Thursday, December 14, 2006

மௌலானா முகமது அலி - 1


இஸ்லாமிய விடுதலை வீரர்களுள் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர் மௌலானா முகமது அலி. அவரது வாழ்வில் மற்றும் அவரது கருத்தியலில் அவரது மார்க்கமான இஸ்லாம் மிக முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது ஒவ்வொரு பாரத மைந்தருக்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே இஸ்லாமிய மார்க்க வழி நடந்த இந்த மகத்தான மனிதரைக் குறித்தும் அவரது அரசியலை வழிநடத்திய இறையியல் பரிமாணங்களையும் தெளிவுபட புரிந்து கொள்வோம்.


மௌலானா முகமது அலி


1878 இல் பிறந்த முகமது அலி அலிகார் பல்கலைக்கழகத்திலும் பின்னர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டின் லிங்கன் கல்லூரியிலும் பயின்று தாயகம் திரும்பிய போது ராம்பூர் மாகாணத்தின் கல்வித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பரோடா சிவில் சர்வீஸில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரியாக ஏழு வருடங்கள் பணியாற்றவும் செய்தார்.

'மணமற்ற பூக்களும் வீணடிக்கப்பட தேவையில்லாத கல்லறை'


1906 இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கினை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர் மௌலானா முகமது அலி. டாக்காவில் அந்த அமைப்பின் முதல் மாநாட்டிலும் கலந்து
கொண்டார்.1 .


முஸ்லீம் லீக் நிறுவனர்: இளவரசர் ஆகாகான்
இந்த முதல் மாநாட்டில் முஸ்லீம் லீகின் முதல் நோக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டது:"பிரிட்டிஷ் அரசிடம் முஸ்லீம்களுக்கு விசுவாசத்தை வளர்ப்பது."2. 1912 இல் ஏற்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இஸ்லாமிய நாடுகளுடனான பிரிட்டிஷ் போர்களே அவரை பிரிட்டிஷுக்கு எதிராகத் தூண்டியது. பாரதத்தின் மீதான பற்று அல்ல. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கப் பார்வையால் தேசப்பற்று என்பதை குறுகிய வட்டமாகக் கண்டவர் மௌலானா அவர்கள். 1911 இல் 'காம்ரேட்' இதழில் மௌலானா முகமது அலி தெள்ளத்தெளிவாக எழுதினார்:
"இந்தியா ஒரு தேசம் என்கிற கோஷத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை."
மேலும்தேச ஒற்றுமைக்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் அந்த கல்லறையில் மணமற்ற பூக்களை கூட தாம் வீணாக்க விரும்பவில்லைஎன்றும் கூறினார்.3 1912 இல் 'காம்ரேட்' பத்திரிகையில் அவர் எழுதினார்:
"முஸ்லீமின் உணர்வுகள் என்றைக்கும் அவனது மார்க்கத்தவருடனேயே இருக்கும். இஸ்லாமினை ஏற்பதன் மூலம் ஒருவன் இனமோ தேசமோ என்றைக்கும் கட்டாயமாக ஒரு குறுகிய தேசப்பற்றில் ஆழ்ந்து போவதில்லை. நிலவரையறைச் சார்ந்த தேசப்பற்றென்பது மானுட சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு மததிற்கு கிடையாது."
4


1918 இல் முஸ்லீம் லீக் தலைவராக முகமது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசையும் தேச ஒற்றுமையையும் 1911-12 இல் கடுமையாக விமர்சித்த மௌலானா விரைவில்
காங்கிரஸ் மாநாட்டிற்கே வருமளவுக்கு மாற்றமடைந்தார். 1919 இல்தான் முதன் முதலாக மௌலானா முகமது அலியும் அவரது சகோதரர் ஷௌகத் அலியும் காங்கிரஸ் மாநாட்டில்
கலந்து கொண்டனர். 19 மார்ச் 1920 இல் கிலாபத் இயக்கத்தின் சந்திப்புக்குழுவினர் பிரிட்டிஷ் பிரதமர் லயாட் ஜியார்ஜினை சந்தித்தனர். அங்கு அவர்களிடையே நடந்த உரையாடல்
பின்வருமாறு:5

'தேசியம் கடந்த பார்வை'


  • லயாட் ஜார்ஜ்: திரு.முகமது அலி உங்கள் தரப்பினைக் கூறுகிறீர்களா?
  • முகமது அலி: நான் சில விஷயங்களை இங்கே குறித்துள்ளேன். நான் போக போக அதனை விளக்குகிறேன். எனவே உங்களுக்கு தெளிவாக நான் கூற வருவது புரியும்.
    நான் தெளிவாக்க விரும்பும் ஒரு விஷயம். நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islamஒs whole outlook on life is supranational rather than national.)...எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் (துருக்கிய கலீபா அரசு) முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.
    ...
  • லயாட் ஜார்ஜ்: அப்படியானால் அரேபிய பிரதேசங்களுக்கு விடுதலை அளிக்கக்கூடாது எனக் கூறுகிறீர்களா?
  • முகமது அலி: ஆமாம். முஸ்லீம்கள் என்கிற முறையில் 'ஜஸிர்த் உல் அரப்' (அதாவது அரேபியா முழுவதும்) மற்றவர்களால் நுழையப்படாமல் முழுக்க முழுக்க துருக்கி மூலமாக இஸ்லாமிய அதிகாரத்தில் இருக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீன் மெசபடோமியா ஆகிய பிரதேசங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மெக்கா மெதினா ஜெருசலேம் ஆகியவற்றின் பாதுகாவலராக கலீபா நியமிக்கப் பட வேண்டும்.....(மௌலானா பாலஸ்தீனத்தில் எக்காலத்திலும் யூதர்கள் அதிக அளவில் குடியேற முடியாது என நம்பிக்கை தெரிவிக்கிறார்.)

    துருக்கி (பச்சை) மற்றும் கிலாபத் மேலாதிக்கம் செலுத்த முகமது அலி விரும்பிய தேசங்களும்

  • (இடையில் குறுக்கிட்டு மௌலானாவுடன் வந்த சையது ஹுசைன் கூறுகிறார்) கிலாபத் இயக்கம் முழுக்க முழுக்க முஸ்லீம்களை மட்டுமே கொண்ட இயக்கமில்லை. அதில் இந்துக்களும் இருக்கிறார்கள். கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுவாக இந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதே வழக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியிருந்த போது முஸ்லீம்கள் வெளிப்படையாக அந்த முழு இயக்கத்தையும் எதிர்த்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் அதற்கு வர ஆரம்பித்துள்ளனர். இன்று இந்த தேசிய இயக்கம் இந்த அளவு ஒரு அசாதாரணமான இயக்கமாகியுள்ளது. இப்போது நாம் இந்தியாவில் புதிய சகாப்தம் ஒன்றின் தொடக்கத்தில் உள்ளோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய சக்தியாகும் (The British Empire is the greatest Muslim Power in the world) உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தோ-இஸ்லாமிய-பிரிட்டிஷ் ஒற்றுமை யதார்த்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் திருப்தி அளிக்குமாறு ஏற்படுமானால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஜீவித இலட்சியத்தை பூர்த்தி செய்திட உதவும். (it would certainly be a very splendid fulfilment of the destiny of the British Empire. That is all I have to say.)


லியாட் ஜார்ஜ் : அன்றைய பிரிட்டிஷ் பிரதமர்


இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் தமது பேரரசு தமது கிறிஸ்தவ எதிரி நாடுகளை நடத்துவது போலவே துருக்கியையும் நடத்துவதாகவும் தமது பேரரசில் இருக்கும் முஸ்லீம்களின் உதவிக்கு தம் பேரரசு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதனை தாம் நினைவில் கொண்டு செயல்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் தம்மோடு போரிடும் கிறிஸ்தவ நாடுகளை நடத்துவது போலவே இஸ்லாமிய நாட்டையும் தாம் நடத்தவேண்டியிருந்த போதிலும், இஸ்லாமிய மக்களின் கருத்துக்களுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் கூறி அந்த சந்திப்பை முடித்துக்கொண்டார். இந்த உரையாடலின் முக்கிய அம்சம் மௌலானா எந்த இடத்திலும் மறந்தும் கூட இந்திய தேச விடுதலை குறித்தோ அல்லது சுவராஜ்ஜியம் குறித்தோ வாயைத் திறக்கவில்லை என்பதுதான். மட்டுமல்ல அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது கிலாபத் மற்றும் அராபிய பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம். பின்னர் மசூதியில் பேசிய மௌலானா மேன்மை தங்கிய அரசரின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இஸ்லாமிய குடிமக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிகம் என கூறினார்.5 [தொடரும்]





  • 1. பாகிஸ்தானிய இணைய தளம்: www.storyofpakistan.com/person.asp?perid=P038
  • 2. மேத்தா & பட்வர்த்தன் 'The communal Triangle' பக்.24
  • 3. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
  • 4. மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை: ஜமீல் அகமது, 'Jauhar:A Prince Among The Patriots'
  • 5. பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாடல் குறித்து வெளியான செய்தி மற்றும் மசூதி பேச்சு: The Islamic Review, ஏப்ரல் 1920

6 comments:

  1. நீல்ஸ், இதுக்கு பேருதான் "முழுஆட்டை பிரியாணியில் மறைத்தல்". எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்போ தேசபக்தி, இடஒதுக்கீடு என கூச்சல்.

    ReplyDelete
  2. நீல்ஸ், இதுக்கு பேருதான் "முழுஆட்டை பிரியாணியில் மறைத்தல்". எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்போ தேசபக்தி, இடஒதுக்கீடு என கூச்சல்.

    ReplyDelete
  3. திரு நீலகண்டன்,
    சரித்திர சான்றுகளுகளுடன் அருமையான தொடர். பலவிதமான அரசியல் காரணங்களால் உண்மையான வரலாறு நமக்கு மறைக்கப்ப்ட்டே வந்திருக்கிறது. தங்களது இதுபோன்ற பதிவுகளால் உண்மையான வரலாற்று நிகழ்வுகள் வெளிவருவது கண்டு மிக்க மகிழ்சி. உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுதல்களுடன்
    R.பாலா

    ReplyDelete
  4. புல்லுரிவிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து வெளிச்சம் போடும் மிக அருமையான ஒரு பதிவு.

    இஸ்லாம், கம்யூனிசம் என்ற இரண்டு பிற்போக்கு அடிப்படைவாதங்களும் தேசியம் கடந்த பார்வையில் ஒன்றாக உடன்படுகின்றன.

    "இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது"- இது இஸ்லாம், கம்யூனிசம் இரண்டுமே புகட்டும்
    விஷ(ய)ம்தான். தேசியத்திற்கு எதிரானவை என்று சொன்னால் மட்டும் ஏன் இவர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது?

    "மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை" என்று சொல்லும் இஸ்லாமிய மதவாதத்துடன் கம்யூனிச காம்ரேடுகள் கைகோர்த்து உறவாடும் "விசித்திரம்" உண்மையில் விசித்திரம் அல்ல, சித்தாந்த ஒற்றுமையில் பிறந்ததான ஒரே சித்திரத்தின் இரு பரிமாணங்கள்தாம் அவை.

    மேலே சொன்ன இந்த இரண்டு மேற்கோள்களும் போதும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் காட்டிக்கொடுக்கும் கம்யூனிசக் கயமைத்தனமும் எந்த அளவுக்கு "சித்தாந்த" ஒற்றுமை கொண்டுள்ளது என்று வெளிச்சம் போட்டுக்காட்ட.

    ReplyDelete
  5. இது வந்தேறி பார்பனரின் திட்டமிட்ட சதி,குலத்தொழில்- வரலாற்றை மாற்றியெழுதியே வழக்கப்பட்டவர்கள்.

    ReplyDelete
  6. நீலகண்டன்,

    மெய்யான வரலாற்றை அறியாத தேசம் முன்னேறவே முடியாது. மெய்யான வரலாற்றினை மேலும் அறிவதில் ஆர்வமாயிருக்கிறேன்.

    ஒருஸ்டீபன் நாப்
    வந்து ஆராய்ந்து படங்கள் போட்டு ஆராய்ந்து விளக்கியபின்பு தேஜோமஹால் சிவன் கோவில் தந்தையைச் சிறையடைத்த மென்மனம் கொண்ட இசுலாமிய மன்னன் ஷர்ஜகானின் காதல் மாளிகை என்கிற சரித்திரப் புரட்டைப் புரட்டிப் போட்ட மாதிரி உண்மையான இந்திய வரலாறு அறிந்து கொள்வது இந்தியனின் முழுமுதல் கடமை ஆகிறது.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete