Saturday, April 28, 2007

மண்டைக்காட்டு கலவர குருசடி

மண்டைக்காடு கலவரத்தைக் குறித்து இப்படி பொய்கள் பரப்பப்படுவதில் மா.சி ஒரு சிறிய கருவிதான். உதாரணமாக 2006 இல் திண்ணை பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் ஒரு நபர் எழுதினார்: "...அவர்கள் புதன்கிழமை தோறும் நடத்தும் பூசை வேளையில் சர்ச்சை நோக்கி ஒலிபெருக்கி ஒன்று திருப்பப்பட்டு இரைச்சல் அதிகமாய்ப் பாடல் ஒலித்தது இந்துத் தரப்பிலிருந்து. சத்தத்தைக் குறக்கச் சொல்லும் வேண்டுகோளை வல்லாந்திரமாய் மறுத்த தரப்பு கலவர விதையை ஊன்றியது."



கலவரத்துக்கு தூண்டுகோலாக பகவதி அம்மன் ஆராட்டு பாதையில் அரசு ஆணையை மீறி அமைக்கப்பட்ட குருசடி

இதுதான் முழுப்பொய் என்பது. உண்மையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து கணிசமான தூரம் தள்ளி இருக்கிறது புதூர் சர்ச். ஆனால் வேண்டுமென்றே இந்துக்கள் ஆராட்டுக்கு வரும் பாதையில் 1971 இல் கட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் குருசடி இது. இந்த குருசடி தவிர, ஊருக்குள் தள்ளி புதூர் சர்ச் இருக்கிறது. இந்த குருசடி ஏற்கனவே கூறியது போல அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகும். எனவே இந்த குருசடியை வழிபாட்டு தலம் எனக் கூறுவது மிசிநரி தொண்டரடிபொடிகளால் மட்டுமே இயலக்கூடிய விசமத்தனமன்றி வேறில்லை. 1982 இல் இது மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்பீக்கர் கட்டப்பட்டு கிறிஸ்தவ பிரச்சாரம் ஒலிப்பரப்பப்பட்டது. மண்டைக்காட்டு அம்மன் கோவில் வரும் பக்தர்களிடம் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இது சச்சரவை ஏற்படுத்தியது. இறுதியில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்ட போது மோதல் வெடித்தது. மணவாளக்குறிச்சி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கூறிய வாக்குமூலம் விசயத்தை தெளிவாக்குகிறது:
'மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். நேர் எதிர்த்தாற் போல் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமம் இருக்கிறது. வரும் பக்தர்கள் முதலில் கடலில் குளித்துவிட்டு பின்னர் ஏவிஎம் கால்வாயிலும் குளிப்பது வழக்கம். கொஞ்சநாளாவே இந்து கிறிஸ்தவர் தகராறு இருந்துகிட்டுருக்குது. இந்துக்கள் கடலில் குளிப்பது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு விருப்பம் இல்லை. சம்பவம் நடந்த ராத்திரி 8 மணி இருக்கும். மண்டைக்காடு புதூர் கிராமத்திலிருந்து சுமார் 3000 பேர் கூட்டமாக வந்து கோயிலுக்கு வந்த பக்தர்களை தாக்கினாங்க. கடைகளை சூறையாடினாங்க. காவலுக்கு நின்னுட்டிருந்த போலிஸ்காரங்க, நானு, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 23 பேர் காயமடைஞ்சோம். நிலைமை சமாளிக்கமுடியாமல் போகவே துப்பாக்கி பிரயோகம் நடந்தது. 6 பேர் செத்து போனாங்க. 15 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரில அனுமதிக்கப்பட்டிருக்காங்க.'

மேலும் புதூர் கத்தோலிக்க பங்கின் பூசாரி செபாஸ்டியன் பெர்னாண்டோகாவல்துறை அதிகாரி தன்னிடம் ஸ்பீக்கர் சத்தத்தைக் குறைக்கக் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார். மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நீராட போகும் பாதையில் குருசடி கட்டுவார்களாம். சரியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள குருசடியில் திருவிழா நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு 'பூசை ' நடத்துவார்களாம். இத்தனையும் பதிவான பிறகு ஒரு இருபது வருடத்தில் ஒரு மிசிநரி தொண்டரடிபொடியும் இதர மதச்சார்பற்றதுகளுமாக இதனை அப்படியே 'உல்டா ' பண்ணி பிரச்சாரமும் பண்ணுவார்களாம். எப்படி இருக்கிறது மதச்சார்பின்மையின் உண்மை லட்சணம்!

(தொடரும்)

2 Comments:

Anonymous Anonymous said...

Good article. Thank you Aravindan Neelakandan.

I hope p-sec's read this

Arun

9:41 PM, April 28, 2007  
Anonymous Anonymous said...

ஐயா,

உண்மையை விளக்கமாக ஆதாரங்களுடன் நீங்கள் வழங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இதை தொடர்ந்து அதன் தற்கால நிலைமையும் மேலும் ஆற்றவேண்டிய சமூக நல்லிணக்க முயற்சிகளையும் நீங்கள் அறிவுருத்தி எழுதினால் ஆர்வமாக அறிய இயலும்.

இம்மாதிரி நிகழ்வுகள் தமிழகத்தில் மேலும் பல இடங்களின் படிப்பினையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை தோன்றுகிறது..

9:22 AM, April 29, 2007  

Post a Comment

<< Home