ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2
செல்வது என முடிவு செய்து சென்றோம். அவர்களது தியான அறையில் பல தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு சிலையைக் காட்டி நண்பரிடம் 'இது யார்
தெரிகிறதா?' என்றேன். கூர்ந்து பார்த்த நண்பர் தெரியவில்லை என்றார். 'ஏசு' என்றேன். மீண்டும் பார்த்த அவர் கடுப்பாகிவிட்டார். நிச்சயமாக ஏசு கிடையாது. என்ன சொல்கிறீர்கள்!
இஷ்டத்துக்கு ஏசு கையில் எதை வேணுமானாலும் கொடுத்து பொம்மை செய்து இதுதான் ஏசு என்பது நன்றாக இல்லை. எங்கள் மத நம்பிக்கையை கிண்டல் செய்கிற மாதிரி
இருக்கிறது. என பொரிந்து தள்ளிவிட்டார். வினோபா ஆசிரம சர்வ தரும பிரார்த்தனையில் 'யஹோவ சக்தி நீ ஏசு பிதா பிரபு நீ' என வருகிற வரிகளையும் அவர் விமர்சித்தார். இந்த ஏசு உண்மையான ஏசு கிடையாது என்றார். அதற்கு பிறகு வேறு ஏதேதோ பேசினோம். பிறகு ஊர் திரும்பிய பின்னர் அவரிடம் மற்றொரு ஏசு படத்தை காட்டினேன். இது யார் என்றேன். ரொம்ப அன்போடு 'ஏசப்பா' என்றார். விசயம் என்னவென்றால் அவர் வினோபா ஆசிரமத்தில் பார்த்த ஏசுவுக்கும் இந்த ஏசுவுக்கும் வேறுபாடு அதிகமில்லை. இதோ கீழே பாருங்கள். இது பிறகு நான் அந்த கிறிஸ்தவ சகோதரரிடம் காட்டிய ஏசு படத்தை ஒட்டிய படம்.
கீழே இருப்பது வினோபா ஆசிரமத்தில் உள்ள ஏசு உருவம்.
இரண்டிலும் ஏசு 'நல்ல இடையன்' என காட்டப்படுகிறார். ஆனால் ஒன்றில் ஆடு மேய்க்கும் கோல் மற்றதில் புல்லாங்குழல். இந்த வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். இடையனின்
இசைக்கருவி இழந்து ஏசு இடையன் கை கோலேந்திய இறை அரசனாக மாறியது கிறிஸ்தவ இறையியலின் முக்கிய மாற்றம் என்று கூறலாம். இதன் வரலாற்று பின்னணியை
அறிந்து கொள்ளும் போது இதனை நாம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஏசு குறித்த சித்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த போது அவை பிற புனைவு புராண நாயகர்களின் அம்சங்களை உள்வாங்கியே வளர்ந்தது.
கிறிஸ்தவத்தின் தொடக்க கால கட்டத்தில் ரோமானியத்தில் ஒரு முக்கிய மறை-சமய இயக்கமாக ஓர்பியஸ் மதம் விளங்கியது. ஒரு விதத்தில் ஓர்பியஸ் சமயம் அதற்கு முந்தைய டயனோசியஸ் சமயத்துடன் ஒட்டுறவு கொண்டதாக விளங்கியது. அதன் நீட்சியாக அதே நேரத்தில் டயனோனிஸியஸ் சமயத்தினை மறுதலிக்காதவாறு விளங்கியது. தத்துவம், புராணம், ஒழுக்க முறைகள், மறை-ஞானம் ஆகிய அனைத்தும் கொண்ட ஆர்பியஸ் சமயத்தின் மையத்தில் விளங்கியவர் ஆர்பியஸே ஆவார். ஆர்பியஸ் ஞானி கூடவே இசை மேதை. அவரது இசை மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் ஈர்த்து மெய்மறந்திட வைக்கக் கூடியதாகும். எனவே அவர் நல்ல மேய்ப்பன் என அறியப்பட்டார்.
ஆர்பியஸும் மரண உலகு சென்று திரும்பியவர். கொலை செய்யப்பட்டவர். மேலோட்டமான வேற்றுமைகளுக்கு அப்பால் ஏசு காதைக்கும் ஓர்பியஸூக்கும் பல இணைகள் உண்டு. ஏசு யாருக்காக இறந்தார்? கிறிஸ்தவர்கள் உலகின் பாவங்களுக்காக ஏசு இறந்ததாக கூறிடுவர். ஆனால் இந்த பாவத்தை இரத்தத்தால் துடைத்தல் என்பது ஏசுவை ஏற்பது மூலமே செயல்படுகிறது. ஏசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பாவங்களே அவரது இரத்தத்தால் துடைக்கப்படுகின்றன. நம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கமாவார்கள். இச்சபை ஏசுவின் மணவாட்டி ஆகும்.
சுருக்கமாக சொன்னால் ஏசு தன் மணவாட்டியினை மீட்கவே சிலுவையில் மரித்தார் எனலாம். இதையே ஆர்பியஸும் செய்தார். அவர் தம் மனைவியான யூரிடைஸுக்காக மரித்தார். மீள்கையில் அவரை கண்டவர்கள் பெண்கள் ஆவர். ஏசுகாதையிலும் மரணத்திலிருந்து மீண்ட ஏசுவை கண்டவர் மகதலேனே ஆவார். ஏசு மகதலேனிடம் தன்னை தொடாதிருக்கக் கூறுகிறார். யோவான் சுவிசேசத்தில் வரும் 'Noli me tangere' (என்னைத் தொடாதே) எனும் இலத்தீன் வாசகங்கள் பிரசித்தியானவை. பல மத்தியகால ஓவியங்களின் கருவும் கூட. இந்த ஓவியங்களில் ஏசு ஒருவித வெறுப்பு அல்லது அச்ச உணர்ச்சியுடன் மேரி மெகதலேனிடம் இருந்து விலகுவதைக் காணமுடியும். ஓர்பியஸ் காதையில் பெண்கள் ஓர்பியஸை கொல்கின்றனர். இங்கோ ஏசுவை தொடாமலே ஏசுவின் மண்ணுலக நீத்தலை அறிவிப்பவளாக மேரி மெகத்லேன் ஆகிறார். யோவான் சுவிசேசத்தின் இந்த இடம் ஓர்பியஸ் தொன்மத்தின் அழுத்தத்தையேக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
எனவே ஏற்கனவே ரோமானிய உலகில் நல்ல மேய்ப்பனாக அறியப்பட்ட ஓர்பியஸின் சித்திரத்தில் ஏசுவாக கிறிஸ்தவர்கள் வழிபட்டனர் என்பதனை அக்கால கிறிஸ்தவ மண்ணடியிலுள்ள அடக்க அறை சித்திரங்களில் (catacombs) காண முடிகிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எந்த ஓவியம் ரோம பிரக்ஞையில் ஓர்பியஸைக் காட்டியதோ அதே போன்ற ஓவியம் நாலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகத்துக்குள் வரையப்பட்ட போது அது கிறிஸ்துவை நல்ல மேய்ப்பனாக காட்டுவதாக ஆகியது.
ஓர்பியஸின் இடத்தில் ஏசு வந்த போது ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. டயனோசியஸ்-ஓர்பியஸ்-மித்ரா ஆகிய தெய்வச் சடங்குகளின் சுழல்தன்மை கிறிஸ்தவத்தில் இல்லாது போயிற்று, முந்தைய தெய்வ சம்பிரதாயங்களை நிராகரிக்காமல் உள்வாங்கிய தன்மை போய், அவற்றின் தன்மைகளை மட்டும் உட்கொண்டு அவற்றினை அழித்தொழித்து எழுந்தது கிறிஸ்தவ நல்லமேய்ப்பன் பிம்பம். ஆறாம் நூற்றாண்டில் 'நல்ல மேய்ப்பர்' ஏசு சிலுவையை ஆட்டிடையனின் கோலாக தாங்கி அமர்கிறார். அத்துடன் இசைக்கருவிகள் மறைந்துவிட்டன.
மெசபடோமிய தொன்மங்களிலும் எகிப்திய சித்திகரிப்புகளிலும் 'அரசன் மக்களின் மேய்ப்பன்' எனும் அரசதிகார பிம்பத்துக்கு ஏசு மாறிவிட்டார். பிற்கால காலண்டர் பட பிம்பங்கள் வரை ஏசுவின் இடை-செங்கோல் மாறிடவே இல்லை.
இதற்கு நேர் எதிரானதோர் பரிணாம வளர்ச்சியை நாம் பாரதத்தின் கிருஷ்ண உருவில் காணமுடியும். துவாரகையின் அதிபதியாகவும் மதுராதிபதியாகவும் அறியப்பட்டாலும் கூட ஸ்ரீ
கிருஷ்ணரின் இடையன் பிம்பம் அவர் புல்லாங்குழல் ஊதி கால்நடைகளையும் கோபிகளையும் மெய்மறக்க செய்பவராகவே உள்ளார். கிருஷ்ணரின் வேணு பாரத இலக்கியத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாகிவிட்டது. 'சாதாரண' நாடோ டி பாடல்களாகட்டும், கண்ணதாசனின் 'புல்லாங்குழல் ஊதும் மூங்கில்கள்' ஆகட்டும், கபீரின் பாடல்களை விளக்கும் ஓஷோ உரை ஆகட்டும் இறைவன் இதழ் பொருந்திய புல்லாங்குழல் பாரதத்தின் கூட்டு தெய்வீக பிரக்ஞையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. பின் தொடரும் நிழலின் குரலில் கெ.கெ.மாதவன் நாயர் அருணாச்சலத்துக்கு எழுதுகிறார்:
"என் பேரப்பையனை தொட்டு அணைக்கும் போதெல்லாம் எனக்கு மனம் முழுக்க கிருஷ்ணனின் புல்லாங்குழல் நாதம்தான் கேட்கும். பிரசங்கம் செய்து புத்தகம் படித்து, கிருஷ்ணனின் முரளியின் தேனை இழந்துவிடாதே. அதைத் தவிர அர்த்தம் எதுவும் மானுட வாழ்வுக்கு இல்லை." ஒருவேளை கிறிஸ்தவத்தின் பெரும் சோகமே அதுவாக இருக்கக் கூடும் - தெய்வீக இடையனின் வேணு கானத்தை இழந்தது. ஆனால் கிறிஸ்து தன் ஓர்பியஸ் தன்மையை அடைய தன் ஆட்டிடைய செங்கோலை இழக்க வேண்டியிருக்கும். வரலாற்றுத்தன்மை, மதமாற்றம், விரிவாதிக்க மனப்பான்மை என்பவற்றால் ஆகிய செங்கோல் அது. காலனிய விஸ்தீகரணம், இனப்படுகொலைகள், புனித விசாரணைகள் ஆகியவற்றினை நடத்திய அதிகாரத்துவத்தின் செங்கோல் அது. ஏசுவினை எங்கும் பரவிய தெய்வீக உணர்வாக உள்ளுணர்ந்த ஞானிகளுக்கு அந்த செங்கோலினை துறந்திடுவது எளிதான இயற்கையான விஷயம்தான். தெயில் டி சார்டின்களில் ஆந்தோனி தி மெல்லாக்களில், அசிசியின் பிரான்ஸிஸ்களில் கேட்கும் ஓர்பியஸின் இசை கோவா இன்க்விசிஷன் புகழ் சேவியர்களிலும் பெனிடிக்ட்களிலும் இல்லாமல் போவதைப் போல இயற்கையான விசயம்.
27 Comments:
என்னங்க இது, இந்த படத்த எல்லாம் பாக்கும் போது, நம்ம ஊரில் அஜீத், விஜய் முகத்தை மட்டும் ஃபோட்டோஷாப்பில் எடுத்து பாரதியார், பகத் சிங், பிரம்மா வாக்கி போஸ்டர் அடிக்கிற மாதிரில்ல இருக்கு !
கருத்துக்கு நன்றி வஜ்ரா. ஆனால் இது நூற்றாண்டுகளாக நடக்கும் பரிணாம மாற்றம் என சொல்லலாம். எல்லா தெய்வ திருவுருவங்களிலும் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. இந்த மாற்றங்களின் பின்னால் இருக்கும் கருத்தியல் சிந்திக்க தக்கது. ஏன் இசைக்கருவி மறைந்து ஒரு அதிகார கருவி வருகிறது? அதே நேரத்தில் பாரதத்தில் கிருஷ்ணனின் பெயரே அவரது இசைக்கருவியுடன் இணைந்துவிட்டது (வேணு கோபாலன்) வேத-உபநிடத கால கிருஷ்ணன் தொடங்கி ஓஷோவின் கிருஷ்ணன் வரை அந்த தெய்வ திருவுருவின் பரிணாம வளர்ச்சி உள்ளார்ந்து அமைந்தது. அதே நேரத்தில் ஏசு எனும் தெய்வ உருவின் வளர்ச்சியோ வெளி அதிகாரம் பற்றி அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் அதில் உள்ளார்ந்த வளர்ச்சிக்கான அம்சங்களும் ஒரு இணையான போக்கில் நீக்கப்பட்டன. ஏசுவின் தொன்மப்புனைவாக்கத்தை ஏற்கும் போதுதான் கிறிஸ்தவம் ஒரு ஆன்மிக வளர்ச்சியை பெறமுடியும். இல்லையேல் என்றென்றைக்கும் அதிகாரம் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்ட ஒரு அமைப்பாக அதற்கு ஏசு எனும் தொன்மத்தை வரலாற்று உண்மை என மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஒரு அமைப்பாக மட்டுமே விளங்க முடியும்.
Your articles are informative and shows a depth of knowledge.
Our Bharath needs like you. My humble request is that please mobilse your articles to all peoples through various sources.
சிறப்பான பதிவு!
கிறித்துவம் என்பது உலக அரசியல் அதிகாரத்துக்காகக் கிண்டப்பட்ட ஐரோப்பிய ஆக்கிரமிப்பு ஆன்மீக உப்புமா!
தமிழ்நாட்டில் எங்களின் நல்ல மேய்ப்பன் நெப்போலியன் எனும் கருத்தியல் கொண்ட, டாஸ்மாக் சிரப் அடித்த நிலையில் இருப்போருக்கு எதுக்க இருக்கும் போட்டொவே தெரியாது... போட்டோவுக்குள் ஃபோட்டோஷாப் எபெக்டில் நடந்தேறிய கருத்தியல் மாற்றங்கள் எங்கே தெரிய?
//ஏசு எனும் தொன்மத்தை வரலாற்று உண்மை என மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஒரு அமைப்பாக மட்டுமே விளங்க முடியும்//
நம்மூர்ல ஆன்மா அறுவடைன்னு விவசாயத் தோழனாக மத்திய, மாநில அரசு அதிகாரங்களின் ஆசிர்வாதத்துடன் எந்த நிர்பந்தமும் இல்லாமல் நடந்தேறுகிறது!
மெஜாரிட்டி நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் கிறித்துவ மைனாரிட்டி அமைப்புகளின் வாயிலாக மட்டுமே கல்வி சுகாதாரம் பெற முடியும் என்பதான மாயையை சின்மயா மிஷன், சத்ய சாயிபாபா , ராமகிருஷ்ணா போன்ற இந்து அமைப்புகள் அரசின் பச்சையான மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் தாண்டியும் கட்டுடைத்து இருக்கின்றன!
இந்தியாவில் கிறித்துவம் என்பது கருத்தியல் அடிமைகளை காலத்துக்கும், தலைமுறை தலைமுறையாக ஏற்படுத்துவது என்பது. மெக்காலே வழி பயின்ற இடதுசாரி சிந்தனை கொண்ட இந்திய அடிமைகள் அரசில், அதிகாரத்தில் இருப்பது வரை இந்தக் கூத்து தொடரும்!
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய அரவிந்தன் அவர்களே,
ஆப்பிரிக்காவில் ஏசுவை பரப்புபவர்கள் அவரது உருவத்தை கறுப்பினத்தைச் சார்ந்தவர் என்கின்ற வகையிலும், ஜப்பான், சீனா, நாகலாந்து போன்ற நாடுகளில் (நாகலாந்தைத்தான் கிருத்துவப் பாதிரிகளும், கிருத்துவ தீவிரவாத இயக்கமும் ஆளுகின்றனவே. எனவே அதையும் தனிநாடாகத்தான் கருதுகிறேன்) ஏசுவானவர் மங்கோலிய உருவத்துடனும், ஆஸ்த்ரேலிய பழங்குடியினரிடையே ஆண்டவனின் அன்பிற்குரிய பிள்ளை பழங்குடிகளின் உருவ அமைப்பிலும் இருப்பது ஏன் என்பது பற்றியும் எழுதுவீர்களா? ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ்.
ஆனால், இந்தியாவில் மட்டும் ஏசப்பா இந்தியர்களைவிட உயர்ந்த இனமான யூரோப்பிய இனத்தவராகத் தோற்றம் தருவார். அப்போதுதானே அவருக்கு மரியாதை?
ஆயிரம் ஆனாலும் ஐரோப்பியன் போல் ஆகுமா? அடிமை மனப்பான்மை இந்தியர்களைப் பொறுத்தவரையில் ஆண்டவர்களில் ஒருவன் தானே ஆண்டவன் ஆக முடியும்?
http://reinventingsdawheel.blogspot.com/2007/03/african-jesus.html
http://en.wikipedia.org/wiki/Race_of_Jesus
The Gospel according to Arvind Neelagandan, படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
என்ன சொல்வது... கிறீத்துவர்கள் சிலர் என் கடவுள்தான் உண்மையானவன் என்பார்கள், இந்துக்கள் சிலர் என் கருத்துக்களும் தத்துவங்களும்தான் உயர்ந்தன என்பார்கள்.. இந்த இரண்டுபேருக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
Interpretation இல்லாத ஆன்மீகம் இல்லை. காலத்துக்கேற்ப பார்க்கப்படும்போதுதான் ஆன்மீகம் அர்த்தம் தருகிறது. இதை ஓரளவுக்கு ஒழுங்காகச் செய்துவருகிரது கிறீத்துவம்.
இயேசுவின் கடவுள் தன்மையை முன்வைத்து, கலாச்சார interpretation and presentation அனுமதிக்கப்படுகிறது, ஆனால் அவரின் மனித்த்தன்மையை மறுத்தால்தான் இது சாத்தியம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
கிருஷ்ணரோ இராமரோ உலகில் வாழ்ந்த மனிதர்கள் இல்லை என்பதை ஏற்கும் மனப் பக்குவம் அரவிந்தன் நீலகண்டனுக்கே முழுதாய் இருக்குமா எனத் தெரியவில்லை. சாமான்ய இந்துவை விடுங்கள், ஆச்சார்யர்களும், பூசாரிகளும், தீவிர ஆன்மீகவாதிகளும்கூட இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இட்தனாலேயே கடவுள்களை மனிதர்களாக உருவகப் படுத்தவேண்டியுள்ளது. (அப்படிச் செய்யாதது இஸ்லாம் ஒன்றுதான் என நினைக்கிறேன்).
hmmm. We get multiple points of views on what is happening right now in various parts of the world. I am talking about current events. Let us serach the internet on the NEWS (I mean NEWS) on what happened in Nadigram, you would get at least 20 different versions each contradicting the other.
I am talking about an event that happened right when we live, when information is cheaper than air.
I have no issues about having several versions of what happened (or not) a 2000 years ago.
(it seems) History is not what actually happened, but what we belive really happened.
ஐயா மூஞ்சுறுவே
//ஏசுவானவர் மங்கோலிய உருவத்துடனும், ஆஸ்த்ரேலிய பழங்குடியினரிடையே ஆண்டவனின் அன்பிற்குரிய பிள்ளை பழங்குடிகளின் உருவ அமைப்பிலும் இருப்பது ஏன் என்பது பற்றியும் எழுதுவீர்களா? ப்ளீஸ். ப்ளீஸ். //
வட இந்தியாவில் சிவபெருமான் மொழுக் மொழுக் வெள்ளை சிவனாகவும் தமிழ்நாட்டில் கருங்கல்லில் வடித்த கறுப்பு சிவனாகவும் இருப்பது ஏனோ அதனால் தான் இதுவும்.
//தீவிர ஆன்மீகவாதிகளும்கூட இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்// அத்யாத்ம இராமயணம் என்றே ஒன்று இருக்கிறது. சீதை ஜீவான்மா இராமன் பரமாத்மா இராவணன் -ஆணவம்-கன்மம்-மாயை-காம-க்ரோத இத்யாதி என்பது போல முழுக்க முழுக்க இராமாயணம் அக-பார்வையில் விளக்கும் அது. தீவிர ஆன்மிகவாதியும், தன்னை சனாதனி இந்து என பலமுறை வெளிப்படையாக அறிவித்தவருமான மகாத்மா காந்தி மகாபாரதத்தின் வரலாற்றுத்தன்மையை நிராகரிக்கிறார். இந்துத்வவாதியான என்.எஸ்.ராஜாராம் மகாபாரத கிருஷ்ணன், பிருந்தாவன கிருஷ்ணன் ஆகியோர் வேறு வேறு என கூறுகிறார். கடலை தாண்டும் குரங்கும் கதை என அறிந்தோம் என பாரதி பேசுகிறார். அவரும் தீவிர ஆன்மிகவாதிதான். ஆனால் அனைவருமே இந்துக்கள்தாம். இதற்காக யாரும் மற்றவர் மீது பத்வா விதிக்கமாட்டார்கள்.
//கிருஷ்ணரோ இராமரோ உலகில் வாழ்ந்த மனிதர்கள் இல்லை என்பதை ஏற்கும் மனப் பக்குவம் அரவிந்தன் நீலகண்டனுக்கே முழுதாய் இருக்குமா எனத் தெரியவில்லை. //
நிச்சயமாக எனது தருமம் ராமனோ கிருஷ்ணனோ வாழ்ந்தார்கள் என கிடைக்கும் அகழ்வாராய்ச்சி சான்றுகளில் தான் இருக்கிறதென்றோ அல்லது 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமர் கட்டிய பாலத்தை நம்புகிறவர்தான் இந்து என்றோ நான் கருதவில்லை. இராமர் என்று ஒருவர் வாழவே இல்லை அல்லது வாழ்ந்தார் என நிச்சயமாக நிரூபிக்க முடியாது. இயேசு என்று ஒருவர் வாழவேயில்லை அல்லது வாழ்ந்தார் என நிரூபிக்க முடியாதது போல. ஆனால் எப்படி இராமகாதை பல அம்சங்களை உள்வாங்கி பரிணமித்து வளர்ந்ததோ அதுபோலவே ஓரளவு ஏசுகாதையும் பரிணமித்து வளர்ந்தது - இன்னும் கூட வளர்ந்திருக்கும் ரோம சாம்ராஜ்ய அதிகார அமைப்புக்கு எற்ப அது உறைநிலை அடையாதிருந்திருந்தால். இன்னும் சொன்னால் பல நாட்டார் வழக்குகள் ஏசுகாதை குறித்து உள்ளன. உதாரணமாக இத்தாலியில் சீட்டு விளையாட்டு வெறிகொண்ட ஒருவன் ஏசுவுக்கு அவர் யாரென தெரியாமலே உணவளிக்கிறான். ஏசுவின் சீடர்கள் அவனை ஏசுவிடம் வரம் கேட்க சொல்கிறார்கள். அவன் தான் சீட்டாடும் போது செய்பதையே வரமாக கேட்கிறான். இறந்த பின் அவன் சைத்தானிடம் சீட்டாட போகிறான். சைத்தானிடம் இவன் தோற்றால் இவனது ஆன்மா சைத்தானுக்கு ஆனால் இவன் வென்றால் நரகத்து ஆன்மாக்கள் அனைத்தும் இவனுக்கு. இவன் தான் வாங்கிய வரத்தால் சைத்தானை வெல்கிறான். ஆனால் பீட்டர் சுவர்க்க வாசலில் இந்த ஆன்மாக்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அந்த சூதாடி கம்பீரமான குரலில் சொல்கிறான்:"ஏசு என் வீட்டு வாசலைத் தட்டியபோது அவரை உள்ளே விட்டேன். அப்போது நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இவர்களுக்கு சொர்க்கம் இல்லையென்றால் எனக்கும் வேண்டாம்," சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன. இத்தகைய கதைகள், நாட்டார் வழக்குகள் இங்கே ஆழ்வார் பாடல்களில் கோவில் சிற்பங்களில் தலபுராணங்களில் இராமயணத்தின் மகாபாரதத்தின் மைய கதையோட்டத்திற்கு இணையான அந்தஸ்துடன் பாதுகாக்கப்படும். ஆனால் கிறிஸ்தவத்தில்.... ஏசுவின் வரலாற்றுத்தன்மையே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம் ஆகும் போது....
மார்பிள் சிலைகளில் வெள்ளையாக இருக்கிற சிவன் கல் சிலைகளில் கருப்பாக இருக்கிறார். தமிழ்நாட்டிலும் சிவன் இலக்கியத்தில் 'பொன்னார் மேனியன்தான்'
அனானி,
சிவன் தமிழ்நாட்டில் கறுப்பாய் இருக்கக் காரணம் இங்கேயுள்ள கற்கள் கறுப்பு. வட நாட்டில்
கிடைக்கும் உகந்த கற்கள் வெண்மை.
இருந்த போதிலும், வடக்கே இருக்கும் அத்தனை தெய்வ உருவங்களும் வெண்மை என்று நீங்கள் சொல்லக்காரணம் டிவியில் அமர்நாத்தையும், காசி விஸ்வநாதரையும் காண்பித்து நீங்கள் பார்த்திருப்பதுதான். மற்றபடி எல்லா கோயில்களிலும் தெய்வீக உருவங்கள் வெண்மைதான் என்பது உங்களது ப்ரஜுடைஸ். முடிந்தால் தூர்தர்ஷன் முன்னொரு காலத்தில் காட்டிய பாண்டுரங்கனைப் போய் பாருங்கள். வட இந்தியாவில் எத்தனையோ தெய்வங்கள் கறுநிறக் கற்களில் ஸான்னித்யம் ஆகியிருக்கிறார்கள்.
வடக்கே காசியிலும், அமர்நாத்திலும் வெண்மை நிற லிங்கத்தை வணங்கிவிட்டு, ராமேஸ்வரம் வந்தடையும் வட நாட்டவர் இங்கேயுள்ள கறுத்த சிவலிங்கத்தை அதே பக்தி சிரத்தையுடன் வணங்குகின்ன்றனர். அதுபோலவே, தென்னாடுடைய சிவனின் பக்தர்கள் வடநாட்டில் சிவனைக் காணும்போதும் அதே தெய்வீக பக்தியை காட்டுகிறார்கள்.
இது ஏன்? தமிழகத்திலேயே செம்பொன்னால் நடராஜனாய் நர்த்தனமாடுவதும் சிவன்தான். "பொன்னார் மேனியனே" என்று இங்கே இருக்கும் கறுத்த லிங்கத்தைப் பார்த்துத்தான் பாட்டு எழுதினார்கள். இங்கும், அங்கும், எங்கும் இருப்பது அதுவே எனும் தெளிவு ஹிந்துக்களுக்கு உண்டு.
ஆனால், ஒரு சராசாரி யூரோப்பியரால் ஒரு நீக்ரோ ஏசுவை ஏறெடுத்துக்கூட பார்க்கத்தோன்றாது. ஆளும் வர்க்கத்திற்கும் அடிமை வர்க்கத்திற்கும் உள்ள உறவு அப்படி. ஆப்பிரிக்கா ஏசு ஆப்பிரிக்காவைத் தாண்டி போக மாட்டார்.
இது தெரியாத ஆபிரகாமியர்களின் சீடகேடிகள் ஹிந்து மதத்தையும் ஆபிரகாமியக் கண்ணோட்டத்தில்தான் பார்ப்பர்.
உங்கள் கடவுள், எங்கள் கடவுள், வெளுத்த கடவுள், வெளுக்காத உளுத்த கடவுள், உளுக்காத கடவுள் என்றெல்லாம் பேசுவது பச்சை, வெள்ளை, சிகப்பு கலந்த அக்மார்க் ஆபிரகாமிய வாந்திதான்.
பி.கு: ஞானத்தின் திறவுகோல் கணபதியின் வாகனமாய் விளித்ததற்கு நன்றி.
//மார்பிள் சிலைகளில் வெள்ளையாக இருக்கிற சிவன் கல் சிலைகளில் கருப்பாக இருக்கிறார். தமிழ்நாட்டிலும் சிவன் இலக்கியத்தில் 'பொன்னார் மேனியன்தான்'//
இதுதான் நான் சொல்வதும்.கலாச்சாரத்துக்கு ஏற்ப இறைவனின் வடிவங்கள் மாறுவது அவரின் இறைத்தன்மையை முன்வைத்து. அதாவது கடவுள் அவரை நம்புபவர்களுக்கு பொதுவானவர் எனும் அடிப்படையில்.
இயேசுவின் வரலாற்றுத் தன்மை கிறீத்துவத்தின் அடிப்படையில் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இதில் என்ன தவறு உள்ளது? புரியவில்லை. இதை மறுத்தாலும் இயேசு கடவுள்தான் என்பது உங்கள் கொள்கையாயிருக்கலாம்.. ஆனால் இதை மறுக்காவிட்டாலும் இயேசு கடவுள்தான் என்பது என் கருத்து.
இயேசுவின் வரலாற்றுத் தன்மையை மறுப்பதில் சிலருக்கு தங்கள் மதம்/நம்பிக்கை பற்றிய comfort கிடைக்கிறதோ எனத் தோன்றுகிறது. இயேசுவின் வரலாறு உண்மையானதாயிருந்து விட்டால் (a big if for you and not an if for me) அப்புறம் வேறு தெய்வங்களை வணங்குவதெப்படி?
இயேசுவின் வரல்லாற்றை கேள்விகேட்டுக்கொண்டே அவரின் போதனைகளை நம்பும் ஆயிரக் கணக்கானோர் இருக்கிறார்கள், இந்துக் கடவுளர்களின் வரலாற்றை (மட்டுமே) நம்பிக்கோண்டு இருக்கும் லட்சக்கணக்கான இந்துக்களும் இருக்கிறார்கள்.
அரவிந்த நீலகண்டனும் சிறில் அலெக்சும் விதிகளுக்கு விலக்கே தவிர விதிகளாயில்லை. We may be exceptions not the rule.
அடிப்படைய்யில் கேள்வி எதையும் கேட்காமல் நம்பிக்கையோடு கோவிலையும் குளத்தையும் சுற்றிக்கொண்டும் மொட்டை போட்டுக்கொண்டும், முழங்காலில் நடந்துகொண்டும் இன்னும் என்னென்னவெல்லாமோ செய்துகொண்டும் இருக்கும் ஒரு சாதாரண சாமான்யனின் பக்திக்கு முன், ஆராய்ச்சிகள் செய்தபின்னரே நம்புவேன் எனும் நம் பக்தி எம்மாத்திரம்.
இயேசுவின் வரலாற்றுத் தன்மைபற்றி எழுதி முடித்தபின் இந்துக் கடவுள்களின் வரலாற்றுத் தன்மை பற்றியும் விரிவாக எழுதுங்கள். அப்போது கடவுள் உங்கள் நிலையை பலரும் புரிந்துகொள்ள இயலும்.
அரவிந்தன்,
நிறைய தகவல்களை அறியத் தருகின்றீர்கள். சுவாரசியமாகவும் இருக்கிறது. நன்றி.
யாரோ ஒருவர் ஆதியில் இருந்திருக்கக் கூடும். அவர் பிற்காலத்தில், இன்று நாம் காணும் இயேசுவாக உருமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.
அந்த வகையில், இஸ்லாம் ஓரளவுக்கு இயேசு பற்றி உண்மையை பேசுகிறது என்று நினைக்கின்றேன். ஒரிஜினல் இயேசு முகமதைப் போன்றே வன்முறை நிரம்பிய மனிதராகத்தான்(நபியாக) இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கின்றேன்(இதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் சில வசனங்களை எடுத்துக் காண்பிக்கின்றனர்). அவர் எப்போது, எப்படி அன்பு நிறைந்த இயேசுவாக மாற்றம் பெற்றார் என்று தெரியவில்லை.
அல்லது இப்படியும் இருந்திருக்கலாம். முகமது ஆரம்பகட்ட நபித்துவ வாழ்வில் எதிரிகளால் கொல்லப்பட்டிருந்தால், அவரும் கருணை மிகுந்த இயேசுவாக உருவகப்படுத்தப்பட்டிருப்பார். முகமதுவின் கையில் அதிகாரம் வந்தபின்பே அவர் அரக்கனாக உருவெடுத்தார். அதிலும் கூட முகமதின் செயல்பாடுகளை (பின்னர்) இஸ்லாமியர்கள் தொகுத்ததால் இன்று அவரது உண்மை சொரூபம் தெரிகிறது. இல்லையேல், அவரும் ஒரு இயேசுவாக, ஒரு கிருஷ்ணராக உருவகப்படுத்தப்பட்டிருப்பார்.
அதனால்தான், இந்த சரித்திர ரீதியான துல்லியத்துக்கு பாதகங்கள் நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது. ரிஷிமூலம் பார்த்தால் நிறையபேர் இப்படித்தான் முகமது ரேஞ்சுக்கு இருப்பார்கள் என்று தோன்றுகிறது. நமது அவதார புருஷர்கள் சிலர் கூட இப்படி இருந்திருக்கலாம்.
எனவே, சரித்திர ரீதியான உண்மைகளைப் பார்க்காவிட்டால், எதோ நல்ல விஷயங்களை நாமாக கற்பனை செய்து கடவுள் ரேஞ்சுக்கு அவர்களை உயர்த்திவிடலாம். நாமும், நல்ல விஷயங்களை இவர்கள் சொன்னார்கள் என்று நம்பிக்கொள்ளலாம்.
இயேசு என்பவரைப் பற்றிய உருவகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சரித்திரத்தை உதாசீனப்படுத்திவிடலாம்தான். ஆனால், சரித்திரத்தை உதாசீனப்படுத்த முயன்றால், கிறித்துவம் ஸ்கந்தம், காணாபத்தியம், சாக்தம் போன்று இன்னும் ஒரு மதம் என்றாகிவிடும் என்றே தோன்றுகிறது.
அன்புள்ள சிறில், ரொம்ப சரி. ஆனால் மதமாற்றத்துக்காக இந்தியாவுக்குள் வருடத்திற்கு இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் இறக்கப்படுகிறது (பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சரே ஒத்துக்கொண்ட புள்ளிவிவரம் இது). அதெல்லாம் இந்த அப்பாவி மக்களின் பக்தியை சிதறடிக்கத்தானே. இது செய்யப்படுவது இந்த 'வரலாற்று ஏசுவின்' நம்பிக்கையின் அடிப்படையில்தானே. உதாரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எங்கள் இல்லத்துக்கு 4 மிசிநரி ஊழியர்கள் வருகை தந்தனர். இதில் ஒரு பிரசுர துண்டு 'வேதங்களில் ஏசுநாதர்' என்று சொல்லி வேதவரிகளை twist செய்து ஏசுவுக்கு பொருத்தமாக சட்டை தைக்கிறது. இதெல்லாம் அப்பாவிகளின் நம்பிக்கையை சிதறடிப்பதல்லாமல் வேறென்ன? உங்களுக்கே தெரியும் பிறமதங்களை படிக்கவும் ஆராயவும் வத்திகான் எவ்வளவு பெரிய அளவில் பணத்தை செலவிடுகிறது, முயற்சிகளை எடுக்கிறது என. ஆனால் வத்திகான் ஆவணங்களே தெள்ளத்தெளிவாக சொல்லும் ஒரு விசயம் இதெல்லாம் இருவழி உரையாடலுக்காக அல்ல எவாஞ்சலிசத்துக்காக மட்டுமே. ஆக, 'ஆரிய' எனும் பதத்திற்கு இனவாத பொருளை கொடுத்தது மாக்ஸ்முல்லர் எனும் கிறிஸ்தவ பாதிரியாரே அல்லவா. திராவிட இயக்கம் சனாதனதருமத்தை ஒழிக்க நாங்கள் வைத்திருக்கும் டைம்பாம் என மதுரை பேராயர் 1950களில் எக்காளமாக கூறினார் இல்லையா ('Christian Church and Dravidian Movement' எனும் நூல் வெளியீட்டின் போது)... இந்து கடவுளர் குறித்து நான் எழுதுவேனா என கேட்கிறீர்கள்...ராமரோ கிருஷ்ணரோ அவர்களது வரலாற்றுத்தன்மை நமது தருமத்துக்கு அடிப்படை இல்லையே ஏசுவின் வரலாற்றுத்தன்மை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது போல.
//
என்ன சொல்வது... கிறீத்துவர்கள் சிலர் என் கடவுள்தான் உண்மையானவன் என்பார்கள், இந்துக்கள் சிலர் என் கருத்துக்களும் தத்துவங்களும்தான் உயர்ந்தன என்பார்கள்.. இந்த இரண்டுபேருக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
//
இந்துக்கள் தங்கள் கடவுள் தான் உயர்ந்த கடவுள் என்றும் மற்றவைகள் பொய்க்கடவுள் என்று சொன்னார்கள் என்றால் அவர்கள் இந்துக்களே இல்லை என்றர்த்தம். அவர்கள் ஆபிரஹாமிய மதப்பார்வையில் இந்து மதத்தைப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்தியவில் உள்ள பைத்தியக்காரன் கூட சர்ச் வந்தால் கையெடுத்து கும்பிட்டுப் போவான். கோவில் வந்தால் கன்னத்தில் போட்டுக் கொள்வான். தயவு செய்து கொஞ்சம் நம்பும் படியாக பொய் சொல்லவும் சிறில்.
//இதில் ஒரு பிரசுர துண்டு 'வேதங்களில் ஏசுநாதர்' என்று சொல்லி வேதவரிகளை twist செய்து ஏசுவுக்கு பொருத்தமாக சட்டை தைக்கிறது. இதெல்லாம் அப்பாவிகளின் நம்பிக்கையை சிதறடிப்பதல்லாமல் வேறென்ன? //
அர்விந்த்,
இப்ப இந்துக் கடவுள்கள் வரலாற்று நாயகர்கள் என போதிக்கும் ஆட்கள் உங்கள் பார்வையில் எதை twist செய்யுறாங்க?
முதல்ல அவங்களுக்கு 'உண்மைகள' எடுத்துச் சொல்லலாமில்லையா?
வஜ்ரா,
ஆனா ஊனான்னா வந்து இந்து மதம் பொதுவான நோக்குள்ளதுன்னு சொல்றீங்க.. அது வெறும் (சில) புத்தகங்களில்தான் உள்ளது. சிவனைத்தொழாத வைணவர்களையும் விஷ்ணுவைத் தொழாத சைவர்களியும் எங்க கொண்டு சேப்பீங்க.
இந்த மாதிரி விவாதங்கள் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை பொய்சொல்றேன்னு சொல்றீங்களே அதனால சொல்கிறேன்.
//இந்துக்கள் தங்கள் கடவுள் தான் உயர்ந்த கடவுள் என்றும் மற்றவைகள் பொய்க்கடவுள் என்று சொன்னார்கள் என்றால் அவர்கள் இந்துக்களே இல்லை என்றர்த்தம். //
வஜ்ரா என் வார்த்தைகளை நிதானமாகப் படியுங்கள். நான் கிறீத்துவர்களைப் பற்றி சொல்லும்போதுதான் கடவுள் எனும் வார்த்தையை பயன்படுத்தினேன்.. இந்துக்கள் என வரும்போது 'கருத்துக்களும் தத்துவங்களும்' எனக் கூறினேன். இன்றைக்கு நீங்களெல்லாம் செய்வது அதுதானே... இந்துக் கொள்கைதான் சிறந்தது மற்றதெல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்வதில் நீங்களும் இந்துமிச'நரி'ஆயிட்டீங்களே.
சரி விடுங்க இந்த விவாதத்துக்கே நான் வரல. இயேசு எனக்கு தனியே சொந்தமானவர் அல்ல அவரை நான் தாங்கிப் பிடிப்பதற்கு. என்னதான் பைபிள், போதன்னைன்னு இருந்தாலும் இறுதியில் இயேசு பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருக்கும், எல்லோரின் கடவுள் அனுபவமும் இதுதான்.
இயேசு வன்முறையான கடவுளாயிருக்கலாம் என்கிறார் நேசக்குமார், wild imagination. நானும் என் கற்பனையை தட்டிவிட்டு என் தாத்தன் பாட்டன் கும்பிட்ட சாமிகளைக் குறை கூற விரும்பவில்லை.
//அவர்கள் ஆபிரஹாமிய மதப்பார்வையில் இந்து மதத்தைப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.
//
வஜ்ரா, இப்படி இந்துக்கள் நிறைய பேர்ர் இருக்காங்க. அவங்களுக்கு போய் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
சிறில் அவர்கள் தெரிந்தே பொய் சொல்வதாகத் தோன்றவில்லை. அவரது கேள்விகளில் ஒரு ஸினிஸியாரிட்டி இருக்கிறது.
சிறில் அவர்களே,
தங்களுடைய பதில்களில் இருந்து எனக்குத் தோன்றிய கருத்துக்கள்:
இயேசுவின் வரலாற்றுத் தன்மை கிறீத்துவத்தின் அடிப்படையில் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இதில் என்ன தவறு உள்ளது? புரியவில்லை.
வரலாறு மட்டுமல்ல (ஆன்மீக அனுபவம் தவிர்த்த) எந்த விஷயமும் ஒரு வித ஆப்ஜெக்டிவிடியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது அவ்விஷயத்தை ஒரு பொதுவான எண்ணிக்கையிலும், சிந்தனைகளிலும் வேறுபட்ட மக்களின்முன் வைக்கப்படும்போது அவசியமாகின்றது. நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை காண்பது தவறு என்பது அரவிந்தன் போன்றவர்களின் வாதம். இந்த அடிப்படையில் க்ருஷ்ணன், ராமர் போன்றவர்களின் வரலாற்றுத் தன்மையை நிறுவி அதன் அடிப்படையில் மதங்களை பரப்ப வேண்டிய அவசியம் ஹிந்து மதங்களுக்கு இல்லாமல் இருக்கிறது. க்ருஷ்ணரும், ராமரும் வரலாற்று நாயகர்கள் இல்லை என்றாலும் அவர்களின் மேலுள்ள பக்தி ஹிந்துக்களுக்கு குறையப்போவதில்லை. ஆனால், கிரித்துவ மதமோ ஏசுவை ஒரு வரலாற்று நாயகராய் சமைக்க முனைந்து நிற்கின்றது. ஏனெனின், கிருத்துவ மதத்தின் ஆணிவேராக இருப்பது இந்த வரலாற்றுக் கதைதான். இந்த நிகழ்ச்சி பொய்யாகுமேயானால் கிருத்துவ மதமே இடிபட்டுப் போய்விடும் என்கின்ற வகையில்தான் அனைத்து கிரித்துவப் பெரியோர்களும் நடந்துவருகிறார்கள். அது உண்மையும் கூட. அந்த வகையில்தான் அரவிந்தன் அவர்கள் இந்த ஏசுவின் "கதையை" அணுகுகிறார்.
ஏசு வரலாற்று நாயகர் இல்லை என்றாலும் எனக்கு அவர் கடவுள்தான் என்று நீங்கள் கூறுவதும் புரிகின்றது. ஏனெனில் இது ஒரு ஹிந்து மனப்பான்மை. கிருத்துவராகவோ, இஸ்லாமியராகவோ ஒருவர் இருப்பதால் அவர் ஹிந்துமனப்பான்மை இல்லாதவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஹிந்துத்துவத்தின் கருத்தும் இதுதான். எனவே, அரவிந்தன் அவர்கள் இடித்துரைப்பது ஹிந்துமனப்பாங்கு கொண்ட கிருத்துவர்களுக்காகவோ, இஸ்லாமியர்களுக்காகவோ இல்லை. அவர் இடித்துரைப்பதெல்லாம் ஆபிரகாமிய மனப்பங்கு உள்ளவர்களுக்கு. அந்த மனப்பங்குகொண்டவர்கள் ஹிந்துக்களாய் இருந்தாலும் சரி.
ம்யூஸ்,
ஹிந்து மனப்பான்மையா? எப்படி சொல்றீங்க? சும்மா எல்லாத்தையும் பொதுப்படுத்துவதால் பிரச்சனைகள்தான் வரும். இந்து மதத்தின் அடிப்படை 'இதுதான்' என அறுதியிட முடியாமல், பல அடிப்படைகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதனால சாதகமான வாதங்களை அங்கங்கே இருந்து எடுத்து தர முடிகிறது.
நான் இந்துக் கொள்கைகளை படித்தபின்புதான் இயேசுவின் வரலாற்றுத் தன்மை பொய்யானாலும் அவரைக் கடவுள் என நம்புவேன் எனச் சொன்னேனா? இது இயல்பாக ஒரு மனிதனுக்கு வரும் சிந்தனை. என் எண்ணத்தில் எழும் விவாதங்களுக்கு நான் அளிக்கும் பதில். அமெரிக்காவுல பல அறிவியல் வல்லுனர்களும் இதே கருத்துக்களை கொண்டுள்ளார்கள். அவங்கெல்லாம் இந்து சிந்தனை கொண்டிருக்கிறார்களா?
இதத்தான் நான் முதல்லேந்தே சொல்கிறேன்... ஆபிரகாமிய மதங்கள் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்பதுபோல இந்துக்கள்(சிலர்) எங்க கருத்துதான் உயர்ந்தது என்கிறார்கள். There is no difference whatsoever. It all comes from our ego's nature to be superior.
இந்துமதம் எல்லா மதங்களையும் உள்வாங்கியதென்றால் பைபிளையும் சேர்த்து கோவிலில் போதிக்கவேண்டியதுதானே? (Stupid Question?)
நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாம் இந்துமதத்தின் நடைமுறையில் இல்லை. ஆங்காங்கே ஒளிந்துள்ளன. ஒருங்கிணைக்கப்படாத மதமாயிருப்பதால் ஆளாளுக்கு எதை வேண்டுமானலும் எடுத்து பயன்படுத்தலாம் உங்களைப் போன்றவர்கள் உயர்நிலையில் சிந்திக்கலாம், எல்லோரும் அப்படி இல்லையே. சொல்லப்போனால் எல்லோரும் இப்படித்தான் சிந்திக்கவேண்டும் என உங்களால் சொல்லவே முடியாது இந்துமதத்தில்.
இப்ப அர்விந்த் மற்றொரு இராமாயணத்தைப் பற்றி சொன்னார், ஆனா எந்த ராமாயணம் பரவலாய் நம்பப்படுகிறது?
எல்லாம் மாயை தலைவா.
எல்லாக் கடவுளும் நாந்தான் எனச் சொல்லிய கடவுள் இன்னொரு இடத்தில் என்னைத்தவிர வேற கடவுள் இல்லைன்னு சொல்லியிருக்கார், மறுக்க முடியுமா?
உங்களுக்குச் சாதகம்ஆனதை எடுத்து நடப்பது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கை அதுவே உலகளாவிய இந்துமதத்தின் அடிப்படை நம்பிக்கை என்றேல்லாம் சொல்வதுதான் (தெரிந்தோ தெரியாமலோ சொல்லப்படுகிற) பொய்.
//இயேசு வன்முறையான கடவுளாயிருக்கலாம் என்கிறார் நேசக்குமார், wild imagination. நானும் என் கற்பனையை தட்டிவிட்டு என் தாத்தன் பாட்டன் கும்பிட்ட சாமிகளைக் குறை கூற விரும்பவில்லை.//
சிறில்,
நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
This is what I have written:
||||ஒரிஜினல் இயேசு முகமதைப் போன்றே வன்முறை நிரம்பிய மனிதராகத்தான்(நபியாக) இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கின்றேன்(இதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் சில வசனங்களை எடுத்துக் காண்பிக்கின்றனர்). ||||
இந்த விஷயத்தை இங்கேயே தமிழ்வலைப்பதிவுகளில் இஸ்லாமிய சகோதரர்கள் எழுதியிருக்கின்றார்கள்(இப்போது என்னால் தேடமுடியவில்லை, மன்னிக்கவும். ஆனால், ஆங்கில இஸ்லாமிய வலைத்தளத்தைப் பார்க்கலாம்
http://www.answering-christianity.com/jihad_in_bible.htm).
எனது நோக்கம், இயேசு நல்லவரா கெட்டவரா, அல்லது அவர் கெட்டவர் என்று நிருவுவதெல்லாம் இல்லை. பொதுவான விவாதத்தில் எனக்கு தோன்றியதை சொன்னேன்.
மேலும் இது கூட கொய்ன்ராட் எல்ஸ்டின் சில படைப்புகளைப் படித்ததால்தான். அவர் இந்த மெஸையா - நபித்துவம் என்ற கோட்பாடே ஒருவிதமான வன்முறை-மனநோய் கலந்த கோட்பாடு என்று கருதுகிறார். எனக்கும் அப்படித்தான் படுகின்றது.
இயேசு பற்றிய எனது ஞானம் மிகவும் குறைவு என்பதால் பொதுவாக நான் இயேசு குறித்து எழுதுவதில்லை. நான் மிகவும் சாதாரணமாக தெரிவித்த ஒரு கருத்து அது. இஸ்லாம் போலன்றி, கிறித்துவம் பற்றி நான் அறிந்தவையெல்லாம் செகண்டரி சோர்ஸஸ்களிலிருந்தே. அதுவும் குறிப்பாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ள முயன்றபோது புலப்பட்டவை/புரிந்து கொண்டவை.
அது சரி, மூதாதையரின் கடவுள்கள் வன்முறை நிரம்பிய கடவுள் என்றால், நான் இயேசு பற்றி இஸ்லாமியர்கள் கருதுவதாக சொல்லியிருப்பவை தவறு என்று ஆகிவிடுமா? அதிகமாய் இஸ்லாமிஸ்டுகளின் வலைப்பதிவு வாதங்களை படிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்கே உங்களது வாதத்தின் அபத்தம் புரியும் என்று நினைக்கின்றேன்.
***
மற்றபடி, உங்களோடு வாதிட்டு உங்களின் இயேசு பற்றிய கருத்துக்களை மாற்ற நான் விரும்பவில்லை. என்னை, எனது சமுதாயத்தை பாதிக்காத வரையில், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கருதிக் கொள்ளுங்கள். அது குறித்து எனக்குப் பிரச்சினையொன்றுமில்லை - கிறித்துவம் பற்றிய எனது கருத்து இன்றுவரை இப்படித்தான் இருக்கின்றது, இனிமேலும் அப்படியே இருக்கும்.
Did the Hindus Help Write the Bible
and Give the Ancient Mexicans Their Religious Traditions?
By Gene D. Matlock, B.A., M.A.
When I was a child, my parents were, for a while, members of a Fundamentalist Christian sect called The Nazarenes. It was not a fun church. I escaped from it at age twelve, just when puberty and interest in girls set in.
Though they tried to make me stay in that church, Mom and Dad could not weaken my determination to leave it. However, I did enjoy a certain short song that all the Nazarene children had to learn by heart: Jesus Loves Me, This I know, for the Bible Tells Me So! Had I known then what I know now, I would've sung it this way: The Bible Comes From India, This I Know, for the Hindu Vedas and Puranas Tell Me So!
The following account, taken from the Hindu Matsya Purana (Fish Chronicle), describes some of the people who, after a severe flood, left India for other parts of the world:
To Satyavarman, that sovereign of the whole earth, were born three sons: the eldest Shem; then Sham; and thirdly, Jyapeti by name.
They were all men of good morals, excellent invirtue and virtuous deeds, skilled in the use of weapons to strike with, or to be thrown; brave men, eager for victory in battle.
But Satyavarman, being continually delighted with devout meditation, and seeing his sons fit for dominuion, laid upon them the burdens of government.
Whilst he remained honouring and satisfying the gods, and priests, and kine, one day, by the act of destiny, the king, having drunk mead
Became senseless and lay asleep naked. Then, was he seen by Sham, and by him were his two brothers called:
To whom he said, "What now has befallen? In what state is this our sire?" By these two he was hidden with clothes, and called to his senses again and again.
Having recovered his intellect, and perfectly knowing what had passed, he cursed Sham, saying, "Thou shalt be the servant of servants."
And since thou wast a laugher in their presence, from laughter thou shalt acquire a name. Then he gave Sham the wide domain on the south of the snowy mountains.
And to Jyapeti he gave all on the north of the snowy mountains; but he, by the power of religious contemplation, attained supreme bliss.
If you have read the Jewish or Christian bible, can you guess who Satyavarman, Shem, Sham, and Jyapeti were? Were Satyavarman and his sons our Noah, Shem, Ham, and Japhet? The Old Testament tells us that Satyavarman (Noah) got drunk by imbibing wine made from his vines in what is now Armenia, near Mt. Ararat. But I'm absolutely sure that my Hindu readers would know from where this story originated.
In Sanskrit, Satya-Varman means "Protector of Truth; Protector of the Righteous." Varman often occurs at the end of the names of Kshatriyas (Hereditary Hindu Leadership Caste). Shem/Sem means "An Assembly." According to White racists(s), Ham was turned black as punishment for lacking in respect for his father. The Christian Fundamentalists insist that Sham fathered the Africans. It was this superstition that helped perpetuate the institution of slavery in our antebellum (pre-Civil War) South. Jyapeti became the "God of the Sun" or the Christian, Jewish, Assyrian, Greek and Roman Jupiter and Jahve or Jehovah. For the Hindus, he is Dyaus Pitar, mankind's first known manifestation of God Shiva.
Satyavarman told Sham that he would acquire a name from laughter. Two of the two tribes descended from Sham were the Ha-Ha and Ho-Ho. They later migrated to other parts of the world. Ha-Ha(am)/Ham, meaning "The Ha people," were among the founders of Egypt. Other descendants of Sham, the Hohokam, settled in the American Southwest. Kam derives from the Sanskrit Gana, meaning "Tribe." Hohokam = "The Ho-Ho Tribe." Notice that both groups were desert people. Another tribe that first settled in the American Southwest were the Anazazi, known in ancient India as Anaza-zi (The Undestroyed and Living God Shiva).
The Jewish Noah's Ark legend appears to be a mixture of three Hindu flood myths: Satyavarman, Vaivasvata, and Nahusha. The Mahabharata states:
"The progeny of Adamis and Hevas (Adam and Eve) soon became so wicked that they were no longer able to coexist peacefully. Brahma therefore decided to punish his creatures "Vishnu" [right] ordered Vaivasvata to build a ship for himself and his family. When the ship was ready, and Vaivasvata and his family were inside with the seeds of every plant and a pair of every species of animal, the big rains began and the rivers began to overflow."
Not only are the names of the main players in the Noah story the same as the family of Satyavarman, but, like the Vaivasvata part that the Old Testament authors plagiarized from the Mahabharata, the rains fell for forty days and forty nights.
According to the Vaivasvata story, Shem's name is Manu; Ham or Sham is Nabhanedistha; Japhet is Yayati or Dyaus-Pitar (Jupiter or the Hebrew Jehovah).
The third "Noah" was a deity named Dyaus-Nahusha. We Westerners call him Dionysius or Bacchus. Bacchus derives from the Sanskrit Bagha, meaning "God the Androgynous." When a great flood destroyed the world, Nahusha left India in order to restore civilization to mankind. He also left India for another reason which I'll relate in another part of this article. One of the places where he stopped was a small island city state called Sancha Dwipa (Sancha Island), where the citizens built their homes out of seashells.
The Hindu historian Paramesh Choudhury wrote in his book, The India We Have Lost, that Sancha Dwipa was an Egyptian island. However, there is a small Mexican island town just off the Pacific coast in Nayarit state, Mexcaltitan, where the preconquest citizens built their homes out of seashells. According to Toltec mythology, Mexcaltitan [right] was the Mexican deity Quetzalcoatl's port of entry into Mexico. In Hindu mythology, Nahusha and God Vishnu are in close association. Vishnu is often pictured as floating on a raft of snakes [ left]. He also holds a conch hand in his hand. The Mexican deity Quetzalcoatl was also pictured as floating on a raft of snakes. Conch shells adorned his temples. One drawing of Quetzalcoatl shows him wearing a necklace of conch shells.
But the Mexican anomalies don't stop here.
The pre-Aztec Toltecs were also called Nahoa and Nahua. Nahua tribes did, and still do, extend even into South America. Since the Toltecs could not pronounce "V," I ask myself whether the words Nahoa and Nahua derive from the Sanskrit Nava, meaning "Ship; Boat." The word "Toltec" also appears to derive from the Sanskrit word for "Descendant of the Upper World Nation": Tal-Toka. Quetzalcoatl's original homeland was Tlapallan (See my article about Atlantis). This could derive from the Sanskrit Tala-Pala (The Upper World Land of Pala), another name of the Indian state of Bihar. Even the stories of the lives of Dyaus-Nahusha and Quetzalcoatl are similar. Dyaus-Nahusha was banished from India for getting drunk and raping the wife of the legendary Hindu philosopher Agastya. Quetzalcoatl was banished getting drunk and raping his own daughter. I can provide even more proofs that Nahusha and Quetzalcoatl were the same individual. It's easy to prove that India once colonized Mexico. The hard part is keeping ourselves brainwashed to remain blind to this fact!
More than twenty years ago, when I first started investigating these matters, some Fundamentalist Christians scolded me: "What can you gain by proving that all the religions and cultures of the world copied their religious traditions from the Hindus?"
I answered, "Well, you're always saying that someone should go to India and save the Hindus' poor lost souls. O.K, you win. I'm doing it!"
Hi Aravindhan Neelakandan,
Felt that I must send this to you.
Rudhra
//ஆனா ஊனான்னா வந்து இந்து மதம் பொதுவான நோக்குள்ளதுன்னு சொல்றீங்க.. அது வெறும் (சில) புத்தகங்களில்தான் உள்ளது. சிவனைத்தொழாத வைணவர்களையும் விஷ்ணுவைத் தொழாத சைவர்களியும் எங்க கொண்டு சேப்பீங்க.//
முதலில் ஒரு விசயத்தை தெளிவாக்க விரும்புகிறேன். சிறில் பொய் சொல்வதாக வஜ்ரா கூறியதற்காக சிறிலிடம் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். காரணம் குறுகிய வட்டங்களிலிருந்து வெளிவந்து நேர்மையாக சிந்திக்கக் கூடிய விரல் விட்டு எண்ணுகிற ஒரு சில பதிவர்களில் சிறில் ஒருவர் என நான் நினைக்கிறேன். ஆனால் மேலே கூறப்பட்டுள்ள சிறிலின் வரிகள் முழுக்க முழுக்க தவறானவை. உண்மை சிறில் கூறியதற்கு நேர் எதிராக உள்ளது. சிவனைத் தொழாத வைணவர்களும் விஷ்ணுவைத் தொழாத சைவர்களும் ஒரு சில நூல்களிலும் ஒரு சிலராகவுமே உள்ளனர். பெரும்பான்மையான இந்துக்கள் 'அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு' என்கிற எண்ணம் உடையவர்கள் இதன் மூலத்தை 'ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி' எனும் வேத மகாவாக்கியத்திலிருந்து காணலாம். ஆனால் இத்தனை நாட்களில் எத்தனை கிறிஸ்தவ mainstream இறையியலாளர்கள் (நானறிய இதனை உரக்க பிரகடனம் செய்த ஒரே மேற்கத்திய இறையியலாளர் மார்ட்டின் பூபர் அவரும் யூதர்) ஏசுவும் அல்லாவும் யகோவாவும் ஒண்ணு என்று சொல்லியுள்ளார்கள். இத்தனைக்கும் அதே ஆபிரகாமிய கடவுளுக்குத்தான் ஒவ்வொரு மதத்தினரும் ஒட்டுமொத்த குத்தகை எடுத்து ஜெருசலேம் முதல் சிகாகோ வரை ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை இரத்தம் சிந்தி வருகின்றனர். சுருக்கமாக சிறில் இந்து தருமத்தின் பொதுநோக்குதான் நடைமுறையில் உள்ளது. சிவனை தாக்கும் ஆழ்வார் வரிகளை தேடி பிடித்து அகடாமிக்குகளும் அரசியல்வாதிகளும்தான் பேசுகின்றனர். அவை நூல்களில்தாம் உள்ளன. மீனவப்பெண்ணின் மகன் வியாசர் புண்ணியத்தில் இந்து தருமமும் இந்து சமுதாயமும் அத்தகைய மனநிலைகளையும் சமய நிலைப்பாடுகளையும் தாண்டி வந்துவிட்டது.
//அர்விந்த், இப்ப இந்துக் கடவுள்கள் வரலாற்று நாயகர்கள் என போதிக்கும் ஆட்கள் உங்கள் பார்வையில் எதை twist செய்யுறாங்க? முதல்ல அவங்களுக்கு 'உண்மைகள' எடுத்துச் சொல்லலாமில்லையா?//
சிறில் இந்துக்கள் இராமனையோ கிருஷ்ணனையோ அவர்கள் மட்டுமே தெய்வம் என்றும் அதனை ஏற்காதவர்கள் பாவிகள் என்றும் நித்திய நரகத்தில் எரிவார்கள் என்றும் , இந்து கடவுளரை வணங்காமல் ஏசுவை வணங்குவது விபச்சாரம் போன்ற பாவம் என்றும் துண்டு பிரசுரம் கொடுத்தால் நாடு நாடாக சென்று நம்பிக்கைகளை உடைத்து ஆன்ம அறுவடை வியாபாரம் செய்தார்கள் என்றால் நிச்சயமாக நான் அவர்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வேன்.
//ஒரிஜினல் இயேசு முகமதைப் போன்றே வன்முறை நிரம்பிய மனிதராகத்தான்(நபியாக) இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கின்றேன்(இதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் சில வசனங்களை எடுத்துக் காண்பிக்கின்றனர்). //
நேசகுமார் ஆனால் பி.ஜைனுலாப்தீன் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கத்தில்' -நாகர்கோவில் நிகழ்ச்சியில்- கூறினார்: ஏசு அத்தி செடியை அநியாயமாக எரித்ததாக கிறிஸ்தவ பைபிளில் கூறப்பட்டுள்ளது ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் அவர் ஒரு நபி நியாய உணர்வும் அன்பும் உடையவர். ஏசு குறித்த நாட்டார் தரவுகளே (முகமது அகஸ்மாத்தாமாக அங்கங்கே கேட்டதாக இருக்கக் கூடும்) குரானில் இருக்கின்றன. அதன் மூலம் ஏசுவின் ஆளுமையை நாம் அறிந்து கொள்ள முடியாது. சீதாராம் கோயலின் 'ஏசு கிறிஸ்து : ஒரு ஆக்கிரமிப்புக்கான கட்டமைப்பு' இந்த விசயத்தில் ஒரு ஆழமான கையேடாக உள்ளது.
//சிவனைத் தொழாத வைணவர்களும் விஷ்ணுவைத் தொழாத சைவர்களும் ஒரு சில நூல்களிலும் ஒரு சிலராகவுமே உள்ளனர்//
இப்படியும் ஆபிரகாமிய மதங்களுக்கு இணையான கருத்தியல்கள் இந்து மதத்திலும் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
//இந்து தருமமும் இந்து சமுதாயமும் அத்தகைய மனநிலைகளையும் சமய நிலைப்பாடுகளையும் தாண்டி வந்துவிட்டது. //
உங்களை வைத்துஎல்லோரையும் எடைபோடுகிறீர்கள் அரவிந்த்.
//சிறில் இந்துக்கள் இராமனையோ கிருஷ்ணனையோ அவர்கள் மட்டுமே தெய்வம் என்றும் அதனை ஏற்காதவர்கள் பாவிகள் என்றும் நித்திய நரகத்தில் எரிவார்கள் என்றும் , இந்து கடவுளரை வணங்காமல் ஏசுவை வணங்குவது விபச்சாரம் போன்ற பாவம் என்றும் துண்டு பிரசுரம் கொடுத்தால் நாடு நாடாக சென்று நம்பிக்கைகளை உடைத்து ஆன்ம அறுவடை வியாபாரம் செய்தார்கள் என்றால் நிச்சயமாக நான் அவர்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வேன். //
ஏன் பொய்களை நம்பிக்கொண்டிருக்கும் உங்கள் சகோதர்களுக்கு இதை எடுத்துச் சொல்லக்கூடாது என்றுதான் கேட்கிறேன்.
சரி மசூதிகளை இடிப்பவர்களுக்கும், தலீத்துகளின் தோலுரிப்பவர்களுக்கும் சொல்லுங்கள். மதமாற்றம் நிகழாத மதமே இல்லை அரவிந்த். இந்துமதம் பழைய மதம் அதனால் அதன் மதமாற்ற வரலாறுகளும் பழையன. இந்த வரலாற்றையும் நீங்கள் மறுப்பீர்கள், அதற்கும் ஆதாரங்கள் எல்லாம் தருவீர்கள்.
இந்துமதம் பிற மத தெய்வங்களை வழிபடுவதைக்கூட 'இயேசு இன்னொரு அவதாரம்', புத்தரும் அவதாரம்' எனச் சொல்லித்தான் செய்கிறது. (இது எல்லோருக்கும் பொருந்தாது.)
சரி .. போதும். இனிமே இதுபற்றி விவாதிக்க என்னிடம் பெரிதாய் (சரக்கு) ஒன்றுமில்லை என்றே சொல்வேன். இதை விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. ஏன்ன உங்களுக்கும் என்னைப்பற்றி தெரியும் எனக்கும் உங்களைப்பற்றி ஓரளவு தெரியும். Let us agree to disagree.
:)
வஜ்ராவும் எனக்கு நல்ல நண்பர்தான். I did not feel sorry for what he said, but felt it was un called for and his arguement was not based on a common belif.
இன்றைக்கு அடுத்த கடவுள்களைக் கும்பிடும் இந்துக்களெல்லாம் வேதங்களைப் படித்துவந்த இந்துக்கள் அல்ல சாமான்யர்களே, சக்திவாய்ந்த எதையும் தெய்வம் என ஏற்றுக்கொள்ளும் சாமான்ய இந்துவாலேயே இதை செய்ய இயல்கிறது. மெத்தப் படித்த, வேதங்களை கரைத்துக்குடித்தவர்கள், எல்லா கடவுள்களையும் வணங்குகிறார்கள் என்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது. சிலர் நிச்சயம் இருக்கலாம். நானும் பல இந்து கோவில்களுக்குப் போயிருக்கிறேன், வணங்கியிருக்கிறேன் நெத்தியில் அளவெடுத்து திருநீறு பூசியிருக்கிறேன், அதனால் என்னைவைத்து எல்லா கிறீத்துவர்களையும் எடைபோட முடியாதே.
Oh, jesus. forgive them.
நல்லதொரு விவாதம்..சிறில் போலவே நானும் ஒரு போதும் இந்து மதத்தை குறைவாகவோ தாக்கியோ எழுதியதில்லை என்ற போதும் ,சிறிலும் நானும் வேறு வேறு அளவுகளிலேயே இங்குள்ள நண்பர்களால் பார்க்கப்படுவது எனக்கு புரியவில்லையெனினும் ,சிறிலின் கருத்துக்களோடு பெரிதும் நான் ஒத்துப்போகிறேன் என்பதை பதிவு செய்து கொள்ளுகிறேன்.
Post a Comment
<< Home