வேதமும் பாலியல் பதங்களும்
முதலில் வேதங்களை இந்துக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை இந்த வெறுப்பியல் வெறியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. குரானை போல வேதங்களை இந்துக்கள் நோக்கவில்லை. வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள். அஸ்வமேதம் குறித்து வேதங்களில் ஒருபகுதியான உபநிடதம் என்ன கூறுகிறது என்பதனை இத்தகைய வெறுப்பியல் பிரச்சாரகர்கள் விட்டுவிடுகின்றனர். உள்ளது உள்ளபடி கூறுவதானால் இவர்கள் என்ன செய்ய வேணும்? அக்னி ஹோத்ரி தாத்தாச்சாரி வேதம் படித்தவ'ர்'தானே? வேதவித்துகளின் பரம்பரையில் வந்தவர்தானே! (தான் வேதவித்துகளின் பரம்பரை என ஒருவன் சொன்னால் அதனால் அவனை பெரியவனாக பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட பரம்பரையில் தெருப்பொறுக்கித்தனமான ஒருவனும் பிறக்ககூடாது என விதி எதுவும் இல்லை. இதற்கு தாத்தாசாரியே சாட்சி. அதே நேரத்தில் பாணர் வீட்டிலும் பகவான் அவதரிப்பார் பறையர் வீட்டிலும் பகவான் அவதரிப்பார் என அரசனின் வாளுக்கு அஞ்சாமல் உறைத்த பூவண்டர் இந்து தருமத்தில் தோய்ந்தவர். இந்த இந்து தரும உயர்வெல்லாம், உண்மையெல்லாம் தாத்தாசாரி போன்ற மலரையும் மலமென பிதற்றி திரியும் மனநோயாளிகளுக்கும் தாத்தாசாரியின் ஈவெரா சிங்கிகளுக்கும் தெரியாது.) அதை சொல்லி பெருமை அடித்துக்கொள்ள தெரிந்தவர்தானே. காஞ்சி பரமாச்சாரியாரிடம் தெண்டி பிழைத்தபோது வாயை மூடி மௌனமாக இருந்து இப்போது உடலிலிருக்கும் சகல துவாரங்களாலும் ஓசை எழுப்ப அந்த செல்லா ஓசையினை மூக்கைப்பிடித்தபடி நாம் கேட்க வேண்டியிருக்கிறது தானே! அவர் கண்ணியமானவனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? அஸ்வமேத யாகத்துக்கு உண்மையில் வேறு அக-உருவகத்தன்மையும் உண்டு அது உபநிடதங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. சம்பிரதாய நம்பிக்கைப்படி இராமாயணத்துக்கு முந்தைய உபநிடதங்களிலேயே சொல்லியிருக்கிறது. எனவே அசுவமேத யக்ஞத்திற்கு இப்படி அசிங்கமாக பொருள் கொள்வது தகாது என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? ஆனால் அப்படி செய்யாமல் தன்னை வேதம் தெரிந்தவன் என சொல்லிக்கொண்டு இப்படி பாதி உண்மைகளை முழு பொய்யாக புளுகியுள்ளானே இவரை என்னவென்று சொல்வது.
உபநிடதங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பிருஹுதாரண்ய உபநிடதம் இதனைச் சுட்டிக்காட்டுகிறது: " சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆதவனே அஸ்வமேத யக்ஞமாகும். அவனது உடலே ஆண்டு ஆகும். அக்னி தேவனே வேள்வியின் நெருப்பு ஆகும். இந்த உலகங்கள் அவன் உடலாகும். இவை இரண்டுமே மீண்டும் ஒன்றாகும் தேவதை நெருப்பு ஆகும். (பிருஹுதாரண்யம் 1.2.7.) அவதூத உபநிடதமும் அசுவமேத யக்ஞம் என்பது அகத்தினில் நடத்தப்படுவது என்பதனை கூறுகிறது. பேராசிரியர் சுபாஷ் கக் அசுவமேத யக்ஞம் வானவியல் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைவது என்கிறார்.
சரி அகப்பொருளை விடுவோம். அதனை சொல்லாமல் குறிப்பிடாமல் விட்டுவிட்டு செல்லும் நேர்மையின்மையை விடுவோம். இந்து தருமத்தை வெறுக்கும் இந்த வெறுப்பியல் பிரச்சாரகர்களுக்கும் நேர்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரமுண்டு என்பது மீண்டும் மீண்டும் இந்த வலைப்பதிவில் நிரூபிக்கப்பட்ட விஷயம்தான். ஆனால் அசுவமேத யக்ஞ்த்தில் குதிரையுடன் அரசனின் மனைவி புணர்ந்தாள் என்பதற்கு எவ்வித ஆதாரத்தினை இந்த மேன்மக்கள் காட்டுகின்றனர் என்பதுதான் நகைப்புக்குரியது. வேத சடங்குகளில் வரும் சில பாலியல் வசை/பகடித்தன்மை கொண்டதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்ட வரிகள். ஏதோ இந்து தருமத்தின் சாராம்சமே தைத்திரீய சம்கிதையின் சில வரிகளில்தான் தொங்குவது போல. இது ஒரு விசித்திர மனவியாதி எனலாம்.
நாட்டார் வழக்குகளிலும் இத்தகைய வழிபாட்டுமுறைகள் உள்ளன. இந்த வழிப்பாட்டுத்தன்மைகளை இதே ஆசாமிகள் வேத தருமத்துக்கு மாறுபட்டது என முன்வைப்பார்கள். ஆனால் அத்தகைய வழிபாட்டுமுறைகளும் வேதபாரம்பரியத்தினால் ஏற்கப்படுபவையே எனும் எளிய உண்மையினை ஏற்காமல் இவர்கள் திடீரென கேடுகெட்டத்தனமாக விக்டோரிய மாரலிஸ்டுகள் ஆகிவிடுவார்கள். இதே அளவுக்கோலை இவர்களுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் பரப்பப்பட்டுவரும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக காட்டமுடியுமா என்றால் நிச்சயமாக இல்லை. சாலமோன் ராசாவின் உன்னதப்பாட்டில் வரும் வரிகள் தகாத குடும்ப பாலியல் உறவுகளை காட்டுவதாக அமைகிறது எனவே கிறிஸ்தவத்தின் அடிப்படையே அதுதான் என இவர்களால் இதே அளவுகோலை அங்கே நீட்டமுடியுமா? ஏசுவின் இரத்தம் கோப்பையில் அருந்தப்படுகிறது. கோப்பை கருப்பையின் குறியீடு எனவே அதில் இருக்கும் ஏசுவின் இரத்தம் ஏசுவின் விந்து ஆகும். எனவே புனிதப்பலி என்பது விந்து அருந்தும் சடங்கு என (தொடக்ககால ரோமானிய விமர்சனங்களில் ஒன்றே கிறிஸ்தவம் கூட்டு பாலியல் சடங்குகளைக் கொண்டிருந்தது என்பது) இவர்கள் பேசுவார்களா? இப்படியெல்லாம் பேசுவது அருவெறுப்பான வக்கிரமன்றி வேறென்ன? பாலியல் ரீதியான சடங்குகள் இருந்திருக்கலாம் ஆனால் அவை அப்படியே இருந்தனவா அல்லது பரிணாமமடைந்து மாறியதா? பழம் இனக்குழு மக்களின் சடங்குகள் அவை. அவை வேதங்களால் அழிக்கப்படவில்லை. ஆனால் அவை நிச்சயம் உருமாற்றம் அடைந்தன. இதைத்தான் உபநிடதங்கள் காட்டுகின்றன. இதனை இராமயணத்திலும் காண்கிறோம். நான்கு மனைவியரால் நடத்தப்படும் சடங்காக இருந்த அசுவமேதம் ஸ்ரீ ராமரின் காலத்தில் ஒரே மனைவியைக் கொண்டு நடத்தப்படும் சடங்காக மாறிவிட்டது. அந்த மனைவியும் கூட ஒரு பிரதிமையால் உணர்த்தப்படுகிறாள் அவ்வளவே. சடங்கு சம்பிரதாயங்கள் மானுட சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் மாறிக்கொண்டே வருகின்றன. சடங்காச்சாரங்கள் அவசியமானவை சிலருக்கு. ஆனால் அதுவே தருமமாகாது. வேதங்களின் தேவையையே ஸ்ரீ கிருஷ்ணர் நிராகரிக்கிறாரே பகவத் கீதையில். அதனையே வேத சாரம் என கருதுகிறோமே. வேத பாரம்பரியத்தினை ஏன் மிக முக்கியமானதாக மதிக்கிறோம்? ஏன் சுவாமி தயானந்தரும் சுவாமி விவேகானந்தரும், மகரிஷி ஸ்ரீ அரவிந்தரும், மகாத்மா காந்தியும் வேதங்களை மதித்தனர்? அவற்றின் மகாவாக்கியங்களுக்காக. 'ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி', 'அகம் ப்ரம்மாஸ்மி', 'ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்', 'தத்வமஸி' - இந்த வேத மகாவாக்கியங்களே இந்து தருமத்தின் இந்து சமுதாயத்தின் இன்றைய இயக்கத்தினை நிர்ணயம் செய்துள்ளன. ஐயா வைகுண்டரின் அத்வைத முழக்கம் அதையே சொல்கிறது. மாதா அமிர்தானந்த மயின் சேவை அதையே சொல்கிறது. ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என சர்வத்திலும் இறையைக் காணும் தெய்வீகப்பார்வை இன்று அரவிந்த் கண்மருத்துவமனையாக பிரகாசிக்கிறது. வேதத்தினால் உந்துதல் பெற்ற இந்து தரும அற நிலையங்கள் எல்லாம் அசுவமேத யாகம் நடத்திக்கொண்டிருக்கவில்லை. அறத்தொண்டாற்றிக்கொண்டிருந்தார்கள். வேள்விகளின் அகத்தியல் உட்கிடக்கை வேறு. அவற்றின் புறச்சடங்குகள் வேறு, புறச்சடங்குகள் மாற்றம் பெறும், அகவேர்களே அதன் ஊத்வேகமாக அமையும். இவற்றினை அறியும் திறனற்று மலர்களில் மலநெடி நாடி நடக்கும் அஃறிணைகளுக்கோ - என்ன சொல்ல ஐயோ பாவாம் அவர்கள் செல்லாத ஓசையை வெளியிட்டுக்கொண்டிருக்கட்டும் நாம் மூக்கை பொத்தி விலகி நடப்பதுதான் இயலும்.
என்றாலும் இந்த செல்லாத ஓசைகளின் 'வேசை நசுறாணி'த்தனம் (அன்னிய பரப்பிகளுக்கு ஐயா வைகுண்டரே அளித்த பெயர் இது. வேசைத்தனம் கொண்டவர்கள்.) கண்டு நாம் ஆத்திரம் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவர்கள், தாத்தாச்சாரி, ஈவெரா போன்றவர்கள் தம் இயல்பில் வக்கிரமான பாலியல் பிறழ்வு கொண்டவர்கள். தாத்தாச்சாரி என்கிற கிழடுக்கு தீடிரென காமரீதியாக அனைத்தையும் பார்க்க தோன்றிவிட்டது போன்றும். இப்படிப்பட்ட கீழ்த்தரம் ஒரு குறளை பார்க்கிறதென வைத்துக்கொள்வோம் 'மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' இதனை அது எப்படி பார்க்கும்? இதுதான் பகுத்தறிவுத்தனமா? சரி மற்றொரு செக்ஸ் பெர்வர்ட்டை எடுத்துக்கொள்வோம். அந்த ஆளைப்பற்றி அவனது சிங்கியடியே கொடுக்கும் உண்மை இது: தன் பொஞ்சாதி கோவிலுக்கு போவ்தை நிறுத்த பெர்வர்ட் ஆசைப்பட்டானாம். அப்படி என்றால் பிறக்கும் போதே பகுத்தறிவுவாதி என்றி பீத்திக்கொண்டு திரிஞ்ச இவன் என்ன செய்திருக்க வேணும்? பொஞ்சாதியை கூப்பிட்டு பகுத்தறிவோடு வாதாடி அவளை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு இவனுக்கு வக்கில்லை. இவன் செய்த கீழ்த்தர செயலை கேளுங்கள்...தமிழர் தலைவர் நூலில் சாமி.சிதம்பரனார் சொல்லுகிறார்: "நாகம்மையார் சிலபெண்களுடன் கோவிலுக்கு சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகளுடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு நாகம்மையாரை தன் கூட்டாளிகளுக்கு காட்டி "இவள் யாரோ புதிய தாசி நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்கவேண்டும்.நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ளவேண்டிய முயற்சிகளை செய்யுங்கள்." என்று கூறினார்." இந்த ராம்சாமி வேறு யாருமில்லை. இவந்தான் ஈவெராமசாமி. இவன் தான் பகுத்தறிவு தந்தையாம். தூ. இப்படி சொந்த பொண்டாட்டியை கூட்டாளிக்கு கூட்டி கொடுக்க முயன்ற காமாந்தகாரனை தந்தை என சொல்லுகிற ஓசை விடுகிற செல்லா காசுகள் அசுவமேதயாகம் பற்றி எழுதினால் பிறகு அவனுக்கு எப்படி எழுத வரும்?
16 Comments:
http://en.wikipedia.org/wiki/Ashvamedha
அசுவமேதம் குறித்து விக்கிபீடியா
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.
மிக்க நன்றி!
நன்றி ஸ்ரீதர் வெங்கட்.இதை எழுதியதில் எனக்கு வருத்தமான ஒரு அம்சமும் உண்டு. கிறிஸ்தவத்தின் பாலியல் விளைவு கொண்ட சடங்குகள் மற்றும் பாடல்களைக் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் கிறிஸ்தவத்தில் இருக்கிற நல்ல விசயங்களில் ஒன்று bridal mysticism. யூத மறை ஞானம் மற்றும் பாகன் ஆன்மிகச் சடங்குகளிலிருந்து உருவாக்கப்பட்டவையே இவை. இவற்றினை நான் மட்டமாக கூறியதாக சிலர் உணர்ந்திருக்க கூடும். இல்லை. இந்த பகுத்தறிவு பன்னாடைகளையும் இவற்றிற்கு உண்மையாக எலும்புத்துண்டுகள் எறியும் நிழல் எசமானர்களான சில வெறிபிடித்த மதமாற்றிகளுக்கும் உறைக்கட்டும் என்றுதான் அதனை கூறியிருந்தேன். மற்றபடி அசுவமேத சடங்கு ஆகட்டும், யூத விவிலியத்தின் சாலமன் உன்னதப்பாட்டு ஆகட்டும், பலிச்சடங்கு ஆகட்டும் அவற்றின் பல-தள பொருளாக்கத்தில் எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு.
ஐந்து ரூபாய் லேகியம் தின்று தங்களின் தினவை வளர்க்க முயற்சிக்கும் செல்லாக் காசுகளுக்கு வேதங்களின் சாராம்சம் புரியுமா? மனித இன புணர்தலுக்கு தகுதியற்று, வெட்கை நோய் தாக்கியுள்ளது என நினைக்கிறேன் - மிருக புணர்தலைப் பற்றி மன வக்கிர சிந்திக்க ஆரம்பித்திருக்கும் சவுண்ட் பார்ட்டிக்கு. ஓசை எழும்பும் இடம் காலி டப்பாவாகத்தான் இருக்கும் அரவிந்தன் அவர்களே. இத்தகை அக்ஹ்ரிணைகள் தன்னுடைய பதிவுகளை முதலின் தங்கள் வீட்டு பெண்டிர் படித்து கருத்து சொல்லியபின் பிரசுரிக்க வேண்டும்.
நல்ல பதிவு, அரவிந்தன். இந்து விரோதிகள் மிகக் கீழ்த்தரமாக எழுதி அதற்கு பதிலடி கொடுக்கும் பதிவிலும் எவ்வளவு விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறீர்கள்!
// வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள். //
உண்மை. இது பற்றி ஸ்ரீஅரவிந்தர் மிக விரிவாக சொல்லியிருக்கிறார்.. நம்ம ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்.
// உண்மையெல்லாம் தாத்தாசாரி போன்ற மலரையும் மலமென பிதற்றி திரியும் மனநோயாளிகளுக்கும் //
இந்த ஆளை மிகச் சரியாக வர்ணித்திருக்கிறீர்கள்.
// " சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆதவனே அஸ்வமேத யக்ஞமாகும். //
"சப்தாஸ்வன்" என்று சூரியனுக்குப் பெயர். கிரணங்கள் அவனது குதிரைகளாக அவன் தேரில் செல்வதாகவும், சூரியனே ஒரு மகாசக்தி வாய்ந்த குதிரை என்பதாகவும் கூட வேதப் படிமம் உள்ளது.
// வேத சடங்குகளில் வரும் சில பாலியல் வசை/பகடித்தன்மை கொண்டதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்ட வரிகள் //
இதற்கு வேறு சில உதாரணங்களும் உண்டு.. அக்னியைப் பற்றிய மந்திரத்தில் "ஜார: கனீனாம், பதிர் ஜனீனாம்" என்ற வரியின் பொருள் "தீமைகளை அபகரிப்பவன், தோன்றும் உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் (பதி)". இதற்கு "கன்னியரைத் திருடுபவன், தனக்குப் பிறந்தவளைக் கட்டிக் கொண்டவன் (பதி)" என்று ஒரு ஐரோப்பிய வேத உரையாளர் பொருள் எழுதப் போனாராம்!
// ஆனால் அத்தகைய வழிபாட்டுமுறைகளும் வேதபாரம்பரியத்தினால் ஏற்கப்படுபவையே எனும் எளிய உண்மையினை ஏற்காமல் இவர்கள் திடீரென கேடுகெட்டத்தனமாக விக்டோரிய மாரலிஸ்டுகள் ஆகிவிடுவார்கள் //
இது மகா போலித் தனம். மிகச் சரியாக சுட்டிக் காட்டுயுள்ளீர்கள்.
நன்றி அனானி. ஈவெராத்தனமான வாழ்க்கை வாழுகிறவர்களுக்கு தாய்க்கும் தாரத்துக்கும் சகோதரிக்கும் என்ன வேறுபாடு தெரியப்போகிறது. நாமெல்லாம் பகுத்தறிவு இல்லாதவர்கள். பாலியல் தொழிலாளியிலும் அன்னையை கண்டு அவர்களின் நல்வாழ்க்கையை சிந்திக்கிறோம். ஆனால் கட்டிய மனைவியை வேர்த்து விறுவிறுத்து போகும் அளவுக்கு தன் மைனர் கூட்டாளிகளுக்கு ஒருவன் காட்டுகிறான் அந்த வக்கிரத்துக்கு பகுத்தறிவு முலாம் பூசிக்கொள்கிறான். இவனது பகுத்தறிவே தொடர்ந்து இப்படித்தான் இருந்திருக்கிறது. மது எதிர்ப்பு என்றால் தென்னை மரத்தையே வெட்டுகிற மெண்டல் ஆசாமிதான் இவன். இவனெல்லாம் பகுத்தறிவு தந்தை என்றால் இவன் பெத்து போட்ட பகுத்தறிவு குஞ்சுகள் வேறு எப்படி இருக்கும்?
நன்றி ஜடாயு. மொழி பெயர்ப்பு என்கிற பெயரில் எப்படிப்பட்ட அநாகரீக மோசடி வேலைகளை செய்திருக்கிறார்கள். ஸ்ரீ அரவிந்தர், ஐயா வைகுண்டர் போன்ற ஞானிகளின் கருத்துக்களை தமிழருக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்த கீழ்த்தர செல்லா வேசைகள் தாத்தாச்சாரி வேசைகள் விஷம் கக்கிக்கொண்டுதான் இருக்கும்
பெரியார் இவ்வளவு பெரிய பொறுக்கியா?
// உண்மையெல்லாம் தாத்தாசாரி போன்ற மலரையும் மலமென பிதற்றி திரியும் மனநோயாளிகளுக்கும் //
அரவிந்தன்,
ஈவெரா வழி பகுத்தறிவுகளின் தர்க்கம் நகைப்பானது. அஸ்வமேத யாகச் சடங்கில் பலியிடப்பட்ட குதிரையின் உடலருகே அரசி உறங்குவது எனும் வழக்கத்தை குதிரை அருகே உறங்கினாள் என்பது குதிரையோடு உறங்கினாள் என்றுதான் அர்த்தம் ஆகும் ஒருத்தி ஒருவனுடன் உறங்குதல் என்றால் புணர்தல் என்று தான் அர்த்தம் எனும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.
மரத்தடியில் உறங்கினாள் என்பதை மரத்தோடு உறங்கினாள் என்றும் மரத்தைப் புணர்ந்தாள் ஆக மரத்தடியில் ஓய்வெடுத்தல் என்பது மரத்தோடு புணர்தல் என்பார்களா?
மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோவில் பிரஹாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தாள் என்பதை கோவில் பிரஹாரத்தில் கற்களுடன் படுத்து உருண்டாள் என்றும் பக்தை கோவில் கற்களுடன் செய்த புணர்ச்சி என்பார்களா?
ஈவேரா பிதற்றிய பகுத்தறிவு மீதான அருவெறுப்பு பலமடங்கு அதிகரிக்கவே இம்மாதிரி எழுத்துக்கள் உதவும்.
அது சமூகத்தின் நல்லதற்கே!
சாதாரணமா கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டுவான்னு பகுத்தறிவுத் தமிழகத்தில் சொல்ல முடியாது இப்போ.
எல்லாத்துலேயும் குறிப்பா பகுத்தறிவு உணர்ச்சி புணர்ச்சி செய்து எல்லாமும் குறி, புணர்ச்சின்னு பலசரக்குலேயும் காமம் மட்டுமே பெருக்கெடுத்து ஓடுகிறது.
நான் படித்த ஒரு நூலில்("உபபாண்டவம்"-எஸ்.ராமகிருஷ்ணன்) கூட பாஞ்சாலி குதிரையுடன் புணர்வதாக கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் உண்மையா இல்லையா என்பதெல்லாம், இன்றைய நிலையில், எழுதுபவரை வைத்துத்தான் தீர்மானிக்க வேண்டியதாகவுள்ளது. உண்மையும், பொய்யும் மிகக் கலந்தவிட்ட இக்காலத்தில், எதையும் ஏற்றுக் கொள்ளவும், நிரகரிக்க முடியாததுமாக உள்ளது.
முடிவில், சாதாரணன் கொள்ளும் குழப்பத்தை வைத்தே ஒரு சிலர் தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். யாராயினும் உண்மையை கூறுவது உத்தமம். தொடரட்டும் உங்கள் பணி.
ஹரிஹரன் நீங்கள் ஓசை செல்லாவின் பதிவில் எழுதியிருந்ததை பார்த்தேன். எத்தனை சீரியஸாக இவர்களை எடுத்துக்கொண்டு எத்தனை பண்பாக பதில் கூறியிருந்தீர்கள். ஆனால் இவர்கள் ஒரு பொருளார்ந்த விவாதத்திலாவது இறங்கினார்களா? சும்மா முத்திரை குத்தி குத்தாட்டம் போடுவதுதான் இந்த கும்பலின் இலட்சியம். இந்த மாதிரி கும்பலுக்கு நெற்றியில் அடித்தது போலத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அடுத்தது அசுரன் என்று ஒரு ஆசாமி வந்திருக்கிறான் பாருங்கள். வந்து மாட்டினால் விடலாமா? ஆனால் என்ன இந்த கும்பலுக்கு கொஞ்சம்கூட வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது. ஹரி நீங்கள் சொல்லிய ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வெறுமனே ஒரு பரபரப்பிற்காகவும் கிளுகிளுப்பிற்காகவும் எழுதுகிற சமாச்சாரங்கள் இவை. இவையெல்லாம் உள்ளார்ந்து எழும் இலக்கியங்கள் கிடையாது என்பது எனது அபிப்பிராயம்.
//பழம் இனக்குழு மக்களின் சடங்குகள் அவை. அவை வேதங்களால் அழிக்கப்படவில்லை. ஆனால் அவை நிச்சயம் உருமாற்றம் அடைந்தன. இதைத்தான் உபநிடதங்கள் காட்டுகின்றன//
மாற்றம் மட்டும் நிரந்தரம் என்பதே இவை உணர்த்துகின்றன.
இதெல்லாம் புரியற அளவிற்கு அவர்களுக்கு அறிவில்லை.
கதோபனிடத்தில் குதிரைகள் ஐம்புலன்களாகவும், அவற்றை யோகம் என்ற கடிவாளம் கொண்டு அடக்கி வாழ்க்கைத்தேரை நெறியில் செலுத்தும் சாரதி யோக சாதகனாகவும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. இதன் படிமமாகவே கிருஷ்ணன் குதிரைகளுக்குச் சாரதியாகி கீதோபதேசம் செய்யும் செயலும் வேதோபநிடத அறிஞர்களால் காணப்படுகிறது.
சுத்தியல் மட்டுமே வைத்திருப்பவனுக்கு எல்லாப்பிரச்னையுமே ஆணியாகத்தான் தெரியும். ஆபாசங்களுக்கு ஆன்மீகத்திலும் ஆபாசம்தான் தெரியும்.
ஏக இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் அரவிந்தன் மற்றும் அவர் போல் இஸ்லாத்தின் மீது அநியாயமாக வெறுப்பை உமிழும் சகோதரர்களே!
//முதலில் வேதங்களை இந்துக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை இந்த வெறுப்பியல் வெறியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. குரானை போல வேதங்களை இந்துக்கள் நோக்கவில்லை. வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள்.//
இந்து மதத்தை பற்றி உண்மைக்கு புறம்பாகவும், தத்துவத்தின் உண்மையை புரியாமல் தவறாக இணையத்திலும், பத்திரிக்கையிலும், மேடைகளிலும் இந்து மத வெறியாகள் முழங்குவதால் மனம் வெதும்பும் மக்களே! இது போல தானே நீங்கள் இஸ்லாத்தின் மீது உண்மைக்கு புறம்பாகவும், இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சில கொள்கைகளின் (உதாரணத்திற்கு ஜிகாத்)எதார்த்தமான காரணங்களை புரியாமல் இனைணத்தில் அரவிந்தன், நேசகுமார் போன்ற சகோதரர்களும், மீடியாக்களிலே பால்தாக்ரே, ராமகோபாலன் போன்றவர்களும் இஸ்லாமிய வெறுப்புணர்வை விதைக்கும் போது முஸ்லிம்களாகிய எங்களுக்கும், நீங்கள் படும் வேதனை போன்றே மனம் நோகிறோம். ஏன் உணர முடியவில்லை? முஸ்லிமல்லாதவர் இந்து மதத்தை தாக்கும் போதும் கூட நீங்கள் எழுதும் பதிலில் இஸ்லாத்தை வம்புகிழுக்க மறப்பதில்லை என்பது மேலே நீங்கள் எழுதிய குற்றச்சாட்டே ஆதாரமாக இருக்கிறது.
நீங்கள் இஸ்லாத்தை தாக்குவதாக எண்ணி எழுதியிருந்தாலும்,அதுவும் கூட இஸ்லாத்துக்கு பெருமையே. முஸ்லிம்கள் எல்லோரும் திருக்குர்ஆனை இறைவேதமாக வாழ்வியல் சட்டமாக அறிவார்கள். ஏனென்றால் பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் நீங்கள், "உங்கள் இறைவேதம் எது?" என்று கேட்டால் திருக்குர்ஆன் என்ற பதில பிழையில்லாமல் வரும். அதே கேள்வியை இந்துக்களிடம் கேட்டால்? எத்தனை பேர் சரியாக பதிலளிப்பார்கள்? நடைமுறையில், பெரும்பான்மையான இந்துக்களுக்கு தங்களது வேதம்(கள்) இது தான் என்று சொல்லத் தெரியாது என்பது கசப்பான உண்மையே.
உண்மைக்கு புறம்பாக எவர் தகவல்களை மக்களிடம் கூறினாலும் கண்டிக்கபட வேண்டியவர்கள்.
4:135ல் இறைவன் கூறும் போது, "நம்பிக்கை கொண்டோரே! (முஸ்லிம்களே!), நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்."
நிச்சயமாக, இந்து மதத்தின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு வைப்பவர்கள் குழப்பாவாதிகள். இவர்கள் கொலையாளிகளை விடவும் கொடியவர்கள். 2வது அத்தியாயம் 217 வது வசனம் இதை பறைசாற்றுகிறது.
5வது அத்தியாயம் 64வது வசனத்தில்,"குழப்பம் செய்பவர்களை இறைவன் நேசிக்க மாட்டான்" என இறைவன் கூறுகிறான்.
எனவே நமக்கு எதை விரும்புகிறோமே அதையே பிறருக்கும் விரும்பும் பண்பாளர்களாக மாற வேண்டும். நான் ஏற்கனவே ஏற்று கொண்டேன்(ஏனென்றால் இது உத்த நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)யின் கட்டளை முஸ்லிம்களுக்கு), சகோதரர் அரவிந்தனும் அவர் தம் நண்பர்களும் ஏற்று கொள்ள தயாரா?
எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது
இந்த வேதம் என்பதில் எனக்கு ஆழ்ந்த அறிவு கிடையாததால் அதைப்பற்றி சொல்ல எனக்கு அருகதையில்லை,ஆனாலும் பதிவிலும் வந்த பின்னூட்டங்களிலும் ஆழ்ந்த அறிவு வெளிப்படுகிறது.
//
சுத்தியல் மட்டுமே வைத்திருப்பவனுக்கு எல்லாப்பிரச்னையுமே ஆணியாகத்தான் தெரியும்.
//
சுத்தியலுடன் அருவாளும் நட்சத்திரமும் சேர்த்தே வைத்திருக்கிறார்கள்! :D
அதற்கு மேல் அறிவு வளர மறுப்பதன் காரணமும் அதுவே.
Post a Comment
<< Home