ஸ்டாலினுக்கு தெரியும்....ஹிட்லரை
ஆகஸ்ட் 24 1939 சோவியத் செய்திதாள் இஸ்வெஸ்ஷியா (Izvestia) எழுதியது: USSR -மக்கள் அமைச்சு மையம் மற்றும் அதன் வெளியுறவுத்துறையின் சேர்மன் மோலோடோ வ் மற்றும் ஜெர்மானிய வெளியுறவு ஹெர் வான் ரிபந்த்ராப் ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அதன் பின்னர் சிறிய இடைவெளி. அதற்கு பின்னர் இருவரும் பரஸ்பர ஆக்கிரமிப்பு இன்மைக்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் பின்வருமாறு:
"ஒப்பந்தமிடும் இரு தரப்பினரும் தம்மிடையே அனைத்து வித வன்முறை, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தாக்குதல்கள் ஆகியவற்றினை தனியாகவும் பிற நாட்டு கூட்டணியுடனும் இல்லாமல் ஆக்குவார்கள். இருதரப்பினரும் தம்மில் ஒருவருக்கு எதிரான மற்றொரு நாடு அல்லது அணியுடன் சேர்ந்து கொள்ளமாட்டார்கள். இந்த உடன்படிக்கை கையெழுத்திட்ட நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்."
- செப்டம்பர் 1 1939: ஜெர்மனி போலந்தின் மீது படையெடுக்கிறது.
- செப்டம்பர் 3 1939: பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்கின்றன.
- செப்டம்பர் 17 1939: சோவியத் யூனியன் போலந்துடன் செய்த பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தை நாசி ஜெர்மனிக்கு ஆதரவாக முறித்துக்கொள்கிறது.
- செப்டம்பர் 18 1939 சோவியத் செய்திதாள் இஸ்வெஸ்ஷியா (Izvestia) இந்த ஒப்பந்த முறிவு பிரகடனத்தை பிரசுரித்தது. "சோவியத் அரசாங்கம் போலந்து மக்களை -அவர்களது விவேகமற்ற தலைவர்களால் தள்ளப்பட்ட இந்த மோசமான போரின் விளைவுகளிலிருந்து காப்பாற்றி அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது." (போலந்திற்கு நேர்ந்த படுதுயரின் பழி நாசி ஆக்கிரமிப்பின் மீது அல்ல மாறாக போலந்து தலைவர்கள் மீது போடப்படுவதை கவனிக்கவும்.)
செப்டம்பர் 23 1939: ஜெர்மனியும் சோவியத் யூனியனும் தமக்குள் போலந்தினை பங்கு போட்டுக்கொண்டன. சோவியத் செய்திதாள் இஸ்வெஸ்ஷியாவின் செப்டம்பர் 29 1939 இல் சோவியத் யூனியனும் நாசி ஜெர்மனியும் போலந்தை பங்கு போடுவதைக் குறித்து இருநாட்டு பிரதிநிதிகளும் கையெழுத்திட்ட அறிக்கையை வெளியிட்டது:
"போலந்தின் அரசு கரைந்தழிந்ததையடுத்து சோவியத் சோஷலிச மக்கள் கூட்டரசும் ஜெர்மானிய அரசும் அப்பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உருவாக்க வேண்டியதும் அங்குள்ள மக்கள் தம் தேசியத்தன்மைக்கு ஏற்ப வாழவைக்க வேண்டியதுமான பெரும் பொறுப்பினை தமக்கே பிரத்யேகமான பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறது. இதனை மனதில் கொண்டு சோவியத் அரசும் ஜெர்மானிய அரசும் தமது பரஸ்பர ராச்சியங்களின் எல்லைக்கோட்டினை பழைய போலந்து நாடு இருந்த பிரதேசத்துக்கு மாற்றி அமைத்துக்கொள்கின்றன. அந்த எல்லைக்கோடு இந்த ஆவணத்துடன் இணைக்கப்பட்டுள்ள பழைய போலந்தாக இருந்த பிரதேசத்தின் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்கள் மற்ற ஒப்பந்த நடபடிகளில் (protocol) உள்ளன. மேற்கூறிய எல்லைக்கோட்டின் மேற்கே இருக்கும் பகுதிகளில் தேவைப்படும் தேசிய சீரமைப்புகளை ஜெர்மனி செய்து கொள்ள வேண்டியதும் அந்த எல்லைக்கோட்டுக்கு கிழக்கு பகுதியில் உள்ள பிரதேசத்தின் தேசிய சீரமைப்பினை சோவியத்தும் செய்துகொள்ள வேண்டியதுமாகும்."
இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் மற்றும் நாசி ஜெர்மனி ஆகியவற்றின் சார்பாக பிரிட்டனிடம் போர் நிறுத்தம் செய்யும் கோரிக்கையை ஹிட்லர் வைத்தான். அவன் கூறினான்: "மிகக்குறைந்த காலகட்டத்துக்குள் அமைதியை ஏற்படுத்த சோவியத்தும் ஜெர்மனியும் எவ்வளவோ முயன்ற போதும் அவையெல்லாம் தோற்றுப்போனால் இந்த போர் நீண்டுகொண்டு போவதற்கான பொறுப்பினை பிரிட்டனும் பிரான்ஸும்தான் ஏற்க வேண்டும்."
- 1940: ஜெர்மனி டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமிப்பதுடன் பெல்ஜியத்தின் மீதும் படையெடுக்கிறது.
- 1941: ஜெர்மனி யுகோஸ்லேவியாவைக் கைப்பற்றுகிறது. கிரேக்கத்தையும் பிடிக்கிறது.
- ஜூன் 22 1941 இல் ஜெர்மனி சோவியத்தை தாக்குகிறது.
சோவியத் ஏன் நாசிக்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தியது என்பதற்கு ஸ்டாலினே ஒரு விளக்கம் அளிக்கிறான். ஜூலை 3 1941 ஸ்டாலினின் உரை:
"அரக்கர்களான ஹிட்லர் ரிபந்த்ராப் ஆகியோருடன் சோவியத் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டது முறையா தவறல்லவா என ஒரு கேள்வி எழலாம். அதற்கு பதில் 'தவறு இல்லை' என்பதுதான். ஜெர்மனியுடன் பரஸ்பர ஆக்கிரமிப்பு இன்மை ஒப்பந்தம் செய்யப்பட்டதனால் நமக்கு என்ன கிடைத்தது? ஒன்றரை வருடம் நம்
நாட்டிற்கு அமைதி கிடைத்தது. நம் நாட்டின் மீது ஜெர்மனி ஒப்பந்தத்தை மீறி ஆக்கிரமிப்பு நடத்திடும் பட்சத்தில் அந்த ஆக்கிரமிப்பை தோற்கடிக்கும் திறன் வாய்ந்தவாறு
இராணுவத்தை பலப்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நிச்சயமாக நமக்கு நல்ல வாய்ப்பாகவும் நாசி ஜெர்மனிக்கு மோசமான நிலையாகவுமே அமைந்தது."
ஸ்டாலினின் இந்த வியாக்கியானமே மீண்டும் மீண்டும் அவனது இராசதந்திரமாகக் கூறப்பட்டு வந்துள்ளது. 'மாபெரும் தேசபக்த போராட்டம்' குறித்து பின்னர் எழுதப்பட்ட அனைத்து
சோவியத் பிரச்சார நூல்களிலும் இந்த இராசதந்திரம் வியந்தோதப் பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே ஸ்டாலினின் ஹிட்லரின் தாக்குதலை எதிர்பார்த்தானா? ஸ்டாலின்
ஹிட்லருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மேம்போக்கானதுதானா? இந்த ஒப்பந்தத்துக்கு அப்பால் சோவியத் மக்களையும் இராணுவத்தையும் ஸ்டாலின் உண்மையிலேயே ஒரு
போருக்கு ஆயத்தப்படுத்தி வந்தானா? சோவியத் பிரச்சாரத்துக்கு அப்பால் சோவியத் ஆவணங்கள் கூறுகிற தகவல்கள் சுவாரசியமானவை. Military Historical Journal of the USSR - Ministry of defence 1963 - அக்கால நிலையைக் குறித்து ஆராய்ந்து கூறுகிறது:
"ஸ்டாலினின் இராணுவ -இராஜ தந்திர கணிப்புகள் தவறாகிப் போன காரணத்தால் சோவியத்தின் இராணுவ பொருளாதார கட்டமைப்பு சரியான முறையில் இராணுவ கருவிகள் செய்ய பயன்படுத்தப் படவில்லை. போருக்கு முன்னர் நமது விமான தயாரிப்புசாலைகள் புதிய விமானங்களை அப்போதுதான் வடிவமைத்துக்கொண்டிருந்தன. எனவே போரின் போது வெறும் 20 மிக்-3 விமானங்களும் இரண்டே இரண்டு பி(Pe)-2 பாம்பர்களும் இருந்தன. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் வரைக்கும் கூட இயந்திர துப்பாக்கிகள் உற்பத்தி குறைந்துவிட்டது. ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் மிகவும் அத்யாவசியமான டாங்கி எதிர்ப்பு கணைகளின் தயாரிப்பும் காரணமின்றி நிறுத்தப்பட்டது."
ஸ்டாலினின் பிரச்சார பிம்பத்தை கலைக்காத History of the Great Patriotic war இல் கூட ஸ்டாலின் கூறியபடி சோவியத் அந்த ஒன்றரை வருடங்களில் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருப்பதாக கூறப்படவில்லை.
"போர் தொடங்கிய நிலையில் 7 விழுக்காடு சோவியத் அதிகாரிகளே உயர் இராணுவ பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். 75 விழுக்காடு கமாண்டர்கள் பதவியேற்று ஒரு வருடம் கூட ஆகாதவர்களாக இருந்தனர். இராணுவ அமைச்சர் குலிக் சப்-மெஷின் துப்பாக்கிகள் தேவையற்ற ஆயுதங்கள் என்று ஒரு கண்டிப்பான எண்ணம் கொண்டிருந்தார்,..உணவு உற்பத்தியும் போதுமானதாக இல்லை. கால்நடைகளும் பற்றாகுறைதான். 1916 இல் இருந்த நிலையைக் காட்டிலும் 1941 இல் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது...ஆனால் அதே காலகட்டத்தில் ஜெர்மானிய போர் கருவி உற்பத்தி எழுபது விழுக்காடு அதிக வளர்ச்சி பெற்றது."சோவியத் வரலாற்றாசிரியை நினா க்ரோயோக்கா கூறுகிறார் (Soviet German Treaty, பக்.115 ஸ்புட்னிக் ஆகஸ்ட் 1989)
"மேலும் ஜெர்மனி தனக்கு கிடைக்க வேண்டிய தாதுப்பொருட்களையெல்லாம் அதிக அளவில் பெற்று வந்தது. அதன் நிலக்கரி சேமிப்பு இரண்டு மடங்கானது. இரும்புக்கனிமம் 7.7 விழுக்காடு அதிகமானது தானியங்களோ 4 மடங்கானது. இந்த விரிவாக்கத்திற்கு பின்னால் ஒழுங்காக முக்கிய பொருட்களை சோவியத் அளித்தது முக்கிய காரணமாக இருந்தது." உதாரணமாக ஜனவரி 11 1941 இல் ப்ராவ்தா கூறுகிறது:"சோவியத் சோஷலிச மக்கள் குடியரசு ஜெர்மனிக்கு தொழிற்சாலைக்கு தேவையான கச்சாப்பொருட்கள், எண்ணெய் கனிம பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உணவுப்பொருட்கள் மற்றும் தானிய வகைகளை அளிக்கும்."இதில் கொடுமை என்னவென்றால் சோவியத்திலேயே மக்களுக்கு உணவுபற்றாகுறை இருந்த போதுதான் ஸ்டாலினுக்கு ஹிட்லரின் ஜெர்மனிக்கு இப்படி உதவி செய்ய தோன்றியது.
சோவியத் மீது ஜெர்மனி படையெடுக்கக் கூடுமென பிரிட்டன் அரசியல் ஆருடம் கூறியது. மக்களிடையேயும் இந்த வதந்தி பரவிய போது அதனை ஸ்டாலின் எதிர்கொண்ட விதம்
அலாதியானது. ஜூன் 14 1941 சோவியத் பிரச்சார ஸ்தாபனமான டாஸ் (TASS) அறிக்கை கூறுகிறது:
"பொதுவாக வெளிநாட்டு பத்திரிகைகளும் குறிப்பாக பிரிட்டிஷ் பத்திரிகைகளும் ஜெர்மனிக்கும் சோவியத்துக்கும் விரைவில் மீளப்போகும் போரினைக் குறித்து பேசி வருகின்றன. இந்த வதந்தி மடத்தனமானது என்றாலும் கூட சோவியத் மேலிடம் மக்களுக்கு இதனைக் குறித்த உண்மையை தெளிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறது. இந்த வதந்திகள் உண்மையில் அசிங்கமான பிரச்சார தந்திரம். இந்த அசிங்கமான பிரச்சார தந்திரம் ஜெர்மனிக்கும் சோவியத்துக்கும் எதிரான சக்திகளால் போரினை மேலும் விஸ்தீகரிப்பதற்காகவும் புதிய போர்களை உருவாக்குவதற்காவும் செய்யப்படுவதாகும்."ஜூன் 22 1941 இல் நாசிகள் சோவியத்தை தாக்கினர். பல இலட்சம் மக்கள் ஸ்டாலினின் அலட்சியப் போக்கினால் நாசி வெறியர்களுக்கு பலியானார்கள். என்றாலும் நேசநாடுகளின் தாக்குதல் ஒருபுறம் நெருக்க மறு புறம் சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் நாசிகளை வீழ்த்தியது. அதற்கு சோவியத் குடியரசுகளின் மக்கள் கொடுத்த விலை கொடூரமானது. அந்த கொடூர மானுட சோகத்துக்கு ஆக்கிரமிப்பாளன் ஹிட்லர் எவ்வளவு காரணமோ அதே அளவு சொந்த நாட்டைக்குறித்து கவலைப்படாமல் நாசி ஜெர்மனியுடன் சரசமாடிய ஸ்டாலினும்
காரணம்தான்.
ஸ்டாலினின் அயோக்கியத்தனமான துரோகம்.
இந்த கொடுமைகளிலெல்லாம் பெரிய கொடுமை போலந்துக்கு எதிராக ஸ்டாலின் செய்த துரோகம்தான். போலந்துடன் சோவியத் பல உடன்படிக்கைகளை செய்திருந்தது - பரஸ்பர
ஆக்கிரமிப்பின்மை உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகளை செய்திருந்தது. ஆனால் 1939 செப்டம்பரில் ஜெர்மனி போலந்துடன் படையெடுப்பதற்கு முன்னரே ஆகஸ்டில்
ஸ்டாலின் ஏற்படுத்திய சோவியத்-நாசி ஒப்பந்தத்தில் போலந்தை எப்படி இரண்டு நாடுகளும் பங்கு போட்டுக்கொள்வது என்பது ஏற்பாடாகிவிட்டது. நாளைக்கு போலந்தின் மீது
ஜெர்மனி படையெடுக்கும் போது எந்த பகுதி சோவியத்துக்கும் எந்த பகுதி ஜெர்மனிக்கும் போகவேண்டும் என்பதனை ஸ்டாலின் ஹிட்லரின் பிரதிநிதியுடன் பேசி முடிவு
செய்துவிட்டான். எல்லைக்கோடு வரை வரையறுக்கப்பட்டுவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பங்குபோடும் ஒப்பந்தத்தை ஹிட்லரின் அரசிடம் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது, தன் பலியாக்கி பங்கு போடப்போகும் போலந்துடன் சோவியத் நட்பு ஒப்பந்தம், பரஸ்பர-ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தம் எல்லாம் செய்து வைத்திருந்ததுதான்.
பின்னாளில் ஆஷ்ட்விச் முதல் பல கொடுமையான இன ஒழிப்புகளையும் கொடூரங்களையும் நாசிகள் போலந்து பிரதேசங்களில்தான் அரங்கேற்றினார்கள். ஸ்டாலின் கரங்களில்
அதிகமாக படிந்த இரத்தகறைகளில் போலந்தில் நாசிகள் நடத்திய கொலை வெறியாட்டங்களுக்கான பொறுப்பும் போய் சேரத்தான் சேரும். 1939 இன் சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தத்தை சோவியத் லித்துவேனியாவின் அரசியல் விமர்சகர் விலியஸ் கவலியாஉஸ்கஸ் அதே ஸ்புட்னிக் இதழில் வெளிப்படுத்தினார். ஆம்...புதுமைப்பித்தன் சொன்னபடி 'ஸ்டாலினுக்கு தெரியும்'...புதுமைப்பித்தன் கற்பனை செய்து பார்க்கமுடியாத விதத்தில்
44 Comments:
மிகவும் மினக்கெட்டு பதிந்திருக்கிறீர்கள் .எத்தனைபேருக்கு போய்ச்சேருமோ தெரியாது.ஆனால் எனக்கு சில விடயங்கள் புதிய தகவல்.நன்றி
வாருங்கள் தீவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கட்டாயம் போய் சேரும் போக வேண்டியவர்களுக்கு. ஸ்டாலின் போட்ட ஒப்பந்தம் இல்லாவிட்டால் ஹிட்லருக்கு இந்த அளவு அவன் தீக்கனவுகளை செயல்படுத்தியிருக்க முடியாது. ஆனால் ஹிட்லரின் பல உத்திகள் அவன் சோவியத் அரசமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்டவைதாம்.
மனதை இறுக்கும் பல நடப்புகளை அறிந்துகொண்டேன். இருந்தாலும் தமிழர்களுக்கு இது தேவையற்ற செய்தியே.
கடைசியில் ஒரு கேள்வி.
இப்பதிவின் மூலம் நீங்கள் தமிழன்பர்களுக்கு கூற வந்த கருத்து என்ன?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாசிலா. பொதுவாக ஒரு பிம்பம் இருக்கிறது ஏதோ ஸ்டாலின் நாசியிசத்தை கொள்கை ரீதியாக எதிர்த்ததாக. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அது ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆனால் ஸ்டாலினும் ஹிட்லர் போலவே ஒரு மனித இன விரோதியே. கம்யூனிசமும் சரி நாசியிசமும் சரி மானுட விரோத கருத்தியல்களே. கடந்த நூற்றாண்டில் பெரும் அழிவுகளை உருவாக்கியவை அவை. நாசியிசம் வெளிப்படையாக தீய சக்தி என அறியப்பட்டுவிட்டது. ஆனால் அதைப்போலவே அழிவுகளை நிகழ்த்திய கம்யூனிசமோ இன்னமும் சிலருக்கு மானுடத்தை கடைத்தேற்ற வந்த கோட்பாடாக தெரிகிறது. உண்மையில் சமுதாய அவலங்களைக் கண்டு நாம் கொள்கிற அறச்சீற்றத்தை கம்யூனிசம் தனது அதிகார பசிக்கு முதலாக்கி கொள்கிறது. எனவே அதன் உண்மை முகத்தை தொடர்ந்து காட்டவேண்டியுள்ளது. ஸ்டாலின் ஹிட்லரிடம் உடன்படிக்கை போட்டு போலந்துக்கு செய்த துரோகம் ஏதோ ஒரு நிகழ்வல்ல. பஞ்சசீல மயக்கத்தில் இந்தியா இருந்தபோது திபெத்தை கபளீகரம் செய்து பாரதத்தின் மீது பாய்ந்த சூயன்லாய் - ஸ்டாலின் செய்த துரோகத்தின் ஆசிய எதிரொலி.
//ஜூலை 3 1941 ஸ்டாலினின் உரை:
"அரக்கர்களான ஹிட்லர் ரிபந்த்ராப் ஆகியோருடன் சோவியத் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டது முறையா தவறல்லவா என ஒரு கேள்வி எழலாம். அதற்கு பதில் 'தவறு இல்லை' என்பதுதான். ஜெர்மனியுடன் பரஸ்பர ஆக்கிரமிப்பு இன்மை ஒப்பந்தம் செய்யப்பட்டதனால் நமக்கு என்ன கிடைத்தது? ஒன்றரை வருடம் நம்
நாட்டிற்கு அமைதி கிடைத்தது. நம் நாட்டின் மீது ஜெர்மனி ஒப்பந்தத்தை மீறி ஆக்கிரமிப்பு நடத்திடும் பட்சத்தில் அந்த ஆக்கிரமிப்பை தோற்கடிக்கும் திறன் வாய்ந்தவாறு
இராணுவத்தை பலப்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நிச்சயமாக நமக்கு நல்ல வாய்ப்பாகவும் நாசி ஜெர்மனிக்கு மோசமான நிலையாகவுமே அமைந்தது."
//
மாசிலா
//தமிழர்களுக்கு இது தேவையற்ற செய்தியே. //
ஈழத்தில் புலிகள் இடையிடையே அரசுடன் உறவு கொண்டமை இந்த ஸ்ராலின் கூறும் முறையில்தான்.அல்லது அரசு சமாதான நாடகம் போடுவதும் இந்த தம்மை பலப்படுத்தும் நுட்பத்திற்காகத்தான்.
ஸ்டாலின் ஒரு கொலை வெறியன், இட்லரை போல் ஒரு எமன் எனும் கூற்றோடு உங்களுடன் ஒத்துப்போகிறேன். தன் சொந்த மக்களை குறிப்பாக விவசாய வர்க்கங்களை பிழிந்தெடுத்தவன். ஸ்டாலினைப் பற்றி தமிழ் மக்களுக்கு உண்மையான வரலாறு தெரியவில்லைதான். கம்யூனிச அன்பர்கள் அவனை ஒரு கடவுளாகவே ஆக்கிவிட்டனர். அவன் செய்யாத கொலைகள் இல்லை. சைபீரியாவின் பனிக்காடுகளில் கண்கானா இடத்தில் 'குலாக்' (Goulag) எனப்படும் அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுடைய எதிர்ப்பாளர்களுக்கான முகாமில் இவன் தலைமையில் நடத்திய அட்டூழியங்களுக்கு எல்லைகளே இல்லை எனலாம்.
தேர்தல் சமயங்களில் இவனின் பெரிய படங்கள் போட்ட அறிவிப்பு, பிரச்சார படங்களை பார்க்கும்போது அறுவருப்பாகத்தான் இருக்கும். என்ன செய்வது, ஏழைகள் என்று ஒரு வர்க்கம் இருக்கும் வரை, இவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த ஒரு கூட்டமும் இருந்தே தீரும். ஏழ்மை ஒழித்தால் கூடவே இதுவும் மறைந்துவிடும். அனைவருக்கும் பொருளாதார நிறைவு காணுதல் அவசியம். அனைத்திலும் சமத்துவம் காணுதல் அதைவிட அவசியம்.
நன்றி.
//ஏழ்மை ஒழித்தால் கூடவே இதுவும் மறைந்துவிடும். அனைவருக்கும் பொருளாதார நிறைவு காணுதல் அவசியம். அனைத்திலும் சமத்துவம் காணுதல் அதைவிட அவசியம். //
சத்தியமான வார்த்தைகள்
சூப்பருங்க அரவிந்தன்.
என் அபிமான வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு முன்னாடி இந்த கொலைகார ஸ்டாலின் எம்மாத்திரம். :)
ஸ்டாலினின் குலாக் கொலைகளை பற்றி டாகுமேண்டரிகள் எடுத்து நம்ம லூசு சனங்களுக்கு காட்டனுமுன்னா!
ஸ்டாலினின் குலாக் கொலைகளை பற்றி டாகுமேண்டரிகள் எடுத்து நம்ம லூசு சனங்களுக்கு காட்டனுமுன்னா!
படத் தயாரிப்பாளர்கள்: ஆபிரகாமியவாதிகளிடமிருந்து லம்ப்பா கிடைக்குமா, நாங்க படம் தயாரிக்கிறோம்.
தேவையில்லாவிட்டாலும் அங்கங்க அவங்கள தூக்கிவச்சு சில ஸீன் எடுக்கச்சொல்லிட்டா போதும். இல்லன்னா அவங்களுக்கு பிடிக்காதவங்கள திட்டி படம் எடுத்துடனும். அள்ளி அள்ளி கொடுப்பானுங்க.
டைரக்டர்கள்: என்னதான் தயாரிப்பளர்கள் படத்துக்குப் பணம் தந்தாலும், நம்மள "கவனிக்கிறது" யாரு? படத்தயாரிப்பளர்களுக்கு பணம் தயாரிப்பவர்களாக இருப்பவர்கள்தான. அவங்கள எதுத்திக்கிட்டா நம்மள படம் டைரக்ட் பண்ண எவனும் கூப்பிடமாட்டான். அதனால, ஏதேனும் ஒரு ஆபிரகாமிய கட்சியில சேர்ந்துகொண்டு, ஆபிரகாமிய தெய்வங்களை பனியனில் போட்டுக்கொண்டு, சில புரட்சி வசனங்கள் பேசுவோம். வேலையும் கிடைக்கும், நம்மை இவன் கவனிக்காவிட்டாலும், "அவனுங்க" காப்பாத்துவானுங்க. ("ஒருவன் ஒருவன் முதலாளி" என்று பாடிக்கொண்டே கிளம்புகிறார்கள்.)
வயதான நடிகர்கள்: இப்போதைக்கு சமுதாயத்தில யாரையெல்லாம் பெரிய ஆளுங்க என்கிற மனமயக்க நம்பிக்கையில மக்கள் இருக்கங்களோ, அந்தப் பெரிய ஆளுங்க வேஷம் போட்டு நடிப்போம். பேருக்கும் பேரும் ஆச்சு. துட்டுக்கு துட்டும் ஆச்சு. (படம் ஓடாதுன்னு தெரிஞ்சா சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று பெருமையா சொல்லிக்குவோம். படம் தப்பித் தவறி ஓடிருச்சினா என்ன ஆகிவிடப்போகிறது? வினியோகஸ்தர்களாக இருக்கிறது நம்ம பசங்கதான !)
பொது ஜனம்: நம்ம லிட்டில் ஸ்டார் சிம்புவோ, ஸூப்பர் ஸ்டார்-இன் - லா தனுஷோ நடிச்சிருக்காங்களா, சொல்லுங்க, நாங்க பார்ப்போம். இல்லாவிட்டால், கிரிக்கட் ஆடுகிறவர்களை பணக்காரணாக்கிவிட்டு, வேறு எந்த விளையாட்டும் பிழைக்க வழியில்லாம செய்யப்போய்விடுவோம். சமூகப் பொறுப்புன்னு ஒன்னு இருக்கில்ல?
ஸ்டாலின் பக்தர் நம்ம ராஜ்வனஜ் அவர்கள் பதிவில் நான் நேற்று இட்ட இப்பின்னூட்டம் இன்னும் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு வேளை அவருக்கு நேரமில்லையோ என்னவோ. அப்பதிவு http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.html
பின்னூட்டம் இதோ:
"//இவனுக்கு கம்யூனிஸம் ஏன் அபாயமாகத் தெரிய வேண்டும்? ஏன் இன்று வரை தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள்? . ஹிஹி - நம்ம ஈரோட்டுக் கிழவன் இவர்களின் தேசிய நாயகனை செருப்பால் அடித்ததற்கே இவர்களுக்கு இன்னிக்கு வரை 'எங்கோ' எரிகிறதே.... இவர்களின் சர்வதேசிய நாயகனான ஹிட்லரை அவன் கோட்டைக்குள்ளேயே சென்று அவன் மென்னியை முறித்த பாட்டாளி வர்க்கத்தின் படைத்தலைவன் தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பைக் கொட்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. உலகமே பாஸிஸத்தின் வெற்றியைக் கண்டு திகைத்து நின்ற வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் செம்படை தங்கள் வர்க்க இயல்பான வீரத்தை காட்டி மனிதகுலத்தின் எதிரிகளை முறியடித்தார்களே.. அது தான் இவர்களுக்கு கம்யூனிஸம் என்றாலே 'எங்கோ' மிளகாய் சொருகியது போல் இருக்கிறது.//
அப்படீன்னா உங்க மாண்புமிகு தலைவர், லட்சக்கணக்கிலே சொந்த நாட்டு மக்களையே குலக் என்று கூறி கொலை செய்வித்த ஸ்டாலினும் ஹிட்லரும் போட்ட ஒப்பந்தத்தை பத்தி ஏதாவது அறிவீர்களா? ஹிட்லரும் ஸ்டாலினுமா போலந்து நாட்டையே பிரிச்சு பங்கு போட்டுக் கொண்டார்களே அதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்தின் வர்க்க வீரமா?
ஹிட்லர் பறிச்சதையாவது போலந்துக்கு யுத்தத்துக்கு அப்புறமா திருப்பிக் கொடுத்துட்டாங்களே, ஆனால் ஸ்டாலின் பறிச்சது இன்னிக்கு வரைக்கும் எள்ளுதானே. அந்த ஸ்டாலினா உங்கள் ஆதர்சத் தலைவர்?
இந்திய கம்யூனிஸ்டுகளையே எடுத்துக்குங்க. 1941 வரை பிரிட்டிஷாரை எதிர்த்தாங்க. அந்த ஆண்டு உக்ரேனை ஹிட்லர் ஆக்கிரமிச்சதும் தங்கள் எஜமானன் ஸ்டாலினுக்காக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு விரோதியானதை அறிவீர்களா? அதே போல 1962-லே சீனாவை கண்டிக்க வக்கு இல்லாமல் நின்னாங்களே அது பத்தி ஏதாவது கருத்து?
இது பத்தியெல்லாம் நான் உங்களோட நேரில பேசினப்போ உடனே கம்யூனிஸ்டுகள் மேலும் உங்களுக்கு விமரிசனம் இருப்பதாகக் கூறினீர்கள். அதை சற்று எலாபொரேட் செய்ய முடியுமா?
மேலும், 1945 வரைக்கும் ஜப்பானோட ஒப்பந்தம் போட்டு அதுக்கெதிரா சண்டை போடாம அது தோற்கும் நேரத்தில் அதனோட தீவுகளைப் பறித்து கொண்டானே அந்த ஸ்டாலின் அதப்பத்தி என்ன சொல்லப் போறீங்க?
நீங்களும் ஆர்.எஸ்.எஸ்ஸிலே இருந்தவர்தானே. அப்ப நீங்களும் அவங்களுக்காக பேசியிருப்பீங்கத்தானே? அதே போல உங்களோட கம்யூனிச மயக்கம் தெளிஞ்சதும் நீங்க என்ன எழுதப் போறீங்க என்பதையும் பிழைத்துக் கிடந்தால் பார்க்காமலா போகப் போகிறேன்."
அன்புடன்,
டோண்டு ராகவன்
வென்றது ஸ்டாலின் இல்லை. ரஷ்யா.
மேலும், ஜெர்மனி மட்டுமல்ல எந்த வலிமையான அரசாலும் ரஷ்யாவை நிலத்தின்மூலமாக வெல்லுவது என்பது இதுவரை இயலாததாகவே உள்ளது. நெப்போலியன் ஒரு உதாரணம். ஹிட்லர் நெப்போலியன் இருவரது வீழ்ச்சியும் ரஷ்ய போருக்குப் பின்னரே ஆரம்பிக்கிறது.
(எனக்குத் தெரிந்தவரை) ரஷ்யாவை இதுவரை வென்ற நாடு ஜப்பான் மட்டும்தான். ஏனென்றால், அது கடற்போர்.
ரஷ்யாவின்மீது வேறு எந்த நாடுகள் படையெடுத்தாலும், ரஷ்யாவை இதுவரை காப்பாற்றி வந்திருப்பது கொடுங்கோலனும், மாவீரனுமான ஜெனரல் குளிர்காலம் மட்டும்தான்.
ஹிட்லர்மட்டும் ரஷ்யாவை தாக்காமல் இருந்திருந்தால், உலகின் ஒருபகுதியை ஹிட்லரும் மற்றொரு பகுதியை ஸ்டாலினும் ஆளுவதற்கு அவர்கள் செய்துகொண்டிருந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்கும்.
ஒரு "இதுக்கு" கேட்கிறேன். ஹிட்லர் மட்டும் இந்தியாவை ஆக்கிரமித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
நல்லவேளையாக, ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் சண்டை வந்தது. அதனால்தான், இப்போதும் நம்மால் கம்யூனிஸ்ட்டுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்க முடிகின்றது. ப்ளாக்குகளில் சாரமோ, சத்தோ, லாஜிக்கோ இல்லாமல் ஏகாதிபத்தியத்தின், சுரண்டலை, ஆதிக்கவர்க்கம், பாட்டாளி, ஒளிமையமான எதிர்காலம் என்கின்ற வார்த்தைகளுக்கு நடுவில் சில வார்த்கைகளைப் போட்டு மாவோ லெவலுக்கு நம்மை நினைத்துக்கொள்ள முடிகிறது. இல்லையா, தோழர்?
லெனின் பற்றிய ஆவணப்படத்தை என் பதிவில் போட்டிருக்கிறேன்.
பாருங்கள்.
முடிந்தால் தமிழ்மணத்துக்கு அனுப்பி வையுங்கள்
http://ezhila.blogspot.com/2007/04/blog-post_3102.html
கலக்கலான கேள்விகள், டோண்டு அவர்களே,
பெரும்பாலும் பப்ளிஷ் செய்ய மாட்டார்கள் (இப்படிச் சொன்னால் பப்ளிஷ் செய்துவிடுவார்கள் :-) ! ). அப்படியே பப்ளிஷ் செய்தாலும் வழவழா குழகுழாவென்று வெறுமே கம்யூனலிஸ வார்த்தை விளையாட்டாகத்தான் பதில் இருக்கப்போகின்றது.
இல்லாவிட்டால், உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட்டில் கேள்விகளைக் கேட்டு, முதலில் அதற்குப் பதில் தாருங்கள் என்பார்கள்.
இல்லாவிட்டால், நீங்கள் நேர்மை இல்லாதவர். அதனால் உங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பார்கள் (ரவி ஸ்ரீனிவாஸிடம் சொன்னதுபோல).
ஹிட்லர் ஆக்கிரமித்த போலாந்து விடுதலை பெறக் காரணம் ஹிட்லர் புட்டுக்கொண்டதுதான். ஆனால், கம்யூனிஸம் ஆக்கிரமித்த போலாந்து இன்னும் அடிமையாக இருக்கக் காரணம் கம்யூனிஸத்தின் அதிகாரம் இன்றும் கொடிகட்டிப் பறப்பதுதான்.
பெரியவரான நீங்கள் நேரிடையாக வரலாற்றைப் பார்த்திருப்பதால் உங்களுக்குச் சில கேள்விகள்.
1941 வரை பிரிட்டிஷாரை எதிர்த்தாங்க. அந்த ஆண்டு உக்ரேனை ஹிட்லர் ஆக்கிரமிச்சதும் தங்கள் எஜமானன் ஸ்டாலினுக்காக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு விரோதியானதை அறிவீர்களா?
1. அடக் கடவுளே (அல்லது) அட தோழர். ஸ்டாலினே. நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால், 1941க்குப் பின்னால் எந்த கம்யூனிஸ்ட்டுக்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கே பெறவில்லையா?
அதே போல 1962-லே சீனாவை கண்டிக்க வக்கு இல்லாமல் நின்னாங்களே அது பத்தி ஏதாவது கருத்து?
2. "ஸி பி ஐ, ஸி பி எம் என்று பிளவு ஏற்பட்டதற்குக் காரணம், ஒரு பிரிவு தொழிற்சாலைகளால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்றும், மற்றொரு பிரிவு விவசாயிகளின் முன்னேற்றத்தால்தான் நாடு முன்னேறும் என்று கருதியதாகவும்
அதனால்தான் இருவேறு குழுக்களாய் இவை பிரிந்தன. எல்லாம் இந்த இரண்டு பெரும் குழுக்களிலுள்ள மக்களுக்கு சேவை செய்யத்தான்" என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த பிரிவு ஏற்பட்ட காலத்தைப் பார்த்தால் சீனா இந்தியாவின்மீது படையெடுத்த காலம் போலிருக்கிறதே. இது சரிதானா? இந்த இரண்டு குழுக்களும் பிரிய உண்மையான காரணம் என்ன?
1945 வரைக்கும் ஜப்பானோட ஒப்பந்தம் போட்டு அதுக்கெதிரா சண்டை போடாம அது தோற்கும் நேரத்தில் அதனோட தீவுகளைப் பறித்து கொண்டானே அந்த ஸ்டாலின் அதப்பத்தி என்ன சொல்லப் போறீங்க?
3. ஸோ, இது ஒரு வழக்கமான ஸ்ட்ராட்டஜிதான். பலமுள்ளவர்களாக மக்கள் இருக்கும்வரை ஒன்றும் செய்ய மாட்டார்கள். பலமில்லாவிட்டால், போட்டுத் தள்ளிவிடுவார்கள். சட்டீஸ்கரில் தூங்கிக்கொண்டிருந்த ஏழை மக்களைச் சுட்டுக்கொன்றது முதல்,
ஏழை தெலுங்கர்களை கொன்று குவிப்பது உள்ளீடாக நடப்பதெல்லாம் கம்யூனிஸத்தின் தொடர்ச்சிதான் என்று சொல்லவருகிறீர்களா?
நீங்களும் ஆர்.எஸ்.எஸ்ஸிலே இருந்தவர்தானே.
ராஜாவனஜ் எந்த ஊரில், எந்த சாகாவில் இருந்தேன் என்று சொல்கிறாரோ, அந்த சாகாவில், அதே ஊரில் என் நண்பர் முருகனின் உறவினர் ஒருவர் இருக்கிறார் என்பது தெரியவந்தது. அவரிடம் ராஜாவனஜ்ஜினுடைய ப்ளாக்கை ப்ரிண்ட் செய்து அனுப்பி, "இவ்வளவு கேவலமாக நீங்கள் நடந்துகொண்டு ஆர் எஸ் எஸ்ஸை ஒரு நல்ல இயக்கம் என்று சொல்லுகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, அவர் அப்படி ஒரு ப்ரக்ருதி ஆர் எஸ் எஸ்ஸில் அந்த ஊரில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த ஊரிலும் இருந்ததில்லை என்பதை விசாரித்துக் கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. ஃபோன் போட்டுக் கேட்டபோது, ஆர் எஸ் எஸ் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாமே சில வெப் ஸைட்டுக்களில் இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்தி ஜல்லி அடிக்கலாம் என்றும் கூறினார்.
நடிகர் ஸிவாஜியின் பாடலான "நம்பமுடியவில்ல்ல்ல்லைய்ய்ய்ய்ய்ய்" பாடினேன்.
சந்தேகமிருந்தால் ஆர் எஸ் எஸ்ஸின் அலுவலகங்களுக்கு நீங்களே எழுதி கேட்டுக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அத்தோடு, ஆர் எஸ் எஸ் அலுவலகங்களில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் லிஸ்ட்டையும் கொடுத்தார்.
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்"
குமட்டுகின்றது.
எழில் சேர்த்துவிட்டேன். தகவலுக்கு நன்றி. தாங்கள் அறிவுருத்தியிருந்த படி பூங்காவில் சேர்க்கவில்லை.
Then the final fate of those who did evil will be the worst because they denied God's Signs and mocked at them - Qur'an, 30:10
Those were the last words in the Lenin 'documentary' linked here.
எனக்கு தெரிந்து அன்றைய நிலையில் ஜெர்மனி ரஷ்யாவை வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தது. ஜெர்மனியே அன்றைய காலகட்டத்துல் தொழில் நுட்பத்தில் மிகவும் சிறந்து விழங்கியது. US,
UK ,France (நேசநாடுகள்) மேற்க்கு பக்கம் தீவிர தாக்குதல் தொடர்ந்ததாலும், ரஷ்யா கைவிட்டதாலும், இத்தாலி தோல்வி அடைந்துவிட்டதாலும் ஜெர்மனி தனித்துவிடப்பட்டது. ஜெர்மனி மேற்க்கு பக்கம் தீவிர தாக்குதல்தான் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்தது.
மாட்டான்டா வனராஜா..
சொல்லுரத பாருங்க. அவரு ஸ்டாலின் பத்தி கேக்கலையாம் வருணாஸ்சிரமத்த பத்தி கேக்குறாராம். அதுக்கு மட்டும்தாம் பதில் சொல்லனுமாம்.யாரும் எதிர் கேள்வி கேட்டக கூடாதாம்.
:))
மாவோ பத்தி மாவோயிஸ்டுகள் மட்டும்தாம் விவாதிப்பாராம். மத்தவங்ககூட விவாதிக்கமாட்டாரம்.
:))
யாரு யாருக்கு சொறிஞ்சிகிட்டு இருகாங்கன்னு ஒன்னும் புரியமாட்டேனேனுது.
:(
இங்க ஒரு கூட்டம் சொறிஞ்சு விட்டுகிட்டு இருக்கு. அங்கன ஒன்னு. ஆகமொத்தம் எல்லாவனும் முதுகு சொறிஞ்சு விடுர வேலையமட்டும்தான் பாக்குறாங்க போல.
:(
Most of the incidents mentioned here are new to me. I used to admire Stalin but slowly changed after reading a lot about him. Thanks Mr. Arvind for your valuable info.
என்னமோ ரஷ்யா மாத்திரமே ஹிட்லரை தோற்கடித்த மாதிரி எல்லோரும் (நீங்கள் உட்பட) பேசுகிறீர்களே. அமெரிக்கா இல்லாவிடில் ஜெர்மனியை தோற்கடித்து இருக்க முடியாது. ரஷ்யா, அமெரிக்கா இருவரும் ஒரே சமயத்தில் பெர்லினுகுள் புகுந்தது வரலாறு அதனால் தான் கிழக்கு மேற்கு என்று ஜெர்மனி பிரிக்கப் பட்டது.
வடுவூர் குமார் என்ற பார்ப்பனப் பதிவர் அவருக்கு விழுந்த ஆபாசத் திட்டுகளுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல தனது பதிவில் எழுதி இருந்தார். அவருக்கு அங்கே நான் காட்டமாகக் கொடுத்த பின்னூட்டம் இங்கே:-
//வாங்க அரவிந்தன்
நமது சக பதிவாளர்,சொம்புநக்கி(பெயரை எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கு)தயவுசெய்து என்று கேட்டும்..
//
குமார்,
என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகுவதற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பார்ப்பனர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பூங்காவைத் திட்டித் தீர்த்தீர்கள். நான் அதனை என் பதிவில் எழுதினேன். உங்கள் பதிவில் கமெண்டு வந்ததற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? காலையிலேயே சோமபானம் அடிச்சீங்களா?
திராவிடர் பற்றி பார்ப்பனர் எழுதலாம். ஆனால் பார்ப்பனர் பற்றி திராவிடர் எழுதக் கூடாது என்றும் பார்ப்பனர் பற்றி பூங்கா ஒன்றுமே சொல்லக்கூடாது என்றும் பார்ப்பனர்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.
அரவிந்தன், எழில், ஜடாயு போன்றவர்கள் முஸ்லிம்களை மணிக்கு ஒரு தரம் திட்டிக்கொண்டு இருக்கிறார்களே? அதனை என்ன ஏது என்று கேட்பாரா இந்த வடுவூர் குமார் என்ற பார்ப்பனர்?
சொம்புநக்கி உம்முடைய மடத்தனமான சாதீய உளறல்களை உம்முடைய வலைப்பூவுடனேயே வைத்துக்கொள்ளலாம். இங்கே வந்து நீர் நக்க வேண்டிய...சாரி...கக்க வேண்டிய அவசியமில்லை. வடுவூர் குமார் சொன்னது அனைத்தும் முழுக்க சரிதான். உம்முடைய போலி-திராவிட கும்பல் எங்களையெல்லாம் திட்டாத திட்டா பாடாத வசையா? அதே நேரத்தில் அதில் நூற்றில் ஒரு பங்கு அளவுள்ள வசையாடலை நீர் முஸ்லீம், எதிர்ப்பு பதிவுகள் என சொல்லும் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், எழில் ஆகியோரின் பதிவுகளில் இருந்து காட்டும் பார்க்கலாம் ...நீர் உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால். பூங்கா ஒரு ஆபாச மானுட விரோத பாசிச இதழ். ஏன் தமிழ்மண ஆசாமிகள் ஒரு மாஃபியா கும்பல் என்று எவரும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்னால் இவர்களின் வேர் எங்கிருந்தது என ஒருவர் சுட்டிக்காட்டிய போது நாங்களெல்லாம் தொட்டாசுருங்கிகள் எங்களை பேசக்கூடாது தொடக்கூடாது என தீண்டாமை கூச்சலை கூசாமல் எழுப்ப தெரிந்த இவர்களுக்கு பிறரை தரக்குறைவாக இவர்களின் ஆஸ்தான பதிவர்கள் பேசிய போது எங்கே போயிருந்தது சத்தம்?
எனது முந்தைய பதிவைப் படித்துவிட்டு வடுவூர் குமார் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார். அத்தோடு நிறுத்தி இருக்கலாம்.ஆனால் தன்னை யாரோ திட்டுகின்றனர் என்று ஒரு பதிவும் எழுதி இருந்தார். அங்கே அரவிந்தன் என்பவர், "ஏன் என்ன ஆச்சு?" என்று அவரிடம் வினவ வடுவூர் குமார் அதற்கு "சொம்புநக்கி" என்று சொல்லி இருக்கிறார்.
பூங்காவை அவமரியாதை செய்பவர்கள் பற்றித்தான் நான் பதிவு எழுதினேனே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. தமிழ்மணமும் பூங்காவும் ஒரே நிறுவனம். பூங்காவை குற்றம் சொல்பவர்கள் தமிழ்மணத்தையும் குற்றம் சொன்னதுபோல்தான் ஆகிறது. எனவே எனது பதிவினில் அதனைக் குறிப்பிட நேர்ந்தது.
இப்போது வடுவூர் மேட்டருக்கு வருவோம். எவனோ ஒருவன் அவரைத் திட்ட அரவிந்தன் இவரை குசலம் விசாரிக்க அங்கே என் பெயரை தேவையில்லாமல் சொல்லி இருக்கிறார். இவர் தமிழ்மணம் விட்டு விலக நினைத்தது அந்த ஆபாச மறுமொழியாலா அல்லது பூங்கா பற்றிய எனது பதிவினாலா? அதனை தெளிவாகக் குறிப்பிடவில்லை. நான் அவருக்கு எழுதிய பின்னூட்டமும் வெளியிடப்பட வில்லை.
எனவே நான் தனிப்பதிவாக போட நேர்ந்தது. வடுவூர்குமார் பதிவில் நான் கேட்ட கேள்வி இதோ:-
வடுவூர் குமார் என்ற பார்ப்பனப் பதிவர் அவருக்கு விழுந்த ஆபாசத் திட்டுகளுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல தனது பதிவில் எழுதி இருந்தார். அவருக்கு அங்கே நான் காட்டமாகக் கொடுத்த பின்னூட்டம் இங்கே:-
//வாங்க அரவிந்தன்நமது சக பதிவாளர்,சொம்புநக்கி(பெயரை எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கு)தயவுசெய்து என்று கேட்டும்..//
குமார்,
என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகுவதற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பார்ப்பனர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பூங்காவைத் திட்டித் தீர்த்தீர்கள். நான் அதனை என் பதிவில் எழுதினேன். உங்கள் பதிவில் கமெண்டு வந்ததற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? காலையிலேயே சோமபானம் அடிச்சீங்களா?
திராவிடர் பற்றி பார்ப்பனர் எழுதலாம். ஆனால் பார்ப்பனர் பற்றி திராவிடர் எழுதக் கூடாது என்றும் பார்ப்பனர் பற்றி பூங்கா ஒன்றுமே சொல்லக்கூடாது என்றும் பார்ப்பனர்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.
அரவிந்தன், எழில், ஜடாயு போன்றவர்கள் முஸ்லிம்களை மணிக்கு ஒரு தரம் திட்டிக்கொண்டு இருக்கிறார்களே? அதனை என்ன ஏது என்று கேட்பாரா இந்த வடுவூர் குமார் என்ற பார்ப்பனர்?
எஸ்கே என்ற பார்ப்பனப் பதிவரும் பூங்காவை குறை சொல்லி இருந்தார். அவரிடம் கேட்ட கேள்வி இதோ:-
எஸ்கே, என் பதிவில் இன்னும் விளக்கமாக எழுதி இருக்கிறேன். வந்து படித்துச் செல்லுங்கள். சாகப்போகும்போது கூட ஜாதி என்னும் அருணாக்குடியை படித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். முதலில் மனிதனா மாறுங்க சார். பிறகு ஜாதி பத்தி யோசிக்கலாம்.
எனது நிலை என்ன? பூங்காவைப் பிடிக்காதவர்கள் தமிழ்மணத்தையும் பிடிக்காதவர்களே. எத்தனை நாளைக்குத்தான் பூங்காவை விமர்சித்துவிட்டு தமிழ்மணத்தில் அவர்கள் தொடர்வது? எனவே பூங்காவை விமர்சிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தனது இடுகையை இனிமேல் திரட்ட வேண்டாம் என்று சொல்வதே நல்லது. அதிலும் அரவிந்தன் என்பவர் கொஞ்சம் ஓவராக "இந்த பதிவர் இந்திய தேசத்திற்கு விரோதமாக நடக்கும் பூங்காவிற்கு தனது பதிவை அனுப்பாதவர்" என்று பெருமையாக எழுதி இருக்கிறார். அவரைப் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன், எது இந்திய தேசியத்திற்கு எதிரானது? பார்ப்பனரைப் பற்றி எழுதுவதா? அல்லது ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதுவதா? மூச்சுக்கு முன்னூறு தரம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் திட்டித் தீர்க்கிறீர்களே.. அதெல்லாம் இந்திய தேசியத்திற்கு ஆதரவான செயலா? இந்தியா, இந்து என்றால் பார்ப்பனர் என்று மட்டும் அர்த்தம் கொண்டீர்களா?
உங்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பூங்காவை குறை சொல்லிக் கொண்டு தமிழ்மணத்தில் தொடர்வீர்களா? உப்பு போட்டுத்தானே சோறு தின்கிறீர்கள்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
//சொம்புநக்கி உம்முடைய மடத்தனமான சாதீய உளறல்களை உம்முடைய வலைப்பூவுடனேயே வைத்துக்கொள்ளலாம்.//
காக்கி அரைடவுசர் போட்டுக்கொண்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக வன்முறைகளைச் செய்யும் மடச் சாம்பிராணி அவர்களே,
//இங்கே வந்து நீர் நக்க வேண்டிய...சாரி...கக்க வேண்டிய அவசியமில்லை.//
நீங்கள் திண்ணையில் வாந்தி எடுத்துப் போட்டதோடு நிறுத்தி இருக்கலாம். வலைப்பதிவு வந்து தமிழ்மணத்தையும் நாற அடிக்க நினைப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
//வடுவூர் குமார் சொன்னது அனைத்தும் முழுக்க சரிதான்.//
அவர் என்ன சொன்னார் என்றே தெரியாமல் உளறும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி அவர்களே, பூங்காவைக் குறை சொன்ன முகமூடி பதிவில் இருந்த கமெண்டு பற்றி கேட்டேன். அதற்கு அவர் நான் என்ன தப்பு செய்தேன் என்றார். அவர் செய்த தப்பு என்ன? பூங்காவைக் குறை சொல்லிக் கொண்டு தமிழ்மணத்தில் தொடர்ந்ததுதான்.
//உம்முடைய போலி-திராவிட கும்பல் எங்களையெல்லாம் திட்டாத திட்டா பாடாத வசையா?//
திராவிடக் கும்பல் எல்லாம் போலி, உங்கள் பார்ப்பன, இந்து வெறிக் கும்பல் மட்டும்தான் ஒரிஜினலா? நல்ல இருக்குடா உங்க நியாயம்!
//அதே நேரத்தில் அதில் நூற்றில் ஒரு பங்கு அளவுள்ள வசையாடலை நீர் முஸ்லீம், எதிர்ப்பு பதிவுகள் என சொல்லும் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், எழில் ஆகியோரின் பதிவுகளில் இருந்து காட்டும் பார்க்கலாம்//
கன்னாபின்னா என்று மண்டையில் மூளை இல்லாமல் நீ கழிந்து போடுவாய், அங்கே வந்து நான் பதில் கூற வேண்டும் என எதிர் பார்க்கின்றாய். நான் ஏற்கெனவே எனது பதிவில் உங்களின் பார்ப்பன, இந்து வெறித்தனத்தைப் பற்றி எழுதி இருக்கேனே, நீ படிக்கவில்லையா?
//...நீர் உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால்.//
நாங்க உப்பு போடுவதால்தான் பூங்காவை குறை சொல்லாமல் தமிழ்மணத்தில் இருக்கோம்.
//பூங்கா ஒரு ஆபாச மானுட விரோத பாசிச இதழ். ஏன் தமிழ்மண ஆசாமிகள் ஒரு மாஃபியா கும்பல் என்று எவரும் சொல்லவில்லை.//
இப்பதிவர் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இவர் கருதும் பூங்கா எனும் மானுட விரோத பாசிச பத்திரிகைக்கு தமது பதிவுகளை அனுப்புவதில்லை என முடிவெடுத்துள்ளார்.
இப்படி எழுதி இருக்கியே இந்து வெறியனே?
//ஆனால் அதற்கு முன்னால் இவர்களின் வேர் எங்கிருந்தது என ஒருவர் சுட்டிக்காட்டிய போது நாங்களெல்லாம் தொட்டாசுருங்கிகள் எங்களை பேசக்கூடாது தொடக்கூடாது என தீண்டாமை கூச்சலை கூசாமல் எழுப்ப தெரிந்த இவர்களுக்கு பிறரை தரக்குறைவாக இவர்களின் ஆஸ்தான பதிவர்கள் பேசிய போது எங்கே போயிருந்தது சத்தம்?//
அட அறிவுகெட்ட முண்டமே, வேர் எங்கே இருந்துச்சு, கிளை எங்கே இருந்துச்சு என்று தேடுவதுதான் எங்கள் வேலையா? உனக்கு பிடித்து இருந்தால் பூங்காவை குற்றம் சொல்லாமல் தமிழ்மணத்தில் இரு. பிடிக்காவிட்டால் கூரையைப் பிரித்துக் கொண்டு தமிழ்மணத்தை விட்டு ஓடு நாயே? ஏன் இன்னும் வள்ளு வள்ளுன்னு குலைத்துக் கொண்டு இருக்கிறாய்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. உப்பு போட்டு சோறு தின்னு இருந்தால் ஓடு நாயே.
வீட்டில் புதிதாக வாங்கிய நாய் குரைத்துக்கொண்டே இருக்கிறது. நன்றாக குரைத்துக்கொள்ளடா நாயே என விட்டுவிட்டேன். மேலே இருப்பது சொம்புநக்கியின் பின்னூட்டம்.
உன் ஜாதிக்கும் பாப்பானுக்கும் என்னடா தொடர்பு சொறிபிடித்த சாதி வெறி பிடித்த நாயே?
இருந்தாலும் ஒன்று சொல்கிறேன். தமிழ்மணம் ஒரு திரட்டி சேவை. பூங்கா ஒரு வலை இதழ். பூங்கா ஒரு பாசிச மனவியாதி கொண்டத்தன்மையுடன் நடத்தப்படுகிறது என்பது கண்கூடு. பூங்கா அதை நடத்துபவர்களின் விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடு நடுநிலையற்றது என்பது தமிழ்மணமே கூறும் விசயம். இது கூட புரியாத கும்பல்தான் பூங்கா ரசிகர் மன்றம் என்பதனை மீண்டும் நிறுவி தன் தலைக்குள் இருப்பது டாரிசெல்லி வெற்றிடம் என வெற்றிகரமாக அனைவருக்கும் காட்டியுள்ள சொம்புநக்கிக்கு வாழ்த்துக்கள்.
சொம்பு நக்கியாகிய, கொசுபிடுங்கியாகிய, விடாது கருப்பாகிய, போலி டோண்டுவாகிய துர்வாசராகிய, ...
புரிகிறதா?
நண்பன்
நன்றாக புரிகிறது. எதுவானாலும் இவர்களின் சாதியத்தை எதிர்பதாக சொல்லும் போலித்தனத்துக்கு அப்பால் இருக்கிற சாதிய வெறியையும், ஈவெரா தனம் என்பது எப்போதுமே மனோவியாதியில்தான் முடியும் என்பதையும் காட்ட சொம்புநக்கி நல்ல சான்றாதாரமாக இருக்கிறார். இவர் போடுகிற பின்னூட்டம் எனக்கு வருகிற ஆபாச பின்னூட்டங்கள் இவை அனைத்திலும் தெரிவது அதே ஈவெராத்தனம்தான். சமூக உளவியல் நோய்கூறுகளுக்கான நல்ல சாம்பிள்.
வரலாறு இவ்வளவு தெளிவானகவும் சிக்கலற்றதாகவும் இருப்பதில்லை.
முதல் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனி ஆயுத உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்ற ஒப்பந்தம் வெர்சாய் மாளிகையில் போடப்பட்டது. இது இட்லர் ஆட்சியில் மீறப்பட்டபோது மேற்கு நாடுகள் கண்டுகொள்ளவில்லை. ஆயுதப்பெருக்கம் சோவியத் யூனியனுக்கு எதிராக இருக்கும் என்னும் கணிப்பும் இதற்கு ஒரு காரணம்.
இட்லர் செக், சுலோவாக்கியாவைக் கைப்பற்றியபோதும் அவை ஒன்றும் செய்யவில்லை.
இட்லரின் வளர்ச்சியைக் கண்டுபயந்த ஸ்டாலின் மேற்கு நாடுகளுடன் அமைதி ஒப்பந்தத்துக்குப் பலமுறை முயன்றபோதும் அவை முன்வரவில்லை. வேறு வழியில்லாததால் ஸ்டாலின் இட்லருடன் ஒப்பந்தம் செய்யவேண்டியதாயிற்று. ரஷ்யா போருக்குத் தயாராக இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். ஒப்பந்தப்படி இட்லர் நடந்துகொள்ளாததால் ரஷ்யா பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது உண்மை.
போலந்து தாக்கப்பட்டால் அதைக்காப்பாற்ற போரில் இறங்குவோம் என்று இங்கிலாந்தும் பிரான்சும் போலந்துடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இட்லரால் தாக்கப்பட்டபோது அவை உடனே போரில் இறங்கவில்லை. பிரான்சு தாக்கப்பட்டபிறகே இட்லரை எதிர்த்தன.
இப்படியே இன்னும் நிறைய எழுதலாம்....
இப்பதிவர் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இவர் கருதும் பூங்கா எனும் மானுட விரோத பாசிச பத்திரிகைக்கு தமது பதிவுகளை அனுப்புவதில்லை என முடிவெடுத்துள்ளார். //
தமிழ்மணம் விட்டு ஓடுடா நாயே!
//போலந்து தாக்கப்பட்டால் அதைக்காப்பாற்ற போரில் இறங்குவோம் என்று இங்கிலாந்தும் பிரான்சும் போலந்துடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இட்லரால் தாக்கப்பட்டபோது அவை உடனே போரில் இறங்கவில்லை. //
செப்டம்பர் 1 1939: ஜெர்மனி போலந்தின் மீது படையெடுக்கிறது.
செப்டம்பர் 3 1939: பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்கின்றன.
செப்டம்பர் 4 1939 பிரிட்டன் ஜெர்மானிய கடற்படையைத் தாக்குகிறது. தாக்குகிறது.
ஆக அனானி, நீங்கள் கூறியது தவறான தகவல். செப்டம்பர் 1 1939 இல் நாசிகள் போலந்தில் நுழைந்தனர். செப்டம்பர் 3 1939 இல் பிரிட்டனும் பிரான்ஸும் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் ஜெர்மனி மீது போர் பிரகடன் செய்துவிட்டன. செப்டம்பர் 4 அன்று பிரிட்டிஷ் விமானங்கள் ஜெர்மனி கடற்படையை தாக்கின. செப்டம்பர் 17 அன்று சோவியத்துகள் நாசிகளுக்கு ஆதரவாக போலந்தில் நுழைந்தனர். செப்டம்பர் 27 அன்று வார்ஸா நாசிகள் கரத்தில் வீழ்ந்தது. செப்டம்பர் 1939 அன்று ஆகஸ்ட் நாசி-சோவியத் ஒப்பந்தப்படி போலந்து நாசிகளுக்கும் சோவியத்துக்கும் இடையே பிரிக்கப்பட்டது. இத்தனைக்கும் பின்னர் மே 10 1940 இல் தான் நீங்கள் சொல்லும் பிரான்ஸ் மீதான நாசி படையெடுப்பு நிகழ்ந்தது. எனவே பிரிட்டனும் பிரான்ஸும் போலந்து மீதான நாசி படையெடுப்பை எதிர்க்கவில்லை என்பது தவறு.
செப்டம்பர் 3 ம் தேதி போர்ப்பிரகடனம் தொடுத்தன. ஆனால் உண்மையில் போர் எதுவும் நடைபெறவில்லை. அதாவது தரைப்போர் இல்லை. வரலாற்றாளர்கள் இதைப் Phony War என்றழைக்கிறார்கள்.
போலந்து மேற்கு நாடுகளால் ஏமாற்றப்பட்டதும் உண்மையான்.
உங்கள் பதிவு ஸ்டாலின் மீதே முழுக்குற்றத்தையும் சுமத்துகிறது. இது தவறு என்பதுதான் என் வாதம்.
மேற்குநடுகளின் நீராகரிப்பே ஸ்டாலினை இட்லரிடம் கொண்டு சென்றது என்பதை நீங்கள் மறைக்கிறீர்கள் என்பது என் குற்றச்சாட்டு.
போலந்து கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. அதனை தொட்டடுத்து இருக்கும் நாடு சோவியத். அதுவும் தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு. ஆனால் அதனிடமிருந்து முனங்கல் கூட வரவில்லை. அத்துடன் ஒப்பிடுகையில் பிரிட்டனின் செயல் எத்தனையோ மேம்பட்டது. நிற்க கடலில் விமானத்தை வைத்து தாக்கியது போதாது நிலவழி தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்பது எவ்வளவு சரியானது? பிரிட்டனைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்களுக்குள் போர் பிரகடனம் செய்து அதன் பின்னர் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது எதைக் காட்டுகிறது? பிரிட்டனை பொறுத்தவரையில் வான்வழி கடல்தாக்குதலே அதற்கு மிகவும் திறமையான வழி. பிரான்ஸை பொறுத்தவரையில் அதன் எல்லை என்றுமே ஜெர்மனியுடன் பிரான்ஸுக்கு சாதகமான சூழலில் அமையவில்லை. ஆனாலும் அங்கு பிரான்ஸின் படை திரட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அங்கே ஆனால் நாசிக்ள் பிரிட்டனையும் பிரான்ஸையும் பிரித்திடும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அகிம்சா பாணியில் மலர்செண்டுகளை எல்லையில் போர் நிலையில் நிற்கும் பிரான்ஸ் வீரர்களுக்கு வழங்குவது பலூன்களில் அன்பான வாசகங்களைஅனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இவை படமெடுக்கப்பட்டு 'நாசிகள் அமைதிவிரும்பிகள்' என பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது பிரான்ஸு தலைவர்கள் போர் வெறியர்கள் நாசிகளோ அமைதியின் தூதுவர்கள் என்பதாக. இந்த பிரச்சார படங்கள் எடுப்பதில் ஹிட்லருக்கும் கொய்பெல்ஸுக்கும் பாடம் கற்றுக்கொடுத்தது சோவியத் பிரச்சாரகர்கள்தாம். ஆனால் மேலும் 1941 இல் கூட நேசநாடுகள் ஹிட்லர் சோவியத்தை தாக்குவான் என எச்சரித்ததை 'அசிங்கமான வதந்தி பிரச்சார தந்திரம்' என அனுமானித்த ஸ்டாலினின் நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது? ஹிட்லர் வளர்ச்சிக்கு சோவியத் ஸ்டாலினை மட்டும் நான் குறை சொல்லவில்லை. மேற்கத்திய நாடுகளின் சமரச போக்கு பெருமளவுக்கு அவனது ஆட்டத்துக்கு உதவியது. அத்துடன் கூடவே அவனது யூத வெறுப்புக்கு ஒரு மறைமுக ஆதரவு கூட மேற்கத்திய் நாடுகளின் மேல்வட்டாரங்களில் நிலவியிருந்திருக்கலாம் என கருத இடம் இருக்கிறது. ஆனால் என்னவோ ஸ்டாலின்தான் ஹிட்லரை தனியாக நின்று போராடி வென்றவன் என்பது போன்ற பொய்களை கட்டவிழ்க்கவே இந்த கட்டுரை. மேலும் சர்வாதிகாரிகளான ஸ்டாலினுக்கு சர்வாதிகாரியான ஹிட்லரே அன்றைய சூழலில் இயல்பான கூட்டணி பார்ட்னராக தெரிந்ததிலும் என்ன வியப்பு இருக்கமுடியும்?
இணையத்தில் ஒரு சொம்பு நக்கியல்ல. ஓராயிரம் சொம்புநக்கிகள் இருக்கிறார்கள்.
நமது ப்ளாக்கிற்கு வருபவரை நமது வீட்டிற்கு வருபவர்போல நடத்த வேண்டும் என்பது என் எண்ணம். விருந்தினராய் வருபவர் வாந்தி எடுத்தாலும், புன்னகையோடு அவருடைய குறையை சொன்னால், அடுத்த முறை நமது வீட்டிற்கு வருவதோடு, வாந்தி எடுக்காமல் இருப்பார். ஒருவேளை சிலசமயங்களில் நமக்கு நல்ல மலர்களையும் கொண்டு வரலாம்.
"அதிதி தேவோபவ" என்கின்ற ஹிந்துத்துவ கூற்றை மறந்துவிட்டீர்களா அரவிந்தன்?
சத்தியமான வார்த்தைகள் ம்யூஸ். நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்பது உண்மைதான். அதை சமனப்படுத்தவே ஆபாசமில்லாத அவர்களது அத்தனை வசைப்பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிட்டேன் அல்லவா. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியபடி இருக்க முயல்வேன். தவறினை சுட்டியமைக்கு நன்றி.
பாப்பார நாய்களுக்கும் தேவர் இன நாய்களுக்கும் என்னாங்கடா சம்பந்தம்?
பார்த்தேன். மிக்க நன்றி.
தங்களுடைய இந்த எதிர்வினைக்கும், இதுபோன்ற எதிர்கருத்துக்கு பொதுவாய் ஆபிரகாமியவாதங்கள் பேசுகின்றவர்கள் தருகின்ற எதிர்வினைகளுக்கும்தான் எத்தனை வித்யாசங்கள்.
குணத்தாலும், செயலாலும் மேலோரே மேலோர் என்று நடத்தையால் விளங்கவைத்துள்ளீர்கள்.
தங்களைத் திருத்திக்கொள்ளத் தயாராக எப்போதும் இருக்கும் ஹிந்துத்துவத்திற்கும், சொல்லுவதும் செய்வதும் தவறேயானாலும், திருத்தவோ திருந்தவோ கூடாது என்கிற ஆபிரகாமிய சிந்தனைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாய் தெரிகின்றது.
இந்த வித்யாசத்தை வெளிக்கொண்டுவந்ததற்கு நன்றிகள்.
பாப்பார நாய்களுக்கும் தேவர் இன நாய்களுக்கும் என்னாங்கடா சம்பந்தம்?
தமிழகத்தின் மானத்திற்காக, உயர்வுக்காகப் பல உயரிய செயல்களை தேவர் இனத்தில் பிறந்தவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஹிந்துத்துவா தெரியாத சில மறவர்கள் ஜாதிக்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதும் ஒரு வருந்தத்தக்க உண்மை.
ஹிந்து மதத்திற்கு எதிரான, ஹிந்து மதத்தின் ஆதரவு எப்போதும் இல்லாத இந்த ஜாதி உயர்வு தாழ்வின் நிஜ இயல்பைப் பற்றித் தெரிந்துகொண்டவர்களிலும் தேவர்கள் இருக்கிறார்கள்.
இங்கனம் விஷயம் தெரிந்தவர்களில் பிள்ளைமார்களும், பறையர்களும், செட்டிமார்களும், பள்ளர்களும், நாயக்கர்களும், நாயுடுக்களும், பார்ப்பனர்களும், சக்கிலியரும், வேளாளர்களும், ஆசாரிகளும், ஏன் தமிழகத்தின் ஒவ்வொரு தொல்குடியும் இருக்கின்றது.
அன்புள்ள ம்யூஸ்,
ஒரு நாளைக்கு குறைந்தது இது போல பத்து பதினைந்து பின்னூட்டங்கள் வந்து விழுகின்றன. பொதுவாக நான் அவற்றை வெளியிடுவதில்லை. அவற்றை புறகணித்துவிடுவதே வழக்கம். ஆனால் இத்தகைய மொழியாடல்கள் இங்கு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதிகளால் ஏற்கப்படுகின்றன. பூங்காவில் அரசோச்சுவதும் அந்த சித்தாந்தவாதிகள்தான். போலியின் மனநிலை முற்றிய மனநிலை. பூங்கா குழு அந்த மனநிலை நோக்கி பயணிக்கும் காமக்கலன்.
என் பதிவு சற்றுத் தவறாக அமைந்துவிட்டது. வான் தாக்குதலும் தீவிரமாக நடக்கவில்லை. பிரிட்டிஷ் விமானங்கள் ஜெர்மனி மீது துண்டுப் பிரசுரங்களையே வீசின.
பிராடன்சு தாக்கப்பட்ட பிறகே முழு எதிர்ப்புக் காட்டின.
இட்லர் போலந்தைத் தாக்கிய அதே வேளையில் சோவியத் போலந்துக்குள் நுழையவில்லை. போலந்துக்கு ஆதரவாகப் போரில் குதிப்போம் என்று உறுதியளித்திருந்த மேற்கு நாடுகள் வாளாவிருப்பதைப் புரிந்துகொண்ட பிறகு செப் 17ம் தேதிதான் சோவியத் போலந்தைத் தாக்கியது.
இட்லரின் ஆரிய இனவாதக் கொள்கைக்கு இந்திய உயர்வர்க்கத்தினர் கொடுத்த ஆதரவு பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அதற்கு போலந்தின் அலட்சியப்போக்கல்ல, ஒப்பந்தத்தை மீறி நடந்துகொண்ட ஸ்டாலினே காரணம். ஆனால் சோவியத் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அதற்கு ஒப்பதத்தை மீறி நடந்துகொண்ட இட்லரல்ல, ஸ்டாலினின் அலட்சியப் போக்கே காரணம்... நல்ல விவாதமய்யா உங்களுடையது!
கடைசியாக நான் எழுதிய பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடவே இல்லை. இதுதான் உங்கள் நேர்மையோ!
Post a Comment
<< Home