Friday, February 09, 2007

...அப்புறம் கடவுளுக்கு என்ன தேவை?

ஜெனீபர் நியூயார்க் நகர தீயணைப்பு படையைச் சேர்ந்தவர். நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் இஸ்லாமிய பயங்கரவாதைகளால் தாக்கி அழிக்கப்பட்ட போது அங்கு தீயணைப்பு பணியாற்றியவர் அவர். அந்த கொடூரங்களை நேரடியாக பார்த்தது அவரை வெகுவாக பாதித்திருந்தது.

அக்டோபர் 2002 அன்று மாதா அமிர்தானந்தமயி அம்மா நியூயார்க் வந்திருந்தார்கள். 'உலக அமைதிக்காக ஆன்மிக பெண்களின் முயற்சி அமைப்பு எனும் இயக்கத்தில் உரையாற்றிட அம்மா அழைக்கப்பட்டிருந்தார். அங்கே அக்டோ பர் 6 ஆம் தியதி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் அம்மாவை பார்க்க வந்தவர்களுள் ஒருவர் ஜெனீபர் ஆவார். ஜெனீபர் அந்த துன்பச்சம்பவத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபட்டிருக்கவில்லை. அம்மா ஜெனீபரை அன்போடு அணைத்து அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கல்லையும் நசுங்கிய ஒரு சாவியையும் ஜெனீபர் கொண்டு வந்திருந்தார். அவற்றை அம்மாவிடம் காட்டிய ஜெனீபர், "இவற்றை எதற்கு எடுத்து வந்திருக்கிறேன் என்று தெரியாமலேயே எடுத்து வந்திருக்கிறேன். ஒரு வேளை என் மனம் அம்மாவுடன் இன்று நடக்கப் போகும் இந்த விலைமதிப்பற்ற தொடர்பைக் குறித்து அன்றே அறிந்திருக்க வேண்டும். அங்கே உயிரிழந்தோரின் அழுகுரல் இதில் இருக்கிறது." என்று சொல்லியவாறு கொடுத்தார். அம்மா அவற்றினை தமது முகத்தோடு சேர்த்து முத்தமிட்டார். ஜெனீபரின் முகம் தெளிவடைந்தது. ஜெனீபருடன் வந்த ஓல்ஸன் அம்மாவிடம், "ஜெனீபருக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான மதநம்பிக்கையோ இறைநம்பிக்கையோ இல்லை. ஆனா துன்பப்படுபவர்கள் மீது அன்பும் கருணையும் உண்டு. இவர் வெளிப்படையாக ஒரு இறைவனை வணங்க வேண்டிய அவசியம் உண்டா?" என்று வினவினார்.
"துன்பப்படுபவர்களிடம் காட்டும் அன்பும் கருணையும் தான் இறைவன். அந்த மனமிருந்தால் பின்னர் இறைவன் எதற்காக?" என்றார் அம்மா.
(நன்றி : தாய்மையே விழித்தெழு...ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி, பக்.10-11)



பெண் விடுதலைக்காக அம்மா அமிர்தானந்த மயி தேவியின் தெய்வீக அருள் நிறைந்த வார்த்தைகளால் இந்து சமுதாயத்திற்கும் உலக சமூகத்திற்கும் விடுக்கப்படும் இந்து தருமத்தின் அறைகூவல்





  • கடந்தகால சமூகம் படைத்த சட்டதிட்டங்களும் குருட்டு நம்பிக்கைகளும் இன்று பெண்ணுக்கு எதிராக நிலை பெற்றுள்ளன. சுரண்டுவதற்கும் அடக்கி ஆள்வதற்கும் ஆண்கள் உருவாக்கிய காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களும் தொடர்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கிறது பெண்ணின் மனம். அவளுடைய மனமே அவளை வசியம் செய்து வைத்திருக்கிறது. இந்த வளையத்திலிருந்து வெளிவர அவளுக்கு அவளே உதவ வேண்டும்.

  • பெண் தீரமுள்ளவள் ஆக வேண்டும். அவளை வளர அனுமதிக்காத சமூகத்தின் சட்டதிட்டங்களுடன் போராட தேவையான சக்தி அவளிடம் இருக்கிறது. இது அம்மாவின் சொந்த அனுபவமாகும். ஆலயங்களில் ஆராதனை செய்யவும் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யவும் வேத மந்திரங்களை ஓதவும் சமூகத்தில் பெண்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் அம்மா அத்தகைய செயல்களை பெண்களைக் கொண்டு செய்ய வைத்திருக்கிறேன். இதற்கு சிலர் எதிர்ப்பு குரல்களை எழுப்பினார்கள். அப்படி எதிர்த்தவர்களிடம் அம்மா "ஆண்-பெண் என்ற பாகுபாடில்லாத இறைவனையே நாங்கள் வணங்குகிறோம்" என்றேன். சிலர் இவ்விதம் எதிர்த்த போதிலும் பெரும்பாலோர் அம்மாவின் செயலை ஆதரிக்கவே செய்தனர். ஏனெனில் இதுபோன்ற தடைகளை விதிப்பது பாரத பண்பாட்டுக்கு உகந்தததல்ல. பெண்களை அடக்கி ஆள்வதற்காகவும் சுரண்டுவதற்காகவும் உயர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் உருவாக்கிய சட்டதிட்டங்களே இவை என ஊகிக்கலாம். இவை இடைக்காலத்தில் ஏற்பட்ட வழக்கமே அன்றி பழங்கால பாரதத்தில் இவ்வழக்கம் இல்லை.

  • பாரதத்தில் இறைவனை ஒரு நாளும் ஆண் வடிவில் மட்டும் ஆராதிக்கவில்லை. பெண் வடிவில் தாயாக, தேவியாக, படைத்தல் காத்தல் அழித்தல் என முத்தொழிலையும் நிர்வகிப்பவளாக , பல வடிவங்களிலும், பாவங்களிலும் ஆராதிக்கிறார்கள். ...பெண்ணை பெற்றெடுத்த தாயாகவும் ஜகதாம்பிகையாகவும் ஆராதிக்கும் மகிமை மிக்க பாரம்பரியம் பாரதத்தின் தனிச்சிறப்பாகும். இயற்கை முழுவதையும் தாயாகவே பாரத மக்கள் காண்கின்றனர்.

  • பிரசவ வேதனையையும் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு மதத்தலைவர்களுக்கும் இறைவனின் அவதாரங்களுக்கும் பிறப்பளிக்கப் பெண் வேண்டும். உண்மை இதுவாக இருப்பினும் வாழ்நாள் முழுவதும் அவள் ஆணுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று கூறுவது பொருளில்லாமலும் அறிவுக்கு ஒவ்வாமலும் இருப்பதை யாரும் சிந்திப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயமாகும்.

  • உண்மையான மதங்களால் பெண்ணை ஒதுக்கிவிட முடியாது. இறைவனை அனுபூதியில் அறிந்தவர்களால் ஆண்-பெண்ணை பேத புத்தியுடன் காண முடியாது. அவர்கள் சமநோக்கு உள்ளவர்களாகவே இருப்பார்கள். பெண்ணைத் தரம் தாழ்த்துகிற நியதிகள் எங்காவது வழக்கத்தில் இருந்தால் அது ஆணின் சுயநலத்தால் உருவாக்கப்பட்டவையேயன்றி இறைவனின் வார்த்தைகள் அல்ல.

  • ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால் அதை விடக் கூடுதலாகவே அவளால் செய்யமுடியும். புத்தி சக்தியிலும் திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழ்ந்தவள் அல்ல. எல்லா துறைகளிலும் பெண்ணால் அசாதாரணமான வெற்றியைப் பெறமுடியும். அதற்கான இச்சா சக்தியும் செய திறமையும் அவளுக்கு இருக்கிறது. இதயத்தூய்மையும் அறிவுச்செல்வமும் அவளுக்கு உண்டு.

7 Comments:

Blogger சிறில் அலெக்ஸ் said...

அருமையான தலைப்பு, அசுமையான கட்டுரை.

Faith without Action is useless. St. Paul.

And now these three remain: faith, hope and love. But the greatest of these is love.
St. Paul.

எல்லா மதமும் அடிப்படையில மனிதன அன்பாய் வாழத்தான் சொல்லுது. ஆனா மதம்னு வந்துட்டாலே வெளி அடையாளங்களுக்கு மதிப்பு வந்திடுது. காலம் போகப் போக கருத்துக்கள் மருவி வெறும் சடங்குகளே நிலைக்கின்றன.

எநத மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

6:42 AM, February 09, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

//அசுமையான // அருமையான என படிக்கவும்.

7:16 AM, February 09, 2007  
Blogger ஜோ/Joe said...

மிக நல்ல கருத்து!

6:43 PM, February 09, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நேசகுமார்,

கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் என்னைப்பொறுத்தவரையில் அற்பர்கள் (கருணாநிதி அற்பன் என்றால் ஜெயலலிதா மகா அல்பம்) ஆதாயத்திற்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள். விஸ்வ இந்து பரிஷத் மேடையில் ஏறி ஓட்டு கேட்ட அதே கருணாநிதி இந்து ஓட்டுவங்கி என்று ஒன்று இல்லை என்று தெரிந்தவுடன் இந்துக்களை திருடர்கள் என 'பொருள்' சொல்லவில்லையா? இதே அம்மாவை மிகவும் கேவலமாக கவர்ச்சி நடிகை என பேசினானே ஒரு 'நாய்'யனார் என்கிற பொறுக்கி ஞாபகம் இருக்கிறதா? நாளைக்கு கம்யூனிஸ்ட் மேடையில் 'நாய்'யனார் சொன்னதற்கும் கருணாநிதி ஆமாம் சாமி போடுவார். என்னைப் பொறுத்தவரையில் இந்துக்களாகிய நாம் சின்ன சிம்பாலிக் விசயங்களில் மிகவும் மகிழ்ந்து விடுகிறோம். கருணாநிதி பொண்டாட்டி சாய் பாபா காலில் விழுந்தால் மகிழ்ச்சி. அம்மாவை கருணாநிதி புகழ்ந்தால் மகிழ்ச்சி. ஜெயலலிதா கோவில்களில் சோறு போட்டால் மகிழ்ச்சி. ராகுல்காந்தி ஆமேதி சிவன் கோவிலில் சாமி கும்பிட்டால் மகிழ்ச்சி. பல்லில்லாத கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்ததால் மகிழ்ச்சி, (இதை வைத்து யாரையும் நாங்கள் அரெஸ்ட் செய்யவில்லை என்று ஜெயலலிதா கிறிஸ்தவ பிஷப்புகளிடம் மன்னிப்பு கேட்காத குறையாக வழிந்ததை மறந்து மகிழ்ச்சி) ஆனால் இதன் மறுபக்கம் என்ன? இந்து சமுதாயத்திற்கு இதனால் என்ன பயன்? பயனே இல்லாமல் இல்லை. ஆனால் சிறுபான்மை விரிவாதிக்க மதங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் ஆதிக்க advantages நமக்கு கிடைக்கிறதா? இத்தனை பாராட்டினார்களே சரி...தமிழ்நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கெல்லாம் மனநல பயிற்சியினை பாபா இயக்கத்தின் பொறுப்பில் விடுகிறோம் (ஏனெனில் அவர்களுக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு. ஒவ்வொரு வார இறுதியிலும் பாபாவின் சேவா இயக்க இளைஞர்கள் சிறைகளுக்கு சென்று கைதிகளுக்கு நல்ல ஆறுதலும் மனத்தெம்பையும் அளித்து வருகிறார்கள்.) என்றோ அல்லது புத்தரின் கொள்கைகளை பரப்ப மாதா அமிர்தானந்த மயி இயக்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஒரு இணைப்பை ஏற்படுத்துமா? ஆனால் ஜமாத் ஜமாத்தாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தமிழ்நாடு அரசு ஊக்கத்துடன் செயல்படுகிறது. மதானிக்கு ஆயில் மசாஜ், கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாதைகளுக்கு சிறையில் சலுகை, சிக்கன் சாப்பாடு, மீண்டும் தமிழ்நாட்டில் இஸ்லாமியபயங்கரவாதைகளின் செயல்பாடுகளுக்கு ஊக்கம், ஈவெரா படத்தில் இந்து தருமத்தை இழிவுபடுத்தும் பாடலுடன் காட்சிகள் அதற்கு இந்துக்களின் வரிப்பணத்திலிருந்து இலட்சங்கள். இத்தனையும் மறந்துவிட்டு கருணாநிதிக்கு ஏதோ புத்தி வந்து விட்டதாக இல்லாவிட்டால் அவர் மனதில் ஏதோ இந்து தருமத்திடமோ இந்து சமுதாயத்திடமோ பற்று இருப்பதாக எண்ண முடியவில்லை. ஒருவேளை போற வேளைக்கு புண்ணியம் என்று நினைத்து செய்யலாம். அல்லது இனி தான் செய்யப்போகிற ஒரு பெரிய துரோக செயலுக்கு முன்னதாக ஒரு அல்ப ஆறுதல் மருந்தாக இது இருக்கட்டும் (ஏனெனில் இந்துக்கள் அத்தகைய அல்ப ஆறுதல்களில் மனமகிழ்ந்து விடுகிறவர்கள் ஆச்சே) என நினைத்து செய்திருக்கலாம். கருணாநிதி ஜெயலலிதா கம்யூனிஸ்ட்கள் போன்ற அல்பங்களை ஒதுக்கிவிட்டு, வேண்டுமென்றால் பயன்படுத்திக்கொண்டு, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து முன்னேற்றுவதே நல்லது.

6:55 PM, February 09, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நேசகுமார் நான் சொல்வது தவறாக இருக்கவும் நீங்கள் சொல்வது சரியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது, அப்படி மட்டும் இருக்கும் என்றால் அதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

6:58 PM, February 09, 2007  
Anonymous Anonymous said...

இன்னா நைனா,

ஸின்மா பாக்றதில்ல?

அதான், என்னா படம் அது. நம்ம புர்ச்சி நடிகர் பார்த்திபன் இருக்காருல்ல, அவரு வந்து படா படா கசுமாலம்ங்கோ (அட, படத்திலயும்ங்கோ).

அந்தாளு கயில ராங்க் வச்சுக்க ஜெயில் வார்டன்கூட பயப்படுவாருங்கோ. ஆனா, எங்க அண்ணி சுகன்யா கீறாங்கள்ள அவங்க வந்தப்புறவுந்தாங்க கதையே பிகிலடிக்குது. அண்ணி வந்து சிஷ்டரா வாராங்க. சிஷ்டர்னாக்க அக்கா, தங்கச்சி சிஷ்டர் இல்லீங்கோ, இந்த சூப்பரா வெள்ள ட்ரெஸ் போட்டுக்கினு இந்த ஃபாதருங்கோ கூட சுத்துக்கினே இருப்பாங்கலே, அந்த சிஷ்டருங்கோ. ஃபாதர்னாக்க அப்பா இல்லீங்கோ அது வந்து.... சரி உடுங்க.

அந்த சிஷ்டர் வந்து நம்ம புர்ச்சி நடிகரை இம்ப்ரெஸ் பண்ணிர்ராங்கோ. ஆஆ, சொல்ல விட்டுப்போச்சுங்க. நம்ம பார்திபன் வந்து தூக்குத் தண்டனை கைதிங்கோ. கெட்டவனா வாய்ந்தேன், ஆனா நல்லாவனா பூட்டுக்கப் போறேன்னு அவர் சொல்றங்காட்டி எம் பொஞ்சாதிக்கு கண்ணுல ஒரே தண்ணிங்க. அட, கத உருக்கமா இருந்ததுன்னு இல்லீங்க. கஸ்மாலம், எங்க வெட்டிங்க் டேய் அன்னைக்கு இந்த கருமாந்திரத்த பாக்கவேண்டியிருக்கேன்னுட்டுதானுங்க.

அந்த வஜனத்தை கேட்ட சிஷ்டரும் ஒரு மாதிரி குல்ஸாய்ட்ராங்கோ. அப்புறம் பண்றாங்க பாருங்க ஒரு தியாகம். என்னா தியாகம்ங்கோ அது. பார்த்திபனுடைய நல்ல மனசு அவரு செத்தாலும் வாழனும்னுட்டு சொல்லி அம்மணி ட்ரெஸ்ஸ களட்டிற்றாருங்கோ. அய்யோ, சிஷ்டர் ட்ரெச்லேருந்து நல்ல துணி போட்டுக்கறத சொல்றேங்கோ. அப்புறம் அம்மணி வந்து பார்த்பனுக்கு ஒரு குளந்தையை பெத்துத் தாராங்க. அப்புறம், அந்த பையன் பெர்யாளாயி வலந்து தன்னோட நைனா யாருன்னு கண்டுபிடிக்கிற மாதிரி படம் போகுதுங்கோ. இதுதாங்க புர்ச்சி. இந்த மாதிரி குன்ஸா பொண்ணுங்க வந்து எங்கெலெல்லாம் ரச்சிக்கரது மாத்திரம் நெச்மாக்காண்டி இருந்ததுன்னு வச்சுக்கங்க, மவனே, அடிக்கடி உள்ள போயிருவேனுங்க. நம்ம சம்சாரத்துக்கும் இது பளகிப்போச்சுங்க.

நீங்க என்னடான்னா, பாபா பசங்களை அனுப்பனுங்கிறீங்க. என்னாத்துக்கு துண்ணூர கொடுத்து நம்ம தொளில நாஸம் பன்றதுக்கா? நாங்க சந்தோசமா ஜல்ஸா பன்றுது புடிக்கலையா?

இப்படிக்கு,

பிக்பாக்கட் பெந்தகோஸ்துசாமி

7:44 PM, February 09, 2007  
Anonymous Anonymous said...

அருமையான தலைப்பு,
அருமையான கட்டுரை.

3:39 AM, February 10, 2007  

Post a Comment

<< Home