Wednesday, May 05, 2010

திருட்டுப்பசங்களுக்காக செதுக்கிய விஷயம்

ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளிக்கு மண்ணடிக்கவும் செங்கல் சுமந்து கொண்டும் மாட்டு வண்டி வரும். சாயுங்காலம் வீட்டுக்குப் போகும் போது மாட்டுவண்டியில் ஏறிப் போக ஆசையாக இருக்கும். ஏறினால் அதை வண்டிக்காரர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு தெரிந்தால் பிரம்படிதான். ஆனாலும் வீட்டுக்குப் போகும் போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாட்டுவண்டியின் பின்னால் நீட்டிக்கொண்டிருக்கும் கம்புகளில் பையை சுழற்றிப் போட்டுவிட்டு பிறகு மாட்டுவண்டியின் கீழே இருக்கும் கனமான சட்டத்தை பிடித்து தொங்கிய படி வண்டிக்காரருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போவதை செய்யாத மாணவர்களே கிடையாது. இதை செய்யும் போது ஒரு விஷயம் தெரியும். மாட்டுவண்டியின் நடுவில் அச்சுகளுக்கு இணையாக இருக்கும் பெரிய கட்டையில் செதுக்கியிருக்கும் வடிவங்கள். வண்டியை சரித்து நிறுத்தியிருக்கும் போதும் சரி வண்டி போகும் போதும் சரி இவை அப்படி ஒன்றும் தெளிவாக பார்வைக்கு தெரியாது. உன்னிப்பாக யாராவது கவனித்தால்தான் தெரியும். நான் இதுவரை திருட்டுத்தனமாக 'தொங்கிய' வண்டிகளில் இரண்டு வண்டிகளில் ஒரே மாதிரியான டிசைனை பார்த்ததாக ஞாபகம் இல்லை. நேற்று கன்னியாகுமரி போய்விட்டு திரும்பும் போது இரண்டு மாட்டுவண்டிங்கள் நிற்பதைப் பார்த்தேன் பழைய நெனப்புடா பேராண்டின்னு கிட்ட போய் உத்துப் பார்த்தேன்.











சின்னப்பசங்க திருட்டுத்தனமா மாட்டுவண்டிக்கு பின்னாடி தொங்கிகிட்டு போகும் போது ரசிக்கிறதுக்காகவே இப்படி அழகா மரவேலைப்பாடு செதுக்கி வைக்கிற மனசு இருக்கிற பண்பாடு எப்படிப்பட்டது....எதை இழந்துகிட்டு இருக்கோம் நாம?

10 Comments:

Blogger Umayorubhaganshares said...

Aravind,I really enjoyed the nostalgis.
Umayorubhagan

1:08 AM, May 05, 2010  
Blogger ஜடாயு said...

வாவ்!

2:12 AM, May 05, 2010  
Blogger Gurusamy Thangavel said...

அரவிந்தன், பணகுடி தமிழ்நாட்டில் மாட்டு வண்டிப் பட்டறைத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊர்களில் ஒன்று. இவ்விடுகை நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது என் பள்ளிக்கு எதிர்புறம் இருந்த வண்டிப் பட்டறைக்குச் சென்று வேடிக்கை பார்த்த நாட்களை ஞாபகப்படுத்திற்று. நன்றி.

11:15 AM, May 05, 2010  
Blogger அருணகிரி said...

இங்கு நான் பார்ப்பது பரிசுகளுக்காகவும் பாராட்டுகளுக்காகவும் இல்லாமல், தன் ஆன்மாவின் திருப்திக்காக செய்யப்படும் அந்தரங்க பூஜையின் அடையாளத்தை. கலையுணர்ச்சி வழியாக வெளிப்படும் தொழில்நேர்த்தியை. இவ்வகையில் வெளிப்படும் அழகுணர்ச்சி என்பது ஒரு கம்பீரம். தொழிலாளி சுயச்சார்புடனும் எல்லையற்ற தன்னம்பிக்கையுடனும் தானாகவே படைத்துக்கொள்ளும் வாழ்க்கைத்தரம்.

11:27 AM, May 05, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

தங்கவேல் வந்தாச்சா? அங்கதான் இருக்கீங்களா? வந்ததுக்கு கருத்து சொன்னதுக்கு நன்றி ஜடாயு, அருணகிரி.

6:18 PM, May 05, 2010  
Blogger Gurusamy Thangavel said...

இன்னும் இங்கதான் இருக்கேன். இந்த மாதம் 20ம் தேதி இந்திய மண்ணிற்கு வந்துவிடுவேன்.

6:35 PM, May 05, 2010  
Blogger சுழியம் said...

இந்துக்களிடம் இருக்கும் இந்தப் படைப்பூக்கம் பற்றி விவேகானந்தரும் சொல்லி இருக்கிறார். இந்துக்கள் உபயோகிக்கும் சொம்பில்கூட அழகான வேலைப்பாடுகளைக் காண முடியும் என்று அவர் சொல்லியுள்ளார்.

இதற்குக் காரணம் எது கலை என்பதை ஒரு தனிமனிதன் அவனாக முடிவு செய்து, அவனாக வெளிப்படுத்த அமையும் சுதந்திரச் சூழல். இந்தச் சூழல் இந்து மதத்தால் ஏற்படுவது.

எது கலை, எது சரி, எது தப்பு என்பதை அதிகார வர்க்கம் கட்டமைக்கும் ஆபிரகாமியப் போக்கில் இருந்து இந்த இந்துச் சூழல் முற்றிலும் வேறுபட்டது.

இந்தச் சூழலில் தனிமனிதர் அவர்களுடைய சுய கலை உணர்வை வெளிப்படுத்துவதும் நடக்கிறது. அதை அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துக்கள் ரசிப்பதும், வரவேற்பதும், பகிர்வதும் நடக்கிறது.

இந்துக்களாக வாழ நாம் புண்ணியம் செய்தோம்.

7:23 PM, May 05, 2010  
Blogger ஹரன்பிரசன்னா said...

வயதாகிவிட்டால் இப்படித்தான். குருவி தண்ணீரில் நனைவது, எறும்பு ஊர்வது என்றெல்லாம் தேடிப் போய் பார்த்து அழகியலை ரசிக்கச் சொல்வதாக பாவனை செய்துகொள்ளச் சொல்லும். வாழ்த்துகள்.

7:41 PM, May 05, 2010  
Blogger அருணகிரி said...

அவரை நினைத்து அரவிந்தனை இடிக்கிறார் ஹபி :)

7:27 PM, May 10, 2010  
Anonymous Anonymous said...

//தொங்கிய' வண்டிகளில் இரண்டு வண்டிகளில் ஒரே மாதிரியான டிசைனை பார்த்ததாக ஞாபகம் இல்லை//

வண்டியை அடயாளம் காண்பதற்கு ??

4:01 AM, May 24, 2010  

Post a Comment

<< Home