Wednesday, May 07, 2008

ஆபாச பொய்யன் கமல்ஹாசன்

அண்மையில் கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படம் இந்து முன்னணியினரால் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் இத்திரைப்படத்தில் வைணவக்கோவில் சிலைகளை ஒரு சைவ அரசன் இடிப்பதாகக் காட்டப்பட்டிருப்பது என்கிறார்கள். பொதுவாக எந்த திரைப்படத்தையும் தடை செய்வது அல்லது நூலை தடைசெய்வது என்பதெல்லாம் தவறான விசயங்கள். அந்த முறையில் இந்த தடை கோரிக்கையும் கூட தவறானது. அல்லது இந்த திரைப்படம் நடக்கும் திரையரங்குகளை தாக்குவது போன்றதெல்லாம் சரியான எதிர்ப்பு அல்ல. இதில் இந்து இயக்கங்கள் செய்ய தவறியுள்ள காரியங்கள் பல உள்ளன.

கமல் ஹாசன் தொடர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக செயல்பட்டு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்து இயக்கங்கள் அமைதி காத்து வந்துள்ளன.

உதாரணமாக 'ஹே ராம்' திரைப்படத்தில் இந்துக்களின் பாரம்பரிய ஸ்வஸ்திகம் நாஸி ஸ்வஸ்திகாவாக மாறும் ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்யத் தூண்டும் ஒரு அரசரின் வீட்டில் ஒரு பக்கம் அடால்ப் ஹிட்லர் படமும் மறுபுறம் சாவர்க்கர் படமும் இருப்பதாக ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அதே எடையுள்ள துப்பாக்கியை தேடியதாக பீற்றிக்கொள்ளும் கமல்ஹாசன் (அட பைத்தியகாரா!), எப்படி சரித்திர பிழையான அதே நேரத்தில் அரசியல் முத்திரை குத்தும் இந்தக் காட்சியை தன் படத்தில் சேர்த்தார்?1 இந்து இயக்கங்கள் வாய் மூடி மௌனித்தன.

அதே போல 'அன்பே சிவம்' படத்தை எடுத்துக்கொண்டால் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுகிற முதலாளி வில்லனாக வருவார். இந்தியாவில் விபத்து நடக்கிற இடத்திலெல்லாம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி பிரசன்னமாகி சேவை செய்வார். ஒரிசாவானாலும் சரி, டெல்லி விமான விபத்தானாலும் சரி கேரளத்தில் ரயில் கவிழ்ந்த இடமென்றாலும் சரி போபால் விஷவாயு விபத்தென்றாலும் சரி அங்கெல்லாம் உடனடியாக விரைந்து சென்று விபத்துக்குள்ளானவர்களுக்கு எவ்வித பேதமும் இன்றி சேவையாற்றிய ஒரு சேவை இயக்கம் இந்தியாவில் உண்டு.2 உலகமே அந்த விஷயத்தில் அவர்கள் செய்கிற சேவையை வியந்து பாராட்டியுள்ளது. ஆனால் தனது திரை சித்திரத்தில் சேவை என்றாலே கிறிஸ்தவம், இந்து தருமம் என்றாலே ஆஷாடபூபதிகள் என பதிய வைத்தார் கமல்ஹாசன். இந்து இயக்கங்கள் வாய்மூடி மௌனித்தன.

அடுத்ததாக மருதநாயகம் பட முன்னோட்டக் காட்சிகள். அதில் 18 ஆம்நூற்றாண்டில் தீண்டாமையை கர்மா நியாயப்படுத்தியதென்றும் அதனை எதிர்த்த ஒரு புரட்சியாளனாக மருதநாயகம் என்பவன் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தை தழுவினான் எனவும் காட்டப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் (மற்றெந்த நாடுகளை போலவும்) இஸ்லாமிய ஆளும் வர்க்கமும் சரி உலேமாக்களும் சரி மக்களிடையே பிறப்படிப்படையிலான பேதங்களை பேணினர், ஆதரித்தனர்.3 ஏன் 1910களில் கூட அய்யன் காளி போன்ற தலித் தலைவர்கள் சம உரிமை நாடி நடத்திய போராட்டங்களை இந்து தேசிய அமைப்புகள் ஆதரித்தன. ஆனால் முஸ்லீம்கள் மேல்சாதி வெறியர்களுடன் சேர்ந்து அவர்களை தாக்கினர்.4

கதாநாயகனாக கமல் ஹாசன் முன்னிறுத்தும் கான்சாகிப் வெள்ளையர்களின் அடிவருடியாக செயல்பட்டவன். இன்று தலித்துகளாக கொடுமைப்படுத்தப்படும் சமுதாயத்தினருக்கு நீதியும் அந்தஸ்தும் வழங்கிய விடுதலை வீரன் பூலித்தேவன் மீது ஆங்கிலேயருக்காக படையெடுத்த கூலிக்கும்பல் தலைவனாக செயல்பட்டவன் கான்சாகிப். 1759 நவம்பர் 6 ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலை கோட்டையை கூலிப்படைத்துரோகி காட்டாளன் கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பினான்.மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் பூலித்தேவரை தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப்பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக்கும்பலை தாக்கலாயினர். பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரதிலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக்கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது. வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுக கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் 'வீரர்களுக்கும்' வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரை புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறி பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது. பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறி குமுறி கண்ணீர் சிந்தினார் என்பதை பூலித்தேவர் சிந்து நமக்கு சொல்கிறது.5

ஆக, உண்மை இவ்வாறிருக்க ஒரு மோசடியான வரலாற்றினை ஏற்படுத்த கமல்ஹாசன் முனைகிறார். இதற்கும் இந்து இயக்கங்கள் அமைதி காத்தன. சரி இப்படியெல்லாம் இந்து சமுதாயத்தை கீழ்மைப்படுத்தி பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன் அப்படி சமுதாய அக்கறை உடையவரா என்றால் அவரது முந்தைய படங்கள் எல்லாவித ஆபாச காட்சிகளும் கொண்டு பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்வது உட்பட பல அசிங்க காட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படம் ஒன்றில் மிக மூன்றாந்தரமாக நடித்து அந்த திரைப்படம் வெளியே வராமலிருக்க பிரம்ம பிரயத்தனம் பட்ட செய்தியையும் மக்கள் அறிவர்.

அவரது 'தேவர் மகன்' திரைப்படம் தலித் மக்களுக்கும் தேவர் சமுதாய மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பல மோதல்களில் ஒரு காரணியாக செயல்பட்டது. ஆக, எவ்விதத்திலும் சமுதாய அக்கறை இல்லாதவரான இந்த நடிகர் இந்து சமுதாயத்தை மட்டும் தாக்கி படங்களை எடுத்து தன்னை ஏதோ சமுதாய அக்கறை உடைய அறிவுசீவியாக காட்டுவது ஏன் என்ற கேள்வியை இந்து இயக்கங்கள் தொடர்ந்து மக்களிடையே எழுப்பி இருக்க வேண்டும். அப்படி எழுப்பியிருந்தால் இன்று இத்தகைய ஒரு ஆபாச நடிகரின் மூன்றாந்தர பிரச்சார தாக்குதலுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

சரி இனி இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்டும் காட்சியைக் குறித்து பேசலாம். கிருமி கண்ட சோழன் என்கிற சோழன் சைவத்துக்கு ஆதரவாக வைணவத்துக்கு எதிராக நடந்ததாக ராமானுஜரின் சரித்திரம் கூறுகிறது. யார் இந்த கிருமி கண்ட சோழன்? இவன் எத்தனை காலம் ஆண்டான்? பொதுவாக இரண்டாம் குலோத்துங்க சோழன் கிருமி கண்ட சோழன் என கருதப்படுகிறான். முதலாம் குலோத்துங்க சோழனின் குலதெய்வம் நரசிம்மர் என ஒரு சாசனம் சொல்வதைச் சுட்டிக்காட்டும் அகழ்வாராய்ச்சியாளர் நாகசாமி இந்த நிகழ்ச்சியே நடந்ததா என கேள்வியை எழுப்புகிறார். தில்லையில் இருந்த விஷ்ணு சிலை வன்கொடுமையாக அகற்றப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட அத்துடன் ஒரு வைணவரையும் அந்த தெய்வ விக்கிரகத்துடன் கட்டி கடலில் வீசியதாக சரித்திரம் சொல்லவில்லை. மேலும் இந்த சமயப்பொறையின்மை விரைவில் நீங்கிட மீண்டும் விஷ்ணுவின் சிலை தில்லையில் நிறுவப்பட்டது என்பதையும் சரித்திரம் சொல்லுகிறது.

சரி இந்த காட்சி மூலம் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்கள் மனதில் ஒரு விசயத்தை பதிக்க விரும்புகின்றனர். அதாவது சிலைகளை உடைப்பதெல்லாம் வரலாற்றில் சகஜம் என்பதுதான் அது. ஆனால் உண்மை என்ன? ஏக இறை மதங்களான இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகியவற்றில் சிலைகளை உடைப்பதென்பது ஒரு இறையியலாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு சில அரசர்கள் அதற்கு விதிவிலக்காக உள்ளனர். அதே போல அனைத்து மதங்களையும் அரவணைப்பதென்பதே இந்து அரசர்களின் பொதுத்தன்மையாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு சில மன்னர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். இஸ்லாமிய-கிறிஸ்தவ அரசர்களின் விதியான சிலை உடைப்புகளை நியாயப்படுத்த விதிவிலக்கான ஒரு சில அரசர்களின் சில கேள்விக்குரிய சம்பவங்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்க எடுக்கப்படும் முயற்சியே கமல்ஹாசன் போன்ற ஆபாச கலைஞர்கள் செய்யும் வக்கிர செயலாகும். இதனை இந்து சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இயக்கங்கள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் போன்ற அயோக்கிய சிகாமணிகளை பொதுவிவாததத்துக்கு அழைத்து இவர்கள் முகத்திரைகளை கிழிக்க வேண்டும். மாறாக கிறிஸ்தவ-முஸ்லீம் பாணியில் திரைப்படத்தை தடைவிதித்து இந்த கோமாளி கூத்தாடி ஆபாச அயோக்கிய சிகாமணியை ஒரு 'கலையுலக' தியாகியாக மாற்றிவிடகூடாது.

இந்து இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?

  • கமல் ஹாசனை பொதுவிவாதத்துக்கு அழைக்கவும். அவ'ரி'டம் அவரது இரட்டை டம்ளர் முறையை மக்களுக்கு தெளிவுபடுத்த சொல்லவும்.
  • பூலித்தேவன், வெண்ணிக்காலாடி போன்ற சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரத்யட்ச உண்மை வரலாறுகளை மறைத்து ஆதாரமில்லாத வெறிபிடித்த வெறுப்பியல் பிம்பங்களை கமல்ஹாசன் உருவாக்க முயல்வதன் காரணத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
  • இதனை கமல்ஹாசனை கேள்விகேட்டு மக்கள் முன்னால் இந்த ஆபாச கோமாளியின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.
  • கமல்ஹாசன் பெண்களை இழிவுபடுத்தி நடித்துள்ள காட்சிகளை அவ'ரி'டம் செய்யும் பொது விவாதத்தின் போது போட்டுக்காட்டி அவ'ரை' இந்துமக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.
  • அத்திரைப்படத்தில் ஒரு வைணவரை கடலில் மூழ்கடிப்பது போல காட்டியுள்ளதற்கு சரித்திர ஆதாரத்தை கமல்ஹாசன் காட்ட சொல்லவேண்டும். இல்லையென்றால் அத்திரைப்படத்தை 'மக்களில் ஒரு சாரார் மீது பொய்யான வெறுப்பு பிரச்சாரம்' செய்வதாக கூறி வழக்கு தொடரவேண்டும். நஷ்ட ஈடு கேட்கவேண்டும்.


குறிப்புகள்:

  • 1. வீர சாவர்க்கர் தாம் எழுதிய ஹிந்துத்துவா எனும் நூலில் குறிப்பிடுகிறார்: "துருவம் முதல் துருவம் வரை மானுட இனம் ஒரே குலமே ஆகும். மற்றெல்லா பிரிவினைகளும் மனிதர்கள் ஏற்படுத்தியதே ஆகும்." நாசி இனவாதக் கோட்பாட்டுடன் முழுக்க முழுக்க வேறுபடும் நிலைபாடு இது.
  • 2. உதாரணமாக, ரஷீதா பகத் (தி ஹிண்டு பிஸினஸ்லைன்) எழுதுகிறார்: "RSS, an organisation which can always be counted upon to swing into action at any scene of disaster, have rallied around to demonstrate the indomitable human spirit"
  • 3. உதாரணமாக காண்க அஃப்ஸார், உமர் சலீம்கான் மற்றும் முகமது ஹபீப்பின் மொழி பெயர்ப்பு ஸியாவுதீன் பரானியின் பத்வா-இ-ஜகாந்தாரி (கிபி 1358-9) பக்.134.
  • 4. நிர்மால்யா, அய்யன்காளி, பக்.96
  • 5. ந.இராசையா, மாமன்னன் பூலித்தேவன், 2003 பக்.134-135

37 Comments:

Blogger ஜயராமன் said...

கமலஹாசன் ஒரு கயமைத்திம்மி கூத்தாடி.

அவர் எப்போதும் இந்து சமுதாயத்தையும் தமிழக மக்களையும் கொச்சைப்படுத்தி காசு சம்பாதித்திருக்கிறார், சம்பாதிப்பார். தன் கதைத்தளத்துக்கு ஆளவந்தான் போன்ற இந்து குறியீடுகளை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி அதனால் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.

இவர் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட ஒரு கலைஞன். நம் ஏமாளித்தமிழனுக்கு கண்டதெல்லாம் காட்சி என்பதால் இவர் பருப்பு இங்கே வெகிறது. ஆள்வார்பேட்டை ஆண்டவன் என்று தன்னைச்சொல்லிக்கொள்ளும் இவர் பலவித நாயகிகளுடன் முத்தக்காட்சிகளுக்கு புகழ் பெற்றவர். தமிழ் கலாசாரத்தின் இழுக்கு இவர்.

தங்கள் பதிவுக்கு நன்றி

ஜயராமன்

8:47 AM, May 07, 2008  
Anonymous Anonymous said...

pongada porampokkungala

9:22 AM, May 07, 2008  
Anonymous Anonymous said...

டேய் லூசு பசங்ளா, சினிமாவ சினிமாவா பாருங்க. ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு அவன் என்ன நினைக்கிறானோ அதை படைக்கிறத்துக்கு முழு உரிமை இருக்கு. உங்கள மாதிரி லூசு நாய்ங்கிட்ட வந்து அனுமதியோ, ஆலோசனையோ வாங்க தேவையில்லை. உனக்கு இஷ்டம் இருந்தால் பாரு இல்லைனா மூடிக்கிட்டு இரு. அத விட்டுட்டு அப்படி இப்படின்னு என்னமோ நீ வானத்தில இருந்து குதிச்ச மாதிரி. இணையம் ஒரு தொழில்நுட்பம் அதை இந்த மாதிரி கீழ்தரமான கருத்துக்களை பதிக்க பயன்படுத்தாதே. உனக்கு ஒரு ஜால்ரா வேற... மறை கழன்ட கேசுகளா... போய் வேற வேலை இருந்தா பாருங்கடா...

10:42 AM, May 07, 2008  
Blogger ஜயராமன் said...

பைத்தியக்கார அனானி,

//// உனக்கு இஷ்டம் இருந்தால் பாரு இல்லைனா மூடிக்கிட்டு இரு. அத விட்டுட்டு அப்படி இப்படின்னு என்னமோ நீ வானத்தில இருந்து குதிச்ச மாதிரி. இணையம் ஒரு தொழில்நுட்பம் அதை இந்த மாதிரி கீழ்தரமான கருத்துக்களை பதிக்க பயன்படுத்தாதே. ///

யார் லூஸ் என்பதற்கு நீ உன் வீட்டு கண்ணாடியைப்பார். திரைப்படங்களின் காட்சிகளும், அதன் சமூக தாக்கங்களும் எல்லோருக்கும் தெரிந்தவை. அதனாலேயே அவை விவாதிக்கப் படுகின்றன, விவாதிக்கப்பட வேண்டும்.

உன்னைப்போன்ற அறிவிலிகள் தமிழ்ச்செல்வி என்ற நாயகியின் தமிழ்க்கலாசாரம் என்று குத்தாட்டங்களை நாக்கில் நீர் வழிய பார்ப்பீர்கள் போலும். இணையத்தில் மட்டுமல்ல எல்லா பொது ஊடகங்களிலும் பல பல திரைப்படங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. டாவின்சி கோட் முதலான படங்கள் அரசால் தடை செய்யப்பட்டது ஏன்? "சினிமாவை சினிமாவாக பாருங்கள்" என்று நீ அப்போது ஏன் எழுதவில்லை. இணையத்தில் தேடித்தேடி பிராமண வெறுப்பு காட்சிகளை எழுதிக்கொண்டிருந்தபோது நீ அப்போது எங்கே போயிருந்தார். சிவாஜியில் இஸ்லாமியர்கள் ஹவாலா செய்வது போல எழுதியது அவமானம் என்று சில அவமானங்கள் இணையத்தில் எழுதியபோது நீ எங்கே போயிருந்தாய்?

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க பரிந்துரைக்கும் மூடனாக நீ, திரைப்படங்களில் எப்போதும் இந்து மதம் மட்டுமே கேலி செய்யப்படுவது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா? ஒரு கலைஞனுக்கு உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்றால் சினிமாக்காக கதைகள் வேறு மாதிரியும் ஏன் எழுதப்படவில்லை. மூளையை கழட்டி வைத்துவிட்டு (மற்ற உடலுறுப்பாக மட்டும்) திரைப்படம் பார்க்கும் உன்னைப்போன்றவர்களுக்கு இது புரியுமா? கஷ்டம்தான்.

நன்றி

ஜயராமன்

10:38 PM, May 07, 2008  
Blogger ஜடாயு said...

அ.நீ, அருமையான பதிவு.

தலைப்பைப் பார்த்ததும் "ஹே ராம்" பற்றி நினைத்தேன், சொல்லி விட்டீர்கள். அந்தப் படத்தில் இதே காட்சிக்குப் பின் அந்த நாசி ஸ்வஸ்திகா அப்படியே "தாமரை"யாக மாறுவது போன்று ஒரு கிராபிக்ஸ் கூட இருக்கும்.

இந்த பதிவில் பத்திகள் சரியாக இல்லை. ஒரே நீளமாக வருகிறது. கொஞ்சம் அழகாக பத்திபிரித்து எழுதி விடுங்கள்.

12:25 AM, May 08, 2008  
Anonymous Anonymous said...

Mr. Nameless, so why did this commi government ban films like Fitna & The Da Vinci Code? Why don't the Christs & Muslims just view these films as Kalachara Padaippukkal?

Btw: Did you know that India is a majority Hindu country? And if you tried things like this in Saudi Arabia you will be shot like a Dog?

1:51 AM, May 08, 2008  
Anonymous Anonymous said...

//பூலித்தேவரை தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப்பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர்.//

பூலித்தேவனின் ஊரான அதன் பெயர் நெல்கட்டும் செவல் - பேச்சுவழக்கில் நெற்கட்டுஞ்செவல். வாசுதேவநல்லூருக்கும் புளியங்குடிக்கும் அருகில் உள்ளது.

-சன்னாசி

10:00 PM, May 08, 2008  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அந்த ஊரின் பழைய பெயர் ஆவுடையார் புரம் அங்கு பூலித்தேவன் கட்டிய கோட்டை சார்ந்த ஊர் நெற்கட்டும் செவ்வல் என்பது நெற்கட்டான் செவ்வல் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இது பேச்சு வழக்கில் நெல் காத்தான் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது.

10:28 PM, May 08, 2008  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

செம்மண்ணும், நெற்கட்டான் எனும் தாவரம் அதிகமாக வளர்ந்திருந்ததாலும் அப்படி பெயர் வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. கால்டுவெல் என்கிற மிசிநரி ரப்பர் எஸ்டேட் முதலாளி Nil-Kattan=Sevval என பிரித்து கூறுகிறார்.

10:30 PM, May 08, 2008  
Anonymous Anonymous said...

கமல்ஹாசன் தன் முழு உடலையும் ஆண் குறியாக நினைத்துக் கொண்டிருப்பவர். நடிப்போ, நுண்மையான கலைத்திறனோ அவருக்குச் சாத்தியமேயில்லை. அவர் செய்யும் கோமாளித்தனங்களை நடிப்பென்று சொன்னால், Jim Carrey செய்யும் அரை நிமிட கோமாளித்தன நடிப்பை மீதமிருக்கும் ஆயுள் பூராவும் முக்கினாலும் அவரால் செய்ய முடியாது. சூழலின் தீவிரத்தை,உணர்வின் ஆழத்தை உள்வாங்கிக் கடத்தும் திறன் அவருக்குக் கிடையாது.(ரஜினிக்கு உண்டு!) Close-up வைக்க வேண்டிய இடத்தில் வைக்க முடியாது.

சற்றே நுண்ணுனர்வோடு அவரைக் கூர்ந்து கவனித்தால், ஒவ்வொரு அசைவிலும் ஆபாசம்,பொய் வெளிப்படுவதை உணரலாம். சரியாகவே தலைப்பு வைத்திருக்கிறீர்கள். 24 மணி நேரமும் நல்லவனாய் வேஷம் போடுவதால் உள்ளிருந்து பீரிடும் வீச்சம் அது. உலகத்தில் உள்ள அத்தனை பெண்களும் தன்னை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதாய் அவர் அசைவுகள் இருந்தாலும், வீச்சம் தாங்காத பல பெண்கள் அவர் மேல் கடும் வெறுப்போடு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

நான் எவ்வளவு 'நல்லவன்' என்பது நாத்திகர்களுக்கும் புரியவில்லையா? ஏனோ என் மீது ஒரு ஒவ்வாமை எல்லோருக்கும் இருக்கிரதே (குறிப்பாய்ப் பெண்களுக்கு) என்றொன்றும்,

வழுக்கைத்தலை, எதோ ஒரு உடை. ஆனாலும் ஒரு கையசைப்பு, புன்னகையில் ஆழமான உணர்வலைகளை எழுப்புகிறாரரே என்றொன்றும், இன்னும் பலவிதமான மன இறுக்கங்களோடும் பரிதாபமான வாழ்க்கை வாழும் கதாநாயகக் கோமாளி இவர்.

இந்த 24x7 நடிகனுடைய எண்ணங்களும், உணர்வுகளும் வக்கிரமாய் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

இவர் உடலுறவின் இடுப்பசைவைக் காட்டாத படங்கள் ஐந்திற்குள் இருக்குமா?

10:41 PM, May 08, 2008  
Anonymous Anonymous said...

Excellent Post Mr Arvind..
I have read about Puli Thevar..
And I was surprised when kamal wanted to do a movie about Maruthanayagam, the man who attacked Puli Thevar..
And Anbe Shivam was another sacarstic movie by him......Even in this Dasavatharam he is purposely tryin to make a movie about how disunited Shaivam and Vaishnavam was. Kamal is a Hindu hatred. Most of his fans are Muslims and anti-Hindu people. In fact all my muslim friends are Kamal fans.

8:45 PM, May 10, 2008  
Anonymous Anonymous said...

The so-called quarrel between the saivaites and vaishnavaites are no more than the favouritism shown to two different teams in the IPL match.

Hindus enjoy these aggrandized actions in these confrontations only with a pinch of humour.

And there are exceptions, and there is always the rule that an exception cannot be a rule.

9:28 AM, June 04, 2008  
Anonymous Anonymous said...

// கமல்ஹாசன் தன் முழு உடலையும் ஆண் குறியாக நினைத்துக் கொண்டிருப்பவர். நடிப்போ, நுண்மையான கலைத்திறனோ அவருக்குச் சாத்தியமேயில்லை. அவர் செய்யும் கோமாளித்தனங்களை நடிப்பென்று சொன்னால், Jim Carrey செய்யும் அரை நிமிட கோமாளித்தன நடிப்பை மீதமிருக்கும் ஆயுள் பூராவும் முக்கினாலும் அவரால் செய்ய முடியாது. //

Solid.

list his successful movies from the last 15 years,and remove those films with crazy mohan from the list, and then look at the list again. you would know how pathetic this pervert is.

from his 'success' list, naayagan is way over-rated. maniratnam is way over-rated too. 'devar magan' is a sivaji ganesan film. Nammavar had Nagesh whipping kamal's a*s in a 5 minute sequence.

but let us do some psycho-analysis here. he is an iyengar. he wanted to be liked by the dravidas. dravida abuse of brahmins was going on full swing then. What kind of abuses did this fair, young iyengar boy suffer then? so give the guy a break.

7:15 AM, June 14, 2008  
Blogger Robbie said...

I appreciate the effort and the research that has gone in the rebuttal against inaccuracies in various "movies" or work of "fiction" by a popular actor in India. As I just mentioned in the previous lines "fiction" is the key word here. The incidents in the movies by Kamal haasan are nothing but fictious. I have realized this fact for some time now. I am glad that you have done your hard research and understood the same thing. What do you get by proving that a work of fiction is indeed fiction? Maybe the hours you spent trying to analyze the flaws in various works of fiction could have been best spent thinking about the countless needy and downtrodden in India. It would be a good use of your time researching about things that can improve the conditions of Indians in need. Why this anger against an individual who produces works of fiction? There is freedom of expression in our great country and we do not have to justify our beleifs and principles. Instead of trying to further cause chaos (oops am I landing into Dasavatharam territory?) with reference to caste and religion why dont you not focus on other things to write? Did we not all grow up with Indian history? Do we not know what is right or wrong? Do you think that works of fiction change our outlook towards life? There is no difference between you and a christian fundamentalist who cried to ban a work of fiction like Da Vinci code. I hope you publish and respond to this comment.

6:55 PM, June 25, 2008  
Anonymous Anonymous said...

I agree what Robbie said

12:21 AM, July 13, 2008  
Blogger R.DEVARAJAN said...

நான் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவன் அல்ல.
இது ஒரு திரைப்படம் மட்டுமே என்றால் 'fiction' என்று விட்டுவிடலாம். முழுமையாக வாசித்துப்பார்த்தால் அந்த நடிகருக்கு இது ஒரு வாடிக்கை என்றே உறுதியாகத் தெரிகிறது.
‘குமுதம் ஜோதிடம்’ ஆசிரியரும் மனம் நொந்து எழுதியுள்ளார். ஆலயத்தின் அர்ச்சைத் திருமேனிகளை அவமதிப்பது, கொச்சைப் படுத்துவது போன்றவை முற்றிலும் அநாகரிகமான செயல்.
முஸ்லிம்களின் வரலாற்றை ஒட்டிய 'fiction' ஒன்றை அந்த நடிகர் துணிந்து எடுத்து விடுவாரா?
‘fiction’ ஜால்ராக்கள் ஒத்து ஊத முடியுமா?
தேவ்

8:14 PM, July 18, 2008  
Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

"சரி இந்த காட்சி மூலம் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்கள் மனதில் ஒரு விசயத்தை பதிக்க விரும்புகின்றனர். அதாவது சிலைகளை உடைப்பதெல்லாம் வரலாற்றில் சகஜம் என்பதுதான் அது. ஆனால் உண்மை என்ன? ஏக இறை மதங்களான இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகியவற்றில் சிலைகளை உடைப்பதென்பது ஒரு இறையியலாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு சில அரசர்கள் அதற்கு விதிவிலக்காக உள்ளனர். அதே போல அனைத்து மதங்களையும் அரவணைப்பதென்பதே இந்து அரசர்களின் பொதுத்தன்மையாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு சில மன்னர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். இஸ்லாமிய-கிறிஸ்தவ அரசர்களின் விதியான சிலை உடைப்புகளை நியாயப்படுத்த விதிவிலக்கான ஒரு சில அரசர்களின் சில கேள்விக்குரிய சம்பவங்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்க எடுக்கப்படும் முயற்சியே கமல்ஹாசன் போன்ற ஆபாச கலைஞர்கள் செய்யும் வக்கிர செயலாகும். இதனை இந்து சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும். "

ஐயா அரவிந்தரே,

கமலஹாசன் என்னும் ஒரு இந்திய குடிமகன், தன்னிடம் உள்ள கலைத்திறமையை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கிறார். அதில் அவர் ஒரு சில சம்பவங்களை கதையாக காட்டியிருக்கிறார். (இந்த சம்பவங்களுக்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அது வேறு விஷயம். இதற்கான விவாதத்தை நீங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டீர்கள்).

ஆனால் இதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஏன் வம்புக்கு இழுக்கப்பட்டிருக்கின்றன என புரியவில்லை. அல்லது உலகில் எது நடந்தாலும், அதை விமர்சிக்கும் பொழுது கிறிஸ்தவத்தையும் ஒரு முறையாவது சாடினால் தான் தங்களுக்கு எதொ எழுதியது போன்ற திருப்தி ஏற்படுமா?

இந்திய மண்ணில், இந்திய இந்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்ததாக நம்பப்படும் ஒரு சிலை அகற்றல் நிகழ்வுக்கும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கும் (உங்களின் அதீத கற்பனையில் சிலை உடைப்பு கோட்பாடுகள்) எந்த வகையில் சம்பந்தம் உண்டென்று நினைக்கிறீர்கள் அரவிந்தரே?

பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள்

அன்புடன்,

பெஞ்சமின்

2:45 AM, July 27, 2008  
Anonymous Anonymous said...

vanakkam kamaledirpalikale romba ariva kurai kandupidikara budisalikala neenga ada porampokungala enamo saivargal hindu kovila idichada vandada rombaperusapesaringa appo muslimmannargal inga aatchi pannapa oru kovilayum vudaikalainu ungalala solla mudiyuma madasambraningala ennamo ivangadan kadavulaye kandupidichamadiri pesareenga .bharadiyare hindus kita irukara asingatha pathu dan kasila poonala arutharu.Periyarum adukagathan kadavule illau sonnaru enna neenga orupirivinar vuyarnda sadi endrum mathavangathazthavanga endrum sonnadu pidikamadan pongada pokathavanungala oru katchi indiyavaye vellakaranukku vika pakudu ada thaduka mudiyala vandutanunga pesa muttal

9:36 PM, August 17, 2008  
Blogger astle123 said...

This comment has been removed by the author.

6:14 AM, September 06, 2008  
Anonymous Anonymous said...

Looks that this post is a outburst of a person whose ego or social identity is exposed.
Edu eppadi irrukuna - "Naan maatuma thapu panninen, avangalum dhan"..Rather seeing what we did and trying to avoid it, we fire back kamal for pointing it out.
Remember the so called caste system was originated in hindu society and the stigma it has been carrying is what needs to be addressed. So rather accept the criticism. I'm a fan of Kamal doesn't mean I buy all his theories. But the point he drives is , religion at the expense of humanity. In DASA , he has conveyed that as long humaity thrives through any means, be it religion or science, I shall accept it with maturity. If people had got that in their mind, probably this post wouldn't make sense at all.

Secondly on the Kissing scenes, I think respect for woman must come from our own home.

Also kamal doesn't force you to accept his idelogies. He too has friends who are religious, Illayaraja for example. As long as you are in your senses, different idelogies can coexists. Until then , this blame game continues for no good.

I do accept that portions of this post are true to some extent.

One question : Do you praise Kamal if tomorrow he takes a movie about Islamic terrorism - the so called Jihad ?? If you can accept that, then you got to accept this.

12:43 PM, September 09, 2008  
Anonymous Anonymous said...

Kamal is a socalled atheist and rationalist but not in his faith.he
pretends to be like this becouse religion comes in the way of his habit of womenising with others wife-either it be gowthami or others. he runs a socalled society
by name 'harmony'in which christian
anti hindu Ram, nawab of arcot who lives in triplicane palace and claims for his forefathers role of giving permission to hindus for using kabali temple tank ect as a gift to them (muslims came from persia and ruled hindus for 700 yrs
very recently a pro hindu western french men mr.francious guiter had conducted one art exhibition in lalith kala acadamy with portraits in art form of precious paintings
of many mohul king of Aurengazep
who had destroyed many hindu temples like Madura,brindavan ect
as it was natural,many such art paintings were in gallary.suddently
Arcot nawab came with many muslims
and used police force to destroy those precious valued painting and art portraits in the gallary and ordered police remove such arts.
police arrested some ladies who helped guiter and ill treated them as terrorists.
where was kamalahassan and anti hindu news paper MR.RAM who never published this news in his mount road toilet tissue paper about this.MR.Francious guiter wrote this entire episode in New indian
express in an article.
such are the dirty anti hindu attitude of kamalhassan who studied with me in same class in hindu high school triplicane.
he did not complete even 10th standard to my knowledge and stopped attending classes.he learnt
english in private tution.
People particularly hindus must throw these dirty fellows from the film industry. privately his home in alwarpet,he closed his swimming pool due to the advise of vasthu
astrologer.such a believer privately of vasthu,astrology and even numeralogy which made him change his letters to kamalhasen
after removing a single letter 'A'
He is no way difference with his
mentor karunanidhi -only difference
is kamal wears black shirt ( even in his school days,he wears brown or black shirt only) while karuna
wears white shirt with yellow shawel.privately they will go by advise of astrologer from kerala to varanasi.pity hindus are still
supporting these pseduo secularists
who abuse them as thief,and their god and their culture (they want western culture to be followed in tamil nadu like marrying many wifes and deserting them or keeping them in palaces like mohul rulers like aurengazeb)

12:39 AM, September 10, 2008  
Anonymous Anonymous said...

Kamal is a socalled atheist and rationalist but not in his faith.he
pretends to be like this becouse religion comes in the way of his habit of womenising with others wife-either it be gowthami or others. he runs a socalled society
by name 'harmony'in which christian
anti hindu Ram, nawab of arcot who lives in triplicane palace and claims for his forefathers role of giving permission to hindus for using kabali temple tank ect as a gift to them (muslims came from persia and ruled hindus for 700 yrs
very recently a pro hindu western french men mr.francious guiter had conducted one art exhibition in lalith kala acadamy with portraits in art form of precious paintings
of many mohul king of Aurengazep
who had destroyed many hindu temples like Madura,brindavan ect
as it was natural,many such art paintings were in gallary.suddently
Arcot nawab came with many muslims
and used police force to destroy those precious valued painting and art portraits in the gallary and ordered police remove such arts.
police arrested some ladies who helped guiter and ill treated them as terrorists.
where was kamalahassan and anti hindu news paper MR.RAM who never published this news in his mount road toilet tissue paper about this.MR.Francious guiter wrote this entire episode in New indian
express in an article.
such are the dirty anti hindu attitude of kamalhassan who studied with me in same class in hindu high school triplicane.
he did not complete even 10th standard to my knowledge and stopped attending classes.he learnt
english in private tution.
People particularly hindus must throw these dirty fellows from the film industry. privately his home in alwarpet,he closed his swimming pool due to the advise of vasthu
astrologer.such a believer privately of vasthu,astrology and even numeralogy which made him change his letters to kamalhasen
after removing a single letter 'A'
He is no way difference with his
mentor karunanidhi -only difference
is kamal wears black shirt ( even in his school days,he wears brown or black shirt only) while karuna
wears white shirt with yellow shawel.privately they will go by advise of astrologer from kerala to varanasi.pity hindus are still
supporting these pseduo secularists
who abuse them as thief,and their god and their culture (they want western culture to be followed in tamil nadu like marrying many wifes and deserting them or keeping them in palaces like mohul rulers like aurengazeb)

12:39 AM, September 10, 2008  
Blogger astle123 said...

மு.கருணாநிதி, கமல்ஹாசன் - பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்தவர்கள் (இந்து மதத்தை அழிக்க‌). எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?

7:00 AM, September 12, 2008  
Anonymous Anonymous said...

ஐயா பெஞ்சமின் அவர்களே,

///
இந்திய மண்ணில், இந்திய இந்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்ததாக நம்பப்படும் ஒரு சிலை அகற்றல் நிகழ்வுக்கும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கும் (உங்களின் அதீத கற்பனையில் சிலை உடைப்பு கோட்பாடுகள்) எந்த வகையில் சம்பந்தம் உண்டென்று நினைக்கிறீர்கள் அரவிந்தரே?
///

ரொம்ப சரியாகச் சொன்னீர்கள். க்றிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சிலைகளை உடைப்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. முழுக் கோவிலையே சிதைப்பது தான் அவர்களுடைய ஸ்டைல். சென்னையில் இருக்கும் சாந்தோம் சர்ச் தான் கபாலீஸ்வரர் கோவில். அதைப் போர்த்துகீசியக் க்றிஸ்தவர்கள் உடைத்ததற்கான ஆதாரங்களுக்கு கூகிளைத் தேடவும். அவசர அவசரமாக பின் வந்த குருமார்கள் எழுப்பிய சுவர்களும் சுரண்டிய சிற்பங்களும் இன்றளவில் உள்ளன (இருக்கோ என்னமோ?).

தேஜோமஹாலயா என்ற சிவாலயத்தை உடைத்த பெருமை ஷாஜஹானைச் சாரும். பார்க்க http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm

பேசறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேசணும்.

இதையும் பாருங்க
http://evilbiblequran.googlepages.com/
http://evilbiblequran.googlepages.com/sexquran.htm
http://whywontgodhealamputees.com/superstition.htm

8:45 AM, October 22, 2008  
Anonymous Anonymous said...

Appa intha article a paditha piragu thirupthiya irukku. If I happend to meet kamal hassan I will beat him with my true bata slippers for exploiting women(real life too), brahmins and hindus in his movies.

5:47 AM, December 08, 2008  
Anonymous Anonymous said...

Nam kamalahassanai patri soodana vivadham nadathuvadai vida avar padangal sari ellai endral adai purakkanippadum nandraga irundal adai theatreil sendru parpadumdan sirappanathaga irukkum yendru ninaikkiren

11:26 PM, November 06, 2009  
Blogger ajay said...

kamalhassan oru kalaignani avar padangal sarvathesa avlavil thiraiida pattal mattum sarvathesa thirail tamil padamumunu thammbattam adichikirom avar padam unnai pol oruvanai parthuvitu pesungal

8:27 AM, November 11, 2009  
Anonymous Gunaa said...

Yaanaiyaanalum sari.. Manidanaanalum sari..

Madam pidtthupponal.. Pracchanai than.. Ungalukkellam ungal madam migavum piditthuppoi irukkiradu.

9:53 AM, March 11, 2010  
Blogger subbu said...

அருமையான கட்டுரை. கமல ஹாசன்ஒருமுறை கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு பெரியார் திடலுக்குப் போனார். ஆனால் அவர்கள் இவரை சேர்த்துக் கொள்ளவில்லை.தலை கீழாக நின்று தண்ணி குடித்தாலும் பிராமணர்கள் திராவிடர் கழகத்தில் சேர முடியாது. எ.எல்.நாராயணன்,சின்னக் குத்தூசி போன்ற பிராமணர்களையே அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.ராஜீவ் கொலையாளி சிவராசனை வாஞ்சிநாதன் என்று அழைத்த பெருமையும் கமல் ஹாசனுக்குஉண்டு.

6:39 PM, April 05, 2010  
Anonymous suren said...

kamal oru arivu jeevi moodikuttu pongada naigala, ungala yarnu kattathan avara neenga use panreenga indhu madathai neenga mattum enna kappathaporingala, athu yrai nambiyum illai, indu madam oru nalla markam athai yarum alikka mudiyathu ithu kamaluku therium ungalai ponra naigalukku athu theriyathu.

12:24 AM, September 22, 2010  
Blogger srinivasansubramanian said...

kamalai thaakkavendum yentru mattume katturai yezhuthappattullathu.gandhiyai suttukollappada kaaranakarthakkalil savarkaar mukkia kaaraniyaaka irunthavar.kotsey avar adi varudi.piraku gandhiyai kolla thittam thittupavar vittil savarkaar padam illamal,rajini padamma irukkum.kamal oru arivujivi.avarai summaa araivekkaattu,masaalaa padavimbikal thevai intri thita muyarchithu,ungal araivekkaadai veliya pattavarthanamaaka kaattavendaam. s.a.sukumaaran,

12:29 AM, January 02, 2011  
Anonymous Padugai Shanmugam said...

Hindu religion is always met lot of problems more than these from the entry of babar upto now.

Somebody blasting statues of gods and somebody trying to blasting soul of hindus.

Hindu religion is always growing itself without any canwash or brainwashes.

Nobody to blast any concept of Hindu religion, and nobody can demolish hindu religion from the earth.

Pottruvaar Potrattum pulithi vaari
Thoottruvaar Thootrattum

12:46 AM, January 08, 2011  
Anonymous Anonymous said...

ஒரு பெரியார் இல்லடா ,ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கல திருத்த முடியாதுடா

8:27 PM, February 04, 2011  
Anonymous Anonymous said...

ஒரு பெரியார் இல்லடா ,ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கல திருத்த முடியாதுடா

8:30 PM, February 04, 2011  
Blogger N.Badri Narayanan said...

good analysis!!infact i got some points cleared from history...but u shud understand that cinema is just purely for entertainment..and kamal s some person..take only the gud things from cinema..y to waste time for hitting a person...???

the thing about we indians is we waste time mostly jus to criticise others..while other countries were developing like anything...

just my thought..!!!i take only good things from cinema..and leave the rest...

7:28 AM, March 03, 2011  
Blogger N.Badri Narayanan said...

good analysis!!

i got some points nd got cleared in historic aspects..but please do understand one thing..cinema is jus for entertainment..

if u find gd things take it..if bad...leave it..y to hit one person??
be it kamal or anyone...

7:31 AM, March 03, 2011  
Anonymous Anonymous said...

dei , pei pasangala ,neenga ellam etharkaga cinema pakkam poreinga , kuttram kandupidikkava,itula irunde theriyudhu, neenga ellam pondattiya ,pettha ponnungalakooda sandegam paduveengannu.moodikitu padatha paru, illa parkade. ada vittutu oru kalagna kalaiya katta vudama pannidadhyyyyyyyyyyyyyyy

4:03 AM, June 20, 2011  

Post a Comment

<< Home