1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்:
"பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈசா [ஏசு] நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈசா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்தில் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வதாகும்...அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈசா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது ("வெட்கம் வெட்கம்" -கூட்டம்) ...யூதேய தேசத்தில் ஈசா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன."மகாத்மா காந்திக்கு ஜே எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது.1
27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை
மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத்
அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார்.
அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.2
ஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக்
கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக்
குறிப்பிட்டார்.3 இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏற்கனவே மகாத்மா காந்தியின் சில செயல்களை விமர்சித்து பேசியிருந்தார். அந்த விமர்ச்சனத்தை குறிப்பிட்ட மகாத்மா காந்தி அந்த உரை தம் இதயத்தை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார்.4
"விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத..."
கிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழ் 'இன்ஸாப்'. இந்த இதழ் மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை 'மகாத்மா' எனக் குறிப்பிடுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது.
"சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன? சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?" 5
1924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி சிறையிலிருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாட நடந்த நிகழ்ச்சி இந்த சர்ச்சை வெளிப்படையாக
வெடித்தது. அந்த விழாவில் ஒரு இந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸ்லாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.6
'இன்ஸாப்' மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்:
"அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்தியிடம் பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: "ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்." 7
இது குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி மீண்டும் குறிப்பிட்டார்: "...நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீதுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்."8
இறுதியாக மகாத்மா காந்தியே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின்
மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார்.9
நபி என நம்பப்படும் முகமது என்ன கூறுகிறார்?
அபூதர் அல் கிஃபாரி (ரலி) அறிவிக்கிறார்கள்:
....அப்போது நபி (ஸல்) அவர்கள் " அதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணமடைகிறவர் சொர்க்கம் புகுவார்" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?" என்று கேட்டேன். அவர் "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)" என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)10
[தொடரும்]
- 1. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923
- 2. மகாதேவ் தேசாய் 'Day to day with Gandhi' பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21
- 3. மகாத்மா காந்தி, 'Collected Works' 24:334-40
- 4. மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96
- 5. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
- 6. அதே நூல் அதே அத்தியாயம்.
- 7. அதே நூல் அதே அத்தியாயம்.
- 8. மகாத்மா காந்தி, 'Collected Works' 23:பிற்சேர்க்கை
- 9. மகாத்மா காந்தி, 'Collected Works' 26:214
- 10. இந்த கதீஸ் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை: இப்னு கலாம் ரசூல் எழுதிய 'வெற்றி யாருக்கு' (சுவனப்பாதை -மாத இதழ் 2:2) : நன்றி: திரு.நேசகுமார்
அப்ப "புத்தன், ஏசு, காந்தி பிறந்தது.." என்ற பாட்டெல்லாம் ஹராமாக்கும். இதன்படி, கிறித்துவர்களைவிட முஸ்லீம்களே தனக்கு வெகு விசுவாசியாய் இருக்கிறார்கள் என இன்று யேசு இருந்திருந்தால் எண்ணியிருக்கக் கூடுமோ என்னவோ?
ReplyDeleteநீலகண்டன்,
ReplyDeleteகாந்திஜியை இஸ்லாமியக் கருத்தியல் எப்படி மதிப்பிடுகிறது என்று மௌலானா அலியே சொல்லியிருப்பதைப் படித்த போது சாதாரண காஃபிர்கள் கதி என்ன என்று யோசிக்கிறேன்.
நெஞ்சைக் குத்தும் உண்மைத் தகவல்களைச் சொல்லும் பதிவு. நன்றி.
// மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின்
ReplyDeleteமதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார் //
சத்தியத்தையே தெய்வமாக வணங்கிய காந்தியடிகள் ஒரு மதவெறியனின் இந்தக் கூற்றுக்கு இப்படியா மறூமொழி அளித்தார்? படிக்கவே வேதனையாக இருக்கிறது.
வெட்கம்! வெட்கம்!
// "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)" என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)10 //
பின் லேடனும் ஜிகாதி கொலைகாரர்களும், கொள்ளையர்களும் இஸ்லாத்தில் ஹீரோக்களாக போற்றப்படுவதற்கு இது தான் காரணமா? த்தூ .. இதெல்லாம் ஒரு மதம் !
நீலகண்டன் அவர்களே,
ReplyDeleteஉங்களின் இந்து மத அறிவு வியக்க வைக்கும் ஒன்று.
இதைப் பற்றி மட்டுமே நீங்கள் பல ஆண்டுகளுக்கு எழுதக் கூடிய விஷயங்களை வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
அப்ப்டியிருக்க, இது போன்ற பதிவுகள் ஏன்?
2007 லிலாவது உங்களிடமிருந்து நம் மதத்தைப் போற்றும் பதிவுகள் மட்டுமே எதிர்பார்க்கிறேன்.
மற்றவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும்.
தங்களைப் போன்ற அறிவாளர்கள் சற்று நிதானத்தைக் கடைப் பிடித்து, என் போன்றோரை மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்தப் பதிவு இனி தொடர வேண்டாமே!!
அரவிந்தன் எனும் காஃபீரே,
ReplyDeleteமகாத்மா காந்தியிடம் காங்கிரஸ் தலைமை பதவிக்கான பொறுப்பினை ஒப்படைக்கிறார் முகமது அலி.
வரலாறு பற்றிய உங்களின் கதையாடல் பொதுவாக சகிக்கவில்லைதான் என்றாலும் ஒரு உண்மையை சொன்னதற்கு நன்றி. காங்கிரஸ் கட்சியை முகம்மது அலியிடமிருந்து பிடுங்கி பார்ப்பனீய முதலாளித்துவமான இந்து உயர் சாதியினருக்கு கொடுத்தவர்தான் இந்த காந்தி.
அந்த தவற்றிற்குப் பரிகாரமாக தன்னுடைய மகனை இஸ்லாம் என்னும் புனித மார்க்கத்திற்கு மாற்றி மகிழ்ச்சி அடைந்ததால் அவர் மற்ற இந்து மடையர்களோடு ஒப்பிடுகையில் மகாத்மா என்று அழைக்கப்படத் தகுந்தவர் ஆனார்.
தன் மகன் உயர் நெறியான இஸ்லாத்தை தழுவியது கேட்டு மிகவும் மனமகிழ்ச்சி அடைந்த அவரை இழிவு செய்யும் வகையில் கட்டுரை எழுதிவருவது கோட்ஸேயின் சாதியினருக்கு கைவந்த கலைதான்.
இப்படிக்கு,
துர்மார்க்கத்தாருக்கு மகனாகப் பிறந்து தொலைத்த நன்மார்க்க இஸ்லாமியன்
நேசக்குமார் என்னும் பொய்சொல்லியே,
ReplyDeleteஇதையெல்லாத்தையும் சரி செய்ய, முகமது என்கிற (ஷுன்னி நம்பிக்கையின் படி) இறுதித்தூதரை அல்லாஹ் அனுப்பினார்.
எல்லா இஸ்லாமிய கோட்பாடுகளின் நம்பிக்கையின்படி முகம்மது (சல்) அவர்களே முற்றிலும் சரியான மார்க்கத்தை தந்த கடைசி தூதர். இதை சற்று வழிபிறழ்ந்த மார்க்கத்தாரான ஷியாக்களும் ஒத்துக்கொள்ளுவர். மற்றபடி ஷியாக்களும், ஷுன்னிக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
உன் மனம் திரும்பி உண்மை மார்க்கத்தை நீ தழுவும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இப்படிக்கு,
நன்மார்க்க இஸ்லாமியன்
//காங்கிரஸ் கட்சியை முகம்மது அலியிடமிருந்து பிடுங்கி பார்ப்பனீய முதலாளித்துவமான இந்து உயர் சாதியினருக்கு கொடுத்தவர்தான் இந்த காந்தி.//
ReplyDeleteஇதுதான் மடத்தனமான காமெடி என்பது. முகமது அலிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக அமர்ந்தவர் எந்த பார்ப்பனரும் இல்லை. மௌலானா அப்துல் கலாம் ஆசாத்துதான்.
தன் மகன் புனித மதமாம் இஸ்லாத்திற்கு மாறியதை அறிந்து காந்தி மனம் மகிழ்ந்தார். தான் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தன் மகனை எல்லாம் வல்ல இறைவனுக்கு காந்தி அர்ப்பணித்தது பற்றி தெரிந்தும் இஸ்லாமைப் பற்றி நீங்கள் அவதூறு பரப்புவது ஏன்?
ReplyDeleteஇப்படிக்கு,
இரண்டாண்டுகளாக நன்மார்க்கத்தைப் பின்பற்றும்,
ஒரு இஸ்லாமியன்
இந்தப் பதிவு இனி தொடர வேண்டாமே!!
ReplyDeleteThat is the spirit !!
You keep on asking a handful of sensible bloggers to stop writing about reality ! Great work !
However, I am sure that you have not done the blunder of making the same request to everyone who is blogging in Tamil. For example, some people claim in their blog that sooner or later the whole world including America, Britain will get converted into Islam. But, we have to understand that it is their belief, and so we should not ridicule it. We should not question it.
Even Mohandas karamsanth Gandhi said that it is the belief of Islam that other religions are derogatory. Let us be true Gandhians. Let us respect Islam's belief that other religions are derogatory.
Let us become the mizaru, kikazaru, iwazaru dolls of the Nikko Toshogo Shrine in Japan, that Gandhi is so fond of. Even if the monkey's tail is on fire, let us say "See not, hear not and speak not Evil things, for our ass is still safe !".
If everyone starts questioning Islam/Christianity's derogatory remarks then there will be no peace on this earth. We should not fall prey to egotism. Peace is more important than leading a good honest life. Let us accept the superiority of powerful religions over the pagan/kafir cults.
To be in peace let us accept that being a Hindu, and following Hinduism is fourth rate foolishness that will put Thiru. SK into the hell as per the wish of the only God who listens only to either Mr. Jesus or Mr. Muhammad irrespective of the actions committed by the individuals. After all, this is what your grandson is going to believe for he will soon change to the true path of Islam/Christianity.
When the powerful religions tell you are a dumb fool and your ancestors were also so, because you and them have been worshipping the devil, then we have to accept and understand that it is their right to say so. For it is their belief. These ideas are true and factual because the book(s) say that they are good.
Who we are to question the claim of a person/group based on his actions? We should never gauge the powerful religions by their actions, but accept their claim for the sake of peace. For peace is more important, even if it robes your money, rapes your neighbor, bombs your factory, or kills your son. They have the liberty to do so. We should not question the ideas that cause these holy activities.
When the followers themselves are not allowed to question their belief, what right some Nesakumar, a kafir, has to question them?
These hindu idealogies never tell such high level ideas. It says that every individual has the freedom to pursue his/her own path and find a salvation of their heart. If everybody follows her own nature, then there will be disunity. Is it not? That is the very reason when Islam and Christianity ridicule us, we could raise our voice only in support of them.
Some Hindu fanatic may say that you remain as a Hindu because you do not accept other religions' point of view, never accept his arguments. For saying so is too much of a honesty. You can tell them that you are following Hinduism that claim that every one has the liberty to seek the truth by the wish of their own spirit and also tell them that you accept other religions that say that except their religions there is no other hope ! That is what honesty is all about.
And never mind those religions whose dictionary meaning of Hindu is thief. For they tell the truth. A dishonest person can only be a thief.
We should show our solidarity with the powerful religions not by voicing our concerns and opinions about them openly, but by accepting their belief and their derogatory remarks that we are just lowlife.
Allaho Akbar !
After Nesakumar the request also goes to Aravindan Neelakandan.
ReplyDelete