Tuesday, February 13, 2007
டோண்டு அவர்களுக்கு - மன்னித்துக்கொள்ளுங்கள்
ஊரிலிருந்து வந்தவுடன் நான் அறிந்து கொண்டது திரு. டோண்டு அவர்களின் அறிவிப்புதான். நன்றி டோண்டு. உங்கள் பதிவில் பின்னூட்டம் தடை செய்யப் பட்டிருந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். இதோ தனிப்பதிவாக என் மன்னிப்பை உங்களிடம் கேட்க அது வழி வகுத்துவிட்டது. தான் எடுத்த நிலைபாடு சரி என்று அனைவரும் எதிர்க்கும் போது நின்று வாதிட மனத்திண்மை வேண்டும். அத்தகைய மனத்திண்மை கொண்ட ஒருவர் தனது நிலைபாடு தவறு அல்லது சமுதாய நலன் கருதி தமது நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறேன் என்று கூறிட அதைவிட அதிகமாக மனத்திண்மையும், நேர்மையும் வேண்டும். ஐயா தோண்டு உங்கள் முன் நான் தலைகுனிந்து நிற்கிறேன். உங்களைப் போன்ற பெரியவர் (ஆனால் மனதால் என்றும் இளைஞர்) முன் எத்தகைய கடுமையான வசை சொற்களை பேசிவிட்டேன். ஒட்டுமொத்த இந்து சமுதாய நலன் கருதியே நான் அவ்வாறு பேசினேன் என்றாலும் தங்கள் மனதினை நிச்சயமாக புண்படுத்தியிருப்பேன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கொள்ள இயலாது. எத்தகைய நல்லவரை, பண்பட்ட மனது கொண்டவரை புண்படுத்தியிருக்கிறேன் என்பது ஆழமான வருத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் சமுதாய அக்கறைக்கு தாள் பணிகிறேன். தங்களிடம் எனது ஆத்திர பதிவிற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆக மொத்தம் இறுதியில்இந்துத்வ உணர்வே சாதீயத்தை அழிக்க முடியும் என்பதனை நீங்கள் பதிவுலகிற்கு நிரூபித்துவிட்டீர்கள். ஐயா நீங்கள் என்றென்றும் என் மனதில் உயர்ந்து நிற்பீர்கள்.
நீலா,
ReplyDeleteஉங்களது "அந்த"ப் பதிவில், "வார்த்தைகள் தெறித்து விழுந்துள்ளன" என்று எடுத்துக் காட்டியது தங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அதற்கு வருந்தி, மன்னிப்பு கேட்டு தங்கள் நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்களும், நன்றியும்.
எ.அ.பாலா
//இந்துத்வ உணர்வே சாதீயத்தை அழிக்க முடியும் //
ReplyDeleteஇதனால் தான் அவர் மாறினார் என்று எப்படி சொல்கீறிர்கள் அரவிந்தன்?.....எனக்கென்னமோ தாக்குதல்களுக்கு பயந்துதான் மாறிவிட்டாரென தொன்றுகிறது....
அவர்பதிவுகளை ஓரளவு வாசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், எல்லா இடத்திலும் தான் பார்பனன் என்பது தவிர அவர் அப்படி ஒன்றும் இந்து என்று பெரிதாக எழுதவில்லை.....
எனினும் இந்த வயதான இளைஞனை மறப்போம், மன்னிப்போம். உங்களது இந்த பதிவும், பகிரங்க மன்னிப்பும் மிக கண்ணியமானவை.....வாழ்த்துக்கள்.
//உங்களது இந்த பதிவும், பகிரங்க மன்னிப்பும் மிக கண்ணியமானவை.....வாழ்த்துக்கள்//
ReplyDeleteவழிமொழிகிறேன்!
பாராட்டுக்கள்!
திரு.டோண்டு தாக்குதல்களுக்கு அஞ்சி தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் இல்லை. நிச்சயமாக சொல்வேன். வேறு யாரும் போலி போன்றவர்களின் ஆபாச மிரட்டல்களூக்கு அஞ்சி வலைப்பதிவைவிட்டு ஓடியிருப்பார்கள். எனவே அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது நிச்சயமாக அவரது சிந்தனையின் விளைவாக மற்றும் சமுதாய பார்வையின் விளைவாக.
ReplyDeleteநன்றி பாலா. நன்றி சிபி. பாலா என்ன செய்ய, இந்து தருமத்தையும் இந்து சமுதாயத்தினையும் பிளவுபடுத்திடவும் அழித்திடவும் காத்திருக்கும் ஆதிக்க சக்திகள். இதற்கிடையில் நாம் மிகவும் விழிப்புணர்வுடனும் சமுதாய நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும். அதுவே நம் வருங்காலம். எனவே கடுஞ்சொற்களை கூறிவிட்டேன். முற்போக்கு வேசம் போடவோ அல்லது சாதீய வெறியிலோ (டோ ண்டு அந்தணர் என்கிற ஒரே காரணத்துக்காக திட்டும் கீழ்த்தர கும்பல் போன்றோ) அல்ல நான் அச்சொற்களை கூறியது. இவ்வாறு ஒரு வயது முதிர்ந்த மனிதரை திட்டுவது பாவம் என்று உணர்ந்திருந்தாலும் கூட சமுதாய நலன் கருதி 'போகட்டும் கண்ணனுக்கே' என்று கருதியே அச்சுடு சொற்களை எழுதினேன். கிருஷ்ணார்ப்பணம் அவ்வளவுதான்.
ReplyDeleteஅரவிந்தன் என்கிற தனிநபருக்கு பாவம் வந்தால் என்ன இந்து சமுதாயத்திற்கு நன்மை என்றால் எவ்வளவு பாவச்சுமையையும் தாங்கும் வல்லமையை சனாதன தருமம் வழங்கட்டும்.
எதற்க்கும் கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்க்கலாமே !!! :)))
ReplyDeleteஏன் என்றால் வேதாளம் எப்போது முருங்கை மரம் ஏறும் என்று தெரியாத நிலை இருக்கிறது அரவிந்தன்.
மாமா ஓவர் நைட்டில் திருந்திவிட்டார் என்பது நம்பக்கூடியதா சொல்லுங்கள்...
இருந்தாலும் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு மனம் வேண்டும். அது உங்களிடமும் அவரிடமும் இருப்பது பாராட்டத்தக்கது....
அரவிந்தன் உங்களின் கருத்தியலில் எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடு இல்லையெனினும், உங்களின் இந்த குணத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.
ReplyDelete//ஏன் என்றால் வேதாளம் எப்போது முருங்கை மரம் ஏறும் என்று தெரியாத நிலை இருக்கிறது அரவிந்தன்//
ReplyDeleteஎப்போது முருங்கை மரம் ஏறும் என்பதை விட எப்போது முருங்கை மரத்தில் ஏற்றி விடப் படும் என்று கூறுவதே சாலச் சிறந்தது!
சரி செந்தழல் ரவி, எத்தனையோ முறை தவறு என்றும் தரவுகள் பொய் என்றும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் அதே பொய்களை வாய்கூசாமல் பேசிவரும் பதிந்து வரும் திராவிடர் என தம்மை பெருமையாக முத்திரை குத்திக்கொள்ளும் பதிவர்களைக்காட்டிலும் டோ ண்டு பலகோடி மடங்கு மேம்பட்டவரல்லவா. டோ ண்டுவுக்கு எதிராக எழுதப்பட்ட ஆபாச அசிங்கங்களையும் டோ ண்டு தானே வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரு மாற்றுப்பெயர் பின்னூட்டத்தையும் ஒரே தராசில் வைத்தது எத்தகைய மோசமான விசயம். அத்துடன் ஒப்பிடுகையில் டோ ண்டு குணத்தில் உயர்ந்தவர் அல்லவா? இத்தகையவர் சமுதாய நலன் கருதி மனமாற்றம் அடைந்து அதை எவ்வித ஜல்லியும் இல்லாமல் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறாரே அதுவே பெரிய விசயமல்லவா? இத்தனைக்கும் பிறகு நான் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எனக்கும் நேர்மையற்ற பதிவர்கள் என நான் கருதும் போலி, விடாது கருப்பு, பாலபாரதி, திரு போன்றவர்களுக்கு என்ன வித்தியாசம். மன்னிப்பு கேட்கும் மனதை பாராட்டும் மனம் உங்களிடம் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிற மனமும் மகிழ்ச்சியடைந்து நன்றி சொல்கிற மனமும் எனக்கு இருக்கிறது. நன்றீ. :)
ReplyDelete//மாமா ஓவர் நைட்டில் திருந்திவிட்டார் என்பது நம்பக்கூடியதா சொல்லுங்கள்...//
ReplyDelete:))))))))))))))
நன்றி பாலா, அரவிந்தன், நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி மற்றும் அனானி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தங்கவேல். டாக்டர்.கணபதியிடம் உங்களைக் குறித்து கேட்டேன். நன்றாக தெரியும் நல்ல மனிதர் என்றார். சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள்.
ReplyDeleteநன்றி அரவிந்தன், அடுத்தமுறை நான் ஊருக்கு வரும்போது உங்களை சந்திக்க ஆவல். மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteதங்கவேல் ஐயா, கரும்பு தின்ன கூலியா? கட்டாயம் சந்திக்கிறேன்
ReplyDeleteநன்றி
ReplyDelete//எதற்க்கும் கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்க்கலாமே..............
ReplyDeleteஇருந்தாலும் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு மனம் வேண்டும். அது உங்களிடமும் அவரிடமும் இருப்பது பாராட்டத்தக்கது....//
ஏன் செந்தழலாரே, தங்களது இந்த சொற்கள் ஜெயராமன் விஷயத்தில் ஏன் பிரதிபலிக்கவில்லை?...தங்களது உற்ற தோழர்கள் தானே அவரை அந்தப்பாடு படுத்தினர்?....ஏன் வலையுலக நட்பென்பது சிறிதுநேரம் பேசி, பின் குடித்து கலைவதுமட்டும் தானா?....ஏன் தாங்கள் அன்று அவர்களை நல்வழிப்படுத்தவில்லை?...ஏன் தங்களது பின்னூட்டம்/பதிவின் மூலம் அவருக்கு ஆதரவளிக்கவில்லை?...
எல்லாம் போகட்டும், 3 மாதங்களுக்கு முன்னால் சென்னை பதிவர் கூட்டத்தின் பின் பாபா/பொன்னம்மா மற்றும் பூத் ஏஜெண்ட் ஆடிய ஆட்டங்களை ஏன் தாங்கள் தட்டிக் கேட்கவில்லை?...இன்று நீங்கள் சந்தேகத்துடனும் பாசத்துடனும் டோண்டுவையும், நீல்ஸையும் பாராட்டும் போது எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து தொலைத்துவிட்டது....
/////பின்னரும் மீண்டும் மீண்டும் அதே பொய்களை வாய்கூசாமல் பேசிவரும் பதிந்து வரும் திராவிடர் என தம்மை பெருமையாக முத்திரை குத்திக்கொள்ளும் பதிவர்களைக்காட்டிலும் ////
ReplyDeleteஎந்த பொய்கள் ? எனக்கு விளங்கவில்லை ? நீங்கள் விளக்க முடியுமா ? தனது சாதியை ஒரு பதிவர் பெருமையாக சொன்னார், அது எனக்கு தெரியும். அதே போல் திராவிடர் அவர்கள் அடையாளத்தை மொழிந்துகொள்வதிலும் ஒன்று சேர்வதிலும், ஏற்றம் பெறுவதிலும் என்ன தவறு இருக்கமுடியும் ?
///டோ ண்டு தானே வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரு மாற்றுப்பெயர் பின்னூட்டத்தையும் ஒரே தராசில் வைத்தது எத்தகைய மோசமான விசயம்.///
நான் எப்போதும் அதனை ஒரே தராசில் வைத்ததில்லை...அதன் களம் வேறு, இதன் களம் வேறு...
///ஏன் செந்தழலாரே, தங்களது இந்த சொற்கள் ஜெயராமன் விஷயத்தில் ஏன் பிரதிபலிக்கவில்லை?...தங்களது உற்ற தோழர்கள் தானே அவரை அந்தப்பாடு படுத்தினர்?....///
ஜெயராமன் இதுவரை வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை...எனக்கு தோழமையுடன் உள்ளதொரு பதிவர் சொல்லித்தான் அவர் வெளியேறினார் என்று அவர் வாயால் சொல்லட்டும்...அப்போது சென்று கேட்கிறேன்...
அவரை வலையுலகம் மிஸ் செய்கிறது என்று நான் சொன்னால் அது பொய்யானதல்ல, உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள்
//எல்லாம் போகட்டும், 3 மாதங்களுக்கு முன்னால் சென்னை பதிவர் கூட்டத்தின் பின் பாபா/பொன்னம்மா மற்றும் பூத் ஏஜெண்ட் ஆடிய ஆட்டங்களை ஏன் தாங்கள் தட்டிக் கேட்கவில்லை///
உருப்படியாக ஏதும் சாதிக்கும் கூட்டம் அது...அது இந்த வயத்தெரிச்சல் கண்ணுக்கு ஆட்டமாக தெரிகிறது...அதை தட்டிக்கேட்க அல்ல, தட்டிக்கொடுப்பேன்...
அது போகட்டும் நீலகண்டன் அவர்களே, பாலபாரதியை நீங்கள் விமர்சிக்கும் காரணம் எனக்கு விளங்கவில்லையே...!!!!!
ஆம் 3% எச்சில் என்பது மிக ஆக்கமானதுதான்.....அதனை ரவி போன்றோர் தட்டிக்கொடுக்கத்தான் செய்வார்...
ReplyDeleteஇறைமறுப்பும், இந்து மத மறுப்பும் எவ்வளவு சாக்கடைத்தனமாக செய்துவருகின்றனர். எத்துணை ஆன்மிக மனங்கள் புண்படுகிறதென்பது எல்லோருக்கும் தெரியும். பூனை கண் முடினால் பூலோகம் அஸ்தமித்துவிடாது என்பது ரவி போன்றோருக்கு தெரிய நாளாகும்.
ஜெயராமன் இந்த பதிவினை படிப்பாரா, இதற்கு பதில் சொல்வாரா என்பது தெரியாது. அதனால் தங்களது தோழமைகளுக்கு மனதில் உண்மை சிறிதளவேனும் இருக்குமானால் அவர்கள் மனம் தெளிவாக்கும்......
////ஜெயராமன் இதுவரை வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை...எனக்கு தோழமையுடன் உள்ளதொரு பதிவர் சொல்லித்தான் அவர் வெளியேறினார் என்று அவர் வாயால் சொல்லட்டும்...அப்போது சென்று கேட்கிறேன்... ///
ReplyDeleteஒன்னும் தெரியாத பாப்பா. ஒத்த மணிக்கு போட்டாளாம் தாப்பா... அய்யோ பாவம், ரவி. அவர் தூக்கி பிடிக்கும் கும்பல்களின் பதிவில் அவர் மன்னிப்பு கேட்டு விலக வைத்த பின்னூட்டங்களை பார்க்கவில்லையா. அசிங்கமாக அவரை வெளியேபோ என்று அவரது குஞ்சுகள் போட்ட பின்னூட்டங்கள் இன்னமும் இருக்கின்றன, பொன்னம்மாவின் பதிவில். அவரு போனது நட்டமாம். இந்தாளு விடற ரவுசு தாங்கலப்பா....
// அரவிந்தன் என்கிற தனிநபருக்கு பாவம் வந்தால் என்ன இந்து சமுதாயத்திற்கு நன்மை என்றால் எவ்வளவு பாவச்சுமையையும் தாங்கும் வல்லமையை சனாதன தருமம் வழங்கட்டும். //
ReplyDeleteAravindan,
This reminds me of the stand of Sri Ramanuja who gave the sacred Mantra and deeksha to all members of the society without any discrimation, inspite of being warned by his Guru that sin will befall on him if he does so.
He is supposed to have said "may sin befall on myself, but won't all these people will be elevated because of this mantra"!
I salute your courage and determination. Hindu Dharma lives because of people like you.
so,Iyer-Iyengar problem is solved.
ReplyDeletenow,you can close Iyan kaLi blog.
டோண்டு அவரகளை தனித் தாக்குதல் எதுவும் நீங்கள் செய்திருக்கவில்லையே அப்புறம் ஏன் இது?
ReplyDeleteஅவருக்கு சில கருத்துக்களை சொல்லியிருந்தீர்கள். இதில் தவறொன்றுமில்லை.
செந்தழல் சொல்வதுபோல எனக்கும் நம்பிக்கையில்லைதான் ஆனால் மீண்டும் அவர் பழைய முகம் தெரியும் வரைக்கும் அவர் நல்லவர் என நம்புவோம்.
அரவிந்தன்... உங்களிடம் மன்னிப்பு கேட்கும் மனதும் இருக்கிறது என்பதில் சந்தோஷமே. இதை மிக மோசமான எதிரிக்கும் காட்டவேண்டும்,
கொஞ்சம் மோசமான நண்பர்களிடம் மட்டுமல்லாது..என்பதே என் ஆசை.
குறிப்பிட்ட பதிவை அகற்றாமல், மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுவது சரியாகப் படவில்லையே!
ReplyDelete//அது போகட்டும் நீலகண்டன் அவர்களே, பாலபாரதியை நீங்கள் விமர்சிக்கும் காரணம் எனக்கு விளங்கவில்லையே...!!!!!//
ReplyDeleteகடந்த 6 மாத காலமாக ஒரு பார்வையாளனாக மட்டும் உள்ளேன்.
நான் படித்தவரை பாலபாரதி அவர்களின் பதிவோ அல்லது அவரோ எல்லோருகும் உதவி செய்பவராகத்தான் தெரிகிறார். அவர் நேர்மையற்ற கருத்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லையே. ஏதானும் சான்று உள்ளதா உங்களிடம்.
நீங்கள் டோண்டு சார் விட்ட இடத்தை நிரப்ப முடிவு செய்தது போல் தெரிகிறது.
//SK said...
ReplyDeleteகுறிப்பிட்ட பதிவை அகற்றாமல், மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுவது சரியாகப் படவில்லையே!
//
டோண்டுவே தன்னோட அசட்டுதனங்களுக்கு சாட்சியாக தன்பதிவை அப்படியே வைத்திருக்கிறேன் என்று சொல்லி வைத்திருப்பதையும் பாரும்
//டோண்டுவே தன்னோட அசட்டுதனங்களுக்கு சாட்சியாக தன்பதிவை அப்படியே வைத்திருக்கிறேன் என்று சொல்லி வைத்திருப்பதையும் பாரும்//
ReplyDeleteஅந்தப்பதிவிலேயே 'இது அசட்டுப் பதிவு' என அவர் தெரிவிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
அல்லது இதை ஒர் குறிப்பிட்ட மனநிலையில்.சூழலில் எழுதினேன் இப்போது என் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை எனச் சொல்லலாமே?
பெரியவர் இதை செய்வார் என நம்புவோமாக.
//அல்லது இதை ஒர் குறிப்பிட்ட மனநிலையில்.சூழலில் எழுதினேன் இப்போது என் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை எனச் சொல்லலாமே?//
ReplyDeleteமூன்றாம் யோம் கிப்பூர் பதிவில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
"இப்போது மேலே என்ன?
பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க)".
அவ்வளவுதான். "சொல்லிமுடித்ததை திரும்பத் திரும்ப சொல்லமாட்டேன் என்றுதான் எழுதப்பட்டுள்ளது".
டோண்டு அவர்களின் அறிவிப்பு வரவேற்கக்கூடியது. வரவேற்போம். ஆனால்,செந்தழல் ரவியின் கருத்துக்கள் மிகத் தெளிவானது, கருத்தில் எடுக்கப்பட வேண்டியது. உணர்ச்சி வசப்படமால் நிதானமாக எழுதப்பட்டது.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்.
புள்ளிராஜா
ஆமாம் இங்கே சொல்லி வைத்தாற்போல் சிறில், செந்தழல் ரவி,புள்ளி ராஜா, அனானி என்று ஓரு கும்பலே வந்து டோண்டு திருந்துவாரா பார்ப்போம், திருந்துவாரா பார்ப்போம் என்று சொல்லுவதைப் பார்த்தால் டோண்டும் ஏதோ பஞ்சமா பாதகம் செய்தது போல் அல்லவா இருக்கிறது.
ReplyDeleteஐயா டோண்டு என்ன சிறில் போல் மதமாற்றத்துக்கு சப்போர்ட் செய்தாரா?
ஐயா டோண்டு என்ன செந்தழல் ரவியும் அவரது கோமாளிக் கும்பலும் போல் ஆபாச மூர்த்தி கூட சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டாரா?
ஐயா டோண்டு என்ன பாலபாரதி போல் கண்மூடித்தனமாக எந்த ஜாதியையாவது அசிங்கமா எழுதினாரா?
எச்சில் என்று எழுதினாரா?
ஐயா டோண்டு என்ன செந்தழல் ரவி போல எதையும் புரிந்து கொள்ளாமல் லூசுத்தனா உளறிக் கொட்டினாரா? பிறரை ப்ளாக் மெயில் செய்யும் போலிக்கும் செந்தழல் ரவி அண்டு கம்பெனி போல ஆதரவு தெரிவித்தாரா?
இல்லையே, என்ன்னை ஜாதி பேர் கொண்டு திட்டினால் நான் அபப்டித்தான் இன்ன ஜாதி என்றுதான் சொல்லிக் கொள்வேன் என்றுதானே சொன்னார்?
என்றைக்காவது டோண்டு தன் ஜாதிதான் உசத்தி என்று சொல்லியுள்ளாரா?
எங்காவது டோண்டு தன் ஜாதிக்காரர்கள் தவிர பிற ஜாதிக்காரர்களை தீண்டத்தகாதவராக நடத்துவேன் என்று சொன்னாரா?
எங்காவது குழலி போல அல்லது வீரவன்னியன் என்ற தமிழ் சசி போல வன்னிய வெறி பிடித்து வன்முறை எழுத்து எழுதீனாரா?
அப்புறம் என்னங்கடா ஆள் ஆளுக்கு வந்து டோண்டு திருந்தனும் டோண்டு திருந்தனும்னு சொல்றீங்க, போய் உங்க மூஞ்சிகளையெல்லாம் கொஞ்சம் கண்ணாடில பாருங்கடா
ஏனப்பா செந்தழல் ரவி, பாத்து சுட்டுடப்போவுது தழலு. உன்னையப் பத்தி உன் மேலே இருக்கும் மதிப்பே போய் விட்டது என்றும், நீ போலிக்கு ஜால்ரா போடும் ஒரு பொறுக்கி, கீழ்த்தரமான பிறவி என்பதையும் அரவிந்தன் தன் முந்தைய பதிவில் சொல்லியிருந்தாரே அதை நீ இன்னும் படிக்கவில்லையா, அல்லது படித்தும் கண்டுகிடாதது போல இருக்கியா ? உன் மூஞ்சில காறித் துப்பாத குறையா அரவிந்தன் எழுதினத முதல்ல படி, அப்புறம் நீ அவரு பீலாபாரதி மூஞ்சில காறித் துப்புனதுக்கு காரணம் கேட்கலாம். ஒன்னோட மூஞ்சில எந்தக் காரணத்துக்காக அரவிந்தன் காறித் துப்பினாரோ அதே காரணத்துக்குதான் பீலாபாரதி மூஞ்சிலேயும் துப்பி இருக்காரு, போய் உன்னோட மூஞ்சிய துடைச்சிக் கிட்டு அப்புறமா அதே நாறுன கர்ச்சீப்பால பீலா பாரதி மூஞ்சில துடை.
ReplyDeleteபத்ரி ஆபாச போலியை கடுமையாக கண்டிக்கிறேன், என்று பேட்டியெல்லாம் கொடுக்கிறார். அதெல்லாம் சரி, வெளிப்படையா அதே ஆபாச போலிக்கு சப்போர்ட் பண்ணூம் பீலா பாரதியை எப்படி வேலைக்கு வைத்திருக்கிறார் ? அப்ப போலியோட ஆபாச நடவடிக்கைகளுக்கு அவருக்கும் ஒப்புதல் உண்டா ? அவருக்கும் அவனுக்கும் பீலா பாரதி மூலமாக ஏதும் டீல் உண்டா ? அதனால்தான் அவன் அவரை ஏதும் குதறாமல் பாராட்டுகிறானா ? இதை நான் கேட்கவில்லை நடுநிலை பதிவர்கள் அனைவரும் கேட்கிறார்கள். செந்து உன் கிட்ட இதுக்கு பதில் இருக்கா அல்லது போலிய கேட்டு விட்டுச் சொல்லுவியா?
உங்க மூஞ்சியில வழியிற எச்சில முதல்ல துடைச்சி கிட்டு அப்புறமா டோண்டு கிட்ட நியாயம் கேட்க வாங்க.
ஐயன் காளி அவர்கள் பற்றி பேசலாம் என நினைக்கிறேன். சும்மா சொல்லக்கூடாது மனிதர் நன்றாகவே தமிழ் எழுதுகிறார். என்னை விளித்து அவர் போட்ட பதிவை நகலெடுத்து முன்வரைவு பகுதியில் வைத்தது சாவகாசமாக் முடிந்த அளவு வரிக்கு வரி பதில் சொல்லி எதிர்ப் பதிவு போட நினைத்ததுதான் காரணம்.
ReplyDeleteஅதில் ஓரிரு தினம் தாமத்ம் தவிர்க்க முடியாது போயிற்று. அதற்குள் அவர் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களது வலைப்பூவுக்கும் சென்று தனது பதிவை பற்றி எல்லார் கவனத்தையும் ஈர்த்தார்.
நானும் பதில் பதிவு போட்டு, அவர் பதிவிலும் இது பற்றிய விவரங்கள் இன்னும் பலவற்றை எழுதினேன். இப்போதைய நிலை என்ன? பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளார். கூட 7 பின்னூட்டங்கள். அப்படியே அதிலேயே நிலை கொண்டுள்ளது.
என் கேள்வி இதுதான். இப்படி மெனக்கெட்டு எல்லோருக்கும் தனது பதிவை எடுத்து காட்டியவர் இப்போது ஏன் மௌனம் சாதிக்க வேண்டும்?
இது ஏதோ ஒரு குறும்பு சிறுவன் காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடுவது போல இல்லை?