சம்பந்தரும் வள்ளலாரும் இந்து ஜிகாதிகளா?
சைவ பௌத்த மோதல் ஏன் 'புனிதப்போரா'கிடவில்லை என்று பதில் எதுவும் சொல்ல முடியாத பல ஆதாரங்களுடன் நண்பர் ஜாவா குமார் அவர்களின் அருமையான கட்டுரை ஒன்றை சென்ற பதிவில் போட்டிருந்தேன். அதில் கடைசியாய் இப்படி ஒரு அனானி பின்னூட்டம் வந்தது.
"கமலஹாசனின் அன்பேசிவம் படத்தில் நாசர் பட்டை கொட்டையுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கொருதரம் சொல்லிக் கொண்டு கொஞ்சமும் கூசாமல் செய்யும் அயோக்கியத்தனங்களை அற்புதமாகப் படமெடுத்துக் காட்டியிருந்தார். அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான்.வெளியே ஆன்மீகம், செய்வதெல்லாம் பிறமத அழிப்பு, அக்கிரமங்கள். ஞானசம்பந்தன் என்ற ஆரியப்பார்ப்பனன் வைதீக இந்துமதம் பரப்ப சமணர்களைக் கழுவேற்றிக் கொலை செய்தது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. இதற்கு இவர்கள் பாடியதை வைத்தே சப்பைக்கட்டு வேறு. கேவலமாக இருக்கிறது."
பதிவில் சொல்லிய எந்த விஷயத்துக்கும் அறிவார்த்தமாக பதில்தராமல் கமலஹாசன் என்ற கீழ்த்தர copycat நடிகனின் படத்தை வைத்து கருத்தை எழுதிய இந்த அனானிக்கு பதில்
தருவது வீண்வேலை என்று விட்டுவிட்டேன். அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம்.
காண்க: http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html
அல்லது இந்த அனானியின் கருத்தினால் தாக்கம் பெற்று எழுதியிருந்தால் குறைந்த பட்சம் அதனை ஒத்துக்கொண்டிருக்கலாம். இரண்டும் இல்லையெனில் it is a case of remarkable coincidence. எதுவாயினும் நன்றி. இது குறித்து விளக்கமாக வெகுகாலமாக எழுத வேணும் என்றிருந்தேன்.
அய்யா சுவனப்பிரியன் மற்றும் அனானி அவர்களே,
மிகத்தெளிவாக இந்துசமய நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி. நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமணர்கள் கழுவேறியதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு முக்கியமான பாடல் ஒன்றை விட்டுவிட்டீர்கள். அதுசரி. நீங்கள் கட் அண்ட் பேஸ்ட்
பண்ணியிருப்பது எங்கோ எவனோ மிஷிநரி எடுத்த வாந்திதானே. இந்த விஷயம் சம்பந்தமாய் என்னிடம் இருந்த திரு.ஜாவா குமாரின் கட்டுரைகளில் ஆங்கிலத்தில் இருந்த சிலவற்றை விடுத்து தமிழில் இருந்தவற்றை மட்டும் தொகுத்துப்போட்டேன். விடுபட்ட ஆங்கிலக்கட்டுரை ஒன்றில் இந்தக் கேள்விக்கு அவர் அருமையாக பதில் தந்திருக்கிறார்.
அதனை தமிழில் தருகிறேன்:
தெய்வத்திரு ஞான சம்பந்தர் மீது கூறப்படும் இக்குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை?
நம் திரு ஆதீனங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நம் தெய்வத் திருமுறைகளில் எவ்வித மாற்றமோ சொருகலோ இன்றி காப்பாற்றி வந்த பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். நம் தெய்வத் திருமுறைகள் உண்மையை பகிர்கின்றன.
பாண்டியன் வெற்பினை தணித்த எம்மான் ஆளுடைய பிள்ளையார் தெய்வ தமிழ்ஞான சம்பந்த பெருமான் சமணரை வாதங்களில் வெல்கிறார். அப்போது அமைச்சர் குலச்சிறையார் அவ்வாதத்தில் தோற்போருக்கு என்ன ஆகும் என வினவ அதற்கான பதில் என்ன என்பதனை சேக்கிழார் பெருமான் திருவார்த்தைகளிலேயே கேட்கலாம்: (பெரியபுராணம் பாடல் 798)
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவற்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே - என்று சொன்னார்.
மத வைராக்கியம் கொண்ட சமணர்களை திருஞானசம்பந்தர் கழுவேற்றியதாக கூறித்திரிவோருக்கு ஒரே ஆதாரங்கள் சைவ இலக்கியங்களே. ஆனால் அந்த இலக்கியமே சைவர்கள் சமணர்களை கழுவேற்றியதாக கூறவில்லை. என்றாலும் இவர்கள் இதனை நாணமின்றி கூறித்திரிவர்.
பாட்டுக்குப்பாட்டு தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளமிட்டு தமிழ்ச் சமுதாயத்தை வாழ்விக்க வந்த தேவார முதல்வரான ஆளுடைய பிள்ளையாரை 'ஆரியவெறியனாக்கிய' அரசியலையும் இதில் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்: அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான் - என்று அனானி எழுதியிருப்பதைப் படித்தால் உங்கள் பக்க கும்பலின் (அல்லது ஒரு வேளை உங்களின்) அறியாமையை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த வள்ளலாருக்கே ஞானகுரு சம்பந்தர்தான். அது உங்களுக்குத் தெரியாது. வள்ளலார் எங்கும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன்' என்றுதான் அவர் தன்னைச் சொல்லிக் கொண்டது. தன் குருவான சம்பந்தரை'அமண இருள் அற வந்த தெய்வமே' என்றும் அவரே பாடுகிறார்.
- ஐந்தாம் திருமுறை 009.ஆளுடைய பிள்ளையார்
- அருண்மாலை செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில் (29)
- எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் (30)
- இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே (31)
- தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே (32)
எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்?
14 Comments:
Muslims want tojustify their atrocities and perversions by inventing such lies.
அய்யா அரவிந்தன். என்னங்க நீங்க வெள்ளந்தியா இருக்கீங்க. இப்படி தலப்பு வச்சா யாராவது வருவாங்கெளா? போன பதிவுல எழுதியிருந்தீங்கள அருணகிரிநாதரு நிறையப்பாட்டு இத ஆதரிச்சு எழுதியிருக்காருன்னு. அப்ப அவரும் இந்துஜிகாதிதான? அவர பாட்டையெல்லாம் அப்பப்ப எடுத்துவிட்டுகிட்டிருக்கற ஜிரா, இராமநாதன், எஸ்கே இவிங்களும் இந்துஜிகாதிதான? நீங்க என்னா பண்ணியிருக்கணுமின்னா ஜிராவும் இராவும் இந்து ஜிகாதிகளா? அப்படின்னு இந்தப்பதிவப் போட்டிருக்கணும். அம்புட்டுத்தான். உங்க ஹிட்ரேட்டிங்கு எங்கயோ போயிட்டுர்க்கும். அவன் அவன் கும்பல் கும்பலா வந்து அம்மிட்டுருப்பாங்க. பின்னூட்டம், பின்னூட்டட்துக்கு பின்னூட்டம் அதப்படிச்சு பத்து பதிவுன்னு கருத்துங்களக் கொண்டாந்து கும்மிட்டுருபானுங்க. நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டீங்க. இனிமயாவது உசாரா இருங்க.
மத்தபடி இந்த பதிவு சூப்பரப்பு!
அருமையான பதிலடி.
இது மட்டுமன்று. திருவடிப்புகழ்ச்சியில் "எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயன் மணம் மணக்கும் பதம்" என்றும் வள்ளலார் போற்றுகிறார். "இறவாய் தமிழோடு இருப்பாய் நீ" என்று பாரதி வாழ்த்திய மனிய நேய ஞான யோகியன தாயுமானவரும் சம்பந்தரைத் தமது குருவாகவே பல பாடல்களில் ஏத்துகிறார்.
அழகிய இந்தப் பதிவிற்காக ஒரு வெண்பா -
சாவகத்துக் குமரர் தமிழ்த் தேனமுதை, வலைப்
பூவகத்தில் இட்ட புகழோய் - நாவலராய்
இந்துச் சிங்கங்கள் எழவும் இழிநரிகள்
பொந்தில் புகுந்தொளிதல் பார்!
அரவிந்தன் நீலகண்டன்!
//அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம். //
அந்த அனானி நான்தான் என்று வழக்கமான ஒரு பொய்யை சொல்லியிருக்கிறீகள். என் கருத்தை வைப்பதாக இருந்தால் அதை என் பெயரிலேயேதான் வைப்பேன். அனானி பெயரில் வருவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
//நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி.//
-Aravindhan Neelagandan
ஒரு வரலாற்று சம்பவத்தை கல் வெட்டில் பொதித்திருந்தால்தான் ஒத்துக் கொள்வேன் என்பது எந்த வகை நியாயமோ எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் பதிவில் குறிப்பிட்டது ஏதோ ஓரிருவர் அல்ல. பல வரலாற்றாசிரியர்கள் சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டதை ஆதாரத்தோடு விளக்குகிறார்கள். எந்த ஒரு மனிதனும் தன் உயிரை சித்திரவதைக்கு உடபடுத்தி தானாகவே கழுவிலேறி மாய்த்துக் கொள்ள விரும்ப மாட்டான். ஓரிருவர்என்றாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு சொல்லப் படுவதோ பல ஆயிரம் சமணர்கள்.
மேலும் பல ஆதாரங்களையும் பார்ப்போம்.
கழுகு மலை!
'அரைமலை' எனும் பெயருடைய 'கழுகு மலை' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது. கழுகுமலையின் தென்புற மலைச் சரிவில் முக்குடையின் கீழ் உள்ள சமண முனிவர்களின் சிலைகள் அறுபதுக்கும் மேற்பட்டவை செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய சமண சிலை மாடத்தினுள் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமணர்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். சமண சித்தாந்தமும் போதிக்கப்பட்டது.
-தி.இராசமாணிக்கம், நெல்லைக் குடைவரைக் கோவில்கள், பக்கம் முப்பத்து நாலு,முப்பத்து ஐந்து.
'அரைமலை' என்று அழைக்கப் பட்ட மலையிலும் சமணர்கள் கழுவேற்றப் பட்டனர். அதனால் இவ்வூர் கழு (கு) மலை எனப் பெயர் பெற்றது பின்னால் மருவி கழுகுமலையானது என்றும் கூறப்படுகிறது.'
-இளசை.கு.பக்தவத்சலம், கழுகுமலைத் தல வரலாறு,கோயிற்பட்டி, 1972, பக்கம் எட்டு.
மதுரையில் பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிறையார் அரசப் பணியாளர் என்ற முறைப்படி கழுத்தறிகளை நாட்ட ஏற்பாடு செய்கின்றார்.
-ந.சுப்பு ரெட்டியார், ஞானசம்பந்தர், சென்னை, 1986, பக்கம் இருநூற்று இருபத்து மூன்று.
அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர்.
-கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.
கழுவேற்றுதல் என்பது அன்றைய சைவர்களின் அரச நீதி என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.தன் வாழ்நாளை இந்துமத பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட மரியாதைக்குரிய கிருபானந்த வாரியார் சொல்வதை நம்புவதா? 'ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கமல்ல'என்று அதன் புகழ் பாடி வரும் அரவிந்தன் நீலகண்டனின் வார்த்தைகளை நம்புவதா என்பதை பதிவைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
//எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்? //
எப்படி வருவார்கள்? சைவர்களுக்கு எதிராக ஆதாரம் ஒன்றா? இரண்டா? ஏதோ சமாளிக்கலாம் என்பதற்கு. ஓராயிரம் சான்றுகளல்லவோ நம் சைவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.!
சுவனப்பிரியன்,
கிருபானந்த வாரியார் சொல்வதையே நம்புகிறேன்.
அன்று அரசு நீதி கழுவேற்றுவது என்றால் இன்று அரசு நீதி தூக்கில் போடுவது.
அரசு தானே ஐயா செய்கிறது. சிவனின் பெயரைச் சொல்லி சைவ சமயத்தவர் ஒன்றும் செய்ய வில்லை. வாதத்தில் தோற்றால் சாவு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கிறது.
உமது இஸ்லாம் போல் நான் சொல்வதை ஒத்துக் கொள் இல்லை தலை துண்டாகும் என்பது இந்தியர் பண்பாடு அல்ல.
சவூதி அரசியல் சட்டம் சொல்லும் காட்டுமிராண்டி தண்டனைகளை ஞாயப் படுத்தும் உமது கூட்டத்திற்கு அன்றைய தமிழக அரசு தண்டனையோ, இன்றைய இந்திய அரசு தண்டனைகளையோ விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
அன்று சைவர்களை சமணர்கள் விரட்டினார்கள் என்றாலும், சமணர்களை சைவர் கள் விரட்டினார்கள் என்றாலும் அது இந்துக்கள் பிரச்சனை.
இஸ்லாத்தின் வருகையையும் அது நடத்திய வெறியாட்டங்களையும் இதன் மூலம் ஞாயப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் இருப்பின் நேர விரையம் தான் நடக்கிறது இங்கே.
//சுவனப்பிரியன்:
அந்த அனானி நான்தான் என்று வழக்கமான ஒரு பொய்யை சொல்லியிருக்கிறீகள்//
ஐயா சுவனப்பிரியரே:
நான் எழுதியிருப்பதை நன்றாக படித்து பாருங்கள். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று: "அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம.்" ஒரு ஐயத்தை தெரிவித்திருந்தேனே அன்றி உங்களை நீங்கள் தான் போட்டீர்கள் என குற்றம் சாட்டவில்லை. IP அட்ரஸ்க்ளை அரைகுறையாக தெரிந்து கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லுகிற மூளையில் ஆப்படித்த ஆசாமி அல்ல நான். நீங்கள் இல்லை எனில் நல்லது. நீங்களாகவே இருந்தாலும் நல்லது. எதுவானாலும் நீங்கள் கூறுவதை நம்புகிறேன். ஆமாம் வழக்கமான பொய் என்கிறீர்களே அது என்ன ஐயா?
1. மெக்கா பூமத்தியரேகையை ஒட்டி இருப்பதாக 'வழக்கமான பொய்' நான் சொன்னதல்லவே. மெக்காவின் தீர்க்க ரேகை 39.49 கிழக்கு என நான் கூறியது பொய்யா? அல்லது மெக்கா பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்துள்ளது என நீர் கூறியது பொய்யா?
2. இளாவை 'இலா' என்று சொன்னது யார்? நானா? நீங்களா?
சரி விடுங்கள். விசயத்திற்கு வருவோம். சைவ இலக்கியங்கள் மட்டுமே சமணக்கழுவேற்றலைக் குறித்து குறிப்பிடுகின்றன. அதற்கு (சமண இலக்கியங்களில் அல்லது கல்வெட்டு சாசனங்கள் போன்றவற்றில்) புறச்சான்று கிடையாது. அத்துடன் சமணர்கள் தாமே கழுவேறுவதாகக் கூறினார்கள் என கூறியிருந்தேன். அதனை மறுத்து இல்லை. அவர்கள் கழுவேறுவதாகக் கூறவில்லை சைவ அரச நீதியின் படி சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே கூறியுள்ளார் என்பதாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளீர்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் கூறிய இந்த 'ஆதாரத்தின்' தன்மையை உங்களுக்கே காட்டிடுகிறேன். நீங்கள் கூறுகிறீர்கள்.
//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//
இதோ சிவனருட்செல்வர் நூலில் உண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். நீங்கள் கூறியதற்கும் அதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நீங்களும் வாசிப்பவர்களும் உணர்ந்து கொள்ளலாம். "இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."
இதுதான் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியது. இப்போது சொல்லும் ஐயா யார் கூறுவது உண்மை?
மேலும் விளக்கமாக புதிய பதிவு போடுகிறேன்.
ஐயா, சுவனப்ரியனை நான் நன்கு அறிவேன். அவர் அக்மார்க் இஸ்லாமியர்.
இஸ்லாமை முழு மூச்சுடன் நம்புபவர். அவர் மேல் இந்த மாதிரி அபாண்டங்கள் வேண்டாம்
ஐயா எனக்கு சுவனப்ப்ரியனுடன் எவ்வித தொடர்பும் கிடையாது.
நேரடியாகத் திட்டி விட்டுப்போகலாம். சுவனப்பிரியன்தான் அரவிந்தன் என்று சொல்லி அரவிந்தனை இப்படியா அவமானப்படுத்துவது? எனக்கென்னவோ இறைநேசன்தான் சாமுவேலோ என்று தோன்றுகிறது. இணைய கிறித்துவர்களை வசதியாய்ச் அணிசேர்க்க கிறித்துவப் பெயரில் எழுதுவதுபோலத் தெரிகிறது.
ஜடாயுவின் கவிதை ஜொலிக்கிறது.
ஆம் அப்பொழுதே நன்றி சொல்லியிருக்க வேண்டும்.
ஜடாயு அவர்களுக்கு மரபு வழிக்கவிதையும் அருமையாக வருகிறது.
நன்றி,
நன்றி நீலகண்டன், அருணகிரி.
// சுவன பிரியன் ஒரு இந்துத்வ வாதி என்று நினைக்கிறேன். அவர் சரியாக நீலகண்டனிடம் இருக்கும் நூல்களை தவறாக quote செய்கிறார், உடனே சொல்லி வைத்தாற் போல நீலகண்டன் அவரையும் அவரது மதத்தையும் நக்கல் செய்கிறார். //
சாமுவேல், கழுகுப் பார்வை ஐயா உமக்கு (சொல்வது ஜடாயு :))
மற்ற இஸ்லாமிஸ்ட் எழுத்துக்களுக்கும், சுவனப்பிரியன் எழுத்துக்கும் ஒரு subtle வேற்றுமை தெரிவதை ரொம்ப நாளாகவே கவனித்து வருகிறேன். எழுத்தில் நாகரீகம் இருக்கிறது, வெறும் name calling உடன் நிறுத்திக் கொள்ளாமல் ரொம்பவும் மெனக்கெட்டு ஆதாரங்கள் எல்லாம் தர முயற்சிக்கிறார்.
கடந்த 3-4 விவாதப் பொருள்கள்ளை எடுத்துப் பார்த்தால் இப்படி ஒரு pattern இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ம்ம்..இதற்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? இணையத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை.
//மற்ற இஸ்லாமிஸ்ட் எழுத்துக்களுக்கும், சுவனப்பிரியன் எழுத்துக்கும் ஒரு subtle வேற்றுமை தெரிவதை ரொம்ப நாளாகவே கவனித்து வருகிறேன். எழுத்தில் நாகரீகம் இருக்கிறது, வெறும் name calling உடன் நிறுத்திக் கொள்ளாமல் ரொம்பவும் மெனக்கெட்டு ஆதாரங்கள் எல்லாம் தர முயற்சிக்கிறார். //
எல்லாம் ஒரு டிவிஷன் ஆஃப் லேபர்தான். தரங்கெட்டு வையமாட்டார் சுவனப்பிரியன். அந்த விஷயத்தை இறைநேசன் கவனித்துக்கொள்வார். மற்றபடி ஆம். தமது பதிவில் எவ்வித தரமற்ற வசைகள் வந்துவிடக் கூடாது என்பதில் சுவனப்பிரியன் எடுத்துக்கொள்ளும் சிரத்தை பாராட்ட தக்கது. ஆனால் நண்பன் ஷாஜகானோ அல்லது அபு மூகையோ அல்லது இறை நேசனோ அல்லது நல்லடியாரோ அல்லது சுவனப்பிரியனோ இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அனைத்து கருத்தியல்களிலும் சரி அதன் அனைத்து பாசிச வெளிப்பாடுகளிலும் சரி மனமொத்து ஒருங்கிணைபவர்கள்தாம். சுவனப்பிரியனே இறைநேசனாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சுவனப்பிரியனின் மற்றொரு நல்ல அம்சம் (இது அவர் ஏற்றிருக்கும் இயல்பிற்கு ஏற்ப அமைந்த அம்சம் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதினாலும் கூட) என்னவென்றால் அவரது வாதங்களை தவறு என திட்டவட்டமாக காட்டக்கூடிய பின்னூட்டத்தை கூட அவரது பதிவில் போடுகிறார். அவரது ஆதாரங்களை பொறுத்தவரையில் அவர் இஸ்லாமிஸ்ட் பிரச்சார இலக்கியங்களுக்கு அப்பால் வருவதில்லை என்றே கருதுகிறேன். பிரச்சார இலக்கியங்கள் தருவதை அப்படியே மீள்-தருகின்றார். ஒரு உயிருள்ள நகல் கருவி போல. குறைந்த பட்சம் தமது பிரச்சார இலக்கியம் கூறுவது சரியா என ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் அட்லஸை வாங்கியாவது சரி பார்க்க கூட அவருக்கு தோன்றவில்லை. சமயத்தில் எனக்கு அவரை பார்க்க பரிதாபமாகக் கூட இருக்கிறது. ஏனெனில் எப்படிப்பட்ட பொய்களை உண்மை என நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார். சதாவதானி செய்கு தம்பி பாவலர் முதல் அப்துல் கலாம் வரை எப்படிப்பட்ட அறிஞர்களை உருவாக்கிய ஒரு சமுதாயம், வெளிநாட்டு பணத்தின் மூலம் விளைவிக்கப்படும் எப்படிப்பட்ட பொய்களுக்கு சுயபுத்தியை அறவே இழந்து அடிமையாகி உள்ளது!
//வார்த்தைகளை பயன்படுத்தும் போதும், வரலாற்றை படிக்கும் போதும் ஆழ்ந்து படிக்க வேண்டும்,கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கூற்றே உதாரணம். வரலாற்று ரீதியிலான ஒரு தவறுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரும் பலியாகியிருக்கிறார் என்பதை அறியும்போது வருத்தப்படத்தான் நேர்கிறது.//
திருமுருக கிருபானந்த வாரியார் சரியாகத்தான் கூறியுள்ளார். சுவனப்பிரியன்தான் தவறாக கூறியுள்ளார். "...ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றிஅரச நீதியை நிலைநிறுத்துக என்றான். அரச நீதியில் குறுக்கிடாது சம்பந்தர் திருவருளை சிந்தித்திருந்தார்.ஞானமாதவத் திருமடத்தில் தீவைத்த எண்ணாயிரம் சமணர்களையும் குலச்சிறையார் கழுவில் ஏற்றினார்."
ஓசை செல்லா இதைப் படிக்கவில்லை போலிருக்கிறது.
ஈழவேந்தன்
Post a Comment
<< Home