வாகன ஓட்டிகளின் வாக்குகளுடன்:
இந்நிலையில் கிலாபத் இயக்கத்திற்கான மகத்தான ஆதரவினை பெற்று தந்தவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மகாத்மா காந்தி ஆவார். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் பாரதம் முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இது நாடெங்கும் பெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமியவாதியான மௌலானா முகமது அலியும் அவரது சகோதரர் ஷௌகத் அலியும் தேசிய அளவில் பிரபலமான தலைவர்கள் ஆகிட இது உதவியது. என்றாலும் கூட இந்த கிளர்ச்சியூட்டும் தேசிய எழுச்சிக்கு அப்பால் கருத்தியல் ரீதியாக அது ஒரு ஒவ்வாதக் கூட்டணியாக விளங்குவது சிறிது உற்று நோக்குபவர்களுக்கு விளங்கத்தான் செய்தது. மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை எழுதியது: "இவர்களது பேச்சுக்களை கவனித்துப்பார்த்தால் இவர்களில் ஒரு சாராருக்கு எங்கோ இருக்கும் துருக்கி கிலாபத் கிளர்ச்சியின் மையமான விஷயமாக இருக்கிறது. இன்னொரு சாராருக்கு இங்கு சுவராஜ்ஜியம் அடைவது முக்கியமாக இருக்கிறது."1 ஆனால் இத்தகைய விமர்சனங்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படவில்லை. செப்டம்பர் 1920 இல் கிலாபத் இயக்கம் காங்கிரஸ் தலைவர்களின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் பெரிய வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. லாலா லஜ்பத் ராய், லோகமான்ய திலகர் போன்ற தேசியத் தலைவர்களும் கிலாபத் இயக்க உற்சாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு காணப்பட்ட ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை புதியதோர் விடியலுக்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்ததாக கூறிய லஜ்பத் ராய் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வாய்க்கும் அரிய சந்தர்ப்பமாக அதனை கண்டார்.
ஆனால் கிலாபத் இயக்கத்திற்கு எதிர்ப்பே இல்லாத ஆதரவு ஒன்றும் தலைவர்களிடையே கிடைத்திடவில்லை. மதன் மோகன் மாளவியா அதனை எதிர்த்தார். ஆனால் திலகர்,
லஜ்பத்ராய் உட்பட அனைவரும் கிலாபத் இயக்கத்தின் வேகத்திலும் உற்சாகத்திலும் இருந்தனர். இந்த இயக்கத்தை சந்தேகித்த தேசபந்து சித்தரஞ்சன் தாசை மௌலானா முகமது
அலி வழிக்கு கொண்டு வந்திருந்தார்.
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் 1886 வாக்குகள் தரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் கிலாபத் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாபா சாகேப் அம்பேத்கர் இது
மோசடியாக கல்கத்தா தெருவின் வாகன ஓட்டிகளுக்கு கையூட்டு அளிக்கப்பட்டு அவர்களும் காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களாக பங்கேற்க வைக்கப்பட்டு இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதாக தமது தகவல்கள் தெரிவிப்பதைக் கூறுகிறார்.2 பல்லாண்டுகள் பிரிட்டிஷ் சிறையில் வேதனைப் பட்டு விடுதலையாகி உற்சாகத்துடன் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்தார் சுப்பிரமணிய சிவா. அவர் இந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு மனமுடைந்து எழுதிய தமது கடிதத்தில் காங்கிரஸில் ஊழல் செய்யப்பட்டு விட்டதாகவும் இசுலாமியர்கள் குருட்டுத்தனமாக நடப்பதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.
எனது வாழ்நாட்களையெல்லாம்.1925 ஜூலை 23 ஆம் தேதி இந்த மகாமனிதர் சிவத்துவம் அடைந்தார்
அர்ப்பணம் வாங்கிக்கொண்ட தமிழ்நாட்டிலே என்னைக் கவனிப்பவர் இல்லாது போய்விட்டது. சொல்லமுடியாத வறுமையிலே எத்தனை நாட்கள் மருந்து சாப்பிடமுடியும்? ஈஸ்வரன்
செயல்
இந்தியா மீதான ஆப்கானிய ஜிகாத்திற்கு ஆதரவு:
1921 இல் பாரதத்தின் மீது படையெடுக்குமாறு ஆப்கானிய அமீருக்கு மௌலானா கடிதம் எழுதினார். ஆப்கானிய படையெடுப்பு குறித்து மௌலானா முகமது அலி கராச்சி செஷன்ஸ்
கோர்ட்டில் கூறிய உரை தெள்ளத்தெளிவானது. அவர் எந்த இடத்திலும் தமது பிரிட்டிஷ் எதிர்ப்பு இந்திய மண்ணின் மீது பிரிட்டிஷ் செய்த ஆக்கிரமிப்பினால் எனக்
கூறவில்லை. மாறாக தமது வாக்குமூலத்தில் கூறினார்: "இஸ்லாமிய அரேபிய புனிதத்தலங்களைக் கைப்பற்றியவர்கள், இஸ்லாத்தை பலவீனப்படுத்தும்
நோக்கமுடையவர்கள் அதை மேன்மைப்படுத்த நமக்கு சுதந்திரமளிக்க மறுப்பவர்கள் இவர்களுக்கு எதிராக மேன்மை பொருந்திய ஆப்கானிய அமிர் அவர்கள் ஜிகாத்தினை நடத்த
எண்ணம் கொண்டிருந்தால் அவருக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் ஆயுதம் ஏந்த கூடாது என முதல் கட்டமாக இஸ்லாம் விதிக்கிறது. இரண்டாவது கட்டத்தில் ஜிகாத் எனது
பிரதேசத்திற்கு வரும் தருணத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் முஜாகிதன்களுடன் இணைந்து அவர்களுடன் செயல்பட வேண்டும்."3
காங்கிரஸில் இருந்த தலைவர்களுக்கு இது நெருடலாக இருந்தது. ஆனால் மௌலானாவின் இந்த முழக்கத்திற்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு ஆதரவு கிடைத்தது. 1921 மே 10
ஆம் தேதி நடந்த அலகாபாத் காங்கிரஸ் பொது கூட்டத்தில் மகாத்மா காந்தி கூறினார்: "அலி சகோதரர்கள் அமீருக்கு செய்தி அனுப்பியதற்காக கைது செய்யப்படுவார்களா? நான்
கூடத்தான் செய்தி அனுப்புவேன் ஐயன்மீர் நீங்கள் இங்கு வரும் பட்சத்தில், உங்களை ஆங்கில அரசு எதிர்க்க திரட்டும் பட்டாளத்தில் ஒரு இந்தியனும் சேராமல் பார்த்துக்
கொள்வதற்கு நான் இருக்கிறேன் என்று."4
'அவர்கள் காஃபீர் என்பது நம்மையல்ல'
சுவாமி சிரத்தானந்தர் கிலாபத் இயக்க தலைவர்களுள் முக்கியமானவர். பாபா சாகேப் அம்பேத்கர் இவரை 'ஆரிய சமாஜ தலைவர்களிலேயே சிறந்தவர். தீண்டாமையை முழுமையாக களைவதில் தீவிரமான நம்பிக்கையும் தீவிரமும் உடையவர்' என கூறுகிறார். கிலாபத் இயக்க மேடையை நினைவு கூர்கிறார் சுவாமி சிரத்தானந்தர்: " மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் நான் மகாத்மாவின் கவனத்தை ஈர்த்தேன். நாங்கள் இருவருமாக (மகாத்மாவும் சுவாமி சிரத்தானந்தரும்) நாக்பூர் கிலாபத் இயக்க மேடைக்கு இரவு சென்றோம். அங்கு மௌலானாக்களால் பேசப்பட்ட ஆயத்துக்களில் ஜிகாத்து மற்றும் நம்பிக்கையவற்றவர்களை கொல்வது குறித்தும் அடிக்கடி கூறப்படுவதை மகாத்மாவுக்கு நான்
சுட்டிக்காட்டினேன். மகாத்மா புன்னகை புரிந்தவாறே அவர்கள் அதனை பிரிட்டிஷ் அரசதிகாரிகளைக் குறிப்பிடுகின்றனர் எனக் கூறினார். அப்படியே வைத்துக்கொண்டாலும் அதுவும் மகாத்மாவின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானதாக அமைவதை நான் சுட்டிக்காட்டி மகாத்மா காந்தியிடம் சொன்னேன் 'உணர்ச்சி மேலிடும் போது இவை மௌலானாக்களால்
இந்துக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.' " 5
விரைவில் மாப்ளாவில் அரங்கேறி இந்து படுகொலைகள் சுவாமி சிரத்தானந்தரின் வார்த்தைகளை மெய்ப்பித்தன. சுவாமி சிரத்தானந்தரே இஸ்லாமிய கொலையாளியின் குண்டுகளுக்கு பலியானார். அப்போது மகாத்மா காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமையை முழுமையாகக் கடைபிடித்தார். 1926 இல் கௌகாட்டி காங்கிரஸ் மாநாட்டில் சுவாமி சிரத்தானந்தருக்கு நிறைவேற்றப்பட்ட அஞ்சலியின் போது சுவாமி சிரத்தானந்தரைக் கொன்ற அப்துல் ரஷீத்தை தம் சகோதரன் என அழைத்த மகாத்மா காந்தி அவனை தாம் குற்றவாளியாகக் கருதவில்லை என்றும் மக்கள் மனதில் துவேஷத்தை விதைப்பவர்களே குற்றவாளிகள் என்றும் கூறினார்.6 சுவாமி சிரத்தானந்தரைக் கொன்ற அப்துல் ரஷீத்துக்காக காங்கிரஸின் முன்னணித் தலைவரான ஆஸுப் அலி ஆஜராகி வாதாடினார். (பின்னாளில் அமைந்த காங்கிரஸ் அரசில் இவரே அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அனுப்பப்பட்டார்.) ரஷீத் தூக்கிலிடப்பட்ட போது அப்துல் ரஷீத்துக்கு மறுமையில் அல்லா மிக உயர்ந்த இடத்தினை அளித்திட தியோ பந்த் மதரசாவில் ஆசிரியர்களும் மாணவர்களுமாக பிரார்த்தனை செய்தனர்.7 [தொடரும்]
- 1. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 7)
- 2. அதே நூல் அதே அத்தியாயம்.
- 3. செஷன்ஸ் கோர்ட் ஜூரி முன் முகமது அலி உரை : மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
- 4. 1921 மே 10 அலகாபாத் பொது கூட்ட உரை மற்றும் அதே கருத்தினை மகாத்மா 4 மே 1921 'யங் இந்தியா'வில் கட்டுரையாகவும் எழுதியிருந்தார்.
- 5. Liberator ஜுலை 1926 மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 7)
- 6. பட்டாபி சீதாராமையா, 'History of Congressஒ பக்.516
- 7. டைம்ஸ் ஆஃப் இந்தியா 1927 நவம்பர் 30
உண்மையான சரித்திரங்கள் வெளிவரவேண்டும். வாழ்க உமது பணி
ReplyDeleteநீலகண்டன் அவர்களுக்கு,
ReplyDeleteஇரண்ட்டவது அத்யாயத்திற்கு நன்றிகள் பல.
பள்ளிப்ப்பருவத்தில் சரித்திரப்பாடங்களில் கிலாபத் இயக்கத்தைப்பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது. நமக்கு எவ்வாறெல்லாம் சரித்திர உண்மைகள் மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு காரணங்களால் மறைக்கப்படுவதைக்கூட சகித்துக்கொண்டாலும், உண்மைகளை திரித்து நமக்கு புகட்டப்பட்டதை ஜீரணிக்க மனம் மிகுந்த வேதனையடைகிறது. மௌலான போன்ற நயவஞ்சகள் சதியில் வீழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் ஒப்பிடும்போது, தற்கால ஜிகாதிகளுக்கு முன் நமக்குத்தேவையான அதிகப்படியான விழிப்புணர்சியை வலுயுறுத்துகிறது தங்களது கட்டுரை.
மௌலான போன்ற நயவஞ்சகர்களையும் கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரிகளையும் மீறி நமக்கு விடுதலையை பெற்றுத்தந்த அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி...
R.பாலா
இந்திய தேசத்தின் மெய்யான வரலாற்றை வரும் தலைமுறைகளுக்கு கட்டாயமாக அறியத்தரவேண்டியது மிக மிக அவசியமானது.
ReplyDeleteசுதந்திரம் பெற்ற பின்பு ஓட்டுக்காக சிறுபான்மைக் கொள்கைகள் என்று இன்னும் உண்மையான சரித்திரம் வெளிக்கொணரப்படவில்லை.
இம்மாதிரியான கட்டுரைகள் இன்றைய தேவை.
பள்ளியில் எனது ஆசிரியர் சொல்வார் பரீட்சை எழுதும் போது படாத வெட்கம், கோபம் மதிப்பெண் அறியும் போது படுவது வீணானது என்று!
வெட்கப்படும் செயல்கள் செய்த பிரிவினர் இனியும் அம்மாதிரி செய்யாமலிருக்க, அம்மாதிரியான கேடான செய்கைகளுக்கு பலியாகமல் இருக்கத் தேவையான விழிப்புணர்வை உண்மையான சரித்திரத்தினை சமூகத்திற்கு அறியத்தருவதாலேயே ஏற்படுத்த முடியும்.
வாழ்த்துக்கள்
மிகவும் ஆதாரபூர்வமான தகவல்கள். இன்றைய முஸ்லீம் ஜிகாதி குழு மனப்பான்மையும், மன நிலையும் புதியதல்ல, அது அப்படியே தான் இருக்கிறது என்று தெரிய வருகிறது.
ReplyDeleteமறுபடி மறுபடி அடி வாங்கும் நாம் தான் அதை உள்ளது உள்ளபடி அடையாளப்படுத்தி அதை எதிர்த்துப் போராடவில்லை.