Tuesday, February 06, 2007

நாஸா கண்டுபிடித்த இராமர் பாலம்

அல்லது ஒரு தொன்மம் எப்படி அறியப்பட கூடாது?
2002 அக்டோபரில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்தின் திரேதா யுக காலத்துடன் ஒத்து போவதாகவும் கூறியது. பொதுவாக இவ்வாறு நம் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் அறிவியல் 'கண்டுபிடிப்புகள் ' உடனடியாக காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இன்று இத்தகைய காட்டூத்தீ பரவலுக்கு மூல காரணமாகவும் பரவும் ஊடகமாகவும் இணையம் இருந்து வருகிறது.


'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் ' செய்தி எங்கிருந்து பெறப்பட்டதென்பதை மிக சரியாக கூறமுடியாவிட்டாலும் நுறெ¢றுக்கு தொண்ணுெறு சதவிகிதம் இணையத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, 'இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ' என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் 'பாலத்தின் ' காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த 'தகவல் ' இந்த இடத்தில் நிலவி வரும் 'மர்மமான புராணக் கதையான இராமாயணம் ' ( 'mysterious legend ') நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் 'மர்மமான புராணக் கதை 'யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு நிலை பிறழ்ந்த மூளையில் உதித்த மோசடி வேலை.


உதாரணமாக எங்கள் ஊரில் 'தாடகை மலை' என ஒரு மலை உள்ளது. ஒரு பெண்ணின் வடிவம் கொண்ட மலை. இராமன் அம்பு எய்து கொன்ற தாடகை மலையாகி வீழ்ந்தாள் என பாட்டி சொல்லி கேட்டதுண்டு. ஒரு தொன்மம் நிலப்பரப்பின் இயற்கை அமைப்புகளுடன் எவ்விதத்தில் பொது பிரக்ஞையில் இயைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இராமாயணம் எந்த அளவு நம்மில் இரண்டற கலந்துள்ளது என்பதற்கான சான்றும் கூட. ஆனால் இங்கு நடத்தப்பட்ட நிலவியல் பரிசோதனைகளில் நிலத்து உயிர்ம சத்து (organic carbon content) சிறிது வேறுபடுகிறது என வைத்துக்கொள்வோம் அதைவைத்து இது தாடகையின் உடல் எனக் கூறினால் அது எந்த அளவு நம்மை நாமே அவமானப்படுத்தும் செயல் என நினைத்துப்பாருங்கள். அதே நேரத்தில் தொன்மம் பாரதமெங்கும் இத்தகைய புனித நிலப்பரப்புகளை (sacred landscapes என்போமா) உருவாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.


ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளன.


மேலே நீங்கள் பார்த்தது நாசா செயற்கை கோள் புகைப்படம காட்டும் அதே நிலப்பரப்பினை அதனைவிட தெளிவாக பாரத செயற்கை கோளான ரிசோர்ஸ்ஸாட் படமெடுத்துள்ளது. பால அமைப்பு பவளப்பாறைத் தொகுப்பேயன்றி அது மானுட உருவாக்கம் அல்ல என்பதனை இப்புகைப்படம் நிரூபிக்கிறது. (http://www.isro.org/pressrelease/ph2.jpg)
திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.


துரதிஷ்ட வசமாக இச் 'செய்தி 'யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது. இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகளின் வரலாற்றடிப்படை குறித்து பொதுவாக உண்மையாகவே இருக்க முடியும் என்பதே பல வரலாற்றறிஞர்களின் முடிவு. வேத காலத்திற்கு சற்று பின்னே இராமயணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும். வேத தொகுப்பிற்கு சற்று (சில நூற்றாண்டுகள்) பின்னாக இராமகாதை இயற்றலுக்கு சற்று முன்னதாக இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.


இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது.


'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'எனும் திருமந்திர வாசகத்தின் அறிவியல் பார்வை இவ்விஷயங்களில் சறுக்கி விழாமல் நம்மை வழிநடத்தட்டும். தொன்மங்கள் அக நிகழ்வுகளை விளக்கிடும் ஒரு மொழி அம்மொழி இம்மண்ணில் செம்மை அடைந்தது மட்டுமன்றி அதனை மேலும் மேலும் மெருகடைய செய்து அதனை ஒரு அறிவியல் துறையாகவே மாற்றியுள்ளது நம் மரபு. துரதிர்ஷ்டவசமாக பகுத்தறிவு என்னும் பெயரில் இந்த புராணமரபு உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி அதனை மரபு நீக்கம் செய்யவும் அது உண்மையான மரபல்ல எனக் கூறவும் காலனிய ஆதிக்க தாக்கம் பெற்ற 'பகுத்தறிவுவாதிகள்' முயன்றனர். இதே மனத்தாக்கத்தின் மற்றொரு விளைவே புராண மரபுகளுக்கு சரித்திர ஆதாரத்தினை தேடும் போக்கு. எனில் புராண நிகழ்வுகளுக்கு சரித்திர மையக்கரு இருந்திருப்பதே இயலாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. வரலாற்று மையமும் புராணத்துவ தன்மைகளுமாக இணைந்து பரிணமிக்கும் ஒரு ஜீவ இயக்கமாகவே புராணம் காணப்பட வேண்டும். ஒரு புராணத்தின் வரலாற்று கரு அறிவியலின் உரைகல்லில் தேய்த்துப்பார்த்தே அறியப்பட வேண்டும். அது ஒரு பிரித்துச் சேர்க்கப்படும் புதிரைப்போல மீள்-அமைக்கப்பட வேண்டும். மாறாக ஒரு காவியத்தின் புராணத்தன்மைக்கு அறிவியல் சான்று அளித்தல் என்பது 'முப்புரம் செற்றனன்' எனக் கூறும் மூடர்களின் செயல்.

16 Comments:

Anonymous Anonymous said...

ஏதோ போங்க நீலகண்டன்.....நம்பிக்கையால் ஆனது தான் மதம்....அதில் இந்த நம்பிக்கை சரி, அது தவறு என்று கூறுவது அவரவர் தனியுரிமை....இதற்கு மேல் எனக்கு உங்களைப்போல் எழுத தெரியவில்லை...

4:19 AM, February 06, 2007  
Blogger அருண்மொழி said...

வலைஉலக ஹரிஹரனுக்கு நம்பிக்கையின் காரணமாக ராமர் பாலம் கண்ணில் படலாம். ஆனால் ஒரு முன்னாள் முதல்வர் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்று அறிக்கை விடுவது......

5:22 AM, February 06, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அந்த இயற்கை அமைப்பு இடிபடக்கூடாது என்பதில் நானும் அக்கறை காட்டுகிறேன். அதனை இராமர் பாலம் என அழைக்கும் பாரம்பரியத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங், நாஸா என்றெல்லாம் கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையை, வக்கிரத்தைதான் கண்டிக்கிறேன். இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்திறே பெருநட்டம்.

6:50 AM, February 06, 2007  
Blogger நியோ / neo said...

அரவிந்தன்,

உங்களின் மற்ற கருத்துக்களோடு நான் ஒத்துப்போவதில்லை(பொதுவாக).

>> இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. >>

என்று தெரிவித்ததைப் பாராட்டுகிறேன்.

மேலும் >> வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்திறே பெருநட்டம். <<

தமிழர் கால்வாய் குறித்த விரிவான கட்டுரைகளை மறவன்புலவு க. சச்சிதானந்தன், 'காந்தளகம்' பதிப்பாளர் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்) - எழுதியுள்ளார். இங்கே படியுங்கள்.

சேதுக்கால்வாய் திட்டம் மூலமாக உயிரிவளம் பெருகுமே அல்லாது குறையாது - அழியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.

10:00 AM, February 06, 2007  
Blogger கால்கரி சிவா said...

//அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங், நாஸா என்றெல்லாம் கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையை, வக்கிரத்தைதான் கண்டிக்கிறேன்.//
நீல்ஸ், நானும் கண்டிக்கிறேன். இவர்கள் பிறகு நம் சரித்திரத்தை திரித்து எழுதினாலும் எழுதுவார்கள்

10:34 AM, February 06, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நியோ அக்கட்டுரையை படித்தேன். சுட்டிக்கு நன்றி. ஆனால் இன்றைய தேதியில் அங்கிருக்கும் உயிரிப்பன்மைக்குறித்து அங்கு வாழும் உயிரி இனங்கள் குறித்து அப்பகுதிக்கே உரித்தான அரிய இனங்கள் குறித்து ஏதேனும் தரவுகள் நமக்கு உண்டா? இல்லை என்றே நினைக்கிறேன். இதோ என் முன்னால் 688 பக்கங்கள் கொண்ட 'Flora of the Gulf of Mannar' கிடக்கிறது. Botanical survey of India வினால் 2001 இல் வெளியிடப்பட்டது. பவள அமைப்புகள் குலைக்கப்படுவது (இது சேதுசமுத்திர திட்டம் போல பெருமளவு அழிவல்ல...அத்துடன் ஒப்பிடுகையில் வெகு சாதாரணமானதுதான் என்பதனை கவனியுங்கள்) குறித்து அது என்ன சொல்கிறதென்றால், " பவள அமைப்புகளை க்வாரி செய்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட அந்த சட்டவிரோத காரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 250 க்யூபிக் மீட்டர் அளவு பவளப்பாறைகள் கூட நாளைக்கு நீக்கப்படுகின்றன. இது கடற்கரையோர நீர் சுழற்சிதன்மைகளை மாற்றிவிடும். இவற்றின் அழிவு கரைப்புற மணல் அரிப்பையும் அதிகப்படுத்தும்." படங்களுடன் கடல் அரிப்பின் தன்மையை இதுவிளக்குகிறது. தூக்கம் கண்ணைக்கட்டுவதாலும் இது தனிப்பதிவாக போடுதற்கு உரியது என்பதாலும் பின்னர் விரிவாக எழுதுகிறேன். தென்கிழக்கு ஆசியாவின் முதல் நீரிலமையும் உயிரிக்கோள காப்புமண்டலம் இப்பகுதியே என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். இதன் உயிரிபன்மையினை அறிவது குறித்தோ காப்பாற்றுவது குறித்தோ எவ்வித ஆர்வமும் இல்லை. டயர்களை போடலாம் இத்யாதி ...போடமாட்டார்கள் என்பது வேறுவிசயம்...ஆனால் அகழ்ந்தழிக்கப்படும் பன்னெடும் இலட்சக்கணக்கான ஆண்டு பவள அமைப்புகள் அழிவின் முன்னால் டயர்களை போட்டு -அதுவும் சேதாரமான பயன்படாத டயர்கள்தாம்-அல்லது பவளப்பாறைகள் மீண்டும் எழும் என்கிற வாதம். எழும்தான். ஆனால் பெட்ரோலும் டீசலும் இன்ன்பிற மாற்றங்களும் பெற்ற கடலின் தன்மைக்கு தகவமைந்து எழும். அதற்கும் அழிக்கப்பட்ட தொல்நெடுங்கால பரிணாம வரலாற்றெச்சங்களை தாங்கி நிற்கும் பவளப்பாறைகளை நாம் அலட்சியமாக அழித்தொழிக்க போவதற்குமான வேறுபாடு எத்தகையது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் உணரவேண்டுமென்பதில்லை.

10:54 AM, February 06, 2007  
Anonymous Anonymous said...

Srimath. Ramyanam is not purana. It is known as 'Ithihasam' The meaning of sanskrit 'Ithihasam' word means 'its happened'.
Another 'Ithihasam' is Srimath Mahabharatham
Hence, don't call Srimath Ramayanam as Puranam. Puaranam is different category.

5:44 PM, February 06, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன்,

ஜெ. அறிக்கை விட்டிருக்கும் இந்த நேரத்திற்குத் தேவையான உங்களது இந்தப் பழைய திண்ணைக் கட்டுரையை மீள் பதிவு செய்திருக்கிறீர்கள். Kudos to your alertness !

நாசாவை விட என் ஆர் எஸ் ஏ படம் துல்லியமாக உள்ளது என்பதைக் காணும்போது பெருமிதம் உண்டாகிறது. ஹைதராபாதில் உள்ள அவர்களது லேப் பற்றும் கட்டமைப்பு நிலையங்களை நேரில் உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். வழக்கமான அரசு அறிவியல் அமைப்புகளுக்கு உள்ள குறைகள் இருந்தாலும், அவர்களது சாதனைகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

// 'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'
எனும் திருமந்திர வாசகத்தின் அறிவியல் பார்வை இவ்விஷயங்களில் சறுக்கி விழாமல் நம்மை வழிநடத்தட்டும். //

இந்தத் திருமந்திர வரிகளுக்கு தத்துவ விளக்கம் தான் கேட்டிருக்கிறேன். அறிவியல் பார்வையில் விளக்கம் அருமை.

// தொன்மங்கள் அக நிகழ்வுகளை விளக்கிடும் ஒரு மொழி அம்மொழி இம்மண்ணில் செம்மை அடைந்தது மட்டுமன்றி அதனை மேலும் மேலும் மெருகடைய செய்து அதனை ஒரு அறிவியல் துறையாகவே மாற்றியுள்ளது நம் மரபு. துரதிர்ஷ்டவசமாக பகுத்தறிவு என்னும் பெயரில் இந்த புராணமரபு உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி அதனை மரபு நீக்கம் செய்யவும் அது உண்மையான மரபல்ல எனக் கூறவும் காலனிய ஆதிக்க தாக்கம் பெற்ற 'பகுத்தறிவுவாதிகள்' முயன்றனர். இதே மனத்தாக்கத்தின் மற்றொரு விளைவே புராண மரபுகளுக்கு சரித்திர ஆதாரத்தினை தேடும் போக்கு. //

துரதிர்ஷ்டவசமாக இந்தப் போக்கில் பல இந்து தர்ம ஆர்வலர்களும், சில இந்துத்துவ சிந்தனையாளர்களும் கூட சிக்கி விடுகின்றனர்.

// எனில் புராண நிகழ்வுகளுக்கு சரித்திர மையக்கரு இருந்திருப்பதே இயலாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. வரலாற்று மையமும் புராணத்துவ தன்மைகளுமாக இணைந்து பரிணமிக்கும் ஒரு ஜீவ இயக்கமாகவே புராணம் காணப்பட வேண்டும். //

மிகத் தெளிவான கூற்று. "Mahabharata - A Living Text" என்ற தலைப்பில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஆற்றிய உரையைப் போன வருடம் ஒரு கருத்தரங்கில் கேட்க நேர்ந்தது.. "ஜீவ இயக்கம்" என்பது அருமையான விளக்கம்.

// அது ஒரு பிரித்துச் சேர்க்கப்படும் புதிரைப்போல மீள்-அமைக்கப்பட வேண்டும். //

Jigsaw puzzle என்பதற்கு அழகிய தமிழ்ச்சொல்.

7:16 PM, February 07, 2007  
Anonymous Anonymous said...

From aasath

//அந்த இயற்கை அமைப்பு இடிபடக்கூடாது என்பதில் நானும் அக்கறை காட்டுகிறேன். அதனை இராமர் பாலம் என அழைக்கும் பாரம்பரியத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங், நாஸா என்றெல்லாம் கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையை, வக்கிரத்தைதான் கண்டிக்கிறேன். இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்திறே பெருநட்டம். //

Can you compare it with the demolization of Baber Masjith on Dec' 6t 1992 by the name of Fundamentalism .....

On 2003 Iraq war US barbarian army had demolished the Museum of Baghdhath (which include the third oldest Civilization marks). Did you gave any opposess

1:03 AM, February 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Babri structure is a man made structure made by an inhuman aggresor and its fall i see it as a moment of triumph by all humanist forces. I fully support the demolition of that structure. It is not barbarism. It is a victory for forces of humanism just as how fall of Berin wall was a moment of great rejoicing. Here i am concerned with loss of bio-diversity. So do not confuse issues. Yes I condemn the destruction of Baghdad museum.

1:35 AM, February 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஜடாயு தங்கள் வாசிப்பு மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது. நாஸாவின் புகைப்படம் மூலம் பொய்யை பரப்புவதைக் காட்டிலும் தம் தேச தொழில்நுட்பம் மூலம் அதன் உண்மையை அறிவது எனக்கும் தேசிய பெருமிதத்தை ஏற்படுத்தியது. அதே உணர்வு தங்களுக்கு ஏற்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. மேற்கில் 'Occum razor' போன்ற வழக்குகளை அறிவியல் தன்மையுடன் பார்ப்பதற்கு கூறுவார்கள். அது போல முக்கியமான அறிவியல் பார்வையை உணர்த்தி நிற்கும் சொல் திருமூலருடையது. இன்றைக்கும் விவிலிய-குரானிய புராணத்தன்மைகளை உண்மைத்தரவுகளாக கருதி அறிவியலுக்கு முட்டுக்கட்டை போடும் மதவெறி உலகில் திருமூலர் திருமொழி ஒளிவிளக்காக துலங்குகிறது. இதனை பிரபலப்படுத்த வேண்டியது தமிழ் இந்துக்களாகிய நமது கடமை. என் மன உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி.

1:41 AM, February 08, 2007  
Anonymous Anonymous said...

ஆழ்ந்ததொரு ஆராய்ச்சிக் கட்டுரை.தர்க்கத்துக்குரிய விசயங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.
நல்ல முயற்சி
நன்றி

2:05 AM, February 08, 2007  
Anonymous Anonymous said...

//Babri structure is a man made structure made by an inhuman aggresor and its fall i see it as a moment of triumph by all humanist forces. I fully support the demolition of that structure. It is not barbarism. It is a victory for forces of humanism just as how fall of Berin wall was a moment of great rejoicing.//

i am aasath:

So you always oppose the man-made items like all scientitific inventions which is used in our daily-life.
Are you support the destruction of Temples at India ...
Do you support only the humanitic nature. If ok. r u support the natural disorders ...
R u support SEZ instead of Agriculture. If no, agriculture is the deconstruction of nature. R u support ms swaminathan ...

Science and Spiritual hopes are 100% having different and opposes with them. But you need it to join with them and should invent anything as per your wishes for the proofs of Puraanaas. IThis view has refuse the growth of our art and literature also....

2:18 AM, February 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

I donot oppose Babri structure because it is man made but because it is anti-humanist and is the symbol of aggression.

2:23 AM, February 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி செல்லி. முதல் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும்.

4:15 AM, February 08, 2007  
Blogger PPattian said...

Comparing Berlin Wall and Babri Masjid is ridiculous. Berlin wall demolition united the nation Germany. Babri Masjid on the other hand divided the whole country and the after-effects are still felt in India and will never subside.

I feel if you look at the origin of each structure and demolish based on how it was built, you will have to demolish half the world. I hope you’ll rethink about that remark unless you are bigoted.

BTW, your article is very good and informative. Thanks.

3:09 PM, May 31, 2007  

Post a Comment

<< Home