அகப்பயணம்

Sunday, October 28, 2007

இந்து வாழ்வுரிமை மீறல்: 2007


கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியில் இந்துக்களின் அடிப்படை வழிபாட்டுரிமைகள் நசுக்கப்பட்டு அவர்கள் மீது வெறி பிடித்த வெறுப்பியல் தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாகி வருகின்றன. 27-10-2007 அன்று குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் ஊரில் ஆதி திராவிட இந்துக்கள் வாழும் காலானியில் அவர்கள் வணங்கும் அம்மன் கோவிலுக்குள் புகுந்து சிலையினை உடைத்து தூக்கி எறிந்து சென்றுள்ளமையால் பரபரப்பும் ஆத்திரமும் மக்கள் அடைந்துள்ளனர்.
ஆதாரம்: தமிழ்முரசு குமரி பதிப்பு 27-அக்டோபர்-2007

Saturday, October 27, 2007

கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும்

'ஹாய் மதன்'பகுதியில் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கேள்வி பதில்:
கிருஷ்ணர் கடவுளா, அரசரா?என்.பிரபாகர், ஆ.புதூர்.
மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருஷேதிரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில் துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'

தமிழ் வலைப்பதிவர் ஜடாயு அவர்கள் இதற்கு அருமையான பதிலை அளித்திருக்கிறார். இதனை இக்கட்டுரையின் இறுதியில் காணலாம்.

பொதுவாக ஆனந்தவிகடன் போன்ற பொதுஜன பத்திரிகைகளில் தங்களை அறிவுசீவிகளாக காட்டிக்கொள்ளும் மதன் போன்றவர்கள் கூறுவது பெரிய அளவில் மக்களை போய் சேர்கிறது. எனவே அவர்கள் எழுதும் போது பொறுப்புணர்ச்சியுடன் எழுதுவது அவசியம். துரதிர்ஷ்டவசமாக இன்று அத்தகைய பொறுப்புணர்ச்சி - குறிப்பாக இந்து தருமத்தை குறித்து பேசும் போது- இந்த பத்திரிகையாளர்களுக்கு இல்லாமல் போனது வருந்துதலுக்கு உரியது. ரோமானிய சர்வாதிகார அரசியல் தேவைகளுக்காகவும் வன்முறை நிர்ப்பந்தங்களுக்காகவும் ஏசு எனும் கற்பனை பாத்திரம் ஐரோப்பாவின் மீது கடவுளின் ஒரே குமாரன் என திணிக்கப்பட்ட காலத்தைக் காட்டிலும் கண்ணன் இந்த தேசத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி மக்களின் உள்ளன்பினாலும் ஞானிகளின் உண்மை அனுபவங்களாலும் எல்லையற்ற பரம்பொருளாக வணங்கப்படும் காலம் மிக மிக அதிகமானதாகும்.

துவாரகை ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி நமக்கு பல அதிசயங்களை அளித்துள்ளது: துவாரகை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மகா விஷ்ணு விக்கிரகம்

ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்ததற்கும் சரி, ஏறக்குறைய 2500 ஆண்டுகளாக அவர் பரம்பொருள் அவதாரமாக கருதப்படுவதற்கும் சரி ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்.

சாந்தோக்ய உபநிடதத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடப்படுகிறார். புத்தருடைய காலத்துக்கு முந்தையதாக கருதப்படும் இதில் ஸ்ரீ கிருஷ்ணர் தேவகியின் மகன் என குறிப்பிடப்படுகிறார். (சந்தோக்யம் 3:17:6) அவர் ஆத்மஞானம் கை வரப்பெற்றவர் ஆவார். பின்னர் கிமு ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அஷ்டத்யாயீ ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தைக் குறிப்பிடுகிறது.

பதஞ்சலி மகாபாஷ்யத்தில் கிருஷ்ண ஆலயங்களில் துதிப்பாடல்களுடன் வழிபாடு நடந்தது குறிப்பிடப்படுகிறது.

அலெக்ஸாண்டரின் படைகளை தோற்கடித்த புருஷோத்தமரின் வீரர்களின் பதாகையில் வாசுதேவ கிருஷ்ண தெய்வத்திருவுரு திகழ்ந்தது. பாரதத்துக்கு வெளியே உருவான கிரேக்க அரசர்கள் கூட வாசுதேவ-கிருஷ்ணனை வழிபடும் வைணவத்தை ஏற்றுக்கொண்டனர். வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஆண்ட பாக்திரிய-கிரேக்க அரசனான அகோதொகிள்ஸ் வெளியிட்ட வெள்ளி காசுகளில் ஒருபக்கம் ஸ்ரீ கிருஷ்ணரும் மறுபக்கம் பலராமரும் காணப்படுகிறார்கள்.

கிமு 113 இல் கிரேக்க அரச தூதனாக பாரதம் வந்த ஹிலியோதோரஸ் விஷ்ணு பக்தனாகி தேவதேவனான வசுதேவனுக்காக கருடத்வஜம் ஒன்றினை நிறுவினார். அதில் வாசுதேவனை ஆராதித்தும் 'புலனடக்கம், நற்செய்கைகள் மற்றும் ஆன்மாவில் லயித்தல் ஆகியவற்றின் மூலம் முக்தி அடையலாம்' எனவும் இந்த கிரேக்க தூதர் குறிப்பிடுகிறார்.
'தேவர்களுக்கெல்லாம் தேவனான வாசுதேவனின் கருடத்வஜம்'

பாரதத்தின் வடதிசையில் மட்டுமல்ல தெற்கிலும் மக்கள் உள்ளங்களை கவர்ந்திழுத்து ஆன்ம விடுதலல அளிக்கும் பரம்பொருளாகவே ஸ்ரீ கிருஷ்ணன் கருதப்பட்டார்.

ஐந்து மூர்த்தங்களை திருமால் தன்னுடன் உள்ளடக்கியவர்.சங்கருஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் மற்றும் வாசுதேவன் என்பவை அவை. பரிபாடல் அழகு தமிழில் இதனை நமக்கு தருகின்றது:
செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்!
- (பரி.3:81-82)

சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.

காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் கண்ணனையும் பலதேவனையும் இருப்பெருந் தெய்வம் என பாடுகின்றார்:

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு
-புறம்:58:14-16
பிறப்பித்தோர் இல்லாத கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் தயாபரனாவான். இதனை பரிபாடல் விளக்குகிறது:
புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
-பரி.15:49-52
ஆக ரொம்ப ரொம்ப காலத்தை குறைவாக மதிப்பிட்டாலும் கூட கிமு 500 க்கு சற்றும் குறையாத காலம் முதல் பரிபாடலின் ஏழாம் நூற்றாண்டு ஊடாக இன்று வரையிலுமாக கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக வணங்கும் பாரம்பரிய தொடர்ச்சியினைக் காணமுடியும்.
சோழர் கலையழகில் அருள் தரும் காளிங்க மர்த்தனன்

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா ஆத்மஞானி என்பதனை சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. கம்சனின் கொடுங்கோலிலிருந்து மக்களை காப்பாற்றி, அமைதியின் தூதுவனாக நடந்து, கீதை எனும் அருமருந்தை மானுடத்துக்கு அருளிய ஒரு ஆத்மஞானி பரம்பொருளில் லயித்த ஒரு வாழ்க்கை வாழ்ந்த கர்மயோகியை பரம்பொருள் என பாரதம் வழிபடுவதில் அதிசயம் என்ன? அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் அவ்வாறு வணங்கப்பட்டிருக்கலாம். எனவே 'அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான்' என மதன் கூறுவது பெரும் அறியாமையாகும்.

மதன் பெயர் சொல்லாமல் குறிப்பிடும் சைதன்ய மகாப்பிரபுவுக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே ஆழ்வார்கள் கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக அனுபவித்து அன்பு செய்தனர். ஆயர் குல மாயன் ஆழ்வார்களுக்கு அனைத்துமாகி நின்றான்:

ஆறுமாறு மாறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடோசை ஆய ஐந்து மாய ஆய மாயனே
- நாலாயிர திவ்ய பிரபந்தம் 753
என திருமழிசை ஆழ்வார் ஆயர்குல மாயனை பரம்பொருளாக கண்டுணர்ந்தது சைதன்யருக்கு பிறகு அல்ல.

இன்னும் சொன்னால், சைதன்யரின் பக்திக்கு தென் தமிழகம் பெரும் பங்களிப்பு கொடுத்துள்ளது.

சமுதாயம் விலக்கிய தொழு நோயாளியை அணைத்து சேவை செய்யும் வைணவ அன்பு அருள் வடிவம் சைதன்யமகாபிரபு
சைதன்ய மகாபிரபு (1486-1533) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவில் வந்து அங்கிருந்து 'பிரம்ம சம்ஹிதை' எனும் வைணவ தத்துவங்களுக்கு எல்லாம் சாரமான மிக அரிதான ஒரு நூலை கண்டு அதனால் நெகிழ்ந்து மனமுருகி அதனன பிரதி எடுத்து அதனை மிகவும் சிரத்தையுடன் பொக்கிஷமென வட பாரதத்துக்கு கொண்டு சென்றார்.
சைதன்ய மகாபிரபு அருட் திருவடிகள் பட்ட குமரி மாவட்ட ஆதிகேசவ பெருமாள் கோவில்
ஆதிகேசவ பெருமாள் கோவில் தூண் சிற்பத்தில் நான்கு கரங்களுடன் விஷ்ணு ரூப சதுர் புஜ வேணு கோபாலன்
உண்மைகள் இவ்வாறு இருக்க திரு.மதன் போன்றவர்களும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளும் இந்து தருமம் குறித்த விசயங்களில் கவனமில்லாமல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் தவறான தகவல்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என இணைய உலகு வாழ் இந்துக்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஜடாயு அவர்களின் கட்டுரையை காண இங்கே சொடுக்கவும்

Friday, October 05, 2007

The Ravana humbled

Labels: ,

ராட்சத கோமானு(ளி)க்கு எச்சரிக்கை:கார்ட்டூன்



அன்புள்ள வேத தருமக்காரர்களே அன்பு வழி நடக்கும் சான்றோரே, கீழே காணப்படும் அய்யா வைகுண்டரின் அருள் மொழி எந்த அரசியல்வாதியையும் குறிப்பிட்டு சொன்னதல்ல. ஆனால் இராவண அரக்க புத்தியுடன் அரசாளும் எந்த அதிகார வெறி பிடித்து ரவுடித்தனம் செய்தலைந்து இராமரையும் இராம பக்தர்களையும் அவமானப்படுத்துகிற எவரும் எத்தகைய நிலையை அடைவார்கள் என தெள்ளத்தெளிவாக கூறுகிறார் அய்யா வைகுண்டர். அத்தகைய கேடு கெட்ட நிலையை அடையாமல் சிலருக்கு நல்ல புத்தி கிடைக்க பிரார்த்திப்போம். ஆனால் ராம பக்தர்களை தாக்க துணியும் கீழ்த்தரங்களுக்கு நல்ல புத்தி ஏறாவிட்டால், நாடு நலம் பெற அவர்கள் கீழ் கண்டவாறு அழிய கைலயங்கிரி வாழ் ருத்ர மகாதேவனை கீழ் கண்டவாறு பிரார்த்திப்போம்.
இராம பக்தரை அவமதிக்கும் அதிகார ஆணவம் பிடித்த அரக்கனுக்கு அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் அளித்துள்ள சாபம்:
இராம பாணத்தோடே இராமர் தசரதற்கு
முன் ஆகமத்தின் படி உலகில் உதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினி தன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்து புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன் தனை நோக்கி
[அகிலத்திரட்டு: 1177-86]
தினமும் இதனை ஒரு முறை கூறி இறைவனை வேண்டவும். அத்துடன் கொடிய ஆட்சிகள் நாட்டில் ஏற்படாமல் இருக்க இதனை துண்டு பிரசுரங்களாகவும் விரும்புவோர் வெளியிடலாம்.

Labels:

Monday, October 01, 2007

இராமர் பாலமும் எனது நிலைபாடும்

சகோதரர் சிறில் அலெக்ஸ் ஒரு வினாவை எழுப்பியிருந்தார்:
Why sudden affection toward Ram Sethu? I remember you had another blog earlier saying believing in Ram Sethu as real bridge built by Ram was against Hindu principles. I remember arguing with you about how Historical references to Gods are taken seriously in religion.
எனது நிலைபாடு இது குறித்து என்ன என்பதனை விளக்கிவிடுகிறேன்.

1. தொடக்கம் முதலே இராமர் பாலம் கட்டியதற்கு நாஸா ஆதாரம் இருக்கிறது என்பதையும் சரி அல்லது 175000 ஆண்டுகளுக்கு முன்னரே இராமர் அதனைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதையும் சரி நான் எதிர்க்கிறேன். இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தயவு செய்து சிறில் எனது கட்டுரையை மீண்டும் படிக்க வேண்டும். அதில் பிபி லால் எனும் அகழ்வாராய்ச்சியாளரைக் குறிப்பிட்டுள்ளேன். அவரது ஆராய்ச்சி முடிவின் படி ஸ்ரீ இராமரின் காலம் கிமு 700 என கருதுகிறார். (சில ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் முன்னரே இராமர் வாழ்ந்ததற்கு அகச்சான்றுகளை தருகின்றனர். ஆனால் அகச்சான்றுகள் புறச்சான்றுகளுடன் ஒருங்கிணணயும் போது மட்டுமே ஓரளவு உண்மைக்கு அருகாமையில் வரும் வரலாற்றறிவியல் ஊகங்களை முன் வைக்கமுடியும்.) ஆக, பிபிலாலை குறிப்பிடுவதே 175000 ஆண்டுகளுக்கு முற்பட்டு கட்டப்பட்டதாக கருதப்படும் மடத்தனத்தை எதிர்ப்பதாகும்.
2. தொடக்கத்தில் இருந்தே இராமர் பாலத்தின் புனிதத்தன்மையை நான் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பதுடன் அதனை ஏற்றிருக்கிறேன். உதாரணமாக நீங்கள் (சிறில் அலெக்ஸ்) குறிப்பிடும் வலைப்பதிவிலேயே உள்ள வார்த்தைகளைப் பாருங்கள்:
"இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.
இதனை இப்படி விளக்க முற்படுகிறேன். இஸ்ரேலின் சாவுக்கடலை நோக்கியபடி ஒரு நெடிதுயர்ந்த உப்புப்பாறை பெண்ணின் தோற்றத்துடன் காணப்படுகிறது. நிச்சயமாக இயற்கையான உருவாக்கம்தான். ஆனால் ஆபிரகாமிய மதநம்பிக்கைகளின் படி அது இறைதூதராக நம்பப்படும் லாத்து என்பவரின் மனைவி உப்பாக உறைந்த பாறை என கருதப்படுகிறது. அதன் அருகில் உள்ள குகையில் லாத்து தன் புதல்விகளுடன் தங்கினார் என நம்பப்படுகிறது. அங்கு ஒரு மடாலயம் உள்ளது. அங்கு கிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருகிறார்கள். இப்பாறை இயற்கையானது என நிலவியலாளர்கள் கூறினாலும் கூட அதனை ஒரு நெடுஞ்சாலை திட்டத்துக்காக உடைக்க ஜோர்டானிய அரசோ இஸ்ரேலிய அரசோ முன்வருமா? அப்படி முன்வந்தால் அது எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும்? பாரதத்தை பொறுத்தவரையில் இத்தகைய புனித நிலவியல் (sacred geography) தேச ஒருமைப்பாட்டுக்கும் பயன்படுகிறது. ராமர் சேது பாரதம் எங்கும் பரவிவிட்ட அத்தகைய சின்னங்களில் ஒன்று. இராமாயணத்தின் வரலாற்றுத்தன்மையை குறித்து கவலைக் கொள்ளாத அதன் அகத்தன்மையையே முன் நிறுத்திய மகாத்மா காந்தி எனவேதான் சேதுபந்தனத்தை தேசிய ஒற்றுமையின் சின்னமாக தனது ஹிந்த் சுவராஜ்ஜியம் நூலில் எழுதினார்.
3. இன்று வரையிலான என் எழுத்துக்களில் இந்த இரண்டு அம்சத்தையும் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். கீழே உள்ள என் எழுத்துக்களை பாருங்கள், நான் சொல்வது விளங்கும்.

  • திண்ணை: 2002 இல் நான் எழுதியது:
    நாசா புகைப்படத் தொகுப்பு அட்டவணையை http://images.jsc.nasa.gov/iams/photos/2002/10/earth/STS006/lowres/ என்னும் இணைய முகவரியில் காணலாம். ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் இங்கு உள்ளன. திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.

  • பிப்ரவரி 2007 இல் 'இராமர் பாலம் - நாஸா ஆதாரம்' கண்டித்து நான் எழுதிய (அதாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவில்)வலைப்பதிவில் நான் எழுதிய கமெண்ட்:
    அந்த இயற்கை அமைப்பு இடிபடக்கூடாது என்பதில் நானும் அக்கறை காட்டுகிறேன். அதனை இராமர் பாலம் என அழைக்கும் பாரம்பரியத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங், நாஸா என்றெல்லாம் கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையை, வக்கிரத்தைதான் கண்டிக்கிறேன். இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்துக்கே பெருநட்டம்.

  • அதே பதிவின் கமெண்டில் நியோ எனும் நண்பருக்கு நான் அளித்த பதிலில் இராமர் பால அமைப்பின் சூழலியல்/உயிரிப்பன்மை தன்மையயயும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
    நியோ அக்கட்டுரையை படித்தேன். சுட்டிக்கு நன்றி. ஆனால் இன்றைய தேதியில் அங்கிருக்கும் உயிரிப்பன்மைக்குறித்து அங்கு வாழும் உயிரி இனங்கள் குறித்து அப்பகுதிக்கே உரித்தான அரிய இனங்கள் குறித்து ஏதேனும் தரவுகள் நமக்கு உண்டா? இல்லை என்றே நினைக்கிறேன். இதோ என் முன்னால் 688 பக்கங்கள் கொண்ட 'Flora of the Gulf of Mannar' கிடக்கிறது. Botanical survey of India வினால் 2001 இல் வெளியிடப்பட்டது. பவள அமைப்புகள் குலைக்கப்படுவது (இது சேதுசமுத்திர திட்டம் போல பெருமளவு அழிவல்ல...அத்துடன் ஒப்பிடுகையில் வெகு சாதாரணமானதுதான் என்பதனை கவனியுங்கள்) குறித்து அது என்ன சொல்கிறதென்றால், " பவள அமைப்புகளை க்வாரி செய்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட அந்த சட்டவிரோத காரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 250 க்யூபிக் மீட்டர் அளவு பவளப்பாறைகள் கூட நாளைக்கு நீக்கப்படுகின்றன. இது கடற்கரையோர நீர் சுழற்சிதன்மைகளை மாற்றிவிடும். இவற்றின் அழிவு கரைப்புற மணல் அரிப்பையும் அதிகப்படுத்தும்." படங்களுடன் கடல் அரிப்பின் தன்மையை இதுவிளக்குகிறது. தூக்கம் கண்ணைக்கட்டுவதாலும் இது தனிப்பதிவாக போடுதற்கு உரியது என்பதாலும் பின்னர் விரிவாக எழுதுகிறேன். தென்கிழக்கு ஆசியாவின் முதல் நீரிலமையும் உயிரிக்கோள காப்புமண்டலம் இப்பகுதியே என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். இதன் உயிரிபன்மையினை அறிவது குறித்தோ காப்பாற்றுவது குறித்தோ எவ்வித ஆர்வமும் இல்லை. டயர்களை போடலாம் இத்யாதி ...போடமாட்டார்கள் என்பது வேறுவிசயம்...ஆனால் அகழ்ந்தழிக்கப்படும் பன்னெடும் இலட்சக்கணக்கான ஆண்டு பவள அமைப்புகள் அழிவின் முன்னால் டயர்களை போட்டு -அதுவும் சேதாரமான பயன்படாத டயர்கள்தாம்-அல்லது பவளப்பாறைகள் மீண்டும் எழும் என்கிற வாதம். எழும்தான். ஆனால் பெட்ரோலும் டீசலும் இன்ன்பிற மாற்றங்களும் பெற்ற கடலின் தன்மைக்கு தகவமைந்து எழும். அதற்கும் அழிக்கப்பட்ட தொல்நெடுங்கால பரிணாம வரலாற்றெச்சங்களை தாங்கி நிற்கும் பவளப்பாறைகளை நாம் அலட்சியமாக அழித்தொழிக்க போவதற்குமான வேறுபாடு எத்தகையது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் உணரவேண்டுமென்பதில்லை.

மேலும் அண்மையில் எழுதிய கட்டுரைகளில் கருணாநிதியின் அறிவற்ற வாதத்தையும், ஏதோ இராமருக்கு தென்னிந்தியாவில் மதிப்பே இல்லை என்கிற ரீதியாக போலி அறிவாளிகள் வடக்கிலும் ஊடகங்களிலும் விடும் கதையையும் கடுமையாக மறுத்திருக்கிறேன். புறநானூறு, அகநானூறு ஆகியவற்றிலும் சரி சிலப்பதிகாரத்திலும் சரி ஸ்ரீ இராமன் அரக்கர்களை அழித்தது குறித்தும் அவர் இராமேஸ்வரம் வந்தது குறித்தும் கூறப்படுவதையும் அவற்றில் இராமரின் அவதாரத்தன்மை சுட்டிக்க்காட்டப்படுவதையும், அய்யா வைகுண்டர் தம்மை இராமர் கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களின் வழியிலேயே வந்த அவதார புருஷன் எனக் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். இதிலும் கூட இராமர் பாலத்தை ஏதோ 150 மில்லியன் அல்லது 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறி அதற்கு அறிவியல் சான்றாதாரம் தேடும் முயற்சியை கண்டித்துள்ளேன். உதாரணமாக இது United Press International அமைப்புக்கான ஆசிய பதிப்பில் இரண்டு வாரங்கள் முன்னர் வெளிவந்துள்ள என் கட்டுரையிலிருந்து:

Some Eric von Daniken-type Western Vaishnavite devotees who sought NASA certification for the fundamentalist understanding of Hindu epics and mythologies, and a group of Hindu nationalists who happily swallowed this bamboozlement, repeating it and fitting themselves with glee into the stereotype that their ideological opponents offered them -- they all, albeit unwittingly, paved the way for the "insult" that Sri Rama and the Hindus face today.
முழுக்கட்டுரையையும் காண இந்த உரலில் சொடுக்கவும்: Bridge that never was and ever is
இதே வலைப்பதிவில் வரலாற்றறிஞர் ரொமிலா தப்பாரின் சில கருத்துகளை எதிர்த்து இது விசயமாக எழுதியுள்ள கட்டுரையிலும் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளேன்:
That said one cannot but agree with Prof. Thapar when she states that a search for a non-existent man-made structure takes away from the imaginative leap of a fantasy and denies the fascinating layering of folk-lore. While rejecting the literalists, one is at a loss to understand why Prof. Romila Thapar fails to see the cultural dimension of the natural formation that inspired the imaginative leap of not just fantasy but also devotional literature of a nation and the fascinating layering of the same by folk-lore and transforming it into one of the centres of national integration as acknowledged by none other than Mahatma Gandhi in his ‘Hind Swaraj’. In India, the whole national integration has been achieved through immersing the nation in such sacred geographic features associated with epic narrative, mythology, devotional literature and folklore.


ஆக, என் நிலைப்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இல்லை. காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.