அகப்பயணம்

Tuesday, January 30, 2007

கலாமுக்கு எதிராக பால்தாக்கரே

நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய குடியரசு தலைவர் கலாமுக்கு எதிராக பால்தாக்கரே கூறிய தரமற்ற விமர்சனத்தை கண்டனம் செய்கிறேன்.
பால் தாக்கரே வெறும் அரசியல்வாதிதான். அதுவும் ஒரு சமயம் மாநிலவாதம் பேசி வந்த அரசியல்வாதி. மாறாக கலாம் தேசத்திற்கு உதவிய அறிவியலாளர் மட்டுமல்ல அதற்கும் மேலாக கோடிக்கணக்கான பாரதிய மனங்களை ஒருங்கிணைத்த தெய்வீக மனிதர். அவரது பாததூசி கூட பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகளை விட உயர்ந்தது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அப்ஸல் விஷயத்தில் கலாம் சரியாகவே நடந்திருக்கிறார். அவனது கருணைமனுவில் அவர் கையெழுத்து போடவும் இல்லை அதனை குறித்து அவர் ஏதும் பேசவும் இல்லை. இதில் கீழ்த்தர தேசவிரோதியாக நடந்திருப்பது சோனியா வீட்டு நாய்க்குட்டியாக நடக்கும் மன்மோகன்சிங் என்கிற கைகட்டி நிற்கும் கோழையின் அரசுதான். எனவே பால்தாக்கரே மனநிலை பிறழ்ந்து பேசியிருக்கிறார். நிற்க இதனை திருவாளர் சீத்தாராம் எச்சியூறி என்கிற சிவப்பு அஃறிணை கண்டித்திருக்கிறது. இந்த இரட்டைநாக்கு பிறவிதான் முன்னர் கலாமை வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப் என வர்ணித்தது.

Friday, January 26, 2007

இஸ்லாமிய ஞானி பாடிய சரஸ்வதி வந்தனம்



அனைவருக்கும் நலம் தரும் நற்செயல்களை புரிந்திட துணிகையில் கலைமகளை துதிப்பதென்பது நம் தாய் திருநாட்டின் நற்றவ புதல்வர் அனைவருக்கும் பாரம்பரியமாக வாய்க்கப் பெற்ற நற்பேறு ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் தந்த சன்மார்க்க நல்லார் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள். அப்பெருமகனார் சிறந்த செந்தமிழ் கவிஞர். தெய்வீகப்புலவர். நாஞ்சில் நன்னாட்டு விவசாய மக்கள் வறட்சியால் வாடிய நேரம் அன்னார் அவர்களுக்காக சிவபெருமானை நோக்கி பாடியதாகவும் அன்றே மழை பொழிந்ததாகவும் என் பாட்டியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் பாடிய கலைமகள் துதியினை கீழே தருகிறேன்.

உருமகளை அயன்நாவில் உறைமகளை
பொறிமகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர்புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்குங்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள் வருமகளை
பெருமகளை உன்னல் செய்வோம்


சுசீந்திரம் உறை தாணுமாலய சுவாமி குறித்தும் பாவலர் பாடல்களினை பாடியுள்ளார். வள்ளல் பெருமானை நாவலர் தாக்கி 'மருட்பா மறுப்பு' இயக்கம் நடத்தினார். அப்போது வள்ளலாரை ஆதரித்து வாதாடிய பெருமக்களுள் பாவலர் முக்கியமானவர். அவர் நகைசுவையாக கூறினார், "மருட்பாவை மறுத்து நீங்களே அது திருவருட்பா என்பதனை ஏற்றுக்கொண்டீர்களே!" என்று.


அப்துல் கலாமின் இதயம் கவர்ந்த சரஸ்வதி வந்தனம்



சரி நமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய குடியரசு தலைவர் அப்துல் கலாமை மிகவும் கவர்ந்த சரஸ்வதி வந்தனம் எது தெரியுமா? 06-07-2005 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த உரையில் அந்த சரஸ்வதி வந்தனத்தை கூறி அதனை அழகாக விளக்கவும் செய்தார். அந்த அழகிய பாடல் கீழே காணப்படுவதுதான்.
இடையின்றி அணுக்களெல்லாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோ ம்;
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?


மகாகவி பாரதியின் இப்பாடலைக் கூறி அதற்கு பொருளும் பகர்ந்தார் அந்த தொழில்நுட்ப யோகி அப்துல்கலாம் அவர்கள். அவரது வார்த்தைகளில் "This means: Physicists claim electrons of atoms are always in an orbit. Astronomers have established that every star and its planets are in an orbital motion. If perpetual motion be the nature of all systems around, O! Goddess of Learning! Kindly bless my mind also to work ceaselessly in acquisition of knowledge. I think it is an important message for all of us, for continued acquisition of knowledge, work and continued prosperity."


சாதி மதங்களை பாராது உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்திய யாவரும் இணைந்து சொல்வோம்

வந்தேமாதரம்


இத்தேசம் உயர்ந்திட உழைப்போம். இத்தேசத்தின் வலிமைக்காக பாடுபடுவோம். இத்தேசத்தின் ஏழை எளியோர் உயர்ந்திட உழைப்போம்.

வந்தேமாதரம்

உழவர் திருநாளை நாசமாக்கிய ஜிகாதி வெறி

அண்மையில் காரைக்காலில் அரசு பொங்கல் விழா கொண்டாடியது ஜிகாதி அமைப்புகளுக்கு பொறுக்காமல் அதனை சிறப்பிழக்க செய்ய மதகலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு புரளியை கிளப்பி விழாவை களையிழக்க செய்துள்ளனர். மதச்சார்பின்மை எனும் பெயரால் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கினால், பொங்கல் திருநாள் கொண்டாடுவதற்காக தமிழர் வீடுகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஏற்கனவே பொங்கல் திருநாள் கொண்டாடுவதே தவறு என்பது போன்ற குரல்கள் 'பகுத்தறிவு' என்கிற பெயரில் பவனி வர ஆரம்பித்துள்ளன. மசூதிகளுக்குள் பொங்கல் குறித்து என்ன பிரச்சாரம் நடக்கும் என்பதும் ஊகிக்கமுடிந்ததுதான். காரைக்கால் பொங்கல்விழாவை நாசமாக்கிய ஜிகாதிவெறி குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் (28-ஜனவரி-2007) வந்த செய்தி கீழே:


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28-1-2007

Thursday, January 25, 2007

தவிர்க்கமுடியாத பண்பாடுகளின் மோதல்?

இங்கிலாந்தில் மசூதிகளுக்குள் நடக்கும் பல தள பிரச்சாரங்களை வெளிப்படுத்தும் மறைவாக எடுக்கப்பட்ட இந்த க்ளிப்பிங்களை பாருங்கள்: இதில் காமெடி என்னவென்றால் இந்த மசூதி டோ னி ப்ளேயரால் மத சகிப்புத்தன்மைக்காக பாராட்டப்பட்டதாம். ஒரு விசயம் ரொம்ப தெளிவு: There is a method to their madness: They want to rule the world.








அல்லா சாமியை கும்பிடல்லைன்னா கொன்னுடுவாங்களாம் சவூதி போலிசுங்க. அதுதான் ரொம்ப நல்லதாம்.



தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மதச்சார்பிற்ற ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு' எனும் கட்டுரை ஒரு முக்கிய இன்றைய முன்னணி இஸ்லாமிய அடிப்படைவாதியால் பிரசுரிக்கப்பட்டு அது பரவலாக விநியோகிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இத்தகைய இருள் மார்க்க சக்திகள் நம் தாய்திருநாட்டில் பரவிடாமல் தடுக்க இந்த குடியரசு தின நாளில் சபதம் ஏற்போம்.

Monday, January 22, 2007

தாழ்த்தப்பட்டோருக்காக வைகுண்டம் துறந்து வந்தார்

அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவா குருவுக்கும் குரு பண்டாரத்திற்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்


ஐயா வைகுண்டர் இயக்கம் குறித்து வழக்கம் போல திரு என்கிற ஆசாமி பொய்களையும் அரைகுறை தகவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எனவே உண்மைகளை விளக்க எனது பல முந்தைய கட்டுரைகளைத் தொகுத்து இங்கே அளித்துள்ளேன். அவசரமாக வெளியூர் போக வேண்டியிருப்பதால் ஒரு முழுக்கட்டுரையாக எழுத முடியவில்லை. இவை பல்வேறு சமயங்களில் கற்பக விநாயகத்தின் பொய்களை வெளிப்படுத்த எழுதப்பட்டவை திண்ணையில். முடிந்தவரை கோர்வையாக்கி உள்ளேன். எதுவானாலும் ஊருக்கு போய்விட்டு வந்து முழுமையாக -2000க்கு பின்னர் ஐயாவின் பதிகள் கிறிஸ்தவ வெறியரால் தாக்கப்பட்டது வரை- ஒரு பதிவினை போடுகிறேன்.


ஐயா வைகுண்டர் முத்துக்குட்டி சுவாமியின் சூடப்பட்ட பெயர் முடிசூடும் பெருமாள். அரசதன்மை கொண்ட பெயர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வைக்ககூடாதென எதிர்ப்பு எழுந்தது. அந்நேரத்தில் வேற்று சாதியில் பிறந்தும், அரசனுக்கு அணுக்கராக இருந்தும், தமதுயிரையும் பொருட்படுத்தாமல் ஐயா வைகுண்டர் பக்கம் நின்று தோள் கொடுத்த பூவண்டரின் கருத்தியல் எதன் அடிப்படையில் எழுந்தது ? பாகவத கிருஷ்ணனின் ஒளி பாய்ந்த கருத்தியல் அல்லவா அது ? ஐயா வைகுண்டர் அரசனையும் மேல்சாதிக் கொடுமையாளரையும் குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை கலிநீசன் என்பது மிசிநரிகளை வெண்நீசன் என்கிறார். மட்டுமல்ல வெளிப்படையாகவே 'ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான் ' 'மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான் ' எனக்கூறி அவர்கள் வீண்வேதம் என்கிறார். அவரது கருத்துகளில் அத்வைத ஒளியும் சமுதாயப்புரட்சி கனலும் உள்ளது. ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் இந்து மதத்தவர் அல்லவாம். ஆனால் இதே திரு இன்னொரு இடத்தில் கூறுகிறார் மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி இந்துத்வ படுத்துகிறார்களாம். என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:


'ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்
கொட்டு மேளம் குரவைத்தொனி ஈசனுக்கு வேண்டாம்
அன்பு மனமுடன் அனுதினமும் பூசை செய் '
என்று


உளத்தூய்மையுடன் ஒரு பூவோ இலையோ எனக்கு சமர்ப்பித்தால் போதும் எனக் கூறிய குருசேத்திர ஆயனின் குரல் அல்லவா இது. இதனை படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஐயா வைகுண்டர் தென்னகத்தில் ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட சாதியில் தோன்றினார். ஆனால் அவரது திருவாயிலிருந்து வெளியான ஒவ்வோர் திருவாக்கும் வேதமும் வேதத்தின் அந்தமும் பகவத் கீதையும் திருமந்திரமும் கூறியவற்றின் சாரத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தது. இது எவ்வாறு ?என்பது குறித்து இன்றும் எனக்கு வியப்புதான். இது குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுத வேணும். நேரம் வாய்க்கும் போது பார்க்கலாம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டும் இப்போது.


உதாரணமாக கீழ்காணும் வேத வாக்கியம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்:'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பலவாறு அழைக்கின்றனர் ' அவ்வாறே பகவத் கீதையில் 'யார் யார் என்னை எவ்விதம் தியானிக்கிறார்களோ அவர் அவர்களுக்கு அவ்வாறே காட்சியளிப்பேன்,' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார்.

'எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதிபரன் '
என்பது திருமூலர்.
ஐயா வைகுண்டரும் அதிசயிக்கதக்க விதத்தில் கூறுவதை கேளுங்கள்:
'அவரவர் மனதில் ஆனபடி இருந்து
எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் '

தன் மதத்தை சாராதவர்களை சைத்தான் எனவும் காஃபிர் எனவும் வையும் மிலேச்சத்தனம் ஐயா வைகுண்டரிடம் இல்லை. அவரிடம் இருந்தது இம்மண்ணின் மரபிற்கே உரிய பிரபஞ்ச ஏற்புத்தன்மை (Universal Acceptance). அதுதான் ஐயா இந்துத்வமும்.


தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படும் நாடார் சமுதாயத்தவர்கள் ஷத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் தாம். தென்னாடு என்றில்லை பாரதம் முழுவதுமே வர்ண அமைப்பு ஒரு மிக நெகிழ்வான சாதிக்குடிகள் அங்குமிங்கும் செல்லும் தன்மைத்ததாகவே இருந்திருக்கிறது. அது இறுக்கமுடையதானதற்கு வெளிநாட்டு படையெடுப்புகளும், மூலதன வெளியேற்றமுமே முக்கிய காரணங்களாகும். குயவனான சாதவாகனன் ஷத்திரியன் தாம். நாயர்கள் சூத்திரராக இருந்து ஷத்திரியர்கள் ஆனவர்கள்தாம் (அவர்கள் கிறிஸ்தவ மிஷிநரிகளின் இலக்கியங்களில் நாயர்கள் சூத்திரர் என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம்.) தோள்சீலை போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் மதம் மாறாத நாடார்கள்தாம். பின்னர் அவர்கள் குறிவைத்து மதம் மாற்றப்பட்டனர். எனினும் மதமாற்றி மிசிநரிகள் உண்மையில் பாரத சமுதாய சமத்துவ எழுச்சிகளில் உண்மையில் எத்தகைய பங்காற்றினர் என்பதனை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.


ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார். ஏசி அறைகளில் இருந்தபடி சமுதாயம் குறித்து சித்தாந்த கோட்பாடுகளை முன்வைக்கும் சித்தாந்தி அல்ல அவர். அல்லது எடைக்குஎடை பொருட்கள் வாங்கி சொத்து சேர்த்து, வெள்ளைக்காரன் தூக்கிப்போட்ட அறிவியல் அடிப்படையற்ற இனவெறிக்கோட்பாடுகளால் சுகம் கண்டு, மடையர்களே எனக்கு சீடர்களாக இருக்கவேண்டும் என வேண்டிய போலி-பகுத்தறிவின் தந்தையான சிறியார் ஈவெரா அல்ல அவர். இத்தகைய போலிகளால் ஐயா அவரது காலடி மண்ணையும் தொட இயலாது. உயர்ந்த உத்தம அவதார புருஷர் என இன்றும் வணங்கப்படும் ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
இன்றைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றிகளுக்கும், சாதீய வாக்குவங்கி நடத்தி தர்மத்தின் மக்களை பிரிக்கத்தூண்டும் போலி மதச்சார்பற்ற அரசியல்வியாதிகளுக்கும் எதிராக போராடும் சமுதாய இயக்கங்களின் சமத்துவ போராட்டத்தின் அடிநாதமாக விளங்குவது. இந்த மகத்தான இயக்கத்துடன் கிறிஸ்தவ மிசிநரிகள் என்னவித உறவினைக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்க, கிறிஸ்தவ மதமாற்றத்தின் உண்மை தன்மைகள் விளங்கும்.


ஐயா வைகுண்டரை பொதுவாக ஒரு சாதிக்கு உரியவர் என சிலர் நினைத்தாலும், அவர் முழுமையான இந்து சமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வையினைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

'சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமர் தொல் வாணியர் பறையர்
உத்திர நீசர் உழவருடன் குறவர்
கம்மாளரீழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டுகளும் ' (அகிலத்திரட்டு)


ஐயா வைகுண்டரின் தர்ம பார்வையில் ஒன்றாகவே இருந்தன.
அவர்களை ஒரே இடத்தில் நீர் அருந்தச் செய்தார் ஐயா வைகுண்டர். அவர்களை ஒரு தாய் மக்களாக உறவாட வைத்தார்.

'சாதி பதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில் ' (329)


சாதீய வெறி, மிஷிநரி ஆதரவு ஆகியவை மேலோங்கிய திருவாதாங்கூர் மேல்வர்க்கத்தினர் கடும் சித்திரவதைகளை ஐயா வைகுண்டர் மீது சுமத்தியதை அமைதியாக தாங்கிக்கொண்டார் அம்மகான்:

'குண்டியிலே குத்தி குனியவிடு வானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி
அனைபேரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைந்தாயோ சாமியென்று சாணாப்பனையேறி
உனைச் சாமியென்று உன் தேகத்தைப் பார்த்தால்
பனைச் சிரங்கின்னம் பற்றித் தெளியலையே
உனைச் சாமியென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோ நீ ஆளில் சிறியவனாய்த்
தாழக்கிடந்து சாமியென்று வந்தாயோ ' (அகிலத்திரட்டு)

என்றெல்லாம் அவரை சித்திரவதை செய்தனர்.
ஐயாவை திருவிதாங்கூர் அரசனின் ஆட்கள் எத்தனையோ வதை செய்தனர். மூத்திரக்குழியில் தள்ளி அங்கே போட்டு அடித்து சித்திரவதை செய்தனர்.
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி'
எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.
இந்த சித்திரவதைகளை அறிந்தால்தான் ஐயா வைகுண்டர் சொல்லுகிற அன்புரைகளின் ஆழம் நமக்கு புரியும்:
"பொறுமை பெரிது பெரியோனே என்மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே
பொல்லாதாரோடும் பொறுமையுரை என் மகனே
...
சத்துருவோடும் சாந்தமுடனே இரு
புத்திரரோடும் பேசி இரு என் மகனே"


சரி. மிசிநரிகள் இந்த சமுதாய போராட்டத்தில் எந்த இடத்தில் இருந்தனர் ? ஆகா, இதோ சமுதாய தலைமையை ஏற்று சமத்துவம் ஏற்படுத்த நல்ல கருத்துக்களுடன் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்தே எழுந்துவிட்டார் எனவே அவரை ஆதரிப்போம் என ஐயா வைகுண்டருக்கு தோள் கொடுத்தார்களா மிசிநரிகள் ? கிறிஸ்தவம் சமுதாய சமத்துவத்தை ஆதரித்ததெனில், தாழ்த்தப்பட்ட நாடார்களின் மிகச்சிறந்த எழுச்சியாக்கமான ஐயா வைகுண்டருக்கு எதிராக கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பியதுமில்லாமல், அவரை 'எதிரி ' 'சாத்தான் ' என்றெல்லாம் தமது மேலதிகாரிகளுக்கு எழுதியது ஏன் ? அரசனை இம்மகானை விடுவிக்கவும் தார்மீக சமுதாய புரட்சியினை ஏற்கவும் வகை செய்தது யார் ? மிசிநரிகளா இல்லையே. மாறாக, மண்டைக்காடு கலவரத்தின் போது மிசிநரிகள் தம் முதல் எதிரியாக கண்ட கிருஷ்ணவகை (இடையர்) குடியினைச் சார்ந்த பூவண்டர் என்பவரே ஆவார். மிசிநரிகளோ ஐயா வைகுண்டரை 'ஏமாற்றுக்காரன் ' 'சாத்தான் ' 'வஞ்சகன் ' என்றெல்லாம் தூற்றினரே தவிர அவருடன் கைகொடுத்து சமுதாய ஏற்றம் செய்ய முன்வரவில்லை. மாறாக பூவண்டன் இந்து சமய அடிப்படையிலேயே சமத்துவ பார்வையினைப் பெற்று மன்னருக்கு அறிவுரை பகர்ந்தார்.


'போற்றி நம்பூரி பிராமண சூத்திரர் குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமல் இந்த
பிறர் தீண்டாச் சாணார் குலத்தில் அவதரித்து
பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும் '
எனும் அரசன் கேள்விக்கு பூவண்டர் பகர்ந்த விடை சாதீய இருளும், மதமாற்ற நோயும் சூழ்ந்திருந்த அன்றைய காலகட்டத்திலும் இந்து தர்மத்தின் சமுதாய சமத்துவ ஒளி அணையாது வீசியதனைக் காட்டுகிறது. பூவண்டர் பகிர்ந்தார்:

'சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோ வென்றெண்ண வேண்டாம்
பாணெனத் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ
குசவெனக் குலத்தில் வந்தார் குறவெனக் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடெனக் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருருக் கேட்டிலீரோ ' (அகிலத்திரட்டு)


ஆனால் இத்தகைய சமுதாய சமத்துவ கருத்தாக்கம் கிறிஸ்தவ இறையியலில் எழ சாத்தியமே இல்லை என்பதனை நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏனெனில் ஏசு குறித்த இறை-முன்னறிவிப்பே அவர் தாவீது அரசரின் வம்சத்தவர் என்பதுதான். அந்த வம்சாவளியில் ஏசுவை நுழைத்திட பொய்யான இரு வேறு வம்சாவளி வரலாற்றினை மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலும் காண இயலும். அது போலவே ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி நுழையத்தக்கதல்ல எனும் கருத்தாக்கம் ஸ்மிருதிகளில் காணப்பட்டாலும் கூட, அதனை ஸ்மிருதிதான் என தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் இந்துவுக்கு உண்டு. ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் அவ்வாறல்ல. மேலும் அவ்வாறு கூறியது பரமபிதாவின் ஒரே மகனும் கூட. சரி, மிசிநரிகள் ஐயா வைகுண்டருக்கு ஆற்றிய எதிர்வினை என்ன ?


'எளியாரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் '
என்று எடுத்துரைத்த எம்பிரானை 'மக்களை வஞ்சிப்பவன் ' எனக் கூசாமல் ஏசினான் சாமுவேல் சகரியா எனும் கிறிஸ்தவ வெறிபிடித்த வெள்ளைத்தோல் பிரச்சாரகன் (1843). (இன்றைக்கும், நலிந்த சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆன்மிக அருளாளர்களை வைவதை முற்போக்காக காட்டும் சகரியாக்களுக்கு பஞ்சமில்லைதான்.) 'காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ ' என்று கூறிய மகான் மிசிநரி பார்வையில் 'எதிரி 'யானார் (1869-ஜேம்ஸ் டவுண் மிசிநரிஅறிக்கை) 'ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ ' என்று எடுத்துரைத்த மகான் மிசிநரி பார்வையில் 'சாத்தான் '(1875 நாகர்கோவில் மிசிநரி அறிக்கை) ஆனார். மேலும் ஐயா வைகுண்டர் உண்மையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடைநிலை ஊழியம் செய்தவர் என்பது போன்ற பச்சைப்பொய்களையும் பரப்பினர். இந்த அவதூறு பிரச்சாரம் கிறிஸ்தவ சபைகளால் 1980கள் வரைக்கும் கூட வெளிப்படையாக நடந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கைகள் பறந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கை புலம்புகிறது: 'தாமரைக்குளம் பகுதியின் அனைத்து கிராமங்களும் கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு கீழ் வரும் நிலையில் இருந்தன. ஆனால் முத்துக்குட்டி வழியினரின் எழுச்சியால் நம்பணிகளில் வலுவான தடை ஏற்பட்டுள்ளது. நமது பகைவனின் செயல்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று எடுத்துச்சொன்னாலும் எவரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இந்த இயக்கம் கிறிஸ்தவத்தை விட வேகமாக செயல்படுவதுடன் கிறிஸ்தவம் பரவவும் தடையாக இருக்கிறது." (நாகர்கோவில் டயசீஸ் ஆண்டறிக்கை- இது ஐயா சமாதியடைந்த 20 வருடத்துக்கு பிறகு.) ஐயாவை கைது செய்த போது திருவிதாங்கூரின் நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு நீதிபதியாக மீட் என்கிற மிசிநரி நியமிக்கப்பட்டான். இது கிழக்கிந்திய கம்பெனியின் வலியுறுத்தலால் கர்னல் முன்ரோ என்பவனது சூழ்ச்சியின் விளைவாகும். இந்த மிசிநரி நீதிபதியின் செயல்பாடு 'highly favourable to the external sources of the missionary cause' என சாமுவேல் மட்டீர் என்கிற மிசிநரி குறிப்பிடுகிறான் ('The Land of Charity', Early history of the London Mission in Travancore, பக்.267, 1870 இலண்டன், 1991 டெல்லி.) இவனது காலகட்டத்தில்தான் ஐயா கைது செய்யப்பட்டதும் அடிக்கப்பட்டதும். மேலும் ஐயாவை அடித்தவர்களில் கிறிஸ்தவ கும்பெனிக்காரர்களும் இருந்தார்கள். அவரை துப்பாக்கி பின்பகுதியால் அடித்தார்கள். கும்பெனி வீரர்கள் (ஆங்கிலேய , இந்தோ-ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்) மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர். ஆக, எப்படி இந்துக்களின் சாதீயத்தை பயன்படுத்தி தந்திரமாக தமது மதமாற்ற இழிவேலைக்கு தடையாக இந்து சமுதாயத்தை கடைத்தேற்ற வந்த ஐயா வைகுண்டரை அழித்திட திட்டமிட்டிருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அரசனது அவையிலிருந்த படியே இந்து புராண மரபின் அடிப்படையில் ஐயாவுக்காக குரல் எழுப்பிய பூவண்டரின் மகத்துவத்தையும் சிந்தியுங்கள்.இதே நூலில் மட்டீர் மிசிநரி நமது ஐயா வைகுண்டரின் வழிபாட்டை பேய் வழிபாடு என எழுதுகிறான். இத்தகைய பிரச்சாரங்களை இன்றும் குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்கின்றனர். எனவேதான் நாங்கள் பதிலடி கொடுத்தோம் : 'பேயை வணங்குபவன் கிறிஸ்தவனே என்று. அதற்கு பிறகு இது கொஞ்சம் ஓய்ந்தது. அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்) அவன் சொல்கிறான்: ஐயா வைகுண்டரின் வழிபாடு அரக்கத்தனமும் இந்துமதமும் இணைந்த முட்டாள்தனமான வழிபாடாம் ('absurd medley of Hinduism an Demonolatory') (('The Land of Charity',, 'Devil-Worship' பக்.222-223)


ஐயா வைகுண்டரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிசிநரிகளின் நோக்கம் சமுதாய விடுதலையன்று, மாறாக சமுதாய தீமைகளை பயன்படுத்தி நடத்தும் மதமாற்றமே எனும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார். மிசிநரிகளின் போலி புனுகல்களை பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களை தெளிவாக 'மாநீசர்கள் ' என அடையாளம் காட்டினார். தருமத்திற்கும் தம்மக்களுக்கும் எதிராக இந்த மாநீச மிசிநரிகள் நடத்தும் அநியாயங்களையும் தம் மக்களுக்காக பாடுபடும் தம்மை 'ஏமாற்று வேலைக்காரன் ' என்று அழைத்த மிசிநரி பிரச்சாரங்களையும் ஐயா வைகுண்டர் எதிர்த்தார். இந்த பரவுத்தன்மை கொண்ட அந்நிய மதக்கண்டனத்தினை, சாதீய வெறியர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடனேயே அதே உக்கிரத்துடன், சிம்மகர்ஜனையாக வெளியிட்டார்:


'நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்
அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்
குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து
மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர் ' (அகிலத்திரட்டு)

கிறிஸ்தவ சமயத்தினால் சமுதாய மேன்மையா ஏற்பட்டது ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே பகைமை ஏற்பட்டது. ஐயா வைகுண்டரின் அருள்வாக்கு உண்மை வரலாற்றினை விளக்குகிறது:

'விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்
வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன்
நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்
பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து
மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்
தானமழித்து சான்றோரின் கட்டழித்தான். '
(வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன் என்பதில் அனைத்துக்கண்டங்களிலும் மிசிநரிகள் நடத்திய நச்சுவேலைகளையும் இனக்கருவறுப்புகளையும் வெளிப்படுத்துகிறார் ஐயா வைகுண்டர்.)


ஐயா முத்துக்குட்டி வைகுண்டசுவாமிகளின் சமுதாய சமரசப் புரட்சி காட்டும் உண்மை என்னவென்றால், சமுதாய ஏற்றம் பெற ஒரே நேரத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளையும், ஆன்ம அறுவடை செய்யும் அன்னிய விரிவாதிக்க சித்தாந்தங்களையும் எதிர்க்க வேண்டும். அதனையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதன் குடும்ப அமைப்புகளும் செய்கின்றன. ஆக, ஆரியசமாஜமாகட்டும், சுவாமி விவேகானந்தராகட்டும், அய்யன் காளியாகட்டும், ஸ்ரீ நாராயணகுருவாகட்டும், ஏன் மகாத்மா காந்தியேயாகட்டும், மிசிநரிகள் பாரத தர்ம நெறி நின்று சமுதாய புரட்சி கண்ட செம்மல்களையும் இயக்கங்களையும் எதிர்த்துள்ளனர், நசுக்கி அழிக்க முயற்சித்துள்ளனர். உதாரணமாக சர்.ஹெர்கோர்ட் பட்லர் அவுத் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர் 1-12-1907 தேதியிட்ட அறிக்கையில் கூறுகிறார்: 'அரசாங்கம் தலையிடவில்லை என்றால் ஆரியசமாஜத்தினால் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுவிடும். நமது பெண்கள் இங்கிலாந்திலிருந்து பெருமளவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களே பெண்கல்வி அளிக்கும் படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்..ஆரிய சமாஜம் மிகவும் ஆபத்தான இயக்கம். அது தேசிய சிந்தனையையும் கீழ்ஜாதி மக்களை மேம்படுத்துவதையும் ஒருங்கிணைக்கிறது. '( 'Servant of India ' by Martin Gilbert). சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களுமான சமஸ்கிருத கல்விசாலையை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிசிநரி தூண்டுதலால் அரசாங்கத்தால் தடைபடுத்தப்பட்டன. இவ்வாறு முன்னூறு ஆண்டுகள் தேசியவாத சமுதாய சீர்திருத்தவாதிகளை முட்டுக்கட்டை போட்ட காலனிய அரசாங்கம், மறுபக்கம் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தயங்காத சில சிறியோரை பெரியாராக சமுதாய சீர்திருத்தவாதிகளாக உலாவர செய்தது. ஏன்..இன்றைக்கும் காலனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சிந்தனையான மார்க்சியத்தின் அடிப்படையில் சிந்திக்கும் இடதுசாரிகள், இந்து தேசியவாதிகளின் நலிவுற்ற சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு இதர கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து முட்டுக்கட்டைகள் போடுவதைக் காணலாம்.


உண்மைகள் இவ்வாறிருக்க பூசி முழுகும் பிரச்சார புனுகு வேலைகள் சில அறிவுஜீவிகள் என தம்மை காட்ட விரும்புவோருக்கு தேவைப்படுவதில் ஆச்சரியமென்ன ? ஆம். அவர்கள் தங்கள் கண் உத்திரத்தை அறியாதவர்கள்.

சிவசிவா அய்யா நாராயணருக்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம்
தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர
இந்திர நாராயண அய்யா நிச்சயித்தபடி
யல்லாது மனுஷன் நிச்சயித்தபடியல்ல அய்யாவே

[ஐயா வைகுண்டர் சாமி தோப்பு தலைமை துவாரகபதி திருக்கோவிலிலே வழிபாட்டு மண்டப வாயிலின் வலப்பக்க சுவரில் பொறித்த உகப்படிப்பு]

பெங்களூரும் இரட்டை நாக்கு கறுப்பும்

ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரம் ஏதோ ஆர்.எஸ்.எஸ் தொடங்கி வைத்தது போல 'விடாது கறுப்பு' என்கிற பெயரில் எழுதும் ஆசாமி எழுதியிருக்கிறார். பொய்யிலே வாழ்ந்து முதலெடுத்த ஈவெரா வழி வந்த திராவிடக் கும்பலைச்சார்ந்த ஆசாமி இப்படி எழுதியிருப்பது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் உண்மை என்ன? ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெளிவாக காரணத்தைக் கூறுகிறது:"Muslims protesting against the execution of Iraq's toppled president clashed with police on Friday, ransacking shops owned by Hindus and burning at least 15 cars. Protesters at a rally on Sunday of the Hindu nationalist Rashtriya Swayamsevak Sangh then attacked shops owned by minority Muslims and stoned vehicles, forcing police to fire on rampaging crowds." (http://in.today.reuters.com/news/newsArticle.aspx?type=topNews&storyID=2007-01-22T143607Z_01_NOOTR_RTRJONC_0_India-284557-2.xml)
இஸ்லாமிய பாசிஸ்ட்கள் தாக்கினார்கள் என்றால் சும்மா தாக்கவில்லை. இந்து பெண்களை வீடேறி அவமானப்படுத்தியிருக்கிறார்கள் இந்த காட்டுமிராண்டிகள். இதோ கீழே உள்ள தினதந்தி செய்தியைக் காணவும்.

நன்றி: தினதந்தி 20-1-2007

அந்த பெண்கள் எல்லாம் அந்தணப்பெண்களா? அந்த வீடுகள் என்ன அக்கிரகாரத்து வீடுகளா? எங்கோ உள்ள சதாமை தூக்கில் போட்டால் இங்குள்ள முஸ்லீம் வெறியன் இந்து வீடேறி அடிப்பான் என்றால், இந்து பெண்களை அவமானப்படுத்துவான் என்றால், இந்துவை வீடேறி நீ அடித்தால் பக்கத்து வீட்டு இந்து தட்டி கேட்க மாட்டானா? தன்னை நம்பி வந்த பொண்டாட்டியை வேசி என கிண்டல் செய்யுமாறு தன் மைனர் நண்பர்களுக்கு காட்டிக்கொடுத்த ஈவெராத்தனமாகவா இருப்பான்? வெள்ளிக்கிழமை வன்முறைக்கு வாயைப்பொத்தியபடி இருந்த விடாது கருப்பு ஞாயிற்று கிழமை பதிலடிக்கு மட்டும் சத்தம் போடும் பம்மாத்து என்ன? இதைத்தான் இரட்டைநாக்குத்தனம் என்பதா? இந்த இரட்டை நாக்குத்தனத்தை எதைக் கொண்டு போடலாம்?

Thursday, January 18, 2007

செந்தழல் ரவிக்கு பதில்

திரு.செந்தழல் ரவி,
வணக்கம்.
'இந்துக்கள் என்று கேவலப்பட வேண்டாம் ஜடாயு' என தாங்கள் எழுதியிருக்கும் பதிவினைப் படித்தேன். எவ்வித பகுத்தறிவும் இன்றி எழுதப்பட்ட ஒரு பதிவாக அது அமைந்துள்ளது.
கீழே உள்ளது உங்கள் பதிவின் வார்த்தைகள்:"மதம் என்பது என்ன? இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர்? ஆயிரம் ஆண்டுகள்? இரண்டாயிரம்
ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே? நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...இந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே? பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?"


உங்களுக்கு பகுத்தறிவின் அதே தரத்தில்தான் உங்கள் வரலாற்றறிவும் உள்ளது ரவி. இன்று வாழும் இந்து தருமத்தின் கூறுகள் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடர்பவைதாம். கூந்தல் வகிடுடெடுத்து திலகம் வைப்பதாகட்டும், வீட்டில் மாலையில் குத்து விளக்கேற்றுவதாகட்டும், சமயச்சடங்குகள் முன்னர் குளித்தெழும் திருக்குளங்கள் ஆகட்டும், சப்த கன்னியரை வணங்கும் மரபாகட்டும், சங்கினை சமயச் சடங்குகளில் பயன்படுத்துவதாகட்டும், யோகமாகட்டும், தாய் தெய்வ வழிபாடாகட்டும் இன்றைக்கும் இன்றைக்கு குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சிந்து சமவெளி பண்பாட்டிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. நீங்கள் சொன்னதை இப்போது திரும்ப பாருங்கள். "ஆயிரம் ஆண்டுகள்? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ?" நீர் சொன்ன மூவாயிரம் ஆண்டுகளுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எம் தருமம் எழுந்துவிட்டது சீரும் சிறப்புமாக. அன்றைக்கும் இதே ஆன்மிக பண்பாட்டிற்கு நாங்கள் சொந்தக்காரர்கள்தான். அன்று முதல் இன்றுவரை எத்தனையோ வெளிப்படையெடுப்புகளையும் உள்ளுருவாகிய சில சமுதாய தேக்கங்களையும் தாங்கிக்கொண்டு முன்னதை எதிர்த்தும் பின்னதை எதிர்த்து அதனை மாற்றியமைத்தும் வாழ்கிறோம், இந்த பண்பாட்டு நீரொழுக்கு வற்றாத ஜீவநதி. ஐயா வைகுண்டர், ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், ஐயன் காளி, சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், திருபராய்துறை மேவிய சுவாமி சித்பவானந்தர் என அன்னிய சுரண்டலுக்கு ஆளான போதிலும் தாழக்கிடப்பவரை தற்காப்பதே தருமம் என வீரமுடன் முழக்கமிட்ட தருமத்தின் வழி வந்தவர்கள் நாங்கள். எம் சமுதாயத்தில் சமுதாய அமைப்பில் குறைகள் இல்லை என இந்துக்களான நாங்கள் கருதவில்லை. குறைகளை ஏற்கிறோம். கண்ணுக்கு தெரியாத பார்ப்பனீயத்தின் மீது அதனை சுமத்தி திண்ணியத்தில் தலித்தை மலம் தின்ன வைத்தவன் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்பதனை மறைத்து பேசவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. தீண்டாமையும் சாதீயக்கொடுமைகளுக்கும் எவரையும் நாங்கள் பொறுப்பாக்கவில்லை. நாங்களே பொறுப்பு என அக்குற்றங்களை எம் சொந்த சோதரரின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் என உணர்கிறோம். அவற்றினை களைந்திட முனைகிறோம். ஒரிசாவில் தலித்துகள் கோவில் நுழைய தடையாக கட்டப்பட்ட அவமான சுவரை அடித்து நொறுக்கிட முனைந்தவை அதற்காக காவல் துறையினரால் கைவிலங்கு சூட்டப்பட்டவை எம் இயக்கத்தவர் கரங்கள். தலித் சமுதாயத்தினருக்கும் அவரும் எம் சோதரரே என கழிவறைகள் கட்டிக்கொடுத்த கரங்கள் எம்முடையவை. கழிவறைகள் முதல் மீன் சந்தைகள் வரை எம் சோதரருக்கு எம் கரங்களால் நாங்கள் அமைத்துள்ள சேவைகள் உண்மையில் சேவைகள் அல்ல அவை எம் கடமைகள். ஆம் இந்த வற்றாத ஜீவநதியின் பாரம்பரிய உரிமையாளர் என்ற முறையில் அதில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாதீயமென்னும் தீய நீருக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். அதனாலேயே அதனை சரி செய்வதென இந்த முள் நிறைந்த பாதையை சுயமாக ஏற்றெடுத்து தருமத்தின் பாதையில் பணியாற்ற கச்சை கட்டி இறங்கியுள்ளோம். நிற்க, நீர் சொன்ன வரலாற்று ஆண்டுக் கணக்குகளில் உள்ள அறியாமைக்கு அப்பால் அதனை நானே ஒரு நல்ல கேள்வியாக செப்பனிட்டு தருகிறேன்: 'நாகரிகமும் நிறுவன சமயமும் எழுவதற்கு முன்னால் அனைவருமே காட்டுமிராண்டிக் கூட்டம்தானே' என்பதே உமது கேள்வியாக கொள்வோமா? அப்படியாவது நீர் கேட்டிருக்கலாம். தேவையில்லாமல் காலக்கணக்கு அளித்து தங்கள் வரலாற்றறிவுக்கு இப்படி ஒரு விளம்பரம் அளித்திருக்கவேண்டாமாக இருந்தது!


சரி நிறுவன மதமாக எழுவதற்கு அடிப்படையாக அமையும் ஆன்மிக அனுபவங்கள் அச்ச உணர்விலிருந்து எழுபவை அல்ல. இன்றைய தருமத்துவ சமயங்களில் ஒன்றான இந்து தருமத்தின் அடிப்படையாக அதன் முந்தைய நிலையாக அமைந்தது கற்கால புதிய கற்கால சமுதாய ஆன்மிக கூத்தாடிகளின் அக-தரிசனங்கள்தாம். அவை அச்சத்தினால் மட்டுமே அல்லது அச்ச உணர்வின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் எழுந்தவை என்று கேட்டால் எந்த மனிதவியலாளனும் வாய்விட்டு சிரிப்பான். குகை ஓவியங்கள் குறித்த விக்கிபீடியா கட்டுரையை செந்தழல் ரவி முடிந்தால் பார்க்கட்டும். ஐரோப்பிய குகை ஓவியங்கள் குறித்தும் அவற்றின் தோற்றம் குறித்தும் கூறும் அந்த விக்கிபீடியா கட்டுரை எவ்வாறு வேட்டையாடும் இனக்குழுக்கூட்டங்களின் ஆன்மிகாவேசக் கூத்தாடிகள் (shamans) மாற்று பிரக்ஞை தளங்களில் உலாவிக் கண்டுணரும் ஆன்மிகக்குறியீடுகள் குகை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன என்பதனைக் குறிப்பிடுகிறது. (http://en.wikipedia.org/wiki/Cave_painting) வேத மந்திரங்களும் இத்தகைய ஆன்மிகாவேச கவிகளின் வெளிப்பாடுகளே ஆகும். எனவேதான் வேதங்களை இயற்றிய முனிபெருமக்கள் மந்த்ர த்ருஷ்டா,கவி என அழைக்கப்பட்டனர். அவ்வாறு உணர்ந்த அக சத்தியங்களை குறியீடுகள் உருவகங்கள் மூலம் வெளிப்படுத்தினர். (வேத ரிஷிகளில் மிகப்பெரிய பெண்கள் வரிசையை நாம் காண்கிறோம்.) எனவே இங்கிருந்து உமது அடுத்தக் கேள்விக்கே செல்லலாம்.


பாரத-இந்து ஞான மரபில் பாம்பு வழிபாட்டின் தன்மையை கிஞ்சித்தாவது அறிந்திருப்பின் நீர் "பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?"இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர். நமது சமயத்தின் அனைத்து தளங்களிலும் இந்த பாம்பு குறியீடு பலவிதங்களில் ஊடுருவி நிற்பதைக் காணமுடியும். குண்டலினி, நிலத்துடன் இணைந்த உயிர் சக்தி, - அடிப்படையில் இது பாலியல் சக்தியே என்பதனை இது காட்டுகிறது. ஆபிரகாமிய மதங்களிலிருந்து பாரத தரும மரபுகள் மாறுபடும் புள்ளியும் கூட இதுதான். விவிலியத்தில் படைப்பின் பின்னர் முதல் கேள்வியினை எழுப்பியது சர்ப்பமே என்பதனை கவனியுங்கள் (ஆதியாகமம் 3:1). முதல் கேள்வி சர்ப்பத்தால் பெண்ணிடம் கேட்கப்பட்டது என்பதனையும் கவனியுங்கள். (ஒரு வரலாற்று பேராசிரிய நண்பர் -கத்தோலிக்கர்- ஒருமுறை என்னிடம் முதல்கேள்வி சர்ப்பம் எழுப்பியது என்பதால்தான் ஒவ்வொரு கேள்வியும் -நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப் படுவதும்- சர்ப்பத்தினால் மனித இனம் வஞ்சிக்கப்படும் வழிமுறைதான் எனக் காட்டத்தான் கேள்விக்குறி சர்ப்ப வடிவில் உள்ளதாக கூறினார். கேள்விக்குறியை பார்க்கும் போது சரிதான் எனத் தோன்றுகிறது.) ஆனால் நமது மரபில் கேள்விகள் மதிக்கப்படுகின்றன என்பதுடன் சர்ப்பத்தின் புனிதக்குறியீடுத்தன்மை அதன் தடைபடாத முழு வளர்ச்சியினை அடைந்துள்ளது. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு ஆதிக்க மதங்களால் அழிக்கப்பட்ட சர்ப்ப வழிபாடு புவியிணைந்த வழிபாடு நம் நாட்டில்தான் அதன் அனைத்து பரிமாணங்களும் தங்கு தடையின்றி வளர்ந்து ஆலாக செழித்து நிற்கிறது. செந்தழல் ரவி போன்ற அறிவாளிகளுக்கு இதனாலெல்லாம் என்ன இலாபம் என தோன்றலாம். அவர் புற்றுமாரியம்மனைக் குறித்து கேட்ட கேள்விக்கு எங்களூர் பாம்பு வழிபாட்டினைக் கொண்டே பதிலளிக்கிறேன். புற்று மாரியம்மன் போலவே எங்கள் ஊர் பக்கங்களில் நாக காவுகளும் உண்டு. நாகதேவதைகளும் சாஸ்தாவும் வணங்கப்படும் காவுகள். பெங்களூர் போன்ற இடங்களில் பகுத்தறிவுடன் பணி புரியும் செந்தழல் ரவி போன்ற பகுத்தறிவுவாசியாக அல்லாத என்னைப்போன்றவர்கள் திருவட்டார், தக்கலை, தேரூர் போன்ற கிராமப்புறங்களில் வளர்ந்த பாமரர்கள், "ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்கிற செந்தழல் ரவியின் கேள்வி கேட்கப்பட முழுமையாக பாத்யதை பெற்றவர்கள் நாகதேவதைகள் உறை காடாக இந்த காடுகளை வணங்கி வந்துள்ளோம். பாரம்பரிய மருத்துவர்கள் மட்டுமே நாகதேவதையை வணங்கி உள்ளே சென்று தேவையான போது தேவையான அளவுக்கு மட்டும் மருந்து மூலிகை செடிகளை பறித்து வருவார்கள். "ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்ற கேள்வி மட்டும் எழவே இல்லை. ஆனால் பாருங்கள் செந்தழல் ரவி இந்த மண்டையில் மசாலா கொஞ்சம் கூட இல்லாத எங்களைப்போன்ற மடையர்கள். எங்கள் தகப்பன்கள், எங்கள் பாட்டன்கள் பூட்டன்களால் இன்றைய தேதியில் கேரளாவிலும் 500ஹெக்டேருக்கு மேலாக 2000 நாக காவுகள் ' ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு' சாமிகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவியலாளர்கள் 722 தனித்தனி பூ பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 'இந்த மண்டையில் மசாலா இல்லாத கூட்டத்தால்' 304 காவுகள் இன்று உள்ளன. ஆனால் ஐயா செந்தழல் ரவி உம்முடைய பகுத்தறிவு பார்வை கொண்ட நல்லவர்களால் இப்போது நிலமை மாறிவருகிறது. 173.7 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நாக காவுகள் இன்று 30.73 ஹெக்டேராக குறைந்துள்ளன. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ரவி, ஊர்பக்கங்களில் நாககாவுகளின் நாக தேவதைகளை வழிபடுபவர்களில் பலருக்கு பாம்பின் உயிரிலக்கணங்கள் தெரியும். உங்களையும் என்னையும் விட நன்றாக தெரியும். நாக தேவதைகளின் குறியீட்டுத்தன்மையை ஆழ் ஆன்மீகத் தன்மையை அறிந்தவர்கள் அவர்கள். பாம்பு புற்றுக்கு (அது பாம்பு கட்டிய புற்றல்ல தெரியுமா என உயிரியல் அறிவை நாம் காட்டலாம்தான்) பால் ஊற்றும் 'பகுத்தறிவற்ற' இல்லத்தரசி முதல் பதஞ்சலி முனிவர் இந்த பாம்பு போற்றும் கலாச்சாரத்தினை கட்டிக்காத்து வருகின்றனர். சூழலியல் முதல் உளவியல் வரை வீச்சு கொண்ட ஒரு பாரம்பரியத்தை கிஞ்சித்தும் உணராது "பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம்? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்று கேட்பதுதான் அறிவீனமானது. "ஏன்யா இந்த அளவுக்கு பரந்து விரிந்த ஒரு பாரம்பரியத்தை கொஞ்சம் கூட அறிவில்லாம கொச்சையா பேசுறியே மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா?" என்று மீள்-கேள்வி கேட்கலாம் தான் வேண்டாம்.


இப்போது திரு போன்றவர்கள் ஒரு ஜல்லி அடிப்பார்கள். (மாதவ காட்கில் தொடங்கி அடிக்கிற ஜல்லிதான் அது) இதெல்லாம் நாட்டார் வழிபாட்டு முறை. இதற்கும் இந்து தருமத்துக்கும் தொடர்பில்லை என்று. பக்கா Fraud தனமான ஜல்லி அது. பாருங்கள் செந்தழல் ரவி இந்து தருமத்தை தூற்றி எழுதுகையில் நாட்டார் வழிபாடு என இனிமேல் திரு போன்றவர்கள் ஜல்லியடிக்கப் போகும் வழிபாட்டு முறையை எடுத்துவைத்துதான் ஏளனமாக எழுதினார். இந்து என்று அவமானப்படாதே என்று தலைப்பிட்டு பாம்பை கும்பிடுகிறவனுக்கு மண்டையில் மசாலா இருக்கிறதா? என்று எழுதினார் செந்தழல் ரவி. இப்போது திரு என்ன செய்தார்? அவரது பதிவில் பின்னூட்டம் போட்டார். எப்படி? 'நாட்டார் வழிபாட்டு முறை அது ரவி. அதை குறித்து ஏளனமாக எழுதாதே. அது ஆழமான ஆன்மிகத்தன்மை உடையது' என்றா எழுதினார்? இல்லையே. மாறாக, 'நல்ல புரிதலான பதிவு' என பாராட்ட அல்லவா செய்கிறார். அதற்கு அடுத்தாற்போல எழுதுவதை பாருங்கள்: "பாகன் வழிபாட்டுமுறை என்பது எந்த மதத்திற்கும் உரியதல்ல. அவை நமது மூதாதையரின் ஆதிகால வழிபாட்டுமுறை. அவற்றின் தொடர்ச்சி இன்றும் பல மதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதை ஒரு மதத்தினருக்கு மட்டும் உரியதாக அடையாளப்படுத்துவது சுத்த மோசடி. இது ஒரு கலாச்சார தொடர்ச்சியே. இன்றும் பல நாடுகளில், பல விதமான நாட்களில், பல பெயர்களில் பொங்கலாகவோ, தாங்ஸ் கிவிங் ஆகவோ, ஹார்வஸ்ட் பெஸ்டிவெல் என்றோ இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இந்து என்பது பண்பாட்டு திரித்தல்." பாகனியம் எனும் பூசணியை செக்யூலர் சோத்துக்குள் மறைக்கப்பார்க்கிறார் மனிதர். செந்தழல் ரவி பாகனியத்தின் ஒரு முக்கிய உலகளாவிய அளவில் ஒடுக்கப்பட்ட கூறினை -பாரதத்தில் மட்டுமே கற்பக விருட்சமென நிற்கும் கூறினை- கீழ்மைப்படுத்தி திட்டுகிறார். அதை நல்ல புரிதலான பதிவு என பாராட்ட வேண்டியது. ஆனால் அந்த கூறினை ஏற்றெடுத்து அதனை ஆதிக்க சக்திகளின் படையெடுப்புகளுக்கு அப்பால் வளர்த்தெடுத்து இன்றைக்கும் வாழவைக்கும் தருமசமுதாயமான இந்து சமுதாயம் அதனை சொந்தம் கொண்டாடக்கூடாது என அறிவுசீவித்தனமான நாட்டாமை தீர்ப்பு கொடுக்க வேண்டியது. இந்த இரட்டை நாக்குத்தன்மையை (இரட்டைநாக்கு காரர்களை அல்ல) எதனால் அடிக்கலாம் சொல்லுங்கள்! அண்மையில் கூட சாஸ்தாகாவு நாகர் சிலைகளும் சாஸ்தா சிலைகளும் அடித்து உடைக்கப்பட்டன கிறிஸ்தவ வெறியர்களால். எதிர்த்து குரல்கொடுத்தது இந்து முன்னணிதான். திரு போன்றவர்கள் லாஜிக் எப்படி போகுமென்றால் 'இந்து முன்னணி எப்படி குரல் கொடுக்கலாம்? காவு என்பது இந்து வழிபாடல்ல நாட்டார் வழிபாடு' என்றுதான் போகுமே ஒழிய 'ஏனையா காவு நாகரை உடைத்தீர்கள்?" என்று போகாது.


நன்றி: தமிழ்முரசு -நாகர்கோவில் பதிப்பு- 31-12-2006

எனவே திருவாளர். செந்தழல்ரவி அடுத்த முறையாவது திறந்த மனத்துடன் திருத்தமாக கேள்விகளைக் கேட்டபடி வாருங்கள். என்னுடைய வார்த்தைகள் ஏதாவது உணர்ச்சிவேகத்தில் தங்களை புண்படுத்தும் விதமாக விழுந்திருப்பின் மன்னித்துவிடுங்கள்.


அன்புடன் உங்கள் சகோதரன்
அரவிந்தன் நீலகண்டன்

Wednesday, January 17, 2007

வரலாற்றின் மர்மங்கள்:1

பொதுவாக மர்மங்கள் என்றாலே வெளிநாட்டு விசயங்கள்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் நூல்களிலும் பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றில் சில படு-சில்லறைத்தனமானது
என்றாலும் கூட நம் 'ப்ரெஞ்சு பியர்ட்' கிறுக்கல் ஆசாமிகள் அதனை வைத்து ஜல்லியடிக்க தயங்குவதில்லை. ஆனால் நம் பழம் இலக்கியங்கள் கூறும் சில விசயங்களை நாம்
ஆராய்ந்து பார்த்தால் அவை தரும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளையும் நடத்தினால் எத்தனையோ மர்மங்கள் நம் ஊர்ப்புறங்களில் நமக்காக காத்திருப்பது தெரியும். உலக அளவில் புகழ் பெற்ற மர்மங்களுடன் அவற்றைப்போல (ஒருவேளை அவற்றினை விட முக்கியத்துவம் வாய்ந்த) நம்மூர் மர்மங்களும் கீழே.

அட்லாண்டிஸ்:


கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியாவும் ஆசியா மைனரும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் ஆளுகையில் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்
(கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.


அட்லாண்டிஸ் தீவு : நம்பப்பட்ட ஒரு கற்பனை ஊகம்

பிளேட்டோ வின் 'திமேயஸ்' பல மறைஞானக் குழுக்களுக்கு முக்கிய நூல். எனவே அக்குழுக்கள் தம் கோட்பாடுகளை அட்லாண்டிஸில் உருவானவை எனக் கூறுவதுண்டு. எட்கார் கைஸி எனும் அமெரிக்க 'தீர்க்கதரிசி' தம் 'ஞானதிருஷ்டியில்' அட்லாண்டிஸ் அமெரிக்க கடற்கரைகளில் அமிழ்ந்துள்ளதாகக் கூறினார். ஜான்.எம்.ஆலன் எனும் ஆய்வாளர்
தென்-அமெரிக்க ஏரியில் மறைந்த ஒரு தீவும் நாகரிகமும் உள்ளதாகவும் அதுவே அட்லாண்டிஸ் எனவும் கூறுகிறார்.

அட்லாண்டிஸ் தென்னமெரிக்காவில்? : ஒரு நூல்

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் அட்லாண்டிஸை பிளேட்டோ வின் கற்பனையில் உருவான உருவகக்கதை என்றே கருதுகின்றனர். ஏனெனில் பிளேட்டோ இத்தகைய உருவகக் கதைகள் மூலம் தத்துவக் கோட்பாடுகளை விளக்குவது வழக்கம். ஆனால் அட்லாண்டிஸுக்கு வரலாற்றடிப்படையில் வித்திட்ட நிகழ்ச்சியாக ஆய்வாளர்கள் கி.மு.1620களில் திரா எனும் சிறு தீவு -நிச்சயமாக கண்டம் கிடையாது- எரிமலைச் சீற்றத்தால் அழிந்ததைக் குறிப்பிடுகின்றனர்.

திரா தீவில் கிரேக்க நாகரிகம் செழித்திருந்தது. அங்குள்ள ஓர் வீட்டுச்சுவரில் தீட்டப்பட்ட
ஒவியம்
திரா தீவின் படம்: தீவுக்கூட்டத்திலேயே பெரியதீவுதான்
திரா

இந்த எரிமலைச்சீற்றத்தின் விளைவான சாம்பல் துகள்கள் எகிப்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமும் கூட அனைத்து
ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்படவில்லை. அட்லாண்டிஸ் உண்மையா? கற்பனையா? உண்மையெனில் அது எங்கு உள்ளது? என்பவை இன்னமும் மர்மமாகவே உள்ளன.


குமரிக்கண்டம்:


குமரி நிலநீட்சி குறித்த முதல் அறிவியல்பூர்வ விளக்க நூல்

பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். மார்க்சிசத்தையும் அதீத கற்பனைகளையும் போலி அறிவியல் தரவுகளையும் இணைத்து குமரிகண்டத்தை ஒரு அரசியல் சித்தாந்தத்தின் பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பவர் குமரிமைந்தன் என்கிற 'ஆராய்ச்சியாளர்'. ஜெயமோகனின் கற்பனை நாவலான 'கொற்றவை' இந்த குமரிகண்டத்தின் அடிப்படையில் அமைந்தது. குமரி கண்ட இயக்கத்தினர் இந்த கற்பனை புனைவை ஏறத்தாழ மதரீதியிலான இறுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வரலாற்று ஆவணமாகவே எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகழ்பெற்ற நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அண்மையில் வெளியான தமது 'குமரி நிலநீட்சி' எனும் நூலில் இத்தகைய
கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனக் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாக தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.


துவாரகை:
அகழ்வாய்வின் வரலாற்றில் ஹோமரின் எலியட் காவியத்தில் கூறப்பட்ட டிராய் நகரினை ஜெர்மானிய அகழ்வாய்வாளர் ஹென்ரிச் ஷிலைமான் கண்டுபிடித்தது மிக முக்கிய
மைல்கல்லாகக் கூறப்படுகிறது.


துவாரகை இப்படி இருந்திருக்குமா? இதிகாச விவரணங்கள் அடிப்படையில் ஒரு கற்பனை
ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ்
ஆனால் அதனையொத்த மற்றொரு கண்டுபிடிப்பு டாக்டர்.எஸ்.ஆர் ராவ் எனும் இந்திய அகழ்வாராய்ச்சியாளர் ஆழ்கடலில் துயில் கொண்ட ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததாகும். 3700 ஆண்டுகள் இன்றைக்கு முந்திய (இ.மு) காலத்தினைச் சார்ந்த இந்த ஆழ்கடல் நகரத்தை டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்தது பழம் காவியமான மகாபாரதத்தில் கூறப்பட்ட விவரணங்களின் அடிப்படையில் என்பதுதான் அதிசயமான விஷயம். இதனையொட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன.சில வரலாற்றறிஞர்கள் இதுதான் மகாபாரதம் கூறும் துவாரகை என்பதை மறுக்கின்றனர். ஆனால் ராவ் தாம் கண்டெடுத்த முத்திரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவை மகாபாரத விவரணத்தை பெருமளவு ஒத்திருப்பதைக் காட்டுகிறார்.
துவாரகையில் மூழ்கி நிற்கும் பழம் சுவர்
இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்திய இதிகாசங்களுக்கு வரலாற்று அடிப்படையில்லையெனக் கற்றுத்தரப்படுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டினைத் 'துவாரகை' கண்டுபிடிப்பு சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. ராவ் தம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மகாபாரத நிகழ்ச்சிகளை இ.மு. 3500க்கு கொண்டு செல்கிறார்.
ஆழ்கடலில் அகழ்வாராய்ச்சி : துவாரகை

இது துவாபார யுகத்தில் மகாபாரதம் நடந்ததாகக் கூறும் மரபாளர்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் பழமையான நகரம்தான் துவாரகையா?
இல்லையெனில் இந்த நகரம் எவ்வாறு மகாபாரத துவாரகை விவரணத்தை வெகுவாக ஒத்திருக்கிறது? ஆமெனில் துவாரகாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா?
(அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரமாண்டுகள் முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் தனிமனிதர்களுக்கானச் சான்றுகளை கண்டெடுப்பது இயலாத விஷயம்.) இம்மர்மங்களுக்கான விடைகளைத் தன்னுள் கொண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளுடன், ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது இந்தியாவின் வடமேற்கு கடற்கரை.


பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம்:

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட அமைப்புகளை ஓவியர் கற்பனையில் முழுமையாக வரைந்துள்ளார்

தமிழ் காவியமான மணிமேகலை காவிரிபூம்பட்டினத்தின் அழிவினைக் குறித்து பேசுகிறது. மகனை இழந்த சோகத்தில் சோழமன்னன் இந்திர விழா நடத்த மறந்தமையால் ஏற்பட்ட கடல் சீற்ற அழிவாக அது கூறப்படுகிறது. பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் பெரும் துறைமுக நகரமாக பேசப்படுகிறது. சுங்க அலுவலகம், மரக்கலங்கள் கொணரும் கொண்டு செல்லும் பொருட்களில் புலி முத்திரை பதித்தல் ஆகிய செயல்கள் அந்நகரில் நடைபெற்றமையையும், பல்வேறு தேசத்திலிருந்தும் நல்ல பண்பாடு கொண்ட மக்கள் அங்கு ஒருவரோடொருவர் பழகியதையும், கள் சாலைகள் முதல் கருத்துகளை விவாதிக்கும் மண்டபங்கள் வரை மனிதரின் அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யும் அமைப்புகளைக் கொண்ட பெரும்நகராக அது விளங்கியதையும் அறிகிறோம்.
பூம்புகார்: பழமையான செங்கல் அமைப்பு : நன்றி NIOT

1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் இந்த பெரும் துறைமுக நகரினைக் கடல் அழித்தது உண்மையாக இருக்கும் என்பதனைக் காட்டியுள்ளன. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) நடத்திய அகழ்வாய்வுகள் சங்க காலம் சார்ந்த பல அமைப்புகளை, (செங்கல் அமைப்புகள், சுற்றுசுவர் போன்றவற்றினை) வெளிக்கொணர்ந்துள்ளன. எஸ்.ஆர்.ராவ் போன்ற அகில இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் இப்பழமையான நகரம் இருந்ததையும் அது அழிந்ததையும் கூறியுள்ளனர். 1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு 2006 இல் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) ஸோனார் ஸ்கேனை நடத்தியுள்ளது. இந்த தொடக்க கட்ட ஆய்வு இன்றைய கரைக்கு இரண்டு கிமீ தூரத்தில் 14-20 மீட்டர் ஆழத்தில் சில அமைப்புகளை காட்டியுள்ளது. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ச்சி மணிமேகலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது திண்ணம். இன்று அதன் எச்சங்களை நாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிகிறோம். இனிவரும் காலங்களில் மணிமேகலை, சிலப்பதிகார நிகழ்வுகளின் காலத்தையும் அது தொடர்பான இதர வரலாற்று உண்மைகளையும் பாரத அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் நமக்கு மீட்டுத்தருவர் என நம்பலாம்.


ஆழ்கடல் அகழ்வாராய்ச்ச்஢யில் கண்ட வட்டவடிவ அமைப்புகள்: பூம்புகார் அகழ்வாராய்ச்சி நன்றி: NIOT



சிந்து சமவெளி நாகரிகம்:


1920களில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சர் ஜான் மார்ஷலால் பிரபலப்படுத்தப்பட்ட இந்நாகரிகம் இன்றைக்கும் தன் மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பும் நம் அறிதலை ஆழமாக்கியுள்ளது என்ற போதிலும். இ.மு. 5000 வருடங்களையும் விடப் பழமையான இந்நாகரிகக்தை உருவாக்கியவர்கள் யார்? இந்நாகரிகத்தவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது? உண்மையில் அழிந்ததா அல்லது இன்னமும் வாழ்கிறதா? எனும் கேள்விகள் இன்றைக்கும் உயிர் வாழ்கின்றன. இது ஆரியர் வருகைக்கு முந்தைய இப்பூர்விக நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்ததாக, அகழ்வாய்வாளரான மார்ட்டிமோர் வீலர் கூறினார். பின்னாட்களில் டேல்ஸ், ஜிம் ஷாஃபர், ஜோனதன் கென்னோயர் போன்ற புகழ்பெற்ற அகழ்வாய்வாளர்கள் ஆரியப் படையெடுப்புச் சித்தாந்ததை மறுத்துவிட்டனர். மாறாக இயற்கை அழிவுகளை இந்த நாகரிகத்தின் நகரங்கள் அழிவதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

படையெடுப்பு படுகொலை பொய் என நிரூபித்த டேல்ஸ்

செயற்கைக்கோள்கள் பாலைவனத்தில் புதைந்த ஒரு பழம் நதியைக் காட்டியுள்ளன. அறிவியலாளர் யஷ்பால் இது இந்திய வேதங்களில் கூறப்படும் சரஸ்வதியாக இருக்கலாம் எனக்கருதுகிறார். பல சிந்து சமவெளி நாகரிக மையங்கள் இந்நதியருகே உருவாகியுள்ளன. எனவே இந்நதி வறண்டது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இம்மக்களின் பண்பாடு வேதங்களில் கூறப்பட்ட பண்பாட்டினை ஒத்திருப்பதை அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் சுட்டிக்காட்டுகிறார்.
தோலவிரா அகழ்வாராய்ச்சியை ஏற்று நடத்திய பிஷ்ட்
தோலவிரா எனும் ஹரப்பா பண்பாட்டு நகரினை அகழ்வாராய்ச்சி செய்த பிஷ்ட் நகர அமைப்புகள் 'ரிக்வேத பண்பாட்டின் virtual reality' ஆக அவை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த மையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகள் சிறப்பானவை என்பதுடன் இங்கே மிகப்பெரிய ஹரப்பா சின்னங்களுடனான 'பெயர் பலகை' ஒன்றும் கிடைத்துள்ளது. சரஸ்வதி நதி குறித்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை. வானவியலாளர் ராஜேஷ் கோச்சர் வறண்ட நதியினை சரஸ்வதியுடன் ஒப்பிடுவதை மறுக்கிறார்.

இந்நாகரிகத்தின் சித்திர எழுத்துகள் இன்னமும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளன. இதில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆழ்ந்து ஆராய்ந்துள்ள ஐராவதம் மகாதேவன் இவை தொல்-திராவிட பொதுமொழிக்கூறுகள் கொண்டவை என்கிறார். எஸ்.ர்.ராவோ இவை தொல்-இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என கருதுகிறார். சிந்து-சமவெளிச் சமுதாயம் வேத-நாகரிகமும் திராவிடத்தன்மை வாய்ந்த மொழியும் கொண்டதாக இருந்திருக்கலாம் எனக் கருதும் மகாதேவன் புகழ் பெற்ற ஒற்றைக்காளை முத்திரையை ரிக்வேதத்தில் கூறப்படும் சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்துகிறார். எதுவானாலும் சிந்துசமவெளி நாகரிகத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்க மிக அடிப்படையான தேவை இன்னமும் மர்மமாகவே இருக்கும் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களின் பொருளை அறிவதுதான். மைக்கேல் விட்ஸல் என்கிற இந்தியவியலாளரும், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற அமெச்சூர் மொழியியலாளரும் அண்மையில் இவை எழுத்துக்களே இல்லை என கூறினர். இதனை சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியிலேயே தோய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மொழியியலாளர்களும் கடுமையாக மறுக்கின்றனர். பேராசிரியர் சுபாஷ் காக் ஹரப்பா பண்பாட்டு சித்திர எழுத்துக்களின் சில முக்கியக் குறியீடுகளை அவற்றினை ஒத்த வடிவங்கள் கொண்ட பிராமி எழுத்துக்களுடன் அவற்றின் அடுக்கு-நிகழ்வினை (frequency) ஆராய்ந்து அவை ஒத்துப்போவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மர்மங்களை தன்னுள் அடக்கியபடி அகழ்வாராய்ச்சிகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது சிந்து சமவெளி நாகரிகம்.

தோலவிரா: அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் மேற்பார்வையில் செய்யப்பட்ட கணினி மீள் உருவாக்கம்


தோலவிரா 'பெயர் பலகை' இப்படித்தான் இருந்திருக்குமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?


நாஸ்கா கோடுகள்:


நாஸ்கா கோடுகள் : நன்றி: நேசனல் ஜியாகிராபிக்

தென்-அமெரிக்காவின் பெரு நாட்டு பாலை பிரதேசங்களில் வரையப்பட்டிருக்கும் பெரும் வரி வடிவங்களே நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு நாஸ்கா கலாச்சாரத்தினரால் உருவாக்கப்பட்ட 70 வரிச்சித்திரங்கள் இவை. 360 அடி (110 மீட்டர்கள்) நீளமுடைய குரங்கு வடிவம், திமிங்கிலம் (65 மீட்டர்கள்), காண்டார் பறவை (135 மீட்டர்கள்), ஹம்மிங் பறவை (50 metres), பெலிக்கன் (285 மீட்டர்கள்), சிலந்தி (46 மீட்டர்கள்) ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை. 1920 களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவை பாலைப்பகுதிகளில் இத்தனை சிரமமெடுத்து இவ்வடிவங்கள் வரையப்பட்டிருப்பதன் காரணங்கள் விவாதிக்கபடுகின்றன. எரிக் வான் டானிக்கன் போன்ற போலி-ஆராய்ச்சியாளர்கள் இவை வெளிக்கிரகவாசிகளின் விண்கலங்கள் இறங்க உருவாக்கப்பட்டவை என கருதுகின்றனர். பரபரப்பூட்டும் இத்தகைய விவரணங்கள் அளிக்கும் வர்த்தக வெற்றியால் இந்த அடிமுட்டாள்தனமான 'விளக்கங்கள்' புத்தகங்களாக வெளிவருகின்றன. இத்தகைய அதீத கற்பனைக் காரணங்களை பொதுவாக கறாரான அறிவியல் பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். விமானங்களிலிருந்தே முழு வடிவமும் புலப்படும் படியாக உருவாக்கப்பட்ட இந்த வடிவங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? மாரியா ரெய்ச்சே (Maria Reiche) பல்லாண்டுகள் இத்தரை வரைவுச் சித்திரங்களை ஆராய்ந்த ஜெர்மானிய ஆய்வாளர்.

நாஸ்கா நில வரைபடங்களை ஆராய வாழ்வினை செலவிட்டமாரியா ரெய்ச்சே

ஒருவேளை வானியல் நிகழ்வுகளான விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் இயக்கப்பாதைகளைப் பல்லாண்டுகளாக கண்காணித்து அதனடிப்படையில் ஒரு பெரும் வானியல் நாள்காட்டியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். 1967, இல் இவ்வடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஜெரால்ட் ஹாவ்கின்ஸ் எனும் வானியல் ஆய்வாளர் இதற்கு எந்த சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிம் வுட்மேன் எனும் அமெரிக்கர் இன்னமும் விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார். ஒருவேளை நாஸ்கா புதிரை உருவாக்கிய பழம் அமெரிக்க நாகரிகம் பறப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனக் கருதும் இவர் பூர்விக நாஸ்காவாசிகளுக்கு கிடைத்திருந்த பருத்தியால் உருவாக்கிய பலூனில் புகையை அடைத்து 300 அடிகளுக்கும் மேல் பறந்து தம் கருத்து சாத்தியமானது என்றும் காட்டினார். இவருடன் இணைந்து இதனை நிகழ்த்திக்காட்டியவர் பலூன்களில் பறப்பதில் பல சாதனைகளைப் படைத்த ஜூலியன் நாட் என்பவர். ஆனால் நடக்கமுடிந்தவை எல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இத்தகைய பலூன்களைக் குறித்து வேறு புறச்சான்றுகள் ஏதுமில்லை. என்ற போதிலும் ஒரு கருதுகோளின் சாத்தியதையை ஆராய வெகு துணிச்சலான முயற்சிதான் இது.
இந்த ஓடம் மிதக்குறதே கஷ்டம் பறக்குமாக்கும்?

இது பறக்குமான்னா கேக்கிறே? பறந்துடுச்சே!

நன்றி: www.nott.com

மசசூட்ஸ் மனிதவியல் பேராசிரியர் டொனால்ட். ப்ரோலக்ஸ் (Donald Proulx) டேவிட் ஜான்ஸன் எனும் பள்ளி ஆசிரியருடன் இணைந்து இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இத்தரைவரைப்படங்கள் நிலத்தடி நீருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். நேஷனல் ஜியாக்ராபிக் உதவியுடன் ஜான்சனால் உருவாக்கப்பட்ட இந்த கருதுகோள் நிலவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் என பல்துறை நிபுணர் குழுவால் 1998 இல் ஆராயப்பட்டது. சில நாஸ்கா வரைப்படங்களாவது நிலத்தடி நீரோட்டங்களின் பாதைகளை ஒட்டி அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாஸ்கா வரிகள் - வானில் மிதக்கும் ஆற்றலை அடைந்த ஒரு பூர்விக நாகரிகம் உருவாக்கியவையா? கற்பனையாற்றல் கொண்ட ஒரு தரைவாழ் சமுதாயத்தின் விசித்திரச் சடங்கின் விளைவா? நிலத்தடி நீரோட்ட பாதையை அறிந்து அதை திறம்பட பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட கருவியா? இரவு வானை தரையில் பிரதிபலிக்கும் விசித்திர நாட்காட்டியா? நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் இன்னமும் தெளிவுபடாத வரலாற்றுப்புதிராகவே உள்ளது.

[வரலாற்று மர்மங்கள்: ஒரு வாரத்துக்கு பின்தொடரும்]
இத்தொடரினை எழுதிட பயன்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பினை இத்தொடர் முடிவில் வெளியிடுகிறேன். (அட்டைகளை ஸ்கேன் செய்வதே பெரும்பாடு) ஆனால் இப்போதைக்கு இந்த நல்ல நூலை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். உபிந்தர் சிங் எழுதி கௌதம் திரிவேதி ஓவியங்கள் வரைந்த இந்த அழகான நூல் 'Mysteries of the past archeological sites of India' நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அருமையான புத்தகத்தின் விலை ரூ 30 மட்டுமே. காவிரிபூம்பட்டின அமைப்பின் ஓவியம் இந்நூலிலிருந்து எடுத்ததுதான். உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக வாங்கிக்கொடுங்கள்.



இணையத்தில் இந்த மர்மங்களை தேட கீழ்காணும் பட்டியல் உதவும் என நம்புகிறேன். ஏதாவது இணையபக்கம் காலமாயிருப்பின் நான் பொறுப்பல்ல.


  • விக்கிபீடியாவில் அட்லாண்டிஸ்
    http://skepdic.com/nazca.html
  • பிரேஸிலில் அட்லாண்டிஸ்?
    http://www.atlan.org/
  • ஏன் அட்லாண்டிஸ் கற்பனை? எனக்கூறும் சந்தேகவாதிகளின் பக்கம்
    http://skepdic.com/atlantis.html
  • குமரிக்கண்டம் குறித்து ஜெயகரன் எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து குமரி மைந்தன் எழுதிய கட்டுரை- எரிக் வான் டானிக்கன் போன்ற ஏமாற்று பேர்வழிகளை அறிவியலாளர்கள் ஆக்கி சிரிப்பு மூட்டும் கட்டுரை.
    http://kumarimainthan.blogspot.com/2005/11/blog-post_113188287842871425.html
  • திரு.சீ.ராமச்சந்திரனின் அருமையான கட்டுரை. இலக்கிய அகழ்வாய்வுச் சான்றுகளுடன் கொற்கை பகுதியின் நில-நீர் பரப்பின் அண்மைக்கால மாற்றங்களைக் காட்டும் இக்கட்டுரை பொதுவாக பல்துறை தரவுகளைக் கொண்டு பண்டைய வரலாற்றை துப்பறிய விரும்புவோருக்கு நல்ல ஒரு தொழில்முறை முன்மாதிரியை இக்கட்டுரை முன்வைக்கிறது:
    http://www.picatype.com/dig/dj0aa02.htm
  • பண்டைய தமிழர் நகர அமைப்பு குறித்த கட்டுரை தொடரில் காவிரிபூம்பட்டினம் குறித்து விவரணம்
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20610068&format=html
  • பூம்புகார் குறித்த விக்கிபீடியா கட்டுரை
    http://en.wikipedia.org/wiki/Poompuhar
  • மறைந்த பூம்புகாரை கண்டுபிடிப்பது குறித்த NIOT முயற்சிகள் குறித்த செய்தி
    http://www.hindu.com/2006/06/28/stories/2006062819300700.htm
    <.li>பிடிஎஃப் கோப்புகள்
  • 1989-90 அகழ்வாராய்ச்சி ஆண்டறிக்கையில் பூம்புகார் குறித்த கண்டுபிடிப்புகள் உள்ளன.
    http://www.nio.org/annual_reports/1989-90_150.pdf
  • 1992-93 க்கான அகழ்வாராய்ச்சி குறித்த ஆண்டறிக்கை:
    http://www.nio.org/annual_reports/1992-93_150.pdf
  • தமிழகத்தில் மத்திய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் நிகழ்த்தி வரும் அகழ்வாராய்ச்சிகள் குறித்த இணைய பக்கம் இங்கே:
    http://www.nio.org/projects/vora/project_vora_5.jsp

  • துவாரகை குறித்த விக்கிபீடியா கட்டுரை
    http://en.wikipedia.org/wiki/Dwarka
  • துவாரகை குறித்து எஸ்.ஆர்.ராவ் அவர்களின் பேட்டி
    http://www.hinduonnet.com/thehindu/mp/2002/11/20/stories/2002112000450200.htm
  • துவாரகை குறித்து மிக விரிவான கட்டுரையை 'தி வீக்' (ஜூன் 2001 இல்) வெளியிட்டது. அது இங்கே.
    http://www.the-week.com/23june01/cover.htm

  • ஹரப்பா.காம் www.harappa,com
    http://www.mohenjodaro.net/
  • மேலிருக்கும் இரு இணையதளங்களும் கென்னோயரின் முயற்சிகளின் விளைவு
  • ஹரப்பா இணையதளத்தில் மகாதேவன் நேர்முகம்
    http://www.harappa.com/script/mahadevantext.html
  • சரஸ்வதி நதி குறித்து ஒரு அறிவியல் பார்வை:
    http://www.ias.ac.in/currsci/oct25/articles20.htm
  • 18-2-2002 இல் சரஸ்வதி நதி குறித்த பல்வேறு பார்வைகளை தி வீக் பத்திரிகை தொகுத்தளித்தது. அக்கட்டுரை இங்கே:
    http://www.hindunet.org/saraswati/sarasvatirebirth01.htm
  • சிந்து சமவெளி குறித்த இந்த இணையதளத்தில் அப்பண்பாட்டு நகர அமைப்புகள் கணினி வரைகலை மூலம் மீள் உருவாக்கப்பட்டுள்ளன.
    இந்த மீள்-உருவாக்கம் இந்திய தொல்லியலாளார் ஆர்.எஸ்.பிஷ்ட்டுவின் மேல்பார்வையில் செய்யப்பட்டதாகும்.
  • http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/
  • http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/2_4_03.html
  • தோலவீரா அகழ்வாராய்ச்சி குறித்த கட்டுரை
    http://www.hinduismtoday.com/archives/2001/1-2/2001-1-16.shtml

  • நாஸ்கா வரிகள் - நிலத்தடி நீரோட்டம் குறித்து:
    http://www-unix.oit.umass.edu/~proulx/Nasca_Lines_Project.html
  • நேஷனல் ஜ்யாகிராபிக் நாஸ்கா குறித்து:
    http://news.nationalgeographic.com/news/2002/10/1008_021008_wire_peruglyphs.html?fs=www3.nationalgeographic.com&fs=plasma.nationalgeographic.com
  • நாஸ்கா விக்கிபீடியாவில்
    http://en.wikipedia.org/wiki/Nazca_Lines
  • நாஸ்கா குறித்த அதீத கற்பனைகளின் பொய்யைக்காட்டும் பக்கம்
    http://skepdic.com/nazca.html
  • நாஸ்கா : பறக்கும் பலூன்
    http://www.nott.com/Pages/projects.php

Monday, January 15, 2007

பொங்கலுக்காக உயிர் கொடுத்தவர்கள்


ஏழு வயது ஸ்ரீமாவை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் அவளுக்கு என்றுமே ஏழு வயதுதான் இருக்கப்போகிறது. ஸ்ரீமாவும் அவளது குடும்பமும் 2002 மகர
சங்கராந்தி அன்று அந்த தினத்தைக் கொண்டாட புதிய ஆடைகளும், வளையல்களும் வாங்க சிங்கிசெரா சந்தைக்கு சென்றார்கள். மேற்கு திரிபுராவில் இருக்கும் ஒரு நகரின்
அருகில் உள்ளது அந்த சந்தை. பாவம் அவர்களுக்கு தெரியாது விக்கிரக ஆராதனை செய்யும் மதத்தின் இந்த சடங்கு ஏசுவின் அன்பான மதத்தினை பரப்புவதில் முனைந்திருக்கும்
என்.எல்.எஃப்.டி (NLFT) என்கிற அமைப்பினால் தடை செய்யப்பட்ட கொண்டாட்டம் என்பது. 13-1-2002 அன்று சிங்கிசெரா சந்தைக்கு வந்த (மகரசங்கராந்தி கொண்டாட
தயாராகிக் கொண்டிருந்த) 16 பேர் NLFTயினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஸ்ரீமாவும் அவள் குடும்பத்தினரும் அடக்கம். ( 16 shot dead by NLFT in Tripura, PTI,
January 13, 2002.: Church backing Tripura rebels ஖ BBC, April 18, 2000.)
ஏதோ பொங்கல் இந்து விழாவாக்கப்பட்டுவிட்டதாக கூறி வருத்தப்பட்டு ஜல்லி பாரம் சுமக்கிற ஆன்மாக்கள் சிறிதே சிந்திக்க வேணும். இந்து வேதம் பூமியை தாயாக பார்க்கும்
வேதம். 'பூமி நம் தாய் நாம் அதன் மக்கள்' என்று பேசுகிறது வேதம். ஆனால் தொடக்கம் முதலே பரவுத்தன்மை கொண்ட (expansionist) ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம்,
இஸ்லாம், மற்றும் மார்க்சியம் விவசாயத்தின் பூமிப்பற்றினை வெறுத்தொதுக்கும் மதங்களே. கேன்-ஏபெல் புராணக்கதை கூறுவதும் இதைத்தான். யஹீவா ஏன் விளைச்சல் பொருட்களை
ஒதுக்கி வேட்டை பொருட்களை ஏற்கிறார்? விவசாயம் இயல்பாகவே மண்ணின் மீது பற்றுணர்த்துகிறது. மண் உயிருள்ளதாக விவசாயியால் உணரப்படுகிறது. அன்னையாக,
தெய்வத்தன்மை கொண்டதாக ஏற்கப்படுகிறது. (அத்தன்மை அழிந்தொழிந்த விவசாயம் மண்ணை அழிக்கும் என்பதனை உலகெங்கும் காண்கிறோம்.) இதனை பொறாமையும்,
'என்னைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது' என்பதையே தலையாய விதியாகக் கொண்ட ஆபிரகாமிய தேவனால் எப்படி ஏற்கமுடியும்? ஆபிரகாமியமோ வான்- உறை/இனக்குழு
தந்தை தெய்வத்தின் மதம். அதுவும் எப்படிப்பட்ட தந்தை தெய்வம்? மற்ற தெய்வங்களை அழித்தே வாழுகிற தந்தை தெய்வம். தமது பெயரால் கொலைகளையும் பாலியல்
பலாத்காரங்களையும் அவிழ்த்து விடும் உத்தரவுகளை அளிக்கிற தந்தை தெய்வம். பாலியல் இணைந்த போரியலை தூண்டி அதன் வெறியின் உச்சத்தில் தன் மகிமையை
பிரகடனப்படுத்துகிற பரமபிதா. தன்னுடைய இரத்த ஒப்பந்தத்தினை ஏற்காதவர்களுக்கு நித்திய நரகத்தை அனைத்து பயங்கரங்களுடனுமான கற்பனையை பிரச்சாரம் செய்த ஏசு என்கிற அந்த பரமண்டல பிதாவின் ஒரே மைந்தன்.


உதாரணமாக கிறிஸ்தவத்தினால் விவசாயம் நடைபெற்ற நாட்டுப்புறங்களில் மதம் பரப்புவது என்பது மிகக்கடினமாக இருந்தது. கிராமவாசிகளை மோசமானவர்கள் என்றிடும் பதமாக
வில்லேஜர் 'வில்லனாக' மாறினான் கிறிஸ்தவம் மொழிப்பதங்களை ஆயுதமாக்குவதில் முத்திரை குத்துவதில் தனித்திறமை வாய்ந்தது. வில்லன் எனும் பதத்தின் பரிணாம வளர்ச்சியை online etymology dictionary (http://www.etymonline.com/index.php?term=villain) பின்வருமாறு காட்டுகிறது: 'inhabitant of a farm; peasant; churl, boor; clown; miser; knave,scoundrel.' ஆலன் வாட்ஸ் எனும் இறையியலாளர் 'Nature, Man and Woman' எனும் தம் நூலில் கிறிஸ்தவத்தின் இத்தன்மையை தெளிவாக விளக்குகிறார். அவ்வாறே pagan என்பதன் இலத்தீனான பாகனஸ் என்பதன் பொருளும் கிராமத்தான் என்பதுதான். Pagan உடன் உறவுடைய பதமே peasent என்பதுவும். இது 'பாகன்' என்பதற்கான விக்கிபீடியா கட்டுரையிலிருந்து: "The older sense of classical Latin paganus is "of the country, rustic" (also as noun). It has been argued that the transferred use reflects the fact that the ancient idolatry lingered on in the rural villages and hamlets after Christianity had been generally accepted in the towns and cities of the Roman Empire; cf. Orosius Histories 1. Prol. "Ex locorum agrestium compitis et pagis pagani vocantur." From its earliest beginnings, Christianity spread much more quickly in major urban areas (like Antioch, Alexandria, Corinth, Rome) than in the countryside (in fact, the early church was almost entirely urban), and soon the word for "country dweller" became synonymous with someone who was "not a Christian," giving rise to the modern meaning of "pagan."


காஃபீர் எனும் வார்த்தையும் கூட இஸ்லாமுக்கு முந்தைய அராபிக் கலாச்சாரத்தில் விவசாயத்தொடர்புடைய சொல்லாகவே இருந்தது. "The word kaafir comes from the root verb,
kafara, which means ஑coverஒ. It was originally used before Islam, in the Arabic language, to describe farmers, when they bury a seed in the ground and cover it with
soil in their planting process." என்கிறது இஸ்லாமிய இணையதளம் (இஸ்லாமிக் ஆன்லைன். நெட்:http://www.islamonline.net/servlet/Satellite?cid=1123996015760&pagename=IslamOnline-English-AAbout_Islam/AskAboutIslamE/AskAboutIslamE) ஆக கிறிஸ்தவ
கலாச்சாரத்திலும் இஸ்லாமிய இறையியலிலும் விவசாயத் தொடர்புடைய பதங்கள் எதிர்மறை பதங்களாக மாறியது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததில்லை.


இனி மார்க்ஸியத்தை பொறுத்தவரையில் அதுவும் ஆபிரகாமிய மதமே என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் ஒவ்வொரு மார்க்ஸிய அரசும், சீனமாகட்டும் சோவியத்தாகட்டும் அதன் முதல் மனிதத்தன்மையற்ற மக்கட்ப்படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டது விவசாய வகுப்பின் மீதுதான். இது குறித்த ஒரு முக்கியமான இலக்கிய பதிவாகக் கூட ஜெயமோகனின்
'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலைக் காணலாம். பெண்மை சார்ந்த பாரத ஆன்மிகக்குறியீடுகளால் (ஆவுடையார்) கிளர்ச்சியடையும் மார்க்ஸீய கதாநாயகனின் தூண்டுகோலாக அமையும் புகாரின் சோவியத் அரசின் விவசாயக்கொலைகளை கண்டு மனம் வெதும்பி அழிந்தவர்.


ஆக, விவசாயத் திருநாள் - இயற்கைக்கு விவசாயி நன்றி நவிலும் நாள், அதன் புனிதத்துவத்தை போற்றும் நாள். ஒரு Pagan திருநாள். ஒரு இந்து திருநாள். தமிழர் திருநாள். ஆபிரகாமிய மதங்கள் சுவடின்றி அழித்திட விரும்பும் நாள்.

Sunday, January 14, 2007

மர்மங்கள் ஊடாக ஒரு பயணம்:1


மர்மம் - தேடல் கொண்ட எவரையும் சுண்டியிழுக்கும் பதம் இது. அகவயத்தன்மை கொண்டது இப்பதம். ஒருவருக்கு மர்மமாக இருப்பது மற்றொருவருக்குப் படு சாதாரணமான
விஷயமாக இருக்கக்கூடும். ஒருவருக்கு விளக்க இயலாத மர்மமாக இருப்பது மற்றொருவருக்கு வெறும் கற்பனையாகத் தோன்றக்கூடும். என்றால், எவை மர்மங்கள்? நம் சாதாரண அறிவுக்கு அப்பால் பட்ட விஷயங்களை மர்மங்கள் எனலாமா? அறிவியலால் விளக்க இயலாதவற்றை மர்மங்கள் எனலாமா? அறிவியல் இன்னமும் தன் ஒளியை பாய்ச்சி வெளிச்சத்துக்கு கொண்டு வராதவற்றை மர்மங்கள் எனலாமா? ஆர்தர்.சி.க்ளார்க், கார்ல் சாகன், சூசன் பிளாக்மோர் போன்றவர்கள் கறாரான அறிவியலின் சட்டகத்திலிருந்து மர்மங்கள் என கருதப்பட்டவற்றை ஆராய்ந்துள்ளனர்.


இலங்கையைச் சேர்ந்த பகுத்தறிவுவாதி மற்றும் மனவியலாளர்: பல 'மர்மங்களை' தோலுரித்தவர்

லயல் வாட்சன் : மர்மங்களை ஆராய்வதில் கவித்துவ சுதந்திரம்


ஜேம்ஸ் ராண்டி: யூரிகெல்லர் போன்றவர்களின் 'சக்திகளை' அந்த சக்தி இல்லாமலே செய்து பித்தலாட்டங்களை நிறுவியவர்
ஜேம்ஸ் ராண்டி, ஆபிரகாம் கோவூர் போன்றவர்கள் மர்மங்கள் எனத் திகைக்க வைத்தவற்றைப் பித்தலாட்டங்கள் என நிறுவ முயன்று குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் அடைந்தவர்கள். காலின் வில்சன், லயல் வாட்சன் போன்றவர்கள் ஒருவித கவித்துவ சுதந்திரத்துடன் அறிவியலின் விளிம்பில் நிகழும் பல மர்மங்களைத் தயக்கமின்றி ஆராய்ந்தவர்கள். இவர்கள் அனைவரது முயற்சிகளும், பார்வைகளும், அனுபவங்களும் மர்மங்கள் குறித்து நாம் மேற்கொள்ளவிருக்கும் இச்சிறு பயணத்தில் தோணிகளாகவும், பாய்மரச்சீலைகளாகவும், சுக்கானாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


பூமியின் மர்மங்கள்



உயிரின் தோற்றத்தில் வேற்றுக்கிரகப் பங்களிப்பு:

வேதியியலாளர் அர்கீனியஸ் பூமிக்கு வெளிக்கிரகங்களிலிருந்து உயிர் கோளங்கள் அண்டவெளியில் மிதந்தபடி வந்திருக்கலாம் என ஊகித்தார். ஆனால் அண்டவெளி கதிர்வீச்சில் அத்தகைய கோளங்கள் பிழைக்க முடியாதென்பதால் அக்கருதுகோள் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஒபாரினின் ஆதி கடலில் கரிம மூலக்கூறு குழம்பிலிருந்து உயிர்
உருவாகியிருக்கலாம் என்பதே நிறுவப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது. ஆனால் 1979-இல் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தயால்
விக்கிரமசிங்கே, டேவிட் ஆலன் ஆகியோர் வால்-நட்சத்திரத்திலிருந்து பூமியின் வளிமண்டலத்தில் உதிரும் துகளின் நிறமாலையை ஆராய்ந்த போது அது காய்ந்த பாக்டீரிய
கோளங்களின் நிறமாலையை ஒத்திருப்பதைக் கண்டனர். இதனைத் தொடர்ந்து சந்திரா விக்கிரமசிங்கே சர்.பெரெட் ஹோயல் கியோர் பூமியில் உயிர்களின் தோற்றத்தில்
விண்வெளியிலிருந்து வரும் நுண்ணுயிரிகளின் பங்கும் இருக்கலாமெனும் கோட்பாட்டினை முன்வைத்தனர். செவ்வாய் கிரகத்தைச் சார்ந்த விண்கல் பூமியில் கண்டெடுக்கப்பட்ட போது
அதில் பாக்ட்டீரிய செயல்களால் ஏற்பட்டது போன்ற அமைப்புகள் காணப்பட்டன.

உயிரின் உதயம் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல் இவரது சோதனை

2001 இல் ஜெயந்த் நர்லிக்கரால் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிசோதனை இந்திய விண்வெளி அமைப்பால் நடத்தப்பட்டபோது வளிமண்டல உயர் தளங்களில் புவி சாராத நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே பூமியின் உயிரினத் தோற்றத்திலும் பரிமாண வளர்ச்சியிலும் அண்டவெளியின் பங்களிப்பு சாத்தியமானது என்பது தெரிகிறது. ஆனால் எந்த அளவுக்கு? இப்போதும் அது தொடர்கிறதா என்பவை ஆராயப்பட வேண்டிய மர்மங்களே ஆகும்.


டைனோஸார்கள் எவ்வாறு அழிந்தன?:


1300 ஊர்வன வகை விலங்குகளான டைனோசார்கள் ஒருகாலத்தில் இப்புவியின் முக்கிய உயிரினங்களாகத் திகழ்ந்தன. அவை எவ்வாறு அழிந்தன என்பது இன்றைக்கும் மர்மமாகவே
உள்ளன. ஏறக்குறைய 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக இவ்வுயிரினங்கள் அழிந்தன. எவ்வாறு? அதிகமான எடை அதிகமான உணவுத்தேவை மற்றும் மாறிய காலச்சூழல் ஆகியவற்றால் இவை அழிந்திருக்கக் கூடுமென நம்பப்பட்டு வந்தது. பின்னர் 1980இல் லூயிஸ் அல்வரேஸ் எனும் நிலவியலாளர் 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் உருவான நில-அடுக்குகளில் இரிடியம் எனும் தனிமம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இத்தனிமம் புவியில் அரிதாக கிடைப்பதுடன் விண்கற்களில் அதிகமாகக் கிடைக்கிறது. எனவே,
'இக்காலக்கட்டத்தில் பல மைல்கள் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல் பூமியில் மோதியிருக்கலாம். பல்லாயிரம் அணுக்குண்டுகளின் ஆற்றலுடன் பெரும் அழிவினை உருவாக்கிய அம்மோதல் பெரும் வெப்பத்தையும் வெளியிட்டது. பெரும் புழுதி மண்டலம் கிளம்பியது. ஒளிச்சேர்க்கை தடைப்பட்டது. உலகின் பெரும் மிருகங்களான டைனோசர்கள் அழிந்தன. அப்போது சிறு விலங்குகளாக இருந்த பாலூட்டிகளின் பரிணாமத்திற்கு இது வழிவகுத்தது.' எனும் கோட்பாட்டினை அவர் முன்வைத்தார்.

இத்தகைய விண்கல் மோதல் ஒரு குறிப்பிட்ட காலச்சுழலில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியா? மெக்ஸிகோவில் 180 கிமீ அகலம் கொண்ட விண்கல் 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மோதியதால் ஏற்பட்ட கிரேட்டர் இந்த அழிவு நிகழ்ச்சிக்கு சான்று பகர்கிறது.
பாரதத்தின் தக்காண பசால்ட் (எரிமலைக் குழம்புறைந்துருவான பாறை) அடுக்குகளும் அதே 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டவைதாம். ஏறத்தாழ 10000-20000 ஆண்டுகள் நீடித்த எரிமலை சீறல்களும் டைனோசார்களின் அழிவுக்கு நிச்சயமான காரணியாக இருந்திருக்கக் கூடும்.

தக்காண எரிமலைக் குழம்பு உறைந்து பாறைப்படிமங்களான அடுக்குகள்
ஆனால் டைனோசார்கள் உண்மையிலேயே அழிந்துவிட்டனவா?ஏனெனில் இன்று நாம் காணும் பறவைகள் டைனோசாரிலிருந்து பரிணமித்தவை என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தம் இராட்சத உருவால் மட்டுமல்லாது தம்மைச் சுற்றிப்பொதியும் மர்மங்களாலும் நம்மை ஈர்த்து வருகின்றன நனோசார்கள்.


பூமி ஒரு அதி-உயிரியா?:


பல பண்டைய ஐதீகங்களும் புராணங்களும் பூமியை ஒரு தாய்த்தெய்வமாகக் கூறுகின்றன. அண்மையில் ஒரு அறிவியல் கருதுகோள் பூமியை ஒரு உயிர் அமைவாக (system)
காணும் சாத்தியக்கூறினை முன்வைத்துள்ளது. உயிரி-இயற்பியலாளர் (bio-physicist) ஜேம்ஸ் லவ்லாக்கும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸும் இக்கருதுகோளை
வலியுறுத்துகின்றனர். பூமியும் அதன் உயிரினங்களுமாக இப்புவியின் வெப்பம், வளிமண்டல அமைப்பு மற்றும் இயக்கம், வளிமண்டலத்திலிருக்கும் வாயுக்களின் தன்மை ஆகியவற்றைப்
பெருமளவில் நிர்ணயிப்பதைச் சுட்டிக்காட்டும் இவர்கள் புவிசார்ந்த கார்பன் சுழற்சி, நீர் சுழற்சி போன்ற பல சுழற்சிகளில் உயிரினங்களின் ஒட்டுமொத்த இயக்கம் முக்கிய பங்கு
வகிப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். முதலில் இக்கருதுகோளை இவர்கள் வெளியிட்டபோது அதனைப் பிரசுரிக்க பல முக்கிய அறிவியல் இதழ்கள் மறுத்துவிட்டன.

ஜேம்ஸ் லவ்லாக்

லின் மர்குலிஸ்
இக்கருதுகோளுக்கு கிரேக்க புராணத்தில் பூமித்தெய்வமாக கருதப்படும் 'கயா'(Gaia) எனும் பெயரை வைத்தது இம்மறுப்புக்கு காரணமாக இருக்கலாம். பின்னர் கார்ல்சாகன் தாம் நடத்திய அறிவியல் ஆய்வு இதழான 'இக்காரஸ்' எனும் இதழில் இக்கருதுகோளை பிரசுரித்தார். ரிச்சர்ட் டாவ்கின்ஸ் போன்ற நியோ-டார்வினியவாதிகள் இக்கருதுகோளை வலுவாக எதிர்க்கின்றனர். எனினும் சுற்றுப்புற சூழல் அறிவியலாளர்கள், சூழலியல் களப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆன்மிகவாதிகள் மத்தியிலும் கூட இக்கருதுகோள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பூமி ஓர் பெரும் அதி உயிர் என்றால் நாம் அதன் செல்களா? உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது ஒற்றை உயிர் ஒன்றின் பல்வேறு செல்களின் வளர்ச்சியா? அண்டவெளியில் மிதக்கும் ஓர் உருண்டை உயிரா பூமி?
[அடுத்ததாக வரலாற்று மர்மங்கள்]

Saturday, January 13, 2007

கோவா தொடங்கி தொடரும் புனித விசாரணைகள்:1

வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான்
இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான்
எனினும் முனங்கினான். ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான்
எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது
எத்தனை கொலைகள் அவனால் என் நாட்டில். நான் கூச்சலிட்டேன்
இளக்காரமாக "போ போ போய் விடு!"
-ஷெல்லியின் கிறிஸ்து எனும் கவிதை-


கோவாவில் கிறிஸ்தவம் செய்த வன்முறையின் உண்மையான இயற்கை என்ன என்பதனை காட்டவும், இவ்வன்முறையின் பின்னாலிருக்கும் இறையியல் இன்றைக்கும் கிறிஸ்தவத்தில்
தொடர்வதையும் காட்டுவதே இத்தொடரின் நோக்கம்.


சவேரியாரின் கோவா லீலைகள்:
இன்று கத்தோலிக்க சர்ச் அவருக்கு 'கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்' என்று பெயர் வைத்துள்ளது. சர்ச் இவரை புனிதர் என்று கூறுகிறது. அப்பாவி இந்துக்களும்
நாகர்கோவிலில் கோட்டாரில் உள்ள இவரது சர்ச்சில் நடைபெறும் 'தேரோட்டம்' என்கிற (இந்துக்களை பார்த்து காப்பியடித்து அப்பாவி இந்துக்களுக்கு பொறியாக நடத்தப்படும்)
திருவிழாவுக்கு செல்கின்றனர். ஆனால் யார் இந்த சவேரியார்? இவர் உண்மையில் செய்த வேலை எப்படி பட்டது? இந்தியர்களைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் இந்த கோட்டார்
சவேரியார் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் சவேரியார் செய்த வேலைகள் இன்றைக்கும் இந்தியாவில் தொடர்ந்து செய்யப்படுகின்றன.


குறிப்பாக கோவாவில் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் இன்க்விசிசன் மற்றும் அதில் 'புனிதராக' கத்தோலிக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவியரின் பங்கும் அவரது கருத்தாக்க
தாக்கமும் என்ன என்பதனையும் சிறிது காணலாம்.


கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778
இல் அது கிறிஸ்தவப் பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய
புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த 'புனித விசாரணை' நிறுவனம் இந்தியாவில் நீடித்தது.



ஏசு சபையின் நிறுவனர் லயாலோவுடன் பிரான்ஸிஸ் சேவியர். ஏசு சபை இனத்'தூய்மை'யை வலியுறுத்துவதில் ஹிட்லரின் முன்னோடியாக திகழ்ந்தது. நாசி அமைப்புகளில் சேர ஒருவன் தனது மூன்று தலைமுறைகளுக்கு யூதக்கலப்பில்லை என நிரூபிக்க வேண்டும். ஏசு சபையிலோ ஒருவன் தனக்கு யூத கலப்பில்லை என்பதனை ஐந்து தலைமுறைகளுக்கு நிரூபிக்க வேண்டும். இந்த ஏசுசபை சட்டம் நாசிகளால் தம் நிலைப்பாட்டை நியாயப்படுத்த சுட்டிக்காட்டப்பட்டது. இது 1940களில்தான் நீக்கப்பட்டது.

1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது
தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

"சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட
நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள். அதனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்....இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன." (St. Francis Xavier's Letter from India, to the Society of Jesus at Rome, 1543)


"..இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன."-'புனித' சேவியர்


பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும்
பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய
கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில்
அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:



"முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது. பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன்
நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான்.
இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது....இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)


"இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது."--'புனித' சேவியர்


1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள்தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு
இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்
அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க
தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட "Modern Asia and Africa, Readings in World History" பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971. அந்தணர்களைக் குறித்து சேவியர் கூறியதற்கு ஒப்ப மத்திய கால ஐரோப்பாவில் யூதர்கள் குறித்தும் கட்டுக்கதைகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது உண்மையில் யூதர்கள் ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என அறிவார்கள் என்றும் ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவதாகவும் கூறப்பட்டுவந்தது,)



கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே
ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிட்டது. "குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து இந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள்
உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. இந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து
துரத்தப்பட்டனர்." என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing
House,Bombay,1988.)
[தொடரும்]

இந்து வாழ்வுரிமை 2007:1

தமிழ்நாட்டில் கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்மையில் பல இந்து கோவில்கள் தாக்கப்பட்டன.

நன்றி: தினமலர் 9-1-2007

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிள்ளையார் கோவிலை கிறிஸ்தவர் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்து பெண்கள் காவல்நிலையத்தில் வந்து அறப்போராட்டம் நடத்தினர்.


நன்றி: தினகரன் 9-1-2007

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று கோவிலுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது.

நன்றி: தமிழ்முரசு 13-1-2007