Sunday, April 29, 2007

வெடித்தது மண்டைக்காட்டு கலவரம்

துப்பாக்கி சூட்டினைத் தொடர்ந்து மிகவும் மோசமான முறையில் இந்துக்களை விமர்சிக்கும் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் கன்னியாகுமரி மாவட்டமெங்கும்
விநியோகிக்கப்பட்டன. கடற்கரையோர கிராமங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். ஆங்காங்கே இந்துக்கள் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ வெறியூட்டப்பட்ட மீனவர்களால் கடலில்
கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். முதல் சுற்று தாக்குதலில் இந்துக்கள் பல கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டு தென்னந்தோப்புகள், அரசு பள்ளிகள் போன்றவற்றில்
அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.

ஈத்தாமொழியில் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்ட இந்து வீடு


இறையுமன்துறை கிராமத்திலிருந்து வீடு வாசல்கள் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்டு துரத்தப்பட்ட இந்துக்கள் தென்னந்தோப்பில் அகதிகளாக வாழ்ந்த
காட்சி


திரு,தங்கையா நாடார்

கிறிஸ்தவர்களால் கடலில் எறியப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்ட 70 (1982 இல்) வயது முதியவர் ஈசந்தங்கு கிராமத்தை சார்ந்த தங்கையா நாடார். 19-3-1982 அன்று இவரை
மீட்டவர் துணை போலிஸ் கண்காணிப்பாளர் திரு.சங்கரநாராயணன்.

பைங்குளம் கிராமம் அரசு பள்ளிக்கூடத்தில் அகதிகளாக அடித்துவிரட்டப்பட்ட இந்துக்கள் (இங்கு 800 இந்துக்கள் அகதிகளாக வாழ்ந்தனர்)


கிறிஸ்தவர்களால் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் ஒன்று. வேணுகோபால் கமிசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது:
நடுவூர்கன்னக்குறிச்சி, ஈசாந்தெங்கு , ஈத்தாமொழி, நைனாபுதூர்,மணவாளபுரம் ஆகிய பல ஊர்களில் இந்துக்கள் தாக்கப்பட்டு சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு உயிரைக்காப்பாற்ற
விரட்டப்பட்டனர். பொதுவாக தாக்குதல்கள் இரவில் செய்யப்பட்டன. இந்துக்கள் இரவில் வாய்க்கால்கள், சாக்கடைகளில் கூட குடும்பத்துடன் பதுங்கி விடியற்காலைகளில்
இந்துக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு அகதிகளாக சென்றனர். அன்றைய தேதியில் இந்துக்களுக்கு என்று கேட்க நாதியில்லை என்பதுதான் யதார்த்த நிலை. தவத்திரு
குன்றக்குடி அடிகளார் பாதிக்கப்பட்ட இந்து கிராமங்களை பார்வையிடாமல் நேராக மண்டைக்காட்டுக்கு சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கிறிஸ்தவ பிசப் ஆரோக்கியசாமியுடன் இணைந்து கூறினார்: "இந்துக்கள் தாராளமாக கடலில் குளிக்கலாம் என இதோ ஆரோக்கியசாமி அனுமதி வழங்குகிறார்." ஆரோக்கியசாமி யார்
கடலில் குளிக்க இந்துக்களுக்கு அனுமதி வழங்க? என பொருமியவாறு ஒரு இந்து "என்றால் ஆதினம் அவர்களே குளித்து ஆரம்பித்து வைக்கலாமே" என்றார். தவத்திரு அடிகளார்
புன்னகைத்தபடியே "என்னிடம் டவலும் மாற்று உடுப்புகளும் இல்லை அதனால் பிறகு பார்க்கலாம்" என்றபடி நழுவினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய சைவக்குடும்பத்தினர் பலர் மனம் நொந்து தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு கண்டன கடிதங்கள் எழுதினர்.

உயிரோடு கணவனை பறிகொடுத்த கோவில்விளை அய்யப்பன் நாடார் அவர்களின் மனைவி

ஈத்தாமொழியில் அந்த காலகட்டத்தில் இந்து இயக்கங்கள் ஏதும் பெரிய அளவில் கிடையாது. கிராம முன்னேற்றத்துக்காக மகரிஷி மகேஷ் யோகி அமைப்பின் தையல் வகுப்பு பள்ளி
இருந்தது. கிறிஸ்தவர்களால் இது அடித்து நொறுக்கப்பட்டது. தையல் மிஷின்கள் எரிக்கப்பட்டன. விவசாய குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்டபோது மூன்று பசுக்கள் உட்பட முழு வீடும் அடியோடு தரைமட்டமானது. கீரிவிளை ராமகிருஷ்ணன் நாடார், ஈத்தாமொழி சுந்தரம் , மணவாளபுரம் செல்லத்துரை நாடார், தேரிவிளை பால்நாடார் பனவிளை சுயம்பு நாடார் சாமாதானபுரம் தேரடி மாடன், கோவில்விளை அய்யப்பன் ஆகியோர் கிறிஸ்தவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள். இதில் பால்நாடார், சுயம்பு நாடார் ஆகியோர் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர் என்பதனை விசாரிக்க சென்ற காவல்துறை கண்காணிப்பாளரை மீனவ கிராமத்துக்குள்ளேயே விடாமல் அடித்து துரத்தினர். இந்நிலையில் இந்துக்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை நகருக்குள் கொண்டு வருவதென்பது முடியாமல் போனது. பள்ளம் எனும் மீனவர் கிராமத்தில் இந்துக்கள் இதுவரை கண்டிராத வேகத்துடன் பதிலடி கொடுத்தனர். மண்டைக்காட்டு கலவரத்தின் முற்றுப்புள்ளியாக அதுவே அமைந்தது. இந்துக்களினை எதிர்க்க வன்முறை சரியான ஆயுதம் ஆகும் காலம் இன்னமும் வரவில்லை என கிறிஸ்தவ பாதிரிகள் முடிவு செய்தார்கள். இந்துக்களிடம் சமாதான பேச்சு
வார்த்தைக்கு முன்வந்தார்கள். விரைவில் சமாதானமும் ஏற்பட்டது. ஆனால் இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆங்காங்கே தொடர்ந்த படிதான் இருந்தன. ஆனால் குமரி
மாவட்ட இந்துக்கள் ஒரு நல்ல பாடத்தை படித்தனர் அன்றைக்கு. வலிமையே வாழ்வு.
(தொடரும்)

9 Comments:

Anonymous Anonymous said...

surprising to know that kunrakudi adigalar did like this. Thanks for the post Aravindan Neelakandan

Arun

7:53 PM, April 29, 2007  
Anonymous Anonymous said...

It pierces my heart to read all these happenings. I don't know what made these Christians to become such crude animals. I hope that this is not their true nature. I also wish to believe that now Hindus are better prepared and organized to avoid such tragedies. I pray that the Chrisitian evalangist zeal and their immoral cultural cleansing will be exposed to the public everywhere.

Thanks for this wonderful post

(sorry no tamil font...)

10:27 PM, April 29, 2007  
Blogger Hariharan # 03985177737685368452 said...

கன்னியாகுமரி கிறித்துவர்கள் 200%காந்தீய வழி அஹிம்சைவாதிகள் என்று ஏற்றுக்கொள்ள எல்லா ஆதாரங்களும் தந்திருக்கின்றீர்கள்.

Psuedo Secularist நடுநிலையில் இருந்து இந்துக்கள் மீதுதான் குற்றம் என்று தீர்ப்பு வழங்க ஆவலாயிருப்பார்கள்!

குன்றக்குடி அடிகளார் Psuedo Secularist என்பதை அறிவது புதிய விஷயம்.

10:32 PM, April 29, 2007  
Blogger மா சிவகுமார் said...

அரவிந்தன்,

மண்டைக்காடு கலவரம் குறித்து மீண்டும் மக்களிடையே பிளவு, அச்சம், குழப்பம், சந்தேகத்தை உருவாக்கும் பாணியில் ஆரம்பித்து விட்டீர்களே!

சாதி ஒழிப்பு பற்றி இன்னும் நாலு பதிவு போட்டு விளம்பரப்படுத்துங்களேன். அதை விடவா இந்தப் பணி முக்கியமானதாகப் போய் விட்டது!

அன்புடன்,

மா சிவகுமார

7:03 AM, April 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//மண்டைக்காடு கலவரம் குறித்து மீண்டும் மக்களிடையே பிளவு, அச்சம், குழப்பம், சந்தேகத்தை உருவாக்கும் பாணியில் ஆரம்பித்து விட்டீர்களே!//
மன்னித்துக்கொள்ளுங்கள் மா.சிவகுமார், மண்டைக்காட்டு கலவரத்துக்கு காரணமே இந்துக்கள்தான் இந்து இயக்கங்கள்தான் என்கிற பாணியில் எழுத ஆரம்பித்தது யார் என சிறிதே நினைத்து பாருங்கள். எனவேதான் மண்டைக்காட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மற்றும் அந்த கலவரத்தின் தொடக்கப்புள்ளிகள் குறித்த கிறிஸ்தவர்களிடமே இருந்து கிடைக்கப்பெற்ற வாக்குமூலங்கள் ஆகியவற்றினை அளித்துள்ளேன். மண்டைக்காட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்து தாய்மார்களின் கண்ணீரும் கம்பலையுமான துயரங்களை நான் இங்கு உள்ளிடவில்லை என்பதற்கு காரணமே மீண்டும் மிகமோசமான ரணங்களை அது கிளறிவிடும் என்பதால்தான். ஆனால் பொய்யும் புரட்டும் காந்திய வேடம் தரித்து மேடையேறும் போது கசப்பான உண்மைகளை கூறத்தான் வேண்டியுள்ளது.

8:51 AM, April 30, 2007  
Anonymous Anonymous said...

At moment,we need Kursetra Kannan. To remove, all the unwanted elements.

11:38 PM, April 30, 2007  
Anonymous Anonymous said...

I was never even aware of this blood strained past of the church in kanniyakumari. Thanks for opening my eyes.

3:28 AM, May 01, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன் சார்... உண்மையிலேயே உங்கள் நோக்கம் என்ன ? மதச்சார்பற்ற பாரதத்தை நோக்கிய பயணமா ? அல்லது மத வெறியைத் தூண்டி விடும் எண்ணமா ? குமரி மாவட்டம் இப்போது அமைதியாக இருக்கிறதே என்னும் ஆதங்கமா ?.

இலக்கியமும், இணையமும், மனிதனுடைய ஆறாவது அறிவும் வெறிகளைப் பரப்புவதை விட நல்ல நெறிகளைப் பரப்புவதாக இருப்பதே சமதர்ம சமுதாயத்தை வென்றெடுக்கும் மனிதர்களின் சிந்தனையாக இருக்க வேண்டும் என்பது எனது முடிவு. இதில் உங்கள் பார்வை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.

எந்த ஒரு கலவரமும் ஜாலியன் வாலாபாக் போல ஒருதலைப் பட்ச வன்முறையாய் இருக்காது என்பது உங்களுக்கும் சிந்திக்கத் தெரிந்த எவருக்கும் தெரியும். பழைய பிணக்கிடங்குகளிலும், கசப்பு அனுபவங்களிலும் கூட மத வெறுப்பைப் பரப்பும் எண்ணத்துடன் நீங்கள் தொடர்ந்து செயல்படுவது எனக்கு சற்று வியப்பூட்டுவதாக இருக்கிறது.

உங்கள் பதிவுகளுக்குப் பதிலாக அதே போன்ற பதிவுகளைப் போட்டு மத விரோதத் தீயை வளர்க்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை,

உங்களுடைய பரந்துபட்ட அறிவும், உங்களுடைய எழுத்துத் திறமையும் வீணே சமுதாயத்தின் சகோதர மனப்பான்மைக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக்க வேண்டாமே என்னும் நல்லெண்ணத்தில் தான் இதை எழுதுகிறேன். இதற்கும் மதச் சாயம் பூசி அழுக்குபடுத்துவீர்களெனில்.. அது உங்கள் விருப்பம் என்று விட்டு விடுவேன்

1:03 AM, May 08, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாருங்கள் சேவியர் சார். குமரிமாவட்டம் இன்றைக்கு 1982களுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வருத்தமான செய்தியே. குறிப்பாக கடந்த தேர்தல்களுக்கு பிறகு குறிப்பிடத்தக்க ஆக்கிரமிப்பு உணர்வுடன் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பெந்தகோஸ்தேகாரர் கன்னியாகுமரியில் கத்தோலிக்க மீனவரால் தாக்கப்பட்டார். பெந்தகோஸ்தே காரர்களை ஊரைவிட்டு விலக்குவது குறித்து கூட்டம் போட்டு பேசுகிறார்கள். இதை கத்தோலிக்கர்கள் செய்தால் அது பாதுகாப்பு உணர்வு. ஆனால் மதமாற்றத்துக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட்டால் அது வகுப்புவாதம் பிராம்மணீயம் இன்னும் என்னென்னவோ ஈயம். சேவியர் சார் இரண்டு கைதட்டினால்தான் ஓசை வரும் அது போலத்தான் மதக்கலவரம் என்கிற உங்கள் ஞானம் மா.சிவகுமார் ஏதோ ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான் கன்னியாகுமரி மாவட்ட கலவரங்களுக்கு காரணம் என்று எழுதியபோது வந்திருந்து அங்கே போய் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இப்போது நீங்கள் இங்கே சொல்லுவதை நியாயவான்தனமாக எடுத்துக்கொள்ளமுடியும். ஆனால் அப்போது நாசிகள் யூதர்களை கொன்ற போது மவுனமாக இருந்த போப்பின் மௌனத்தை கடைபிடித்துவிட்டு இப்போது அதற்கு எதிர்வினையாக நான் எழுதும் போது 'இப்படி எழுதுகிறாயே' என்றால் நான் என்ன செய்யட்டும்? இல்லை கேட்கிறேன் சுநாமியின் போது 'இந்த கிறிஸ்தவன் தானே நம்மை தாக்கினான்' என்று ஆர்.எஸ்.எஸ்காரன் சும்மா இருந்தானா? குளச்சல் சர்ச் பங்கு தந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் நியாயவான்களாக இருந்தால் சொல்லுவார்கள் எப்படி சொந்தக்காரர்கள் தொடமால் ஒதுங்கிய பிணங்களை கல்லறைத்தோட்டங்களுக்கு கொண்டு வந்து ஆர்.எஸ்.எஸ்காரன் புதைத்ததை. அதே நேரத்தில் அருவெறுக்கத்தக்க வதந்திகளை அந்த நேரத்திலும் சில அறிவுசீவிகள் என அறியப்பட்டவர்களே பரப்பியதும் ஒரு எழுத்தாளர் புண்ணியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உண்மைகள் இப்படி இருக்க உங்கள் ஒரு பக்க வருத்தம் தேவையில்லாதது.

3:20 AM, May 08, 2007  

Post a Comment

<< Home