ஜெயபாரதனின் அணுசக்தி நூல்

சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் 'அணுசக்தி'. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதம் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:
"யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்", என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb], பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத்திலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.
அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஷபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.
நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா
இந்நூலின் ஒரே குறை அதன் விலையாகத்தான் இருக்கும். ஆனால் நம் தமிழ் இளைஞர்களுக்கு இந்த நூல் போய் சேர வேண்டியது அவசியம். எனவே வசதியும் மனமும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் தங்கள் ஊர்ப்புற நூலகங்களுக்கு இந்த நூலை அளிக்க வேணும். சி. ஜெயபாரதன் தந்தையார் நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர். ஜெயபாரதன் அவர்கள் அறிவியல் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த தேசபக்தரும் கூட. சுவாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்றவர். பண்டித நேருவின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். தேசியத்தின் மீதும் தாம் சரி என கருதும் நிலைப்பாட்டின் மீதும் எவ்வித சமரசமும் செய்திடாத மகத்தான மனிதர். வாழ்க அவர் பணி. ஓங்குக அது மென்மேலும்.
- சி. ஜெயபாரதன், கனடா
- அணுசக்தி நூல் விலை : ரூ 270 (450 பக்கங்கள்)
- நூல் கிடைக்குமிடம்
- தமிழினி பதிப்பகம்
- 63. பீட்டர்ஸ் சாலை,
- ராயப்பேட்டை,
- சென்னை: 600014
11 Comments:
மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களது கட்டுரைகளை திண்ணையில் படித்து சிலாகித்து வந்துள்ளேன். அணுசக்தி பற்றிய ஒரு தெளிவான ஓவர்வியூவை அளிக்கின்ற கட்டுரைகள் அவை. அவை ஒரு புத்தகமாக வந்துள்ளது வரப்ரசாதம்.
அவரது கட்டுரைகளைப் பாராட்டி இரண்டு மெயில்கள் அனுப்புவதைவிட அவரது புத்தகத்தை வாங்குவதும், பரிசளிப்பதும் சரியாக அவரை சிலாகிக்க வழிவகுக்கும். இந்த லிஸ்ட்டில் தற்போது இருக்கும் கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸுமுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.
அறிவியற் தமிழ் வாழ்க. அறிஞர் வாழ்க. அவரை வியக்கும் அணுக்கர் வாழ்க.
இந்த புத்தகத்தை ஆன் லைனில் வாங்க இயலுமா? உதாரணமாக, எனி இந்தியன்?
அந்தத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.
வான்வெளி பற்றி அவ்வப்போது எழுதுபவரும் இவர் தானே?
ம்யூஸ் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். எனிஇண்டியன்.காமை அணுகுங்கள். வடுவூர் குமார். ஆம் அணுசக்தி மட்டுமின்றி வான்வெளி, சூழலியல் மற்றும் நதிநீர் இணைப்பு போன்ற பல விசயங்கள் குறித்து அருமையான கட்டுரைகளை அழகுத்தமிழில் எழுதி தமிழ்த்தொண்டு ஆற்றிவரும் அபாரமான மனிதர் ஜெயபாரதன் அவர்கள்.
அய்யா,
காசுக்காக தென் ஆப்பிரிக்கா சென்று ஆடியவரை மண்டெலா ரேஞ்சிற்கு எழுதும் அறிவு சார்ந்த உலகமய்யா இது.ஏது கூறினாலும் சாதியைபிடித்துக் கொண்டு கூவலிடும் உலகமய்யா இது.தேசீயம் என்றால் ஜல்லியாம்!
ஜெய பாரதனை பகுத்தறிவுகள் ஏற்கலாகுமா?
ஆதங்கத்துடன்
பசும்பொன் பாண்டியன்
மும்பாய்
ஜெயபாரதனின் "அணுசக்தி" போன்ற நூல்களை தேடி படிப்பவர்கள் வரும் நூலகங்களை அறிந்து அளிப்பது சிரமம். முழுமையாகப்பயன்படுத்தப்படுமா என்று தெறியவில்லை. அதனால் விரைவில் குறைந்தது 10 பிரதிகள் வாங்கி திருச்சி "சாதனா" வில் கொடுக்கப்படும். ஜில்லா மற்றும் தாலுகா பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். புத்தகமும் அதன் கருத்துக்களும் படித்தவர் முதல் பள்ளி தொட்டு பாமரர் வரை நிச்சயம் சென்றடையும்.
தகவலுக்கு நன்றி.
காசுக்காக தென் ஆப்பிரிக்கா சென்று ஆடியவரை மண்டெலா ரேஞ்சிற்கு எழுதும் அறிவு சார்ந்த உலகமய்யா இது.
more clear hints please.
ஜெயபாரதனின் வலைப்பதிவு பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:
http://jayabarathan.wordpress.com
அரவிந்தன் சார். நல்ல தகவல். இந்த புத்தகம் வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
//தங்கள் எழுத்துக்களைப் படித்தேன். ரொம்பவும் பிடித்து இருக்கிறது. தங்களைப் பற்றி சொல்லுங்களேன். வளர்ந்து வரும் எனக்கு ஆலோசனைகள் சொல்லவும்.//
ஆதிசேஷன் தங்கள் மடலை தற்போதே பார்த்தேன். நான் 2002 முதல் திண்ணையில் எழுதி வருகிறேன். என் பெயருடனேயே எழுதி வருகிறேன். இதில் தங்களுக்கு கூற அதிக விவரம் என்ன தேவையோ அது கிடைக்கும். தவிர தனிமடல்கள் தேவையில்லை. குறிப்பாக தங்களைக் குறித்து தாங்கள் எதுவுமே தெரிவித்திடாத நிலையில்.
அரவிந்தன், நான் உங்கள் எதிரணியைச் சேர்ந்தவன். உங்கள் இந்துத்வா அடிப்படைவாதம் என்னைப் பொறுத்தவரை ஒரு செல்லாக்காசு. இருந்தாலும் ஒரு எச்சரிக்கை. ஆதிசேடனார் வேறு யாருமில்லை. நம் ஆப்புபுகழ் போலியார்தான்.
வடிவேல் சிண்டை மட்டும் அப்படியே விட்டுவிட்டு வேடம் கட்டுவதுபோல அவர்
விட்டுச்செல்லும் அடையாளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். :-))
அவர் அப்பாவி அய்யங்கார்களுக்காக எடுத்திருக்கும் அவதாரம் இது. சந்தேகம் இருந்தால் எந்த நாட்டு ஐபி என்று செக் செய்து பாருங்கள். இந்த
வலையில் நீங்கள் மாட்டிக் கொண்டு விடாதீர்கள். வேறு எந்தத் தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ அனுப்பி வைக்காதீர்கள். அடுத்தவாரம் ஆப்பில் வெளியாகி உலகப்புகழ் பெற்று விடுவீர்கள். :-))
நண்பர் தங்கவேல் பதிவில் உங்களைப்
பற்றிப் படித்தேன். நீங்கள் உண்மையானவர் என்பதால் இதை எழுதி இருக்கிறேன். உங்கள் தந்தை தமிழாசிரியர் என்று தெரியவந்ததும் இன்னொரு காரணம்.
Post a Comment
<< Home