கிறிஸ்துமஸ் மர்மத்தொடர் 1
ஊடகங்களில் ரஜ்னீஷ் என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். 1980களில் ஓஷோ டைம்ஸ் 'ரஜ்னீஷ்' என ஒரு நியூஸ் லெட்டராக
இது வந்த போதே அவர் எங்கள் வட்டாரத்தில் பரிச்சயப்பட்டிருந்தார். இன்னமும் அந்த பழைய பிரதிகள் இருக்கின்றன. அப்போதைய இந்து தரும எதிர்ப்பாளர்களுக்கு ரஜ்னீஷ் சந்திர
மோகன்/ஆச்சார்ய ரஜ்னீஷ்/பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்/ஓஷோ இந்து தருமத்தை சாட நல்ல வாய்ப்பாக இருந்தார். ராணி முதல் ப்ரண்ட்லைன் வரை இந்த தாக்குதல் நடந்தது. துக்ளக்
சோ ரஜ்னீஷை 'மோசடி ஆசாமி' என்றார். குமுதம் அரசு கேள்வி-பதில்களில் ரஜ்னீஷ் மொழிகளும் அவரது கதைகளும் சில சமயங்களில் பெயர் சொல்லியும் சொல்லாமலும்
பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் அவரை கிண்டலாக நினைவூட்டும் விதத்தில் 'ஆச்சார்ய பூனேஷ்' என்கிற 'போலி சாமியார்' வைத்து ஒரு சித்திர கதையும் வெளியிட குமுதம் மறக்கவில்லை. இல்-லஸ்ட்-ரேட்டட் வீக்லி அவரது கம்யூன் நிர்வாண படங்களை தேடிப்பிடித்து போட்டது. 1980களில் வெளிவந்த 'சயின்ஸ் இன் யுஎஸ்எஸார்' எனும் சோவியத் பத்திரிகை எழுதியது: சி.ஐ.ஏ கையாளாக விளங்கி பின்னால் சி.ஐ.ஏயால் வெளித்தள்ளப்பட்ட ரஜ்னீஷின் நூல்களுக்கு டெல்லி நூல் கண்காட்சியில் எவ்வித ஈர்ப்பும் இல்லை.
எங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓஷோ (அப்போது பகவான் ரஜ்னீஷ்) படம் இருந்தது என் நண்பர்கள் மத்தியில் பெரும் ஸ்காண்டலாக பேசப்பட்டது (செக்ஸ் சாமியார் படத்தை அவுங்க வீட்ல வச்சுருக்காங்கடா). ஆனால் ரஜ்னீஷ் தாத்தா இப்போது அமைப்பு அங்கீகாரம் பெற்றுவிட்டார். காலம்தான் எப்படி மாறுகிறது!பின்னால் கோவை ஞானி ஓஷோவின் ஈர்ப்பு சக்தியில் மார்க்சியத்தின் உள்ளொளி இருப்பது போல எழுதுகிற ஒரு காலம் வரும் என 1980களில் என்னிடம் யாராவது சொன்னால் நம்பியிருப்பேனா? அல்லது நோன்பு கஞ்சிக்கும் மதவாக்கு வங்கிக்கும் கையேந்தும் மு.க தனது மஞ்சள் துண்டு பகுத்தறிவுக்கு ஓஷோவை துணைக்கு அழைப்பார் என்றால்? இது குறித்து விரிவாக பின்னால் எப்போதாவது! அமெரிக்காவை அந்த கிழி-கிழித்தவர் பெயரில் வரும் டைம்ஸின் பின்னட்டையில் கொக்கோகோலா விளம்பரம்! 'பழைய நினைப்புடா பேராண்டி' என எங்கோ போய்விட்டேனா சரி விஷயத்துக்கு வருகிறேன்.
1995 டிசம்பர் ஓஷோ டைம்ஸில் ஒரு செய்தி வெளியானது. ஏசு உண்மையில் ஜெஸிக்கா என்கிற பெண் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருப்பதாக. அந்த ஜெஸிக்கா ஒரு
ஹிந்து-பௌத்த மரபுகளின் அம்சங்கள் கொண்ட போதனைகளை கற்பித்த ஞான பெண்மணி எனவும் அவரது போதனை தோல் சுருள்கள் (scrolls) கிடைத்திருப்பதாகவும் அந்த செய்தி
கூறியது. பின்னர் ஒரு சில செய்தி தாள்களில் இதே செய்தி வந்தது.
பிறகுதான் 'ஓஷோ டைம்ஸ்' அந்த செய்தி ஒரு பகடியாக உருவாக்கப்பட்டது என்று வெளியிட்டது. அத்துடன் ஆனால் ஜெஸிக்கா ஏன் ஒரு வரலாற்று சாத்தியமாகவே இருக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. சுவாமி சைதன்ய கீர்த்தி ஆசிரியராக இருந்த காலம் அது. விஷயம் என்னவென்றால் அந்த டிசம்பர் இதழிலேயே இது ஒரு பகடி என்பதை ஓஷோடைம்ஸ் சூசகமாக தெரிவித்திருந்தது. குழந்தை ஏசுவின் பழைய ஓவியத்தில் ஒரு நவீன பெண்கள் காலணி தொங்குவதை பாருங்கள். என்றாலும் ஊடகங்கள் ஒரு மிகமுக்கியமான ஆங்கில நாளேடு உட்பட இந்த விஷயத்தை செய்தியாக ஓஷோ டைம்ஸிலிருந்து எடுத்து வெளியிட்டதில் ஏமாந்துதான் போயிருந்தன.
சரி...ஏசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் உண்மையில் உண்டா? ஏசு கதையின் உள்ளே இருக்கும் தொன்ம முடிச்சுகள் கட்டவிழ கட்டவிழ உள்ளே இருக்கும்
வெற்றிடம் நம்மை திகைக்க வைக்கிறது. இன்று வரை ஏசு வாழ்ந்தார் என்பதற்கு எவ்வித அகழ்வாராய்ச்சி ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல. அந்த அகழ்வாராய்ச்சி ஆதாரங்களை உருவாக்கிட கிறிஸ்தவ சபைகளில் புராதனமானதும் பூதாகாரமானதுமான கத்தோலிக்க சபை முதல் இன்றைய எவாஞ்சலிஸ்ட்கள் வரை இடையறாது முயன்று வருகின்றனர். ஆனால் அவை தொடர்ந்து அறிவியலால் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை. இதில் லேட்டஸ்டாக ஓன்றை விவரித்தால் ஏசுவுக்கு அகழ்வாராய்ச்சி ஆதாரம் உருவாக்குவதில் எப்படிப்பட்ட தீவிரத்துடன் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
'யாகோவ் பார் யோஸூப் அகுதி தி யெஷூவா' 'ஏசுவின் சகோதரன் ஜோசப்பின் மகன் ஜேம்ஸ், ' என தெள்ளத்தெளிவாக வலமிருந்து இடமாக ஓடிய அராமிக் எழுத்துக்கள்
பொறிக்கப்பட்ட வாசகம் அடங்கிய சுண்ணாம்புக்கல் பெட்டி பெரும் பரபரப்பை வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஒன்றே கால் அடி அகலமும் இரண்டரை அடி நீளமும் கொண்ட அந்த பெட்டி எலும்புகள் போடும் பெட்டி. யூதர்கள் இறந்தவர்களை குகையறை அடக்கதலங்களில் வைப்பர். ஓர் ஆண்டு கழிந்ததும் எலும்புகளை எடுத்து இத்தகைய பெட்டிகளில் போட்டு வைத்துவிட்டு அந்த அடக்கதலத்தை பிறருக்கு பயன்படுத்துவர். (செல்வந்தர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.) அக்டோபர் 2002 இல் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியது இயற்கைதான். ஏனெனில் ஏறத்தாழ ஏசு வாழ்ந்து சிலுவையில் அறைபட்டதாகக் கூறப்பட்ட காலத்தை மிக ஒட்டியதாக இந்த எலும்புப்பெட்டியின் (ossuary என்பார்கள்) காலம் கணிக்கப்பட்டது.
Biblical Archaeology Review எனும் ஆராய்ச்சி இதழில் நவம்பர்/டிசம்பர் 2002 இல் இது வெளிவந்தது என்றாலும் இதற்கான தளம் வெகுமுன்னதாகவே உருவாக்கப்பட்டுவிட்டது.
அதே ஆண்டு மார்ச் இல் வெளியான நூலான 'The brother of Jesus' இந்த 'கண்டுபிடிப்பை'க் குறித்து கூறுகிறது. இதன் ஆசிரியரான பென் விதரிங்க்டன் கெண்ட்டூகியில் உள்ள அஸ்பரி தியாலாஜிக்கல் செமினரி (கிறிஸ்தவ மத கல்விசாலையில்) 'புதிய ஏற்பாடு' விரிவுரையாளராவார். இதனைக் கண்டுபிடித்தவர் ஆந்த்ரே லிம்ரே என்கிற பழங்கால எழுத்துக்களினை ஆராய்ச்சி செய்பவர் ஆவார். இவர் இந்த 'கண்டுபிடிப்பை' எந்த அகழ்வாராய்ச்சி களத்திலும் நிகழ்த்திடவில்லை. மாறாக அதனை பழங்கால கலைப்பொருட்களை சேகரிக்கும் ஒரு தனிப்பட்ட நபரிடம் இருந்து வாங்கியிருந்தார். அந்த நபருக்கு 30 வருடங்களுக்கு முன்னால் தம்மிடம் இதனை விற்றவரின் பெயரோ அடையாளங்களோ நினைவு இல்லாமல் போயிற்றாம். இஸ்ரேலிய நிலவியல் வல்லுநர்களால் இந்த பெட்டியின் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் என கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜான் காப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்-எழுத்து ஆய்வாளர் கையில் மக்கார்தர் இந்த அராமிய எழுத்துருவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தன்மையுடன் இருப்பதாக சான்று வழங்கினார். இந்த விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் 'நேஷனல் ஜியாக்ராபிக்' கூட தனது 2003 ஏப்ரல் செய்தியில் இந்த பெட்டி வல்லுநர்களால் ஏற்கப்படும் நிலைக்கு அருகாமையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில்தான் ஐயங்கள் மெதுவாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன.
இஸ்ரேலிய அரசு இதனைத் தொடர்ந்து இரண்டு வல்லுநர் குழுக்களை அமைத்தது. ஒன்று எழுத்துருவின் தன்மையையும் எழுத்து நடையையும் ஆராய்ந்து அதன் பழமையை
கணக்கிடுவதற்கு மற்றொன்று அந்த எழுத்துக்களின் மீது படர்ந்துள்ள மென்படலத்தை ஆராய்ந்து அதன் காலத்தை கணிக்க. ஜூன் 17 2003 இல் இஸ்ரேலிய அகழ்வாராய்ச்சி
அறிஞர்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் தெள்ளத்தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது இந்த 'ஏசு பகுதி ஒரு போலி' என்பதுதான் அது.
அந்த அறிக்கையின் முடிவு கூறியது:
"The ossuary itself is undoubtedly genuine; the well-executed and formal first part of the inscription is a holographic original by a literate (and wealthy) survivor of Jacob bar Yosef, probably sometime during the Herodian period. The second part of the inscription bears the hallmarks of a fraudulent later addition, probably around the 3rd or 4th centuries, and is questionable to say the least."இந்த பெட்டி 2000 ஆண்டுகள் பழமையுடையதாக இருப்பினும் அதில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை - அந்தகால எழுத்துக்களின் நகலாக உருவாக்கப்பட்டவை என அந்த முடிவு கூறியது.
இந்த மோசடி வேலை மிகத்திறமையாக மேற்கொள்ளப்பட்டதாகும். உதாரணமாக இந்த பெட்டியில் இருக்கும் 'ஜோசப்பின் மகன் ஜேம்ஸ்' என்பது உண்மையாகவே இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்ததுதான். அக்காலத்திற்கே உரிய வெட்டுத்தடங்கள், வளைவு செங்குத்தாக அமைதல் ஆகியவை உள்ளதுடன் வாக்கியம்
முடிவடைவதைக் காட்டும் தாழ்த்தி நீளப்படுத்திவிடப்பட்டுள்ள வாக்கிய முற்றெழுத்தையும் காணலாம்.
ஆனால் அதற்கு பின்னர் 'ஏசுவின் சகோதரன்' எனும் எழுத்துக்கள் சரியான உயரங்கள் இல்லாதிருப்பதுடன் வளைவுகள் செம்மையான வளைவுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளதைக்
காணலாம். அத்துடன் எழுத்துருக்களின் ஏற்ற இறக்கம் சரியான முறையில் இல்லை என்பதையும் காணலாம். வாக்கிய முற்றெழுத்து எவ்வித முற்றெழுத்து தன்மையும்
இல்லாதிருப்பதையும் காணலாம். ஆனால் இத்தனை கூர்ந்து ஆராய்ச்சியாளர்கள் இதனை வெளிப்படுத்தியிராவிட்டால், நம்பிக்கையால் தூண்டப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட இதனை
ஏசுவின் சகோதரனின் எலும்புப்பெட்டி என்பதற்கான ஆதாரமாக கொள்ள தயாராகிவிட்டனர் என்பதனைக் காணவும்.
இதனை ஆந்த்ரேக்கு விற்ற ஓடட் கோலன் ஏற்கனவே கலைப்பொருட்கள் வரலாற்று தொடர்பான பொருட்களை அருங்காட்சியகங்களுக்கு விற்பதில் தகிடுதத்தம் செய்துள்ளவர்
என்பதனை எரிக் மெயர்ஸ் எனும் அகழ்வாராய்ச்சியாளர் வெளிப்படுத்தினார். தொடர்ந்து கோலனின் இடத்தில் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பல
போர்ஜரி வரலாற்றுப்பொருட்கள் வெளிவந்தன.
துரின் துணி முதல் எலும்புப் பெட்டி வரையாக இந்த தொடர்ச்சியான மோசடி வேலைகள் ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருவதை நாம் கவனிக்கலாம். ஏசுவின் வாழ்க்கைக்கு
வரலாற்று ஆதாரம் தேடவேண்டிய அவசியம் கிறிஸ்தவத்தின் தொடக்ககால வரலாற்றிலிருந்தே இருக்கிறது. ஏன்? இந்த தீவிர வேட்கை? எந்த பற்றாக்குறையை தீர்க்க
நூற்றாண்டுகளாக தொடரும் இந்த மோசடி வேலைகளின் அணிவகுப்பு? இதற்கான விடைகளை இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.
அதற்கு முன்னால் கீழே இருக்கும் 'தோமையார் (தாமஸ்) கையால் செதுக்கப்பட்டதாக' கத்தோலிக்க சபை பிரம்மாண்ட விளம்பரத்துடன் முன்வைக்கும் இந்த சிலுவையை பாருங்கள்.
அதில் இருக்கும் தெளிவான பிற்கால தமிழர் கலைத் தாக்கத்தினையும், தோமையார் சர்ச்சின் இன்றைய பகுதியிலிருந்து 1960களில் கிடைத்த சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் துறை அறிக்கையையும் பாருங்கள். ஏசுவின் எலும்பு பெட்டி போன்ற நேர்த்தியான மோசடிகளை உருவாக்கியவர்களுக்கு இந்தியா போன்ற நாடுகளில் மத்தியகாலத்திற்கு அப்பாலான சிற்பங்களை கூசாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு செல்வது அப்படி ஒன்றும் கடினமான விசயமில்லைதான்!
கிறிஸ்தவ வழிபாட்டில் சிலுவை என்பது வழிபாட்டு சின்னமாக ஏற்கப்பட்டதே இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தான். அதற்கு முன்னதாக சிலுவை வழிபாடு பாகன் மதங்களில்
சூரியவழிபாட்டு சின்னமாக இருந்தது. இந்த சின்னத்தை கிறிஸ்தவத்தில் இணைத்தது ரோம சர்வாதிகாரி கான்ஸ்டண்டைன்தான். ஆக பரங்கிமலையை தாமஸ் மவுண்ட் என
அழைக்கும் பிரகிருதிகள் 2000 வருடத்திற்கு முந்தைய சிலுவை என கூசாமல் கூறும் சிலுவையை சர்வதேச வரலாற்றாசிரியர்கள் முன்னால் வைத்தால் கதை கந்தலாகிவிடும்.
மிகத்தெளிவான மத்திய கால ஐரோப்பிய தாக்கம் கொண்ட சிலுவை அதைச் சுற்றி பிற்கால தமிழர் கலைத் தாக்கம் கொண்ட அலங்கார சுற்று - இதனை 2000 வருடங்களுக்கு
முன்னர் தோமையார் வடிவமைத்தார் என்றால் கேட்டுக்கொண்டு தலையாட்ட எல்லோரும் என்ன இளிச்சவாய் இந்துக்களா?
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
- நேஷனல் ஜியாகிராபிக், 2003 ஏப்ரல், Jesus' Brother's "Bone Box" Closer to Being Authenticated
- நேஷனல் ஜியாகிராபிக், 2003 ஜூன், "Jesus Box" Is a Fake, Israeli Experts Rule,
- நெடுஞ்சேரலாதன், 'பிருங்கிமலை கிறிஸ்தவர்களின் மோசடி', விஜயபாரதம் 22-12-2006
- டாக்டர் ரோசே அல்ட்மான், Official Report on the James Ossuary: இஸ்ரேலிய பழம்பொருள் மைய அறிவியலாளர் அளித்த இந்த முழு அறிக்கையையும் படிக்க சொடுக்கவும்:
இங்கே - இங்கே நேஷனல் ஜியாகிராபிக்
- இங்கே நேஷனல் ஜியாகிராபிக்
15 Comments:
excellent thodar. thadarungal neelakandan.
அரவிந்தன், ஏதோ டாவின்சி கோடில் விட்டுப் போன பகுதிகளைப் படிப்பது போலத் தோன்றுகிறது.
வரலாற்றுத் தகிடு தத்தங்கள் படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளது. எங்கிருந்தோ வரும் தொடர்பற்ற விஷயங்களை முடிச்சுப் போட்டு உண்மை சித்திரம் தரும் உங்கள் ஆராய்ச்சி, எழுத்துத் திறனுக்குப் பாராட்டுக்கள்.
மாரிமுத்து, ஜடாயு,
உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் வருகைக்கும் நன்றி.
உலக வரலாற்றிலேயே கடுமையான பொய்களை ஆணவமாக ஆவணமாக்கிய கும்பலின் அன்பிய முகமூடியை கிழித்தெறிவது உண்மையிலே சுவாரசியமான விஷயம்தான்.
சபாஷ் அரவிந்தன், இதுதான் நாம் ப்ரியாரிடியில் செய்ய வேண்டியது. சும்மா இஸ்லாமைச் சாடிக் கொண்டிருப்பது நேரவிரயம். இன்றைய தேதிக்கு யாரும் இஸ்லாமியராக விரும்பி மதம் மாறப் போவதில்லை. ஆனால் கிறித்துவம் அப்படி இல்லை. அதன் வீச்சு மிகப்பெரிது. ஒருபக்கம் உலகிலேயே பெரிய கொடுமையான அதன் ரத்தசரித்திரத்தை ஒளித்து வைக்கும். ஒருபக்கம் அப்பாவிகளாய், நல்லவர்களாய், நல்லாசிரியர்களாய் வெளியே சிலரைக் காட்டி நம்மை மயக்கும். இதை அரிவாள் கொண்டு எதிர்க்க முடியாது, அறிவால்தான் எதிர்க்க முடியும். நம் மாவட்டத்திலே முதலில் இதைத்தான் செய்ய வேண்டி இருக்கிறது.
- நாஞ்சில் தாணு
நீலகண்டன்,
நீங்கள் கொடுத்திருக்கும் அந்த ஹீப்ரூ வரி
yaacov ben yossi Akhir Yesua
..
jacob, son of Joseph, brother of Yesua (Jesus or Joshua).
இதில் ஜேம்ஸே இல்லையே ?
யாக்கோவ் (ஜாக்கோப்) என்பதன் (ஜேக்கப் என்கிற பெயர் இருந்தாலும் கூட) ஆங்கிலேய தாக்கம் கொண்ட கிரேக்க பெயர்தான் ஜேம்ஸ். (மரியம் மேரி ஆவது போல) . ஹீப்ரு/கிரேக்க/ஆங்கில மொழிபெயர்ப்புகளை அளிக்கும் The Interlinear Bible-இல் இதை பார்த்தது நினைவு இருக்கிறது.
ஒரு செமினரி நூலகத்தில் இந்த அருமையான பைபிளைப் பார்த்தேன்.
நீலகண்டன் அருமையான சில தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.
நான் எழுதுவதாக நினைத்திருந்த சில விஷயங்களை கையில் எடுத்திருக்கிறீர்கள்.
இதுபோல பல விஷயங்களை தருவீங்க என்பதில் ஐயமில்லை. இதை எழுதுவது ரெம்ப எளிது. You just need some time. மத்த எல்லாமே இணையத்தில் எளிதில் கிடைக்கும்.
புழுகுகளை எழுதியவர்கள் பழைய ஆட்கள். கொஞ்சம் கொஞ்சமாய் புழுகுகள் சேர்க்கப்பட்டு வந்தவைதானே நம்ம மதங்கள் எல்லாம். இப்ப இருக்கவங்க எல்லாம் வெறும் நம்பிக்கையாளர்கள்தான், முன்னவர்களை வைத்து இப்ப இருக்கவங்கள எடைபோடக் கூடாது என நினைக்கிறேன்.
தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதரர் சிறில்,
நன்றி.
புளுகுகள் வேறு தொன்மங்கள் வேறு என நினைக்கிறேன் நான். உதாரணமாக ராமயணமோ அல்லது சிவன் முப்புரம் எரித்ததோ தொன்மக் கதைகள் (வரலாற்று கரு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) ஆனால் எப்போது வான மண்டலத்தில் சிவன் முப்புரம் எரித்தமைக்கு ஸ்பெக்டரல் ஆதாரம் இருப்பதாகவோ அல்லது ராமர் கட்டிய பாலத்தை நாசா கண்டுபிடித்ததாகவோ கதை விட ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் இவை புளுகு அந்தஸ்தை பெறுகின்றன. Expansionist ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் மார்க்ஸியம் ஆகியவற்றில் வரலாற்றுத்தன்மை அடிநாதமாக உள்ளதுதான் பிரச்சனை. ஆனால் ஏசுவும் ஒரு தொன்ம புருஷன் தான் பழமையான தொன்மங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதம்பம்தான் ஏசு என்பதுதான் எனது தொடரின் அடிப்படையாக விளங்கப்போகிறது. இது புத்தருக்கும் கிருஷ்ணருக்கும் பொருந்தலாம். ஆனால் இவ்வாறு புத்தரோ கிருஷ்ணரோ முருகனோ சிவனோ deconstruct செய்யப்படுவது இந்து - பௌத்த தருமங்களை பாதிக்காது. கோசாம்பியின் ஆழமான பார்வையிலிருந்து ராகுல் சங்கிருத்தியாயனின் மலினமான பார்வை வரை மார்க்ஸிஸ்ட்கள் இதனை செய்திருக்கிறார்கள். சில சிறந்த முருக-சிவ பக்தர்கள்/ஆராய்ச்சியாளர்கள் பக்தர்களாக இருந்து கொண்டே இந்த deconstructionஐ செய்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க டாலர்களுடன் பிரம்மாண்ட ராட்சத சக்தியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் எவாஞ்சலிக்கல் மற்றும் நிறுவன கிறிஸ்தவத்தில் அவ்வாறு இல்லை. There is a definite tendency towards fundamentalism. irrespective of all denominations. வத்திகான்-2 ஐ(ராட்சிங்கர் பெனிடிக்ட் ஆவதற்கு முன்னால் ஆக்கிய) டாமினஸ் இஸியஸால் தூக்கி எறிந்தது தங்களுக்கு நினைவு இருக்கலாம். தெயில் டி சார்டின், ஆண்டனி டி மெல்லோ மேலும் சில பெனிடிக்டைன் துறவிகள் முழுமையாக குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளனர். இதுதான் மிகவும் முற்போக்கு தன்மை கொண்டதாக கருதப்படும் கத்தோலிக்க சபையின்நிலை என்றால் பிற எவாஞ்சலிக்கல் சபைகளின் நிலை எத்தகையதாக இருக்கும்? நிற்க, எப்படி பொதுவாக மூன்றாம் தர சரக்குகளை வளரும்நாடுகளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் dump செய்கின்றனவோ அதே போலத்தான் காலவதியான கிறிஸ்தவ இறையியலை அரசியல் மற்றும் மக்கள் கட்டுப்பாடு காரணங்களுக்காக இங்கே இறக்குமதி செய்கின்றன என்பதும் என் கருத்து.
இணையம் மட்டுமல்ல நண்பரே இன்ன பிற மூலங்களூம் இக்கட்டுரை தொடரில் பயன்படுத்தப்படும். ஆம் நேரம் என்பது ஒரு பிரச்சனையான மட்டுப்படுத்தும் காரணி.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
Aravindan
I have been reading your articles from early Thinnai days. I know you have some soft corner towards Christians unlike Islamists. Please don't hurt the Christians. We are not like Islamists. We can withstand any critical deconstruction of Christian religion as our faith cannot be shaken by this. Wishing you a vry happy Christmas.
Ravi Abraham
i have no softcorner for either evangelicals or jehadhis. as far as christians and muslims, i have plenty of both christian and muslim friends. thank u for wishing me christmas greetings though i dont celebrate it and wih you merry christmas too. you can be sure i will not abuse jesus as devil or obscene statue like christian missionaries abused (and still abuse where they can) Hindu Gods and Goddesses.
அரவிந்தன்\
வழக்கம் போல நிறைய உழைத்திருக்கிறீர்கள். ஒரு மர்ம நாவலைப் படிக்கும் உணர்வு ஏற்படுகிறது. தொடர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
ச.திருமலை
நீல்ஸ், ஒரு பி எச்டி பட்டம் பெரும் அளவிற்கு உங்களுக்கு அறிவு இருக்கிறது மதம் மற்றும் சரித்திர விஷயங்களில்.
தாங்கள் அமெரிக்கா/ஐரோப்பா பக்கம் வந்தால் உங்களின் அறிவு அடையாளம் காணப்படும்
The Da Vinci Code (2006) படமும் , நாவலும் நல்ல வரவேற்ப பெற்றது ...
ஆனா பாதிப்பு பெருசா இல்ல..
மதங்கள் நல் வழிபடுத்தவே ...
தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
brilliant! keep the good work up!
Post a Comment
<< Home