அகப்பயணம்

Wednesday, March 31, 2010

மன்னிப்பு கேட்க சொன்னேனா? அட ராகவா!

அய்யா டோண்டு,

ரொம்ப நல்ல காரியம் பண்ணினீர். என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள். மார்க் ஆண்டனி சீசரை புதைக்க புகழ அல்ல என்று உரையாற்றிய போது கேட்ட மக்களெல்லாம் உம்மைப் போல இல்லை. சரித்திரம் மாறியிருக்கும். குறைந்த பட்சம் சேக்குசுப்பையரின் நாடகமாவது ஊத்தியிருக்கும். நான் மன்னிப்பு கேட்க சொன்னேனாம்....அட ராமா! எதுவானால் என்ன வெண் தாடியில் மண் ஒட்டாமல் விழுந்தெழுந்து face value வில் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வீராப்பாக நிற்கும் ஈகோ குறித்து சந்தோஷம்.

சரி இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். நேற்று உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் போட்ட உடனேயே எனக்கு ஒரு ஈமெயில் "if you want dondu's favour" என திட்டி. முன்பெல்லாம் போலிதான் இப்படி உங்கள் ப்ளாக்கில் கமெண்டிட்ட உடன் திட்டி அனுப்புவான். இதோ மனநலமற்ற போலிக்கு ஒரு வாரிசு வலையுலகத்தில் வந்துவிட்டது. அய்யா டோ ண்டு இதுவரை நீர் எனக்கு என்ன "favour" எல்லாம் செய்திருக்கிறீர்...உம்மிடம் நான் என்ன "favour" எல்லாம் யாசித்திருக்கிறேன்...என்னுடைய ஸ்விஸ் பாங்க் அக்கவுண்டை ஆபரேட் செய்ய உங்களுடைய "favour" எனக்கு எப்படி உதவுகிறது என்பதையெல்லாம் தயவு செய்து விளக்குகிறீர்களா? (இழவு! ஜோக் அடிக்கவும் பயமாயிருக்கிறது சீரியஸாக எடுத்துக்கொண்டு விளக்கினாலும் விளக்குவீர் பிறகு எவனாவது அவன் கிறுக்குகிற நிர்வாண வக்கிரத்தையெல்லாம் ப்ரேம் போட்டு எனக்கு அனுப்புகிறேன் எனக்கு யூரோவில் பணமனுப்பு என்று கேட்டாலும் கேட்டு வைப்பான்! போணியாகமால் கிறுக்குகிற கிறுக்கன்கள் சென்னை வெயிலில் நிறையவே திரியுறான்கள்.)

இது டோண்டுவுக்கு அல்ல. எதுவானாலும் அவ்வாறு நான் டோண்டுவிடம் "favour" யாசிப்பதாக எனக்கு மெயில் அனுப்பிய ஜென்மத்துக்கு சொல்லுகிறேன். எனக்கு டோண்டு நெட்டையா கட்டையா குண்டா ஒல்லியா என்பது கூட தெரியாது. அவரை சந்திக்கவோ பேசவோ எனக்கு ஆசையுமில்லை ஆர்வமும் இல்லை. எனக்கு அவருடைய பல நிலைபாடுகளில் உடன்பாடும் இல்லை.அவரால் எனக்கோ அல்லது என்னால் அவருக்கோ ஆகப் போவதும் எதுவுமில்லை. இப்படி "favour"களால்தான் வலையுலக நிலைபாடுகள் நிகழ்கின்றன என அற்பத்தனமாக நீ நினைத்தாய் என்றால் நல்ல மனநல நிபுணரை -someone with some sense of professional ethics and basic human decency- நீ நாடுவதே நலம்.

அரவிந்தன் நீலகண்டன்

Setting the Record Straight for the Rudrans-II

எனது மெயில்
Wed, Mar 17, 2010 at 1:59 PM
//Take your time Doctor. And let us talk with open hearts.
Perhaps it will be a learning experience and even a pleasure for both of us.
luv
Arvind.S//

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 6:59 PM
subject Re: well,
அன்புள்ள ருத்ரன்,

1. நீங்கள் 'உரையாடும்' மேரி (அவளது நித்திய கன்னித்தன்மையே மொழி பெயர்ப்புத் தவறினால் அவள் சுமக்கும் கட்டாயம்) குறித்த மெல்லிய நகைச்சுவை, உங்களைப் போல மெத்த படித்த வயது முதிர்ந்த உளவியலாளருக்கு உறுத்தல் ஏற்படுத்துகிறது. அப்போது ராஜா ரவிவர்மா காலெண்டர் ஆர்ட் சரஸ்வதியையே பார்த்து வளந்த ஹிந்துவுக்கு ஹுசைனின் ஓவியம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

2. ஆனால் அப்படி ஒவ்வொரு ஹிந்துவினிடமும் ஹுசைனின் கலையை கொண்டு சென்று ஹிந்துத்துவவாதிகள் அவருக்கு எதிராக வெறுப்பை கிளப்பவில்லை. அதே நேரத்தில் அவர் நிர்வாணத்தை ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக பிற இடங்களில் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இங்கு பிரச்சனை நிர்வாணம் அல்ல. நிர்வாணத்தை இழிவுப்படுத்தும் ஒரு குறியீடாக ஹுசைன் உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்பதுதான். இதற்கான பதிலைத்தான் நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். மாறாக எவ்வித creativity இம் இல்லாமல் ஹுசைன் க்ளோனாக ஒரு படத்தை வரைந்து என்னையும் யாராவது கலைத்தியாகி ஆக்க மாட்டார்களா என வேண்டுகோள் விடுவது is funny and is not funny. (எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான்ங்கிற மனச்சிக்கல் உங்களுக்கு இருக்குதோன்னு தோணுது.)

3.இதுவரை எத்தனை இடங்களில் ஹுசைன் அவர் தாக்கப்பட்டார்? அவரது ஓவியங்களில் எத்தனை அழிக்கப்பட்டன?

4. பொதுவாகவே ஹுசைனுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது. நெருக்கடி நிலையை உருவாக்கி இந்தியாவை உண்மையிலேயே எதேச்சதிகாரத்துக்கு அருகில் இந்திரா கொண்டு சென்ற பின்னர் மொரார்ஜியை குரங்காகவும் இந்திராவை துதி செய்தும் ஓவியங்கள் தீட்டியவர் அவர். ஹுசைன் ஹிந்து மதத்தையும் இதே தன்மையுடன் அணுகிறார் என்றே அவரது ஓவியங்களைக் காணும் போது தோன்றுகிறது. ஹுசைனின் ஓவியங்களின் ஊற்றுக்கண் அவர் ஆழ்மனதில் வெறுக்கும் ஹிந்து தேவ தேவியராக அமைந்து தொலைக்கிறார்கள். குறிப்பாக பெண் தெய்வங்கள். அவர் சார்ந்த மதத்தில் மிகவும் மோசமான தீமையாக பெண் தெய்வங்களே கருதப்பட்டார்கள். அவர் சார்ந்த மதத்தில் இறைதூதராக நம்பப்படும் நபர் அவர்கள் புனிதமாக கருதும் நகரை வென்ற போது கறுநிற பெண் தெய்வம் அழுதபடி ஓடி அழிந்ததாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த பெண் தெய்வ எதிர்ப்பு இறையியலின், இறையியல் சார்ந்த வெறுப்பின், கலைவெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்கள் தொடர்ந்து ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை காட்டுவதை ஒரு ஹிந்து கண்டால் அதனால் மனம் வெதும்பி வழக்கு தொடர்ந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் இறை நிந்தனை சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஹுசைன் "அடைக்கலம்" அடைந்த நாட்டின் நிலை என்ன? அங்கு இஸ்லாமியன் இஸ்லாமைத் துறந்தால் சட்டப்படி மரணத்தண்டனை. தனியார் பத்திரிகை என்றாலும் அரச குடும்பத்தினரும், அரசியல்வாதிகளும் சொந்தமாக நடத்தும் அல்-வதன் இதழோ யூத வெறுப்புச் சித்திரங்களை தீட்டுவதை ஒரு மதக்கடமையாகவே நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் கத்தாரில் குடியுரிமை வாங்கியதில் ஹுசைன் சொல்லும் செய்தி இதுதான்: ஜனநாயகத்தில், ஜனநாயகமான ஆன்மிக மரபில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிந்தியுங்கள்.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்
- Show quoted text -

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 8:26 PM
subject Re: well,
mailed-by gmail.com
Dear Dr.R,

I have never put any comment in your blog in which i have not identified myself in my own name. In fact I have been active in the net-space for the last 10 years and have never abused anyone that too in pseudonym. On the contrary because I use my name i have received all sorts of abuse and even threats. But I have never made them public trying to portray myself as a martyr.

I have work in Chennai so I will be leaving Kanyakumari for Chennai tomorrow. Perhaps we can talk in phone.

luv
s. aravindan neelakandan

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 8:36 PM
subject Re: well,
mailed-by gmail.com
hide details Mar 17
Thank you for the wish. It is not your wish but your high pedestal blessings and certification that i do not want.

s. an

அடுத்த மெயில்
dear doctor,

ur wishes work well. :)
my trip has been cancelled.
i left a comment on ur blog
but power went off so not sure u got it.
did u
or should i repost it

அடுத்த மெயில்;
date Thu, Mar 18, 2010 at 10:20 PM
subject Re: well,
mailed-by gmail.com
hide details Mar 18 (13 days ago)
Tried to put this in your blog. But your blog comment box refused. So here it is:

அன்புள்ள ருத்ரன்,

உங்கள் கட்டுரையில் நீங்கள் காட்டியிருப்பது தவறான பார்வை. உதாரணமாக:
// பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை,//

இல்லை. முனைவர்.அ.கா.பெருமாள் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவரது 35 ஆண்டு கால கள ஆய்வுப் பணிகளை "சுண்ணாம்பு கேட்ட இசக்கி" எனும் நூலாக எழுதியுள்ளார் (United Writers, 2006) ஒரு கிராமப்புற பெண் தெய்வத்தை (தீப்பாஞ்ச அம்மன்) குறித்த கள ஆய்வு. அத்தெய்வ சிற்பத்துக்கு கல்லிலேயே ஆடை செதுக்கியிருக்கிறார்கள் கூடவே மேலே பாவாடை சாத்தியிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளருடன் கூடவே 'தகவலாளி' (informer - நம் சமுதாய அறிவியல்கள் அனைத்துமே இத்தகைய உளவுத்தன்மையுடன் இருப்பது ஒரு காலனிய விளைவு) அம்மனின் ஆடையை நீக்கி படமெடுக்கின்றனர். இனி பேராசிரியரின் வார்த்தைகளில் "அப்போது நீட்டி முழக்கி யாரோ ஏசும் சப்தம் கேட்டது. 'ஏ நாசமாப் போவான் சண்டாளா சாமக்காரா அம்மணங்குண்டியாவா அம்மன போட்டோ எடுப்பா? வெளங்கா...மகனே!துலங்காத....மகனே" என தொடர்ந்து ஏசும் சப்தம் கேட்டது....ஜம்பர் அணியாத அந்தப் பாம்படக் கிழவி சொன்னதையே திரும்ப திரும்பச் சொன்னாள்.

பாவம் ருத்ரனின் 'எப்படி அம்மனையும் முனீஸ்வரனையும் வணங்கும் மக்கள் நடந்து கொண்டால் என் வலைப்பதிவில் பாராட்டு கிடைக்கும்' என்கிற வரையறை அந்த 'ஜம்பர் அணியாத பாம்படக் கிழவி'க்கு கிடைக்கவில்லை போலும் அல்லது ஒருவேளை அவள் 'ஹிண்டூஸ்'களால் 'இன்ப்ளூயன்ஸ்' ஆகியிருப்பாளோ? க்ளோபல் டாக்டர் ப்ராயிடும் லோக்கல் டாக்டர் ருத்ரனுமே அறிவர். கிராம தேவதைக் குறித்து முனைவர் அ.கா.பெருமாள் மேலும் எழுதுகிறார்: "அம்மன் பாவாடையும் தாவணியும் இல்லாமல் இருந்தாலும் அம்மணமாக இருக்க மாட்டாள். சிற்பி கல்லிலேயே ஆடையைச் செதுக்கி இருப்பான். மோகினி உருவம் மட்டும்தான் பெண் உறுப்பைக் காட்டிக்கொண்டிருக்கும். நிர்வாணச்சிலையை யாரும் பிரதிஷ்டை செய்ய மாட்டார்கள்." ஒருவேளை மயிலாடி சிற்பிகளெல்லாம் ரவிவர்மா படத்தைதான் மாடலாக வைக்கிறார்களோ? ஆடையோடு வடிக்கப்பட்ட அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்ட துணியாடையை எடுத்ததற்கே இந்த பேச்சு. இதை ஒரு சமூக-மனவியல் பரிசோதனையாகவே செய்யலாம். ஒரு பதினைந்து கிராம அம்மன் கோவில்களை தேர்ந்தெடுப்போம். ருத்ரன் அங்குள்ள அம்மன்களை நிர்வாணமாக ஹுசைன் 'இசுடைலில்' வரையட்டும். பின்னர் அந்த ஊர் கிராம பெண்களை அழைப்போம். இதோ உங்க ஊர் அம்மன். இதை நாங்க பெரிய 'ஃபைவ் இஷ்டார் ஓட்டலுல' ரிஸப்ஷன்ல வைப்போம். என்று சொல்லுவோம். எத்தனை ஊர்களில் துடப்பக்கட்டையால் அடி படாமல் வருகிறோம் என்பதை நாம் பிறகு எலும்புசிகிச்சை மருத்துவமனை பில்லுடன் சேர்த்து கணக்கிடலாம்.

சரி விடுங்கள். இந்த நிமிஷத்தில் எத்தனை ஊர்களில் சாதாரண கிராம மக்கள் -பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்- தங்கள் அம்மன் கோவில்களை ஆதிக்க அன்னிய மதமாற்ற சக்திகளிடமிருந்து பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த சுட்டியை க்ளிக்குங்கள் தெரியும்: http://www.tamilhindu.com/2010/01/hindus-under-attack-in-dindigul-village/

அய்யா ருத்திரனே நீங்கள் முற்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கலாம். நீர் சமுதாயத்தின் மேல்தட்டை சார்ந்தவராக இருக்கலாம். உம்முடைய ஓய்வு அறையின் romantic imaginationக்கு எங்கள் மக்கள் அன்னிய ஆக்கிரமிப்பு அழிப்பு மதமாற்ற மதங்களை எதிர்த்து நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தாதீர்கள். எங்கள் தாய் தெய்வங்கள் அன்னியமதமாற்றிகளால் பழிக்கப்படுகின்றன. பேய்கள் என்றும் பிசாசுகள் என்றும் சொல்லப்படுகின்றன. நாங்கள் அவற்றை எதிர்த்து போராடுகிறோம். எங்கள் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சாதியத்தால் அடக்கப்பட்ட எம் மக்களின் சமூக விடுதலைக்கும் மதமாற்றத்தால் அழிக்கப்படும் எம் மக்களின் ஆன்மிக விடுதலைக்குமான இப்போராட்டம் அய்யா வைகுண்டர் போன்ற அவதார புருஷர்களால் காவிக் கொடியின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டது. சாய்வு நாற்காலியில் சரிந்தபடி புளித்த ஏப்பம் விடும் ஹிண்டு பத்திரிகை படிக்கும் சீனவிசுவாசி நகரவாசிகளால் அல்ல.

எனவே அடுத்த முறை ஏதாவது எழுதுவதற்கு முன் வெறும் புத்தகங்களை மட்டுமல்ல அடக்கப்பட்ட எம் மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டு கதையுங்கள்.

அன்புடன்

அடுத்ததாக நான் இவருக்கு அனுப்பிய ஒரு பெர்ஸனல் மெயில் அதில் உள்ள என்னைக் குறித்த சில தனிப்பட்ட இந்த விவாதத்துக்கு தேவையில்லாத சில தகவல்களை மட்டும் நீக்கிவிட்டு அதனையும் இங்கே வெளியிடுகிறேன். இம்மடலை நான் இந்த மனிதருக்கு அனுப்பிய காரணத்தையும் சொல்ல வேண்டும். அவரது குடும்ப நபரைக் குறித்து மோசமாக எவனோ அனுப்பியதால் அவர் மனச்சோர்வுற்றிருக்கலாம் என நினைத்து இணையத்தில் இது ஒரு occupational hazard இதை விட மோசமான கொடுமைகளை திராவிடனிஸ்ட் வக்கிரங்களிடமிருந்து நாங்கள் அனுபவித்திருக்கிறோம் எனவே கவலைப்படாதீர்கள் என்பதற்காக எழுதியது...

Dear Dr. Rudran,

I hope you will answer my mail. I am really sad to see the kind of obscene messages you have received.
But what pains me is the irrational correlation of a mental disease/perversion with what you call "Parpaneeyam".

In 2007 almost daily my mail box used to be filled with unprintable filthy comment -***. This was done not by an individual but by a group. Some of these group members were then even my friends (though I did not know it then,) It was their tactics and they tried to get personal data through friendship and then pass it on to their friend in Malaysis who in turn would fill your mail box will all obscenities and hinting that they know about your personal life. Some of us tried hard to nail these guys. And at last the very group had an internal fight and then the person who was actually posting the obscene things was handed over to cyber police. And all this perversion was done in the name of fighting against Brahminism. Some of these guys I actually find in your blog supporting you. A funny thing.

So the problem you face is neither peculiar nor ideology based. It is a perversion arising out of the immense freedom and anonymity that web provides. best way is to ignore him or if u want to be pro-active approach some good cyber-wizards

I have stored these obscene messages without publishing because they give a peep into a pathological mind which only uses the mask of an ideology. And that mind -its pathology- interests me. Perhaps I can even help. But I stopped blogging.

Here are just a very small fraction of the kind i was forced to look at when i opened my mail box
[just some samples of worst abuses i received about my family members and myself from Poli]
So Dear Dr. Rudran,

Relax. We all have gone through this phase in our lives in Blog-sphere.
The world will always be like that. This is the freedom one has to pay for the other great democratization the net provides.

Good Night.
luv
S. aravindan neelakandan

just to set the record straight

அண்மையில் திரு ருத்ரன் என்கிற மனநல மருத்துவருடன் ஒரு தனிமடல் உரையாடலில் ஈடுபட்டேன். அது ஒரு உரையாடலாக இருக்கும் என்கிற எண்ணத்தில். துரதிர்ஷ்டவசமாக அவரது ஒரு மானுடக்குழுவின் மீதான காழ்ப்புணர்ச்சி மீது நான் வைத்த விமர்சனங்கள் அவரது ஈகோவை காயப்படுத்தி விட்டன போலும். அவரது துணைவியார் என்னை விமர்சித்திருக்கிறார். எனவே just to set the record straight:

இது உமா என்கிற பதிவர் டோ ண்டுவின் கமெண்ட் பாக்ஸில் சொல்லியிருந்த விஷயம்:

//நீங்கள் ருத்ரனுக்கு தனியாக அனுப்பும் மெயில்களையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டங்களையும் பார்க்கிறேன். இந்த "Playing to the gallery" தான் பார்ப்பனீயம். Kudos//

My reply:

உங்களைப் போன்றவர்களின் புரிதல் எனக்கு அயர்ச்சி அளிக்கின்றன. என்னுடைய தவறெல்லாம் என்னவென்றால் லாசராவுடனெல்லாம் பழகிய மனிதர் பெரிய மனிதராக இருக்க வேண்டும் என நினைத்தது மட்டுமே. சரி அப்படி என்ன அவருக்கு தனிமடலில் அனுப்பி விட்டேன் என்பதையும் இங்கு நான் எழுதியிருப்பதுவும் அதுவும் எத்தனை வேறுபடுகிறது என்பதையும் பார்க்கலாம்.

இதோ நான் அவருக்கு அனுப்பியது:

2007 இல் என் வலைப்பதிவில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் மிக மோசமாக என்னையும் என் குடும்ப நபர்களையும் மிக மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட்கள் குவியும். மெயில் பாக்ஸை திறக்கவே எரிச்சலாக இருக்கும். இந்த திருவிளையாடலை செய்த நபர் திராவிட கருத்தியல் கொண்ட ஒரு குழுமமாக செயல்பட்டவர்களுள் ஒருவர். அவரது இந்த இயக்கம் அவரது சக திராவிடத்துவ நண்பர்களுக்கு தெரிந்திமிருந்தது. இதில் சில நபர்களுடன் நான் சிறிய அளவிலாவது நட்பு வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் -தங்களுக்குள் மோதல் வரும் வரை- அந்த நபரை காட்டிக் கொடுக்க வில்லை. எனவே இந்த நபர்களுடனான என் தொடர்புகளை முழுமையாக கத்தரித்துவிட்டேன்.

இந்த மன வக்கிரம் பார்ப்பனீயமா? பார்ப்பனீயம் என்றால் என்ன? அது ஒரு காலனிய கட்டமைப்பு என்றே கருதுகிறேன். ஏதோ ஒரு சிறு குழு ஒட்டு மொத்த சமுதாயத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக மூவாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றி வந்தது என்கிற கருத்தாக்கமே தவறானது. ஐரோப்பாவின் யூத வெறுப்பு கருத்தாக்கத்தை பிரதி எடுப்பது. நமது நாட்டின் சாதிய அமைப்பு நிச்சயமாக அதில் குறைகள் உண்டு இல்லை என்றில்லை. மானுடத்தன்மையற்ற பரிமாணங்கள் உண்டு. அதன் மீது எனக்கும் நான் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கும் கடுமையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் உண்டு. ஆனால் அது நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. ஐராவதி கார்வே போன்ற மூத்த சமூகவியலாளர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மீனவர்கள் பிராம்மணர்களாக மாறியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள். ஸ்ரீ ராமானுஜர் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து அந்தண சாதியை உருவாக்கியதை மார்க்சிய சமூகவியலாளர்களே கூட ஆவணப்படுத்தியுள்ளனர். கீழ் வெண்மணியில் தலித்துகள் ஆதிக்க சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட போது அன்று ஈவெரா கள்ள மௌனத்துக்கு பின் வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என அறிக்கை விட அன்றைக்கு தலித்துகளுக்காக போராடிய மார்க்சியர்களின் பாரம்பரிய புலம் என்ன? ராமானுஜரின் மகா மானுடமல்லவா அன்று மார்க்சியத்தின் மூலமும் வெளிப்பட்டது. அப்பேரருள் அற்ற மார்க்சியம் ரஷியாவில் பெருங்கொலை கருவியாகவும் சீனாவில் அடிமை உழைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதையும் இன்றைக்கும் காண்கிறோமே! இந்நிலையில் எது பார்ப்பனீயம் என்கிறீர்கள்? சாதியத்துக்கு பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்புதாரிகள் அல்லர். அப்படி சொல்வது ஆதிக்க சாதிகளை -தேவர்களையும் வெள்ளாளர்களையும் வன்னியர்களையும் - அவர்கள் தலித்துகளை தாக்கிவிட்டு பழியை பார்ப்பனீயம் என்கிற முகமறிய வெறுப்பு களத்தின் மீது போட்டு செல்ல அவர்களுக்கு ஒரு சால்ஜாப்பை ஏற்படுத்துவது அல்லாமல் வேறில்லை.

எனக்கு மிக நெருக்கமான பல தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் மூத்தவர்களிடம் களப்பணியின் போது பேசுகையில் அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாங்கள் பாரம்பரிய முறையில் வளமாக மதிப்புடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றனர். உதாரணமாக தென் தமிழகத்தின் நெற்கட்டுஞ்செவ்வல் கிராமத்தில் இன்றைய ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமிருந்து இன்றைய தலித்துகளான அருந்ததியினருக்கு ஆதரவாக அன்றைய பாளையக்காரர் -தினமும் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யும் பார்ப்பன அடிமை- அளித்த தீர்ப்பு, எத்தனையோ வனவாசி சாதிகளையும் தம்மை எதிர்த்த சாதிகளையும் குற்றப்பரம்பரை என பிரிட்டிஷார் அறிவித்தமை, வெள்ளையருக்கு எதிராக போராடிய ஒரே காரணத்துக்காக நிலம் பறிக்கப்பட்டு வெள்ளையர்களால் நிலமற்ற தொழிலாளர்களாக்கப்பட்டு தீண்டத்தகாத சாதி என முத்திரைக் குத்தப்பட்ட கொடுமை என பலவற்றை சான்றாக காட்டலாம். அதென்ன குற்றப்பரம்பரை? குற்றத்தன்மை எப்படி பரம்பரையாக வரமுடியும்? விவிலிய கருத்தியல் அடிப்படையில் சட்டத்துக்குள் ஏற்றப்பட்ட கொடுமை இது. அப்படியென்றால் சாதியத்தை கிறித்தவனீயம் என சொல்லலாமா அல்லது விவிலியனீயம்? அதே நேரத்தில் பகவத் கீதை மிகத் தெளிவாக தன்னை உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக சொல்லிக்கொள்பவன் அசுரத்தன்மை கொண்டவன் என்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அய்யா வைகுண்டர், ஸ்ரீ நாராயணகுரு, அய்யன் காளி போன்றவர்கள் ஹிந்து ஞான மரபை வேதாந்த தரிசனத்தை ஒரு விடுதலை இறையியலாக முன் வைத்தவர்கள். இவர்களெல்லாம் பார்ப்பனீயம் என்றெல்லாம் வெறுப்புமிழவில்லை. இன்று ராமகிருஷ்ண பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆச்சாரியராக இருப்பவர் பூர்வாசிரமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். சாதியத்தை அழிக்க ஹிந்துத்துவத்தால் மட்டுமே முடியும். பார்ப்பனீயம் என சமுதாயத்தின் அடிப்படை தெரியாமல் வெறுப்புமிழ்வதால் அல்ல.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

இதனை அவருடைய கமெண்ட் பாக்ஸில் இட்டு ஏதோ எரர் வந்ததால் அவருக்கு தனிமடலாகவும் அனுப்பியிருந்தேன். அவரும் தன்னாலும் இட முடியவில்லை...ஏதோ எர்ரர் என்று சொல்லியிருந்தார். நான் சரி அதனால் ஒன்றுமில்லை எனக்கு உரையாடலில்தான் ஈடுபாடே ஒழிய கமெண்ட்களில் இல்லை என தெரிவித்து விட்டேன். பின்னர் பார்த்தால் அதற்கு பின்னர் பல கமெண்ட்கள் அவரது வலைப்பதிவில் வெளியாகியுள்ளன. ஆனால் இது மட்டும் ஏனோ வெளியிடப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து நான் எழுதிய மடல்களை மட்டும் (ஏனெனில் அவர் எனக்கு அனுப்பிய "ஆதீன பீடத்திலிருந்து" பேசிய மடல்களை அவரே வெளியிடட்டும்) நான் இங்கே வெளியிடுகிறேன். So people can decide for themselves as to who is playing to the galleries

No Problem, Dr. Rudran. Sometime due to google server error such things happen.
Then they will become all right. More than the blog post I am interested in dialogues where we can talk without bothering about ego.

//original and ugly fangs//
I do not know how much you are conversant with the history of Hindu nationalism. The roots of Hindu nationalism go back to Arya Samaj which as you would know is an anti-caste movement. Hinduthva is not and i repeat with an emphatic NOT- Kanchi (or Kumbhakonam Branch Math - as you see fit) vision of society.

While Tilak was conservative Savarkar was radical in anti-caste reforms.

None other than Dr. Ambedkar would attest to that. He considered Veer Savarkar the only Hindu leader who understood what needed to be done to rermove casteism and appreciated his stand on Ambedkar's Kalapani Sathyagraha.

Chennai urban Brahminism is an ugly phenomenon no doubt. So is Dravidianism. And in a way one cannot survive without the other.

//just as how there are scoundrels in communist party and in periyar's gang there could be some decent and sensitive people who follow Hinduism//

Dear sir, now if this is not prejudice what else is? I have seen in our place ordinary people with no support either from government or from upper caste fight foreign funded conversion onslaught on their spiritual traditions. if you come to Kanyakumari i will show you people who are in no way Brahminical but who consider themselves devout Hindus -who are ready to die for Hinduism under saffron flag - that flag was hoisted here by Ayya Vaikunder who condemned both caste tyranny as well as proselytism and we see RSS as natural heirs of that heritage.

And with such non-Brahmin assertion of our native spiritual tradition even Kanchi can be reformed.

Despite all this yes I can be wrong and you can be right and also vice versa.

with luv and regards
s. aravindan neelakandan

என்னுடைய எழுத்துக்களை இது வரை படித்து வந்த எவரும் இதே கருத்துக்களையே நான் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருவதை அறிவார்கள். இதே டோ ண்டுவின் வலைப்பதிவில் டோ ண்டுவைக் கூட எத்தனைகடுமையாக எதிர்த்திருக்கிறேன் என்பதை விரும்புவோர் தேடி பார்த்துக்கொள்ளலாம். இதில் ஒரு விஷயம் தெளிவு. டோ ண்டுவை நான் எத்தனையோ கடுமையாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் எப்போதும் டோ ண்டு என் மெயில் பாக்ஸுக்கு "நீ மோசடிக்காரன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன்" என்றெல்லாம் abusive mail அனுப்பியதில்லை. ஆனால் நம் மனநல மருத்துவருக்கோ ஈகோ மீது சின்ன ஒரு பிறாண்டல் கூட உள்ளிருக்கும் ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வந்துவிடுகிறது. டோ ண்டுவிடமிருந்து மனிதத்தை திருவாளர் ருத்ரன் படிக்க முயற்சிக்கலாம்.