ஏசுதாஸ் குருவாயூர் கோவில் விவகாரம்
இந்துத்துவத்தின் நிலைபாடு என்ன?
சில நாட்களுக்கு முன்னால் நண்பன் என்பவர் ஒரு பதிவை போட்டிருந்தார். நான் ஒரிசாவில் ஒரு அமெரிக்கர் நுழைந்ததற்காக பூரி ஜகன்னாதர் ஆலய நிர்வாகத்தின் தவறான எதிர்வினையை சவூதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருந்ததற்கு ஏதோ நான் ஒரிசாவில் நிகழ்ந்ததை ஏற்றுக்கொண்டதாக திரித்து கூறி 'இதுதான் இந்துத்துவம்' எனக்கூறி இருந்தார். ஆனால் பழமைவாதிகளின் நிலைப்பாட்டுடன் இந்துத்துவத்தை குழப்புவது பொதுவாகவே நண்பன் முதல் மா.சிவகுமார் போன்ற பெரிய மனிதர்களுக்கு கைவைந்த கலை. இதோ இப்போது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது ஏசுதாஸின் பெயரை வைத்து மற்றொரு லீலை. இந்துத்துவத்தின் நிலைப்பாட்டிற்கு பிறகு வருகிறேன் அதற்கு முன்னர் என்னுடைய நிலைப்பாட்டினை தெளிவாக்கிவிடுகிறேன்.
காங்கிரஸ் ஓடுகாலி கருணாகரனை கோவிலுக்குள் விட்டு பாவம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் குருவாயூர் தேவஸ்தானம் ஏசுதாஸை உள்ளே விட்டால் (...உள்ளே விட்டால் என்ன விட்டால்..நியாயப்படி இந்துக்கள் ஒருங்கிணைந்து ஏசுதாஸை தோளில் தூக்கி குருவாயூர் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பேன்) செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம். இதையே மீரா ஜாஸ்மின் விசயத்திலும் கூறுவேன். இந்துக்களுக்கு துரோகம் செய்த ஜெயலலிதாவை கோவிலுக்குள் விட்டு பாவம் செய்வதைக்காட்டிலும் நமது தருமத்தின் மீது இத்தனை பாசம் கொண்ட உண்மையான இறையன்பு கொண்ட மீரா ஜாஸ்மின் போன்றவர்களை கோவிலுக்குள் விடுவதால் புண்ணியம் சேரும். (ஜாஸ்மின் மேரி ஜோஸப்பாக இருந்து மீரா ஜாஸ்மினாக மாறிய மீரா ஜாஸ்மினுக்கு எதிராக கோவில் நிர்வாகம் எடுத்த நிலைப்பாட்டினை எதிர்க்கும் இந்துக்களின் ஆன்லைன் விண்ணப்பம் இங்கே உள்ளது: http://www.petitiononline.com/4meera/petition.html)
சரி இனி இந்துத்துவத்தின் நிலைபாடு என்ன? ஏப்ரலில் இந்த பிரச்சனை வருவதற்கு முன்னரே ஜனவரியிலேயே பாஜக ஏசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் விட வேண்டும் என கூறிவிட்டது!
Labels: Hinduism, Temple entry, Yesudas
4 Comments:
கோவிலுக்கு வர ஆசைப்படும் யேசுதாஸையும், மீரா ஜாஸ்மினையும் அனுமதியுங்கள் என கோவில் நிர்வாகத்திற்கு எதிராக நம்மால் குரல் கொடுக்க முடிகிறது. வழிதவறி மெக்காவிற்கு நுழைந்த ஒரு கிறித்தவர்க்கு சவூதி காட்டுமிராண்டி அரசு அளித்த தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் இணைய இஸ்லாமிஸ்டுகளுக்கு தில் இருக்குமா?
சான்ஸே இல்லை சிவா சார். அதுக்கெல்லாம் மனுசத்தனம் வேணும்.
wandererwaves.blogspot.com/2007/04/i.html#comments
பதில் சொல்லலாமே? இல்லேன்னா இந்த விஷயத்தில் திரித்தை ஒப்புகொண்டதை ஒப்புகொண்டு மன்னிப்பு கேட்கும் நேர்மை உண்டா?
அரவிந்தன், பாஜக மட்டுமல்ல, இந்து ஐக்கியவேதி உள்ளிட்ட எல்லா இந்து அமைப்புகளும் ஏசுதாசை குருவாயூர் கோயில் வரவேற்று அழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.
Post a Comment
<< Home