Friday, February 16, 2007

ஹிட்லரும் குஜராத் பாடநூலும்


நண்பன் எனும் பதிவர் அதிசயிக்க வைக்கும் நண்பர் (சும்மா பேச்சுக்கு சொன்னேன் அந்த நல்ல மனுசனுக்கு யாராவது ஆப்பு வச்சிராதீங்கடே). ஆழமான வாசிப்பு உடைய சகோதரர். அவரது பதிவுகளை ஏற்காவிட்டாலும் கூட அதில் காணப்படும் வாதங்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும். பின்நவீனத்துவம் பேசுபவருக்கு இத்தனை தெளிவா என்று வியக்க வைக்கும். :) ஆனால் அவரது அண்மை பதிவு ஏமாற்றமடைய வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த பதிவின் வரிகளை நண்பன் எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லடியாரே எழுதியிருக்கலாம் அல்லது சுவனப்பிரியன் (சாரி சுவனப்பிரியன் தேவையில்லாம வம்புக்கிழுக்கிறேன்னு நினைக்காதீங்க. ஆனா உண்மை எதுன்னு கொஞ்சம் கூட ஆராயாமல் - குறைந்த பட்சம் நடுநிலைப்பள்ளி அட்லஸைக் கூட பார்க்காமல் காபா நிலநடுக்கோட்டுக்கு அருகாமையில் இருக்குதுன்னு நீங்க சொன்ன மாதிரிப்பட்ட சமாச்சாரம்தான் இதுவும்.) இன்னொரு சாரி விசயத்துக்கு வராம சூடடிக்கிற புத்திக்கு. சரி விசயத்துக்கு வாரேன். எதுவானாலும் நண்பர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அதற்கு அவரும் சரி அதன் பின்னர் நல்லடியாரும் சரி முன்-வைத்திருக்கிற ஆதாரங்களையும் பார்க்கலாம்.


ஆதாரங்களின் அணிவகுப்பு


நண்பன் ஆதார பூர்வ தொனியுடன் உரைக்கிறார்: "குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதே ஹிட்லருக்குத் தான் கூட்டமாகக் கூடி பஜன் பாடினர் என்பது பத்திரிக்கைகளில் வந்த செய்தி." அவர் மேலும் கூறுகிறார்: "அத்துடன் நாஜிக்களின் சின்னமான ஸ்வதிக்காவை தடை செய்ய ஜெர்மன் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக கூக்குரலிடும் - இந்த neo-nazi அமைப்புகளுக்கும் ஒரு நகல் அனுப்பி வையுங்கள்."


(உரல்:http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_15.html)


ஹிட்லருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூட்டமாக கூடி குஜராத்தில் பஜனை பாடினார்களா? அது செய்தியாக பத்திரிகையில் வந்துள்ளதா? உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. எனவே நான் நண்பனிடம் ஆதாரம் கேட்டேன். நண்பன் அப்போது அவர் கைவசம் இருந்த ஆதாரம் என ஒரு சுட்டியை அளித்து பின்வரும் பதிலையும் கூறியிருந்தார்.


Gulf Newsன் இந்திய செய்திப் பக்கத்தில், 2005 ஆம் ஆண்டு படித்தது. (நவம்பர் / டிசம்பர் மாதம்). பின்னர் இந்தியாவில் இருந்து வெளியாகும் ஒரு இஸ்லாமிய இதழிலும் இது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களாகி விட்டதால், இது குறித்து தேடுவதற்கும் நேரம் தேவைப் படுகிறது. ஆனால், அதைவிட, படுசுவராஸ்யமான, 'போற்றிப் புகழ்பாடுதலை' விட மோசமான குற்றச்சாட்டுகள் - குஜராத் பாட புத்தகங்களில் ஹிட்லரின் புகழ் எவ்வாறு பாடப்படுகிறது; காந்தியின் மரணம் குறித்து அந்தப் பாடபுத்தகங்கள் எவ்வாறு மௌனம் சாதிக்கின்றன என்பதைப் பற்றிய விரிவான வாதங்கள் இருக்கின்றன. அதை மறுத்தும் வாதங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை. ஆனால், மிகப் பலவீனமான, இப்படி இல்லை, அப்படி, ஏன் எங்களை மட்டும் கடிந்து கொள்கிறீர்கள் - ஸ்டாலின், மா, இவர்களின் புகழ் பாடும் சோஷலிஸ வாதிகளான, நேரு, கம்யூனிஸ்ட்கள் இவர்களையெல்லாம் ஏன் கேள்வி கேட்கவில்லை என்றெல்லாம் வாதம் போகிறது. தற்சமயத்திற்கு இவற்றைப் படித்துப் பாருங்கள். நான் வாசித்த செய்தியை (Gulf Newsn பழைய செய்தித் தாள் / அந்த இஸ்லாமிய இதழ் கிடைக்குமா என முயற்சிக்கிறேன்.)


அவர் கொடுத்த சுட்டி: http://www.dialognow.org/node/view/1148


பழைய நண்பர் நல்லடியார் பிரசன்னமாகி என்னை ஒரு பிடி பிடித்தார்:


2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மோடி அரசிற்குட்பட்ட குஜராத் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட பாடபுத்தகங்களில் ஹிட்லரைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாடங்களை நீக்கச் சொல்லியதற்கு முரளி மனோஹர் ஜோஷி (டடீண்டு அல்ல!:-) அவற்றில் தவறேதுமில்லை என்று பாராளுமன்றத்தில் கூறினார்.
http://www.indowindow.net/akhbar/article.php?article=107&category=7&issue=17
http://humanrightsindia.blogspot.com/2005/11/government-acts-but-just-not-enough.html
சங்பரிவார கல்வியாளர்களின் ஹிட்லர் ஆதவுக்கும் அவற்றை பள்ளிப்பாடங்களில் புகழ்ந்து எழுதியதற்கும் இந்திய இஸ்ரேல் தூதரகம் எதிர்ப்புகளைத் தெரிவித்தையும் நீல்கண்டன் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிடலர் அபிமானம் பற்றி நீலகண்டன் உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறாரா?


ஒரு அனானி தோன்றி பிபிசி உரல் ஒன்றை அளித்தார்: http://news.bbc.co.uk/2/hi/south_asia/4711475.stm


வலுவான ஆதாரங்கள் தான் இல்லையா?

ஆதாரங்களை உண்மையுடன் உரசிப் பார்ப்போம்


நண்பன் கூறும் சுட்டி ஒரு விவாத இழையுடையது. அதில் கபீர் என்பவர் கூறுகிறார்: "Modi had extolled the virtues of Hitler and glory of Nazism in Gujarati text books." இதற்கு படேல் என்பவர் பதிலளிக்கையில்: ""Modi had extolled the virtues of Hitler and glory of Nazism in Gujarati text books. At the commencement of the current academic year he quietly dropped all such laudatory references in the new editions without any fuss." என்று கபீர் காட்டிய அதே செய்தி குறிப்பிடுவதாக கூறுகிறார். (இருவருமே செய்தியின் மூலத்தை தந்ததாக தெரியவில்லை). அடுத்ததாக கபீர் பாடநூலின் பகுதியை முன்வைக்கிறார்:"You will find it interesting to read Chapter 6. "Be Vishvayuddho Vacchenun Vishva" and therein, pages: 63 to 68 dealing with Fascism, Nazism, Mussolini and Hitler." (ஆனால் என்ன எனக்கு இதை படிக்கும் போது ஒரு வருத்தம் நண்பன் வார்த்தையை கூட கபீரிடமா கடன் வாங்க வேண்டும்? அங்கும் வருகிறது 'ஹிட்லர்-பஜன்'. ஆர்,எஸ்,எஸ் காரர்கள் கூடி செய்வதாக அல்ல மோடியின் குஜராத் பாடநூல் செய்வதாக.)


சரி அடுத்ததாக நல்லடியார் கொடுக்கும் சுட்டிகளுக்கு செல்லலாம்:
http://www.indowindow.net/akhbar/article.php?article=107&category=7&issue=17
இந்த சுட்டி அக்பார் எனும் தெற்காசிய அமைப்பின் இணையத்திலிருந்து இருந்து. இதில் கொடுக்கப்பட்டுள்ளது பின்வருமாறு:
The social science textbook for Class X showers praise on the Nazi chief. The section on "Internal achievements of Nazism" does not even cursorily mention the Holocaust and the extermination of Jews. It dismisses the mass killings in one sentence: "Hitler adopted a policy of opposition towards the Jews and advocated the supremacy of the German race." The section begins by stating, "Hitler lent dignity and prestige to the German government within a short time by establishing a strong administrative set-up." Then, it credits the Fuehrer with a string of achievements. "Hitler adopted a new economic policy - brought prosperity to Germany - began efforts for eradication of unemployment. Made untiring efforts to make Germany self-reliant within one decade. Instilled a spirit of adventure into the common people. But in doing so led to extreme nationalism and caused the Second World War." Mussolini, the same textbook states, " established a strong, stable government in Italy. He made Italy prosperous and powerful. All the institutions of the state functioned according to the tenets of fascism". There are no critical comments either about fascism or Mussolini. When the textbooks were brought to the notice of a parliamentary committee a couple of years ago, it reacted strongly, saying these sections paint a "frighteningly uncritical picture of fascism and Nazism. There has been no mention of the extermination of six million Jews." The Gujarat government, however, sent a letter stating its disagreement with the parliamentary committee's observations.


இதற்கு பெயர்தான் பாதி உண்மை பாதி பொய் எனவே முழு புளூகு என்பது.


இதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள். மோடி ஏதோ இருந்து குஜராத்தின் பத்தாம் வகுப்பு வரலாற்று பாடநூல்களை எழுதியது போல கபீர் என்பவர் கூறுவதை கவனியுங்கள். 'ஹிட்லரின் நற்குணங்களையும்' (virtues of Hitler) நாஸியிஸத்தின் மகிமையையும் (glory of Nazism) மோடி பாராட்டுகிறாராம். எங்கே? எந்த பக்கத்தில்?


பத்தாம் வகுப்பின் இந்த பாடத்தின் பெயர்: இரண்டு உலகப்போர்களுக்கிடையே உலகம். இது ஆறாவது பாடம். இப்பாடத்தின் தொடக்கத்திலேயே இப்பாடம் ஜனநாயகத்தை உயர்த்தி பேசி சர்வாதிகாரத்தை தாழ்த்தி பேசிவிடுகிறது.


"ஐரோப்பாவில் சர்வாதிகாரமும் கம்யூனிசமும் ஜனநாயக அமைப்பினைக்காட்டிலும் தம்மை உயர்ந்தவையாக காட்டமுயன்றன. ஆனால் ஐரோப்பாவில் இரண்டு நாடுகள், -இங்கிலாந்தும் பிரான்ஸும்- சர்வாதிகாரம் மற்றும் கம்யூனிச எழுச்சிக்கு எதிரான அரணாக இருந்தன. போரின் பின்விளைவுகள் இந்நாட்டு பொருளாதாரங்களை பலவீனமடைய செய்த போதிலும் அவை ஜனநாயகத்தில் ஸ்திரமாக இருந்தன. அவை இந்த உலகுக்கு வலிமையான ஜனநாயகம் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ளமுடியும் என காட்டின. இப்போது நாம் ஐரோப்பாவில் சர்வாதிகாரிகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் காணலாம்." (பத்தாம் வகுப்பு நூல்: பக் 66)
ஆக திரு.நண்பன் அளித்திருக்கும் இழையின் முழு ஜல்லிகளூக்கு அப்பால் குஜராத் பாடநூலின் நோக்கம் சர்வாதிகாரத்தை புகழுவது அன்று மாறாக ஜனநாயகம் சர்வாதிகாரத்தை காட்டிலும் அதிக வலு வாய்ந்தது என்பதனை நிரூபிப்பதே. இந்த குரல் பாடநூல் முழுக்க இடையூடுவதை நோக்கலாம். உதாரணமாக 'நாஸி கட்சி மக்களிடையே இருந்த பொருளாதார ரீதியான அதிருப்திகளை பயன்படுத்திக்கொண்டது.' (பக்.69) மேலும் "நாசி கட்சி சர்வதேச கம்யூனிச தத்த்துவங்களுக்கு எதிராக இருந்தது. முதலாளிகள் கம்யூனிசம் குறித்த அச்சத்தால் நாசிகளை ஆதரித்தனர்" (பக். 69) ஆக இந்த பக்கம் முழுவதும் எவ்வாறு நாசிகள் மக்களின் அச்சங்களை பயன்படுத்திக்கொண்டனர் என்பதனை காட்டுகிறது. அடுத்ததாக 'ஹிட்லர் சுப்ரிமோ' எனும் சிறு தலைப்பு வருகிறது. இது எவ்வாறு ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினான் என்பதனை விளக்குகிறதே அல்லாமல் ஹிட்லரின் புகழினை பாடவில்லை. "1934 இல் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் இறந்தார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை விட்டுவிட்டு ஹிட்லர் தானே ஜனாதிபதியானான்" (பக். 71)


ஹிட்லர் சுப்ரிமோ எனும் பாடப்பகுதி : இது ஹிட்லரை சுப்ரிமோ என புகழ்பாடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் இது எப்படி ஹிட்லர் முறையில்லாமல் ஜெர்மனியின் தலைவன்-சுப்ரிமோ ஆனான் என்பதனை விளக்குகிறது


அடுத்ததாக நாசி தத்துவம் விளக்கப்படுகிறது: இதுவும் நாசியிசத்தை புகழவில்லை. ஆரிய இனமேன்மை வாதம், பாடநூல்களில் ஹிட்லர் புகழ்பாடப்பட்டது, ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகின்றன. மேலும் மக்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டது குறித்து கூறப்படுகிறது. (பக். 71) பின்னர் "60 இலட்சம் யூதர்களின் உயிர்களை வாயு அறைக்குள் பறித்த கொடுமையான மனிதத்தன்மையற்ற செயல் செய்யப்பட்டது என குறிப்பிடுகிறது. மேலும் நாசி தத்துவமே இரண்டாம் உலகப்போர் உருவாக காரணமாக இருந்தது. (பக்.71) என்றும் குறிப்பிடுகிறது. இதற்கு பின்னர் நாசிகள் தொடக்கக்காலத்தில் ஜெர்மனியில் செய்த நிர்வாக சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இந்த பாராவிலும் இறுதியில் நாசிகளே உலகப்போருக்கு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. இப்போது மேலே நல்லடியார் கொடுத்துள்ள செய்தியின் பொய்யை பாருங்கள். "பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் நூல் 'நாசிகளின் உள்நாட்டு சாதனைகள்' என்ற தலைப்பின் கீழ் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்து சிறு குறிப்பு கூட கொடுக்கவில்லை"
(The social science textbook for Class X showers praise on the Nazi chief. The section on "Internal achievements of Nazism" does not even cursorily mention the Holocaust and the extermination of Jews. It dismisses the mass killings in one sentence: "Hitler adopted a policy of opposition towards the Jews and advocated the supremacy of the German race.")

ஆனால் அதே பக்கத்தில் மேலே குறிப்பிட்ட பாரா தொடங்குவதற்கு முந்தைய வாக்கியமே 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்துதான். அதுவும் மிகக்கடுமையாக நாசிகளை சாடும் வாக்கியமாக அமைந்துள்ளது. ஆக, இதுதான் நேர்மையின் இலட்சணமாக இருக்கிறது.

இது எப்படி இருக்கு?'நாசிகளின் உள்நாட்டு சாதனைகள்' என்ற தலைப்பின் கீழ் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்து சிறு குறிப்பு கூட கொடுக்கவில்லை: உண்மைதான்


ஏனென்றால் அதற்கு முந்தைய பாராவில் 60 இலட்சம் யூதர்களை கொன்றது மனிதத்தன்மையற்ற கொடூரசெயல் எனக் குறிப்பிடப்படுகிறது.


இதே பாடநூலில் 77 ஆவது பக்கத்தை எடுத்துக்கொள்வோம் அது என்ன சொல்கிறது? ஹிட்லரிய முசோலினிய தேசியவாதங்களை புகழ்கிறதா? இல்லை மாறாக, அது கூறுகிறது:

"ஜெர்மனி இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் தேசியமானது அதீத இராணுவத்தன்மை கொண்டதாக இருந்தது. பழிவாங்கும் உணர்ச்சி, வெறி மற்றும் வெறுப்பு ஆகியவை இம்மக்களின் மனதில் உருவாகிவிட்டிருந்தன. வெர்சைல்லீஸ் உடன்படிக்கையில் ஜெர்மனிக்கு மிகு அநியாயம் இழைக்கப்பட்டிருந்தது, அவ்வாறே இத்தாலியும் அவமதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக முஸோலினியின் பாசிச கட்சியும் ஹிட்லரின் நாசி கட்சியும் இந்நாடுகளில் அதிகாரத்தை கைப்பற்றி தக்க வைத்துக்கொள்வதற்காக குறுகிய, இராணுவவாத தேசியத்தை மக்களிடம் பரப்பி தமது பேராதிக்க கொள்கைகளை பரப்ப முயன்றனர்." (பக்.77)


இனி பிபிசி தொடுப்பு சொல்வது என்ன என்று பார்க்கலாம்: "...A Jesuit priest and social activist, Cedric Prakash, says the books contain more than 300 factual errors and make little mention of the holocaust....In the chapter entitled "Internal achievements of Nazism," one textbook quoted by AFP states: "Hitler lent dignity and prestige to the German government within a short time, establishing a strong administrative set-up."
அதே அரைகுறை பொய்கள்.


சரி இதே அளவுகோலை நாம் தமிழ்நாட்டு பாடநூலுக்கு அளிப்போம். இதே போல பிய்த்து பிடுங்கி போடுவோம். எப்படி தேருகிறது என்று பார்ப்போம். தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamil Nadu Textbook corporation) வெளியிட்டுள்ள 10 ஆம் வகுப்பு 'History and Civics" நூலில் இருந்து. இந்த தமிழ்நாட்டு பாடநூல் நிறுவன வரலாற்று நூலின் ஆக்கியோர் குழு தலைவி அருட்.சகோதரி மேரி சகாரியா. முதல்வர் ரோசரி M.H.S.S.
இதில் முஸோலினி குறித்து கூறப் பட்டுள்ளதை பாருங்கள்.


இந்த நூல் 2006 இல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது


இப்போது நண்பன் என்ன சொல்லுவார்? மோடிக்கு பயன்படுத்திய அதே அளவுகோலை பயன்படுத்தி திமுக காரர்கள் முஸோலினி-பஜனை பாடுவதாக கூறுவாரா? அல்லது நண்பனின் பின்-நவீனத்துவ அளவுகோல்கள் மோடிக்கும் மு.க.வுக்கும் மாறுமா?
ஆக ஹிட்லரின் கொள்கைக்கு 'மோடியின்' பாடநூல் கொடுக்கும் அடைமொழிகள் என்ன?


  • மனிதத்தன்மையற்றது (பக்.71)
  • கொடூரமானது (பக். 71)
  • சாம்ராஜ்ஜிய விஸ்தீகரிப்பு நோக்கம் கொண்ட பேராசைத்தன்மை கொண்டது (பக் 74)
  • வெறி பிடித்தது (பக். 77)
  • வெறுப்பு கொண்டது (பக். 77)
  • குறுகியத்தன்மை கொண்டது (பக். 77)

ஆக இந்த பாடத்தின் போக்கு இவ்வாறு அமைந்துள்ளது: சர்வாதிகாரிகள் அன்று நிலவிய நிச்சயமற்ற தன்மையையும் மக்களின் அச்சத்தையும் பயன்படுத்தி அரசதிகாரத்தை பிடித்தனர். தொடக்கத்தில் சில சாதனைகளை செய்தனர். ஆனால் தேசத்தை அவர்கள் அழிவுப்பாதையில் அழைத்துச் சென்றனர். இதில் சர்வாதிகாரிகளின் சாதனையை சொல்லும் பாராவை மட்டும் காட்டி, அவர்களை குறை சொல்லும்பகுதிகளை தவிர்த்து அது இல்லாதது போல பிரச்சாரம் செய்வது எத்தகைய இழிந்த பொய்! இத்தகைய முழுமையாக நாசி, பாசிச அமைப்புகளை கண்டிக்கும் பாடநூலில் ஒரே ஒரு பாராவை எடுத்து அதனை வைத்து செய்யும் பிரச்சாரத்துக்கு பெயர் என்ன நண்பன்? இத்தகைய பிரச்சாரம் தங்களுக்கு உகந்ததல்ல என்பது நான் உங்கள் மீது கொண்டுள்ள மதிப்பின், உங்களைக் குறித்த பிம்பத்தின் அடிப்படையில் எனக்கு எழும் எண்ணம். மற்றபடி தொடர்ந்து குஜராத்தில் நாசிகளுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம். அது உங்கள் சுதந்திரம்.

20 Comments:

Blogger நண்பன் said...

அர்விந்த்,

தகவல்களுக்கு நன்றி.

நான் குறிப்பிட்ட இழையில் உரையாடியவர்கள் - மேற்கோள் காட்டியவை - குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட பாட நூலைப் பற்றியது. மேலும், அது உலகளாவிய அளவில் சர்ச்சையைக் கிளப்பிய பின்னரே, பாட நூல்களில் எழுத்தின் தீவிரம் குறைக்கப்பட்டது என்பதும் உரையாடலில் விளங்கி இருக்கும். ஆனால், நீங்கள் காட்டி இருப்பவை எல்லாம் ஆங்கில, பாட நூல்களில் வரும் பக்கங்களை. மேலும் இது சர்ச்சை பெரிதான பின்னர் திருத்தப்பட்ட புத்தகங்களா, இல்லை அதற்கு முன்னர் உள்ள புத்தகங்களா என்பதையும் தெளிவு படுத்தி விடுங்கள். ஏனென்றால், அது தான் முக்கியமான சங்கதியே.

அப்புறம் - திமுகவின் அணுகுமுறைகள் குறித்து எல்லா விமர்சகளுக்கும் இருக்கும் கருத்து தான் என்னுடையதும். நான் திமுகவின் அனுதாபியும் அல்ல.

உடனுக்குடன், பேசப்படும் விஷயங்களின் பின்னணியை அறிந்து கொள்ளும் வசதி உள்ளூரில் இருப்பதால் கிடைக்கிறது. மேலும் அமைப்பாக செயல்படுவதில் உள்ள அனுகூலம் அது. ஆனால், ஒரு vagabond வாழ்க்கையை விரும்பும் எனக்கு, அதுவும் வெளிநாட்டில் இருக்கும் எனக்கு, அததகைய அனுகூலங்கள் இல்லையென்பதால், ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் நிறைய நேரம் தேவைப்படுகிறது.

பாடப் புத்தகங்களை குஜராத் அரசு நிறுவிய குழுவினர் அமைக்கும் பொழுது, அதை மோடி அரசு செய்தது என்று தான் கூறுவர். அதன் பொருள் மோடியே கைப்பட எழுதியதாக பொருள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மற்றபடிக்குப் பாடபுத்தகங்களைத் திருத்திக் கொண்டார்கள் என்பது பாராட்டத் தக்கது தான்.

நன்றி.

1:22 PM, February 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி நண்பன். 2003 பிரசுரிப்பு பாடநூல்களையே நான் பயன்படுத்தியுள்ளேன். இவற்றையே அச்சு பிசகாமல் அனைத்து இதழ்களும் பயன்படுத்தின. உதாரணமாக ஹிட்லர்-தி-சுப்ரிமோ , இண்டர்னல் அச்சீவ்மெண்ட்ஸ் ஆஃப் நாசிஸ் ஆகியவை குறித்து செய்தி தாள்களில் வெளிவந்தவை இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே. மேலும் இறுதி முரண்நகையையும் கூறிவிடுகிறேன். இந்த நூல்கள் (ஆங்கிலமும் சரி குஜராத்தியும் சரி) 1993 இல் எழுதப்பட்டவை. 2003 இல் மீள்-பிரசுரமே (reprint not edition) செய்யப்பட்டவை. எதை சொல்லியாவது மோடியை மோசமானவராக காட்ட இந்த நூல்கள் பயன்பட்டன. அவ்வளவுதான், ஆக 'மோடியின் ஹிட்லர் புகழ் பாடியதாக கூறப்பட்ட பாடநூல்கள்' காங்கிரஸ் காலத்தில் எழுதப்பட்டவை.

1:40 PM, February 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆக நீங்களும் உங்கள் 'மதச்சார்பற்ற' அறிவுஜீவி ஊடக தோழர்களும் காங்கிரஸ்காரன் எழுதிய புத்தகத்தை மோடி பெயர் சொல்லி திட்டிக்கொண்டிருந்தீர்கள். நானும் காங்கிரஸ்காரர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலைத்தான் டிஃபெண்ட் செய்துகொண்டிருந்தேன்.

1:45 PM, February 16, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

சொல்லவரும் பாடத்தை பொறுத்துதான் இந்தப் பாடங்கள் எழுதப்பட்டிருக்கும்.

சதாம் ஹுசைன் நல்ல துணை அதிபராயிருந்தார் ஆனால் மோசமான அதிபரானார் எனக் கேள்விபட்டிருக்கிறேன். இது ஜெர்மனியை பொறுத்தவரை ஹிட்லருக்கும் பொருந்தும்.

1:52 PM, February 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

உண்மையில் சிறில் அலெக்ஸ் அப்படியெல்லாம் இல்லை. பொதுவாக மாநில அளவில் வரலாறு எழுதுகிற ஆசிரியர்கள் ஏதாவது ஒரு பெரிய ஆசாமியின் புத்தகத்தை எடுத்து வைத்து அதில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் டச்-அப் செய்து கொள்வார்கள். இதில் கொள்கை கோட்பாடு இதற்கெல்லாம் பெரிதாக இடம் இருக்காது. உண்மையில் நண்பனிடம் நான் கேட்டபோது கூட எனக்கு 90 விழுக்காடு குஜராத் பாடநூல்களில் ஹிட்லர் புகழப்பட்டிருப்பதாக கூறுவார் என்றுதான் ஊகித்திருந்தேன். 10 ஆம் வகுப்பு தமிழ்நாட்டு வரலாறு நூலுக்கும் மேலே கூறிய குஜராத் நூலுக்கும் பல சாப்டர்களில் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கலாம் என்கிற அளவுக்குத்தான் வித்தியாசம். ஆனால் காமெடியான விசயம் என்னவென்றால் இதை வைத்துதான் 'மோடியின் குஜராத் பாடபுத்தகங்களில் ஹிட்லரை புகழ்ந்திருக்கிறது' என்று செய்தி போட்டு அந்த செய்தியையே திரும்ப திரும்ப சொல்லி ஒரு பிரச்சாரம் செய்தார்கள். 'கருணாநிதியின் தமிழ்நாட்டில் முஸோலினி புகழப்படுகிறார்' ஏனென்றால் முஸோலினி கத்தோலிக்க தலைமை பீடத்துடன் இணங்கி நடந்தவர் இந்த வரலாற்று பாடநூலை எழுதிய குழுவுக்கு தலைமை வகித்தவர் ஒரு கத்தோலிக்க சிஸ்டர் என்று ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கும் எனக்கும் பாடநூல் தயாரிப்பு நடக்கிற இலட்சணம் தெரியும் புன்னகைத்து நழுவிவிடுவோம். ஆனால் 'கிறிஸ்டியானிட்டி டுடே' போல அடிப்படைவாத புரோட்டஸ்டண்ட் பத்திரிகைகளுக்கு அனுப்பினால்? "Indian state with Catholic nun in syllabus board praises Fascism and Mussolini' என்று செய்தியை உருவாக்குவது கடினமே அல்ல. ஹிட்லர், சதாம், ஸ்டாலின், ஈவெரா, மாவோ, போல்பாட் போன்றவர்களுக்கு வெறுப்பியல் என்பது ஒரு அடிப்படையான ஆதார இயக்கம். ஒரு மக்கள் கூட்டத்தை monolith ஆக காட்டி வெறுப்பினை விற்றவர்கள் அவர்கள்.

2:07 PM, February 16, 2007  
Blogger கால்கரி சிவா said...

//நானும் காங்கிரஸ்காரர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலைத்தான் டிஃபெண்ட் செய்துகொண்டிருந்தேன்.
//

அப்போ உங்களை காக்கி அரை நிஜார் என சொல்கிறார்களே :))))

நீல்ஸ், இந்த மாதிரி அரைகுறைகளை கட்டுடைக்கும் உங்கள் பணி மிக அருமை.

எங்கேடா தடையம் கிடைக்கும் என புத்தகங்களை படிக்கிறார்கள். அவர்களின் புக்கையும் இப்படிதான் படித்து அர்த்தம் சொல்லுவார்களோ

2:40 PM, February 16, 2007  
Anonymous Anonymous said...

நீலகண்டன்

இப்படி எங்கள் பொய் பிரசாரங்களை உடனுக்குடன் தகர்த்துக்கொண்டிருந்தால் நான் அழுதுவிடுவேன்.சொல்லிட்டேன்.அப்புறம் நாசிகளுடன் மவுலானா ஒருத்தர் தொடர்பு வைத்திருந்ததை நான் ஆதரிக்கிறேனே என்றெல்லாம் கேட்ககூடாது.நீங்கள் கூட அதை முன்பொருமுறை பதிவாக போட்டீர்கள்.அப்போது நான் மவுனம் சாதித்ததை எல்லாம் நினைவுபடுத்தாதீர்கள்,ப்ளீஸ்.

4:50 PM, February 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அப்போ உங்களை காக்கி அரை நிஜார் என சொல்கிறார்களே :))))

நீல்ஸ், இந்த மாதிரி அரைகுறைகளை கட்டுடைக்கும் உங்கள் பணி மிக அருமை.//

நன்றி சிவா.
சர்வ நிச்சயமாக நான் காக்கி நிஜார்காரனேதான். காக்கி நிக்கர்காரன் (அரைகுறை பொய் பிரச்சாரங்கள் தாக்காமல் தடுக்கும்) காவலுக்கு கெட்டிக்காரன்.
ஜல்லியடியார், உண்மையில் நான் பல 'திரு'கு வேலைகளையும் நல்லடி ஜல்லிகளையும் சுவனப்ப்ரிய பொய்களையும் கண்டுகொள்ளாமல் விடுகிறேன் தெரியுமா. எப்போதாவதுதான் ரியாக்ட் பண்ணுவது என்று முடிவு. இல்லாவிட்டால் நாள் முச்சூடும் கம்ப்யூட்டர் முன்னால் இருந்து தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

7:13 PM, February 16, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

அரவிந்தன்,

நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கோள்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போக்கு தேவையில்லா த்வேஷத்தை மனிதரிடையே ஏற்படுத்துகின்றது என்கின்ற நிலையிலாவது அதன் ஆதாரம் ஆராயப்படவேண்டும் என்பது நியாய உணர்வின் வெளிப்பாடாக அமையும் என நம்புகின்றீர்கள்.

தவறான திரித்தல் மேற்கோள்களை நம்புவது சரியானதல்ல. ஒவ்வொரு மேற்கோள்களின் உண்மையையும் ஆராய்ந்து பின் எழுத வேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடு போலிருக்கிறது.

ஆனால், மனிதரில் நியாய உணர்வில் செயல்படுபவர்களைவிட, போதனைகளின் கருத்துருவாக்கத்தினை நியாயமாய் கொண்டு செயல்படுபவர்கள்தான் அதிகம்.

தங்களைப்போன்ற ஹிந்துத்துவ ஆட்கள் எண்ணிக்கையில் குறைவாய் எழுதிப் போராடுவதும், தவறான மேற்கோள்கைகளை நம்புபவர் அதிகம் இருப்பதும் வலையுலகில் மட்டுமல்ல நிஜ உலகிலும் அதிகம் இருக்கவும் இதுவே காரணம்.

போராளிகள் என்றும் எண்ணிக்கையில் குறைவுதான். இந்திய ஜனநாயக அமைப்பு மக்களாட்சியையல்ல, கும்பலாட்சியை ஆதரிப்பது.

இச்சூழ்நிலையில் கோடிக்கணக்கான நட்சத்திர கும்பல்களின் கோஷங்களுக்கு நடுவில் ஒரே ஒரு சூரியன்போல நீங்கள் எழுதுவதை இணையத்தைத் தவிர வேறு எங்கும் வெளியிடமாட்டார்கள் என்பது நிதர்ஸனமாய் இருக்கிறது.

நான் மட்டும் வருந்தி என்ன பலன்?

3:35 AM, February 17, 2007  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

quite informative.what does the tamil nadu book say about hitler.
why dont you do an analysis of text books in tamil nadu and let people know the facts.in any case church's shameful role in those years is too well known.only thing is thirus wont even write a word about it.

4:08 AM, February 17, 2007  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

read this
www.education.nic.in/cabe/textbooks.pdf

4:10 AM, February 17, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,


தினசரி விஷயங்களை இவ்வளவு உன்னிப்பாக கவனித்து பதிந்து வைத்துக்கொள்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் உலகத்தரத்துடன் எழுதுகின்றீர்கள். உங்களது பரந்த அறிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.

தமிழ்மணம் உங்களால் செழுமையடைந்திருக்கிறது.

4:22 AM, February 17, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,
பதிவிற்கு நன்றி. குறிப்பாக ஒரே பக்கத்தில் உள்ள "they committed the gruesome and inhuman act of suffocating 60 lakh jews in gas chambers" என்ற வரியை மறைத்து "There has been no mention of the extermination of six million Jews" என்று எழுதுவது moral dishonesty யின் உச்ச கட்டம்.

அப்ப்டியே holocaust பற்றி குஜராத் பாட நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் அதை வைத்து மோடியை குற்றம் சாட்டுவது கூட மோடியின் மேலுள்ள வெறுப்பே காரணம் என்று நான் கருதுவேன். holocaust இன் கொடுமைகளை இந்தியர்கள் நன்கு அறியவில்லை என எண்ணுகிறேன். நான் தமிழ்நாட்டில் பள்ளியில் படித்தபோது ஹிட்லர் ஒரு military genius and national hero என்ற எண்ணமே மேலோஙகியதாக நினைவு.

"தமிழ்மணம் உங்களால் செழுமையடைந்திருக்கிறது " - முற்றிலும் உடன்படுகிறேன்!

-- ஈஸ்வரன்

7:31 AM, February 17, 2007  
Blogger ஓகை said...

மிக அருமையான பதிவு.

உலகை பாதித்த மனிதனாகவும் ஜெர்மானியரின் தனிப்பெரும் தலைவனாக ஹிட்லர் உருவானதின் காரணமாக இருந்த சாதனைகளை ஒரு சரித்திர புத்தகம் விளக்கவேண்டும் என்பது அடிப்படையான விஷயம் அல்லவா? அதை எப்படி குறையாகக் கொள்ளமுடியும்? எழுச்சியை சொல்லாமல் வீழ்ச்சியை மட்டும் சொல்ல வேண்டுமென்பது எந்த வகை நியாயம்?

9:09 AM, February 17, 2007  
Blogger H.Selva said...

தமிழ்மணம் உங்களால் செழுமையடைந்திருக்கிறது.

I second Nesakumarji.

10:00 AM, February 17, 2007  
Anonymous Anonymous said...

Inspite of pointed proofs the so called articles in Nanban et al blogs would continue to stay which indicates how much they have been true to themselves.

4:17 PM, February 17, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நேசகுமார், ரவி ஸ்ரீனிவாஸ் நன்றி. ம்யூஸ் தங்கள் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கு நன்றி. ஆனால் "இந்திய ஜனநாயக அமைப்பு மக்களாட்சியையல்ல, கும்பலாட்சியை ஆதரிப்பது." எனும் தங்கள் வாதத்தை ஏற்கமுடியவில்லை. எத்தனையோ குறைகள் இருந்தாலும் கூட அடிப்படையில் இங்கு நடப்பது மக்களாட்சிதான். சன் டிவியின் பிரச்சார வலிமைகளையும் மீறி மக்கள் திமுகவை 2001 இல் தூக்கி எறியவில்லையா? 2003 இல் களப்பணி தொய்வடைய கார்ப்பரேட் விளம்பரங்களை நம்பிய தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவவில்லையா? இந்திராகாந்தி பாசிச 1975 அரசை வெளியே அனுப்பவில்லையா? எனவே இந்திய ஜனநாயக அமைப்பு மக்களாட்சி அல்ல என்பது தவறான நிலைபாடு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். பொதுவாக அரசியல் வல்லுநர்கள் கூறும் ருல் ஆஃப் தம்ப் ஒன்று உண்டு. ஜனநாயகத்தன்மை கொண்ட சமுதாயங்களின் குறைகள் மிக வெளிப்படையாக பேசப்படும் விவாதிக்கப்படும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும். அதே போல வெளிப்படையாக சர்வாதிகார சமுதாயங்களின் 'மேன்மைகள்' பிரச்சாரம் செய்யப்படும். எந்த அளவுக்கு ஜனநாயக சமுதாயத்தின் குறைகள் வெளியே தெரியுமோ அந்த அளவு சர்வாதிகார சமுதாயங்களின் 'நிறை'களும் வெளியே தெரியும். எனவே இந்திய ஜனநாயக அமைப்பு குறைகளுடையது உண்மை. ஆனால் அது மக்களாட்சியல்ல என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

9:46 PM, February 17, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி செல்வா.
oagai ஹிட்லரைப் பொறுத்தவரையில் அவனது defining quality குறுகிய காலத்தில் ஜெர்மனியில் அவன் நிகழ்த்திய நிர்வாக 'சாதனைகள்' அல்ல. மாறாக அவனது வெறுப்பியல் அடிப்படையில் அமைந்த இனமேன்மை அரசியல். ஹிட்லர்-நாசி எழுச்சி எனும் நிகழ்வு ஏதோ வெற்றிடத்தில் எழுந்ததல்ல மாறாக அதற்கு 2000 வருட இறையியல் இயக்கம் இருந்தது. உதாரணமாக, சிலுவைபாடுகள் யூத வெறுப்பியலை பரப்பும் கருவியாக திகழ்ந்தன. ஏசுவை கொன்றதன் இரத்தப்பழியை அன்றைய யூதர்கள் தங்கள் மீதும் தங்கள் வாரிசுகள் மீதும் ஏற்றுக்கொள்வதாக கூறும் ஒரு வாசகம் யோவான் எழுதிய ஏசு கதையில் வருகிறது. இதுவே ஐரோப்பியத்தில் யூதர்கள் மீதான கொடுமைகளை நியாயப்படுத்தியது. யூதர்கள் குறித்த கிறிஸ்தவ கூட்டுப்பிரக்ஞை பிம்பத்தின் புகழ்பெற்ற இலக்கிய பிரதிபலிப்பு ஷைலாக். நாசிகள் யூதர்களை 'உடல் முழுக்க விசம் கொண்டவர்கள் நச்சுப்பாம்புகளை காட்டிலும் கொடியவர்கள்' எனக் கூறியதன் கலாச்சார வெறுப்பியல் பின்புலத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். நாசி அரசதிகாரத்தில் யூதர்களுக்கு நடந்தேறியதில் இறையியல் வெறுப்புக்கு பங்குண்டு. இன்று அந்தணர்களுக்கு எதிராக சமூக நீதி எனும் பெயரில் உருவாக்கப்படும் வெறுப்பியலில் நாசி கூறுகள் பல உண்டு. வேர்களும் உண்டு. மிசிநரி வேர்கள்.

9:57 PM, February 17, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

//ஏசுவை கொன்றதன் இரத்தப்பழியை அன்றைய யூதர்கள் தங்கள் மீதும் தங்கள் வாரிசுகள் மீதும் ஏற்றுக்கொள்வதாக கூறும் ஒரு வாசகம் யோவான் எழுதிய ஏசு கதையில் வருகிறது//

Could you pls. quote this.. Interesting. I've never realized there was a passage like this.

11:07 PM, February 17, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் யோவான் என எழுதியதை மத்தேயு என வாசிக்கவும். மத்தேயு 27:25

11:35 PM, February 17, 2007  

Post a Comment

<< Home