Wednesday, March 31, 2010

just to set the record straight

அண்மையில் திரு ருத்ரன் என்கிற மனநல மருத்துவருடன் ஒரு தனிமடல் உரையாடலில் ஈடுபட்டேன். அது ஒரு உரையாடலாக இருக்கும் என்கிற எண்ணத்தில். துரதிர்ஷ்டவசமாக அவரது ஒரு மானுடக்குழுவின் மீதான காழ்ப்புணர்ச்சி மீது நான் வைத்த விமர்சனங்கள் அவரது ஈகோவை காயப்படுத்தி விட்டன போலும். அவரது துணைவியார் என்னை விமர்சித்திருக்கிறார். எனவே just to set the record straight:

இது உமா என்கிற பதிவர் டோ ண்டுவின் கமெண்ட் பாக்ஸில் சொல்லியிருந்த விஷயம்:

//நீங்கள் ருத்ரனுக்கு தனியாக அனுப்பும் மெயில்களையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டங்களையும் பார்க்கிறேன். இந்த "Playing to the gallery" தான் பார்ப்பனீயம். Kudos//

My reply:

உங்களைப் போன்றவர்களின் புரிதல் எனக்கு அயர்ச்சி அளிக்கின்றன. என்னுடைய தவறெல்லாம் என்னவென்றால் லாசராவுடனெல்லாம் பழகிய மனிதர் பெரிய மனிதராக இருக்க வேண்டும் என நினைத்தது மட்டுமே. சரி அப்படி என்ன அவருக்கு தனிமடலில் அனுப்பி விட்டேன் என்பதையும் இங்கு நான் எழுதியிருப்பதுவும் அதுவும் எத்தனை வேறுபடுகிறது என்பதையும் பார்க்கலாம்.

இதோ நான் அவருக்கு அனுப்பியது:

2007 இல் என் வலைப்பதிவில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் மிக மோசமாக என்னையும் என் குடும்ப நபர்களையும் மிக மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட்கள் குவியும். மெயில் பாக்ஸை திறக்கவே எரிச்சலாக இருக்கும். இந்த திருவிளையாடலை செய்த நபர் திராவிட கருத்தியல் கொண்ட ஒரு குழுமமாக செயல்பட்டவர்களுள் ஒருவர். அவரது இந்த இயக்கம் அவரது சக திராவிடத்துவ நண்பர்களுக்கு தெரிந்திமிருந்தது. இதில் சில நபர்களுடன் நான் சிறிய அளவிலாவது நட்பு வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் -தங்களுக்குள் மோதல் வரும் வரை- அந்த நபரை காட்டிக் கொடுக்க வில்லை. எனவே இந்த நபர்களுடனான என் தொடர்புகளை முழுமையாக கத்தரித்துவிட்டேன்.

இந்த மன வக்கிரம் பார்ப்பனீயமா? பார்ப்பனீயம் என்றால் என்ன? அது ஒரு காலனிய கட்டமைப்பு என்றே கருதுகிறேன். ஏதோ ஒரு சிறு குழு ஒட்டு மொத்த சமுதாயத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக மூவாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றி வந்தது என்கிற கருத்தாக்கமே தவறானது. ஐரோப்பாவின் யூத வெறுப்பு கருத்தாக்கத்தை பிரதி எடுப்பது. நமது நாட்டின் சாதிய அமைப்பு நிச்சயமாக அதில் குறைகள் உண்டு இல்லை என்றில்லை. மானுடத்தன்மையற்ற பரிமாணங்கள் உண்டு. அதன் மீது எனக்கும் நான் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கும் கடுமையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் உண்டு. ஆனால் அது நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. ஐராவதி கார்வே போன்ற மூத்த சமூகவியலாளர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மீனவர்கள் பிராம்மணர்களாக மாறியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள். ஸ்ரீ ராமானுஜர் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து அந்தண சாதியை உருவாக்கியதை மார்க்சிய சமூகவியலாளர்களே கூட ஆவணப்படுத்தியுள்ளனர். கீழ் வெண்மணியில் தலித்துகள் ஆதிக்க சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட போது அன்று ஈவெரா கள்ள மௌனத்துக்கு பின் வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என அறிக்கை விட அன்றைக்கு தலித்துகளுக்காக போராடிய மார்க்சியர்களின் பாரம்பரிய புலம் என்ன? ராமானுஜரின் மகா மானுடமல்லவா அன்று மார்க்சியத்தின் மூலமும் வெளிப்பட்டது. அப்பேரருள் அற்ற மார்க்சியம் ரஷியாவில் பெருங்கொலை கருவியாகவும் சீனாவில் அடிமை உழைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதையும் இன்றைக்கும் காண்கிறோமே! இந்நிலையில் எது பார்ப்பனீயம் என்கிறீர்கள்? சாதியத்துக்கு பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்புதாரிகள் அல்லர். அப்படி சொல்வது ஆதிக்க சாதிகளை -தேவர்களையும் வெள்ளாளர்களையும் வன்னியர்களையும் - அவர்கள் தலித்துகளை தாக்கிவிட்டு பழியை பார்ப்பனீயம் என்கிற முகமறிய வெறுப்பு களத்தின் மீது போட்டு செல்ல அவர்களுக்கு ஒரு சால்ஜாப்பை ஏற்படுத்துவது அல்லாமல் வேறில்லை.

எனக்கு மிக நெருக்கமான பல தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் மூத்தவர்களிடம் களப்பணியின் போது பேசுகையில் அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாங்கள் பாரம்பரிய முறையில் வளமாக மதிப்புடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றனர். உதாரணமாக தென் தமிழகத்தின் நெற்கட்டுஞ்செவ்வல் கிராமத்தில் இன்றைய ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமிருந்து இன்றைய தலித்துகளான அருந்ததியினருக்கு ஆதரவாக அன்றைய பாளையக்காரர் -தினமும் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யும் பார்ப்பன அடிமை- அளித்த தீர்ப்பு, எத்தனையோ வனவாசி சாதிகளையும் தம்மை எதிர்த்த சாதிகளையும் குற்றப்பரம்பரை என பிரிட்டிஷார் அறிவித்தமை, வெள்ளையருக்கு எதிராக போராடிய ஒரே காரணத்துக்காக நிலம் பறிக்கப்பட்டு வெள்ளையர்களால் நிலமற்ற தொழிலாளர்களாக்கப்பட்டு தீண்டத்தகாத சாதி என முத்திரைக் குத்தப்பட்ட கொடுமை என பலவற்றை சான்றாக காட்டலாம். அதென்ன குற்றப்பரம்பரை? குற்றத்தன்மை எப்படி பரம்பரையாக வரமுடியும்? விவிலிய கருத்தியல் அடிப்படையில் சட்டத்துக்குள் ஏற்றப்பட்ட கொடுமை இது. அப்படியென்றால் சாதியத்தை கிறித்தவனீயம் என சொல்லலாமா அல்லது விவிலியனீயம்? அதே நேரத்தில் பகவத் கீதை மிகத் தெளிவாக தன்னை உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக சொல்லிக்கொள்பவன் அசுரத்தன்மை கொண்டவன் என்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அய்யா வைகுண்டர், ஸ்ரீ நாராயணகுரு, அய்யன் காளி போன்றவர்கள் ஹிந்து ஞான மரபை வேதாந்த தரிசனத்தை ஒரு விடுதலை இறையியலாக முன் வைத்தவர்கள். இவர்களெல்லாம் பார்ப்பனீயம் என்றெல்லாம் வெறுப்புமிழவில்லை. இன்று ராமகிருஷ்ண பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆச்சாரியராக இருப்பவர் பூர்வாசிரமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். சாதியத்தை அழிக்க ஹிந்துத்துவத்தால் மட்டுமே முடியும். பார்ப்பனீயம் என சமுதாயத்தின் அடிப்படை தெரியாமல் வெறுப்புமிழ்வதால் அல்ல.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

இதனை அவருடைய கமெண்ட் பாக்ஸில் இட்டு ஏதோ எரர் வந்ததால் அவருக்கு தனிமடலாகவும் அனுப்பியிருந்தேன். அவரும் தன்னாலும் இட முடியவில்லை...ஏதோ எர்ரர் என்று சொல்லியிருந்தார். நான் சரி அதனால் ஒன்றுமில்லை எனக்கு உரையாடலில்தான் ஈடுபாடே ஒழிய கமெண்ட்களில் இல்லை என தெரிவித்து விட்டேன். பின்னர் பார்த்தால் அதற்கு பின்னர் பல கமெண்ட்கள் அவரது வலைப்பதிவில் வெளியாகியுள்ளன. ஆனால் இது மட்டும் ஏனோ வெளியிடப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து நான் எழுதிய மடல்களை மட்டும் (ஏனெனில் அவர் எனக்கு அனுப்பிய "ஆதீன பீடத்திலிருந்து" பேசிய மடல்களை அவரே வெளியிடட்டும்) நான் இங்கே வெளியிடுகிறேன். So people can decide for themselves as to who is playing to the galleries

No Problem, Dr. Rudran. Sometime due to google server error such things happen.
Then they will become all right. More than the blog post I am interested in dialogues where we can talk without bothering about ego.

//original and ugly fangs//
I do not know how much you are conversant with the history of Hindu nationalism. The roots of Hindu nationalism go back to Arya Samaj which as you would know is an anti-caste movement. Hinduthva is not and i repeat with an emphatic NOT- Kanchi (or Kumbhakonam Branch Math - as you see fit) vision of society.

While Tilak was conservative Savarkar was radical in anti-caste reforms.

None other than Dr. Ambedkar would attest to that. He considered Veer Savarkar the only Hindu leader who understood what needed to be done to rermove casteism and appreciated his stand on Ambedkar's Kalapani Sathyagraha.

Chennai urban Brahminism is an ugly phenomenon no doubt. So is Dravidianism. And in a way one cannot survive without the other.

//just as how there are scoundrels in communist party and in periyar's gang there could be some decent and sensitive people who follow Hinduism//

Dear sir, now if this is not prejudice what else is? I have seen in our place ordinary people with no support either from government or from upper caste fight foreign funded conversion onslaught on their spiritual traditions. if you come to Kanyakumari i will show you people who are in no way Brahminical but who consider themselves devout Hindus -who are ready to die for Hinduism under saffron flag - that flag was hoisted here by Ayya Vaikunder who condemned both caste tyranny as well as proselytism and we see RSS as natural heirs of that heritage.

And with such non-Brahmin assertion of our native spiritual tradition even Kanchi can be reformed.

Despite all this yes I can be wrong and you can be right and also vice versa.

with luv and regards
s. aravindan neelakandan

என்னுடைய எழுத்துக்களை இது வரை படித்து வந்த எவரும் இதே கருத்துக்களையே நான் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருவதை அறிவார்கள். இதே டோ ண்டுவின் வலைப்பதிவில் டோ ண்டுவைக் கூட எத்தனைகடுமையாக எதிர்த்திருக்கிறேன் என்பதை விரும்புவோர் தேடி பார்த்துக்கொள்ளலாம். இதில் ஒரு விஷயம் தெளிவு. டோ ண்டுவை நான் எத்தனையோ கடுமையாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் எப்போதும் டோ ண்டு என் மெயில் பாக்ஸுக்கு "நீ மோசடிக்காரன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன்" என்றெல்லாம் abusive mail அனுப்பியதில்லை. ஆனால் நம் மனநல மருத்துவருக்கோ ஈகோ மீது சின்ன ஒரு பிறாண்டல் கூட உள்ளிருக்கும் ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வந்துவிடுகிறது. டோ ண்டுவிடமிருந்து மனிதத்தை திருவாளர் ருத்ரன் படிக்க முயற்சிக்கலாம்.

5 Comments:

Blogger Uma said...

முடிந்தால் உங்களின் வராத மெயிலைப் பதிவாக இங்கே போட்டதோடு அல்லாமல் பின்னூட்டமாகவும் போட்டுப் பாருங்களேன்.
அப்பறம், மற்ற மெயில்கள் எல்லாம் எங்கே அரவிந்தன்?

9:21 AM, March 31, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

I do not have any problem in publishing the entire correspondence including Dr. Rudran's mails. i hope he does not have any objections.

9:28 AM, March 31, 2010  
Blogger Dr.Rudhran said...

so now you presume i had deliberately prevented your literary and logical masterpiece from appearing as a comment in my blog! why dont you try to post the same in dondu's blog and see if it works?

and, i respect confidentiality of my patients. tell me you are sick and you are suing blogs to contact me and later come as a patient your correspondence will be treated with utmost confidentiality.

5:54 PM, March 31, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//your literary and logical masterpiece//

No i never consider my scribblings as any master piece offering people to frame and send them as unsolicited gifts.

//i respect confidentiality of my patients. tell me you are sick and you are suing blogs to contact me and later come as a patient your correspondence will be treated with utmost confidentiality//

Only your arrogance matches your ignorance and your void of ethics. An e-mail correspondence is a privileged form of personal communication and any divulging of that information should have the consent of its participants.I do not have to become patient of some one whom i perceive as needing a shrink himself. Stop Preaching.

9:03 PM, March 31, 2010  
Blogger சுழியம் said...

To Aravindan Neelakandan:

சாதி வெறி எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்கும் நீங்கள் டோண்டுவின் தளத்தில் சாதி எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், டோண்டுவிற்கோ அல்லது ருத்திரனுக்கோ இந்தப் பிரச்சினை தங்களைப் பிரபலமாக்கிக் கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே. பிரபலமாவது தொழிலுக்கு புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கச் செய்யப்படும் அத்தியாவசியமாக அவர்களுக்கு இருக்கிறது. ப்ளாக் உலகில் பிரபலாமாவதும் எளிது. ஏதேனும் ஷாக் வேல்யு உள்ளதைப் பேச வேண்டும். அது உண்மையா, பொய்யா, அது பற்றி நிஜமாகவே அக்கறை இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் கவலையே பட வேண்டியதில்லை. நம்மைப் பற்றி ஆயிரம் பேரை பேச வைத்தால் போதும். எழுத்தாளர் சுஜாதா இந்த ப்ளாக்கர்களைப் பற்றி மிகச் சரியாகவே கணித்துச் சொல்லி இருந்தார். உங்களுக்குத் தெரியாதது இல்லை.

இந்தப் பதிவுலகில் இருப்பவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

1 புத்திசாலித்தனமாக தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுபவர்கள்

2 மேலே உள்ள குழுவினரின் நோக்கம் தெரியாமல் அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் மேம்போக்கு அசடுகள்

கமெண்டுகளின் எண்ணிக்கை குறையும் போதெல்லாம் டோண்டு பார்ப்பான் உசத்தி என்று பதிவு போட்டு கமெண்டுகளின், வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ளுவார். ஆபாசமாக தரம் தாழ்ந்து எழுதுவதன் பேசுவதன் மூலமாக தன்னை எப்போதும் பிரபலமாக வைத்திருக்க ருத்திரன் முயலுவார். இந்த இரண்டு பேரும் சண்டை போடுவதால் அவர்களுக்குத்தான் லாபம். கமெண்டுகளின், வாசகர்களின் எண்ணிக்கை இவர்களுக்குக் கூடும்.

ராஜாஜியைத் திட்டோ திட்டு என்று திட்டி ஈவேரா கல்லா கட்டினான் இல்லையா. அந்தப் பணம் பிடுங்கியின் வாயைப் பார்த்துக்கொண்டு, அவன் நிஜமாகவே சமூக அக்கறை உள்ளவன் என்று நம்பி அவன் பின்னால் திரிய ஒரு பத்து இளிச்சவாயன்கள் மாட்டினார்கள் இல்லையா. அந்த யுக்தியைத்தான் இந்த இரண்டு பேரும் செய்து பலன் அடைகிறார்கள்.

மேலும், பிரபலமான டாக்டர் விஷயம் தெரிந்த நல்ல டாக்டராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டோண்டு, ருத்திரன் இந்த இரண்டு பேருடைய தொழில் சம்பந்தமான அறிவை, ஞானத்தை ஒப்பிட்டால் டோண்டு பல ஆயிரம் படிகள் மேலே இருக்கக் கூடும். டோண்டு மொழி பெயர்த்த பக்கங்கள் கண்டிப்பாக ருத்திரனால் நிஜமாகவே குணமானவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், தவறே செய்யவில்லை என்று நன்கு தெரிந்தும், டோண்டு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் ? வேறொன்றுமில்லை. யாராவது ருத்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது, திமுக எம்பிகள், மந்திரிகள் சில பேர் ருத்திரனின் class mates அல்லது glass mates என்று அவருக்கு சொல்லி இருக்கலாம். எனவே, அவரும் ஜகா வாங்கி விட்டார்.

"நான் உன்னை திட்டியதில், குறை சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்கிறது ஒரு கதா பாத்திரம். "நீ சொல்லுவதை உண்மையில் நான் உண்மையில் நம்பவில்லை. இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுகிறேன்" என்கிறது மற்றொரு கதா பாத்திரம். இந்த நாடகத்தை நிஜம் என்று நம்பி ஆளுக்கொரு பக்கம் சேர்ந்துகொண்டு அடித்துக்கொள்ளவும் ஒரு கூட்டம் வந்து விடுகிறது.

இந்த விளம்பரச் சண்டைகளுக்கு நடுவில் நிஜமாகவே சாதி வெறியை தவறு என்று சொன்ன உங்கள் தரப்பு ஒரு அபஸ்வர நிம்மதி. ஆனால், அவர்களும் உங்களைப் போலவே சாதி குறித்த கவலையால்தான் சண்டை போடுகிறார்கள் என்று தப்பித் தவறி நீங்கள் எண்ணி இருந்தால்.......... ....... .......... வெள்ளந்தி ஐயா நீங்கள் !!

இந்த வெள்ளந்தி நிலையில் இருந்து தப்பிக்க, காலையில் 4 மணிக்கு எழுந்து, குளித்து, சுத்தமான ஆடை அணிந்துகொண்டு, அனுபவப்பட்டவர்கள் சொல்லி வைத்த இந்த வாசகத்தை 108 முறை சத்தமாக வேகமாக ஜெபியுங்கள்:

பைத்தியக்காரனுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியனுக்குப் பைத்தியம் பிடித்தால் அந்தப் பைத்தியக்கார வைத்தியனுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியம் தெரிந்த (!) வைத்தியனுக்கும் பைத்தியம் பிடிக்கும்.

7:42 AM, April 01, 2010  

Post a Comment

<< Home