Thursday, March 01, 2007

மரக்காயருக்கு பதில்

1. மெக்காவும் மெதீனாவும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஆக புனிதமான தலங்கள் என நினைக்கிறேன். அதன் பாதுகாவலராக தன்னை ஒரு குடும்பம் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. அந்த அதிகாரம் பரம்பரை சொத்தாக அமைகிறது. குறைந்த பட்சம் அனைத்துலக இஸ்லாமியர்களும் ஹஜ் வருவதால் காபா இருக்கிற இடத்தின் பொறுப்பு ஒரு குடும்ப சொத்தாக இருக்காமல் அனைத்து இஸ்லாமிய கவுன்ஸிலிடம் இருக்க வேண்டுமென கேட்க -சிற்றொலி கூட எழுப்ப முடியாமல்- இருக்கிறார்கள். இவர்கள் கேட்கிற கேள்வி: சங்கராச்சாரியாராக ஒரு தலித்தை நியமியுங்கள் என்பது. அறியாமையையும் அசட்டு அடாவடியையும் தவிர ஏதுமற்ற கேள்வி இது. ஒன்று: சங்கராச்சாரியார் இந்து தருமத்தின் அல்லது சமுதாயத்தின் ஏகபோக தலைவர் கிடையாது. இரண்டு: எவரும் தம்மை சங்கராச்சாரியார் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் தவறு தடையும் கிடையாது. மூன்று:தம்மை பிரம்மானுபவம் அல்லது அத்வைத நிலை அடைந்தவராக கருதப்படுபவர் எந்த சாதியாக இருந்தாலும் அதை உணரும் எவரும் அவர் காலடியில் விழுந்து வணங்குவர். தம் குருவாக ஏற்பர். இதில் சாதி, பால், மொழி என எந்த பேதமும் கிடையாது. எனவே காஞ்சி மடத்தின் ஆச்சாரியர்களைக் காட்டிலும் இந்துக்களால் வணங்கப்படும் தலைவராக மாதா அமிர்தானந்த மயி விளங்குகிறார். எனவே அனைத்து முஸ்லீம்கள் செல்லுகிற இடத்தின் பொறுப்பை என் கையில் என் குடும்பத்தின் கையில் வைத்திருப்பேன் என்கிற சமத்துவமின்மைக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் அல்லது எந்த மடத்தின் தலைவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத இந்து சமுதாய தலைமைக்கும் முடிச்சு போடுவது மடத்தனமானது. அபத்தமானது. நாளைக்கு மரக்காயரே அத்வைத நிலையை அடைந்துவிட்டால் இந்து சமுதாயம் அவரை காஞ்சி சங்கராச்சாரியாரைக் காட்டிலும் மரியாதை செய்யும் என்பதுதான் உண்மை.

2. மன்னித்துக்கொள்ளுங்கள் மரக்காயர் ஏனெனில் இது எனக்கு கடினமான கேள்விதான். காரணம் உங்களைப் போல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் என்ன சாதி என்றெல்லாம் நாங்கள் கணக்கு பார்ப்பதில்லை. அதெப்படீங்க சாதி இல்லை அப்படீன்னு சொல்ற நீங்க சாதி - சாதி உள்பிரிவு எல்லாம் வரை தெரிஞ்சி வச்சுருக்கீங்க. என்றாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்காக கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தேங்க. நீங்க சொல்றது முழு தப்பு. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ்ஸின் நான்காவது தலைவர் ராஜேந்திர சிங். இவர் அந்தணரே கிடையாது. தாகூர் சாதி காரர். இவர் நியமித்த அடுத்த தலைவர்தான் இப்போது இருக்கும் சுதர்ஸன். இவர் சித்பவன் கிடையாது. நம்மூர் காரர். செங்கோட்டை. மேலும் வெளியிலே சமத்துவம் பேசுகிற சில சாதிவெறியர்கள் நினைக்கிறார்கள் ஆர்,எஸ்,எஸ்ஸில் 'கீழ்சாதி' காரர்களெல்லாம் சும்மா அடியாளாகத்தான் பயன்படுத்துகிறார்கள். (ஏன்னா 'கீழ்சாதி'காரங்களுக்கெல்லாம் மூளை கிடையாதாம். அடியாளா இருக்கத்தான் இலாயக்காம். சொல்றது சமத்துவ பாவ்லா காட்டுற சமூகநீதி பேசுற முற்போக்குங்கதான். நீங்க இல்லை மரக்காயர்) ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூளையாக அதன் அறிவுஜீவி -Think tank-ஆக செயல்படுகிற ஸ்ரீ ரமேஷ் பதங்கேஜி மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் மூளையாக இவர்தான் கருதப்படுகிறார். ஸ்ரீ கோபிநாத் முண்டே தாழ்த்தப்பட்ட வனவாசி வகுப்பினர்தாம். குற்றவாளி இனம் என கொடூரமாக ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் மணந்திருப்பது அந்தணப்பெண்ணை. பிரமோத்மகாஜனின் சகோதரியை. ஆக. சாதி என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸீல் கிடையாது. தெரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனைவருமே சித்பவன் பிராமணர்கள் என பிறரின் பிரச்சார பொய்களை உளறாதீர்கள்.

7 Comments:

Anonymous Anonymous said...

மரைக்காயர் போன்றவர்கள் ஆர் எஸ் எஸ்ஸை எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுக்கு ஹிந்துத்துவம் பற்றி அளிக்கப்பட்டுவரும் தவறான போதனைகள்தான்.

உண்மை நிலை என்ன என அறிந்த அப்துல்கலாம் உள்ளீடான இஸ்லாமியர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு நல்ல இஸ்லாமியராக இருக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ், உண்மை புரிந்த நண்பர்களாக இஸ்லாமியர் இங்குள்ள இந்தியர்களோடு இணங்கி இருக்கட்டும்.

4:58 AM, March 01, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,

நல்ல பதிவு. எனக்குத் தெரியாத பல தகவல்களைத் தந்ததற்கு நன்றி.சிறிய தகவலொன்று. ஒரு இடத்தில் தாகூர் ஜாதி என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். தாகூர் என்பது அடைமொழி - பிள்ளை, தேவர், முதலியார் இந்த மாதிரி. பொதுவாக ராஜபுத்திரர்களைத் தாகூர்கள் என்று அழைப்பார்கள். கடவுளையும் வடநாட்டவர்கள் தாகூர் என்றே அழைப்பார்கள்.

6:40 AM, March 01, 2007  
Blogger ஜடாயு said...

// எனவே காஞ்சி மடத்தின் ஆச்சாரியர்களைக் காட்டிலும் இந்துக்களால் வணங்கப்படும் தலைவராக மாதா அமிர்தானந்த மயி விளங்குகிறார். //

உண்மை, உண்மை. மிகத் தெளிவாக எழுதி விட்டீர்கள்.

// நாளைக்கு மரக்காயரே அத்வைத நிலையை அடைந்துவிட்டால் இந்து சமுதாயம் அவரை காஞ்சி சங்கராச்சாரியாரைக் காட்டிலும் மரியாதை செய்யும் என்பதுதான் உண்மை. //

இது பயங்கர பஞ்ச்! உண்மையான இந்துத்துவம் உங்கள் ரத்தநாளங்களில் ஓடுகிறது ஐயா.

// இவர் நியமித்த அடுத்த தலைவர்தான் இப்போது இருக்கும் சுதர்ஸன். இவர் சித்பவன் கிடையாது. நம்மூர் காரர். செங்கோட்டை. //

அப்படியா? முழுப்பெயர் குப்பஹள்ளி எஸ். சுதர்சன். இவர் கன்னடர் என்றே நினைத்திருந்தேன். பல தலைமுறைகளாக கர்நாடகத்திலேயே செட்டில் ஆகிவிட்ட 'சங்கேதி' என்ற வகுப்பினர் என்று அறிகிறேன் (இந்த சொல் 'செங்கோட்டை' என்பதில் இருந்து வந்ததாம், இவர்களது ஆதி பூர்விகம் செங்கோட்டை என்று நம்பப் படுகிறது).

4:45 AM, March 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆம் பூர்விகம் செங்கோட்டை. அண்மையில் செங்கோட்டையில் அவரது குடும்ப தெய்வத்துக்கும் சென்று பூசைகள் செய்து வந்தார்.

7:31 AM, March 02, 2007  
Anonymous Anonymous said...

>> ஆம் பூர்விகம் செங்கோட்டை. அண்மையில் செங்கோட்டையில் அவரது குடும்ப தெய்வத்துக்கும் சென்று பூசைகள் செய்து வந்தார்.

அவரது குல தெய்வம் கோவில் எது என்று தெரியுமா?

4:03 AM, March 17, 2007  
Blogger balaravi said...

My Dear Neelakantan,
I came across your excellent comments on Kanchi Sankaracharya. While your comments are OK, we should also not become fanatics like others. We should be magnanimous to accept our mistakes (especially in the past, like Harijans). RSS has no time for South Indians or their traditions. In fact they have no respect for us. They want to thrust their newfound traditions on us. One shining(!)example is Vinayak Chaturti. SIs treat this as an individual's puja. We had never been using huge idols(painted and spoiling the environment) in all street corners and spending huge money.
Ganapahi is the simplest God and takes form in soil. This is worshipped and put back in well or tank. This in no way affects the environment. But t5he stupid RSS wants to thrust the stupid north traditions to spoil the beautiful South.

So don't blindly follow theRSS and spoil the traditions of Tamilians.

With deep concern,
balaravi

9:04 PM, March 28, 2008  
Anonymous Anonymous said...

நாளைக்கு மரக்காயரே அத்வைத நிலையை அடைந்துவிட்டால் இந்து சமுதாயம் அவரை காஞ்சி சங்கராச்சாரியாரைக் காட்டிலும் மரியாதை செய்யும் என்பதுதான் உண்மை.
neels unmail shirdi sai baba oru mulimanavar avarai namadhu makkal vangavillaya, irai anubavam enna anbathum iraivan enbathu enna arttham enbathum ariyathavargalin, yaro eppotho avargalin sontha souriyangalinpal amaitthukkonda oru pithtralgali unmai ena nambi kannadakkam kattiya kuthirai pol vazhnthu varubavargalin vasanangal ippaditthan irukkam

2:19 PM, August 08, 2009  

Post a Comment

<< Home