Monday, November 27, 2006

முருகப்பிரியரை தூற்றும் சுவனப்பிரியன்

அன்புள்ள சகோதரர் சுவனப்பிரியனுக்கு,


என்னை மட்டம் தட்ட ஒரு இறைவனடி சேர்ந்த முது பெரும் தமிழ் ஞானியை, மாபெரும் முருக பக்தரை தவறுதலாக மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மறைந்த அம்மாமனிதரை தூற்றுவதற்கு சமமாகும் செய்கை இது.ஆனால் என்னைப் போன்றவரல்லர் அந்த மகான். 'செந்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்' வடலூர் வள்ளலை வணங்கி வாழ்ந்த அப்பெருந்தகையின் புண்ணிய நினைவு அறியாமல் நீங்கள் செய்திட்ட இப்பிழையை மன்னித்தருளும்.



இனி விசயத்துக்கு வரலாம்.


//சுவனப்பிரியன்:
அந்த அனானி நான்தான் என்று வழக்கமான ஒரு பொய்யை சொல்லியிருக்கிறீகள்//


ஐயா சுவனப்பிரியரே:
நான் எழுதியிருப்பதை நன்றாக படித்து பாருங்கள். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று: "அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம." ஒரு ஐயத்தை தெரிவித்திருந்தேனே அன்றி உங்களை நீங்கள் தான் போட்டீர்கள் என குற்றம் சாட்டவில்லை. IP அட்ரஸ்க்ளை அரைகுறையாக தெரிந்து கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லுகிற மூளையில் ஆப்படித்த ஆசாமி நான் அல்ல. நீங்கள் இல்லை எனில் நல்லது. நீங்களாகவே இருந்தாலும் நல்லது. எதுவானாலும் நீங்கள் கூறுவதை நம்புகிறேன்.

ஆமாம் வழக்கமான பொய் என்கிறீர்களே அது என்ன ஐயா?


  • 1. மெக்கா பூமத்தியரேகையை ஒட்டி இருப்பதாக 'வழக்கமான பொய்' நான் சொன்னதல்லவே. மெக்காவின் தீர்க்க ரேகை 39.49 கிழக்கு என நான் கூறியது பொய்யா? அல்லது மெக்கா பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்துள்ளது என நீர் கூறியது பொய்யா?

  • 2. இளாவை 'இலா' என்று சொன்னது யார்? நானா? நீங்களா?

சரி விடுங்கள். விசயத்திற்கு வருவோம். சைவ இலக்கியங்கள் மட்டுமே சமணக் கழுவேற்றலைக் குறித்து குறிப்பிடுகின்றன. அதற்கு (சமண இலக்கியங்களில் அல்லது கல்வெட்டு சாசனங்கள் போன்றவற்றில்) புறச்சான்று கிடையாது. அத்துடன் சமணர்கள் தாமே கழுவேறுவதாகக் கூறினார்கள் என கூறியிருந்தேன். அதனை மறுத்து இல்லை. அவர்கள் கழுவேறுவதாகக் கூறவில்லை சைவ அரச நீதியின் படி சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே கூறியுள்ளார் என்பதாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளீர்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் கூறிய இந்த 'ஆதாரத்தின்' தன்மையை உங்களுக்கே காட்டிடுகிறேன். நீங்கள் கூறுகிறீர்கள்.
//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//



இதோ சிவனருட்செல்வர் நூலில் உண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். நீங்கள் கூறியதற்கும் அதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நீங்களும் வாசிப்பவர்களும் உணர்ந்து கொள்ளலாம்.
"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."




இதுதான் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியது. இப்போது சொல்லும் ஐயா யார் கூறுவது உண்மை?

17 Comments:

Blogger arunagiri said...

நன்றாக ஆணியடித்தாற்போல் கேட்டுள்ளீர்கள்- சுவனப்பிரியன் என்ற புளுகுப்பிரியரின் பொய்வாத சவப்பெட்டியின்மீது அடிக்கப்பட்ட சத்திய ஆணி. உமக்கு ஆயிரம் வந்தனங்கள்.

10:34 PM, November 27, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி. அருணகிரி. சுவனப்பிரியன் தம்மளவில் புளுகுப்பிரியராக இருப்பார் என்று நினைக்கிறீர்களா? யாரோ கூறியவற்றை அவர் உண்மை என நம்பி எடுத்து தமது வலைப்பதிவில் போடுகிறார். ஒருவிதத்தில் அவர் நமக்கு ஒரு நல்ல உதவி செய்கிறார், அவர்கள் மத்தியில் நம் தருமம் மற்றும் வரலாறு குறித்து கூறப்படும் விசயங்களை நமக்கு தெரிவிக்கிறார். இஸ்லாமிய பிரச்சாரங்களை உண்மை எனும் உரைகல்லில் தேய்த்துப்பார்த்து மதிப்பிட அவருக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்துவார் என நம்புவோமாக.

11:12 PM, November 27, 2006  
Anonymous Anonymous said...

இவர்களுக்கெல்லாம் பதிலளிப்பது அவசியமா?....இதைவிட பெரிய தாக்குதல்களை தாண்டி வந்த மதமய்யா இந்து மதம்....

11:44 PM, November 27, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அவசியம்.
இந்து தருமமும் சமுதாயமும் ஒவ்வொரு காலகட்டத்தையும் அளப்பரிய தியாகங்களால்தான் தாண்டிவந்துள்ளது. குரு தேஜ்பகதூரும், குரு கோவிந்தரும், ஐயா வைகுண்டரும் செய்த தியாகங்களும் பட்டபாடுகளும்தாம் நம்மை இன்னமும் இந்துக்களாக வைத்துள்ளது. எனவே இந்த தியாக பாரம்பரியத்துக்கு என்னை சிறிதளவேனும் தகுதியுடையவனாக்கிட இயன்றவரையில் இப்பொய் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கிறேன்,

சேதுவின் அணிலாக.

12:05 AM, November 28, 2006  
Blogger அறிவுடைநம்பி said...

திருமிகு வாரியாரின் ஆன்மீகத் தமிழ் எனக்குப் பிடித்த ஒன்று. பார்ப்பனரல்லாத ஆன்மீகச் செம்மல்களில் வாரியார் காஞ்சிபுரம்/கலவை மட சுப்பிரமனியனை விட உயர்ந்து நிற்கிறார்.

சொக்கனும் நீங்களும் என்னதான் மாங்குமான்கென பஜனை பாடினாலும் இலட்சக் கணக்கில் இந்துமதத்தை விட்டு மக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதை காண்கிறோம். உம்மைப் போன்ற ஒருசில PAID பஜனை கோஷ்டிகள் மட்டுமே அழிவின் விளிம்பில் நிற்கும் இந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மீட்டர் ஓடும்வரை இந்து மதம். சரிதானே...நடத்துங்க நடத்துங்க...

3:50 AM, November 28, 2006  
Blogger VSK said...

This comment has been removed by a blog administrator.

5:29 AM, November 28, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள எஸ்.கே,
அறிவுடைநம்பி என்கிற இந்த ஆசாமி விசயங்களை திசை திருப்புவதற்காகவே மூக்கை நுழைக்கும் கூலிப்பட்டாளக்காரர். ஏற்கனவே தமிழோவியத்தில் அருணகிரி நாதரின் திருப்புகழுக்கும் திருமூலரின் திருமந்திரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எழுதி தன் உள்மன ஆபாசங்களை உளறிக்கொட்டியவர். என்ற போதிலும், தங்கள் கூற்றின் நியாயம் கருதி அவருக்கு எதிராக எழுதியவற்றை எடுத்துவிட்டேன். என்றபோதிலும் எடுக்கப்பட்ட பின்னூட்டங்களின் உண்மையை அவர் விரைவிலேயே நிரூபிப்பார் பாருங்களேன்.

5:56 AM, November 28, 2006  
Blogger VSK said...

This comment has been removed by a blog administrator.

6:13 AM, November 28, 2006  
Anonymous Anonymous said...

What does SuvanaPriyan have to say?

6:40 AM, November 28, 2006  
Blogger suvanappiriyan said...

//What does SuvanaPriyan have to say?//

:-))))))))))

1:42 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

சுவனபிரியன் அண்ணாச்சி,
உங்கள இந்த வாட்டு வாட்டீயிருக்காரு. நீங்க உங்கப்பாட்டுக்கு ஸ்மைல் அடிச்சுட்டு போனா எப்படி? சரியான டுபாக்கூர் ஆசாமி மாதிரியில்லா உங்கள் சொல்லுதாரு. நீங்க என்ன சொல்லுதிய?

-பழைய பேட்டை முஸ்லீம்
திருநெல்வேலி

6:41 AM, December 03, 2006  
Anonymous Anonymous said...

சுவனபிரியமும் நீலகுண்டும் ஒண்ணுதாமுலோய். நம்ம ஆப்பு அண்ணாச்சி இத கொஞ்சம் கவனிக்கோனும். பேசி வைச்சு செய்தானுகோ நசுநாற பயலுவோ.

உண்மை முஸ்லீம்
திருநெல்வேலி டவுண்

6:43 AM, December 03, 2006  
Anonymous Anonymous said...

சுவனப்பிரியனின் புன்னகையின் பொருள் என்ன? இனிமேலாவது ஆப்புகளின் மேல் போய் அமர்ந்து கொள்ளாமல் இருப்பாரா?
செ.ர.

7:57 AM, December 03, 2006  
Anonymous Anonymous said...

இதற்கு பதில் அளிக்கும் முகமாக சுவனப்பிரியன் மீண்டும் உளறிக் கொட்டி இருக்கிறார். கழுவில் ஏற சபதம் கொண்டு அவர்கள் சபதம் செய்தபடி தாங்களாகவே வலிந்து கழுவேறினார்கள் என்று மிகத்தெளிவாகவே நீங்கள் ஆதாரங்களுடன் எழுதிய பின்னாலும் கழுவேற்றியது நியாயமா இது இந்து ஜிகாதி வேலையில்லையா என்பவரை என்ன சொல்வது?
மேலும் அவர்கள் எண்ணாயிரம் என்ற பகுதியைச் சேர்ந்த சமணர்கள், செத்தவர் எட்டாயிரம் பேர் இல்லை என்றும் ஒருவர் சொன்னது மண்டைக்கு ஏறவில்லை. வெறிபிடித்த தற்கொலைப்படை சமணர்கள் சிலர் கழுவேறியது போக மீதம் இருந்த எண்ணாயிரம் சமணர்கள் மீண்டும் இந்துக்களாகி அஷ்டஸஹஸ்ரம் (எண்ணாயிரத்தின் சமஸ்கிருதப்பெயர்) என்ற பிரிவில் இன்றும் பிராமணர்களில் ஒரு பிரிவினராய் இருக்கிறார்கள்.
- திருத்தொண்டன்

9:32 PM, December 04, 2006  
Anonymous Anonymous said...

//
இனிமேலாவது ஆப்புகளின் மேல் போய் அமர்ந்து கொள்ளாமல் இருப்பாரா?
//

குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல.

5:50 AM, December 05, 2006  
Anonymous Anonymous said...

வழக்கம் போலவே எவன் நியாயமான முறையில் குறுக்கே கேள்வி கேட்டாலும் அவனைப் பார்ப்பனன் ஆக்கும் கீழ்த்தர திராவிட அரசியலிலும் இறங்கியிருக்கிறார். நம்ம நாகர்கோயில் நாடார் உறவின்முறை அரவிந்தனை பிராமணர் ஆக்கியிருக்கிறார். சந்தோஷமா அரவிந்தன் அவர்களே?

5:57 AM, December 05, 2006  
Anonymous Anonymous said...

ஓசை செல்லா இதைப் படிக்கவில்லை போலிருக்கிறது.

ஈழவேந்தன்

11:01 AM, January 26, 2007  

Post a Comment

<< Home