அகப்பயணம்

Tuesday, July 20, 2010

போஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்

From அகப்பயணம்


From அகப்பயணம்



குழந்தை திருமண சட்டம்: முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

நாக‌ர்கோவில், ஏப்ர‌ல் 01: குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனி விலக்களிக்க வேண்டும் என, மாநில சிறுபான்மையினர் மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் ஏ. மீரான்மைதீன் முதல்வருக்கு அனுப்பிய மனு:
அரசால் கொண்டுவரப்படவுள்ள குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 21 வயது நிறைவடையாத ஆணும், 18 வயது நிறைவடையாத பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும்.
அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சமூக நல அதிகாரியால் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும், அத் திருமணத்தில் கலந்துகொள்வோருக்கும், திருமணம் நடப்பது தெரிந்திருந்தும் அதை தடுத்து நிறுத்தாதவர்களுக்கும் நீதிமன்றம் மூலம் 2 ஆண்டு தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களின் மதகோட்பாடுகளுக்கும், மத உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பூப்பெய்திவிட்டால் அவர் திருமணத்துக்கு தகுதியானவர் என்று சொல்கிறது.
திருமணத்துக்காக பெண்ணுக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்களில் 16, 17 வயதுகளிலேயே பல திருமணங்கள் நடக்கின்றன.
அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இச் சட்டத்தால் முஸ்லிம்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மதகோட்பாடுகளுக்கும், ஷரியத் சட்டத்தின்கீழ் திருமணங்களை நடத்துவதிலும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார் மீரான் மைதீன்.