Thursday, August 28, 2008

ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க

நாஸ்டரடாமஸ் என்று ஒருவர் ரொம்ப காலத்துக்கு முன்னால் ரொம்ப காலத்துக்கு பின்னால் நடக்கப்போவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. 1973 துக்ளக் இதழ்களில் போட்டிருக்கிற கார்ட்டூன்களைப் பார்க்கிற வரையில். அட 2008 இல் நடக்கப் போகிற விஷயம் எப்படி 1973 இல் கார்ட்டூன் போட்டிருக்கிறவர்களுக்கு தெரிந்தது என அவர்களது ஞான திருஷ்டியை வியக்கவா அல்லது 1973 இலிருந்து 2008 வரை கார்ட்டூன்களுக்கு உண்மையாக விசுவாசமாக நடந்துவரும் திமுகவின் மின்சாரவெட்டு திராவிட பாரம்பரிய மாற்றமின்மையை வியக்கவா அல்லது இந்த கையாலாகத கும்பலை மீண்டும் ஆட்சியலமர்த்திய மக்களின் சொரணையற்ற தன்மையை வியக்கவா....எதுவானாலும் தமிழ்நாட்டின் திராவிட நாஸ்டரடாமஸ் பட்டத்தை சோவுக்கும் துக்ளக்கும் அளித்து இந்த பட்டத்தை அவர்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடுவரும் தமிழ்நாட்டு மின்வெட்டுதுறை மற்றும் தீவட்டி முன்னேற்ற துறை அமைச்சர் என பினாமி பட்டம் பெற்றவருமான திருவாளர் அமைச்சர் பெருமகனாருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
கீழே நீங்கள் காண்பது 1-3-1973 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்.

இதே கார்ட்டூனில் அன்றைய மின்வெட்டு இலாகா மந்திரியை நீக்கி இன்றைய மின்வெட்டு சாரி மின்சார துறை இலாகா மந்திரியை போட்டாலும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.

இதோ நீங்கள் மகிழ பழைய 'துக்ளக்' இதழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இதர 'வீராசாமி ஜோக்ஸ்'. மின்வெட்டினால் அவதியுறும் என் இனிய தமிழ் மக்களே எல்லா புகழும் கொலைஞருக்கே....சாரி கலைஞருக்கே....




அடுத்தமுறையும் திமுகவுக்கே ஓட்டு போடுங்க மக்களே....மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு ஓசி டீவியிலே முதலமைச்சர் குத்தாட்டம் ரசிக்கிறதை ரசிக்கலாம்


4 comments:

  1. யாரிந்த ஜோஸப் என்ற ஆன்மீக சொற்பொழிவாளர்?

    ReplyDelete
  2. கருநாநிதி தமிழ்நாட்டு சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளீ.

    ReplyDelete
  3. கருநாநிதி அப்படி பேசியதை இளைய தலைமுறையைச் சேர்ந்த திமுகவினர் யாரும் ரசிக்கவில்லையாம்.

    கோயில்களுக்கு செல்லும் ஸ்டாலினையும், திருவிழாக்களுக்கு பண உதவி செய்யும் அழகிரியையும் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.

    கருநாநிதி தொடர்ந்து இப்படி பேசி தனது செல்வாக்கை தானே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.

    அப்புறம் ஒரு சந்தேகம். இந்த senilityங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

    ReplyDelete
  4. மின் தடை: மாறிய மணமகள்கள்-மாற்றித் தாலி கட்டிய மாப்பிள்ளைகள்!

    http://thatstamil.oneindia.in/news/2008/09/06/tn-power-cut-at-mass-wedding-causes-mix-up-of-brides.html

    தேனி: தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தேனி மாவட்டத்தில் யார் பெண் என்று தெரியாமல் இரண்டு மாப்பிள்ளைகள் மாற்றி தாலி கட்டிய விநோதம் நடந்துள்ளது. காரணம் - மின் தடை!

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.

    இங்கு 40 ஜோடிளுக்கு இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகளால் அந்தக் கோவில் வளாகம் முழுவதும் உறவினர்கள், குடும்பத்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    அனைவரும் முகூர்த்த நேரத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். எல்லாம் ரெடியானது, முகூர்த்த நேரமும் வந்தது. மாப்பிள்ளைகள் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்பட மங்கள மேளம் முழங்க மாப்பிள்ளைகள் தாலி கட்ட தயாராயினர். அப்போது திடீரென மின்சாரம் போனது.

    இதனால் கல்யாணம் நடந்த இடத்தில் பெரும் குழப்பமானது. இந்த களேபரத்தில் வீராசாமி, பாலமுருகன் ஆகிய இரு மாப்பிள்ளைகள் தவறுதலாக வேறு பெண்களுக்குத் தாலி கட்டி விட்டனர்.

    வீராசாமி தாலி கட்ட வேண்டிய பெண் சுப்புலட்சுமி. ஆனால் அவரோ சுப்புலட்சுமிக்கு பக்கத்தில் நின்றிருந்த அவரது தோழிக்கு தாலி கட்டி விட்டார்.

    அதேபோல பாலமுருகன், சிவகாமி என்பவருக்குப் பதில் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார்.

    இதனால் அங்கு பெரும் குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட பெரியவர்கள் கூடி பேசி பரிகார பூஜை ஒன்றை செய்ய தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து கட்டிய தாலிகளை கழற்றச் சொல்லி அவற்றுக்கு பரிகார பூஜை செய்தனர். பின்னர் உரிய மணமகள்களின் கழுத்தில் நல்ல விளக்கொளியில் மாப்பிள்ளைகள் தாலி கட்ட கல்யாணம் இனிதே முடிந்தது.

    ReplyDelete