Monday, April 05, 2010

ஹுசைனும் மதமெனும் மனநோயும்

இது கூட்டாஞ்சோறு:

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,
நீங்கள் சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் போன்றவர்களைப் பற்றி என்ன நிலை எடுக்கிறீர்கள்? அவர்கள் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டியவைதானா? தடை செய்யப்பட வேண்டியவை என்று ஒரு சட்டம் இருந்தால் அது சரியான சட்டம்தானா? ரஷ்டியின் புத்தகம் வெறுப்பை உமிழ்கிறது என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. Subjective feelings of "victims" cannot be the basis for government action and only tangible actions against the "victims" can be a realistic basis. இறை நிந்தனையை தண்டிக்க சட்டம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். அப்புறம் ஹுசேன் மேல் என்ன கேஸ்?

என் பதில்:

1. இறைநம்பிக்கைக்கு எதிராக அல்ல ஒரு குறிப்பிட்ட வெறுப்பு வெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்களைக் கருத இடமிருக்கிறது. எப்படி யூதர்களுக்கு நாஸி சின்னங்கள் வெறுப்புச்சின்னமாக மாறியுள்ளதோ அதே போல. இப்போது ஹுசைனுக்கு எதிராக வழக்கு போட சுதந்திரமிருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வியே. எப்படி ஹுசைனைத் physical ஆக தாக்க ஒருவருக்கு சுதந்திரம் இல்லையோ எப்படி அவரது ஓவியங்களை அழிக்க ஒருவருக்கு சுதந்திரமில்லையோ அது போல அவர் மீது வழக்கு போடக் கூடாது அவர் மீது வழக்கு போடுவதே கலை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு என்று சொல்லுவது அசிங்கமாக இருக்கிறது. ஹுசைனும் தனக்கு ஆபத்து என்பதால் அல்ல வழக்குகளை சந்திக்க விருப்பமில்லாமல்தான் தான் கத்தார் சென்றுவிட்டதாக சொல்லுகிறார். இந்த வழக்கு போடப்பட்டதே இறைநிந்தனை குற்றமாக இல்லாத இந்திய அரசியல் நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டுத்தான். ஆனால் கத்தார் மதம் மாறினால் மரண தண்டனை என அரசியல் சட்டத்தில் சொல்கிற நாடு. யூத வெறுப்பை வெளிகக்கும் சித்திரங்களை அரசு நிர்வாகத்தினரின் ஆசியுடன் நடத்தும் பத்திரிகை வெளியிடும் நாடு.

2. நான் எதையுமே தடை செய்வதை ஆதரிப்பவன் அல்ல. ஹுசைனின் ஓவியத்தை பௌதீகமாக தாக்கியவர்கள் மிக மோசமானவர்கள் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஹுசைன் என்னைப் பொறுத்தவரையில் ஒரு வெறுப்பிமிழும் ஜனநாயக விருப்பில்லாத ஓவியன்தான். அவருடைய ஹிந்து மத வெறுப்பு அவருடைய ஜனநாயக வெறுப்பிலிருந்தும் அந்த ஜனநாயக வெறுப்பு இஸ்லாமியத்தில் இயல்பாகவே இருக்கும் இறையியல் பாசிசத்திலிருந்தும் வந்திருக்கலாம். இதில் இஸ்லாமிய இறையியலின் தாக்கம் இருக்கிறதா என்பதை நோக்குவது சுவாரசியமாக இருக்கக் கூடும். இஸ்லாமியர்களால் இறுதி இறைத்தூதர் என நம்பப்படும் முகமது விக்கிரக ஆராதனையாளர்களும் தாய் தெய்வ வழிபாட்டாளர்களும் வழிபட்டுவந்த மெக்காவை வெற்றிக் கொள்ளும் போது கலீத் இபின் வலீத் என்பவரை அல் உஸா எனும் பெண் தெய்வக் கோவிலை அழிக்க அனுப்புகிறார். அவர் அழித்துவிட்டு திரும்புகிறார். அப்போது தன்னை இறைத்தூதர் என சொல்லிக்கொள்ளும் முகமது "நீ எதையாவது பார்த்தாயா?" என கேட்க வலீத் இல்லை என்கிறார். இதனையடுத்து வலீத் மீண்டும் சென்று இடிபாடுகளிடையே தேடுகையில் 'ஆடையற்ற கறுப்பான தலைவிரி கோலமான ஒரு பெண்" வருகிறாள். "உஸ்ஸா உனக்கு மறுப்புதானே ஒழிய வழிபாடல்ல" என சொல்லி வலீத் அவளைக் கொல்கிறார். பாகனீய பெண் தெய்வங்களை இஸ்லாம் பார்க்கும் இவ்வெறுப்புப் பார்வையே ஹுசைனின் நிர்வாண தேவி ஓவியங்களில் வெளிப்படுகிறது. இந்த தூய இஸ்லாமிய ஐதீகத்தின் படி ஹுசைனின் ஓவியங்களை காணுங்கள்.

ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் இருக்கும் இந்த விக்கிரக ஆராதனை வெறுப்பு சக-மானுட வெறுப்பு. உதாரணமாக எவனாவது மனு ஸ்மிருதியின் அடிப்படையில் பிராம்மணர்கள் உயர்ந்தவர்கள்; சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் அவர்கள் சொத்து வைத்துக்கொள்ளக் கூடாது ஒரு பெண்ணும் சுதந்திரமாக இருக்கக் கூடாது" என்றெல்லாம் சொன்னால் அது எத்தனை மானுட விரோதமோ அதற்கு எள்ளளவும் குறையாத மானுட வெறுப்பு விக்கிரக ஆராதனையளார்களை இஸ்லாமும் இதர ஆபிரகாமிய மதங்களும் வெறுப்பதில் உள்ளன.

3.ஹுசைனை இஸ்லாமியராக பார்ப்பது சரியா என்றால் -ஒவ்வொருமுறையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் சமுதாயத்தையும் மட்டுமே மதித்து நடப்பேன் என்று சொல்கிற நபரை 90 ஆண்டுகளாக அணியாத காலணியை கத்தார் மக்களின் மன-உணர்வுகளுக்காக அணியக்கூடிய ஒருவரை வேறெப்படி சொல்ல?

4. இறுதியாக ஹுசைனின் இல்லாத கலை-சுதந்திர ஆபத்துக்காக இப்போது உரக்கக் குரல் கொடுப்பவர்களின் மனச்சீர்தன்மை அவர்களின் மன-ஆரோக்கியம் எனக்கு கேள்விக்குறியாகத்தான் படுகிறது. டானிஷ் கார்ட்டூனையும் தஸ்லிமா நஸ்ரீனையும் விடுங்கள். சென்னையில் 2008 இல் அவுரங்கசீப் குறித்த ஓவியக்கண்காட்சியில் இஸ்லாமிய பாசிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் காவல்துறை மூன்று ஹிந்து பெண்களை அவமதித்ததும் அங்கிருந்த ஓவியங்களை சேதப்படுத்தியதையும் இவர்கள் எதிர்த்தார்களா? அன்று எங்கு போனது கலைச்சுதந்திர உணர்வு? காஃபிருடன் பழகியதற்காக பத்வா அளிக்கப்பட்டு நடுத்தெருவில் ஓட ஓட விரட்டி கல்லாலடித்தும் பின்னர் கத்தியைச் சொறுகியும் ஒரு பெண் கொல்லப்பட்டதை கண்டித்தார்களா? அவையெல்லாம் தமிழ்நாட்டில்தானே நடந்தன. ஆக இவர்களுக்கு பிரச்சனை கலை சுதந்திரம் அல்ல. ஹிந்துக்களை திட்ட ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

ஹுசைனின் படங்கள் எனக்கு பிரச்சனையில்லை. அவரது இஸ்லாமிய மனநோயை வெளிக்காட்டும் மற்றொரு வாய்ப்பு அவ்வளவுதான். ஆனால் வழக்குகளை சந்திக்காமல் ஒரு ஜனநாயகமற்ற இஸ்லாமிய நாட்டில் அதிசொகுசான வாழ்க்கை வாழும் ஹுசைனுக்கு ஏதோ கலாசுதந்திரப் போராளிபட்டம் வாங்கிதரும் முற்போக்குகள்தான் எனக்கு குமட்டலை ஏற்படுத்துகிறார்கள். நெல்லை வீதியில் இஸ்லாமிய பாசிஸ்ட்களால் "காஃபீருடன் பேசாதே" என எச்சரிக்கப்பட்ட போது கல்லெறியையும் தன் கழுத்தை அறுக்கப் போகும் கத்தியையும் பொருட்படுத்தாமல் "உன் வேலையை பார்த்துக் கொண்டு போ" என சொல்லி நடுத்தெருவில் கத்திக்குத்தாலும் கல்லடியாலும் உயிர்விட்ட அந்த பீடி சுற்றும் இஸ்லாமிய பெண்ணின் பதிலில் நான் சுதந்திரத்துக்கான தியாகத்தை வணங்குகிறேன். அந்த பெண்ணின் காலடி தூசிக்கு இணையாவரா ஹுசைனும் அவரை ஆதரிப்பவர்களூம்?

8 Comments:

Blogger சுழியம் said...

கருத்துச் சுதந்திரத்திற்கும், வெறுப்பின் வெளிப்பாடிற்கும் இடையே உள்ள, நெகிழ்வான, புலன் மீறிய வரைகோடு பற்றிய மிக மிக முக்கியமான விளக்கம். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.

நன்றிகள்.

3:46 AM, April 05, 2010  
Blogger snkm said...

அருமையான பதிவு! ஆப்ரஹாமிய மதங்களை ப்பற்றிய நம் பார்வையில் உள்ள குறைபாடுகளை தமிழ் ஹிந்து நன்றாக வெளிப்படுத்தி வருகிறது!
மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் முகத்திரைகள் கிழித்து எறியப்பட வேண்டும்! மீடியாவும் உண்மையான விஷங்களை வெளிப்படுத்துவதிலிருந்து விலகியே இருக்கிறது!உங்களைப் போன்றவர்களின் முயற்சியால் தான் சமுதாயம் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்!
நன்றி!

6:00 AM, April 05, 2010  
Anonymous உண்மையான இஸ்லாமியன் said...

// அவருடைய ஹிந்து மத வெறுப்பு அவருடைய ஜனநாயக வெறுப்பிலிருந்தும் அந்த ஜனநாயக வெறுப்பு இஸ்லாமியத்தில் இயல்பாகவே இருக்கும்//

ஹுசைனை இதர இஸ்லாமியர்களில் இருந்து தனியே நோக்குவது நல்லது.

வெறுப்பையே கலையாக்கி அதை நமது மதச்சார்பின்மைவாதிகளிடம் விற்றவர்.

ஹுசைனுக்குத் தெரியும். தாம் இருக்கும் இந்திய நாட்டில் மதக்கலவரத்தை உண்டாக்க வல்லது தமது ஓவியங்கள் என. இருப்பினும் அவரது மதக்கடமைகளில் ஒன்றான பிற மதத்தவர்களையும், அவர்தம் கடவுளையும் இகழ்வதைச் செய்தார்.

எப்படியோ இந்த நாட்டைப் பிடித்திருந்த ஒரு பீடை ஒழிந்தது.

7:28 AM, April 05, 2010  
Anonymous Anonymous said...

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

எனக்கு பதில் சொல்ல ஒரு பதிவே எழுதி என்னையும் என் கேள்வியையும் மரியாதைப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!

ஹுசேன் நல்லவரா கெட்டவரா என்பது எனக்கு பிரச்சினையாகத் தோன்றவில்லை. இது வரை நான் அதை எல்லாம் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. எனக்கும் ஹுசேனுக்கும் உள்ள உறவு அவர் ஓவியங்கள் மூலமே. கமலஹாசன் ஸ்திரீலோலன் என்றால் எனக்கு அது கிசுகிசு மட்டுமே, அவரது திரைப்படங்களே எனக்கு முக்கியம். அது போலத்தான். ஹுசேனை நான் சிறந்த ஓவியர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நல்ல தொழில் திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். அவரது திறமை, எண்ணங்கள், இந்த மாதிரி படம் வரைவதின் உள்நோக்கம், ஆபிரகாமிய மதங்களின் நன்மை தீமை இங்கே எனக்கு முக்கிய விஷயமாக படவில்லை. அவருக்கு இப்படிப்பட்ட ஓவியங்கள் வரையும் உரிமை மறுக்கப்பட்டால் - அதுவும் ஒரு குழுவினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று மறுக்கப்பட்டால் - Satanic Verses தடை செய்யப்படுவதும் சரியாகிவிடும். அதே விஷயம்தானே? ஒரு குழுவினரின் உணர்வுகளுக்கு ரஷ்டி மதிப்பளிக்கவில்லை, அவ்வளவுதானே? அவ்வளவு ஏன், நான் இப்படி வாதிடுவது தமிழ் பதிவுலகின் பெரும்பான்மையினரின் மனதை புண்படுத்தும்; நீங்கள் இப்படி வாதிடுவது ஹுசேனின் குடும்பத்தாரை புண்படுத்தும். அதற்காக நம் வாதங்களை இந்திய அரசு தடை செய்தால் எப்படி உணர்வீர்கள்?

நீங்கள் இதை ஹிந்துக்கள் மீது வெறுப்பு என்று கருதுகிறீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹிந்துக்கள், ஹிந்து தெய்வங்கள் மீது contempt(சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) என்று சொல்லலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அவர் ஹிந்துக்களை கொல் என்றோ, ஹிந்துக்கள் தாழ்ந்தவர்கள் என்றோ தன் ஓவியங்கள் மூலம் சொல்லவில்லை. காஃபிர்களை (சில சூழ்நிலைகளில்) பூண்டோடு அழிக்கலாம் என்று சொல்லும் குரானை, ஜாதி பேதம் சொல்லித் தரும் மனு ஸ்மிருதியை, சம்பூகனை ராமன் கொன்றதாக சொல்லும் ராமாயணத்தை ஒரு குழுவினர் மீது வெறுப்பு என்று சொல்லி தடை செய்யலாமா என்ன? (நான் குரான் படித்ததில்லை, ஆனால் ராமாயணம் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்டால் அந்த நாட்டில் வாழ்வது என்னைப் பொறுத்த வரையில் மகா கேவலம்.)

ஹுசேனை ஆதரித்துவிட்டு அவுரங்கசீப் கண்காட்சியை எதிர்ப்பவர்கள் போலிகள், hippocrites என்று நீங்கள் சொல்வது மிகச்சரி. நான் 200% உடன்படுகிறேன். ஆனால் நீங்கள் அவுரங்கசீப் கண்காட்சியை , தஸ்லிமா நஸ்ரீனின் கருத்து சுதந்திரத்தை, டேனிஷ் கார்ட்டூனிஸ்டுக்கு வரைய இருக்கும் உரிமையை, ஆதரித்துவிட்டு ஹுசேனை எதிர்ப்பது எப்படி என்றுதான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

11:16 PM, April 05, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ருத்ரனா நாக்கின் நீளம் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்? நீங்கள் குறிப்பிட்டிருப்பதை படித்தபோது எனக்கு சுருக்கென்று இருந்தது – இது என்ன அநாகரீகமாக இருக்கிறதே என்று தோன்றியது. ருத்ரன் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளை சொல்லி இருக்கிறார், அவருக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் தகராறுதான், ஒருவரை ஒருவர் சாடி இருக்கிறோம், ஆனால் அவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை//

தவறாக சொல்லிவிட்டேன். நாக்கின் நீளம் குறித்து ருத்ரன் சொல்லவில்லை. அவர் வார்த்தைகளில் எப்படி இருக்கிறாரோ நான் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்டோ அனுப்புவது முதல் வழக்கு தொடர்வது வரை வலையுலக விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் அலாதியான அணுகுமுறை கொண்ட மனோதத்துவ மேதைகள் இணையவெளியில் உலவுகின்றனர். ±É§Å அன்னார் சொன்னதையும் அதன் பின்னால் உள்ள விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்:


þо¡ý ÕòÃý ¦º¡ýÉÐ: //அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா? ஹிம் நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!//
þ¾üÌ ¸¡Ã½õ ¿¡ý þùÅ¡Ú ¦º¡ýÉÐ: //அது அவருடைய மனம் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த காயங்களை கூடுதலாக அனுப்பவித்தவர்கள் இங்குண்டு என காட்டஎனவே சோர்ந்து போகாமல் இருக்க அனுப்பப்பட்டதுதான். அது தவறல்ல. ஆனால் உன் மடலை நான் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாமா என கேட்டிருந்தால் அது ethical ஆக பண்பாட்டுடமையாக இருந்திருக்கும். அது போகட்டும்.//
இதற்கு காரணம் உமா என்கிற பதிவர் இவ்வாறு கூறியது: //ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//

ருத்ரன் என்கிற பெயரில் எழுதும் ஆசாமி போலி-டோ ண்டு அளவுக்கு தரம் தாழ்ந்து போவாரா அல்லது ஒரு படி மிஞ்சுவாரா என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம்.

2:21 AM, April 06, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

/ருத்ரனா நாக்கின் நீளம் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்? நீங்கள் குறிப்பிட்டிருப்பதை படித்தபோது எனக்கு சுருக்கென்று இருந்தது – இது என்ன அநாகரீகமாக இருக்கிறதே என்று தோன்றியது. ருத்ரன் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளை சொல்லி இருக்கிறார், அவருக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் தகராறுதான், ஒருவரை ஒருவர் சாடி இருக்கிறோம், ஆனால் அவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை//

தவறாக சொல்லிவிட்டேன். நாக்கின் நீளம் குறித்து ருத்ரன் சொல்லவில்லை. அவர் வார்த்தைகளில் எப்படி இருக்கிறாரோ நான் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்டோ அனுப்புவது முதல் வழக்கு தொடர்வது வரை வலையுலக விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் அலாதியான அணுகுமுறை கொண்ட மனோதத்துவ மேதைகள் இணையவெளியில் உலவுகின்றனர். ±É§Å அன்னார் சொன்னதையும் அதன் பின்னால் உள்ள விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்:


இதுதான் ருத்ரன் சொன்னது: //அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா? ஹிம் நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!//
இதற்கு காரணம் நான் இவ்வாறு சொன்னது: //அது அவருடைய மனம் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த காயங்களை கூடுதலாக அனுப்பவித்தவர்கள் இங்குண்டு என காட்டஎனவே சோர்ந்து போகாமல் இருக்க அனுப்பப்பட்டதுதான். அது தவறல்ல. ஆனால் உன் மடலை நான் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாமா என கேட்டிருந்தால் அது ethical ஆக பண்பாட்டுடமையாக இருந்திருக்கும். அது போகட்டும்.//
இதற்கு காரணம் உமா என்கிற பதிவர் இவ்வாறு கூறியது: //ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//

ருத்ரன் என்கிற பெயரில் எழுதும் ஆசாமி போலி-டோ ண்டு அளவுக்கு தரம் தாழ்ந்து போவாரா அல்லது ஒரு படி மிஞ்சுவாரா என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம்.

2:22 AM, April 06, 2010  
Anonymous Anonymous said...

//þо¡ý ÕòÃý ¦º¡ýÉÐ: //அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா? ஹிம் நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!////

ஐயா,

இது தான் மருத்துவர் ஐயா பிற்றிக்கொண்ட மெட்ராஸ் பாஷையா?ஓரளவுக்கு அவர் சொன்ன படி கேவலமாகத் தான் இருக்கிறது.

11:38 PM, April 07, 2010  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

8:53 PM, April 13, 2010  

Post a Comment

<< Home