மசூதியில் அம்மன் சிலை
குல்பர்கா: மசூதி இடத்தில் தோண்டும் போது, அம்மன் சிலைகள் கிடைத் துள்ளன. இதனால், குல்பர்கா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது.
குல்பர்கா மாவட்டத்தில் உள்ள அப்சல்பூர் தாலுகாவில் உள்ள மலாபாட் சின்சோலி கிராமம். இங்குள்ள மசூதி இடத்தில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக, தோண்டும் பணி நடந்தது. அப்போது, பூமியில் இருந்து அம்மன் சிலை கிடைத்தது. தொடர்ந்து தோண்டும் போது, இன்னும் சில அம்மன் சிலைகள் கிடைத்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு சிலைகள் கிடைத்ததை அடுத்து இன்னும் பதட்டம் அதிகரித்தது. அந்த நிலையில் போலீசார் அங்கு வந்துவிட்டனர். உடனே, தோண்டும் பணியை நிறுத்தி விட்டனர். நகராட்சி உயர் அதிகாரிகளும் வந்துவிட்டதால், பணியை நிறுத்திவிட்டு, அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் வந்து, ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த இடத்தை உடனே, அகழ்வாராய்ச்சி துறை கையகப்படுத்த வேண்டும். அங்கு தொடர்ந்து தோண்ட வேண்டும். அப்போதுதான், பழங்கால சிலைகள் இன்னும் கிடைக்கலாம். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கலாம். அதனால், அகழ்வாராய்ச்சி சிறப்பு வாய்ந்த விஷயம் என்பதால், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நிடவடிக்கை எடுக்கும்படி, உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போதைக்கு போலீசார், அந்தப் பகுதியில் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். பதட்டம் தணிந்ததும், பேச்சு நிடத்தி, தோண்டும் பணியை மீண்டும் தொடருவது பற்றி கடிவு செய்யப்படும் என்றும் தெஙூகிறது.
(நன்றி: தினமலர் : 20-2-2007 உரல்:http://www.dinamalar.com/2007feb20/events_ind7.asp)
மறைந்த வரலாற்றறிஞர் சீதாராம் கோயல் இந்து கோவில்களுக்கு நிகழ்ந்தது என்ன என்பது குறித்து இரண்டு பாகங்கள் கொண்ட நூலை உருவாக்கியுள்ளார். முதல் பாகம் கோவில்கள் உடைப்பதில் இஸ்லாத்தின் இறையியலை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு பேசுகிறது. இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் வாக்குமூலங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஆகும்.
11 Comments:
இசுலாமியர்கள் மசூதியை காலி செய்து அந்த இடத்தில் கோவில் ஒன்று அமைத்துகொள்ள அனுமதிக்கவேண்டும்.
YEs, Indian History has never been taught clearly to our people..
என்னங்க அனானி?இன்னொரு கோவிலா?
பேசாமல் கலைப்பொருட்கள் கிடைத்தால் அதைமட்டும் கையகப்படுத்திவிட்டு,மசூதி மேம்பாட்டுக்கு வழி செய்யவிடவேண்டும் என்பது என் கருத்து.
மண்ணுக்குள் இருக்கும் வரை தெரியாமல் இருந்தது அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே!!தேவையில்லாமல் உணர்வுகளை உசுப்புவதில் யாருக்கும் பிரோயோஜனம் இல்லை.
திரு.சோ பேசியது.
அந்தக் காலத்தில் – முஷ்டாக் அலி காலத்திலிருந்து மொஹம்மது நிஸ்ஸார் காலத்திலிருந்து – இன்று வரை, கிரிக்கெட்டுக்கு முஸ்லிம்கள் நிறைய பேர் தங்கள் பங்கை செலுத்தி இருக்கிறார்கள். ஹாக்கியிலும், தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு வாசகர் பேசும்போது சொன்னார் – கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள், அந்த குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள் என்று சொன்னார். (கைதட்டல்). மேலும் அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல.
உங்கள் பதிவை படித்துவிட்டு இட்லி வடை போன போது இது "கிடைத்தது".
பதிவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும்.. பார்வைக்காக.
இந்து கோவில்களை இடித்த இஸ்லாமியர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அயோத்தியில் நடந்தது போல் இந்து கோவில்களை இடித்து கட்டபட்ட மசூதிகளை மீண்டும் இந்து கோவில்களாக மாற்ற வேண்டும்
செந்தில் ராஜா
தாராவி
மும்பை
அரவிந்தன், இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?
நீலகண்டன் சார், மசூதி கட்டப்போகும் இடங்களில் 'திடீரென்று' சாமி சிலைகள் தோன்றுவதும் ஒன்றும் அதிசயம் கிடையாது. உதாரணத்திற்கு ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் மசூதி கட்ட இருந்த இடத்தில் திடீரென்று பிள்ளையார் சிலை தோன்றியது. அரசு தலையிட்டு அந்த சிலையை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதித்தார்கள்.
அப்சல்பூரிலும் இதே போல அம்மன் சிலைகள் 'தோன்றியிருக்க' வாய்ப்பிருக்கிறது.
மரைக்காயரே..
எப்படி எழுதினாலும் அதுல குசும்பு பன்றீங்களே எப்படிங்கானும்?
அரவிந்தன் இப்படி எழுதி இருந்தா ஒத்துட்டு இருப்பீங்களோ ?
" மசூதிக்குள் அம்மன் சிலையை ஒளித்து வைத்த இந்துத்துவ தீவிரவாதிகளின் மலம் கக்கும் செயல் "
இது சரியா இருக்கா ??
முதல்ல வரலாற்றை பாருங்க சார்.. பல மசூதிகள் கோவில்களை அழித்து அதன் மேல் கட்டப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் உண்டு. அது அந்த கால அரசர்கள் மற்றும் வெறியர்களின் கோரத்தாண்டவம். அது நடந்தது என்பதை புரிந்துக் கொள்வோம்
மற்றபடி வடுவூர் குமாரின் பதில் தான் என்னுடையதும்.
எங்கும் நிறைப் பரம்பொருள் சிலையில் மட்டும் தான் இருக்கும் அல்லது இந்த இடத்தில் தான் இருக்கும் என்பது மக்களின் அறியாமையால் எழும் துன்பம். பெரும்பான்மையினர் இதில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் எல்லா மதமும் அடக்கம்.
இறை ஆண்பாலோ பெண்பாலோ அல்ல..
ஆணல்லன், பெண்ணல்லன் அலியுமல்லன்.. அப்படின்னு ஒரு பாட்டு வரும் மறந்த்து போச்சு.. நம்ம ஞானவெட்ட்டியான் அல்லது தெரிந்த மற்றவர்கல் பதில் சொல்வார்களா ?
பூமிக்கடியில் முதன்முதலில் தோண்டிய போது கிடைத்த சிலைகள்கூட ஹிந்துத்துவ ஆட்கள் ஏற்கனவே புதைத்துவைத்ததுதான். மரைக்காயர் சரியாகவே கண்டுபிடித்தார்.
ஆனால் என்ன, ஹிந்துத்துவ ஆட்கள் புதைத்துவைத்தபோது அங்கே மசூதி இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் இஸ்லாமியப் பெரியவர்கள் கோயிலை இடித்து மசூதி கட்டினார்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அது மதச்சார்பின்மைக்கு எதிரானது.
உங்கள் சொத்தை உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து அனுபவிக்கிறார். இப்போது கோர்ட்டில் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்மேல் கேஸ் போடுகிறீர்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ உங்களது சொத்து உங்களது முப்பாட்டனார் காலத்தில் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் அதனால் உங்களுக்கு அது சொந்தம் இல்லை என்றும் வாதாடுகிறார். இந்திய கோர்ட்டில் கேஸ் இழுத்தடித்துக்கொண்டே போகின்றது. பல ஆண்டுகளாக இழுத்தடித்ததால் அந்தச் சொத்தை உங்கள் பக்கத்துவீட்டுப் பங்காளியே அனுபவித்து வருகிறார்.
பல ஆண்டுகளாய் அனுபவித்ததாலேயே இது எங்களுக்குச் சொந்தம் என்று அவர் வாதாடுவதில் உள்ள நியாயம், மரைக்காயரின் வாதத்திலும் உள்ளது.
அடப்பாவிகளா, சொத்துதான் கிடைக்காது. நம்மிடம் இப்படி ஒரு சொத்து இருந்தது என்பதை என் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தினால் நாளைக்கு இருக்கிற சொத்தையாவது காப்பாற்றிக்கொள்வானே என்றால், இல்லை, அப்படி செய்தால் உங்கள் குழந்தை பக்கத்து வீட்டுக்காரர்மேல் வன்மம் கொண்டுவிடும். அது அமைதியான நிலைக்கு உதவாது. எனவே, பக்கத்துவீட்டு பங்காளி அடுத்தவர் சொத்தை தனதாக்கிக்கொண்டே இருப்பார், நம் குழந்தைகள் அமைதியின்பொருட்டு மூலையில் முக்காடு போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் பேசுவர்.
அமைதியான உலகத்தை மெதீனத்து ஸிவில் மார்க்கம் மூலமும், மெக்கத்து கிரிமினல் மார்க்கம் மூலமும் பரப்பும் அமைதி மார்க்கம் பயிலுவோர் வாழ்க !!
வாய்ஸ் ஆஃப் இண்டியாவின் முகவரி
VOICE OF INDIA
2/18, Ansari Road
New Delhi - 110 002
India
ஆன் லைன்னில் இங்கே இருக்கின்றன:
http://voiceofdharma.org/books/htemples1/
http://voiceofdharma.org/books/htemples2/
வடுவூர் சாரின் பதிவு ஒரே நகைச்சுவையாக இருக்கிறது.நீங்கள் இன்னும் சிங்கையில்தானே இருக்கிறீர்கள்?அப்படியே மலேசியாவில் ஒரு தடவை சென்று வாருங்கள்.மாதாமாதம் அங்கே இந்து கோயில்கள் உடைக்கப்படுகின்றன,இது உங்களுக்கு தெரியுமா?முஸ்லிம்கள் இந்து கோயில்களை இஸ்டம்போல் உடைத்து தரைமட்டமாக்கலாம்,அங்கே மசூதிகளை கட்டலாம்,ஆனால் இந்துக்கள் மட்டும் மூடிக்கிட்டு இருக்கவேண்டும் அப்படிதானே சார்?
//அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல//
இது முஸ்லிம்களுக்கும் பொருந்தும்...
Post a Comment
<< Home