Tuesday, May 01, 2007

மண்டைக்காடான கொல்லங்கோடு

கொல்லங்கோடு பகுதியில் ஏற்கனவே கிறிஸ்தவ மதவெறி பிரச்சாரம் நடந்தது குறித்து போன பதிவில்விளக்கியிருந்தேன். பிரச்சார வன்முறை கலவர வன்முறையாக வெடிக்கும் நாளும் வந்தது. 19.8.1985 அன்று சர்ச்சில் மணி அடித்து கூட்டம் கூட்டப்பட்டது. ஆயுதங்களுடன் கூடினர் மதவெறியூட்டப்பட்ட மக்கள். மார்த்தாண்டம் துறை நீரோடி துறை ஆகிய பகுதிகளில் கூட்டமணி அடிக்கப்பட்டது. கண்ணானகம் ஜங்ஷன் கலவரத்தில் மூழ்கியது. இந்து வீடுகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. தச்சிராகம் பகுதி தங்கம்மாள் எனும் 64 வயது முதியவர் வயிறு பிளக்கப்பட்டது. அந்த அலறல் ஓசை கேட்டு வந்த அவரது மூத்த மகன் பாலகிருஷ்ணனை குற்றுயிரும் குலையுயிருமாக தாய் காண கண் முன்னாலேயே இழுத்து சென்றனர் கிறிஸ்தவ வெறியர்கள். இன்று வரை அவர் திரும்பவில்லை. கல்லைக் கட்டி கை காலை வெட்டி கடலில் தள்ளுவது என்பது கர்த்தரின் அன்பு மக்களுக்கு மிகவும் பழக்கமான வேலைதான். கருங்கல் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிய பாண்டியன் தலைமையில் அப்போது ஒரு போலிஸ் படை அங்கு வந்து சேர்ந்தது. போலீஸ் மீது வெடிகுண்டு வீசியது கலவரக்கும்பல். போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. மொத்த மரணம் நான்கு என கூறப்பட்டது. இந்துக்கள் தாங்கள் இந்துக்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக அகதிகளாக நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே உள்ள இந்து பெரும்பான்மை கிராமங்கள் என தங்கினார்கள். ஒரு வாரம் இரவு எங்கள் வீட்டிலிருந்து படு காயமடைந்து அரசு
மருத்துவமனையில் தங்கியிருந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து சென்றது நினைவில் இருக்கிறது. அது போல சங்க தொடர்புடைய அனைத்து இந்து குடும்பங்களிலிருந்தும் அந்த இந்துக்களுக்கு சாப்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. வீடுவகையுடன் வாழ்ந்தவர்கள் இந்துக்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக மற்ற சகோதரர்களின் தயவில் உணவருந்தும் நிலை.

கிறிஸ்தவ வெறியர்களால் இழுத்துச்செல்லப்பட்ட பாலகிருஷ்ணன்


பாலகிருஷ்ணனின் மனைவி மக்கள்

அப்போது அந்த கலவரத்தை குறித்து மிகவும் ஒரு பக்கமாக மீனவர்களை மட்டும் பேட்டி கண்டு எழுதியது ஒரு வாரப்பத்திரிகை. அதற்கு மறுப்பு தெரிவித்து உண்மைகளை எழுதினார் குமரிமாவட்டத்தின் பழுத்த காந்தியவாதியும் குமரிமாவட்ட சர்வோதய சங்க தலைவருமான சண்முகம் பிள்ளை. அந்த வாரப் பத்திரிகைக்கு மனம் நொந்து அந்த காந்தியவாதி எழுதிய கடிதத்திலிருந்து.

"அடியேன் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவன். மாணவப்பருவம் முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் இன்று எனக்கு வயது 68. இன்றைக்கும் தீவிரமான அழுத்தமான சர்வோதயவாதி. நான் வெறியனல்ல.மாவட்ட சர்வோதய தலைவர். இந்த மாவட்டத்தில் இந்துக்கள் தன்மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழமுடியாமல் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு சில தகவல்களை உங்களுக்கு தருகிறேன். 1982 இல் மண்டைக்காட்டு கலவரத்தின் போது 11 இந்துக்களும் 1985 இல் முட்டப்பதியில் 3 இந்துக்களும் ஆகஸ்டு 19 ஆம் தேதி கொல்லங்கோட்டில் ஒருவருமாக இதுவரை 15 இந்துக்கள் கடலில் தாழ்த்தப்பட்டிருக்கும் சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஏறத்தாழ 12 இலட்ச ரூபாய் பெறுமான ரப்பர் தோட்டங்கள் கிறிஸ்தவர்களால் தாக்கி அழிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? குலசேகரம் அருகில் கொல்வேல் கிராமத்தில் இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? கன்னியாகுமரி அம்மன் கோவில் கச்சேரியில் கிறிஸ்தவ மீனவர்கள் ஏசுபாட்டு பாட சொல்லி கலவரம் செய்தது உங்களுக்கு தெரியுமா?"


எவ்வித தனிப்பட்ட சொத்தையும் சேர்த்துக்கொள்ளாத ஒரு பழுத்த காந்தியவாதியை முதுபெரும் சர்வோதய தலைவரை இத்தனை ஆதங்கத்துடன் பேச வைத்த கேடுகெட்ட அந்த நிலை மாறிவிட்ட நல்ல நிலை ஏற்பட்ட காரணமாக இருந்த சூழலை இப்போது நினைத்து பார்க்கிறேன். அதற்கு ஒரே காரணம் : இந்து எழுச்சி. மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் ஏற்பட்ட இந்து எழுச்சி. அது குறித்து பிறகு சொல்வேன்.
தொடரும்

11 Comments:

Blogger கால்கரி சிவா said...

அரவிந்தன், என்ன அநியாயம் எங்கோ ஈராக்கில், பாலஸ்தீனத்தில் சாகும் மக்களுக்காக அழும் நம் பத்திரிக்கைகள் இதில் ஏன் மௌனம் காத்தன?
இவ்வளவு விஷயங்களை நேர்மையுடன் உலகிற்கு அறிவிக்க ஒரு வெகுஜன ஊடகம் இல்லாதது நம் நாட்டின் துரதிருஷ்டமே?

12:49 PM, May 01, 2007  
Anonymous Anonymous said...

நீலகண்டன் அவர்களுக்கு,
வணக்கம். என்போன்ற வாசகர்கள் பெரும்பாலோர் அறியாத தகவல்கள். நன்றி.
பலகீனமான அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டு வேதனையடைந்தேன். அந்த சூழ்நிலை மாறிட காரணமான இந்து எழுச்சியை நினைத்து பெருமிதம்கொள்கிறேன்.

உடலாலும், உள்ளத்தாலும், கல்வி அறிவாலும், பலமான இந்து சமுதாயம் உருவாகும் நாள் விரைவில் வருமென்ற நம்பிக்கை எனக்குண்டு. இதற்காக நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முயலும் என்போன்ற வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
R.பாலா

4:51 PM, May 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பாலா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கட்டாயமாக தொடர்ந்து எழுதுவேன். கால்கரி சிவா வெகுஜன ஊடகம் குறித்து என்ன சொல்ல...அந்த கலவரத்தைக் குறித்து கிறிஸ்தவ மீனவர்களிடம் மட்டுமே பேட்டி கண்டு ஒரு பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டது. அந்த நிருபரின் பெயர் இப்ராகீம். அதற்கு எதிர்வினையாகத்தான் ஒரு காந்தியவாதியே கொதித்தெழுந்த சூழ்நிலை. வெடிகுண்டாலும் வெட்டருவாளாலும் தாக்கப்பட்ட இந்துக்கள் கோட்டார் அரசு மருத்துவமனையில் நிரம்பியிருக்க அவர்களை கண்டுகொள்ளாமல் அகதிகளாக சொந்த ஊரிலேயே நின்ற இந்துக்களை கண்டுகொள்ளாமல் இருக்கிற அந்த கேடுகெட்ட புத்திக்கு பெயர்தான் மதச்சார்பின்மை போலும். அதைத்தான் ஊடகங்கள் கடைபிடிக்கின்றன.

6:07 PM, May 01, 2007  
Blogger ஜடாயு said...

மறைக்கப் பட்டு, மறக்கப் பட்டு வரும் இந்தத் தகவல்களை எழுதி வருகிறீர்கள் அரவிந்தன். வரலாற்றிலிருந்து பாடம் கற்றல் என்ற காரணத்திற்காகவே இவை மீண்டும் நினைவுறுத்தப் படவேண்டும்.

// கன்னியாகுமரி அம்மன் கோவில் கச்சேரியில் கிறிஸ்தவ மீனவர்கள் ஏசுபாட்டு பாட சொல்லி கலவரம் செய்தது உங்களுக்கு தெரியுமா?" //

பைபிளில் தெசலோனியர்கள் என்ற இனத்தவரின் மரபுகளை அழித்தது போல, இந்தப் பகுதி இந்துக்கள் மற்றும் அவர்கள் கலாசாரம் எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

கன்னியாகுமரி என்ற பேரையே கன்னிமேரி என்று மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் முதலியவை நடந்ததாகக் கூறுகிறார்களே? இது உண்மையா?

7:58 PM, May 01, 2007  
Anonymous Anonymous said...

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். எழுதி வருகிறீர்கள். அவற்றுக்கு என் மனமார்ந்த நன்றி.

பொது ஊடகங்களால் அறியப்படாத உண்மை செய்திகளையும் நிலையின் பல பரிமாணங்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் உங்களது பதிவு நம் சமுதாயத்துக்கு ஒரு நல்ல சேவை. மேலும் தொடருங்கள்.

இம்மாதிரி கலவர நிகழ்ச்சிகள் அப்பகுதி மக்களுக்கு வரலாறு. ஆனால், நம் எல்லோருக்கும் இது ஒரு படிப்பினை. இதில் நாம் கற்க வேண்டிய பல பாடங்கள் அடங்கியுள்ளதாகவே நினைக்கிறேன். மதவெறி குறைந்து ஆள்பிடிக்கும் வேலையை விட்டு எல்லோரும் நல்லிணக்கமாக இருப்பதே நம் குறிக்கோள்.

இந்து எழுச்சியின் காரணிகளை நீங்கள் இதுவரை எழுதியுள்ளீர்கள். அந்த எழுச்சி நடந்த வரலாற்றயும் மேலும் விவரமாக எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறேன். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இதே நிலை. தஞ்சை முதலான கலாசார கருவூலங்களிலும் இந்த எழுச்சியின் இன்றியைமையாத நிலை இருப்பதாகவே தோன்றுகிறது.

நன்றி.

9:21 PM, May 01, 2007  
Anonymous Anonymous said...

Dear Sri Aravindan,
I hope you know I was extensively touring in Knayakumari district as a journalist during Mandaikadu incident and requested almost all leading print media of the day to publish my reports that recorded Hindu sufferings and their stand of the situation. Though I was a known and established journalist, not even a single publication came forward to publish my reports. I had to depend on Hindumitran, a periodical of very limited circulation for their publication. I engaged Parasakthi Studios of Nagercoil to take photographs and I think you are using those photographs for your articles from Hindumitran. There was lot of risk for my movements, I had to clash with Kunrakudi Adikal when he visited when Hindus had organised to retaliate. Sri Thanulinga Nadar, a Congressman and fromer MP also realised the need of consolidation of Hindus to face the challenges and revealed that the constant anti Hindu activites of Christin missionaries had culminated into Mandaikadu incident.

I had sent all my reports on Mandaikadu to MGR, the then CM and also Sri T V Venkatraman IAS, the then Home Secretary and it had some effect at that time.

MGR was worried whether there would be loss of Christina votes if he were to take strict measures against Christians but he told me later that my reports helped him take suitable steps. But the very next year, because of the Christina lobby's compulsion, he ordered the police to fire on a peaceful march of Hindus leaving one young innocent man die of bullet injuries. I covered that incident also, and my report could be published in Hindumitran only. I wrote an open letter to MGR asking him for whom to please the police opened fire on a peaceful march sacrificing one young man. The letter was also published as editorial in Hindumitran and when I met MGR in person latter, he told me that he had read my letter and tried to convince me equating his position with Pontias Pilot.
Affectionately,
Malarmannan

12:05 AM, May 02, 2007  
Anonymous Anonymous said...

மரியாதைக்குறிய மலர்மன்னனின் பின்னூட்டம் பல சிந்தனைகளை தூண்டுகிறது.

இன்று நிலை கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது என்பது ஆறுதலான நிலை. அப்பட்டமான இந்து விரோத செயல்கள் இன்று மீடியாக்களில் தோலுரிக்கபடுகின்றன. செக்குலரிஸம் என்ற வார்ததையின் உண்மை மொழிபெயர்ப்பு இன்று பலருக்கு தெரிந்து அந்த இரட்டை வேடம் இன்று பல இடங்களில் கேலிக்கூத்தாகிவிட்டது.

ஆனால், இது ஒரு தொடக்கம்தான். இன்றும் பெரும்பான்மையான ஊடகங்கள், மிக பலம் வாய்ந்த சக்திகளாக இருந்த போதிலும், அவை இந்து விரோத ஊடகங்களாகவே இருக்க விரும்புகின்றன. இந்து ஆதரவு நிலை என்பது சமுதாய நல்லிணக்க நிலை என்று புரிந்துகொண்டாலும், அவை அம்மாதிரி தம்மை காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. இந்நிலையும் மேலும் மாறும். மாறவேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள்.

2:18 AM, May 02, 2007  
Anonymous Anonymous said...

உங்கள் மண்டைக்காடு பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிய முடிகிறது.

ஆனால் இவை இன்னும் புரியவில்லை -
1) இந்த வன்முறைச் செயல்களுக்கு திட்டமிட்டு, தலைமை தாங்கி நடத்தியது யார்?

2) இந்த வன்முறைச் செயல்கள் மூலம் அதற்குத் திட்டமிட்டவர்கள் அடைய விரும்பிய குறிக்கோள்கள் என்ன? அவர்கள் நோக்கம் என்ன?

விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

8:27 PM, May 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

திரு.மலர்மன்னன், தங்கள் 'ஹிந்துமித்திரன்' தரவுகள் மிகவும் பயனளித்தவை. குறிப்பாக புகைப்படங்களும் ஆவணப்படுத்துதலையும் மண்டைக்காட்டு கலவரத்துக்கு செய்தது போல இந்துக்கள் வேறெந்த கலவரத்துக்கும் செய்யவில்லை. அத்துடன் அப்போது இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் ஆங்காங்கே இயக்கம் சாராத தனிப்பட்ட இந்துக்களால் (குறிப்பாக கிராமப்புற கோவில் பூசாரிகள் - ஊர் சமுதாய தலைவர்கள்) ஆவணப்படுத்தப்பட்டு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களால் தொகுக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு என்னதான் இந்துவிரோத சக்திகள் மண்டைக்காடு கலவரத்தை குறித்து பொய்யான ஒரு வரலாற்றை ஜோடிக்க முயற்சித்தாலும் அது நிறைவேறமுடியாமல் போவதற்கு தங்களைப் போன்றோரின் பங்களிப்பு அபரிமிதமானது. இந்து சமுதாயம் -குறிப்பாக குமரிமாவட்ட இந்து சமுதாயம் இதற்காக என்றென்றும் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.

3:12 AM, May 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ரீஸன் தங்கள் கேள்விகளுக்கான பதில்:
1. கத்தோலிக்க சபையில் ஒரு பிரிவு.
2. இந்துக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவும். மதமாற்றத்துக்கு முக்கிய தடையாக அவர்கள் கண்ட கிராம கோவில் திருவிழாக்களை அவற்றின் விழாத்தன்மையை குறைத்து அழித்தொழிக்கவும்.

3:14 AM, May 03, 2007  
Blogger லெனின் said...

Dear Aravinda Sir,

I read your articles regularly,
Really Superb.
I Thank to you,

Tamilil Ezhutha Aasai. Enna Seiya Vendumena Theriyavillai. pls help me

7:01 AM, May 15, 2007  

Post a Comment

<< Home