கோவா தொடங்கி தொடரும் புனித விசாரணைகள்:1
வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான்
இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான்
எனினும் முனங்கினான். ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான்
எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது
எத்தனை கொலைகள் அவனால் என் நாட்டில். நான் கூச்சலிட்டேன்
இளக்காரமாக "போ போ போய் விடு!"
-ஷெல்லியின் கிறிஸ்து எனும் கவிதை-
கோவாவில் கிறிஸ்தவம் செய்த வன்முறையின் உண்மையான இயற்கை என்ன என்பதனை காட்டவும், இவ்வன்முறையின் பின்னாலிருக்கும் இறையியல் இன்றைக்கும் கிறிஸ்தவத்தில்
தொடர்வதையும் காட்டுவதே இத்தொடரின் நோக்கம்.
சவேரியாரின் கோவா லீலைகள்:
இன்று கத்தோலிக்க சர்ச் அவருக்கு 'கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்' என்று பெயர் வைத்துள்ளது. சர்ச் இவரை புனிதர் என்று கூறுகிறது. அப்பாவி இந்துக்களும்
நாகர்கோவிலில் கோட்டாரில் உள்ள இவரது சர்ச்சில் நடைபெறும் 'தேரோட்டம்' என்கிற (இந்துக்களை பார்த்து காப்பியடித்து அப்பாவி இந்துக்களுக்கு பொறியாக நடத்தப்படும்)
திருவிழாவுக்கு செல்கின்றனர். ஆனால் யார் இந்த சவேரியார்? இவர் உண்மையில் செய்த வேலை எப்படி பட்டது? இந்தியர்களைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் இந்த கோட்டார்
சவேரியார் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் சவேரியார் செய்த வேலைகள் இன்றைக்கும் இந்தியாவில் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
குறிப்பாக கோவாவில் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் இன்க்விசிசன் மற்றும் அதில் 'புனிதராக' கத்தோலிக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவியரின் பங்கும் அவரது கருத்தாக்க
தாக்கமும் என்ன என்பதனையும் சிறிது காணலாம்.
கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778
இல் அது கிறிஸ்தவப் பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய
புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த 'புனித விசாரணை' நிறுவனம் இந்தியாவில் நீடித்தது.
1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது
தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
"சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட
நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள். அதனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்....இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன." (St. Francis Xavier's Letter from India, to the Society of Jesus at Rome, 1543)
பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும்
பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய
கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில்
அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:
"முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது. பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன்
நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான். இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது....இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது."--'புனித' சேவியர்
1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள்தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு
இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்
அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க
தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட "Modern Asia and Africa, Readings in World History" பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971. அந்தணர்களைக் குறித்து சேவியர் கூறியதற்கு ஒப்ப மத்திய கால ஐரோப்பாவில் யூதர்கள் குறித்தும் கட்டுக்கதைகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது உண்மையில் யூதர்கள் ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என அறிவார்கள் என்றும் ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவதாகவும் கூறப்பட்டுவந்தது,)
கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே
ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிட்டது. "குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து இந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள்
உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. இந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து
துரத்தப்பட்டனர்." என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing
House,Bombay,1988.)
[தொடரும்]
8 Comments:
அரிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு நீலகண்டன். நன்றி.
இன்றைக்கும் கோவா செல்லும் யாரும் இந்த சேவியர் தொடங்கி போர்த்துகீசியர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் வடுக்களைப் பார்க்கலாம்.
சேவியரின் இதே விதமான இந்திய வெறுப்பை போர்ச்சிகீசியக் கலப்பில் பிறந்த இன்றைய கோவா கிறித்தவர்கள் சிலரிடம் கண்டிருக்கிறேன். பெயர் தொடங்கி எல்லாவற்றிலும் தங்கள் ஐரோப்பிய பின்னணியைப் பற்றித் தான் இவர்கள் பீற்றிக் கொள்வார்கள். இந்திய கலாசாரம் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை இன்று வரை வளர்த்தெடுத்து வந்திருக்கிறது இந்தக் கிறித்தவக் கருத்தியல் வன்முறை.
அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.
இன்று இந்தியாவில் நடந்த வரலாறு மூடி மறைக்கப்படுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
In the name of God, the most beneficient & mercyful
Dear brother Aravindan
Now you started to try your best to build-up haterness in the mind of Hindus about Christians also, very similar you did about Islam.
While doing the activities to build-up haterness among public mind, how could you blame others (MUSLIMS & CHRITIANS) are promoting haterness and terrorism.
I definitly belive now that you also trying to sow the seeds of terrorism.
In what way the article you publish will help our society, other than targetting Christian people.
You didn't show any soild authentic evident that St. Xavier, ill-treated Hindu ethics & principles other than typing some information by your hand. This can be fabricated until you produce a copy of those letters written by St. Xavier.
Even if I assumed that St. Xavier did so, how could you corner the Christian who are living now?
If you started to blame other party, they will in turn start to blame you and thus enemity & clash will be unavoidable.
Why don't we use our discussion on healthy way that will improve our relation, strengthen our socity & take the generation towards positive steps.
We have lot of issues for which we could create awareness among our public. Like for example BRIBARY. Is it only official & politicians to be blame for the bribery. Are the public are not unknowingly growing this disease for the sack of selfish attitute. So how could we develope awareness among the public to stop encourging to feed politicians & official with bribe.
In the last assembly election, few IIT'ans contested in the election to bring a new diemnsion for poilitics. Why they cannot be sucesful? Do we need to depend on these hertitary politician to rule us and keep the corruption to continue? How could w educated the public to select the candidates while going to exercise their vote?
There are lot of other issues like uncleanliness around our surrounding. How to create awarness among public to keep their area clean? Are the public only expect things from Government? What they could give to the government to improve the performance of governance.
I don't know the reason why you didn't publish my second reply posting for "JIHAD ISSUE". In that I produced some evidences from QURAN & FROM PROPHET SAYINGS to proof ISLAM never support terrorism. Also, I asked you to QUOTE the Quranic WORDS used by TERRORIST organisation Lakshri Toiba. If those Quran words are reflecting HATERNESS TOWARDS non-Muslim, I must agree ISLAM promote terrorism. But, if the quranic verses are not engaraging the followers to hate non-Muslims and only because the misguided group using the words cannot be evidence to prove ISLAM promt haterness & terrorism. But, unfortunately you didn't publish that posting. If possible, please publish to the public so that they will evlauate any truth behind my message.
So, please don't waste the time for destructive purpose. Use it for constructive purpose.
If the readers find any truth in my message all prsaise to almighty God. If any untruth or wrong information, it is beacuse of my mistake. In that case, I request my apology & correct me
LIVE & LET OTHERS TO LIVE
UTHAVI SAIYYA VITTALUM
OTHIRAM SAIYATHAE
Thanks and regards
Your brother
Naina Mohammed
Dear brother Naina,
i was cleaning up my mail box by deleting unwanted mails. most probably i inadvertently deleted your mail also. i am really sorry. if you can kindly send me the content again i shall definitely publish it. Nevertheless i shall answer you also. once again i am sorry for the negligent behavior. i assure you it is not intentional.
s.an
//You didn't show any soild authentic evident that St. Xavier, ill-treated Hindu ethics & principles other than typing some information by your hand.//
All letters have dates as well as the reference book is also given.
//I asked you to QUOTE the Quranic WORDS used by TERRORIST organisation Lakshri Toiba.//
Take the very logo of L-e-T. It depicts a Koran with a AK-47 and a Koran verse. Now you say that Koran is against terrorism. We saw how Muslims condemned and indulged in vioence against cartoons of Muhammed. If Koran is against terrorism and if a terrorist organization is using Koran in its logo, then surely that is a worse insult than cartoons. Why there is no outcry among Indian Muslims that such a logo be removed? As far as the lines of Koran and its meanings, i can say Thank you. i have enough copies of Koran which make the meaning very clear, of the Jihadhi verses and i also know what the Islamic apologists say. I also know when Muslims are in minority how they are explained in theory and when they are in majority how things are executed in practice.
'Guardian of the Dawn' by Richard Zemmler will be an interesting read.
உண்மையை சொல்வது சரித்திரம் என நினைத்திருத்தேன். உங்களின் பதிவுகளிலிருந்து அவை அத்தனையும் பொய் என முடிவிற்கு வருகிறேன் 60 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் இனியாவது உண்மைகளை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்/
உங்களின் படிபாற்றல் அபாரம்
Janaap Naina,
Is it only official & politicians to be blame for the bribery.
I completely agree with you in what you say.
Every historian accepts that the most ancient business are prostitution and priestcraft. The priest in mosque and church informs the innocent with promises about heaven. Believing in such nonsenses common men go to those prayer halls. However, atleast they get some peace of mind out of it.
Worse are those priests and moulvis who pay people to get converted to their religion. And this is the bribery that started before any other type of bribery, mother of all briberies.
As this is the case, I request Aravindan to consider your plea.
I definitly belive now that you also trying to sow the seeds of terrorism.
People like Aravindan caution those who have some sensibilities left out about the seeds sown by some megalomaniac terrorists who are sprouting their evil hands everywhere.
How making people knowlegeable about atrocities done by some ancestors will sow the seeds of terrorism?
There are many people who have been killed, raped, and made poor and friendless because they are talking about what is going on.
It is also well known that terrorists do not tolerate being criticized. As long as they are not criticized for their ominous practices they allow others to have problems with less intensity (and they call this as peace). When they are criticized the intensity thickens.
As you are the follower of an Abrahamic religion whose God punished his children for becoming knowledged, it is not unusual of you to ask such question. For you people are his obedient children.
May the merciful god give common sense to those who believe him.
Post a Comment
<< Home