Friday, May 04, 2007

முட்டப்பதி மாயங்கள்:மண்டைக்காட்டு கலவரமும் தொடர்ச்சியும்

மண்டைக்காட்டு கலவரத்தின் தொடர்ச்சியாக இந்துக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான கோரமான தாக்குதல்களில் ஒரு திட்டமிட்ட பாணி இருந்தது. புராதனமான இந்து கோவில்கள் கொண்ட கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகிருந்த கடற்கரையோர கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கன்னியாகுமரியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தெற்கில் கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பது முட்டப்பதி எனும் புகழ்பெற்ற அய்யா வைகுண்டர் வழிபாட்டு தலமாகும். இங்கிருந்து மூன்று பர்லாங் தொலைவில் இருக்கும் கடல் பக்தர்களால் பாற்கடலாக உருவகிக்கப்படுகிறது. 10.5.1985 அன்று இக்கோவிலின் சித்திரை திருநாள் கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆவதாக இருந்தது. விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இந்த துவராகாபதியின் பரம்பரை தர்மகர்த்தா திரு.சிவராம நாடார், கன்னியாகுமரி வைத்தியர் பரமசிவம், கருங்கல் ஊரை சார்ந்த திரு.ரத்தினசாமி நாடார் ஆகியோர் சென்றார்கள்.

மூவரை இழந்து திருவிழா நின்று போன நிலையில் முட்டபதி


கணவரை இழந்த திரு,ரத்தினசாமி நாடாரின் மனைவி குழந்தைகளுடன்


கணவரை இழந்து நிற்கும் பரமசிவத்தின் மனைவி.


மறுநாள் காலை ஊர் திருவிழாவுக்காக வைகறை நடப்புகள் ஆரம்பித்த போது இந்த மூவரையும் காணவில்லை. கோயில் தோரணங்கள் அறுபட்டும், கோவிலிலிருந்து எதுவோ இழுக்கப்பட்டு கடல் நோக்கி கொண்டு செல்லப்பட்டிருப்பதையும் மக்கள் கண்டனர். அன்று மாலை சில கிறிஸ்தவ மீனவர்கள் குடித்த நிலையில் கோவில் அருகே தகராறு வளர்த்திருக்கின்றனர், இது குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினர் அருகிலுள்ள கிறிஸ்தவ மீனவர் கிராமத்துக்குள் நுழையவே விடப்படவில்லை. இரத்தினசாமி நாடாரின் மனைவி சிசிலி இது குறித்து நினைவுகொள்கிறார்: "சம்பவ இடத்தில் என் கணவரின் ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. அதை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். இதுவரை எந்த தகவலும் இல்லை. ஈத்தாமொழியிலும் இச்சம்பவத்துக்கு சில நாட்கள் முன்னால் வரை பிரச்சனை நிலவி இந்துக்கள் தாக்கப்படவிருந்தனர். ஆனால் ஊரினை சுற்றி உள்ள இந்துக்கள் திரண்டு வரவே கிறிஸ்தவர்கள் சமாதான பேச்சுக்கு வந்தனர். ஆனால் முட்டப்பதியிலோ ஊர்களிலிருந்து வெட்டப்பட்ட நிலையில் இந்துக்கள் வாழ்ந்ததாலும் அன்றைய சூழலில் இந்துக்களுக்கு என்று பேச நாதியில்லாமல் போயிற்று. பின்னர் வணக்கதுக்குரிய ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் அந்த இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்த சிறுபான்மை இந்துக்களுக்கு தைரியம் வளர்த்தார்கள். அதனை தொடர்ந்து இந்துக்கள் முட்டப்பதியில் திருவிழாக்களை கொண்டாடுவது சாத்தியமாயிற்று.

கொடுவேதக்காரர்களின் கொடுமை ஒழிந்திட அன்பின் வழியின் சின்னமான காவிக்கொடி குமரிமாவட்டத்தில் உயர்ந்திட எழுந்த இந்து எழுச்சியினைக் குறித்து இனிவரும் தொடர்களில் கூறுவேன். இந்து எழுந்தால் தன்னை உணர்ந்தால் அப்போதுதான் உண்மையான மத நல்லிணக்கம் உருவாகிடும் என்பதற்கு குமரி மாவட்டம் நல்ல சான்று. பலவீனமாக இருப்பவன் தன் பலவீனத்தின் மூலம் தன்மீதான வன்முறையை தூண்டும் குற்றவாளியாகிறான். அந்த குற்றவாளியாகவே அன்று இந்து சமுதாயம் இருந்தது...
(தொடரும்)

9 Comments:

Blogger ஜடாயு said...

// பலவீனமாக இருப்பவன் தன் பலவீனத்தின் மூலம் தன்மீதான வன்முறையை தூண்டும் குற்றவாளியாகிறான். அந்த குற்றவாளியாகவே அன்று இந்து சமுதாயம் இருந்தது...//

மிக மிக உண்மையான வரிகள். நமக்கு வரலாறு கற்றுத் தரும் பாடம் இதுதான்.

குமரி மாவட்ட இந்து எழுச்சி பற்றி விரிவாக எழுதுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

10:58 AM, May 05, 2007  
Anonymous Anonymous said...

குமரி மாவட்ட கலவரம் பற்றிய கட்டுரை குமரிமைந்தன் எழுதியுள்ளார்
பார்க்க: http://kumarimainthan.blogspot.com

1:58 AM, May 06, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

குமரிமைந்தனின் அறிவுபிரகாசம் [:-))))))))] அவரது குமரிக்கண்டம், குமரிகண்டத்தில் இருந்த ஆகாய விமானங்கள், எரிக் வான் டானிக்கன் என்ற மோசடி பேர்வழியை நாசா விஞ்ஞானி ஆக்கிய ஆராய்ச்சி வன்மை, மனிதன் பாம்பை பார்த்து தான் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான் என்கிற 'கோட்பாடு' ஆகியவற்றுடன் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஐயகோ! கொடுமையிலும் கொடுமை குமரி கண்ட ஒட்டக புலமை மண்டைக்காடு கலவரம் வரை வந்து மேய ஆரம்பித்துவிட்டதே! அய்யா குமரி மைந்தனுக்கு இந்த வயதிலும் இத்தனை நகைச்சுவை இருப்பது மதிக்கத்தக்கது. விரைவில் இவர் பாளையங்கொட்டை சேவியரில் பிரதான ஆராய்ச்சி ஐயா ஆகிவிடலாம். வாழ்க.

9:25 AM, May 06, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன் தன் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டதால் குமரிமைந்தனை நகைச்சுவைக்காரர் என்கிறாரோ?
"விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்; ஆனால் குமரிக் கண்டத்தில் ஒட்டகம் இருந்ததாக குமரிமைந்தன் கூறினால் அது நகைச்சுவையாம்.
விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம். குமரிமைந்தன் குமரிக் கலவரத்தை மத சாயம் பூசப்பட்ட சாதிக் கலவரம் என்றதனால் தன் கதை எடுபடாது என்று அஞ்சி அவர் மீது கிறித்துவ சாயம் பூச நினைக்கிறாரோ?

11:47 AM, May 06, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள எட்வின்,

நான் என்ன புளுகுகளை எழுதியிருக்கிறேன் என விளக்குவீரா? அல்லது என்னுடைய எந்த வார்த்தைகளை புளுகாக திரு.குமரிமைந்தன் கூறியுள்ளார் என்பதனை தெரிந்து கொள்ளலாமா? சரி குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வையின் ஆழத்தை சிறிதே பார்க்கலாம். பொதுவாக அவரது 'ஆதாரங்கள்' வாய்வழி செய்திகளுக்கு அப்பால் செல்லாமல் நின்று விடுகின்றன. அதையாவது இந்த மனிதர் சரிபார்த்தாரா என்றால் அதுகூட இல்லை. உதாரணமாக செவி வழி செய்திகளை ஐயா அடுக்குகிறார் பாருங்கள்: "மண்டைக்காட்டுக் கோயிலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாதா கோயிலை நோக்கித் திருப்பிவைத்து இந்து மதப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டனவாம். அதற்கு எதிர்ப்பாக மாதா கோயில் ஒலிபெருக்கி அம்மன் கோயிலை நோக்கித் திருப்பப்பட்டதாம். அதை நிறுத்தும் படி கேட்கப்போன காவலரைத் தாக்கினதால் அவர்கள் சுட்டார்களாம். இது இன்னொரு கதை." (http://kumarimainthan.blogspot.com/2007/05/4.html) இப்படி ஒருவித moral relativism - zeal உடன் 'கதைகளை' அடுக்குகிற இந்த குமரி மைந்தன், சிறிதே நேரம் செலவழித்து மண்டைக்காட்டுக்கு போய் பார்த்திருந்தால் அங்கே இருப்பது 'மாதாகோவிலா' குருசடியா என்பது தெரிந்திருக்கும். இந்த இலட்சணத்தில் இருக்கிறது குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வை. இது ஒரு சின்ன சாம்பிள்தான். வதவத என எழுதி தள்ளியிருக்கும் குமரிகண்ட ஒட்டக கண்டுபிடிப்பாளரின் எழுத்துக்களை படித்து ஒவ்வொரு புள்ளியாக இந்த ஆசாமி மறைத்தும் மிகைப்படுத்தியும் கூறிய விசயங்களை ஒவ்வொன்றாக காட்டத்தான் போகிறேன். அதற்கு முன் இந்த குமரி கண்ட புளுகுகளுக்கு வரலாம். மேதாவி குமரி மைந்தனின் குமரிக்கண்ட புளுகுகளை கிழித்து உலரவிட்டு விட்டார் கிறிஸ்டோ பர் ஜெயகரன் என்னும் நிலவியலாளர். அதற்கு உருப்படியான பதிலை இன்னமும் இந்த ஆசாமியிடமிருந்து காணோம். சரி அது போகட்டும் திருவாளர்.எட்வின் என்கிற உங்களது சீர் எப்படி இருக்கிறது என்றால் பரமார்த்த குமரிமைந்தனுக்கு ஏற்ற சீடராகத்தான் இருக்கிறீர். இதோ உங்களது கூற்று: "விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம்." ஆகா ஐயா குமரிக்கண்டத்தை குமரி மைந்தன் 'கண்டுபிடித்ததை'விட பெரிய கண்டுபிடிப்பையா இது. இதோ எனது எழுத்துக்கள்: "...இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார்...." என கூறும் நான் தொடர்ந்து கீழ் குறிப்பில் எழுதுகிறேன்: "...மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும்." அதாவது புரிகிற விதத்தில் (ஹும் இப்படி தெள்ளத்தெளிவாக எழுதியதையும் 'புரிகிற' விதத்தில் சொல்ல வேண்டி இருக்கிறது.) சொல்வதாக இருந்தால் விஷ்ணுவின் அவதாரம் குறித்த புராணத்திற்கும் சுமேரிய தொன்மக்கதைக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். அதாவது ஒரு இந்திய கடவுள் குறித்த புராணத்துக்கும் சுமேரிய தெய்வத்தின் தூதன் குறித்த சித்தரிப்புக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம் இது. ஆனால் எட்வினுக்கு இது 'விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்' என நான் கருதுவதாக ஆகிவிடுகிறது. சரி ஏன் எட்வின் சார் உங்களுக்கு இந்த எரிச்சல்...ஒருவேளை "விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்" என்கிற உங்கள் ஆத்திர வரிகளில் பூனை வெளியே வருகிறதோ? குமரிக்கண்ட கப்பல்களில் காம்பஸ்...:-)))) கிரேக்க .அண்டிகைதிரா அமைப்பு கூட கிமு(BCE) 150-100 என்கிறார்கள். நம்ம குமரிகண்ட காம்பஸ் எந்த காலம் எட்வின் சார்? நல்ல சிரிப்பு காட்டுறீங்க.

அரவிந்தன் நீலகண்டன்

12:37 PM, May 06, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார்.//(http://kumarimainthan.blogspot.com/2005_11_01_archive.html)
குமரிமைந்தனின் ஆராய்ச்சியின் தன்மைக்கு இதோ மற்றொரு சான்று. எரிக் வான் டானிக்கன் நாசா அறிவியலாளர் என கூசாமல் கதை அளக்கிறார். எரிக் வான் டானிக்கன் ஒரு மோசமான சென்சேஷனல் எழுத்தாளர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட விசயம். 1978 இலேயே பிபிசியும் நோவா எனும் அமைப்பும் 'The case of ancient astronauts' என்கிற அறிவியல் ஆவண ஒளிபரப்பில் டானிக்கனின் மோசடித்தனங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டன. ஆனால் சுவிஸ் ஹோட்டல்காரராக இருந்து மோசடி வழக்கில் கைதான எரிக் வான் டானிக்கனை நாசா அறிவியலாளர் என கூசாமல் பேசுகிற குமரிமைந்தனுக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடுகிற எட்வினுக்கும் மதக்கலவரத்தை சாதியை கொண்டு ஓட்டை அடைப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லைதான். தமிழர்களின் அறிவின் மீது அத்தனை நம்பிக்கை இந்த ஆசாமிக்கும் அவரது கும்பலுக்கும்.

7:15 PM, May 06, 2007  
Anonymous Anonymous said...

"விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்" என்ற வரி
விஷ்ணுவின் "கூர்ம" அவதாரத்தை நம்பலாம் என்று இருக்க வேண்டும்
தவறுக்கு வருந்துகிறேன்.

12:13 PM, May 07, 2007  
Anonymous Anonymous said...

"விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்" என்ற வரி
விஷ்ணுவின் "கூர்ம" அவதாரத்தை நம்பலாம் என்று இருக்க வேண்டும்
தவறுக்கு வருந்துகிறேன்.

12:15 PM, May 07, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பிரச்சனை அது அல்ல எட்வின். நான் எங்காவது கூர்ம அவதாரத்தையோ அல்லது மச்ச அவதாரத்தையோ வரலாறாக நம்ப சொன்னேனா? காட்டமுடியுமா? நிற்க. குமரி மைந்தன் எரிக் வான் டானிக்கன் ஒரு நாஸா விஞ்ஞானி என கூறியிருக்கிறார். எரிக் வான் டானிக்கன் நாஸா அறிவியலாளர் என்பதனை நிரூபியுங்கள். இல்லையென்றால் குமரிமைந்தன் புளுகு மூட்டை காரர் என்பதனை ஒத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இத்தனைகாலம் இந்த சின்னவிசயம் கூட தெரியாமல் நாங்களும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றி வந்திருக்கிறோம் என ஒத்துக்கொள்ளுங்கள்

1:34 PM, May 07, 2007  

Post a Comment

<< Home