அகப்பயணம்

Name: அரவிந்தன் நீலகண்டன்

Friday, March 27, 2009

Manmohan Singh CV : what did he do?


Manmohan Singh government became the first government to communalise the prestigious institution of Indian army.

Manmohan Singh provides Pension to Kashmiri terrorists

India deserves better
We cannot have an anti-national prime minister

Thursday, January 08, 2009

மன்மோகனின் வீர அறிக்கை

பாவம் அவரும்தான் என்ன செய்வார்? சோனியா வீட்டில் பேரப்பிள்ளைகளுக்கு டயப்பர் மாற்றுவதென்றால் திறமையாக செயல்படுகிற ஆசாமியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரதமராக இரு என்று சொன்னால் மனுசன் என்ன செய்வான் பாவம்....வேண்டுமென்றால் அழகிரியின் பேரன் பேத்திக்கும் டயப்பர் மாற்றட்டுமா என்று கேட்பான் அவ்வளவுதான். அப்படி பட்ட மனுசனிடம் பாகிஸ்தானை எதிர்த்து பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடு என்றால் என்ன செய்யமுடியும். "We won't allow terrorism to destabilise us" என்று மன்மோகன் சொல்லியிருப்பதை பார்க்கும் போது எனக்கென்னவோ கீழே உள்ள வீடியோதான் ஞாபகம் வருகிறது. மன்மோகன் போன்ற ஒரு #$%%^&^ பிரக்ருதியை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டதற்கு என் மீது வடிவேலு இரசிகர்கள் கோபப்படாமல் இருக்க வேண்டும்.

Monday, December 01, 2008

அஞ்சலி


வீரர் சந்தீப் உன்னி கிருஷ்ணனுக்கு இதயாஞ்சலி



மும்பை பயங்கரவாத வெறியாட்டத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இதய அஞ்சலி. நாம் நிம்மதியாக வாழ நம் குழந்தைகள் உடல் வெடித்து சிதறாமல் பள்ளிகள் சென்று திரும்ப நமக்காக நம் பாதுகாப்பை உறுதி செய்ய தம்மையே பலிதானமாக்கும் வீரர்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்!


மும்பை தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தானின் கை இதில் உண்டா இல்லையா என்பது குறித்து விசனப்படுவதை விட முக்கியம் எப்படி இந்த தாக்குதல் சாத்தியமாயிற்று? எப்படி ஜிகாதிகள் சர்வ சாதாரணமாக முக்கிய ஹோட்டல்களில் அறை எடுத்து இருந்து திட்டமிட முடிந்தது? நம் உள்நாட்டு உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் கோட்டைவிட்டார்களா அல்லது அரசியல் தலையீடுகளால் இந்த துறைகள் தீவிரமாக இந்த விஷயத்தில் இயங்க முடியவில்லையா? இந்த கேள்விகள் ஒரு புறமிருக்க, ஜிகாதி பயங்கரவாதம் மிகத் தெளிவாக தெற்கில் மையம் கொண்டு வருகிறது. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகள் தங்களை டெக்கான் முஜாகைதீன் என அறிவித்துக் கொண்டது தற்செயல் அல்ல. ஒரு திட்டமிட்ட அடுத்த அலை ஜிகாதி போருக்கான அறிவிப்பு இது. ஜிகாதி hardware இன் theological software வகாபியவாதம். வகாபிய மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவனை மிக எளிதாக அடுத்த கட்டமான ஜிகாதி போராளியாக மாற்றிவிட முடியும். இன்றைக்கு தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும் வஹாபிய அமைப்புகள் இயங்கிவருகின்றன. மிக நளினமாக பேசும் டாக்டர் ஸாகிர் நாயக் இஸ்லாமிலிருந்து வேறு மதங்களுக்கு மாறுபவனை கொல்வது சரியே என நியாயப்படுத்தி பேசுகிறார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சிமி அமைப்பில் இருந்தவர். கேரளத்தில் ஜிகாதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு காஷ்மிருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை போன்ற அமைப்புகள் இனி வரப்போகும் ஜிகாதி போர் சுனாமிக்கு முன் நிகழும் உள்வாங்குதல்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு ஜிகாதிகளின் மிகவும் திட்டமிட்டதொரு முன்பயிற்சியாகவே அமைந்தது எனலாம். கோவையில் தொடர்ந்து நடத்தப்பட்ட வெறுப்பியல் கொலைகள், அதனைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலை பின்னர் கலவரங்கள் பின்னர் கோவை குண்டு வெடிப்பு அதன் பின்னர் உளவுத்துறை இந்த சதிகாரர்களை பிடித்த பிறகு, வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட விதம், வழக்கு பலவீனப்படுத்தப்பட்டது, ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகள் ஆகியவை கோவை குண்டுவெடிப்பின் பிரதான மூளையாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மதானியை விடுதலை செய்ய திட்டமிட்டு செயல்பட்ட விதம் ஆகியவை எப்படி பயங்கரவாதிகள் அகப்பட்டுக்கொண்டாலும் இந்திய அரசியலின் ஓட்டைகளையும் பொந்துகளையும் பயன்படுத்தி அவர்களை விடுவிப்பது என்பதில் ஒரு தெளிவான செயல்திட்டத்தை பயங்கரவாதிகளுகு வழங்கியது. இதனை அடியொட்டியே சோனியாவும் சல்மான் குர்ஷித்தும் மன் மோகன் சிங்குன்ம் சிமிக்கு ஆதரவாக பேசலாயினர். குண்டு வெடிப்புகள் ஒரு தொடர்கதையாகின. கருணாநிதி அச்சுதானந்தன் போல வாக்கு வங்கிகளுக்கு மக்களை காவு கொடுக்க தயங்காத அரசியல்வியாதிகளின் கண்மூடித்தனத்தால் ஸ்லீப்பர் செல்கள் அமைதியாக தென்னகம் எங்கும் பல்கிப் பெருகுகின்றன. தங்கள் இயக்க செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பவர்களை குறிப்பார்த்து கொல்லும் தனிப்படை ஜிகாதிகளும் செயல்படுகின்றனர். மாட்டிக்கொண்டால் அரசியல் அழுத்தம் முதல் மனித உரிமை குரல் வரை அனைத்து விதங்களிலும் ஜிகாதிகளை பாதுகாக்க இயக்க அரண்கள் உள்ளன. தமிழ் ஊடகங்களிலும் பலர் ஜிகாதி திட்டங்களுக்கு விலை போயுள்ளனர். காஷ்மிர் பிரிவினைவாத கொடிகள் எவ்வித கூச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டு சுவர்களில் வரையப்படுகின்றன. எனவே தமிழர்கள் ஒரு விஷயத்தை உறுதி செய்து கொள்ளலாம் அடுத்த ஜிகாதி கொலை தாக்குதல்களின் அலை தமிழ்நாட்டிலும் உக்கிரமாக வீசப் போகிறது.

சாதி கட்சி ஆகியவற்றின் பெயரில் பிரிந்து கிடக்கும் பெரும்பான்மை சமுதாயம் தன்னை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் சமுதாய சக்தியாக செயல்பட்டால் ஒழிய தமிழ்நாட்டு நகரங்கள் மும்பை தாக்குதலை விட மோசமான தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது. காலம் கடப்பதற்கு முன் தமிழ்நாட்டை காப்பாற்ற தேவை - இந்து ஒற்றுமை ஒன்றே. அதுவே நாம் மறைந்த தியாகிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.



Appeasement means buying off the aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to be the victims of his displeasure...the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.

-போதிசத்வர் பாபா சாகேப் அம்பேத்கர்

Thursday, October 23, 2008

சீமான்: சொல்ல மறந்த கதை

வொறவுகளா அண்ணன் பிரபாகரன் தலைமையில நம்ம தமிளனுக்கு சாவ வழியில்லைடா உங்க பாப்பார நாட்டுல நான் கேக்குறேன் ஏண்டா டேய் ராக்கெட்ட வெடிச்சு மேலே அனுப்பிதியே அதே உரிமையைதான வெடிச்சு சாவுற உரிமையதான எங்க தமிளனுக்கு கேக்குதோம். ஏண்டா கொடுக்க மாட்டேங்குற? டேய் தமிளா நீயெல்லாம் மனுசா நான் கேக்குதேன் நீயெல்லாம் மனுசப்பயலுக்கு பொறந்த பயலா? இந்த நாட்டுல உனக்கு என்னடா உரிமை இருக்கு? சும்மா வாளுத சம்பாதிக்க பிள்ள குட்டி பெத்து பேரம் பேத்தி பாத்து கட்டில்ல சொகுசா செத்து போறே....அப்படி சாவலாமாடா நீ? அதாடா புறநானூத்து வீரம்? ரோட்டுல குண்டை மாருல கட்டிக்கிட்டு உன்னோட ஒரு அம்பது பேரையும் சேத்து கிட்டு செத்து போகாத நீயும் ஒரு மனுசனா? பதினஞ்சு வயசுல அப்துல்கலாம் சொன்னாருன்னு உம் மவன் எஞ்சினீரிங்க் காலேஜ் போய் நிலாவுல கல்லெடுக்க ராக்கெட்டு விட கனவு காணுதான்? அதுக்கா நீ மவனை பெத்து போட்டுருக்க பதினைஞ்சு வயசுக்குள்ள ஏகே 47 சுட படிச்சு காடு காடா மலைமலையா திரிஞ்சு கடைசில தற்கொலைப்படை தாக்குதல்ல பத்து கன்னடத்தானையும் பதினஞ்சு மலையாளத்தானையும் போட்டு தாக்கிட்டு வீரமரணம் அடைஞ்சா அது தலைவருக்கு பெருமை அது அண்ணனுக்கு பெருமை. சில பாப்பார நாய்ங்களும் பாப்பார நாய்ங்களோட அடியாட்களும் கேக்கலாம் அண்ணன் மவனும் தற்கொலைபடையில பங்கெடுத்திருக்காரா அப்படீன்னு. அப்படி கேக்குற பேமானியெல்லாம் உன் சென்ம பகை அப்படீன்னு தெரிஞ்சுக்க விறகே மன்னிச்சுக்க உறவே....நம்ம அண்ணன் குடும்பம் மட்டும் வீரமரணத்தையே தியாகம் செஞ்ச குடும்பம் தெரிஞ்சுக்க முடியுமா இந்த வந்தேறிகளுக்கு. ஏ உறவே நீ உப்பு போட்டு சாப்பிடுறன்னா நீ தெருதெருவா வெடிகுண்டு கட்டிகிட்டு செத்து போ அப்பத்தான் எனக்கு பணம் கொடுக்குத சர்ச்சுக்கு மேக்குல உள்ள ஆயுத வியாபாரி பணம் கொடுப்பான். அப்பத்தான் நான் லாகொஸ்டே டி சர்ட்டுல செசெகுவாரா டிசைனெல்லாம் போட்டு ஜீன்ஸ் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து தமிழ் தேசியம் பேச முடியும். இந்த வியாபாரம் தொடந்து நடக்கணும்னா ஏ உறவே ஏ தோளனே நீ பெல்டுல குண்டு கட்டி ரோட்டுல சாவணும் நாங்க எங்க பிள்ளக் குட்டியோட அமெரிக்காவுலயும், கனடாவுலயும் ஆஸ்திரேலியாவுலயும் இருந்து நீங்க போராடுறதுக்கு குட்டை பாவாடை போட்ட வெள்ளக்காரிவ பந்து விளையாட்டுல கத்துத மாதிரி நீங்க வெடிச்சு சிதறும் போதெல்லாம் உங்களுக்கு வாழ்த்தி சங்கு ஊதுவோம் எனவே நம்ம வெடிச்சு சாவுறத தடுக்குத இந்த இந்திய நடுவண் அரசு கூட தமிளு நாடு இன்னும் தொடரணுமா? நம்ம தமிழ்நாடும் கிளிநொச்சி போல தெருதெருவா புறநானூற்று தமிள் பொணங்க கிடக்க அம்மாமாரு முதுகுல காயம் இல்லைங்கறத பாத்து சந்தோசப்பட வேண்டாமா? இன்னுமா நம்ம நிம்மதியா பேரம் பேத்தி பாத்து சாவுற அனியாயம் நடக்கணும். தமிளா சோத்தாலடிச்ச பிண்டமா கிடந்தது போதும், நீ நெருப்பு ஆத்தையே கடப்பியே வா எளுந்தோடி வா புலி போல கரடி போல வெறி நாய் போல வா. அண்ணன் அளைக்கிறார். வீரமரணம் அடைய அளைக்கிறார். வா வா தனி நாடு கோரிக்கை வ்ளுவாகட்டும் மேக்கத்திய நாட்டு முதலாளிகளுக்கு ஆயுத விற்பன பெருகட்டும். அதுல கொஞ்சம் எலும்புத்துண்டா எவாஞ்சலிக்கல் அமைப்புகளுக்கு போட்டு அகதிகளா ஓடப்போற நம்ம ஆன்மாக்கள நம்ம புள்ளைக ஆன்மாக்கள அவுக அறுவடை பண்ணட்டும். வொறவே எளுந்து வா.

Thursday, August 28, 2008

ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க

நாஸ்டரடாமஸ் என்று ஒருவர் ரொம்ப காலத்துக்கு முன்னால் ரொம்ப காலத்துக்கு பின்னால் நடக்கப்போவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. 1973 துக்ளக் இதழ்களில் போட்டிருக்கிற கார்ட்டூன்களைப் பார்க்கிற வரையில். அட 2008 இல் நடக்கப் போகிற விஷயம் எப்படி 1973 இல் கார்ட்டூன் போட்டிருக்கிறவர்களுக்கு தெரிந்தது என அவர்களது ஞான திருஷ்டியை வியக்கவா அல்லது 1973 இலிருந்து 2008 வரை கார்ட்டூன்களுக்கு உண்மையாக விசுவாசமாக நடந்துவரும் திமுகவின் மின்சாரவெட்டு திராவிட பாரம்பரிய மாற்றமின்மையை வியக்கவா அல்லது இந்த கையாலாகத கும்பலை மீண்டும் ஆட்சியலமர்த்திய மக்களின் சொரணையற்ற தன்மையை வியக்கவா....எதுவானாலும் தமிழ்நாட்டின் திராவிட நாஸ்டரடாமஸ் பட்டத்தை சோவுக்கும் துக்ளக்கும் அளித்து இந்த பட்டத்தை அவர்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடுவரும் தமிழ்நாட்டு மின்வெட்டுதுறை மற்றும் தீவட்டி முன்னேற்ற துறை அமைச்சர் என பினாமி பட்டம் பெற்றவருமான திருவாளர் அமைச்சர் பெருமகனாருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
கீழே நீங்கள் காண்பது 1-3-1973 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்.

இதே கார்ட்டூனில் அன்றைய மின்வெட்டு இலாகா மந்திரியை நீக்கி இன்றைய மின்வெட்டு சாரி மின்சார துறை இலாகா மந்திரியை போட்டாலும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.

இதோ நீங்கள் மகிழ பழைய 'துக்ளக்' இதழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இதர 'வீராசாமி ஜோக்ஸ்'. மின்வெட்டினால் அவதியுறும் என் இனிய தமிழ் மக்களே எல்லா புகழும் கொலைஞருக்கே....சாரி கலைஞருக்கே....




அடுத்தமுறையும் திமுகவுக்கே ஓட்டு போடுங்க மக்களே....மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு ஓசி டீவியிலே முதலமைச்சர் குத்தாட்டம் ரசிக்கிறதை ரசிக்கலாம்


மின்வெட்டு இலாகா பினாமி

எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு என்றுதான் பேச்சாக இருக்கிறது. மின்வெட்டு இலாகா அமைச்சர் என்கிற பினாமி பெயர் ஆர்காட்டு வீராசாமிக்கு கிடைத்துவிடும் போல இருக்கிறது. ஆனால் இதெல்லாம் திமுக பாரம்பரியம். இந்த திருத்த முடியாத கழகத்தின் கடந்த ஆட்சிகளைப் பார்த்தால் அது விளங்கும். இதற்கு முன்னர் 1973 இல் இதே போல ஏற்பட்ட மின்வெட்டு குறித்து வெட்கம் சிறிதும் இல்லாமல் திமுக அரசே வெளியிட்ட விளம்பரம் இது.

ஆனால் பாருங்கள் கருணாநிதிக்கோ நமீதாவின் நடனத்தை பார்த்து ரசித்து அதன் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மின்சார தடையாவது மண்ணாவது.

Monday, June 30, 2008

அமர்நாத்தும் பிள்ளையார்புரமும்

அமர்நாத் யாத்திரையால் இலாபம் பெறும் காஷ்மீர் முஸ்லீம்கள் அந்த யாத்திரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை அதிகாரியை நாயைப்போல அடிக்கும் காட்சி

அண்மையில் அமர்நாத் கோவில் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கியதற்காக அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து அந்த நில ஒதுக்கீட்டினை அரசு இரத்து செய்து விட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். இது ஏதோ அமர்நாத்தில் மட்டும் நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. மாறாக, கிறிஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புவாதிகள் இந்துக்களுக்கு அவர்களது அடிப்படை வழிபாட்டுரிமையையும் முடிந்தால் வாழ்வுரிமையையும் அழிக்க திட்டமிட்டு இந்தியா முழுவதும் காய் நகர்த்துவதன் ஒரு வெளிப்பாடே இது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிள்ளையார்புரம் நிகழ்ச்சி. ஆத்திக்காட்டு விளை ஊராட்சியின் கீழ் வரும் பிள்ளையார் புரம் இந்துக்களே நிரம்பிய ஊர். ஊரில் மொத்தம் எட்டோ பத்தோ கிறிஸ்தவ குடும்பங்கள். இவர்கள் அம்மன் கோவிலுக்கு நேர் எதிராக உள்ள தெருவில் குடியிருப்பதுடன் அந்த தெரு முடியும் இடத்தில் புதிதாக ஒரு கிறிஸ்தவ பிரச்சார-பிரார்த்தனை கட்டிடத்தையும் (சர்ச்) கட்டியுள்ளனர். இந்த தெருவில் இந்துக்களும் உள்ளனர். இந்த தெருவில்தான் இந்துக்கள் அம்மனின் சப்பரவாகனத்துடன் வரக்கூடாது என்றும் ஏனெனில் இந்த தெருவே தென்னிந்திய கிறிஸ்தவ சபைக்கு சொந்தமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதிர்ந்து போன இந்துக்கள் இந்த 'தெரு விழுங்கி' கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைக் குறித்த ஆவணங்களை வெளியிட தாசில்தாரை கேட்டபோது அவர் அந்த ஆவணங்களை தராமல் தட்டிக்கழித்துவிட்டார். அவர் கிறிஸ்தவர். (மதச்சார்பற்ற அரசு கிறிஸ்தவர்களுக்கு மத அடிப்படையில் அரசு பணிகளில் இடஒதுக்கீடு செய்து கொடுத்தால் என்னவெல்லாம் 'தெரு'விளையாடல்கள் நடத்தப்படும் என்பதற்கு தமிழக இந்துக்களுக்கு பிள்ளையார் புரம் ஒரு எச்சரிக்கை மணி.) ஆக நிலப்பதிவு ஆவணங்கள் இந்துக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் இந்துக்கள் இரண்டு ஆதாரங்களை காட்டுகிறார்கள். ஒன்று கிறிஸ்தவ டயோஸிஸ¤க்கு சொந்தமானது என கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடும் இந்த தெருவுக்கு ஆத்திக்காட்டு விளை ஊராட்சி சம்பூரண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2.5 இலட்ச ரூபாய் செலவில் காங்கிரீட் தெரு அமைத்துக்கொடுத்துள்ளது. கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசனால் சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இந்த தெருவில் பிள்ளையார்புரம் ஊர் மொத்தத்துக்கும் சொந்தமான தண்ணீர் கிடங்கு உள்ளது. இதில் துயரமான வேடிக்கை ஒன்று உள்ளது. இந்த தெருவில் இருக்கும் இந்த பொது தண்ணீர் நிலைக்கு நிலத்தை தானமாக அளித்தவர் ஒரு இந்து. பிள்ளையார்புரம் ஒரு எச்சரிக்கை. மத அடிப்படையில் வாங்கு வங்கி அரசியல்வியாதிகளால் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது இந்துக்களின் வழிபாட்டுரிமைகள் எப்படி அழிக்கப்படும் என்பதற்கான ஒரு ஒத்திகை நமக்கு காட்டப்பட்டுள்ளது இங்கே. எனவே இந்துக்களும் சரி மத நல்லிணக்கம் சமுதாய முன்னேற்றம் உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றில் அக்கறை உள்ளவர்களும் சரி ஆதிக்க மதவாதிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் நடத்தும் ஆபத்தான விளையாட்டை முறியடிக்க ஒன்றுபட வேண்டும்.

இந்த தெருவை கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசன் தம்முடையது என சொல்கிறது


ஆனால் உண்மை என்ன? டயோசீசனுக்கு உரிய தெருவுக்கு ஊராட்சி 2.5 இலட்ச ரூபாய் செலவளித்ததா?


போலிஸ் தடியடியில் இறந்த இந்து பெண்


போலிஸ் தடியடியில் தாக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட இந்து பெண்கள்


மக்களின் குமுறல்

Labels:

Saturday, June 07, 2008

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

இந்து என்று ஒன்றே கிடையாது என்பதாகவும், நாட்டார் தெய்வங்களே எங்கள் தெய்வங்கள் என்றும் ஜல்லி அடிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் உண்மையில் அம்மன் தெய்வங்கள் தாக்கப்படும் போது, அம்மனை வழிபடும் பக்தர்கள் அடிக்கப்படும் போது, அவர்கள் கண்ணீர் விடும் போது இந்த கூட்டம் மௌனம் சாதிக்கும். இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அப்போது அங்கே இந்து இயக்கங்கள் மட்டுமே போராடும்.ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள்-குல தெய்வங்கள் இந்துக்களின் இரத்தத்தில் உறைபவை. அவற்றுக்காக இரத்தம் சிந்தி போராடவும் கண்ணீர் சிந்தி கதறவும் இந்துக்களால் மட்டுமே முடியும். நாட்டார் தெய்வன்கள் குறித்து ஏசி அறை செமினார்களில் பேசுபவர்களுக்கோ நாட்டார் தெய்வங்கள் இந்து சமுதாயத்தை பிரிக்க ஒரு உக்தி மட்டுமே. மற்றபடி இந்து நாட்டார் தெய்வங்கள் ஊர்வலங்கள் தடைபட்டாலும் சரி பக்தர்கள் தாக்கப்பட்டாலும் சரி இவர்கள் மௌனி பாபாக்களாக மௌனம் சாதிப்பார்கள். அல்லது பழியை தாக்கப்பட்ட இந்துக்கள் மீதே போட்டாலும் போடுவார்கள். கீழே உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இந்து உரிமை போராட்டம். முத்தாரம்மனுக்காக இரத்தம் சிந்தியவர்கள் கண்ணீர் விட்டவர்கள் யார் என பாருங்கள்...
கதறி அழுத இந்து பெண்கள்

நீதி கேட்டு முத்தாரம்மன் கோவிலில் குமுறி அழும் இந்து பெண்
இது மலேசியா அல்ல கன்னியாகுமரி மாவட்ட பிள்ளையார்புரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. 2-ஆம் நாள் திருவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் குழந்தைகள் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது. ...நேற்று நாக்ர்கோவில் வந்த பாஜக தலைவர் இல.கணேசன் பிள்ளையார்புரம் சென்று பார்த்தார். அவரை பார்த்ததுமே பெண்கள் சிலர் கதறி அழுதனர். போலிசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர். பெண்கள் என்று கூட பாராமல் தரக்குறைவாக பேசினர். வீட்டுக்குள் இருந்தவர்களை தேடி தேடி வந்து அடித்தனர் என்று கூறி அழுதனர்.

அல்லல் பட்டு ஆற்றாது அழும் இந்தக் கண்ணீருக்கு பதில் என்ன சொல்வீர்கள்?


[ஆதாரம் படங்கள் & செய்தி தினகரன், தமிழ் முரசு: 7-ஜூன் 2008]