Monday, December 18, 2006

தமிழ்நாட்டில் இந்து வாழ்வுரிமை - 2006


கடந்த சில காலமாக இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்,வெறுப்பியல் சம்பவங்கள், இந்துக்களின் பாதுகாப்பின்மை ஆகியவை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மை மற்றும் இந்து விரோத
போலி-மதச்சார்பின்மை அரசியலின் இயல்பும் இந்த வன்-கொடுமைகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்க காரணமாகியுள்ளது. பல இடங்களில் இந்துக்கள் மீது
பண வலிமையால் மதமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை இந்துக்கள் கட்சி வேறுபாடின்றி எதிர்த்துள்ளனர். இந்த செய்திகளின் தொகுப்பே இது. என்னிடம்
கிடைத்த தகவல்களின் ஒழுங்கு படுத்தப்படாத தொகுப்பு இது. இது முழுமையான தொகுப்பு அல்ல. பொதுவாக இந்துக்களில் அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்வுரிமைக்கு
பாதுகாப்பற்ற சூழலை உணருகின்றனர்.


 • இந்து இநளைஞர்கள் மர்மமான முறையில் மரணம்: முன்னாள் அமைச்சர் குமுறல்

  மர்மமாக மரணமடைந்த நீலகண்டனும் முருகனும்

  தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் கறம்பக்குடி மற்றும் ஆவணம் கைகாட்டி கிராமங்களைச் சார்ந்த இரு இந்து இளைஞர்கள் நீலகண்டனும் முருகனும் ஆவணம் அப்துல்
  அஜீஸ் என்பவர் இல்ல திருமணத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற போது அங்கே மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்த இளைஞர்களின் மரணத்தில் ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த மக்களை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். (நக்கீரன் 29-11-2006)

 • இந்து முன்னணி தலைவர் வெட்டிக்கொலை.
  நெல்லை மாவட்டம் தென்காசி மலையான் குளத்தைச் சார்ந்த சொர்ண தேவர் மகன் குமார பாண்டியன். இவர் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக இருந்துவந்தார்.
  17-டிசம்பர்-2006 இரவு அவர் வீட்டுப்பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

 • குமரி மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி. 'தீ வைத்து எரிப்போம்' என மிரட்டல் [மாலை மலர்: 18-12-2006 : நாகர்கோவில் பதிப்பு]
  பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி. 17-டிசம்பர்-2006 அன்று இரவு குளச்சல் துறைமுகம் சந்திப்பில் சென்று கொண்டிருந்த காரை ஒரு கும்பல்
  மறித்தது. ஒருவன் காரின் பின்பக்கத்தை தாக்கி உடைத்தான். 'குளச்சல் பஸ் நிலைய பொது கூட்டத்தில் நம்மை தாக்கி பேசியவன் இவர் தான். இவரை எரித்து கொல்லவேண்டும்
  என ஒருவன் ஆவேசமாக கூறினான். அவருடன் கார்டிரைவரும் மகேஷ் என்பவரும் இருந்தனர். எனவே அந்த கும்பலில் இருந்து எம்.ஆர்.காந்தி ஒரு வழியாக தப்பினார். இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி விசாரணை நடத்தி வருகிறார்.
 • இந்துக்களை தாக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இயங்குகிறதா அரசு? [ஜூலை-செப்டம்பர் 2006]

  பொதுவாகவே திமுக அரசு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவானதாக கருத்து இருப்பதால் காவல்துறையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்க
  ஆரம்பித்துள்ளன. ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியை கைது செய்ய போன காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். (தினகரன் ஜூலை 20
  2006)மேலைப்பாளயத்தைச் சார்ந்த அல் உம்மா பயங்கரவாதியை பிடிக்கச்சென்ற ஏட்டு ஏசுதாசன் தாக்கப்பட்டார். கருங்குளம் துரைப்பாண்டி என்ற இந்துவை தாக்கி கொள்ளை
  அடித்த கும்பலை சேர்ந்தவன் காடைஹாஜா. இவன் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவன், இவன் மீது கொலை அடிதடி போன்ற பலவழக்குகள் உள்ளன. இவன்
  இருப்பது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஏட்டினை அவன் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டான். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

  தினகரன் நெல்லை பதிப்பு ஜூலை 20 2006

  தினமலர் 23-ஜூலை-2006 வெளிவந்த செய்தியின் படி ஜூலை 2006 அன்று கோவையில் முக்கிய இடங்களைத் தகர்க்கவும் இந்து இயக்கத்தலைவர்களை கொலை செய்யவும்
  திட்டமிட்டிருந்த சதித்திட்டம் ஒன்றை கோவை காவல்துறையினர் கண்டுபிடித்து முறியடித்ததாக செய்திகள் வெளியாயின. கையெறி குண்டு (பெரிய சைஸ், வெங்காய வெடி
  போன்றது), 400 கிராம் பொட்டாசியம் குளோரைட் மிக்சர், கண்ணாடி துகள்கள், இரு சக்கர வாகனங்களுக்கான "பேரிங்' பால்சுகள், இரு பைப் குண்டுகள் பதுக்கி
  வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் கரன்சின்ஹா, சட்டம்&ஒழுங்கு துணைக்கமிஷனர் சண்முகவேல் தலைமையிலான
  போலீசார் இரவோடு இரவாக ஆத்துப்பாலம், கரும்புக்கடை, கோட்டைமேடு, போத்தனும்ர் பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்குரிய வீடுகளை சோதனையிட்டனர். இதில், தீவிரவாத
  கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் மாலிக் பாஷா, ஆருண் பாஷா, கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டைச் சேர்ந்த சம்சுதீன், ரவி(எ) திப்பு சுல்தான், ரகுமான் ஆகியோர்
  பிடிபட்டனர். கோவை மாநிகர "மேப்', இந்து இயக்க நிர்வாகிகளை பற்றிய குறிப்புகள், சில நோட்டீஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேப்பில் எட்டு இடங்கள் பேனாவால்
  வட்டமிடப்பட்டிருந்தன. இந்த இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
  இது குறித்த மற்றொரு செய்தி:

  ஆனால் இதனையடுத்து உதவி நுண்ணறிவுப்பிரிவு இரத்தினசபாபதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
  இது குறித்த மற்றொரு செய்தி:

  மட்டுமல்ல, காவல்துறையினர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். யாரை காப்பாற்ற செயல்படுகிறது திமுக அரசு? என்கிற கேள்வி எழுந்துள்ளது.  இதே திமுக அரசின் முந்தைய ஆட்சியின் போது (1998 இல்) நடந்த இஸ்லாமிய பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர் என்பதும்
  அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு அறிக்கைகளை உதாசீனப்படுத்தியதாலேயே இவை நடந்தேறின என பரவலான கருத்து நிலவுவதும்
  குறிப்பிடத்தக்கவை. இவை இந்துக்களிடையே அச்ச உணர்வையும் பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. திமுக அரசு அனைத்து தளங்களிலும் அனைத்து தரப்பு
  இந்துக்களுக்கும் எதிரான தன்மையுடனேயே இயங்குகிறது என்னும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கரன்கோவில் இந்து முன்னணி தலைவர் கொலை, ஏறக்குறைய அதே
  நேரத்தில் குமரி மாவட்ட பாஜக தலைவர் கொலை முயற்சி, புதுக்கோட்டை இந்து இளைஞர்கள் கொலை ஆகியவை ஜிகாதி அமைப்புகள் 1990-98களில் நடத்திய அதே
  கொலைவெறி தாக்குதல்களை மீண்டும் தைரியத்துடன் தொடங்கிவிட்டதையும், இதற்கு இன்றைய அரசுகளின் போக்கு துணை போகும் சூழலை உருவாக்கியுள்ளதையும் காட்டுகிறது.
 • மதுரை சிறையில் இந்து கைதியை இஸ்லாமிய பயங்கரவாத கைதிகள் தாக்குதல் (தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் 26-11-2006)

  பயங்கரவாதி இமாம் அலியின் கூட்டாளி கைதிகள் ஆறு பேர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டனர். இவர்கள் மற்ற கைதிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டமையால்
  இந்த நடவடிக்கையை சிறை அதிகாரிகள் எடுக்க வேண்டிவந்தது. முருகானந்தம் எனும் ஆயுள் கைதி இவர்களால் தாக்கப்பட்டார். சககைதிகளை மட்டுமல்லாது சிறை
  ஊழியர்களையும் இந்த பயங்கரவாத இஸ்லாமிய கைதிகள் தாக்குவது வழக்கம். சிறை DIG எஸ்ரா இந்த மாதிரி விரைவாக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் அவசியமானவை
  என தெரிவித்தார்.

 • இந்து கோவில் உடைப்பு [23-11-2006 : தினகரன் குமரி மாவட்ட பதிப்பு]
  சுசீந்திரத்தை அடுத்த இரவிபுதூரில் செல்லப்ப பிள்ளை என்பவரின் குடும்ப கோவில் பத்ரகாளி அம்மன் கோவில். மர்ம நபர்களால் இக்கோவிலின் படிக்கட்டுகள் கோவில் கதவு
  ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன. இதே கோவிலில் இரண்டுமாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் புகுந்து சேதப்படுத்தி கொள்ளை அடித்திருந்தனர். அடிக்கடி இக்கோவில் குறி
  வைத்து தாக்கப்படுவது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  உடைக்கப்பட்ட இந்து கோவில்

 • ஜெபகூடம் விவகாரம் : வெள்ளமோடியில் சத்தியாகிரகம் [குமரி மாவட்டம் : தினகரன் குமரிமாவட்ட பதிப்பு டிசம்பர்-18-2006]

  ஜெபகூடத்துக்கு எதிராக மக்கள் சத்தியாகிரகம்

  குளச்சல் டிச.18: வெள்ளமோடியில் ஜெபகூடத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். வெள்ளமோடி முந்திரி ஆலை ரோட்டில் பாப்ரிஸ்ட் காம்பவுண்ட் பெயரில் ஒரு
  கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கடந்த 2 மாதங்களாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வருகிறது. தேங்காய் கொப்பரை தயாரிக்க என அனுமதி பெற்ற கட்டிடத்தில்
  ஜெபக்கூடம் நடத்துவதாக அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 • மாணவர்களிடையே மதத்தை பரப்பும் நோட்டீஸ் : தினமலர் : 9-3-2006 மதுரை பதிப்பு

  தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் நடந்து வருகையில் வத்தலகுண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இப்பள்ளியின்
  பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களான சந்திரசேகர், செல்வம், தவராஜ் ஆகியோர் இந்நோட்டீசை விநியோகித்துள்ளனர். இது குறித்து காவல்துறையிடம்
  புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் மோகன் அருணாசலம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மதத்தை பரப்பும் விதமாக
  செயல்பட்ட இந்த ஆசிரியர் மூவரையும் டிஸ்மிஸ் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. இம்மூவரின் நடவடிக்கையை கண்காணிக்கத் தவறிய தலைமையாசிரியர் மீது முதன்மை கல்வி
  அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது.

 • இந்துக்கள் வாழும் கிராமத்தில் மதமாற்ற அமைப்பு : மக்கள் எதிர்ப்பு (துக்ளக், 20-12-2006)

  கிராமப்புறங்களில் நூதனமுறையில் மதமாற்றம் செய்யும் முயற்சி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
  இடையார் பாளையம், சின்னகுயிலி, லட்சுமி நாயக்கன் பாளையம், செலக்கரிச்சல், அக்கநாயக்கன் பாளையம், வடவள்ளி, வேலப்பநாயக்கன் பாளையம் ஆகிய கிராமங்களை சார்ந்த
  மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய மனுவில் வெளிநாட்டு உதவியுடன் இடையர்பாளையம் போதகம் பட்டி பகுதியில் கிறிஸ்தவ
  மத பிரச்சார அமைப்பு நிறுவனம் அமைய உள்ளதாகவும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கிறிஸ்தவ மதப்பிரச்சார அமைப்பினால் அப்பகுதி அமைதி கெட வாய்ப்பு
  உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக என பல்வேறுகட்சியினரும் கூட கிறிஸ்தவ மதப்பிரச்சார அமைப்பு இங்கு அமைவதை
  விரும்பவில்லை என கூறியுள்ளனர். மக்கள் எதிர்ப்பினை அடுத்து கிறிஸ்தவ மத பிரச்சார அமைப்பு அடிக்கல் அகற்றப்பட்டுள்ளது என்றாலும் வாரம் தோறும் கிராம வாரியாக அங்கு
  அத்தகைய அமைப்பு வருவதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என கிராம மக்கள் கட்சி பேதமின்றி முடிவு செய்துள்ளனர்.

13 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

test

1:12 PM, December 18, 2006  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அத்துமீறல் இல்லாத வகையில் மதப்பிரச்சாரம் யாரும் செய்யலாமே. நம்பிக்கையை பரப்புவது ஒரு குற்றமில்லை. மதத்தை பல வழிகளில் பரப்பியிருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியுமே.

இதில் திருப்பி தாக்கப் பட்டவர்கள் பர்றி எதுவும் சொல்லவில்லையே.

கோயம்பத்தூரில் சும்மா மாணவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த பிரதர் ஒருவரை அடித்து அனுப்பினார்கள்.

நான் கோயம்பத்தூர் சிருவர் சிறைக்கு வாரம் ஒருமுறை சென்று அங்கிருந்த சிறுவர்களோடு விளையாடி வந்திருக்கிறேன் as a "brother" when I was one.

ஒருபோதும் மதம் மாறச் சொல்லி யாரையும் தூண்டச்சொல்லி எங்களை யாரும் ஏவியதில்லை.

மதப் பிரச்சாரம் தவறானதா?

3:14 PM, December 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அத்துமீறல் அல்லாத மதப்பிரச்சாரத்தின் அளவுகோல் என்ன? சிலைவழிபாட்டை விபச்சாரத்துடன் bracket செய்கிற ஒரு துண்டு பிரசுரத்தை கொடுக்கும் சிரித்த முக பிரச்சாரகரின் மதப்பிரச்சாரம் அத்துமீறலா? இல்லையா? அல்லது 'இது சிறுபான்மையினர் பள்ளி இங்கு மந்திரி சொல்கிற மாதிரி அனைவரையும் இடமாற்றம் செய்யமுடியாது' என சொல்கிற ஆயரின் குரல் எத்தகையது? இத்தனைக்கும் அரசு அளிக்கிற (பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்தால் கிடைக்கிற) உதவித்தொகையையும் அரசு அளிக்கிற அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசுக்கு சிறுபான்மையினர் என்கிற முறையில் சவால் விடும் மனப்போக்கு எத்தகையது? சுனாமியை 'ஆண்டவர் விபச்சாரம், சிலை வழிபாடு போன்றவற்றை செய்தவர்களுக்கு கொடுக்கிற தண்டனை' என கூறுகிற மோகன்.சி.லாசரசின் மதப்பிரச்சாரம் அத்துமீறல் உடையதா இல்லையா? இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் மதப்பிரச்சாரத்துக்காக விநியோகிக்கப்படுகிற துண்டு பிரசுரங்களில் பொய்யான கதைகள் (உ.ம். நான் திருவரங்கம் கோவில் பூசாரியின் மகன் ....நான் வேதங்களில் தேடி கிடைக்காத மன நிம்மதி ஏசுவிடம் கிடைத்தது), சிலைவழிபாடு செய்வது குறித்த துவேஷ பிரச்சாரங்கள் (உம். இந்த தேசத்தில் தேவனுக்கு விரோதமான பாவ காரியமான சிலை வழிபாடு பேய் வழிபாடு நின்று போக முழங்கால் யுத்தம் நடத்துவோம்..) எத்தனை? அத்தோடு ஒப்பிடுகையில் நீங்கள் சொல்வது போன்ற சகோதரிகள் சகோதரர்கள் மிகக் குறைவு. யூதர்கள் தங்களுக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்தை தொகுத்து அது எவ்விதம் அவர்களுக்கு எதிரான வன்முறையாக பரிணமித்தது என காட்டியுள்ளார்கள். இன்றைக்கு யூதர்களுக்கு இணையாக வெறுக்கப்படுபவர்களும் அதே அளவுக்கு இனசுத்திகரிப்புக்கு ஆளாபவர்களும் இந்துக்கள். இதற்கு பின்னால் இருக்கும் expansionist ஆபிரகாமிய கருத்தியல் வன்முறையையும், நடப்பியல் வன்முறையையும் காட்டுவதே இத்தொகுப்பின் நோக்கம்.

4:29 PM, December 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நேற்று அப்துல் கலாமின் 'ஞானதீபங்கள்' படித்தேன். அத்துமீறல் இல்லாத ஆன்மிக போதனையை அனைவரையும் அணைத்து முன்னேற்றும் ஆன்மிக போதனையை காட்டும் அழகிய நூல். முடிந்தால் இன்று அதற்கு ஒரு பகிர்தல் எழுதுகிறேன்.

4:31 PM, December 18, 2006  
Blogger கால்கரி சிவா said...

பயங்கரமாய் இருக்கிறதே..இதை கேட்பார் யாருமில்லையா

8:44 PM, December 18, 2006  
Blogger ஜடாயு said...

நீலகண்டன், நீங்கள் கொடுத்திருக்கும் செய்திகள் பெரும் கவலை தருகின்றன. அவற்றின் பின்னால் தாண்டவமாடும் ஜிகாதி தீவிரவாதம் மற்றூம் கிறிஸ்தவ மதவெறி ஆகியவற்றையும் செய்தித் தாள்களே சுட்டிக் காட்டியிருக்கின்றன.
இன்னும் எத்தனை நாளைக்கு இவற்றைப் பூசி மெழுகுவார்கள்?

சிறில் அலெக்ஸ் கேட்கிறார்:
// அத்துமீறல் இல்லாத வகையில் மதப்பிரச்சாரம் யாரும் செய்யலாமே. //
இது ஒரு கிறிஸ்தவத் தந்திரம், நமது சமய, கலாசார சூழலில் மதமாற்ற பிரசாரம் என்பதே அத்துமீறல் தான்!

// ஒருபோதும் மதம் மாறச் சொல்லி யாரையும் தூண்டச்சொல்லி எங்களை யாரும் ஏவியதில்லை.

மதப் பிரச்சாரம் தவறானதா? //

ஆம், இங்கு நடக்கும் கிறிஸ்தவப் பிரசாரங்கள் கண்டிப்பாகத் தவறானது தான்.

இத்தகைய பிரசாரத்தில் இழையோடும் வெறுப்பு விஷத்தையும், கருத்தியல் வன்முறையையும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் நீலகண்டன். நன்றி.

9:26 PM, December 18, 2006  
Anonymous Anonymous said...

வ்ன்முறையை அனைவரும் யார் செய்தாலும் எதிர்க்க வேண்டும்.அமைதிப்பூங்காவாக் அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.பட்டையும் நாமமும் போட்டவர்களும் கருப்புச்சடைக் கூட்டங்களுக்கு வந்து கேட்டுப்போகும் நாகரீகம் இருந்தது.முசுலிம்,கிருத்தவர்களும் இந்துக்களுடன் தூத்துக்குடி துறைமுகம் போன்ற வேலையிடங்களில் உடன்பிறப்புக்களாக இன்ப துன்பங்களில் பங்கேற்றதை நேரே பார்த்திருக்கிறேன்.கோவையிலே கணக்கு திறப்பதற்ககாக அத்வானி வந்தார்,கணக்கை மட்டுமல்ல கலகத்தையும் திறந்துவிட்டார்.அதற்குப்பின்னர்தான் தமிழகமும் அமைதியை இழந்துவிட்டது.இதற்கு அரசியல் வாதிகளைக் குறைகூறுமுன் மதம்பிடித்த மதவாதிகளைக் குறை கூறவேண்டும்.அனைத்து மதவெறியர்களையுந்தான்.அதை ஊதிவிடும் பொய்மலரையுங் குறை கூறவேண்டும்.
இப்பொழுது இந்து இந்து என்று இணைத்துப் பேசுகிறீர்களே அனைத்து இந்துக்களும் ஒன்றா?ஒன்றாக நடத்தப்படுத்துகிறார்களா?எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.சிதம்பரத்திலே வாழ்நாள் பூராவும் திருவாசகம் ஓதுகிறவர் உள்ளே சென்று ஓதமுடியாமல் தடுக்கும் தீட்ச்சதர்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்.இந்து மதவெறி அடங்காமல் மற்ற வெறிகள் அடங்காது.ஒரு நல்ல தலைமையில்லை என்பதுதான் உண்மை.

11:50 PM, December 18, 2006  
Anonymous Anonymous said...

70க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர்

ஐயா, இது சனநாயக நாடு. இங்கே ஒன்று சேராத 70 ஓட்டுக்களைவிட ஒன்றாய் சேரும் 786 வோட்டுக்கள் முக்கியம். இந்த கும்பலாட்சி முறையில் மக்களாட்சியை தேடுகின்றவர்களாக இந்து உணர்வுள்ளோர் இருப்பது அவர்கள் தவறு.

மானத்தை மரைக்காயர் கஞ்சிக்கு மாற்று தந்த சுயமரியாதை சுடர்களல்லவா எங்கள் அரசியல்வாதிகள்.

அநியாய வியாபரம் அழிய நேர்மையான வியாபாரம் நடக்க வேண்டும். வியாபாரமே தவறு என்று நினைக்கின்றவர்கள் செய்தித்தாள் சாவுகளாக புள்ளிவிவரங்களின் புள்ளிகளாக மறையவேண்டியதுதான்.


இப்படிக்கு,

ஐயன் காளி

4:16 AM, December 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை. இதைவிட கொடுமை இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் என தெரியவந்திருப்பவைதாம். இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் வேகமாக உருவாகிவருகிறது.

4:34 AM, December 19, 2006  
Anonymous Anonymous said...

சிறில்,

அத்துமீறல் இல்லாத வகையில் மதப்பிரச்சாரம் யாரும் செய்யலாமே.

அப்படி செய்ய விரும்பவில்லை என்பதைத்தானே இது போன்ற நிகழ்வுகள் சுட்டுகின்றன.

மேலும், எது அத்துமீறல்? ஒருவருடைய நம்பிக்கையை கேள்வி கேட்பது அல்ல அத்துமீறல்.

ஒருவருடைய நம்பிக்கையை கேவலப்படுத்தி, அந்த இடத்தில் தன்னுடைய நம்பிக்கையை நிலைநிறுத்த முயல்வது மனோரீதியான அத்துமீறல்.

உதாரணமாக, என்னிடம் ஒரு துண்டு பிரச்சாரம் இருக்கிறது. அதில் "ஆத்தும நோய்" (அதாவது கிருத்துவை வணங்காது, கிருத்துவத்தை தழுவாது இருப்பது) பரவ காரணங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவையாவன:

1) விபச்சாரம்

2) வேசித்தனம் (1க்கும் 2க்கும் என்ன வித்யாசம் கண்டாரோ, தெரியவில்லை)

3) தூஷணம்

4) மதிகேடு

5) கபடு

6) காமவிகாரம்

7) மதுபானம்

8) துர் இச்சை

9) பொறாமை

10) கொலை

11) வெறி

12) குரோதம்

13) சூதாட்டம்

14) லாகிரி வஸ்துக்கள்

15) பொருளாசை

16) விக்கிரக ஆராதனை

......

அதாவது விக்கிரக ஆராதனையானது வேசித்தனத்திற்கும், கபடிற்கும், துர் இச்சைக்கும், லாகிரிவஸ்துக்களை உபயோகப்படுத்துவதற்கும் இணையானது என்கின்றது. இது அத்துமீறல் இல்லையா?

(சிலையை வணங்குவதுதான் விக்கிரக வழிபாடு, சிலுவையை வழிபடுவது இல்லை என்கின்ற அற்புத தத்துவத்தை ஒரு பாகனாகிய என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.)

இந்த பிரசுரத்தை வெளியிட்டோர்:

P. ஆபிரகாம்
சங்கீத தியான பத்திரிக்கை ஆசிரியர்
கோயம்புத்தூர்

சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த பிரதரை சிறையதிகாரிகள் அடித்து விரட்டியதாகக் கூறுகிறீர்கள். இதை தாங்கள் தங்கள் சகோதரர்கள் ஒருவரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மையாக இருந்தாலும், சிறுவர்களோடு பிரதர்கள் விளையாடிவருவதற்காக போப்பே மன்னிப்பு கேட்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், சிறையில் உள்ள சிறுவர்களோடு ஏன் பிரதர்கள் போய் விளையாட வேண்டும்? இவர்களது விளையாட்டுக்களால் ஏசு மதத்திற்கு எண்ணிக்கை அதிகரிக்கலாமே ஒழிந்து, சிறை செல்லும் சிறுவர்கள் எண்ணிக்கை குறைவதில்லையே. ஏழ்மையாலும் வறுமையாலும் வழிதவறுகிறார்கள் இச்சிறார்கள். இப்படி ஏழைகளோடு விளையாடியபின் கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்பட்ட சர்ச்சுக்களுக்குத்தான் பிரதர்கள் திரும்புகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த தொழிலில் எத்தனை ஆத்துமாக்கள் அறுவடை செய்யப்படுகின்றனவோ அத்தனை லாபம்.

இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இயற்கை வளங்களை கொள்ளையடித்தும், மக்களை இனத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் வளரவிடாமல் செய்துகொண்டிருக்கும் அதே பிரதர்களே இங்கு சிறுவர்களோடு விளையாடுகின்றனர்.

ஏழைகளை உருவாக்கிவிட்டு பின் அவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்பது கீழ்த்தர வியாபாரம்.

பாவங்களை செய்துவிட்டு மன்னிப்பை காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்ற வசதி இருக்கும்போது பிரதர்களின் விளையாட்டுக்கு சிறுவர்கள் பலர் கிடைக்கத்தான் செய்வர்.

சிறில், இங்கு நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதில் எதுவும் வரப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எதிர்ப்பை கிருத்துவம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மறுகருத்து சொல்லுவதற்கு சாத்தானின் கருவியாக கிருத்துவத்தால் பார்க்கப்படும் இணையம் அனுமதிப்பதால் என் கருத்தை பதிந்துவிட்டேன்.

இப்படிக்கு,

மனிதத்தின் பணியில்,

ஐயன் காளி

4:53 AM, December 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயன் காளி,

சகோதரர் சிறில் நேர்மையாக கருத்துக்களை எதிர்கொள்வதுடன் தைரியமாக சுயபரிசோதனையும் செய்யும் திடம் கொண்டவராக இருக்கிறார். பொதுவாக அனைத்து கத்தோலிக்க துறவிகளையும் ஒட்டுமொத்தமாக மதமாற்றிகள் என சொல்லிவிட முடியாது. அவர்களிடையே உண்மையாகவே ஆன்மிக உரையாடலும் பகிர்தலும் சாத்தியமும் கூட. ஆனால் அத்தகைய கத்தோலிக்க துறவிகள் வெகு சிறுபான்மை. மேலும் கத்தோலிக்க அதிகார அமைப்பில் மிக பயங்கரமாக குரல்வளை நெறிக்கப்படுபவர்களும் அவர்களே. துரதிர்ஷ்டவசமாக லிபரேஷன் தியாலஜியையும் ஆரிய-திராவிட இனவாதத்தையும் ஸ்டாலினின் இன-தேசிய (காலாவதியாகிப்போன) கருத்தியலையும் வைத்துக்கொண்டு அனைத்து பிரிவினைவாத கோஷ்டிகளுக்கும் சித்தாந்த -முடிந்தால் லாஜிஸ்டிக்- சப்போர்ட் செய்கிற ஒரு கத்தோலிக்க கூட்டமும் உண்டு. குறிப்பாக திருச்சியை மையம் கொண்டு இயங்கி வருபவர்கள். வகாபி கும்பலுக்கு கொஞ்சமும் குறையாத ஆனால் அவர்களை விட அறிவுசீவித்தனமான கும்பல் இது. இவர்கள் நேரடியாக மதமாற்றம் போன்ற சில்லறைத்தனமான விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள் மாறாக முழு ஆட்சியதிகாரத்தின் கட்டுப்பாட்டினை தம் கைகளில் மறைமுகமாக வைத்துக்கொண்டு கிறிஸ்தவரல்லாதாரின் வாழ்க்கையை கடினமாக்கி ஒட்டுமொத்த மக்களை மதமாற்றுவார்கள். அதே போல மதமாறிய குடும்பங்களை முழுமையான சபைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதற்காக உருவாக்கப்பட்ட வலிமையான நெட்வொர்க் அன்பியம் ஆகும். எங்கள் ஊர் பகுதிகளில் அன்பியம் சில பயங்கரமான கலகத்தை கிறிஸ்தவ குடும்பங்களுக்குள்ளேயே விளைவித்திருக்கிறது. தென்னமெரிக்க நாடுகளில் சபை கட்டுப்பாட்டினை மேம்படுத்தவும் திறமிக்கதாக்கவும் இந்த முறைகள் (லிபரேஷன் தியாலஜி முதல் அன்பியம் வரை) களப்பயன்பாட்டில் கூர்மையாக்கப்பட்டு இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளன. பார்க்கலாம் எப்படியெல்லாம் விஷயங்கள் நடக்கின்றன என்று.

8:17 AM, December 19, 2006  
Anonymous Anonymous said...

நீலகண்டன் ஐயா,

வலைப்பதிவிற்கு புதியோனான ஐயன் காளிக்கு வலைப்பதிவர் அனைவரும் புதியோர். ஆதலால், வாக்கிய கர்த்தாக்களைவிட கர்த்தரைப்பற்றிய வாக்கியங்களையே வரிக்கவேண்டிய ஆரம்பகால அல்லலுள்ளோன் இந்த ஐயன் காளி.

சிறிலின் மனம் சிறியதல்ல என்பதறிந்ததில் மகிழ்வே. மனம் விரியாதது மரியாள் குமரனின் மதம் என்றாலும் மனிதர்தானே மதத்தினர் ஆகின்றனர். நம் குமரனை நாடி நன்மை பெற்றவர்தானே இல்லாதிருந்தும் இருந்து தொலைக்கும் தன்னலமதங்களுக்கு தண்டனிடும் தற்காலத்தவரின் அக்காலப் பெரியோர். அன்பும், அறிவு தேடலும் அனுமதிக்காத மதத்தினராயினும் அவை ஒறுக்கும் சிறுபான்மை பலவீனராய் சிறில் போன்றோர் இருப்பதும், அன்பை விரிக்கும் அகத்தேடலே வாழ்க்கையெனும் அன்னை பாரதத்தின் போதனையை ஆராதனை செய்யும் பெரும்பான்மையோர் பலவீனராய் இருப்பதும் கலி. கண்ணுக்குத் தெரியும் காட்சிகளையும் மறுக்கவைக்கும் மனோவசியத்தாராய் ஏசு மதத்தார் இருப்பதுவும், அல்லா அல்லாதவற்றை ஆராதிப்பவரை அல்லலுக்குட்படுத்தி அயர வைப்போர் அரசை ஆட்டிவைக்கும் அராஜகராய் இருப்பதுவும் கலி. அவரின் அழிவை வேண்டுபவனும், அன்பை ஆராதிப்பவனும்தான் இந்த ஐயன் காளி. பாரதிர பண்பு பெருக்கவிரும்பும் ஒரு சாதாரண பாரதீயன். சாதாரண பாரதீயன் என்பதாலேயே சகத்தில் அசாதரணன் என்று அகநோக்கில் மகிழ்வோன்.

எண்ணிக்கையில் சிறிது, பெரிது சொல்லி எத்தருக்கு தாய்மண்ணும், தரமும், மானமும் தத்தமாய் தரும் தாழ்மனம் மடியவேண்டும். ஓட்டுத் தின்பண்டங்களுக்காய் இம்மாநில திருவை மறைக்கத் துடிப்போரோடு ஒவ்வாமைகொளல் உவக்கவேண்டும். கும்பலாட்சி ஒழிந்து குடியாட்சி மலரவேண்டும். தாய்தமிழ் அருளோடு பண்பில் பெரியோர் பல்கவேண்டும். அதற்கு பாரத பண்பை மனிதர் பயிலவேண்டும்.

உன்னத வாழ்வை வழுத்தும்,

ஐயன் காளி

8:38 PM, December 19, 2006  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஸ்டாலினின் இன-தேசிய (காலாவதியாகிப்போன) கருத்தியலையும்

ஹை, புதியதாக கேள்விப்படுகிறேன். நாஸிஸம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற காம்ரேடுகள் அதையே வழிமொழிந்தார்களா? விளக்கமாய் ஒரு கட்டுரை மிட்டாய் கிடைக்குமா?

10:29 PM, December 19, 2006  

Post a Comment

<< Home