ஆதிக்க கூட்டணிக்கு எதிராக போரிட்ட தலித் வீரர்
வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வீரமுழக்கமிட்ட பாளையக்காரர் பூலித்தேவர். ஆர்க்காட்டு நவாப்பு அனுப்பிய துரோகப்பட்டாளமும் வெள்ளை கும்பனிப்பட்டாளமும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களை களம் பலவற்றில் எதிர்கொண்டு எதிரிக்கும்பலை புறங்கண்ட மறவர் பூலித்தேவர். 1755 இல் மாபூசுக்கான் களக்காட்டு கோட்டையை கைப்பற்றினான். பின்னர் மதுரைக்கு சென்றான். அப்போது பூலித்தேவர் மார்த்தாண்டனுக்கு அக்கோட்டையை போராடி மீட்டுக்கொடுத்தார். பின்னர் அவர் நடத்திய தாக்குதல்களில் இரண்டு கும்பனி படை தளபதிகள் கொல்லப்பட்டனர். திருவில்லிப்புதூர் கோட்டை ஆர்க்காட்டு நவாபின் தம்பி ரகீம் என்பவனது கட்டுப்பாட்டில் இருந்தது. 2500 குதிரைப்படைகள், 3000 காலாட் படைகள் 30 ஆங்கிலேய அதிகாரிகள் என அவனது படை இருந்தது. திடீர் தாக்குதல் மூலம் இந்த கோட்டையை பிடித்தார் பூலித்தேவர். உயிர் தப்பி ஓடினான் ரகீம். இதனையடுத்து (இசபல்கான்) கான்சாகிப் என்பவன் பூலித்தேவர் மீது படையெடுத்து வந்தான். 1759 நவம்பர் 6 ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலை கோட்டையை கூலிப்படைத்துரோகி காட்டாளன் கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பினான் கான்சாகிப். வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான் கான்சாகிப். துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான் இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்கு காசாசை காட்டி தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் பூலித்தேவரை தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப்பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக்கும்பலை தாக்கலாயினர். பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரதிலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக்கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது. வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுக கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கு வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரை புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறி பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது. பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறி குமுறி கண்ணீர் சிந்தினார்.
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே
...
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே
...
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ ... (பூலித்தேவன் சிந்து)
இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.
பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார்.அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது. வாழ்க தமிழர் வீரம். ஒழிக ஆதிக்க வெறி பிடித்தலையும் கூட்டம்.
(மாமன்னன் பூலித்தேவன் - ந.இராசையா, 2003 பக்.134-135)
4 Comments:
எம் மூதாதையரான வெண்ணிலாக்கடியின் பாதங்களைப் பணிகிறேன்.
இப்போது மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் அளித்தவரல்லவா அவர்.
சிலிர்ப்பூட்டும் வீர வரலாறு. அந்த நாட்டுப் பாடல் வரிகள் வீரம் கொப்பளிக்கின்றன!
// வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறி பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது. //
வீர சிவாஜி மன்னரின் படையில் இருந்த தாணாஜி மால்சுரே என்ற மாவீர சேனாதிபதி கோண்டானா என்ற மலைக் கோட்டையை கைப்பற்றும் போரில் தன் தலை வெட்டப்பட்டும் மன்னர் வரும் வரை உடல் மட்டும் ஆடிக் கொண்டிருந்தது என்பது போல அங்கே ஒரு வீரக் கதைவழக்கு உண்டு.
இந்த வரலாறு அதை நினைவூட்டுகிறது.
//பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரதிலகம். //
பூலித்தேவன் ஒரு தேவர்.
வெண்ணிலாக்காலாடி ஒரு தேவேந்திரகுல வெள்ளாளர்.
அன்றைக்கு ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு அடித்துக் கொள்கிறார்கள்.
ஆ ஊ என்றால் பார்ப்பனர்களைக் குறை சொல்லும் கும்பல் பின்னாலே வரும் பாருங்கள் சார்.
http://www.investigateislam.com/cgi-bin/aljazeratv.asf
ore naalil 16000 muslimgal antha mathaththai vittu veliyerinargal.
al jazeera news
:)) vahabi kasu kidaikkalaiyO ?
Post a Comment
<< Home