Monday, December 01, 2008

அஞ்சலி


வீரர் சந்தீப் உன்னி கிருஷ்ணனுக்கு இதயாஞ்சலி



மும்பை பயங்கரவாத வெறியாட்டத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இதய அஞ்சலி. நாம் நிம்மதியாக வாழ நம் குழந்தைகள் உடல் வெடித்து சிதறாமல் பள்ளிகள் சென்று திரும்ப நமக்காக நம் பாதுகாப்பை உறுதி செய்ய தம்மையே பலிதானமாக்கும் வீரர்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்!


மும்பை தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தானின் கை இதில் உண்டா இல்லையா என்பது குறித்து விசனப்படுவதை விட முக்கியம் எப்படி இந்த தாக்குதல் சாத்தியமாயிற்று? எப்படி ஜிகாதிகள் சர்வ சாதாரணமாக முக்கிய ஹோட்டல்களில் அறை எடுத்து இருந்து திட்டமிட முடிந்தது? நம் உள்நாட்டு உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் கோட்டைவிட்டார்களா அல்லது அரசியல் தலையீடுகளால் இந்த துறைகள் தீவிரமாக இந்த விஷயத்தில் இயங்க முடியவில்லையா? இந்த கேள்விகள் ஒரு புறமிருக்க, ஜிகாதி பயங்கரவாதம் மிகத் தெளிவாக தெற்கில் மையம் கொண்டு வருகிறது. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகள் தங்களை டெக்கான் முஜாகைதீன் என அறிவித்துக் கொண்டது தற்செயல் அல்ல. ஒரு திட்டமிட்ட அடுத்த அலை ஜிகாதி போருக்கான அறிவிப்பு இது. ஜிகாதி hardware இன் theological software வகாபியவாதம். வகாபிய மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவனை மிக எளிதாக அடுத்த கட்டமான ஜிகாதி போராளியாக மாற்றிவிட முடியும். இன்றைக்கு தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும் வஹாபிய அமைப்புகள் இயங்கிவருகின்றன. மிக நளினமாக பேசும் டாக்டர் ஸாகிர் நாயக் இஸ்லாமிலிருந்து வேறு மதங்களுக்கு மாறுபவனை கொல்வது சரியே என நியாயப்படுத்தி பேசுகிறார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சிமி அமைப்பில் இருந்தவர். கேரளத்தில் ஜிகாதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு காஷ்மிருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை போன்ற அமைப்புகள் இனி வரப்போகும் ஜிகாதி போர் சுனாமிக்கு முன் நிகழும் உள்வாங்குதல்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு ஜிகாதிகளின் மிகவும் திட்டமிட்டதொரு முன்பயிற்சியாகவே அமைந்தது எனலாம். கோவையில் தொடர்ந்து நடத்தப்பட்ட வெறுப்பியல் கொலைகள், அதனைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலை பின்னர் கலவரங்கள் பின்னர் கோவை குண்டு வெடிப்பு அதன் பின்னர் உளவுத்துறை இந்த சதிகாரர்களை பிடித்த பிறகு, வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட விதம், வழக்கு பலவீனப்படுத்தப்பட்டது, ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகள் ஆகியவை கோவை குண்டுவெடிப்பின் பிரதான மூளையாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மதானியை விடுதலை செய்ய திட்டமிட்டு செயல்பட்ட விதம் ஆகியவை எப்படி பயங்கரவாதிகள் அகப்பட்டுக்கொண்டாலும் இந்திய அரசியலின் ஓட்டைகளையும் பொந்துகளையும் பயன்படுத்தி அவர்களை விடுவிப்பது என்பதில் ஒரு தெளிவான செயல்திட்டத்தை பயங்கரவாதிகளுகு வழங்கியது. இதனை அடியொட்டியே சோனியாவும் சல்மான் குர்ஷித்தும் மன் மோகன் சிங்குன்ம் சிமிக்கு ஆதரவாக பேசலாயினர். குண்டு வெடிப்புகள் ஒரு தொடர்கதையாகின. கருணாநிதி அச்சுதானந்தன் போல வாக்கு வங்கிகளுக்கு மக்களை காவு கொடுக்க தயங்காத அரசியல்வியாதிகளின் கண்மூடித்தனத்தால் ஸ்லீப்பர் செல்கள் அமைதியாக தென்னகம் எங்கும் பல்கிப் பெருகுகின்றன. தங்கள் இயக்க செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பவர்களை குறிப்பார்த்து கொல்லும் தனிப்படை ஜிகாதிகளும் செயல்படுகின்றனர். மாட்டிக்கொண்டால் அரசியல் அழுத்தம் முதல் மனித உரிமை குரல் வரை அனைத்து விதங்களிலும் ஜிகாதிகளை பாதுகாக்க இயக்க அரண்கள் உள்ளன. தமிழ் ஊடகங்களிலும் பலர் ஜிகாதி திட்டங்களுக்கு விலை போயுள்ளனர். காஷ்மிர் பிரிவினைவாத கொடிகள் எவ்வித கூச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டு சுவர்களில் வரையப்படுகின்றன. எனவே தமிழர்கள் ஒரு விஷயத்தை உறுதி செய்து கொள்ளலாம் அடுத்த ஜிகாதி கொலை தாக்குதல்களின் அலை தமிழ்நாட்டிலும் உக்கிரமாக வீசப் போகிறது.

சாதி கட்சி ஆகியவற்றின் பெயரில் பிரிந்து கிடக்கும் பெரும்பான்மை சமுதாயம் தன்னை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் சமுதாய சக்தியாக செயல்பட்டால் ஒழிய தமிழ்நாட்டு நகரங்கள் மும்பை தாக்குதலை விட மோசமான தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது. காலம் கடப்பதற்கு முன் தமிழ்நாட்டை காப்பாற்ற தேவை - இந்து ஒற்றுமை ஒன்றே. அதுவே நாம் மறைந்த தியாகிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.



Appeasement means buying off the aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to be the victims of his displeasure...the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.

-போதிசத்வர் பாபா சாகேப் அம்பேத்கர்

7 Comments:

Anonymous Anonymous said...

நிச்சயமாக தாங்கள் சொன்னது நடக்கும் என்றே தோன்றுகிறது. அதிலும் இந்த நிகழ்வுக்கு காரணம் ஹிந்து பயங்கரன்வாதிகளே என காமெடி செய்த உள்துறை இணை அமைச்சர் போன்றோர் இருக்கும் வரை, இந்த நிகழ்வுக்கு மிக கவனமாக அனுதாபம் தெரிவித்த திரு.கருணாநிதி ( தீவிரவாதிகளை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை?!) போன்றோர் இருக்கும் வரை கஷ்டம் தான். நம் முன் உள்ள ஒரே வாய்ப்பு -- தேர்தல்.

3:24 PM, December 01, 2008  
Blogger Shankaran er said...

/Personal: since i'm unable to mail u, i put my comments on your works./


அரவிந்தன் சார், தங்களின் அனைத்து கட்டுரைகளையும் திண்ணையிலும் அகப்பயணத்திலும் படித்து வருகிறேன். உண்மையிலேயே அவை அனைத்தும் கண் திறப்பவைகளாக, மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஞானிக்கு எழுதிய மன்னிப்பு கடிதம், விகடன் ஆசிரியர்க்கு எழுதிய கடிதம், 'அன்னை' தெரசாவின் சேவைகள் பற்றிய கட்டுரை போன்றவை அற்புதமாக உள்ளது.கட்டுரைகள் பழசானாலும் அதன் உள்ளார்த்தங்கள் இன்றும் மாறாமல் இருக்கின்றன.

நானும் பள்ளியில் படிக்கும் பொது ஷாக்காவுக்கு சென்றிருக்கிறேன். RSS இயக்கத்தின் கொள்கைகளால் கவரப்பட்டுள்ளேன். இது விஷயமாக தங்களிடம் மேலும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள,என்னுடைய கருத்தக்களை சீர் படுத்திக்கொள்ளவும் தங்களுடன் பேச ஆசைப்படுகிறேன். தாங்கள் விரும்பினால், தங்களுக்கு நேரம் இருந்தால் தங்களின் தொடர்பு விபரங்களை தெரியப்படுத்துங்கள்.

நன்றி
ஈ ர சங்கரன்

3:40 PM, December 01, 2008  
Blogger சுழியம் said...

அந்த வீரருக்கும் அவரின் தந்தைக்கும் வணக்கங்கள். பிள்ளை தீவிரவாதத்தின் வன்முறையை எதிர்த்தார். தந்தை அரசியல்வாதிகளின் வன்முறையை எதிர்க்கிறார்.

என்ன கேவலமான எதேச்சதிகார புத்தி இருந்தால், தனது வருகையை துக்கத்தில் தவிக்கும் அந்த குடும்பத்தின்மீது அந்த பச்சோந்தி அரசியல்வாதிகள் திணித்திருத்திருப்பார்கள். :(

இந்த ஆபிரகாமிய வன்முறையை எதிர்த்து நிற்கும் அந்த பெருமகனுக்கு பாராட்டுக்கள்.

சுதந்திர போராட்டத்தின்போது கேட்கும்போதெல்லாம் சிலிர்க்க வைத்த முழக்கம்: "வெள்ளையனே வெளியேறு"

சுதந்திரத்திற்குப் பின்பு ஆபாச அரசியல்வாதிகளுக்கு எதிராக எழும்பிய சிலிர்க்க வைக்கும் முழக்கம்:

"பட்டி நாறி, வெளியே போடா"

2:03 AM, December 03, 2008  
Anonymous Anonymous said...

***பின்னூட்டம் வெளியிடவேண்டாம்//

சாதி கட்சி ஆகியவற்றின் பெயரில் பிரிந்து கிடக்கும் பெரும்பான்மை சமுதாயம் தன்னை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் சமுதாய சக்தியாக செயல்பட்டால் ஒழிய தமிழ்நாட்டு நகரங்கள் மும்பை தாக்குதலை விட மோசமான தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது. காலம் கடப்பதற்கு முன் தமிழ்நாட்டை காப்பாற்ற தேவை - இந்து ஒற்றுமை ஒன்றே. அதுவே நாம் மறைந்த தியாகிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.//

இட ஒதுக்கீடு எதிர்ப்பில் காட்டும் கவனத்தை இந்து ஒற்றுமையில் அறிவு ஜீவிகள் முனைந்து செயல்படவேண்டும்.

1:37 PM, December 03, 2008  
Blogger N.PONKUMAR said...

நிச்சயமாக தாங்கள் சொன்னது நடக்கும் என்றே தோன்றுகிறது. அதிலும் இந்த நிகழ்வுக்கு காரணம் ஹிந்து பயங்கரன்வாதிகளே என காமெடி செய்த உள்துறை இணை அமைச்சர் போன்றோர் இருக்கும் வரை, இந்த நிகழ்வுக்கு மிக கவனமாக அனுதாபம் தெரிவித்த திரு.கருணாநிதி ( தீவிரவாதிகளை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை?!) போன்றோர் இருக்கும் வரை கஷ்டம் தான். நம் முன் உள்ள ஒரே வாய்ப்பு -- தேர்தல்.
Thankyou !

7:41 AM, February 24, 2009  
Blogger Unknown said...

அரவிந்தன் சார், தங்களின் அனைத்து கட்டுரைகளையும் திண்ணையிலும் அகப்பயணத்திலும் படித்து வருகிறேன். உண்மையிலேயே அவை அனைத்தும் கண் திறப்பவைகளாக, மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது

10:54 AM, August 01, 2009  
Anonymous MURUGESAN.P said...

your comments are correct

3:46 AM, May 24, 2011  

Post a Comment

<< Home