Saturday, June 02, 2007

ஓர் உன்னத காதல் பாடல்-வீடியோ

என்னை எப்போதிருந்தோ இன்று முதல் என்றைக்கும் அதீதமாக பாதித்த கவர்ந்த பாடல். ஏங்கும் அந்த வாம்பயரில் என் முகத்தை பார்த்திருக்கிறேன்.
உன்னதமான ஒரு காதல்பாட்டு. காதல் ரசமும் அவலச்சுவையும் ததும்பும் இந்த அருமையான பாடலுக்கு என்றும் நான் அடிமை. மேற்கத்திய பாரம்பரியத்தின் பொதுமன நனவிலியில் புதைத்து வைக்கப்பட்ட, பொது பிரக்ஞையில் எதிர்மறை முத்திரை கொடுக்கப்பட்ட சில வலுவான தொன்ம வடிவங்களை உருவியெடுத்து மேல் கொணர்ந்ததோர் அழகிய பாடல். இரத்தக்காட்டேரி, அழகியும் அவலட்சண பூதமனிதனும் (Beauty and the Beast) என ஒரு Grand வீச்சு கொண்டபாடல் இது. எந்த காதலிக்கும் காதலன் ஒரு கணத்தில் பூதமனிதன் என்றே நினைக்கிறேன். அதற்கு மேல் சென்று அவன் நிரூபிக்க வேண்டும். அவள் கோட்டை மதில் சுவர் தடைகளையும் சமுதாய கற்பித tabooக்களையும் தாண்டி அவனை வந்தடைய. பின் அவனை மனிதனாக்க. இறுதியில் அவள் கேள்வி அவனது இரத்தக்காட்டேரித்தன்மையைக் குறித்ததல்ல அவன் தன்னவனாக மட்டுமே தன்னைவிட்டகலாதவனாக இருப்பது குறித்ததுதான். 'நான் அதை மட்டும் செய்யமாட்டேன்' என உருகும் வாம்பயர் மனிதனின் 'அது' எப்படி தொடக்கத்திலிருந்து இறுதியில் பொருள் மாறுகிறது என்பதனை கவனியுங்கள். நான் சொல்வது புரியும். இறுதியில் அவன் மனிதனாகிறான். அவள் வாம்பயராகியிருந்தால்?

Labels: , ,

1 Comments:

Anonymous Anonymous said...

படித்ததில் ஒன்றும் புரியவில்லை.

மறுபடியும் சரியாக பார்த்துவிட்டு .... சொல்லலாம். பாடல் பற்றிய தகவல்களையும் கொடுங்கள்.

10:41 AM, June 03, 2007  

Post a Comment

<< Home