பிழைகள் தவறான முடிச்சு போடல்கள் ஆகியவற்றினை வெளிப்படுத்தும் ஒரு கடிதத்தை அண்மையில் திரு. அருணகிரி என்பவர் எழுதியிருந்தார். .அருணகிரி சிந்தனையை
தூண்டும் பல கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் எழுதி வருபவர். பூங்காவுக்கும் பொறுக்கிக்கும் இதர தமிழ்மண வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கும்
இக்கடிதம் கண்ணை திறப்பதாக அமையும் என நம்புகிறேன். இக்கடிதத்தை எனது வலைப்பதிவில் வெளியிட அனுமதி அளித்த அருணகிரி அவர்களுக்கு நன்றியுடன்.
கடந்த வருடம், இந்த வருடம் ஆகியவற்றில் தொடங்கி, இந்துத்தலங்கள் மீது செலக்டிவாக நடத்தப்படும் நெகடிவ் புரோபகண்டாவின் தொடர்ச்சியாகவே திருப்பதி முடியிறக்கம் குறித்த இச்செய்திகளையும் நான் பார்க்கிறேன். திடீரென இது குறித்து புற்றீசல் போல வெளி வரும் நெகடிவ் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.
- http://www.indiadaily.com/breaking_news/36189.asp
- http://in.news.yahoo.com/061012/211/68fzc.html
- http://www.zreportage.com/hair.shtml
- http://www.womensenews.org/article.cfm/dyn/aid/2808/context/archive
- http://observer.guardian.co.uk/world/story/0,,1805328,00.html
இது குறித்து பூங்கா வெளியிட்டுள்ள பொறுக்கி கட்டுரையில் பல பொய்கள் போகிற போக்கில் அள்ளி வீசப்பட்டுள்ளன. உங்கள் பார்வைக்கு அவற்றை வைக்கிறேன்-
எனது அலசலோடு.
பொறுக்கி எழுதிய கட்டுரை ஒன்று பூங்காவில் வந்துள்ளது. திருப்பதியில் இறக்கப்பட்ட முடிக்கற்றைகள் எப்படி பலகோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என்பதாய்
வளரும் கட்டுரை முடிவில் பக்தர்களின் நம்பிக்கையைப் பகடி செய்வதிலும், முடியிறக்கும் இண்டஸ்ட்ரியில் சுரண்டலுக்கு திருப்பதி கோவிலை அடையாளம் ஆக்கியும்
முடித்திருக்கிறது. இதில் உள்ள பொய்களும் அபத்தங்களும் வெளிச்சம் போடப்பட வேண்டும்.
- 1. பொறுக்கி எழுதுவது: " மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்களின் மயிர் சுமார் 400 தொன் வரை வருடம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 130 கோடி டொலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது".
இவர் கொடுத்துள்ள தொடுப்பிலேயே உள்ள ஒரு செய்தி: "In the most recent financial year the temple sold over 3 million kilos of hair for about $1 million".
(http://www.womensenews.org/article.cfm/dyn/aid/2808/context/archive)
நம்நாட்டிலிருந்து மொத்தம் சீனாக்கு ஏற்றுமதி செய்யப்படும் முடியின் மதிப்பு 136 மில்லியன் டாலர்கள்தாம். இதில் திருப்பதி, பழனி தொடங்கி, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி
முதலாக சீக்கிய முடி, பார்பர் முடி என அனைத்தும் அடக்கம். (யுகே, யுஎஸ்-கான மொத்த முடியழகு சாதன ஏற்றுமதி மதிப்பு எனக்கொண்டால் 300 மில்லியன் டாலர்கள்) - 2. பொறுக்கி மற்றொன்றும் சொல்கிறார்: "கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத்
தேவையில்லை"
திருப்பதி கோயில் நிர்வாகத்தின் வரவு என்னவென்றால் கூகுளில் தேடியதில் கிடைத்தது:
விக்கிபிடியா சொல்வது- "The popularity of the temple can be judged by the annual income which is around six billion rupees" அதாவது ஏறக்குறைய 133 மில்லியன் டாலர்கள் எனலாம். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக ஹிண்டு செப் 21, 2003 கட்டுரை ஒன்றில் இவ்வாறு உள்ளது. "Tirupati Trust had an income of Rs. 532 crores last year-2002"- அதாவது ஏறக்குறைய 120 மில்லியன் டாலர்கள் எனலாம். பொறுக்கி சொல்வதோ, திருப்பதி கோவிலின் வருமானம் அல்ல, செலவே 120 கோடி டாலர்களாம், அதாவது 1.2 பில்லியன் டாலர்களாம். (100கோடி=1 பில்லியன்). 1.2 பில்லியன் டாலர்கள் செலவு செய்யும் திருப்பதிக்கு "வருமானம் பற்றி சொல்லத் தேவையில்லை' என்று வேறு அலுத்துக்கொள்கிறார்.
திருப்பதி கோவிலின் வருமானம் 120-140 மில்லியன் டாலர்கள்- அவர்கள் எப்படி 1.2 பில்லியன் செலவழிக்கிறார்கள் என்பது லக்கி லுக்குக்கும் அவரது கணக்கு புக்குக்குமே வெளிச்சம். - 3. இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம். இப்படி பிரம்மாண்ட நம்பர்களை வைத்து திருப்பதியைப் பகடையாக்கி இப்போது மயிர் கேம் ஆட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு விடை தெரிய இக்கட்டுரையின் மையத்திற்கு வர வேண்டும். மையம் என்ன? இந்தியாவிற்கே பெரிய அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் ஒரு தொழிலில் திருப்பதிக்கே பெரும்பங்கு உள்ளது எனக்காட்டி விட்டால், அத்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் எனக்காட்டும்போது அதற்கான முழுப்பொறுப்பையும் திருப்பதி கோவில் மீது வசதியாகச் சுமத்தி விடலாம். ஒரு தொழிலின் அவலம் அத்தனையையும் ஒரு கோவிலின் மேல் ஏற்ற வேண்டும் என்றால், எப்படி அதனைச் செய்ய வேண்டும்? 300 மில்லியன் டாலர் பெறுமான இண்டஸ்டரியில், 1 மில்லியன் மட்டுமே திருப்பதி கோவில் பங்கு என்று சொன்னால் அது சாத்தியமா? அல்லது 130 மில்லியன் டாலர் திருப்பதியின் பங்கு என்று சொன்னால் சாத்தியமா? எண்ணிப்பாருங்கள். அதாவது, முதலில் ஒரு தொழிலில் உள்ள சுரண்டல் என்ற (நியாயமான) பிரச்சனையை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பிரம்மாண்ட எண்களில் வார்த்தை விளையாட்டு விளையாடி, அந்த இண்டஸ்ட்ரியின் சுரண்டல் பேரமைப்பாக ஒரு பிரபல இந்துக்கோவிலை- இவ்விஷயத்தில் திருப்பதி கோவிலை மட்டுமே - காட்ட வேண்டும் (நாகூரிலும்,
வேளாங்கண்ணியிலும் முடியிறக்குபவர்கள் பற்றியும் அங்கு தொழிலாளர் நிலை குறித்தும் மூச்- பேசப்படாது). 300-இல் ஒரு பங்கு தொடர்புதான் இந்துக்கோவிலுக்கும்
அந்த இண்டஸ்ட்ரிக்கும் என்றாலும் பரவாயில்லை. பெரிய நம்பர்களைத் தூக்கிப்போட்டு விட்டால் எவன் கேள்வி கேட்கப் போகிறான்? இன்னும் ஒரு விஷயமும் செய்து விட்டால் முற்போக்கு வேடம் முழுமையடைந்து விடும். அதாவது, இந்த இந்துக்கோவில்களை நிர்வாகம் செய்வது இந்து எதிர்ப்பு செக்யூலர் அரசுதான் என்பதையும், சர்ச்களையும், மசூதிகளையும் அவ்வாறு செய்யாமல் அந்த அந்த மதங்களில் கையில் விட்டிருக்கிறது என்பதையும் வெகு கவனமாகக் குறிப்பிடாமல் விட்டு விட வேண்டும். பிறகென்ன ஈசிதான்- மொட்டையடிப்பது போன்ற "மூட" வழக்கங்களையும், மதங்கள் எப்படி மனிதனைச் சுரண்டுகின்றன என்றும் சொல்லி பகடி செய்து முடித்தால், சமூகத்தைப் புரட்டிப்போடும் முற்போக்குக் கட்டுரை என்ற முத்திரையுடன் பொய்களை நம் காதில் பூவாய்ச்சுற்ற
பூங்காவுக்கான கட்டுரை ரெடிதான்".
திருப்பதி திருமலை தேவஸ்தானம் செய்து வரும் கல்வி-சமுதாயப்பணிகள்:
- Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled
- Sri Venkateswara Poor Home (இது தொழுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சையும் உணவு- உறையுளும் வழங்கும் சேவை இல்லம்)
- Sri Venkateswara Bala Mandir
- Sri Venkateswara Institute of Medical Sciences
- Sri Venkateswara School for the Deaf
- Sri Venkateswara Training Centre for the Handicapped
- Conservation of Water and Forests - Haritha Project
- SV Higher Secondary School, Vellore
- SV High School, Tirupati
- SP Girls High School, Tirupati
- SGS High School, Tirupati
- SV Oriental High School, Tirupati
- SKRS (EM) High School, Tirupati
- SV High School, Tirumala
- SV Elementary School, Tirupati
- SKS Elementary School, Thatithopu
- SV Elementary School, Tirumala
- SV Elementary School, Tirumala
இக்கடிதத்தை எழுதிய திரு.அருணகிரி திண்ணையில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில:
திருப்பதியை எப்படியாவது சர்ச்சுகள் கட்டி இந்து நம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்று ஏகப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன.
ReplyDeleteமிச்ச நரிகளின் எச்ச இலை நக்கும் நக்ஸலைட்டுகள், இடதுசாரிகள் இதற்கு துணை போவது ஒன்றும் வியப்பல்ல.
பூங்கா இதழ் வந்த நாளிலிருந்தே கம்யூனிச அடிப்படைவாத சிந்தனைகளையே பதிப்பித்து வந்துள்ளது.
Aravindan Nilakandan, the article is by Lucky Look, not by Poongaa. Why do you have to title "பொய் பூக்கும் பூங்கா," even if Lucky Look is wrong in his data? Just Curious.
ReplyDeleteலக்கிலூக் எழுதியிருக்கும் கட்டுரையின் சுட்டி தரமுடியுமா?
ReplyDeleteகட்டுரையை யார் எழுதியது என்பதையே சரியா எழுதமுடியல பேசவந்துட்டானுங்க.
ReplyDeleteநீலகண்டன்
ReplyDeletehttp://porukki.weblogs.us/2006/12/14/hollywoodil_thiruppathi_masir/
நீங்கள் குறிப்பிடுவது மேற்படி கட்டுரையெனில் அது "பொறுக்கி" எழுதியுள்ளது..."லக்கிலுக்" அல்ல
கணக்கு, காமன்சென்ஸ் எல்லாமே அந்த லக்கி லுக் கட்டுரையில் இடறுவதாக நினைத்தேன். அருணகிரி மற்றும் தங்களது தகவல்கள் அதை உண்மையாக்கி விட்டன.
ReplyDeleteபூங்கா ஒரு திரட்டி இதழ். பதிவில் வரும் தகவல் பிழைகள் எல்லாவற்றையும் தமிழ்மணம் சரிபார்க்க வேண்டும் என்றூ எதிர்ப்பாக்க முடியாது.
ஆனால் உள்நோக்கத்துடனும், தவறான தகவல்களுடனும் எழுதப் பட்ட இந்தப் பதிவு ஏற்கனவே அதில் வந்துவிட்டது.
ஊடக நேர்மை மற்றும் நடுவுநிலைமை கருதி, அந்தப் பதிவின் பொய்களை அம்பலப் படுத்தும் இந்தப் பதிவுவையும், அடுத்த பூங்கா இதழில் தமிழ்மணம் கண்டிப்பாக வெளியிடவேண்டும். வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த பகுத்தறிவாதிகளுக்கு கோவில்களின் மேல்தான் கண். எப்படி சுரண்டாலும், 2000 கோடிகள் சேர்க்கலாம் போன்ற கனவுகளுடன் அலைபவர்கள். தினம் தினம் லட்சக்கணக்கான மக்கள் அளிக்கும் காணிக்கைகளை எப்படி கொள்ளையடிப்பது என்பதை அடுத்து ரூம் போட்டு யோசிப்பார்கள் இந்த கொள்ளைக் காரர்கள்
ReplyDeleteஎனது கடிதத்தைப் பிரசுரித்த அரவிந்தனுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteலக்கிலுக் என்று பூங்காவின் கட்டுரைத் தலைப்பில் கண்ட ஞாபகத்தில் எழுதி விட்டேன். இப்போது பொறுக்கி என்றே உள்ளது எனக் காண்கிறேன். எனவே பொறுக்கி என்பவர் எழுதியதாகவே இக்கட்டுரையைக்கண்டு, அதற்கான பதிலாகவே இதனைக் கொள்ள வேண்டுகிறேன். இதன் மூலம் லக்கி லுக்கிற்கு ஏதும் மனக்கஷ்டம் விளைவித்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இது தொடர்பான குழப்பம் எதற்கும் நானே பொறுப்பு. மற்றபடி, எனது எதிர்வினை கருத்துக்கே ஒழிய தனிப்பட்ட ஆளுக்கில்லை என்று நான் நம்புவதால், என் கருத்துகளில் எந்த மாற்றமுமில்லை. இவற்றிற்கு பொறுக்கி பதில் தந்தால் ஏற்க சித்தமாகவே உள்ளேன்.
நேசகுமார்,
ReplyDeleteபூங்காவில் ஒரு பொய் களை பூத்ததாகத்தான் இந்த தலைப்பு அமைந்துள்ளதே தவிர பூங்காவே பொய் எனக் கூறவில்லை. பூங்காவின் சித்தாந்த சார்பு குறித்து கவலையுமில்லை. ஆனால் அது நாகரீகத்துடன் சுட்டிக்காட்டப்படுவதும் தவறில்லை என்றே கருதுகிறேன்.பூங்காவுக்கே அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை என நினைக்கிறேன். அவர்கள் வலைப்பதிவினை போட அனுமதியினை வலைப்பதிவர்கள் அளிக்கலாம். அதன் அடிப்படையில் அவர்கள் பிரசுரிக்க நினைத்தால் போடலாம். இந்த பதிவும் பூங்காவில் போட சம்மதம் அளித்தே வெளியிடப்பட்டுள்ளது.
அனானி, சுள்ளென்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பிழைக்கு மன்னிக்கவும். லக்கிலுக்கிடமும் ஒரு sorry. சரி செய்துவிட்டேன். இனி கட்டுரையின் உள்ளே இருக்கும் விசயங்களுக்கு செல்லலாமே.
நேச குமார்,
ReplyDeleteதமிழ்மணம் இக்கட்டுரையைத் திரட்டியதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஆனால், இது பூங்காவில் பிரசுரிக்க செலக்ட் செய்யப்பட்டு வெளி வந்தது தற்செயலல்ல, நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பிறகே போடப்பட்டுள்ளது. எனவே அக்கட்டுரையில் தவறான தகவல்கள் வந்திருந்தால், அதில் ஒரு பகுதி பொறுப்பு தெரிந்தெடுத்து பிரசுரித்தவரையும் கட்டாயம் சேரவே சேரும். அதனை விமர்சிப்பதில் எந்தத்தவறும் இல்லை என்பது என் கருத்து.
திருப்பதி முடி குறித்த கட்டுரையில் பொய்யான தகவல்கள் உள்ளன. அக்கட்டுரை பூங்காவால் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டுள்ளது. அதாவது பூங்காவில் ஒரு பொய் பூத்துள்ளது- இக்கருத்தை இத்தலைப்பு மிகச்சரியாகவே பிரதிபலிக்கின்றது. இதில் என்ன நேர்மையின்மை உள்ளது என எனக்குத் தெரியவில்லை.
இணையத்தில் நேரம் செலவழித்து எழுதும் சீரியஸ் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் விமர்சனப் பிரச்னை இருக்கவே செய்கிறது. மேலும், பூங்காவின் சார்பு நிலையைக் குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அது அவர்கள் உரிமை. ஆனால், கட்டுரைக்கு அச்சாணியாய் உள்ளதாகவும் வெளிப்படையாகத் தெரிவதாகவும் உள்ள சில உண்மைகளைக் கவனியாமல் ஒரு முன் முடிவை நோக்கி எழுதப்பட்ட ஒரு கட்டுரை எப்படி பூங்காவில் எளிதாக ஏற்கப்பட்டு இடம் அளிக்கப்படுகின்றது என்று காட்டவே இத்தலைப்பு.
என் எண்ணத்தைப்பூங்காவிற்கு அனுப்பி அவர்கள் பதில் கண்ட பின்தான் பதிப்பிக்க வேண்டும் என்பதும் என்னால் ஏற்க இயலாத வாதம். ஏற்கனவே சொன்னது போல் திருப்பதி கட்டுரை தெரிந்தெடுக்கப்படு பிரசுரமான கட்டுரை- இது தற்செயலல்ல. எனவே அதனைப் படித்து ஆய்ந்தறிந்த பின்னரே பிரசுரித்திருக்கிறார்கள் என்ற நான் அனுமானிக்க எல்லா முகாந்திரங்களும் உள்ளன.
மற்றபடி, நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இணையப்பத்திரிகை நடத்துகிறார்கள் என்பதற்காக மட்டுமே அதில் உள்ள பொய்களையோ முரண்களையோ யாரும் விமர்சிக்கக் கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். பூங்காவை தர்ம சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்று தமிழ்மணப்பதிவர்களோ, கருத்தாளர்களோ எந்த விரதமும் பூண வேண்டுமென்ற அவசியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எந்த ஒரு கருத்தோ, கட்டுரையோ ஒரு பத்திரிக்கையில் பிரசுரிக்கப் படுமெனில் அதனுடைய உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அக் கருத்து /கட்டுரையாசிரியர் மட்டுமல்லாது அந்தப் பத்திரிக்கையும் பொறுப்பேர்க்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...எனவே கட்டுரையில் உள்ள தவறுகளுக்கு ஒரு வகையில் பூங்காவும் பொறுப்புதான்..அல்லது அப்படி ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து அறிவிப்போ அல்லது எதிர் கருத்துள்ள கட்டுரையை பிரசுரிப்பதோ செய்ய வேண்டும்
ReplyDeleteNesakumar, Respectfully but defintely, I disagree. நான் தனிப்பட்ட தாக்குதல்களை எவர்மீதும் நிகழ்த்தியதாய்க் கருதவில்லை.
ReplyDeleteநீங்கள் தெளிவாகத்தான் சொல்லியுள்ளீர்கள். பூங்காவில் செலக்ட் ஆகும் கட்டுரைகளை அவதானித்து வருபவன்தான் நானும். எனது பதிலில் வார்த்தை மாறாது எவ்வித மாற்றமுமில்லை.
விசித்திர குப்தன்,
ReplyDeleteபுதிய பூங்கா இதழில் இதுகுறித்து வருத்தமோ, அறிவிப்போ, மறு கருத்து பிரசுரமோ எதுவும் இதுவரை காணக் கிடைக்கவில்லை.
யாராக இருந்தாலும் அந்த எழுத்து பொறுக்கிகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதற்குத்தான் அரவிந்தன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். எழுத்தை மட்டுமே எதிர்க்கும் எங்கள் அண்ணன் அரவிந்தன் நீலகண்டன் வாழ்க வாழ்க !
ReplyDeleteஇப்படிக்கு,
அரவிந்தன் நீலகண்டன் ஆதரவுப் படை
அல்லேலூயா அக்கிரம சாவடி
அன்னை சோனியாவின் வீடு
ரோம்.