Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

போதிசத்வ அம்பேத்கரின் சிந்தனைகள்

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் அந்த சமுதாய பெண்களின் முன்னேற்றமே.


மேல்சாதி என தம்மை கருதிக் கொள்ளும் ஹிந்துக்களுக்கு ஹிந்துத்துவம் எத்தனை உரிமையானதோ அதே போல ஒடுக்கப்பட்ட தீண்டப்படத்தகாதவர்கள் என கருதப்பட்ட ஹிந்துக்களுக்கும் ஹிந்துத்துவம் உரிமையானதுதான். ஹிந்துத்துவத்தின் வளர்ச்சிக்கும் மகோன்னதத்துக்கும் ஹிந்து சமுதாயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே கடமைப்பட்டிருக்கிறது. தீண்டப்படத்தகாதோர் என கருதப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த வான்மீகி முனிவரும், வியாதகீதையின் ஆசிரியரும், சொக்கமேளரும், ரோகிதாஸும் வசிஷ்டர் போன்ற பிராமம்ணர்களைப் போலவும், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்களைப் போலவும், ஹர்ஷர் போன்ற வைசியர்களைப் போலவும், துகாராம் போன்ற சூத்திரர்களைப் போலவும் ஹிந்துத்துவத்துக்கு பங்களித்திருக்கிறார்கள்....சித்நாக மகார் போல ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக போராடிய ஒடுக்கப்பட்ட சமுதாய வீரர்கள் ஏராளமானவர்கள். ஹிந்துத்துவத்தின் பெயரில் உருவாக்கப்படும் அந்த உன்னத திருக்கோவில் அதன் ஐஸ்வரியமும் வளமும் மெல்ல மெதுவாக எண்ணற்ற தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் தாழ்த்தப்படாத ஹிந்துக்களும் செய்த மகத்தான தியாகங்களால் உருவானதாகும். எனவே அது சாதி வேறுபாடற்று அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது. அதன் கதவுகள் அனைத்து ஹிந்து சமுதாயத்துக்கும் திறக்கப்பட வேண்டும்.



ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலையைக் குறித்து சிந்திக்கும் போது தேசத்தின் ஒட்டு மொத்த நலனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியத்தன்மையை அழித்துவிடும். இஸ்லாமுக்கு அவர்கள் மாறினால் இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கு துணை போய்விடுவார்கள். கிறிஸ்தவத்துக்கு மாறினால் கிறிஸ்வதர்களின் எண்ணிக்கை அதிகமாகி அன்னிய மேலாதிக்கம் இந்நாட்டில் வலுபட்டுவிடும்.

4 Comments:

Blogger சுழியம் said...

ஹிந்துத்துவத்தை அம்பேத்காரும், அம்பேத்காரை ஹிந்துத்துவமும் சீராட்டி வளர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அம்பேத்கார் ஜி இப்படிப் பேசி இருப்பது அவர் பெயரை உபயோகிப்பவர்களுக்குத் தெரியுமா ?

எந்தப் புத்தகம் இது ?

1:13 AM, April 14, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

1. நவம்பர் 13 1927 இல் அமரோதி எனும் இடத்தில் இந்திரா புவன் தியேட்டரில் ஆலய நுழைவு போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் அம்பேத்கர் பேசியது. தனஞ்சய் கீர் எழுதிய Dr. Ambedkar: life and mission நூலில் (1971 பதிப்பு) பக்கங்கள் 95-6 இல் உள்ளது.

2. டைம்ஸ் ஆஃப் இந்தியா , 24-7-1936

1:21 AM, April 14, 2010  
Blogger சுழியம் said...

நன்றி.

2:20 AM, April 14, 2010  
Blogger snkm said...

நன்றி! சரியான சமயத்தில் வலையுலகில் வெளியிட்டு உள்ளீர்கள்! இதை ஹிந்துக்கள் அனைவரும் உணர வேண்டும்! ஒன்று பட்டு உழைத்தால் அந்நிய சக்திகளை ஒடுக்க முடியும்! வாழ்க பாரதம்!

3:45 AM, April 14, 2010  

Post a Comment

<< Home