பாலபாரதியுடன் ஒரு சந்திப்பு
பாலபாரதியை காணவில்லை. உள்ளேயும் வெளியேயுமாக தேடியபடி தங்கவேல் செல்லடித்தபடி, செல்லை தூக்கும் உருவத்தை தேடிக்கொண்டிருந்தார். நானும் தேடினேன். அப்போதுதான் தெரிந்தது பாலபாரதி அப்போதுதான் கிளம்பியிருக்கிறார் என்று. தங்கவேல் காத்திருக்கிற நேரத்தில் உட்லண்ட்ஸ் ஹோட்டல் மகாத்மியத்தை கூறினார். இங்குதான் திருவாளர் டோ ண்டு தமது பதிவாளர் கூட்டங்களை நடத்துவார், அவருக்கு பிடித்த போண்டா இங்குதான் கிடைக்கும் இத்யாதி. அந்த நேரத்தில் ஒரு ராட்சத கை ஒன்று என் தோளில் விழுந்தது. திரும்பி பார்த்த நான் அப்படியே உறைந்து போனேன். இங்கும் ஒரு (தொடரும்)
அங்கே நெடுமால் திருமுருகா என நின்று கொண்டிருந்த ஒரு உருவம்தான் பாலபாரதி என தெரிந்தது. போட்டோ வில் மனிதர் இன்னும் மெச்சூற்டாக தெரிகிறார் என்பதுதான் உண்மை. உள்ளே போனோம். சாப்பாடு கிடையாது டிபன்தான் என சர்வர் சொல்லிடவே டிபனையே ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தோம். டெஸிபெல்களை குறைத்துக்கொள்ளுங்கள் என்றார் தங்கவேல். அறிவொளி காலங்களில் தான் நாடகத்தில் நடித்த போது உச்சஸ்தாயியில் மாடுலேஷன்களுடன் பேசி அதுவே பழக்கமாகி விட்டது என்றார் பாலபாரதி. சாதியம், ஐயா வைகுண்டர், கலப்பு திருமணம், இந்துத்வம், ஈவெரா என சிறிது நேரம் புன்னகையோடு பொறி பறந்தது. கருத்து எதுவானாலும் மனிதர்கள் நண்பர்களாக இருக்க முடியும் என அவ்வப்போது நினைவுப்படுத்துவதும் கூடவே நடந்தது. தங்கவேல் அமைதியாக சாட்சிபூதனாக அமர்ந்திருந்தார். சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். சிறிதுநேரம் நின்றவாறே அவரது இராமேஸ்வரம் நாட்களைக் குறித்து பேசினார் பாலபாரதி. வெகுளித்தனமும், தன்னம்பிக்கையும், புத்தக அறிவை விட தன்னுடைய அனுபவ அறிவையே மதிக்கும் மனதிண்மையும் கொண்ட ஒரு நல்ல நேர்மையான இளைஞரை பார்த்த நிறைவான அனுபவம் அன்று கிடைத்தது. தங்கவேலுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அப்புறம் அங்கே பாலபாரதியின் முகத்துக்கு நேராக சொல்ல நினைத்து சொல்ல முடியாத இரண்டு விசயங்களை இங்கே சொல்லிவிடுகிறேன்.
ஒன்று: ஒருமுறை அவரை நேர்மையற்றவர் என குறிப்பிட்டிருந்தேன். அவரைப் பார்த்த அந்த முக்கால் மணிநேர சந்திப்பின் இறுதியில் நான் உணர்ந்தது யாதெனில் அவர் எதுவாக இருந்தாலும் நேர்மையற்றவர் அல்லர். அவ்வாறு குறிப்பிட்டதற்காக அவரிடம் மன்னிப்புதான் கேட்கவேணும்.பொதுவாகவே எதிர்மறை அடைமொழிகள் கொடுப்பது சரியான விசயமல்லதான். ஆனால் எதிரணியினர் எப்போதும் அடைமொழிகளாலும் முத்திரை குத்தலாலும் விளித்து அதையே அறிவுசீவி வாதமாக ஆக்குவதால் ஏற்படக்கூடிய எதிர்வினை இது. எதுவானாலும் நல்ல ஆரோக்கியமான உரையாடலுக்கு அது உகந்ததல்லதான். எனவே இனி கருத்தியல் எதிரிகளை தேவையற்ற அடைமொழிகளை கொண்டு விளிப்பதில்லை என முடிவு எடுத்துக்கொண்டேன். அதனை அப்படியே நூறுசதவிகிதம் கடைப்பிடிப்பேன் என சொல்ல முடியாது. இடதுசாரி அரசு செய்கிற கொடுமைக்கும் பூணூல் கலியாணம் என கூறுகிற பூங்காத்தனத்தை பார்க்கும் போது கடைந்தெடுத்த நேர்மையின்மை என்றுதான் எனக்கு சொல்ல வருகிறது. ஆனால் முடிந்தவரை கடைப்பிடிப்பேன்.
இரண்டு: பாலபாரதி கன்னியாகுமரி பக்கம் வந்தால் கட்டாயம் வீட்டுக்கு வாருங்கள்...வந்தால் தங்கி செல்கிற மாதிரி வாருங்கள். பிறகு தங்கவேலும் நானும் ஒரு இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பல விஷயங்களைக் குறித்து பேச்சு சுவாரசியமாக நீண்டது. ஒரு தருணத்தில் வேறுவழியில்லாமல் பேச்சை நிறுத்தி விடைபெற்றுக்கொண்டோம்.
13 Comments:
//கருத்து எதுவானாலும் மனிதர்கள் நண்பர்களாக இருக்க முடியும் என அவ்வப்போது நினைவுப்படுத்துவதும் கூடவே நடந்தது.//
:))
சென்ஷி
//அவரைப் பார்த்த அந்த முக்கால் மணிநேர சந்திப்பின் இறுதியில் நான் உணர்ந்தது யாதெனில் அவர் எதுவாக இருந்தாலும் நேர்மையற்றவர் அல்லர். அவ்வாறு குறிப்பிட்டதற்காக அவரிடம் மன்னிப்புதான் கேட்கவேணும்.//
மன்னிப்புக் கேட்பதையெல்லாம் அவர் விரும்ப மாட்டார். உங்கள் அன்பை தெரிவித்ததே போதுமென்பார்.
//எனவே இனி கருத்தியல் எதிரிகளை தேவையற்ற அடைமொழிகளை கொண்டு விளிப்பதில்லை என முடிவு எடுத்துக்கொண்டேன்.//
நல்ல முடிவு. இதுதான் ஆரோக்கியமான விவாதக்களங்களில் அவசியம்.
மிக்க நன்றி!
ஒரு பா.க.ச பின்னூட்டம்!
// ஒருமுறை அவரை நேர்மையற்றவர் என குறிப்பிட்டிருந்தேன். அவரைப் பார்த்த அந்த முக்கால் மணிநேர சந்திப்பின் இறுதியில் நான் உணர்ந்தது யாதெனில் அவர் எதுவாக இருந்தாலும் நேர்மையற்றவர் அல்லர்//
ஆமாங்க! அவரு எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு! அவரு ரொம்ப நல்லவருங்க!
:))
அவர் தன்னளவில் நேர்மையற்றவரல்ல என்றுதான் நான் கூறுகிறேன். ஆனால் நேர்மையற்றவர் என்பது பொத்தாம் பொதுவான ஒரு சொல் என்பதனை அவரை பார்த்து பழகியபோதே உணர்ந்தேன். அதே நேரத்தில் அவர் இந்து சமுதாயம் இந்து தருமம் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள கருத்துக்கள் ஆழமற்றவை மேம்போக்கானவை. தன்னை பகுத்தறிவுவாதியாக கருதும் ஒருவர் இத்தகைய மேம்போக்கான தன்மையுடன் சமுதாயத்தை அணுகும் போது சிறிது எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. உதாரணமாக கபாலி என்று ஏன் அந்தணர்கள் பெயர் வைப்பதில்லை என்கிற அவரது கேள்வி சோவின் நாடகங்களுக்கு அப்பால் சமுதாயத்தை சரிவர தெரியாதவரது கேள்வியாகத்தான் இருக்கமுடியும். பாலபாரதி நிச்சயம் அப்படிப்பட்டவரல்ல. எனில் ஏன் இத்தகைய மேம்போக்கான கேள்வி. அல்லது அய்யா வைகுண்டரது அன்பு வழிக்கொடி காவியல்ல வெண்மை என்பது. அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் நுழைந்ததும் முதன்மைகோபுரத்தின் முன்னால் இருக்கும் கிணற்று சுவரில் நீங்கள் காணும் வாக்கியமே 'காவி புனிதமான நிறம். அதனை அலட்சியப்படுத்தாதீர்கள்' என்பதாகத்தான் இருக்கும். அங்கு ஏற்றப்படுவதும் காவி நிற கொடியே ஆகும். இதனை வெள்ளை என பேசும் போது ...வெளிப்படுவது என்னவிதமான மனோபாவம் என நினைக்கிறீர்கள். பாலபாரதியின் கருத்துலகின் பல தரவுகள் அவர் நேர்மையான முறையில் சமுதாய உரைகல்லில் உரசிப்பார்த்தால் பொய்த்துப்போகும் தன்மை கொண்டவையாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.
அடடா, மிஸ் பண்ணிவிட்டேனே!
நீங்கள் சென்னை வருவது தெரிந்திருந்தால் நாமும் சந்தித்திருக்கலாமே.
அடுத்த முறை ஒரு நோட்டீஸ் கொடுங்கள்.
அன்பன்,
எஸ்.கே
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அரவிந்தன்.
//அங்கே நெடுமால் திருமுருகா என நின்று கொண்டிருந்த ஒரு உருவம்தான் பாலபாரதி என தெரிந்தது.//
நல்ல description.
//கருத்து எதுவானாலும் மனிதர்கள் நண்பர்களாக இருக்க முடியும் என அவ்வப்போது நினைவுப்படுத்துவதும் கூடவே நடந்தது.//
பாலபாரதி முதலியவர்களின் கருத்துக்கள் வெறும் காழ்ப்பில் விளைந்த காலான்கள். இதனால் அது நட்புடன் ஒத்து இருப்பது என்பது இயலாத செயல். ஒரு இனத்தையும், தனிமனித கலாசார கூறுகளையும் இழிவாக சொல்லி அந்த அடையாளங்களை வேரறுக்க ஒருவர் முயலும்போது தன் அஸ்தித்துவத்துக்கு ஒரு சவாலாக விளங்கும் இவர்களின் ஆதாரமற்ற சிந்தனைகள் ஒரு ஒவ்வாமையே. இதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். பாலபாரதி முதலியோர் வாழ்க்கையில் முக்கியமான சிலவற்றை இழந்து அதற்கு வன்மையாக மனதை கொடூரமாக்கிக்கொண்டவர்கள்.
இது நான் பாலபாரதி அவர்களை இதுகாரும் போட்ட எடை. சரியாகத்தான் இருக்கிறது என்று பலதடவை தேர்வு செய்தும் அறிந்திருக்கிறேன்.
மேலும், காபாலிக மார்க்கம் - வாம மார்க்கம் என்பது வேத நெறி மார்க்கம் இல்லை என்று கருத்து. இது ஒரு தீவீர சைவ மார்க்கம். பல விரும்பத்தகாத வழிபாடுகளை அவை கைக்கொண்டதால் இம்மார்க்கம் இந்தியாவில் அருகிப்போய் விட்டது.
சைவ மதப் பிரிவில் காஷ்மீர சைவம் தொடங்கி பல பிரிவுகள் பற்றி விவரமாக தெரிந்தவர்கள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்..
பிராமணன் மங்களகரமாகவும், சத்திரியன் வீரமாகவும், வைசியன் லாபகரமாகவும், சூத்திரம் சேவைத்தனமாகவும் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது சாத்திரம். சர்மா, வர்மா, முதலிய பெயர்கள் இவ்வாறு எழுந்தவையே.
கபாலி என்பது காபாலிக மார்க்க பெயர். அதனால், பிராமணர்கள் இதை வைத்துக்கொள்வதில்லை.
இந்து சமய கூறுகளை சிறிதும் அறியாமல் பேசும் அரைவேக்காடு பா.பா.க்களின் இன்னொரு எடுத்துக்காட்டு "கபாலி" கேள்வி. "சண்டீ" என்று கூடத்தான் ப்ராமணர்கள் பெயர் வைத்துக்கொள்வதில்லை. அதனால், அவர்கள் சண்டியை ஆராதிக்காமல் இருக்கிறார்களா. ஒன்றும் தெரியாத மூடர்களும் ராமேஸ்வரத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதும் கலாமுக்கு இழுக்கு...
ஐயா,
என் பின்னூட்டம் எங்கே?
The Dalai Lama recalls meeting Chairman Mao, who told him that Buddha is a Revolutionary and an ancient feminist.
Dalai Lama remembers brightening up when he heard this, and he told the story of a sick monk who was lying there neglected, and Buddha told a brother to bring water to wash him - like Jesus Christ. “The master demonstrated that people are equal.”
Chairman Mao arranged a tour for Dalai Lama to see the developments in China. Dalai Lama went around to the planned places and was so impressed with the developments.
Like a true spiritual man, he wanted to bring such advantages to Tibet. He was even branded as a pro-socialist buddhist. But, Dalai Lama believed in the goodness of Mao. For some time.
Even now, Dalai Lama says that he was impressed with Mao.
பெங்களூர் American
//அவர் தன்னளவில் நேர்மையற்றவரல்ல என்றுதான் நான் கூறுகிறேன். //
உண்மையில் நீங்கள் தான் நேர்மையற்றவர் என்பதை நீங்கள் அனுமதித்துள்ள சில அழுக்குப் பின்னூட்டங்கள் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது. நட்புரீதியான சந்திப்பு பற்றி ஒரு பதிவு போடுகிறீர்கள். அதில் கேணைத்தனமான பின்னூட்டங்களை அனுமதிப்பதின் நோக்கம் என்ன?
தவறுதான் லக்கிலுக். மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மையில் அந்த அனானி பின்னூட்டத்தை நான் போட்டபோதே அதற்கு பதிலும் போடவேண்டுமென நினைத்துதான் போட்டேன். ஆனால் சோம்பேறித்தனமும் மறதியும் மற்றொரு பதிவு வேலையுமாக மறந்துவிட்டேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. இதோ நான் அந்த அனானிக்கு கூற விரும்பிய பதில்:
// பாலபாரதி முதலியோர் வாழ்க்கையில் முக்கியமான சிலவற்றை இழந்து அதற்கு வன்மையாக மனதை கொடூரமாக்கிக்கொண்டவர்கள்.//
ஆனால் அவரைப் பார்த்தால் ஏதோ வாழ்க்கையில் சிலதை இழந்தது போல இல்லை. வாழ்வின் இளங்காலையில் உற்சாகத்துடன் எதிர்நோக்குகிற மனிதராக தோன்றுகிறார். கரடுமுரடான பாதையை தானாகவே தேர்வு செய்திருக்கிறார். அத்தகைய தேர்வினை ஏற்ற எல்லோரையும் போல காயங்கள் விழுப்புண்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவரது சித்தாந்த சார்பு, பற்று, அவரது அரசியல் எல்லாவற்றையும் மீறி அவருக்கு ஒரு தேடலும் பட்டறிவின் மீது ஒரு மாளாத காதலும் இருக்கிறது. இத்தகைய ஒரு இளைஞர் நமக்கு பெருமையான ஒரு விசயமே.
//பிராமணன் மங்களகரமாகவும், சத்திரியன் வீரமாகவும், வைசியன் லாபகரமாகவும், சூத்திரம் சேவைத்தனமாகவும் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது சாத்திரம். சர்மா, வர்மா, முதலிய பெயர்கள் இவ்வாறு எழுந்தவையே.//
தவறான விசயம். ஷத்திரியர்கள் தாசர் என பெயர் வைத்துக்கொள்வதும் உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களில் 'சேனை' 'வீரன்' ஆகிய பெயர்களும் உண்டு. சாதீய பெயர்கள் என்பது குழப்பமான விசயம். இதில் அனானி நண்பர் அப்படி ஒன்றும் பாலபாரதி கபாலி குறித்து பேசியதை விட விவரமாக பேசுவதாக நான் நினைக்கவில்லை.
//ஒன்றும் தெரியாத மூடர்களும் ராமேஸ்வரத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதும் கலாமுக்கு இழுக்கு... //
காழ்ப்புணர்ச்சியில் முறை தவறிய பேச்சு. நிச்சயமாக பாலபாரதி மூடர் அல்ல. இராமேஸ்வரம் கோவில் மடப்பள்ளி எழுத்தை அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார். அது இன்னமும் மடத்தனமாக உறைந்திருக்கும் சாதியம் வெளிப்படுகிறது. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் ஒரு முக்கிய அறிக்கையை தீர்த்ததல இந்து கோவில்கள் தொடர்பாக வெளியிட்டது. அதாவது இந்துக்களின் முக்கிய தீர்த்ததலங்களில் பூசாரித்துவம் தலித்துகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று. இராமேஸ்வர விசயம் புரையோடிக்கிடக்கும் ஒரு அசிங்கத்தை காட்டுகிறது. இதற்கு பாலபாரதியே ஒரு தீர்வையும் சொன்னார். ரொம்ப சிம்பிளாக 'கோவில் பணியாளர் தவிர வேறு யாரும் பிரவேசிக்க கூடாது' என்று எழுதுவதுதானே என்று. நல்ல யோசனை அது. அவ்வாறு மாற்றி எழுதப்பட்டால் அது ஒரு சிறப்பான விசயமாக இருக்கும். கலாம் பிறந்த மண்ணில் அப்படி ஒரு தேவையற்ற அநாகரிக போர்டு தேவையில்லையே.
கபாலி என்ற பெயர் கொண்ட பிராமணரும் உண்டு கபாலி சாஸ்திரி என்று ஒரு ஸ்ரீ வித்யா உபாசகர் சென்னையில் இருந்திருக்கிறார். கபாலி என்பது கபாலிகர் பெயர் அல்ல. பிரமனின் ஐந்தாவது சிரம் கொய்த சிவபெருமானின் திருநாமம். அதனை தாங்குவோர் பேறுபெற்றோர். நாத்திகர் மொழிவது போல் தாழ்வில்லை.
அன்புடன்
கனகராஜ்
Post a Comment
<< Home