவ் பட்டாச்சாரி போன்ற மேட்டுக்குடி மதச்சார்பின்மை-மனுவாதிகளும் மற்ற ஜிகாதிகளும்தானே.
துரைமார்
துலுக்கர்
சலுப்பர்
ஓ, அப்பவே மதச்சார்பற்ற கூடணி வந்திருச்சா?
////தான் ஒரு கம்யூனிஸ தத்துவத்தை நம்பும் முற்போக்குவாதி என்று சொல்பவர்களை நான் பேக்டீரியாவைவிட கேவலமான ஜந்து என்றே எண்ணுகிறேன்.//
கடுமையாக மாறுபடுகிறேன். பாக்டீரியாக்களில் நலம் செய்யும் பாக்டீரியங்கள் உண்டு.//
நீலகண்டன் அய்யா,
நல்ல பாக்டீரியாக்கள் இருக்கலாம்.ஆனா,எங்க அசுரன் அய்யா வழிநடத்துற புரட்சிகர ம க இ க வில அதுகளுக்கு இடமில்லை.நாங்கெல்லாம் salmonella typhi, மற்றும்,myco bacterium leprae வகைய சேர்ந்த பாட்டீரியா கும்பல்.புதிய கலாசாரம் படைப்பது தான் எங்க நோக்கம்.நிறைய பேர் அய்யாக்களும்,ஆயாக்களுமாக இருக்கலாம்.ஆனா எங்களுக்கு அசுரன் அய்யா தான் உண்மையான அய்யா/ஆயா.திரு அய்யா/ஆயா எங்க ஆஸ்த்தான கவிஞர்.நேர்மை,நாணயம்,கண்ணியம் எங்களுக்கு பிடிக்காத விஷயங்கள்.
பாலா
அய்யன் காளியை இஸ்லாமியர் தாக்கிய வரலாறு தெரியுமல்லவா ம்யூஸ். மதச்சார்பற்ற கூட்டணிக்கு வரலாற்று பின்னணி உண்டாக்கும்.
நன்றி பாலா இந்த போடு போட்டு தாக்குறீங்க. அது யாருங்க அசுரன்? சுத்தமான 'ஆரிய' பேரா வச்சுருக்காரு?
டாடா-பிர்லா அருமையான தொகுப்புக்கு நன்றி. மண்டைக்காடு கலவரத்துக்கு முன்னால் தென்னிந்திய கிறிஸ்தவ சபை (டயசீஸ்) அய்யா அவர்களைக் குறித்து பொய்யான அவதூறு தகவல்களுடன் வெளியிட்ட ஒரு பிரசுரமும் கிடைத்துள்ளது. அது குறித்தும் எழுதுகிறேன் விரைவில்
அய்யன் காளியை இஸ்லாமியர் தாக்கிய வரலாறு தெரியுமல்லவா ம்யூஸ்.
அவர்களுமா? சரிதான். கிருத்துவப் பாதிரிகள் அவரை கொலை செய்ய முயன்றார்கள் என்பது தெரியும். நம்ம "பங்காளிகளும்" அப்படித்தானா?
ஒருவர் மானமுள்ள ஹிந்து தலித்தாக வாழ எத்தனை இடர்கள்?
நேரமிருப்பின் விளக்கமாய் ஒரு தனிப் பதிவு போடுங்களேன்.
அது யாருங்க அசுரன்? சுத்தமான 'ஆரிய' பேரா வச்சுருக்காரு?
சுரர்கள் என்றால் பலமற்றவர்கள். அசுரர்கள் என்றால் பலமுள்ளவர்கள், பலமில்லாதவரை அடிமைப்படுத்தி, சுரண்டி பிழைப்பு நடத்துபவர்கள். சரியாகத்தானே பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்?
Good one Aravindan.. I have been regularly reading your blogs.. If possible, pls write about the "secularism" of Left parties.
பாலாய்யா,
கம்யூனிசம்னு சொன்னாலே ஏன் உங்களுக்கு ஜன்னி வருதுங்கையா?
தன்னிலும் மேலோனிடம் குனிந்து குண்டியை காட்டுவதும்,எளியோனை எட்டி மிதிப்பதும் தான் உங்க தத்துவமாங்கையா?
சரியான புரிதலைத் தந்த பதிவுக்கு நன்றி. இது போல் நிறைய எழுதுங்கள் !!!
ஜாலி ஜம்பர்,
மார்க்ஸிசமும் மற்றொரு ஆபிரகாமிய மதமாக இருப்பதும், அது ஆண்ட தேசங்களில் எல்லாம் நாசிகளுக்கு இணையாகவும் அவர்களைவிட மோசமாகவும் மானுட அழிவுகளை செய்தமையும், பாரதத்தில் தேசதுரோகிகளாக வாழ்ந்திருப்பதும் தான் பொதுவாக கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு காரணங்கள். சீனாவில் ஏன் இன்னமும் அடிமை தொழிலாளர் முறை நடைபெறுகிறது? ஏன் இத்தனை சுரங்கத் தொழிலாளர் இறந்த பிறகும் அது குறித்து ஒரு தொழிலாளர் யூனியனும் உருப்படியாக எதிர்த்ததாக தெரியவில்லை. 2003 இல் மட்டும் 6702 தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். அதாவது இத்தகைய தொழிலாளர்கள் சாவில் உலகின் 80 சதவிகித சாவுகள் சீனாவில் நடந்திருக்கின்றன. திபெத்தில் நடத்தப்படும் இனப்படுகொலை, கெமர் ரூஜின் மார்க்சிய வேர்கள் என படுகொலைகளின் இரத்தக்கறை படிந்த கைகளுடன் சர்வதேச கம்யூனிசம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பார்த்து இளிக்கிறது. பதிலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் இளிக்கிறது ஜிகாதிகளைப் பார்த்து. மும்முனைப் போட்டி யார் கையில் அதிக இரத்தம் என்று. கேட்டால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதந்திரம், அமைதியின் மதம் என்று சால்ஜாப்புகள் வேறு! எனவே இனியாவது மற்றவர்களை முத்திரை குத்துவதை விடுத்து உங்கள் கண் உத்திரத்தை பாருங்கள்.
அரவிந்தன்,
அய்யன் காளியை பற்றியும், அகிலம் பற்றியும் விரிவாக அறிய விருப்புகிறேன். ஏதேனும் நூல் உள்ளதா?
நன்றி
சாட்டையடி பதிவுக்கு நன்றி நீலகண்டன்.
நீங்கள் அகிலத்திரட்டிலிருந்தும், அய்யாவழியின் புத்தகங்களிலிருந்தும் கொடுத்த எந்த பாயிண்டுக்காவது அவர்களிடம் பதில் இருக்கிறதா என பாருங்கள். சும்மா இந்துத்வமயமாக்க முயற்சி என கூவுகிறார்களே தவிர பதிலே சொல்ல காணோம்? வைகுண்டம் , வைகுந்தர் என்பது இந்துமதம் இல்லாமல் பின்னென்ன கிறிஸ்தவ மதமா? கருடன் என்ன கிறிஸ்தவ மத சின்னமா?
அங்கே கும்மியடிக்கும் காக்கா கூட்டத்துக்கு அறிவு உலக்கை கொழுந்துதான்.
ஹரி,
அய்யன் காளி குறித்து தமிழினியில் வந்திருக்கிறது. அய்யா வைகுண்டர் குறித்து குமரி மாவட்டத்தில் தலைமைப்பதியான சாமித்தோப்பில் நிறைய கிடைக்கும். விவேகானந்தன் எனும் தமிழ் பேராசிரியர் எழுதிய நூல் குறிப்பிடத்தக்கது. அத்துடன் டி.இராமன் எழுதிய 'அய்யா வைகுண்டரும் அங்கிலேயனின் சூழ்ச்சியும்' எனும் நூலும் முக்கியமானது. இதற்கு பூஜ்ய ஸ்ரீ பால.பிரஜாபதி அடிகளார் எழுதியுள்ள அருளுரையில் வேதம் மற்றும் கீதையின் புனிதம் மேன்மையுற அய்யா வைகுண்டர் காட்டிய பாதை கலியுகத்தின் கலியறுக்கும் வேத பாதை என்பதனை உணரவேண்டும் என்கிறார். மேலும் அடிகளார் சமய மேலாதிக்கம் செலுத்த முனைந்த மிசிநரிகள் தங்கள் நூல்களிலும் வெளியீடுகளிலும் தேசோபகாரி போன்ற பத்திரிகைகளிலும் அய்யாவை அவரது செயலை புகழை கண்டு அடிவயிற்றில் அடித்துக்கொண்டனர் என்கிறார். மேலும் பூஜ்ய அடிகளார் கூறுகிறார், அய்யா வைகுண்டரின் வரலாற்று செய்திகள் சாதீய மேலாதிக்கம் கொண்டவர்களால் மறைக்கப்பட்டும் கிறிஸ்தவ மேலாதிக்கம் கொண்டவர்களால் திரிக்கப்பட்டும் வெளியிடப்பட்டது எனகூறுகிறர். தலைமைப்பதியில் அகிலத்திரட்டும் கிட்டும். அதற்கு அய்யா வழி இறையறிஞர்களால் அத்வைதபரமாக எழுதப்பட்ட விளக்க உரைகளும் பிற உரைகளும் கூட கிட்டும்.
நன்றி சந்திரா. இது மாதிரி எத்தனை புரட்டு வேலைகளை எங்கெங்கெல்லாம் செய்கிறார்களோ இந்த மிசிநரி அடிபொடிகள்? அய்யா அருளால் இந்த புரட்டை வெளிப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இப்படி எல்லாம் எங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தால் பயந்து விடுவோமா? எங்களுக்கு தான் வெட்கம், மானம் என்று எதுவும் கிடையாதே? விரைவில் சம்பந்தரும், அப்பரும் இந்துக்களே கிடையாது என்று ஒரு பதிவை போட இருக்கிறோம். திருவள்ளுவர் கிறிஸ்தவரே என்று ஒரு பதிவும் அடுத்து வர இருக்கிறது. அப்ப என்ன செய்வீங்க நீங்கள் எல்லாம்?
ஒரு புறம் இந்து ஒற்றுமைக்காக உழைப்பதாக பம்மாத்து.
இன்னொரு புறம் நாயர், வேளாளரை மட்டம் தட்டுதல். நாடாரை கேவலமாக நடத்திய பிராமணியத்திற்கு பிராமணர்கள் காரணம் இல்லை என்று சப்பைக் கட்டு. ஆனால் சாணார் நாடாராக எல்லா விதத்திலும் பாடுபட்ட கிருஸ்துவ மிஸனரிகள் மீது நன்றி இல்லாத குணம்.
இடையில் நாடார் சத்திரியர் என்று போலி கௌரவம் தேடுதல்.
ஒரே கட்டுரையில் உங்களின் அத்தனை முகங்களும் எப்படி வெலியே வருகின்றன பாருங்கள்.
It is some kind of Stockholm Syndrome?
The more you try to expose others when there is none, you would only end up exposing yourself more and more.
Post a Comment
<< Home