Wednesday, February 14, 2007

டீச்சர் இவன் என்னை கிள்றான்

தெளிவாகவே சொல்கிறேன் இது ஏதோ ஒரு பதிவர் குறித்து கிடையாது. திருவாளர். 'திரு'வைக் குறித்த பதிவுதான் இது. இன்னும் சொல்ல போனால் அன்னாரின் நேர்மையைக் (திருவோட நேர்மை அப்படீங்கிறது சூடான ஐஸ்க்ரீம் அப்படீங்கிற மாதிரு ஒரு விஷயம் இது) குறித்த பதிவு. இப்போது திரு பகன்றிருக்கிறார்: "டீச்சர் இவன் என்னை கிள்றான்' ஒண்ணாங்கிளாயில் கேட்க வேண்டிய குரலை தமிழ்மண திரட்டியில் கேட்க வேண்டியிருப்பது தலை எழுத்து. சரி அப்படி என்ன விசயம்.


அன்னார் சொல்கிறார்: "பார்ப்பனீயம் செய்த கொடுங்கோன்மையை எனது வலைப்பதிவில் பதிவு செய்வதால் கடந்த சில நாட்களாக ஒருவர் தனது வலைப்பதிவில் தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார். அய்யாவழி, அய்யன்காளி, திருவிதாங்கூரில் பார்ப்பனீய, இந்துத்துவ கொடுங்கோன்மை பற்றிய எனது கட்டுரைகளுக்கு எதிர்கட்டுரை என்ற பெயரில் charecter assasination செய்வதை மட்டுமே குறிக்கோளாக இருக்கிற இவர்களுக்கு பதில் சொல்தில்லை. அதே வேளை தனிப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறேன்."


ஐயா காமெடி பண்றீங்க சாமி!
எப்படி நான் character assasination செய்தேனாம்! அய்யா வைகுண்டரை குறித்து திருவாளர். கேரக்டர் சொன்ன தகவல்களில் மறைத்த தகவல்கள் என்ன? அவர் அய்யா வழியே இந்து தருமத்திலிருந்து புறம்பானது என்றாரே எதன் அடிப்படையில்? அய்யா வைகுண்டர் மதமாற்றத்தினை எதிர்த்தாரே அதை குறித்து கூறினாரா? அய்யா வைகுண்டருக்கு எதிராக கிறிஸ்தவமிசிநரிகள் பொய் பிரச்சாரம் செய்தார்களே அதனை கூறினாரா? அய்யா வைகுண்டர் நால்வேத மறைபொருளாக தன்னைக் கூறியதை கூறினாரா? அல்லது அய்யா வைகுண்டர் வழியில் சாதீய தீமையை இந்து புராண அரக்கர்களுடன் ஒப்பிட்டு கூறப்படுவதை கூறினாரா? இத்தனையும் மறைத்து திரித்து கூறிக்கொண்டிருப்பவரை நான் நேர்மையற்றவர் என்று கூட கூறவில்லை 'எனது பார்வையில் நேர்மையற்றவர்' என்று கூறியவுடன் ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது மனுசனுக்கு,
சாப்பாட்டில் சோடியம் க்ளோரைட் சேர்க்கிறவராக இருந்தால் என்ன செய்திருக்க வேணும்? அரவிந்தன் நீலகண்டன் சொல்வது பொய். அய்யா வைகுண்டர் அப்படியெல்லாம் சொல்லவில்லை என நிரூபித்திருக்க வேண்டியதுதானே. சரி அதுதான் போகட்டும் குறைந்த பட்சம் அரவிந்தன் நீலகண்டன் சாதீய கொடுமைகளை மறைத்து அவர் மதமாற்றத்தை எதிர்ப்பதை மட்டும்தான் பிரதானப்படுத்தியிருக்கிறானா? இதோ நான் எழுதியிருப்பதை பாருங்கள். மேல்சாதி கொடுமைகளை சொல்லுமிடத்து:
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி'
எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.
என்றுதான் கூறியிருக்கிறேன். இதில் எங்கையா இருக்கிறது பார்ப்பனீயமோ இதர ஈயங்களோ?


சரி அய்யன் காளி விசயம் எப்படி?
அய்யன் காளிக்கு ஒரு நாயர் அன்றைய சூழலில் தன் சொந்த சாதியினரையும் எதிர்த்து நிலம் கொடுக்கிறாரே அது குறித்து ஏன் திரு சொல்லாமல் விட்டார். அய்யன்காளி குறித்த எனது கட்டுரையை பார்க்கவும். அதில் சமுதாய நல்லிணக்க தரவுகளையும் மறைத்திடவில்லை. அது போலவே சாதீயக் கொடுமைகளையும் மறைத்திடவில்லை. ஏன் டாக்டர் மிச்சேல் போன்றவர்களின் நல்-உளத்தையும் தீரத்தையும் கூட மறைத்திடவில்லை. ஆனால் திருவின் நேர்மை எப்படிப்பட்டது? இத்தனைக்கும் நான் மேலேகூறிய செய்தி திரு தந்துள்ள அம்பேத்கர் இணையதளத்தில் உண்டு. (சுட்டியை உரலை தராமல் அம்பேத்கர் இணையதளம் என பொத்தாம் பொதுவாக தந்திருந்தார் திரு. நேர்மை ஐயா நேர்மை. சின்ன சின்ன விசயத்தில் கூட நேர்மை வழிந்து ஓடுகிறது.
"Ayyan had a benevolent landlord in Govinda Pillai. The landlord cleared jungles to make fields with the help of Ayyan. Later he gifted a small plot to Ayyan. Land owned by a Pulayan created unease among the landed. Ayyankali grew up to be a tall, well built and handsome young man. He was known for his physical prowess and proficiency in martial arts. He was playing football with children of his age when the ball kicked by Ayyankali fell on the roof of a Nair house. The Nair warned him not to play with upper caste young men."
(http://www.ambedkar.org/books/AYYAN-KALI.htm)
இதில் ஒரு விசயத்தை விட்டு மற்றொரு விசயத்தை மட்டும் சொல்லுகிற புத்திக்கு பெயர் என்ன நேர்மையா? நேர்மையின்மையா?


 • இது நேர்மையாளர் திருவின் பதிவு அய்யா வைகுண்டர் குறித்து:
 • http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_23.html
 • இது பாசிச பொய்யன் அரவிந்தன் நீலகண்டனின் பதிவு அய்யா வைகுண்டர் குறித்து:
 • http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_116947475031872823.html
 • இது திருவாளர் நேர்மையின் ஓநாய் அழுகை பதிவு :
 • இங்கே
 • இது தனிமனித தாக்குதல்களும் கேரக்டர் அசாசினேஷனும் கொண்ட பாசிச அரவிந்தனின் பதில் பதிவு:
 • இங்கே
 • இது அய்யன் காளி குறித்து திருவாளர் நேர்மையின் பதிவு
 • இங்கே
 • இது பாசிச அரவிந்தனின் பதிவு அய்யன் காளி குறித்து:
 • இங்கே

இரண்டில் எதில் தரவுகள் அதிகம் எதில் வெறும் வெற்று தாக்குதல்களும் பிரச்சார வெத்து வேட்டுத்தனமும் அதிகம் என்பதனை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.


ஆக நான் சொல்றது என்னன்னா திரு மாதிரி 'நேர்மையான' ஆசாமிங்க கொஞ்சம் விசயங்கள நல்லா தெரிஞ்சிகிட்டு பிறகு பதிவு போடுறது நலம். இல்லன்னா கேள்வி கேக்கத்தான் செய்வோம். கேள்வி காட்டமாத்தான் இருக்கும். பிறகு திருதிருன்னு முழிச்சு கிட்டு தமிழ்மணத்துல போயி 'டீச்சர் டீச்சர் இவன் என்ன கிள்றான் டீச்சர் இவன் என்ன நுள்றான் டீச்சர்' அப்படீன்னு ஒண்ணாங்கிளாயி பசங்கள விட கேவலமா நிக்க வேண்டியிருக்கும். கொஞ்சமெல்லாம் வளர டிரை பண்ணுங்களேன் சார்.

19 Comments:

Anonymous Anonymous said...

ரொம்ப கிள்ளாதீங்க. வலிக்குது. அழுதுடுவேன் ஆமா..

11:04 AM, February 14, 2007  
Anonymous Anonymous said...

என்னை கிள்ளுவதை கூட பொறுத்துகொள்வேன்.என்னை மன்றத்தில் அம்பலப்படுத்துவதை பொறுத்து கொள்ளவே முடியாது. வேணாம் இந்த ஒரு தடவை விட்டிருங்க. அடுத்த தரத்திலிருந்து அய்யன் காளியையும், அய்யா வைகுந்தரையும் இந்துத்வா பாசிஸ்டு பட்டியலில் சேர்த்துவிடுகிறேன்.இந்த ஒரு தடவை விட்டுருங்க..ப்ளீஸ்

11:06 AM, February 14, 2007  
Anonymous Anonymous said...

நேர்மை எனக்கு மட்டுமா? எங்க கூட்டத்துக்கே கிடையாதே. அப்படின்னு சொல்லுவார் அவர்.

11:29 AM, February 14, 2007  
Anonymous Anonymous said...

மச்சான் திரு, 'டேய் பாப்பான்' என்று சவுண்ட் கொடுத்தாலே அடங்குற கம்மனாட்டிங்க விளையாடுறானுங்க. நம்ம ஸ்கட் மிசைல் போலிய எடுத்து உடு தலை.

3:34 PM, February 14, 2007  
Anonymous Anonymous said...

அவரு என்ன தான் எழுதினாலும் 100 வார்த்தைக்கும் 80 வார்த்தை பார்பாணியம் ஆதிக்கம் அடக்கு முறைன்னு ஏதாயச்சும் எழுதி பினாத்திகிட்டு இருப்பாரு.நீங்க கலக்குங்க தல

3:56 PM, February 14, 2007  
Blogger Amar said...

ஹும்ம்ம்....பார்க்கலாம் பதில் சொல்கிறாரா இல்லை மறுபடியும் டீச்சர் இவன் என்னை கிள்றான்ன்னு ஆரம்பிக்கிறாரான்னு.

6:58 PM, February 14, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாங்க சமுத்ரா நல்லா இருக்கீங்களா? முதமுதலா நம்ம இடத்துக்கு வந்துருக்கீங்க. ஊரெல்லாம் நல்லா இருக்கா? நாடு கடத்துனதா கேள்விப்பட்டேன். திரு வை பொறுத்தவரை ஒரே விசயம் சூடு சொரணை இல்லாம கதை விடுறதுதான்.

7:17 PM, February 14, 2007  
Anonymous Anonymous said...

அங்க பார்த்தீங்களா, பலமான கும்மி நடக்கிறது....கேவி, மருந்து, மாயம் எல்லாரும் வந்து கேவி-கேவி அழுது ஓப்பாரி வைப்பதை....யாரும் என்ன தவரென்று கேட்கவில்லை.....எங்கு தவரென்று கேட்கவில்லை.....

10:25 PM, February 14, 2007  
Anonymous Anonymous said...

எனக்கு தெரிஞ்சு இந்த பதிவில் ஒரே ஒரு பின்னூட்டம் தான் அடுத்தவர் போடது. மீதி எல்லாமே தலை நீல கண்டமே போட்டது. இப்போ நான் போடுவது இரண்டாவது.

2:59 AM, February 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அப்படியா அனானி? இப்படித்தான் உங்க பின்னூட்டங்களை உண்டாக்கிட்டிருக்கீங்களா?

3:28 AM, February 15, 2007  
Anonymous Anonymous said...

naan kadantha irandu natkalaagathaan ungal ungal iruvarin pathivugalai padikkiren. thiruvin munthaya pathivugalil naermai irukkiratho illayo, ungalathu pathivugalil porumai illai.

10:52 AM, February 15, 2007  
Blogger bala said...

//திரு வை பொறுத்தவரை ஒரே விசயம் சூடு சொரணை இல்லாம கதை விடுறதுதான்.//

நீலகண்டன் அய்யா,
நம்ம திரு அய்யா சொன்ன "உண்மையான போகியும்,உண்மையான பூனையும்" கதை கேட்டீங்களா?ரொம்ப உண்ர்ச்சிகரமா சொல்லியிருப்பாரு.இப்ப கூட அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்துக்கிட்டே,தன் தலைவன் காட்டிய வழியில்,உண்மையான போகியையும்,உண்மையான பூனையும் தேடி கண்டுபிடிக்க பயணம் செய்யறாரு.அவருக்கு ஒரு குழந்தை மாதிரி மனசு.அதனாலத் தான் ,பக்கத்து சீட் பையன்கிட்ட பலப்பம் திருடி விட்டு,"டீச்சர் பலப்பம் திருடிட்டான்"ன்னு ஒப்பாரி வைக்கறாரு.நிசத்தை சொல்லணும்னா,நம்ம திரு அய்யா தான் உண்மையான பூனை;அவர் செய்வது தான் உண்மையான போகி.

பாலா

7:29 PM, February 15, 2007  
Blogger ஐயன் காளி said...

naan kadantha irandu natkalaagathaan ungal ungal iruvarin pathivugalai padikkiren. thiruvin munthaya pathivugalil naermai irukkiratho illayo, ungalathu pathivugalil porumai illai.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகுது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

1:09 AM, February 16, 2007  
Blogger உடைப்பு.Sri Rangan said...

//நீலகண்டன் அய்யா,
நம்ம திரு அய்யா சொன்ன "உண்மையான போகியும்,உண்மையான பூனையும்" கதை கேட்டீங்களா?ரொம்ப உண்ர்ச்சிகரமா சொல்லியிருப்பாரு.இப்ப கூட அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்துக்கிட்டே,தன் தலைவன் காட்டிய வழியில்,உண்மையான போகியையும்,உண்மையான பூனையும் தேடி கண்டுபிடிக்க பயணம் செய்யறாரு.அவருக்கு ஒரு குழந்தை மாதிரி மனசு.அதனாலத் தான் ,பக்கத்து சீட் பையன்கிட்ட பலப்பம் திருடி விட்டு,"டீச்சர் பலப்பம் திருடிட்டான்"ன்னு ஒப்பாரி வைக்கறாரு.நிசத்தை சொல்லணும்னா,நம்ம திரு அய்யா தான் உண்மையான பூனை;அவர் செய்வது தான் உண்மையான போகி.//


"சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!"

-இதுவும் உங்கள் சுப்பிரமண்யன் பாடியதுதான்.

8:45 AM, February 16, 2007  
Blogger வஜ்ரா said...

ஆனா ஒண்ணு,

நீங்க சொல்லியிருக்காட்டி நெசமாலுமே ஐயன் காளி போன்றவர்கள் இந்து மத எதிரிகள் என்ற எண்ணத்தில் தான் நான் இருந்திருப்பேன்.

8:46 AM, February 16, 2007  
Anonymous Anonymous said...

இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் அரவிந்த நீலகண்டன் அவர்களுக்கு,
சமூக நீதிக்காக நீங்கள் எழுதும் பதிவுகளை பார்த்து வருகிறேன். குறிப்பாக இந்து மதத்தினர்கள் பொதுவாக பின்பற்றி வரும் ஜாதி அவலங்களுக்கு எதிராக நீங்கள் உணர்ச்சி பூர்ணமாக எழுதும் பதிவுகளை பார்க்கும் போது, ஜாதி வெறியை வெறுக்க கூடியவராக உணர முடிகிறது. ஆனால் இப்படிபட்ட ஜாதி வெறுக்கும் பரந்த மனமுடையவராக பரிணமிக்கும் நீங்கள் இஸ்லாமிய, கிருஸ்துவர்களை வெறுக்கும் இனவெறியராக பிரதிபதிலிப்பது ஏன் என்ற கேள்வி என்னுள் பலமுறை எழுந்ததுண்டு. இதற்கு தாங்கள் இந்து அல்லாதோரை வேறோடும் வேறடி மண்ணோடும் கருவருக்க திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் இனவெறி இயக்கமான RSSன் அங்கத்தினராக தாங்கள் இருப்பாதாலோ? உங்களது ஜாதிக்கெதிரான வெறுப்புணர்வும் கூட ஒரு நாடகமோ என்ற சந்தேகம் 14-2-2007 தேதியிட்ட திருநெல்வேலி பதிப்புர தமிழ் முரசு மாலை நாளிதழை பார்த்த போது தோன்றுகிறது. அந்த நாளிதழ் செய்தி என்னவென்றால்,12-2-2007 தேதி அலகாபாத்தில் சர்வதேச இந்துக்கள் மாநாடு RSS ஆல் நடைபெற்றதாகவும், அதில் தலித்துக்களை கோயிலுக்குள் அனுமதிப்பது குறித்து முக்கிய தீர்மானம் இயற்றப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது. (நாள் கடந்த ஞானதோயமானாலும், மனமாற்றத்தால் ஏற்படருந்தால் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால், அடுத்து வருகிற செய்தி தான் இது ஒரு தற்காலிக நாடகமோ? என்னும் ஐயத்தை எழச் செய்கிறது. அந்த மாநாட்டில் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்னவென்றால், "ஒற்றுமையான இந்து தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்து மதத்திலுள்ள ஜாதி பிரிவினையை ஒதுக்கி வைக்க வேண்டும்". ஒதுக்கி வைக்க செல்லும் இவர்களால் ஏன் இந்து மதத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்ற மனம் வரவில்லை. ஜாதி என்பது இந்து சமுதாயத்தின் புற்று நோயல்லவா? அதை முற்றிலும் நீக்கபட வேண்டும் என்ற முயற்ச்சி தான் உண்மையான மனமாற்றத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியும். "ஒதுக்கி வைக்க வேண்டும்" என்பது தற்காலிகமாக வீரியத்தை குறைத்து வைத்து விட்டு தனது திட்டம் (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் இல்லாத இந்து தேசம் உருவாக்கபட வேண்டும் என்னும் இனவெறியுடைய பகல் கனவு) நிறைவேறிய பிறகு மீண்டும் ஜாதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற ரகசிய திட்டத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 2% ஆரிய வந்தேறிகளால் 25% இஸ்லாமியர்களையும் 12% கிருஸ்துவர்களையும் இந்தியாவிலிருந்து துடைத்தெறிய முடியாது. அப்படி துடைத்தெறிய, கீழ் ஜாதி என்று ஆரிய வந்தேறிகளால் சித்தரிக்கப்பட்ட பெரும்பான்மை இந்துக்களுடைய ஆதரவு பெறப்பட வேண்டும். அதே நேரத்தில் பிறப்பால் உயர்ந்தவன் என்னும் தனது இனவெறியையும் முழுமையாக துடைத்தெறியவும் இந்த ஜாதி வெறியர்களால் முடியவில்லை என்பதால் தற்காலிகமாக ஒரு போலி சமூகத்துவத்தை காட்டிடும் முயற்சியாக தான் "ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறுகிறார்கள்.
எனவே ஜாதிக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பது உண்மையானால் RSSலிருந்து வெளியேறி ஒரு சமானிய இந்துவாக இனவெறி RSSன் இரகசிய திட்டத்தை அம்பலபடுத்த முடியுமா? சகோதரர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களே!
அன்புடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

12:10 PM, February 16, 2007  
Anonymous Anonymous said...

எல்லாம் வல்ல இறைவன் தென்னாடுடைய சிவன் நாமத்தினை ஜபித்து எழுதுகிறேன். இந்த நைனா முகம்மது பின்னூட்டம் கண்டதுமே நான் ஆர் எஸ் எஸில் இணையப் போகிறேன் என்று முடிவெடுத்துவிட்டேன்.

எவ்வளவுக்கெவ்வளவு ஒரு இயக்கத்தின் மேல் கழிசடைகள் தூற்றுகள் வாரி இரைக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்த இயக்கம் சரியான பாதையில் போகிறது என்பது இவர்கள் லாஜிக்கையே இவர்களுக்கு அப்ப்ளை செய்யும் போது எனக்கு தெரிந்ததால் நான் RSS ல் சேரப் போவது உறுதியாகிறது.

25% இஸ்லாமியர்களா ? இன்னும் 15% கூடுதலாக இருந்தால் போதும் எந்த மானிலத்தில் அதிகம் இருக்கிறார்களோ அந்த மானிலத்தில் ஷரியா, பிறகு அந்த மானிலம் தனி நாடாக்கும் கோரிக்கை வைக்கும் தேச துரோக கும்பல். இஸ்லாமியர் பற்றி உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு கருத்து வலுப்பெற்று வருகிறது. அதை உண்மையாக்கும் விதத்தில் நிறையவே நடக்கிறது. ஆகவே தன் அழிவை நோக்கி தானே செல்லும் ஒரு மதம், இன்றைய இஸ்லாம். அது இந்தியாவிலும் சரி. இந்த 25% பேர் ஆதாயம் இல்லை இனி என்று தெரிந்தவுடன் வேறு மதத்திற்குச் சென்றுவிடுவர். அதுவரை இந்த அடிப்படைவாத இஸ்லாம் இவர்கள் மண்டையில் ஏறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

12% கிருத்தவர்களா ? 2% என்று சொல்லி மைனாரிட்டி அந்தஸ்து அனுபவிக்கும் குள்ள நரிக்கள், இந்துக்கள் கோவில் பணத்தை இந்துக்களை மதம் மாற்றுவதற்கென்றே பயன் படுத்தும் sadist கள். சாதிப் பெயரைச் சொல்லி மதம் மாற்றி, அதே சாதியை வைத்து தனித் தேவாலயங்கள் கட்டிக் கொடுக்கும் polished சாதிக் கொடுமை செய்யும் மதம், இந்தியக் கிருத்தவம்.

9:33 AM, February 17, 2007  
Blogger தகட்டூரான் said...

நெய்னா முகமது சொல்வது போல ஆர் எஸ் எஸ் - ல் எந்த இரகசிய திட்டமும் கிடையாது. அனானிமஸ் ஆர் எஸ் எஸ் - ல் இணைவதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இங்கு எந்த மத எதிர்ப்பு விசயங்களும் இல்லை.

ஆர் எஸ் எஸ் இப்படித்தான் சொல்கிறது:


எப்படி மலேசிய நாட்டில் தோன்றிய இனம் மலாய் இனமோ, கிரேக்கத்தில் தோன்றிய இனம் கிரேக்க இனமோ, அது போல இந்தியாவில் தோன்றிய இனம் இந்து இனம். இந்த தன்மை இந்து தன்மை. இந்த வாழ்க்கை முறை இந்து வாழ்க்கை முறை. இங்குள்ள கிருத்துவனும் முஸ்லிமும் இந்தியர்கள். ஆனால் அவர்கள் தழுவும் மதம் வெளிநாட்டு மதம். விதேசி மதம். விதேசி மதத்தை தழுவியதாலேயே அவர்கள் வேறு மக்கள் அல்ல. அதாவது, ஒரு ஹிந்துவின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும், இங்குள்ள கிருத்துவரின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும், ஒரு முஸ்லிமின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும் சகோதரர்களே.இந்தியர் எம்மதத்தினராக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தை, இந்திய வாழ்க்கை முறையை, இந்திய குடும்ப அமைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியனாக வாழ வேண்டியது அவசியம். அதாவது இஸ்லாம் மார்க்கத்தையோ, கிருத்துவ மார்க்கத்தையோ, சன்மார்க்கத்தையோ, சக மார்க்கத்தையோ இன்னும் இன்னபிற மார்க்கத்தையோ தழுவும் எந்த ஒரு இந்தியரும் அடிப்படையில் இந்துவே.அவர்கள் இந்திய கலாச்சாரத்தை, இறையாண்மையை, வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டு இந்துவாக வாழ்வதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

10:51 AM, February 24, 2007  
Anonymous Anonymous said...

//12% கிருத்தவர்களா ? 2% என்று சொல்லி மைனாரிட்டி அந்தஸ்து அனுபவிக்கும் குள்ள நரிக்கள், இந்துக்கள் கோவில் பணத்தை இந்துக்களை மதம் மாற்றுவதற்கென்றே பயன் படுத்தும் sadist கள். சாதிப் பெயரைச் சொல்லி மதம் மாற்றி, அதே சாதியை வைத்து தனித் தேவாலயங்கள் கட்டிக் கொடுக்கும் polished சாதிக் கொடுமை செய்யும் மதம், இந்தியக் கிருத்தவம்.
//

சரியான சவுக்கடி !!! இதர்க்கு னேரடியான பதில் சொல்வதர்க்கு இவர்கலுக்கு துப்பு இருக்கா ????

6:20 AM, April 19, 2007  

Post a Comment

<< Home