Thursday, March 01, 2007

பாலியல் தொழிலாளியில் என் அன்னை


அவர் ஒரு பெரிய மகான். அவரை தரிசிக்க பல பெண்கள் அன்று வந்திருந்தனர். அப்போது வெளியே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை அந்த மகான் கண்டார். அவள் பெயர் ரமணி. அவள் ஒரு பாலியல் தொழிலாளி. உண்மையில் அவள் அந்த மகானிடம் சில சமயங்களில் மன அமைதி பெற வருவதுண்டு என்றாலும் மக்கள் உன்னைப் போன்ற இழிந்தவர்களெல்லாம் இங்கே வரக்கூடாது என கண்டித்ததால் அங்கே வந்து அவரை பார்ப்பதையே தவிர்த்து வந்தாள். அந்த மகான் அவளை உள்ளே அழைத்தார். "ஏனம்மா நீ இப்போதெல்லாம் இங்கே வருவதில்லை என அன்புடன் விசாரிக்க ஆரம்பித்தார். அங்கு இருந்த மற்ற பெண்கள் சங்கடத்தால் நெளிந்தனர். கூனிக்குறுகி அமர்ந்திருந்தனர். நம்மைப் போன்ற கற்புடைய இல்லத்தரசிகள் இருக்கும் போது குரு தேவர் போயும் போயும் ஒரு விலைமகளுடன் பேசுகிறாரே என எண்ணினர் போலும். அவர்களது எண்ண ஓட்டத்தை அறிந்தவர் போல அந்த மகான் எழுந்தார். அருகில் இருந்த கோவிலுக்குள் சென்றார். அங்கே நின்றது ஒரு காளி சிலை. அதன் அருகில் சென்ற அந்த மகான் அந்த பெண்கள் அனைவரும் கேட்கும் படி பிரார்த்தனை செய்தார்:
"அம்மா நீயே விலைமகளாக விளங்குகிறாய். நீயே குடும்பப்பெண்ணாகவும் உள்ளாய். சர்வமும் நீயே. பெண்மை அனைத்தும் நின் வெளிப்பாடே"
ரமணியை விலைமகளாக வெறுத்தொதுக்கிய அப்பெண்களின் கண்கள் திறந்தன.


அந்த மகான் வேறு யாரும் இல்லை பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரே ஆவார். அவரது சீடரான பாபுராம் இந்த நிகழ்ச்சியை கண்டு உள்ளுருகி தமது நினைவுகளில் பதிந்துள்ளார். உண்மையான ஆன்மிகம் என்பது சமுதாய அமைப்பில் புரையோடிக் கிடக்கும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்வதன்று. மாறாக நலிந்தாருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நமது இதயத்தின் மிக சிறந்த அன்பினை முழுமையாக அளிப்பதே ஆகும்.


"வாடுபவர்களையும் துன்புறுபவர்களையும் காணும் போது அவர்கள் அனைவரும் இறை சொரூபமே என உணருங்கள். இறைத்தொண்டுக்கான வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படுகிறது என உணர்ந்து அவர்களுக்கு சேவை புரிய முனையுங்கள்" - ஸ்ரீ குருஜி கோல்வல்கர்

14 Comments:

Blogger We The People said...

//உண்மையான ஆன்மிகம் என்பது சமுதாய அமைப்பில் புரையோடிக் கிடக்கும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்வதன்று. மாறாக நலிந்தாருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நமது இதயத்தின் மிக சிறந்த அன்பினை முழுமையாக அளிப்பதே ஆகும்.//

உண்மை!

1:17 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

ஆம். இதே முகமது என்றால் என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். கல்லால் அடிக்கச் சொல்லி உத்தரவு கொடுத்திருப்பார். அதே சமயம், மற்ற மதப் பெண்களை வன்புணர்வதை கடவுள் அனுமதிக்கிறார் என்று குர்-ஆன் ஓதியிருப்பார்.

காலத்தின் கோலம், மனிதகுலத்தின் ஒரு பெரும்பகுதி முகமது விளைவித்த மாயையில் உழன்று கொண்டிருக்கின்றது.

2:33 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

ஸ்தாபகாய ச தர்மஸ்ய
ஸர்வ தர்ம ஸ்வரூபினே
அவதார வரிஷ்டாய
ராமக்ருஷ்ணாய தே நம:

2:36 AM, March 01, 2007  
Blogger சீனு said...

//"அம்மா நீயே விலைமகளாக விளங்குகிறாய். நீயே குடும்பப்பெண்ணாகவும் உள்ளாய். சர்வமும் நீயே. பெண்மை அனைத்தும் நின் வெளிப்பாடே"//

மிகவும் நெகிழ்சியான, உண்மையான வரிகள்.

3:58 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். படிக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நம்பமுடியவில்லை. ஒரு விலைமகளை தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஒருவர் மரியாதையாக நடத்துவதைக்கூட ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால், தனது தாயாக மதிக்கும் ஒரு தெய்வத்தை விலைமகளாகவும் நீ இருக்கிறார்ய் என்று கூறியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

மன்னிக்கவும். இது உண்மையிலேயே நடந்ததா?

5:02 AM, March 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வி தி பீப்பிள், நேசகுமார், பச்சைதமிழன், சீனு நன்றி.

மலர்விழி, இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? தம்மை மயக்க அனுப்பப் பட்ட விலைமகளையும் தாயாக கண்டவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அனைத்து பெண்களிடமும் அன்னையே இருக்கிறாள். பூனைக்குட்டியை தாயாக ஜகதாம்பிகையாக பார்த்து பிரசாதத்தை ஊட்டியவர் அவர். எனவே விலைமகளிடம் சக்தியை கண்டதில் வியப்பென்ன. எந்த அளவு அந்த விலைமகளிடம் ஆன்ம ஏங்குதலை உணர்ந்திருந்தால் அவரை பரமஹம்சரே அழைத்து பேசியிருப்பார். சமுதாயம் குடும்பம் போன்ற அமைப்புகளில் இருக்கும் வன்முறைக்கு கொடுக்கப்படும் போக பலிகிடாக்கள் அல்லவா அப்பெண்மணிகள். அவர்கள் செய்யும் தியாகம், அவர்களுக்கு நம் ஒட்டுமொத்த சமுதாயம் செய்யும் துரோகம் இவை அனைத்துமே அவர்களில் அன்னையை காண செய்திருக்கக் கூடும். நம்முடைய தமிழ்நாட்டின் கனவு தொழிற்சாலைக்கு பலியிடப்பட்ட (தற்கொலை செய்து கொண்ட) நடிகையான சில்க் சுமிதா ஒருமுறை கோமதீஸ்வரர் குறித்து எழுதியிருந்தார். "அந்த பெரிய சாமி முன்னாடி நிற்கிற போது என்னோட கவலைகள் எல்லாமே சிறியதாக போய்விடுகிறது." எனக்கு சரியாக அவர் முழுதும் எழுதியது நினைவில்லை. ஆனால் அவர் எழுதிய வரிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஞாபகம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே தேவியின் ஜகன்மாதாவின் சொரூபம் எனும் நினைவு நமக்கு சிறிது எழும் என்றாலும் கூட நமது கனவு தொழிற்சாலைகளில் வருடத்துக்கு ஒரு முறையோ இருமுறையோ நடக்கும் நடிகை நரபலிகளை தவிர்க்கமுடியும். இந்நிகழ்ச்சி ஆதாரபூர்வமானது. குருபாயான சுவாமி பிரேமானந்தர் (பாபுராம்) பதிவு செய்த நிகழ்ச்சி இது. நவம்பர் 2006 ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திலும் இது வெளியாகியுள்ளது.

6:52 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

மலர்விழி,

ஆபிரகாமிய கலாச்சாரத்தால் ஏற்பட்ட உளச்சீரழிவு இது. முதலாக செக்ஸுக்கும் கடவுளுக்கும் எதிர்மறை உறவு என்பதே ஆபிரகாமிய அல்லது அதையொத்த சிந்தனையே.

கடவுளை மனிதக்குணங்களோடு வரித்துப் பார்த்தால் தான் உடலுக்கும், உடல் ரீதியான செயல்பாடுகளுக்கும் ஒரு மனிதரின் உணர்வுகளுக்கும் தொடர்பு படுத்தி கற்பனை செய்ய முடியும்.

தூணிலும் உறைகிறான் துரும்பிலும் உறைகிறான், எல்லாமாய் விரிந்து பரந்து, காண்பன யாவுமாய் இருக்கிறான் இறைவன் என்று கொண்டால், அந்த இறை பாலியல் தொழிலாளியிடமும் இருப்பதில் வியப்பென்ன? அசுரர்களுக்கும் அருள் பாலிப்பவனாகத்தான் இறையை இந்த மண் உருவகித்துள்ளது. அப்படி இருக்கையில் அபலைகளிடம் மட்டும் தீட்டுப் பார்த்து தள்ளி நிற்கும் இறை என்று எண்ணுவது நமது அறியாமையால் எழுந்த மன மயக்கமே.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். புல்லை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது அதில் படிந்த காலடித்தடங்கள் கூட வலித்தது இராமகிருட்டினருக்கு. இந்த காருண்யம் தான் ஒரு மகானின் அடையாளமே தவிர, தெருவில் போகும் பெண்களின் மாராப்பு விலகுவதைக் கண்டு புலம்புவது கடவுளாய் இருக்க முடியாது. அது சபலமனமுடைய நபிமார்களின், சாமியார்களின் கற்பனையில் உதித்த கடவுளே. அப்படிப் புலம்புவர்களும் இறையைக் கண்டவர்களாக இருக்க முடியாது. இறை என்று நினைத்து தமக்கு ஏற்பட்ட சிற்சில ஆன்மீக அனுபவங்களால் குழம்பிப் போன காமுகர்களாகத்தான் இருக்க முடியும்.ஏனென்றால் நமது மனதில் அழுக்கிருந்தால் தான் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் புலம்ப, குறை சொல்லத் தோன்றும்.

8:27 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

Yaa Devi Sarva Bhooteshu Matru Roopena Samsthita
Namastasyai Namastasyai Namastasyai Namo Namaha!

Salutations again and again to the Devi (Goddess) who resides in all beings in the form of Mother.

ஸ்ரீவித்யா

9:21 PM, March 01, 2007  
Blogger ஜடாயு said...

// உண்மையான ஆன்மிகம் என்பது சமுதாய அமைப்பில் புரையோடிக் கிடக்கும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்வதன்று. மாறாக நலிந்தாருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நமது இதயத்தின் மிக சிறந்த அன்பினை முழுமையாக அளிப்பதே ஆகும். //

அரவிந்தன், உண்மையான ஆன்ம ஞானியின் பார்வை இது தான். நேசகுமார் சுட்டியிருப்பது போல, பல ஆபிரகாமிய நிலைப் பாடுகளால் இது நம்பமுடியாதது போல எண்ணும் மனநிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.

வங்கத்தின் சைதன்ய மகாப்ரபுவும் விலைமாதரை வணங்கி அவர்களை கிருஷ்ணனின் உருவமாகவே கண்டு போற்றினார் என்று படித்திருக்கிறேன்..

தன் இறைவனை இன்று அரவாணிகள், அலிகள் என்று சமூகத்தால் கேலி செய்யப்படும் பால் இனத்தவராகவும் கண்டு வணங்கினார் ஒரு மாபெரும் தமிழ் ஞானி, பக்தர் -

"பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க!"

"பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி"

என்று திருவாசகத்தில் பாடுகிறார் எல்லா உயிர்கள் மீதும் அளப்பரும் கருணை கொண்ட அருட்செல்வர் மாணிக்க வாசகர்.

5:03 AM, March 02, 2007  
Anonymous Anonymous said...

Yaa Devi Sarva Bhooteshu Matru Roopena Samsthita
Namastasyai Namastasyai Namastasyai Namo Namaha!

இந்தப்பாடல் எதில் வருகிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். முழுசாக் கேட்க ஆசை.

9:14 AM, March 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Yaa Devi Bharatha Bhooteshu Hinduthva Roopena Samsthita
Namastasyai Namastasyai Bharathambike Namo Namaha!

9:31 AM, March 03, 2007  
Anonymous Anonymous said...

பெரியார் பற்றி பேசும்போது ஆபிரகாமிய கொள்கைகளை துணைக்கழைத்துக் கொண்டு விக்டோரியன் மாறல் பேசவேண்டியது மறுபக்கம் வந்து ஆபிரகாமிய மதங்கள் காமத்தை அந்தரங்கமாக்கிவிட்டன என கவலை கொள்வது. ரெம்ப நல்லாயிருக்குங்க நேசக் குமார்.

எதுக்கெடுத்தாலும் இப்படிப் பேசிக்கிட்டிருந்தா நம்மள திருத்தவே முடியாதுங்க.

ஆன்மீகத்துக்கும் காமத்துக்கும் உல்ள தொடர்புன்னு நீங்க சொல்றது தேவதாசி முறையையுங்களா?

200 வருச ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னும் இந்துக்கள் இந்துக்களாகவே இருக்கையில எப்படி இந்த விக்டோரிய கலாச்சாரம் வந்துச்சு? ஆங்கிலேயர் இந்து மதத்த பரப்பினாய்ங்களா?

ஆபிர்காமிய மதத்துல செக்ஸ் பண்னாதீங்கன்னு சொல்றாங்களாக்கும்? நாகரீகத்தின் வளர்ச்சியின்பேரில் வர்றதில்லையா இதெல்லாம்? வெள்ளக்காரன் நாகரீகத்த மொதல்ல கண்டுகிட்டான்..அதக் கொண்டுவந்து நமக்கு பேண்டும் சட்டையும் போட்டுவுட்டான்.

இப்ப கோவில்ல தேவதாசி இல்லைன்னு குமுறுராரு நேசம்.

12:39 PM, March 20, 2007  
Blogger மங்கை said...

//உண்மையான ஆன்மிகம் என்பது சமுதாய அமைப்பில் புரையோடிக் கிடக்கும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்வதன்று. மாறாக நலிந்தாருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நமது இதயத்தின் மிக சிறந்த அன்பினை முழுமையாக அளிப்பதே ஆகும். ///

அருமை...உண்மை...தெளிவா சொல்லி இருக்கீங்க நீலகண்டன்
அருமையான பதிவு.. படித்துமுடித்தபின் கண்களில் ஏனோ கண்ணீர் துளிகள்...

மேலும் அவரைப் பற்றி படிக்க வேண்டும் ஆவலை தூண்டுவிட்டது.. கண்டிப்பாக படிக்கிறேன்..நன்றி..மனம் நிறைந்து விட்டது...

7:46 PM, March 20, 2007  
Anonymous Anonymous said...

வெள்ளக்காரன் நாகரீகத்த மொதல்ல கண்டுகிட்டான்..அதக் கொண்டுவந்து நமக்கு பேண்டும் சட்டையும் போட்டுவுட்டான்.
ada intha anany history paditthathillai polum nagarigam enbathu muthan muthalil arimugamanathu namma barathathilthan. innamum athanai meerum oru nagarigam kandupidikkappadavillai pantum sattaiyum mattum nagarigam enbathalla unmayil nagarigam nadaimurai vazhkayil ulladhu
mudhalil athai purindhu kollavum.

2:38 PM, August 08, 2009  

Post a Comment

<< Home