Wednesday, February 28, 2007

சமஸ்கிருதமும் மெடிக்கல் காலேஜும்

கன்ஸ் என்பவர் அழகாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்: "1932 வரை மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி (Rule). இது
எதற்கு? யார் இதனால் பயன் பெறுவார்கள்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். தினம் தினம் தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி தன் மகனுக்கு சமஸ்கிருதம் சொல்லித்தர
முடியுமா? அதே போல் ஒரு செருப்பு தைக்கும் ஆள், தன் மகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தர முடியுமா? ஆனால் சமஸ்கிருத அர்ச்சகர் தன் பிள்ளைகளுக்கு எளிதாக சொல்லித் தரமுடியும். அர்ச்சகர்கள் அனைவரும் பிராமணர்கள். இப்பொழுது புரிந்ததா? இதுவும் Reservation, But in reverse."


சிறிது சிந்திக்கலாம்.சென்னை மருத்துவ கல்லூரியில் இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டது 1842 இல். முதல் மருத்துவர்கள் வந்தது 1852 இல். தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது 1907 இல் மருத்துவராக பட்டம் பெற்றது 1912 இல். மேலும் மெடிக்கல் கல்லூரிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலேயர்கள். இவர்களெல்லாம் சமஸ்கிருதம் படித்தார்கள், சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். (பம்பாயில் மருத்துவ கல்லூரிக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் பணம் கொடுத்த ஒருவர் இருக்கிறார்தான். அவரும் பொற்கொல்லர் வகுப்பை சார்ந்தவர்.)சமஸ்க்கிருதம் கூட அர்ச்சகருக்குதான் தெரிந்திருக்க வேண்டும் என்பது அபத்தம். தமிழ்நாட்டு சூழலில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வைத்தியர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்துதான் இருந்தது. உதாரணமாக வெள்ளாள வைத்திய குலத்தை சேர்ந்த சிறுதொண்டர் தமது இளம் வயதில் எவை எவற்றைப்பயின்றார் என சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.


ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் (7.3.3 3662-3666)


புறநானூற்று காலத்தில் யானைப்பாகர்கள் கூட சமஸ்கிருதத்தை யானையை பழக்க பயன்படுத்தினார்கள் என சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. திருவிதாங்கூர் சாதீயம் தலைவிரித்தாடிய இடம். நிழலுக்கும் காற்றுக்கும் தீட்டு என்று சாதிப் பேய் பேயாட்டம் போட்ட இடம். ஆனால் அங்கு கூட சமஸ்கிருதம் படிக்க ஏழை எளிய தாழ்த்தப்பட்ட நாணுவுக்கு முடிந்தது. அது யார் நாணு என்கிறீர்களா? அதுதான் ஸ்ரீ நாராயண குரு சுவாமிகள். ஈழவர் சமுதாயம் எத்தனை தாழ்த்தப்பட்டு அடங்கி கிடந்தது. அவர்களுக்கே கூட சமஸ்கிருதம் படிக்க முடிந்தது. அவருக்கு சமஸ்கிருதம் படிப்பித்தவர் யார் அந்தணரா? இல்லை. தொடக்க சம்ஸ்கிருதத்தை அவர் கற்றது (அமர கோச நிகண்டு உட்பட) செம்பழந்தி பிள்ளையிடம். பின்னர் சமஸ்கிருத மேல்பாடம் கற்றது கும்மம்பிளி ராமன் பிள்ளை ஆசானிடம் (1877-1881). சாதீயம் தலைவிரித்தாடிய கேரளத்தில் மிக எளிதாக வறியதொரு குடும்பத்தில் பிறந்த நாராயணகுருவுக்கு 1870களில் சமஸ்கிருதம் கற்க முடிந்ததென்றால்...அதுவும் அந்தணரல்லாதவரிடமிருந்து கற்க முடிந்ததென்றால் ...1920களில் எவ்வளவோ நிலை நன்றாக இருந்திருக்கும் போது ஏன் முடியாது?


பொய்கள் பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை போராளிகளான ஸ்ரீ நாராயணகுருவும் அய்யன் காளியும் ஐயா வைகுண்டரும் ஆக்கப்பூர்வமான முழு விடுதலைக்கு வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெறும் வெறுப்பில் பிதற்றி பொய் பேசி அதற்கு சமுதாய நீதி முலாம் பூசுகிறவர்கள் பூசிக்கொண்டிருக்கட்டும்

13 Comments:

Blogger Hari said...

அடிச்சு தூள் பண்றீங்களே. எப்பிடி இப்பிடி?

2:44 AM, February 28, 2007  
Anonymous Anonymous said...

தலைவரே, நீங்கள் பாட்டுக்கு இந்த ப்ளாக்கர்களின் பொய் ஒவ்வொன்றையும் உரித்து உரித்து உங்கள் ப்ளாக்கில் எழுதலாம். ஆனால் இவர்களுடைய பொய்கள்தான் பொதுமக்களை சென்றடையும். உங்களது ஆதாரபூர்வ கட்டுரைகள் இல்லை. எனவே, இறுதியில் வெல்லப்போவது பொய்கதைகள்தான். சத்தியம் இல்லை.

3:15 AM, February 28, 2007  
Blogger Hariharan # 03985177737685368452 said...

அரவிந்தன் நீலகண்டன்,

நல்ல பதிவு. மெய்யாக பிராமணனாகிய நான் வேதம் கற்பது பிராமணரல்லாத நாயர் / பணிக்கர் சொல்லித்தர 2007ல் குவைத்தில் கூட வேதம், உபநிடம் எனக் கற்க சாதி தடையாக இல்லை.

65வயது எனது வேத ஆசானாகிய நாயர், மற்றும் பணிக்கர் வேதம் கற்று அறிந்தது பிராமண ஆசான்களிடம் இருந்து என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கற்பித்தலுக்குத் தேவை விஷய ஞானமுள்ள ஆசானும், விஷயத்தைக் கிரகிக்கும் மனோபாவம், பணிவுடனான மாணாக்கனுமே.

கும்மி அடிப்பவர்கள் ஆசானாக முடியாது. நல்ல மாணாக்கனாக இல்லாதவன் நல்ல ஆசானாவது கடினம்.

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். குறைகாணல் மட்டும் குவிந்த அகமுடையவர்களிடம் குறைசுட்டல் மட்டுமே எங்கும்,எதிலும் எப்போதும் வெளிப்படும்.

5:03 AM, February 28, 2007  
Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ், நல்ல மூக்கறுப்பு. தொடரட்டும் உங்கள் பணி

3:11 PM, February 28, 2007  
Anonymous Anonymous said...

//கற்பித்தலுக்குத் தேவை விஷய ஞானமுள்ள ஆசானும், விஷயத்தைக் கிரகிக்கும் மனோபாவம், பணிவுடனான மாணாக்கனுமே.

கும்மி அடிப்பவர்கள் ஆசானாக முடியாது. நல்ல மாணாக்கனாக இல்லாதவன் நல்ல ஆசானாவது கடினம்.

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். குறைகாணல் மட்டும் குவிந்த அகமுடையவர்களிடம் குறைசுட்டல் மட்டுமே எங்கும்,எதிலும் எப்போதும் வெளிப்படும். //
ஹரிஹரனின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

சோம்பேறிகள் தங்கள் இயலாமையை மறைக்க எல்லாம் பேசலாம்.

இன்னுமொரு தகவல். ராம்கோ சிமிண்ட் நிறுவனத்தார் திருநெல்வேலி அருகே (பெயர் மறந்துவிட்டது) ஒரு குருகுலம் நடத்துகிறார்கள்...அங்கு சமஸ்கிருதம், மற்றும் வேதபாடம், ஆசிரியர்கள் பிராமணர், படிக்க யாரும் வரலாம் 8-12 வயதினராக இருத்தல் அவசியம். இதற்கு முழு பொருள் உதவி, இட உதவி அளித்து போஷிப்பவர் (ராம்கோ-ராஜு) ஷத்ரிய மரபினர்.

9:17 PM, February 28, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன், நல்ல பதிவு. சம்ஸ்கிருதம் பற்றிய இந்த தவறான புரிதல், அதை ஒரு சாதியினரின் மொழி என்பதாகவே சித்தரித்து வெறுப்பை உமிழ்தல் இவை குறிப்பாக தமிழ்நாட்டிலேயே உள்ளன, மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லை. கழக அரசியல் ஏற்படுத்திய காழ்ப்புணர்ச்சி தான் இது.

இது போன்ற உண்மைகள் வெளிவந்து அந்தப் பொய்கள் உடைபடட்டும்.

9:43 PM, February 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வெறும் தவறான புரிதல் மட்டும் அல்ல ஜடாயு. திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் தவறான புரிதல். இதில் இருப்பது சமுதாய நீதிக்கான துடிப்பு அல்ல சமுதாய நீதி முலாம் பூசி இந்து தருமம் மீதான வெறுப்பு அவ்வளவுதான். கடந்த பத்து வருடங்களுக்கான மதமாற்றம் குறித்த தரவுகளை எடுத்துக்கொண்டால் அவை அனைத்திலும் மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் -கொலை செய்யப்பட்டவர்கள், அகதிகளாக்கப்பட்டவர்கள், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் 'மேல்சாதியினர்' கிடையாது. இவர்களது அறிவுசீவி பாடையில் 'விளிம்பு நிலை மக்கள்' என்கிறார்களே அவர்கள்தாம். இந்த சமூகநீதி ஆர்வலர்கள் எத்தனை பேர் பொங்கி எழுந்தார்கள். திருவட்டாறு சாஸ்தான் காவு சாஸ்தான் கோவில் பெந்தகோஸ்தே மதமாற்ற வெறியர்களால் 2006 டிசம்பர் இடிக்கப்பட்டது. அங்கு குரல் கொடுத்தவர்கள் இந்து முன்னணிகாரர்கள்தாம். நாட்டார் வழக்கு என்று அதை வைத்து வயித்துபிழைப்பி நடத்தும் பேராசிரிய பிள்ளைமார்கள் காக்கிற பெருமாள்களாகவோ காக்காத பெருமாள்களாகவோ வந்துவிடவில்லை. ஏனெனில் அப்படி வந்தால் அவர்களின் காக்கா பிடிக்கும் பெரும் ஆள்களிடம் பிரச்சனை ஆகிவிடும் அல்லவா?

10:15 PM, February 28, 2007  
Anonymous Anonymous said...

விடாது கருப்பில் நான் இட்ட பின்னூட்டம் இது.

சமஸ்கிருதம் ஆடு,மாடு, கழுதைக்குதான் உதவும்னு உண்மையைத்தான் சொல்லி இருக்கார் அரவிந்தன் நீலகண்டன். இதுக்கு போய் நீங்க ஏன் சண்டை போடனும்? உண்மையைத்தானே சொல்லி இருக்கார்.

10:19 PM, March 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஆடு,மாடு, கழுதைக்குதான் உதவும்//
அப்படியா அனானி உங்களுக்கும் உங்க கும்பலுக்கும் எந்த விதத்தில் சமஸ்கிருதம் உதவுது? சொன்னா கழுதைக்கு சமஸ்கிருதம் எப்படி உதவுதுன்னு தெரிஞ்சுப்பேன்.

7:30 AM, March 02, 2007  
Anonymous Anonymous said...

You wrote
"நாட்டார் வழக்கு என்று அதை வைத்து வயித்துபிழைப்பி நடத்தும் பேராசிரிய பிள்ளைமார்கள் காக்கிற பெருமாள்களாகவோ காக்காத பெருமாள்களாகவோ வந்துவிடவில்லை."

Why bring his caste in this? I know whom you are targetting at. Should we also start looking at everything that you write as being written by a Nadar, who is crying for false Kshatriyahood recongnition by his Brahmin masters? Then the entire perspective of your Hindutva attitude changes. Everytime you write something, you are exposing yourself more.

9:10 PM, March 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பிள்ளை என்பது சாதிப்பெயர் என்று உங்களுக்கு சொன்னது யார் அனானி? பால கிருஷ்ணன் பிள்ளை என்பவர் வெள்ளாளரா, நாயரா, இல்லத்து பிள்ளைமாரா? சொல்லமுடியுமா உங்களால். எனவே பேராசிரிய பிள்ளை என்பது வெறும் கேலியான பதம்தானே ஒழிய அன்னாரது சாதியைக் குறித்த பதம் அல்ல. ஹும்...நாடார் என்பதும் சாதியைக் குறிக்கும் பதம் அல்ல என்பதை தெரிந்துகொள்ளும் ஐயா ஆங்கில அனானியே. அத்துடன் 'ஷத்திரியர்' என்பதனை எந்த 'பிராமண மாஸ்டரும்' வலங்கை உய்ய கொண்ட ரவிகுல ஷத்திரியர்களுக்கு கொடுக்க வேண்டியதில்லை. தாரகனை வதம் செய்த பத்திரகாளி புத்திரர்கள் ஷத்திரியர்கள் என்பதனை மிகச்சிறந்த செந்தமிழ் நாட்டு மன்னர்களே ஒத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் எந்த சாதியையும் சார்ந்தவனல்ல. நான் சாதியற்ற இந்து.அவர்ண இந்து. அய்யா வைகுண்டர் கூறியபடி தரும வழி நிற்கும் அனைத்து மக்களும் ஒரு சாதியாய் ஒருநிறையாய் காவிக்கொடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அகிலத்துக்கே கலி அழிந்து தரும ஒளி பரவ வேணுமென அதற்காக உடலையும் உள்ளத்தையும் அர்ப்பணித்த தன்னலமற்ற அனும சேனையில் ஒரு கடைநிலை வீரன்

11:15 PM, March 02, 2007  
Anonymous Anonymous said...

நீர்தான்
'பேராசிரிய பிள்ளைமார்கள்' என்று எழுதுகிறீர்.

'காக்கிற பெருமாள்களாகவோ காக்காத பெருமாள்களாகவோ வந்துவிடவில்லை' என்று எழுதுகிறீர்.

"அத்துடன் 'ஷத்திரியர்' என்பதனை எந்த 'பிராமண மாஸ்டரும்' வலங்கை உய்ய கொண்ட ரவிகுல ஷத்திரியர்களுக்கு கொடுக்க வேண்டியதில்லை. தாரகனை வதம் செய்த பத்திரகாளி புத்திரர்கள் ஷத்திரியர்கள் என்பதனை மிகச்சிறந்த செந்தமிழ் நாட்டு மன்னர்களே ஒத்துக்கொண்டிருக்கின்றனர்."
என்றும் எழுதுகிறீர்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதற்கு உதாரணம் இதுதான்.

இதில் ஒரு சப்பைக்கட்டு வேறு:"ஆனால் நான் எந்த சாதியையும் சார்ந்தவனல்ல."

What kind of hypocrisy is this? This is what i was indicating;

எனக்கு புரியாத விசயமே இதுதான். இப்படி பெருமை பேசும் நீர் எப்படி இந்து ஒற்றுமை கொண்டு வருவீர்?

நால் வருணமும் வேண்டும். சுய சாதிப் பெருமையும் வேண்டும். அதே சமயத்தில் மற்றவர்கள் நீங்கள் சாதி மொழி பேதமற்ற இந்து சமயம் படைப்பீர்கள் என்று உங்களை கண்மூடித்தனமாக தொடர வேண்டும். நீங்கள் பெரிய மனது பண்ணி அவர்கள் 'உங்கள் வருணாசிரமத்தின்' படி சூத்திரராகவோ, தாழ்த்தப்பட்டவராக பிறந்தாலும் நீர் அவரை இந்து என்று உய்ய வைப்பீர்.

And, who made you guys the representative of the religion that majority of tamils follow? You better stick to defending RSS, Modi, Sanskrit, Varnashrama, Asvamethayaga, etc., We can take care of our Gods, practices, temples, etc., Don't mix these two and try to confuse innocent ones.

1:45 AM, March 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அனானி, சான்றோர் சமுதாயத்தினர் ஷத்திரிய வர்ணத்தவராக விளங்கியதும் திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மன் காலம் முதல் உள்நாட்டு அரசியல் காழ்ப்பினால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதும் வரலாற்று தகவுகள். இதில் சுய சாதி பெருமை எங்கு இருக்கிறது. அதே நேரத்தில் வெளியே ஏதோ முற்போக்கு வேசம் போடும் பேராசிரிய வேசங்கள் கடைந்தெடுத்த சாதி வெறியுடன் விளங்குகின்றன என்பதும் உண்மை. ஆக திருவிதாங்கூரில் சான்றோர் சமுதாய மக்களுக்கு ஏற்பட்ட நிலை இந்து தருமத்தால் ஏற்பட்டது என ஒரு பொய்யை வெட்கமில்லாமல் சொல்லும் போது இல்லை என்பதற்கான ஆதாரத்தை சொன்னால் உமக்கு ஏன் எரிகிறது.
//We can take care of our Gods, practices, temples, etc., Don't mix these two and try to confuse innocent ones.// ஆமாம் எங்கள் ஊர் காவு கோவில்கள் தாக்கப்படுகையில் ஓசையில்லாமல் கிடந்து இப்போது ஆங்கிலத்தில் செப்ப நாணமில்லையா உங்களுக்கு.

12:26 PM, March 15, 2007  

Post a Comment

<< Home